Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் சடலமாக மீட்பு! இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், (Jean Francois Pactet) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384131
  2. @Kandiah57, @nochchi, @shanthy எல்லோரும் ஜேர்மனியின் வட பகுதியில் வசிக்கின்றார்கள். நாம் வசிப்பது தென்பகுதி. இரண்டிற்கும் இடையில் 500 கிலோ மீற்றர் தூரம் என்பதால் அவர்களை அழைக்கவில்லை ஈழப்பிரியன்.
  3. ஓம்... யாயினி. கூப்பிட்ட பெயரை மாற்றுவது கடினம் தான். தாத்தா... என்று கூப்பிடுவதும் இனிமையாகத்தான் இருக்கு. 🙂
  4. எமக்கு... அங்கு இருக்கும் மட்டும் நீங்கள்... மாப்பிள்ளை பகுதியா, பொம்பிளை பகுதியா என்று ஆரும் கேட்டு விடுவார்களோ என்று பயமாக இருந்தது. 😂 மொய் எழுதாமல்... வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு... வீட்டுக்கு பார்சலும் கட்டிக் கொண்டு போகிறீர்களோ என்று மிதிமிதி என்று மிதித்து விடுவார்களோ என்று நெஞ்சு பக்கு, பக்கு என்று அடித்துக் கொண்டு இருந்தது. 🤣
  5. மிகவும் நன்றி அல்வாயன். 🙏 பாகம் இரண்டு... எப்படியும் குமாரசாமி அண்ணை, பாஞ்ச் அண்ணையின் மூலம் வெளிவந்தால்தான் சந்திப்பின் மறு பக்கத்தையும் உணரக் கூடியதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. வெளிவரும் என நானும் காத்திருகின்றேன். 🙂
  6. மிக்க நன்றி கோசான். 🙏 உண்மைதான்... கவி அருணாசலம் இருந்திருந்தால் அழகிய கருத்தோவியமாக வரைந்து இருப்பார். 🙂 மற்றது... அந்த எம்.ஜி.ஆர். விசயத்தை குமாரசாமியார் வந்தவுடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 😂
  7. பையா.... நீங்கள், குமாரசாமி தாத்தா... தாத்தா... என்று இனி கூப்பிடாதேங்கோ. 😂 நான் நேற்றுப் பார்த்த அளவில், அவர் தான் உங்களை "பையன் தாத்தா" என்று கூப்பிட வேணும் போலுள்ளது. 🤣 ஓம்... சுவி. தமிழனின் இந்த நல்ல பழக்கத்தை பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன். 🙂
  8. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.அக்கூட்டத்தில் பங்குபற்றிய மதத் தலைவர்களும் உட்பட பெரும்பாலான குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகள் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்கியியிருக்கிறார்கள். மண்டபத்துக்குரிய வாடகையைக் கூட ஒரு சிவில் சமூகப் பிரதிநிதிதான் வழங்கியிருக்கிறார்.அந்த உண்டியலில் சேர்க்கப்பட்ட தொகை மொத்தச் செலவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குக் கிட்ட வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் காசை யாரோ ஒரு வெளிநாடு வழங்கியதா என்ற சந்தேகம் சில தரப்புகளால் எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கு பதிலாக சில கேள்விகளையே திருப்பி கேட்கலாம். முதலாவது கேள்வி இக்குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதற்குரிய ஆதாரங்களை வெளிப்படுத்துவார்களா? இரண்டாவது கேள்வி, வவுனியா தீர்மானத்தை நிறைவேற்றிய குடிமக்கள் சமூகங்கள் தமது தீர்மானத்தில் எதனைக் கூறுகின்றன? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போவதாகக் கூறுகின்றன.அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது ஒரு தேசமாக இல்லையா ? இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரள விடாது பிரிக்கும் சக்திகள் பலமடைந்து வருகின்றன என்பதுதான் உண்மை. தமிழ் மக்களின் தாயகத்தை வடக்கு கிழக்காக பிரிப்பதற்கு உழைக்கும் சக்திகள் கிழக்கில் வாக்கு பலத்தோடு மேலெழுந்துள்ளன. அதேசமயம் தமிழர் தாயகம் எங்கும் தமிழ் மக்களைக் கட்சிகள் பிரிக்கின்றன. கட்சி ஆதரவாளர்களாக தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஒரு கட்சி எதிர்க் கட்சிக்காரர்களை அரசாங்கத்தின் அடிவருடிகள் அல்லது துரோகிகள் அல்லது கைக்கூலிகள் என்றெல்லாம் வர்ணிக்கின்றது. இவ்வாறு தமது அரசியல் எதிரிகளை ஒருவர் மாறி ஒருவர் துரோகியாகச் சித்தரிப்பதன்மூலம் தமிழ் மக்கள் துரோகிகளாகவும் தியாகிகளாகவும் பிரிக்கப்படுகின்றார்கள். இது தவிர தீவிர இந்து மத நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புக்களால் மதப் பிரிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளைத் தாண்டி தமிழ் மக்களை ஒன்றாக்க வேண்டிய கட்சிகள் தங்களுக்கு இடையேயும் ஒற்றுமையாக இல்லை மட்டுமல்ல, கட்சிகளுக்குள்ளேயும் உடைவுகள் வந்துவிட்டன. இப்படிப்பார்த்தால் தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகள்தான் தாயகத்தில் பலமாகக் காணப்படுகின்றன.அப்படித்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும். அங்கேயும் இறந்தவர்களை நினைவு கூரும் விடயத்தில் தமிழர்கள் இரண்டாகி நிற்கிறார்கள்.அதுமட்டுமல்ல இறந்தவர்களை உயிர்பிக்கும் விடயத்திலும் தமிழ் மக்கள் இரண்டாக நிற்கிறார்கள். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை கலந்து பேசாமல் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் சில இமாலய பிரகடனத்தை வெளியிடுகின்றன. இப்படியாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் தமிழர்கள் தொடர்ந்து பிரிக்கப்படுகிறார்கள். இத்தகைய பொருள்படக் கூறின் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்குரிய சக்திகள் பலவீனமாக இருக்கின்றன என்று தான் கூற வேண்டும். அதனால்தான் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்; தமிழ் சக்தியை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும்; தமிழ் பலத்தை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும் என்று குடிமக்கள் சமூகங்கள் கேட்கின்றன. அவ்வாறு தமிழ் மக்களை ஒரு மையத்தில் திரட்டுவது தமிழ் மக்களுக்கு நல்லதா கெட்டதா? ஆனால் சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள், அவ்வாறு தமிழ் மக்களைத் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் ஏதோ ஒரு தூதரகம் அல்லது வெளிநாடு இருப்பதாக. இப்பொழுது மேலும் ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கலாம். உலகில் ஒரு மக்கள் கூட்டத்தை -அது சிறியதோ பெரியதோ- ஆள நினைக்கின்ற அல்லது தோற்கடிக்க நினைக்கின்ற அல்லது கையாள நினைக்கின்ற வெளிநாடுகள் அந்த மக்கள் கூட்டத்தை பிரித்துப் பிரித்துக் கையாளுமா? அல்லது சேர்த்துக் கூட்டிக்கட்டிக் கையாளுமா? அதற்கு ஆங்கிலத்தில் “டிவைட் அண்ட் ரூல்” என்ற கோட்பாடு உண்டு. எல்லாப் பேரரசுகளும் தமக்கு அருகே உள்ள சிறிய நாடுகளை பிரித்துத்தான் கையாண்டன. அப்படிப் பார்த்தால் ஒரு மக்கள் கூட்டத்தைக் கையாள முற்படும் எல்லா வெளித் தரப்புகளும் அந்த மக்கள் கூட்டத்தை எப்படி பல்வேறு கூறுகளாகப் பிரிக்கலாம் என்றுதான் சிந்திக்கும். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில கட்சிகள் கூறுகின்றன, தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயல்படுவது ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் என்று. உலகிலேயே ஐக்கியம் அல்லது ஒற்றுமை எனப்படுவதனை ஒரு வெளிநாட்டுச் சதி என்று சந்தேகிக்கும் மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்கள் மாறிவிட்டார்கள். 2009 க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலின் அடுத்த கட்ட வீழ்ச்சி இது. 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது ஆறாக் காயங்களும் ஆறாத் துயரங்களும் நிறைந்த கொந்தளிப்பான ஒரு கூட்டு மனோ நிலை. கொந்தளிப்பான மனோநிலை காரணமாக தமிழ் மக்கள் யாரைத் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றார்களோ அவர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள எல்லா தலைவர்களின் மீதும் பெட்டி கை மாறிய குற்றச்சாட்டு அல்லது மதுபானக் கடைக்கான லைசன்ஸ் வாங்கிய குற்றச்சாட்டு அல்லது தூதரகங்களிடம் மாதாந்தச் சம்பளம் பெறுவதான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு வகைப்பட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அப்படியென்றால் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது வைத்துக்கொண்டு ஏன் அவர்களை தலைவர்களாக தெரிவு செய்தார்கள்? கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு இடமற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜன வசியம் மிக்க தலைவர் என்று