Everything posted by தமிழ் சிறி
-
தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.
தாய்வான் நிலநடுக்கம் : உயிரிந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 730 பேர் காயம். தாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக தைவான் மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையையும் விடுத்தது. தைவான் தலைநகர் தைபேவை இந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தையடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 3 மீற்றர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் எனவும் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், 730 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றனர். தாய்வானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376344
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர். கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த மூவரும், யூ.எல் 122 விமானம் ஊடாக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, குறித்த மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழ் நாட்டு நீதிமன்றில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தியும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார் இன்று காலை 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த மூவர் மீதும் ஏற்கனவே விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். இந்நிலையிலேயே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376375
-
தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை! தாய்வான் – ஹுவாலியன் நாட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெற்கு ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுவதுள்ள நிலையில் மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1376241
-
கருத்து படங்கள்
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- 1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.
1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும் விளங்கும் நண்பர் Manavai Asokan மணவை அசோகன், மணவைத் தம்பியின் மகனாவார். அவரே இந்த படத்தை எமது நிறுவன முகாமைத்துவ இயக்குநருக்கு வழங்கினார். இப்போது அந்த படம் எமது நிறுவனத்திலேயே உள்ளது. அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் கார் அவருடையது. காரில் திராவிட கழக கொடி இருப்பதை காணலாம். Thevarasha Pramilan- தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். இதன்போதே அவர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில், கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞனிடம் வவுனியா, வெடுக்குநாரிமலை ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376138- புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம்
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம். புங்குடுதீவு மாணவியை பாலியல் துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்த மரணதண்டனைக் குற்றவாளி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் என்ற 37 வயதுடைய குற்றவாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண தண்டனை கைதியான குறித்த கைதி கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிமோனியா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு எதிரான குற்றங்கள் நிருபிக்கப்பட்டத்தை அடுத்து ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது. அதனை தொடர்ந்து குற்றவாளிகள் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை குறித்த குற்றவாளி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376158- எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது.
எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. தொடர்ந்தும் இன்று (02) நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்கள், வெதுப்பகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மட்டும் எலி எச்சங்கள் காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டது. https://athavannews.com/2024/1376177- கருத்து படங்கள்
- மது அருந்தும் போட்டியில் முதலிடம் பிடித்தவர் சில மணி நேரத்தில் மரணம்!
காத்து... எங்கு அடித்தது என்று சொல்ல, நுணாவிலானுக்கு கூச்சமாக இருக்கோ.... 😂 🤣- ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு. சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1376003- யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!
கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை. பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் தீபன் திலீசன் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கு கல்வி திணைக்களங்களும் துணைபோகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயற்பாடுகளாகவே இவை அமையும். அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும். இந்த விடயங்களில் பொலிசாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச்சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு எனபதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும். இவ்விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1376048- தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்." என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். Kaathilai puu. Com- எனது அறிமுகம்
வணக்கம் தில்லை. உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. 🙂 நீங்கள், நேற்று யாழ்.களத்தில் இணைந்த அன்றே... உங்கள் பதிவுகள் மூலம்... வாசகர்களின் அதிக விருப்பப் புள்ளிகளைப் பெற்று, நேற்றைய தினம் 1️⃣ முதலாவது இடத்தைப் பெற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளீர்கள். 🥇 பாராட்டுக்கள். தொடர்ந்து யாழில் இணைந்து இருங்கள். 🙂- கருத்து படங்கள்
- வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்!
