Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கையில் ஏழுமலையான் கோவில் ! இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1374722
  2. 56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் அதில் இறந்த குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக் கூட்டை வைத்தியர்கள் நீக்கியுள்ள போதும், மூதாட்டி உடலில் ஏற்பட்ட தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளாார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1374815
  3. மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு ! முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1374700
  4. ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன். ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். அதன் பின் அவரும் இணைந்திருக்கும் குத்து விளக்கு கூட்டணி, மன்னாரில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பொது தமிழ் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் தேர்தலைப் பகிஸ்க்கரிக்கப் போவதாகக் கூறியது. தமிழரசுக் கட்சி இன்று வரை தன் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவில்லை. எனினும் சாணக்கியன் பொதுத் தமிழ் வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைப் பீடத்துக்கான தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதனால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அதுதொடர்பாக கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. கட்சித் தலைமைக்கான தேர்தல் முடிந்த பின்னரும் அது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க முடியாத ஒரு நிலைமை கட்சிக்குள் காணப்படுகின்றது. ஏனென்றால், ஒருமித்து உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியாதபடி கட்சி நீதிமன்றத்தின் நிற்கின்றது. இத்தகையதோர் பின்னணியில், அண்மையில், யாழ்ப்பாணத்தில், தந்தை செல்வா கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டான் டிவியால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிவில் சமூகம் அக்கருத்தரங்கை ஒழுங்கு படுத்தியது. “மக்கள் மனு” என்று பெயரிடப்பட்ட அக்கருத்தரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாகவே பெருமளவுக்கு கருத்துக்கள் கூறப்பட்டன. கருத்தரங்கில் தமிழரசு கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய சிறீதரனும் பங்குபற்றினார். அவருமுட்பட அங்கு உரை நிகழ்த்திய பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார்கள். மக்கள் மனு என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் மேற்படி சிவில் சமூகமானது தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தமிழரசுக் கட்சி ஆதரிக்கவில்லை என்றால் குத்துவிளக்கு கூட்டணி அதில் அதிகம் ஆர்வமாக இருக்காது என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சி ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஆதரிக்குமாக இருந்தால் அது ஒரு பலமான நகர்வாக மாறும் என்ற அபிப்பிராயம் குத்துவிளக்கு கூட்டணிக்குள் இருக்கும் சில கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி அதில் இணையவில்லை என்றால் அந்த கோரிக்கை பெருமளவுக்கு வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அதில் கிடைக்கக்கூடிய தோல்வியானது, சில சமயம் குத்துவிளக்குக் கூட்டணியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் கூட்டணிக்குள் உள்ள சிலரிடம் உண்டு. எனவே தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெறுவாரோ இல்லையோ அதற்கு முன் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற கோரிக்கையின் வெற்றி என்பது பெருமளவுக்குத் தமிழரசுக் கட்சியின் முடிவில்தான் தங்கியிருக்கின்றது போலத் தெரிகிறது. தமிழரசு கட்சியோ தலைமைப் போட்டியால் தத்தளித்து கொண்டிருக்கிறது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத கட்சியாக அது காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வெளியே எடுக்காதவரை ஒரு பொது முடிவை எடுக்க அவர்களால் முடியாது என்று தெரிகிறது. இதுதான் தமிழ்த் தரப்பில் உள்ள நிலமை. அதே சமயம் சிங்களத்தரப்பைப் பொறுத்தவரையிலும் அங்கேயும் விளைவுகளை எதிர்வுகூற முடியாத ஒரு குழப்பமான நிலைமைதான் காணப்படுகின்றது. இப்போதுள்ள ஜனாதிபதி பொதுஜன பெரமுனவின் வாக்குப் பலத்தில் தங்கியிருப்பவர். ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் பொது வேட்பாளர் ஆகவன்றி, தனித்து தன் சொந்தப் பலத்தில் நிற்பதற்கு அவர் தயாரில்லை என்று தெரிகிறது. உடைந்து போய் இருக்கும் அவருடைய கட்சியை ஒட்ட வைப்பது இன்றுவரை கடினமாகவே உள்ளது.எனினும்,ஜேவிபி என்ற இடதுசாரி கட்சிக்கு எதிராக முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒன்றிணைக்ககூடிய வாய்ப்புகள் இப்பொழுதும் உண்டு. ஜேவிபியின் எழுச்சி என்பது ஒரு விதத்தில் இடது மரபுக்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடியது. ஜேவிபியின் வாக்கு வங்கி எழுச்சி பெறுகிறது என்ற மதிப்பீடு மிகையானது என்ற கருத்து ஒருபுறமிருக்க, அதுதொடர்பான பயம், அதற்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஒன்றிணைக்க வல்லது. 2022 இல் “அரகலய”வின் போது அதுதான் நடந்தது. மக்களின் தன்னெழுச்சியைக் கண்டதும் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்தார்கள். மக்கள் தன்னெழுச்சியைத் தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் அவருடைய மறைவில் பதுங்கிக் கொண்டார்கள். ஆனால் இப்பொழுது ராஜபக்சக்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டு விட்டதாக நம்புவதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கொழும்பில் உள்ள ஊடக வட்டாரங்கள் கருதுகின்றன. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச, ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதன் பின் மகிந்தவும் அதை வலியுறுத்தினார். ஒரு பொதுத் தேர்தலில் மக்கள் விருப்பம் என்னவென்பது துலக்கமாகத் தெரியவரும். அதன்பின் ஒரு ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெல்லக் கூடிய கட்சி அல்லது கூட்டு, அடுத்தடுத்த தேர்தல்களை வைத்துத் தன் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த விளையும். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஒரு முற்கற்பிதமாக அமையுக்கூடும்.அது அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களுடைய வாக்களிப்பு மனோநிலையின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடும். மாறாக, பொதுத்தேர்தலை முதலில் வைத்தால் மக்கள் எந்த விதமான முன் முடிவுகளும் இன்றி சுயாதீனமாக வாக்களிப்பார்கள் என்று பசில் நம்புகிறாரா?. ஆனால் அவர் அவ்வாறு கூறுவது, மக்களுடைய முடிவு சுயாதீனமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. ரணிலுக்கும் தங்களுக்கும் இடையிலான பேரத்தில் தங்களுடைய பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காகத் தான். ஒரு பொதுத் தேர்தல் வைத்தால் நிச்சயமாக ரணிலுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூற முடியாது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அவர் பெற்ற வெற்றிகள் எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் என்றும் எதிர்வு கூற முடியாது. அதேசமயம் பொதுஜன பெரமுன நம்புகிறது, யுத்த வெற்றி வாக்குகள் தனக்கு இப்பொழுதும் கிடைக்கும் என்று.அவ்வாறு பொதுஜன பெரமுன ஒரு பொதுத் தேர்தலில் ரணிலை விட அதிக வாக்குகளை பெறுமாக இருந்தால், அது ரணிலுக்கும் அவர்களுக்கும் இடையிலான பேரபலத்தை மாற்றி அமைக்கும் என்று அவர்கள் கணக்குப் போடக் கூடும். எதுவாயினும், பொதுஜன பெரமுன தனது பேர பலத்தை அதிகப்படுத்த முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் முதலில் வைக்கப்பட்டால் அதில் யார் வெல்ல கூடும் என்பதனை சரியாக கணிப்பிட முடியாத ஒரு நிலைமைதான் இப்பொழுது நாட்டில் காணப்படுகின்றது. அது ஜேவிபியின் பலம் அதிகரித்து வருவதால் ஏற்பட்ட ஒரு நிச்சயமின்மை. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பலமான ஐக்கியம் ஏற்பட முடியாததால் வந்த ஒரு நிச்சயமின்மை. பொதுஜன பெரமுனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேர விளையாட்டு முடியாத காரணத்தால் வந்த ஒரு நிச்சயமின்மை. அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து தென்னிலங்கையில் பேரப் பேச்சுக்கள் முடிவுறாத காரணத்தால், நிலைமைகளைத் திட்டவட்டமாக எதிர் கூறுவது கடினமாக உள்ளது. அதே சமயம் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற, நிச்சயமற்ற நிலைமைகளைக் கையாண்டு தன்னுடைய பேர வாய்ப்பை அதிகப்படுத்தும் விதத்தில், ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கி விளையாடத் தமிழ்த் தரப்பு எந்தளவுக்குத் தயார்? https://athavannews.com/2024/1374680
  5. இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை! இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற உறுமய சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக 408 காணி உறுதிகள் கையளிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தப்பட்ட காணி விடுவிப்பும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார், அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, விடுவிக்கப்பட்ட காணியில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374512
  6. நடிகை ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்கும் பாஜக… நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே, விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் நடிகர் சரத்குமார், 2007 இல் ஆரம்பத்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் சரத்குமார், இம்முறை பாஜகவுடன் இணைத்து போட்டியிடுகின்றார். கடந்த 12 ஆம் திகதி சமத்துவ மக்கள் கட்சியை, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என கூறி அவர் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374411
  7. அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா! அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வந்தது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அருணாச்சலுக்கு சென்றபோது, சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம். அப்பிராந்தியத்தின் மீது உரிமைகோரும் நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு, இராணுவம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பகுதிக்கு “ஜங்னான்” என பெயரிட்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்லும் இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374245
  8. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் விருப்பு மனு தாக்கல்! அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது மேலும் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் கூறப்படுகின்றது. https://athavannews.com/2024/1374105
  9. யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை அவரிடம் கையளித்துள்ளமையை அடுத்து அவரை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. https://athavannews.com/2024/1374202
  10. அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி! அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது. அதன்படி, தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பிரசாரமொன்றை திருச்சியில் ஆரம்பிக்கவுள்ளார். இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374196
  11. அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயதுடைய அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவனான அபிஜீத்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதற்கு முன்பாக கோல்கட்டாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் என்பவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்படி, அமெரிக்காவில் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வொஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருதுடன், மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். https://athavannews.com/2024/1374051

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.