யார் உண்டு ? பதவியேற்ற புதிதில் விக்னேஸ்வரனுக்கு எதோ ஒரு ஜனவசியம் இருந்தது. ஒரு பண்பாட்டுத் தோற்றமும் இருந்தது. ஆனால் இப்பொழுது அது இல்லை. இப்பொழுது அரங்கில் ஜனவசியம் மிக்க தலைவர்கள் அனேகமாக இல்லை என்று ஒரு நிலை. இந்த வெற்றிடத்தை மிக ஆழமாக வியாக்கியானம் செய்தால், தமிழ் மக்களை ஒன்று திரட்டி வழி காட்ட வல்ல கவர்ச்சியான தலைவர்கள் யாருமே இல்லை என்று பொருள். இது மிகவும் பாரதூரமான ஒரு வெற்றிடம். கடந்த 15 ஆண்டு காலத் தேர்தல் அரசியலானது தமிழ் மக்களை தங்களுடைய பிரதிநிதிகளை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக ;ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக; எல்லாப் புதிய நகர்வுகளுக்கும் பின்னால் சூழ்ச்சி கோட்பாடுகளைத் தேடி அலையும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றி விட்டதா ? இவ்வாறு தமிழ் மக்கள் அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டையைப் போல சிதறிப் போவதைத் தடுப்பதற்காகத்தான் குடிமக்கள் சமூகங்கள் முதலில் ஒன்று திரண்டு வவுனியாத் தீர்மானத்தை நிறைவேற்றின.நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும் என்ற பெருவிருப்பத்தை சிவில் சமூகங்கள் வவுனியா தீர்மானத்தில் வெளிப்படுத்துகின்றன. சிவில் சமூகங்களின் இந்த விருப்பத்தை உள்வாங்கி அரசியல் கட்சிகள் முதலில் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் களைந்து தங்களுக்கு இடையே விசுவாசமான ஐக்கியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அதன்மூலம் தமது வாக்காளர்கள் மத்தியில் தங்கள் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக கட்சிக்காக வாக்கு சேர்ப்பதற்கு பதிலாக தேசத்துக்காக வாக்குச் சேர்க்கும் ஒரு கட்சி அரசியலைக் கட்டி எழுப்ப முன் வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்கள் முழுமையான பொருளில் ஒரு தேசமாகத் திரள்வார்கள்.தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது நிலவும் அவநம்பிக்கைகளையும் கசப்பையும் வெறுப்பையும் குற்றச்சாட்டுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் தோற்கடிப்பதற்கு ஒரே வழி விசுவாசமான உருகிப் பிணைந்த ஐக்கியம்தான். அதை எந்த ஒரு வெளிநாடும் காசு கொடுத்துச் செய்யப் போவதில்லை. எந்த ஒரு அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனமும் அதற்கு நிதி உதவி வழங்கப் போவதில்லை.அது ஒரு சதியல்ல அது ஒரு புரொஜக்ட் அல்ல.அது ஒரு பெருஞ் செயல்.அது தமிழ் மக்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று. அதைத் தமிழ் மக்களைத் தவிர வேறு யாருமே செய்ய முடியாது. அதைத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் மத நிறுவனங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். ஒரு காலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உன்னதமான தியாகங்களையும் வீரச் செயல்களையும் செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத் தமிழர்கள்.மகத்தான சித்தர்களையும் ஞானிகளையும் சான்றோர்களையும் அறிஞர்களையும் நிறுவன உருவாக்கிகளையும் கலைஞர்களையும் உற்பத்தி செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத்தமிழர்கள். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இரண்டாம் தலைமுறையானது ஏனைய சமூகங்களைக் கூர்ந்து கவனிக்கவைக்கும் கவர்ச்சியான வெற்றிகளைப் பெறத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்கள் பண்பாட்டுச் செழிப்பு மிக்கவர்கள். பண்பாட்டுச் செழிப்பு மிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்ட மக்களை எந்தப் புறத்தியாரும் தோற்கடித்து விட முடியாது. பண்பாட்டுச் செழிப்பு மிக்க நடுத்தர வர்க்கத்தை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை இலகுவாக தோற்கடித்து விட முடியாது என்பதனை அமில்கார் கப்றால் போன்ற தேசியவாத சிந்தனையாளர்கள் அழுத்திக் கூறுகிறார்கள். பண்பாட்டு மறுமலர்ச்சியே விடுதலையின் திறவுகோல். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய பண்பாட்டு விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இப்போது நிலவும் அவநம்பிக்கைகள்,குற்றச்சாட்டுகள், சூழ்ச்சிக் கோட்பாடுகள் போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து, உருகிப் பிணைந்த ஒரு தேசமாகத் தமிழ் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அரசியல் தெரிவானது அதைச் செய்யுமாக இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியாக அது அமையும். https://athavannews.com/2024/1384115
