Everything posted by தமிழ் சிறி
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
கருத்து படங்கள்
- ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! (இரத்த மழை)
ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா (UK) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது. இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது. எனவே, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377266- அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
@goshan_che உங்களை இங்கே தேடுகிறார்கள். 😂- 779 சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்.
சாட்டுக்கு ஒரு பத்துப் பேரை விட்டாலே பெரிய விஷயம்.- வடக்கில் ஒரு வருடத்தில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
இலங்கையில் தினமும் திடீர் விபத்துக்களால் 30ற்கு மேற்படடவர்கள் உயிரிழக்கின்றார்களாம். வருடத்திற்கு 10,000 தாண்டுகின்றது. சிறிய நாட்டிற்கு இது பெரிய தொகை. விகாரை கட்டுறதிலையும், காணி பிடிக்கிறதிலையும் "பிசி"யாக இருந்தால்... இதுகளை யார் கவனிக்கிறது.- அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
ஓடி... தாவிப் பாயாத, மதிலா... என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.- மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்! எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன், பல சினிமா திரைப்படங்களையும் தயாரித்தவர் ஆவார். தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் இவர். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். பின்னர், திரைத் துறையில் எம்ஜிஆருக்கு வலதுகரமாக இருந்து, சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரை உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377324- அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
படத்துடன் தகவலை சொன்னால்தான், நம்புவார்கள். 😂- 779 சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்.
அதில் ஞானசாரதேரரும் உள்ளாரா.- வடக்கில் ஒரு வருடத்தில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
வாள் வெட்டு, வாகன விபத்தில் இறப்பவர்களும் அதிகமாக உள்ள நிலையில், நீரில் மூழ்கி இறப்பவர்களும் அதிகரித்து செல்கிறார்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!
போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்! இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அதன்படி சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் ஏனைய சேவைகள் என பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப்படையினரும் இணைந்து இதனை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார் மேலும் போர்வீரர்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1377275- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- கருத்து படங்கள்
- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
ஈழப்பிரியன்... இங்கு எடுத்திருந்தாலும், அங்கு எடுக்க வற்புறுத்துகிறார்களா... இதென்ன கொடுமையாக இருக்கு. நான்தான்... விளங்காமல் கோசானுக்கு "டோஸ்" குடுத்துப் போட்டன். 😂- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இங்கை 20 (டாலர்), அங்கை 30 (டாலர்) என்றால்.... ஏன் விலை கூடின இடத்தில் எடுக்க வேணும். இலங்கை அரசாங்கத்துக்கு டாலர் சேர்த்து குடுக்கிறீங்களா. 😂 🤣- டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது!
டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது! ”கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தனமான அரசியல், தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது” என முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். அண்மையில் பொன்னாவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முறியடிக்க வேறு பிரதேசங்களில் இருந்து 6பேரூந்துகளில் மக்கள் அழைத்துவரப்பட்டனர். எனினும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து குறித்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முதலில் நாம் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் . பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் விதமாக குறித்த மக்களுக்கு ஆளுக்கு தலா ஆயிரம் ரூபாய் தருவதாகவும் கடலட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் கூறியே அழைத்து வரப்பட்டனர். எனினும் அங்கு வந்த மக்கள், பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர். அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினையே பாதிக்கும். வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும். மேலும் இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணத்தோன்றுகிறது” இவ்வாறு ஜீவன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1377105- நீதிமன்றத்தை நாடும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி!
நீதிமன்றத்தை நாடும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி! விவாகரத்துக் கோரி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்நிலையில் குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 ஆம் திகதி நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்துகெண்டனர். பின்னர் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி அறிவித்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இதையடுத்து தனுஷ், ஐஸ்வர்யா கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377071- கருத்து படங்கள்
- தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1376989- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்!
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்! அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது. இதில், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதாவது, அரச ஊழியர்கள் தற்போது பெறும் சம்பளத்துக்கு அதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, “அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376934- ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!
ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்! அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. அவர் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்.மரபுரிமைச் சொத்துகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு காலம் தன்னுடைய சிறு பிராயத்தில் தன்னுடைய கிராமத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன பேதம் இன்றி ஒன்றாக வாழ்ந்ததைக் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் ஒரு மக்கள் மயப்பட்ட விடயம் அல்ல என்றும் கூற வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அவர் இன்னமும் வெளிப்படையாக உறுதியாக ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை.ஆனால் அதைப் பரிசீலிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஜேவிபி வந்துவிட்டது. இவைதான் அவர் பேசியவற்றின் சாராம்சம். தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு அவை உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்கள்.இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியிருப்பதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், அனுராவிடம் ஆழமான சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. கேள்வி ஒன்று, இலங்கைத் தீவு பல்லினத்தன்மை மிக்கது என்பதனை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா? ஆயின்,இரண்டாவதாக,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால், ஒரு தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜேவிபி தயாரா? சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வு என்று பார்க்கும் பொழுது, தமிழ் மக்கள் இப்பொழுது கூட்டாட்சியைத் தான் கேட்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உயர்ந்த ஜனநாயகங்களில் கூட்டாட்சி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறைமையாகக் காணப்படுகின்றது. ஜேவிபி தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி தீர்வைத் தரத் தயாரா? இதைத் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதனை விடவும்,இலங்கை முழுவதுக்குமான ஒரு தீர்வு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியானது அந்த அடிப்படையில், பல்லின; பல் சமய ; இரு மொழிப் பண்பைப் பேணும் விதத்தில் ஒரு தீர்வைதான் முன்வைக்க வேண்டும். உலகில் பல்லினத்தன்மை மிக்க நாடுகளில்; பழமொழி ;பல மதங்கள் ; பயிலப்படும் நாடுகளில் ; கூட்டாட்சி அதாவது சமஸ்டி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எனவே சமஸ்ரித் தீர்வு எனப்படுவது தமிழ் மக்களுக்கு உரியது என்பதை விடவும், இலங்கைத் தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கானது என்பது தான் மிகச் சரியான விளக்கம். நாலாவது கேள்வி, 2009க்கு முன்பு ஆயுத மோதல்களின் போது ஜேவிபி போரை ஆதரித்தது. போரில் ஈடுபடும் படை வீரர்களை ஆதரித்தது. படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. அதுதொடர்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா? ஐந்தாவது கேள்வி,இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. அதாவது தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரிக்க முற்பட்ட ஒரு கட்சி.அவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தைச் சட்ட ரீதியாகப் பிரித்தமைக்காக தமிழ் மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? இதை ஐநா தீர்மானங்களின் வார்த்தைகளில் கேட்டால், ஜேவிபியானது, இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுமா? இறந்த காலத்தில் அது தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறுமா? ஐந்தாவது கேள்வி, ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது அது இந்தியத் தமிழர்களை குறிப்பாக, மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் காட்டியது.இப்பொழுதும் ஜேவிபி அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றதா? அது தொடர்பாக மலையக மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? மேற்கண்ட கேள்விகள் தமிழ் மக்களால் அனுரகுமரவிடம் பகிரங்கமாகக் கேட்கப்பட வேண்டியவை. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால், தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டுரிமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அனுரகுமார உதிரியாகப் பேசுகின்ற மொழிப் பிரச்சினை; வழிபாட்டுப் பிரச்சினை; காணிப்பிரச்சினை; கல்விப் பிரச்சினை…முதற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தும் அந்தக் கூட்டு உரிமைகளுக்குள் அடங்கும். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வைதான் கேட்கின்றார்கள். எனவே கோட்பாட்டு ரீதியாகவும் அரசறிவியல் அர்த்தத்திலும் ஜேவிபி முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவாகக் கூற வேண்டும். இனப்பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல.முதலில் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினை எனப்படுவது, இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை பெரிய இனமாகிய பெரிய மதமாகிய சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அவர்கள் அழிக்க முற்பட்டார்கள். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் மொழி, நிலம், பண்பாடு ,பொருளாதாரம் போன்ற அம்சங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான். எனவே இனப்பிரச்சினை தோன்றியது எங்கிருந்து என்றால், இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் இருந்துதான். அதற்குத் தீர்வும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்,இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான். இதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து சொன்னால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் அதைத் தொடங்கலாம். ஆனால் ஜேவிபி அவ்வாறான அரசறிவியல் ஆழத்துக்குள் இறங்கத் தயார் இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதன்மூலம், சமஸ்ரித் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதன்மூலம், தென்னிலங்கையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை. அதேசமயம் தமிழ் வாக்குகள் அவர்களுக்குத் தேவை.அனுரகுமார கூறுகிறார், நான் வாக்கு வேட்டைக்கு வரவில்லை, நான் தீர்வைத் தருகிறேன் வாக்கைத் தாருங்கள் என்று வியாபாரம் செய்வதற்கு வரவில்லை… என்று கேட்க அது கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஜேவிபியின் தீர்வு என்ன என்பதனை வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து அவர் தப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பல தசாப்தங்களுக்கு முன் இருந்த நல்லுறவை மீளக்கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகிறார். அந்த நல்லுறவு எங்கே பாதிப்படைந்தது? தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிக்க முற்பட்ட பொழுதுதானே? அந்த நல்லுறவை எங்கிருந்து கட்டி எழுப்பலாம்? தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதானே ?ஆனால் ஜேவிபி அதை வெளிப்படையாகச் சொல்ல தயாரில்லை. இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வு என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள்தான் தீர்வு என்கிறார். ஆனால் ஜேவிபி தீர்வை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றது. அதாவது, ஜேவிபி வெளிப்படையான, அரசியல் அடர்த்தி மிக்க, வார்த்தைகளுக்கு ஊடாக கதைப்பதைத் தவிர்த்து, மழுப்பலான, பொத்தாம் பொதுவான, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளின் பாற்பட்ட வார்த்தைகளுக்கு ஊடாகப் பேச விளைகின்றது. அந்த அமைப்பில் இருந்து விலகிய ஒருவர் எழுதிய நாட்குறிப்பில்…“மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரியும் ஓர் இனவாதி. ஆனால் ஜேவிபியோ சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி” என்று கூறியிருப்பது தவறு என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஜேவிபி இக்கட்டுரையில் முன் வைக்கப்படும் பகிரங்க கேள்விகளுக்கு பதில் கூறுமா? https://athavannews.com/2024/1376894 - ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! (இரத்த மழை)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.