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்! அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமயவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிடுவதற்காக விசேட குழுவொன்று நாளை அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இதில் இணையவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விரிசல்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் குழுவும் இதற்காக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375949- உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன். கோத்தாபய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது அவருடைய குடும்பத்துக்குள்ளேயே போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. அவர் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்பதை அந்தப் புத்தகம் நிரூபிப்பதாக அதை வாசித்தவர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் தற்காப்பு நிலையில் காணப்பட்ட அவர் இப்பொழுது தன்னை நியாயப்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு வந்துவிட்டார் என்பதுதான் அந்த நூலில் உள்ள செய்தி. அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் ஒரு நிலையை நோக்கி முன்னேறி வருகிறார்கள் என்று பொருள். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பஸில் தெரிவித்த கருத்துக்களும் அதைத்தான் அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் குறித்து புதிதாகத் தகவல்களை வெளியிடப் போவதாகக் கூறுகிறார். பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெற்றி பெற்ற கட்சி அல்லது கூட்டு,பொதுத் தேர்தலில் போட்டியிடும்பொழுது, இயல்பாகவே மக்கள் அதை நோக்கிப் போவார்கள். அந்தக் கூட்டின் வெற்றி என்பது ஒரு முற்கற்பிதமாக அமையும். அது மக்களை முன் முடிவுகளோடு வாக்களிக்கச் செய்யும். அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அதற்குப் பின் நடக்கக்கூடிய தேர்தல்களில் வாக்காளர்களின் மனோநிலையின் மீது செல்வாக்கைச் செலுத்தலாம் என்று பொருள். எனவே மக்கள் இயல்பாக முன் முடிவுகள் இன்றி வாக்களிப்பதற்கு முதலில் பொதுத்தேர்தலில் வைக்க வேண்டும், பின்னர் ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று பசில் கூறியுள்ளார். அதை மஹிந்தவும் ஆதரித்துள்ளார். அதாவது தாமரை மொட்டுக் கட்சி முதலில் பொதுத்தேர்தல் வைப்பதை வலியுறுத்துகின்றது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பொதுத் தேர்தலை அவர்கள் முதலில் வைக்கவில்லையே? இப்பொழுது மட்டும் ஏன் மக்கள் முன் முடிவுகள் இன்றி சுயாதீனமாக, சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்? ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலை வைத்தால் அதில் சில சமயம் ரணில் வெல்லக் கூடும். அத்தேர்தலில் அவர் ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக இறங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அவர் பெறக்கூடிய வெற்றியானது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வருவதற்கான ஒரு பரிசாகவே பார்க்கப்படும். அது இயல்பாகவே ரணிலின் பேரம் பேசும் பலத்தை அதிகப்படுத்தும். அவ்வாறு தனது பேர பலத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின், ஒரு பொதுத் தேர்தலை அவர் வைப்பாராக இருந்தால், அப்பொழுது ராஜபக்சக்கள் ஒப்பிட்டுளவில் பலவீனமாக இருப்பார்கள். யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்? யார் யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்? போன்ற விடயங்களில் ரணிலின் கை பலமாக இருக்கும். சரி அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைத்தால் என்ன நடக்கும்? பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்தக் கட்சியை விடவும் ராஜபக்ஷர்களின் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கிராமப்புறங்களில் யுத்த வெற்றிவாதம் இப்பொழுதும் சூடாகவே இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலில் யுஎன்பியை விட அதிக வாக்குகளை பெறுவார்களா இருந்தால், அவர்களுக்குப் பேர பலம் அதிகரிக்கும். அப்பொழுது அவர்கள் விரும்பிய அமைச்சைக் கேட்டுப் பெறலாம். நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் முதலில் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றார்களா? ஆனால் ராஜபக்சக்கள் ஒன்றை நினைக்க, மேற்கு நாடுகள் வேறு ஒன்றை நினைப்பதாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் மீண்டும் பலமடைந்து அதாவது தற்காப்பு நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு வருவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணிகள் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளாரா? அவர் கூறுவது உண்மையா பொய்யா? அவருக்கு பின் யார் இருக்கிறார்கள்? என்பதற்கெல்லாம் அப்பால்,ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றி ஞாபகப்படுத்துவது என்பது,அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கையில் அதைச் செய்வது என்பது,ராஜபக்சக்களுக்கு பாதகமானது.சிலசமயம் மைத்திரி கூறப்போகும் தகவல்கள் கிறீஸ்தவர்களைக் கோபமடையச் செய்யலாம். கர்தினால் மல்க்கம் ரஞ்சித் மீண்டும் ஒரு சுயாதீன விசாரணையைக் குறித்துக் கேட்கலாம். இவையெல்லாம் ராஜபக்சங்களுக்குப் பாதகமானவை. அதாவது வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் முன்னுக்கு வர முடியாத ஒரு நிலைமையை அது தோற்றுவிக்கலாம். எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளிப்படுத்தப்படக்கூடிய புதிய தகவல்கள் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் தற்காப்பு நிலைக்கு தள்ளக்கூடியவைகளாக இருக்கக் கூடும். அவர்களை “ஹை ப்ரோபைலில்” இருந்து “லோ ப்ரோபைல்” நிலைக்கு மாற்றுவது அதன் நோக்கமாக இருக்கலாம். அதாவது ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வழிகளை இலகுவாக்கிகி கொடுப்பது? மேற்கு நாடுகள் ஆகட்டும், ஐநாவாகட்டும், பன்னாட்டு நாணய நிதியம் ஆகட்டும் அனைத்துமே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வருவதைத்தான் விரும்புகின்றன. அவர்களுக்கு ரணிலை விட்டால் வேறு தெரியவில்லை. ஏன் ராஜபக்சங்களுக்கும் மகா சங்கத்துக்கும்கூட ரன்னிலை விட்டால் வேறு தெரிவில்லை. தேர்தலை முன்னிட்டு பன்னாட்டு நாணய நிதியம் அவரைப் பலப்படுத்த விளையும். அது மட்டுமல்ல, படித்த ஆங்கிலம் தெரிந்த மேல் தட்டு வர்க்கத்தின் மனதில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறார் என்ற ஒரு கருத்து பலமடைந்து வருகிறது. நாட்டுக்குள் வரும் உல்லாசப் பயணிகளின் தொகை முன்னுரை விட அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது. தவிர மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமை, எரிபொருள் விலையை அதிகரித்தமை, வரியை அதிகரித்தமை போன்ற நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானம் பெருகி வருகிறது. இவை போன்ற பல காரணங்களினாலும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது என்ற ஒரு கருத்து உயர் குழாத்தின் மத்தியில் உண்டு. ஆனால் நடுத்தர வர்க்கம் கீழ் நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அவ்வாறு இல்லை. அவர்களில் அநேகர் ஜேவிபிக்கு ஆதரவாகவே காணப்படுகின்றார்கள். இளம் பட்டதாரிகள் ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாதுள்ளது என்று புலம்புகிறார்கள். ஒரு மோட்டார் சைக்கிள் 8 லட்சத்துக்கு மேல் போகின்றது. ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாத ஒரு நாட்டை விட்டு அவர்கள் வெளியேறத் துடிக்கிறார்கள். அல்லது ஜேவிபியை ஆதரிக்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், அதில் வாக்குகள் மூன்றாகப் பிரியும் நிலைமைகள் அதிகரிக்கின்றன. ரணிலை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் மேற்கு நாடுகள், ராஜபக்சக்கள் அவருக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று நம்புகின்றன. இந்தியா இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? ரணில் புத்திசாலி, தந்திரசாலி. எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடியவர்.அப்படிப் பார்த்தால், இந்தியா அவரைக் கையாள்வது கடினம். ஆனால் இந்த விடயத்தில் ரணில் முந்திக் கொண்டு விட்டார் என்று தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்தியா தனக்கு எதிராகச் சிந்திக்கக் கூடாது என்று திட்டமிட்டு அவர் உழைக்கிறார். அதனால்தான் மூன்று தீவுகளிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான உடன்படிக்கை இம்மாதம் முதலாம் திகதி கைச்சாத்தாகியது. அதைவிட முக்கியமாக ராமர் பாலத்தை மீண்டும் கட்டப் போவதான ஒரு தோற்றத்தை அவர் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பி வருகிறார்.அவர் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி. அவர் பாலம் கட்டத் தயார் என்று பகிடிக்குக் கூற முடியாது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மோடியின் ஆட்சியின் கீழ் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி, குறிப்பாக தமிழகம் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி,என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது,அந்தப் பாலம் ஊடாக சிறிய இலங்கை தீவு இந்தியாவால் விழுங்கப்பட்டு விடும் என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பது இலகுவானது.அதை ரணில் எப்படி எதிர்கொள்வார்? அவரைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் வரையிலும் இந்தியாவைச் சமாளித்தால் போதும். ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா அவருக்கு எதிராகச் செயல்படா விட்டால் சரி என்று அவர் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆக மொத்தம், ரணில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கித் தன்னைப் பலப்படுத்தி வருகிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. ஆனால் மூன்றாகப் பிரியப் போகும் சிங்கள வாக்குகள் யாரைத் தெரிவு செய்யும்? https://athavannews.com/2024/1375842- சென்னையின் முகம்..
- கருத்து படங்கள்
- ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்
ஆசன வாயே... தினமும் காற்றை வெளியேற்றிக் கொண்டு இருக்கின்றது. அதுக்கே... இவர் காற்று அனுப்பினால், குடல் வெடிக்காமல் என்ன செய்யும். 😂 🤣- பைப்லைன் மூலம் கசிப்பு விநியோகம் : ஒருவர் கைது!
விலேஜ் விஞ்ஞானி. 😂 இவர் காய்ச்சுற கசிப்பும்... தரமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். 😋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐 வாழ்க வளமுடன். 🌺- கருத்து படங்கள்
- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
நீங்க வேறை... அவர் இந்த கம்பியை சொன்னவர்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.