  9. தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு! இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தான எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாடு நெருப்பாலும் வெள்ளத்தாலும் அழிந்த நாடு அல்ல. அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த பொக்கிஷமே எமது நாடு. ஆனால், இந்த மாபெரும் பொக்கிஷத்தில், உண்பதற்கும் குடிப்பதற்கும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மருந்தின்றி இறந்து போகின்றார்கள், வீடின்றி வாழ்கின்றார்கள். ஆகையால், ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை வளர்க்கவில்லை. எனவே, தேசிய மக்கள் சக்தியுடன், மக்களும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியம் என தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது. நாம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம். இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு – தெற்கிலுள்ள அரசியல் வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம். பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, 1981 இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்கிமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள். தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? வடக்கிலுள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள். அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன். வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர், 1981 இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள். இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது. மக்கள் விடுதலை முன்னியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜேஆர் ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார். மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார். https://athavannews.com/2024/1384123
  10. கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதனாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி தெரிவிப்பு! கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்.மாவட்டத்திலுள்ள புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 375 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டிருந்த யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே, நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு இன்றும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த யாழ்ப்பாணத்து ஆசிரியர் பாரம்பரியத்தை மீள் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஆசிரியர்கள் சேவைகள், நாடளாவிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் மிகவும் கௌரவத்துடன் பார்க்ப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்தப் பொறுப்பை யாழ். ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றியிருந்ததாக தெரிவித்தார். மேலும் தான் படித்த கொழும்பு றோயல் கல்லூரியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்ததாகவும், அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஆசிரியர்களின் விசேடமான அர்ப்பணிப்பின் காரணமாகவே, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியர்கள் குறித்து சமூகத்தில் பேசப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த ஆசிரியர் பாரம்பரியம், நாட்டின் ஆசிரிய சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும், கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். குறித்த நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை இதன்போது வழங்கியிருந்தார். மேலும் இந் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1384111
  11. ஆம் சுவி, எதிர் பார்த்ததை விட ஒரு மங்களகரமான இனிமையான சூழலில் இந்தச் சந்திப்பு நடை பெற்றதாலும்… சந்திப்பின் போது மூவரும் மாறி மாறி சுவராசியமான விடயங்களை பேசிக் கொண்டு இருந்ததாலும் இரண்டரை மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை. உண்மையில் மனதிற்கு மகிழ்வான சந்திப்பாக அமைந்ததில் எம் மூவருக்கும் மகிழ்ச்சியே. 🥰
  12. ஏராளன் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி🙏. நான் எழுத தவற விட்டதை… குமாரசாமி அண்ணையும், பாஞ்ச் அண்ணையும் தொடர்ந்து எழுதுவார்கள் என நம்புகின்றேன். 🙂
  13. அதை ஏன்…. கேட்கிறீர்கள். குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️ நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து 🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂 எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு வந்து தந்து அசத்தி விட்டார். 💓
  14. நீங்கள் வேறை… நாங்கள் எதிர் பார்த்துப் போன குமாரசாமி அண்ணைக்கும், நேரில் கண்ட தோற்றத்திற்கும் மிகவும் பாரிய வித்தியாசம். உண்மையில் அவர் மிகவும் வயது முதிர்ந்தவராக, பெரிய உடல் அமைப்புடன் இருப்பார் என்று பார்த்தால்…. குமாரசாமி அண்ணையை இளமையான தோற்றத்தில் உடற்பயிற்சி செய்யும் உடல்வாகுடன் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். அதிலும் அவரின் வேற்று மொழி கலக்காத சுத்தமான தமிழ்ப் பேச்சு அற்புதம். இன்னும் கொஞ்ச நேரம் உரையாடி இருக்கலாமோ என நினைக்கும் அளவிற்கு அவர் தனது பேச்சின் மூலமும் செய்கையின் மூலமும் எம்மை கவர்ந்து இருந்தார். 🥰
  15. அதில் ஒரு “தொழில் ரகசியம்” இருக்கு கண்டியளோ….. 😁 தலைப்பிலேயே…. சந்திப்பில் ஒரு படமும் இல்லை என்றால், ஒரு குருவியும் திரிக்குள் வந்து எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் போடவில்லை.😂 (சும்மா தமாசு.) 🤣 நாளை பாஞ்ச் அண்ணையுடன் இதனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கின்றேன். எப்படியும் அடுத்த சில நாட்களுக்குள், அவரை மீண்டும் யாழ். களத்தில் எழுத வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுளேன். 🙂
  16. எங்கள் உரையாடலில்… உங்களின் திறமையை பற்றியும் கதைத்தோம். அதிலும்… யாழ். அகவை 26, சுய ஆக்கம் பகுதியில் நீங்கள் பல்வேறு கருப் பொருளில், பல ஆக்கங்களை எழுதிய உங்கள் ஆற்றலைப் பார்த்து வியந்தோம். 🤝👍🏽 அந்தத் திறமைக்கு… எமது பாராட்டுக்கள் ரசோதரன். 👏🏻 🙂
  17. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  18. நன்றி இணையவன். இதனை பாஞ்ச் அண்ணைக்கு தெரிவித்து விடுகின்றேன். 🙏
  19. ஈழப்பிரியன்... பாஞ்ச் அண்ணை தனது இருதய அறுவைச் சிகிச்சையின் பின் சிறிது காலம் ஓய்வு எடுத்து இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது உடல் நலம் சற்று தேறி உள்ள நிலையில்... யாழ். களத்திற்குள் வர பல முறை முயற்சி எடுத்தும், உள் நுழைய முடியவில்லை என்று கூறினார். தான் வழமையாக பாவிக்கும் கடவுச் சொல்லையே பாவித்தும் ஏதோ தடங்கல் காட்டுகின்றது என்றார்.
  20. அவர்களை போகும் வழியில்... வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லும் படிதான் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், நேற்று மதியம் தாண்டித்தான் அங்கிருந்து புறப்பட்டு இரவு இங்கு விடுதிக்கு வந்து சேர்ந்ததால்.... என்னால் அவர்களை வீட்டிற்கு கூப்பிட முடியாமல் போய் விட்டது. 🙂 அத்துடன் நாளை காலை அவர்கள் புறப்படுவதால்... சந்திப்பை தவற விட்டுவிடுவமோ என்ற அச்சத்தால் இன்றே அந்த நிகழ்வில்.... பட்டு வேட்டி சால்வையுடன் மங்களகரமாக நின்ற குமாரசாமி அண்ணாவை சந்தித்தோம்.
  21. படம் எடுத்தால்.... ஆயுள் குறைந்து விடும் என்று படம் எடுக்கவில்லை ஈழப்பிரியன். (லொள்)
  22. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  23. ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.