உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான்.
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக்குமங்கு சிக்குமங்கு' பாடலில் இங்கு பதிவிட்டுள்ள படத்தில் அணிந்துள்ள காஸ்ட்யூமில் நடித்திருப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் சிங்கப்பூரின் டைகர்பாம் பார்க். நாம் தலைவலிக்காக தடவிக் கொள்ளும் டைகர்பாம் தைலம் கம்பெனிக்காரர்கள் அமைத்த பூங்கா அது. அந்தப் பாடல் காட்சிக்கான ஒப்பனையுடன் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே உரையாற்றுகிறார் மக்கள் திலகம்!
Swaminathan Sridhar
Muktha films 60