தினேஷ் ஷாஃப்டரின்.. கைகள் கட்டப் பட்ட நிலையில்தான்...
குற்றுயிராக அவரது வாகனத்தில் இருந்து மீட்கப் பட்டார்.
இப்படி இருக்க... அது, கொலையா... தற்கொலையா என
இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கைகளை... பிளாஸ்ரிக் வயரினால் கட்டப் படுவதற்கு.. இன்னும் ஒருவரோ, சிலரோ தேவை.
அப்படி இருக்க.. அவர் எப்படி தற்கொலை செய்ய முடியும் என்பதை நீதிமன்றமும் சேர்ந்து,
வழக்கை இழுத்தடிக்கின்றது. உருப்படாத நாடு.
############### ################ ###############
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.
இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.
இதேவேளை நேற்று நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2023/1332806