முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!!
தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.
விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள்.
இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-தற்ஸ் தமிழ்-
தமிழகத்தில்.... பல அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா...
உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா.