Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. கருத்தாளர்களுக்கு கருத்துகளால் பதில் கூற முடியாது எப்போதும் இனவாத வக்கிரத்தை கொட்டும் கேவலமான மனிதர்கள் பாடமெடுக்கும் நிலையில் நான் இல்லை. அரசியல் அறிவில் பூச்சியமான, வெறும் தனிமனித தாக்குதல் தான் அரசியல் என்று புரிந்து வைத்திருக்கும் யாழ்கள காமடிபீஸுக்கும் சேர்தது தான் கூறுகிறேன். 😂
  2. ஐரோப்பாவில் புலிக்கொடியேந்தி தனிநாட்டு காணப்புறப்பட்ட தீவிர தேசியர்கள் சிலர் சூரிச்சில் பிரதமர் ஹரணியுடன் போட்டி போட்டு செல்பி எடுத்தார்களே! களவாக முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏதும் செய்தார்களோ? டம்ப பண்ணிய தமிழ் மக்களின் பணங்கள் ஈரோக்கள் இலங்கை ரூபாகளாக வெள்ளையாக சலவை செய்யப்படுகிறதோ யாரறிவார். 😂 அதை திசை திருப்பதான் சுமந்திரன் காவடி இங்கு ஆடப்படுகிறதோ?
  3. கண்ணீர் அஞ்சலிகள். சடுதியான இழப்பை தாங்கும் மன வலிமையை இயற்கை வழங்கட்டும். உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன். 🪔🪔🪔🪔🪔
  4. எப்ப தொடக்கம் என று ஆண்டுவாரியாக ஏன் கேட்டீர்களோ எனக்கு தெரியாது. ஆனால், எனது பார்வையில் எந்த காலத்திலும் அவ்வாறு இருக்கவில்லை. அரசியல் செயற்பாடுகள் நூறுவீதம் நேர்மையாக இருபது உலகில் சாத்தியமற்றது. அதுவே ஜதார்ததம். இருந்தாலும், தனது மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் ஆக்க்குறைந்தது தமது மக்களுக்கான அனுகூலங்களை படிப்படியாகவெனிலும் அதிகரிக்க உதவுவதாக உலக அரசியல் இருக்கும். ஆனால் தமிழ் தேசிய அரசியலின் செயற்பாடுகள் சொந்த மக்களின் நன்மைகளை கூடக் கருத்தில் கொள்ளாத விதத்திலேயே தொடர்சசியாக செயற்பட்டுவருகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விட தமது ஈகோ, பிடிவாதம், சுயநலம் , எதிரிகளை உருவாக்கி வெற்றி வீரம் பேசுதல் போன்ற இன்னாரென்ன செயற்பாடுகள் மூலம் தனது சொந்த மக்களின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்தி வந்ததுள்ளதுள்ளனர். வரு முன்காப்பானாக இருக்கவேண்டிய தமிழ் தலைமைகள் அனைத்துமே ( ஆயுத இயக்கங்களும் இதனுள் அடக்கம்) இன்றுவரை வந்தபின் காப்பானாக்க் கூட செயற்படவில்லை. தமது மக்களை பற்றி கவலை கொள்ளாது தாம் விரும்பிய அமைப்புகளின் தேசிய வரட்டு பெருமைக்காக எல்லாத் தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குவது, பொது வெளி அரசியல் உரையாடல்களில் தனக்கு பிடிக்காத கருதாளர்கள் மீது இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளுவது அதைச் சிலாகித்து ஊக்கம் கொடுக்கும் பக்கா சுயநல கும்பல்களே தம்மை தேசிய எழுத்தாளர்கள் போல் கற்பிதத்துடன் இன்றும் conspiracy கோட்பாடுகளை உருவாக்கி மூலம் தாம் விரும்பியபடி கதைகளை எழுதி வருகின்றனர்.
  5. நீங்கள் கூறியது போல் ஈழத்தமிழர் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நான் கூறினேனா? நடக்காததை கூற எனக்கு என்ன விசரா? எப்படி ஈழத்தமிழர் அரசியல் நேர்மையாக இல்லையோ அதே போல் உலக அரசியலும் நேர்மையாக இல்லை என்ற உண்மையை மட்டுமே கூறினேன். பொறுப்ப ற்று நடந்துவிட்டு அதன் விளைவாக குத்துது குடையுது என்று கத்துவதிலோ அடுத்தவனை திட்டுவதுலோ பிரயோசனம் இல்லை, என்று மட்டுமே கூறினேன். தீதும் நன்றும் பிறர் தர வரா
  6. இங்கு விவாதங்கள் எல்லாமே எந்த கோணத்தில் நடத்தப்படுகின்றதென்றால், நமது பக்கதிலே எல்லோருமே சுத்தமான சூசைப்பிள்ளைகள், அடுத்தவர்கள் எல்லோருமே முழுமையான குற்றவாளிகள். சாகும் மட்டும் இந்த கோணத்தில் விவாதிப்பதால் ஐந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அந்த இடத்திலே நின்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். அடுத்தவனை குற்றம் சாட்டி விவாதிப்பதில் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பத்து வீதததையேனும் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள எடுத்து கொண்டிருந்தாலே நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். கண்ணதாசன் வரிகளில் கூறினால்… மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து உங்கள் முதுகைப் பாருங்கள்…! முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்….!
  7. அப்படியானால் தமிழர் போராட்டத்தை நடத்தியவர்களில் பலர் அப்படிச் செய்திருக்க வேண்டும். அப்படித் தேடினார்களா? அதற்கான மனம் அவர்களுக்கு இருந ததா?
  8. அப்படியா! தந்தை செல்வாவும் கடைசி காலத்தில் முதுமையால் கஷரப்பட்டே இறந்தார். இறுதியில் 40 நாள் ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தே உயிர்விட்டார். அவருக்கும் உங்கள் தியறி பொருந்துமா? அதை போல கடைசிக்காலத்தில் நோயின் தாக்கத்தால் கஷரப்பட்டு இறந்த பலரை எமது வாழ்வில் நடைமுறையில் காண்கிறோம். அவர்கள் எல்லோருக்கும் உங்கள் தியறி பொருந்துமா அல்லது நீங்கள் செலெக்ற் பண்ணுபவர்களுக்கு மட்டும் பொருந்துமா? யார் யாருக்கு இந்த தியறி பொருந்தும் என்று தீர்மானிப்பதற்கு கடவுளால் உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு authority வழங்கப்பட்டுள்ளதா? இது உங்களுக்கான கேள்வி மட்டும் அல்ல இப்படி உங்களைப்போல் புசத்தும் எல்லோருக்குமான கேள்வியும் கூட.
  9. அரசியல் வேண்டாம், பேச்சுவார்ததைகள் வேண்டாம், நாம் அடித்து தான் பிடிப்போம் என்று முடிவெடுத்தால் எதிரியும் அதை அடித்து தடுக்கவே முயற்சி செய்வான் . இது உலக நியதி. மனித மனப்பாங்கு எக்காலத்திலும் அப்படியானது தான். தொடர்சசியான அரசியல் Negotiation ல் இரு பகுதியும் தோல்வியடைவதில்லை. சேர்ந்தே இருவரும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. அடித்து பிடிப்பதில் ஒருவர் மட்டுமே வைற்றி பெறுவார். தோல்வி கண்டுவிட்டு , அவன் துரோகி, இவன் துரோகி என்று காலாகாலத்துக்கு கத்தி ஒப்பாரி கொண்டு திரிவதிலோ அவனை மண்ணள்ளி திட்டுவதாலோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அது அரசியலும் அல்ல. அப்படியான தவறான அரசியலை ஊக்குவிப்பவர்களே சமுதாயத்தின் முதல் எதிரிகள்.
  10. உண்மையில் இப்படி செய்தால் கஜே கஜே பார் சிறி கும்பல் எப்படி அரசியல் செய்வது?
  11. நல்லூர் பிரதேச சபையை நடத்துபவர்கள் ஆர். எஸ். எஸ் அமைப்பின் வழிநடத்தலில் உள்ளனரா?
  12. பிரபாகரன் இங்கு பேசுபொருள் அல்ல. திறமையான ராப் பாடகர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் வட இந்திய சங்கித்தனத்துக்கு அடிமையாகாமல் தனது இலங்கைத் தமிழர் என்ற தனித்துவத்துடன் மிளிரவேண்டும் என்பதையே @goshan_che @நியாயம் ஆகிய உறவுகளும் இங்கு சுட்டிக்காட்டினர். 1970 களின் ஆரம்பத்தில் இவர் போன்ற பல ஈழத்தின் பொப்பிசை கலைஞர்கள் இவ்வாறே தனித்துவத்துடன் செயற்பட்டனர். அவர்களை போல இவரும் மிளிரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி, தற்போதைய நிலையில் பிரபாகரனை போற்றுபவர்களில் பல ரகம் உண்டு. அவர்களின் எவரும் பிரபாகரன் விரும்பியதை போற்றமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அக்கறையும் இல்லை. தமது அரசியல் மதவெறி அஜண்டாவுக்காக தொட்டுக்க ஊறுகாய் போல் பிரபாகரனை போற்றுவோர் சிலர். பிரபாகரனை முன்னுறுத்தி பல கோடிகளை சுருட்டிய (அவர் வந்தால் கணக்கு காட்டுவோம் கோஷ்டி) மோசடிக்கும்பலும் அவர் வரமாட்டார் என்ற துணிவில், பிரபாகரனை போற்றுகிறார்கள். தமது சுய அரசியல் நலத்துக்காக, இலங்கையில் தமிழர் இருப்பை பலவீனப்படுத்தம், அழிவு அரசியலை செய்பவர்களும் அவர்கள் அப்படி செய்தாலும் பரவாயில்லை பிரபாகரனைப் போற்றினால் அது மட்டும் எமக்கு போதும் என்ற மனநிலை உடையவர்களும் பிரபாகரனைப் போற்றுகிறார்கள். அப்படியானவர்களை வைத்து தந்திரமாக பிரபாகரனை ஒரு ட்ரேட் மார்க்காக வியாபாரம் செய்பவர்களும், பணம் பிடுங்குபவர்களும் பிரபாகரனை போற்றுகிறார்கள். இதில் எந்த வகையறா உங்களுக்கு பிடிக்கும் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
  13. பொதுவாக ரப் பாடல்கள் சமுதாய கருத்துகளையும அடிமட்ட மக்களின் அவலங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை வெளிக் கொணர்வதாகவும் இருக்கும். பொப் மாறி யின் பாடல்கள் இன்றும் விரும்பப்படுவதற்கு, அதுவே காரணம். ஆனால் இவரது பாடல்களில் அதைக் காண முடியாது. வெறுமனே அழகு பதுமைகளாக பெண்களை வர்ணிக்கும் பாடல்களும், பக்தி காவடியாடும் பாடல்களுமே இவரது இசையில் மித மிஞ்சி இருக்கும் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதை விடுத்து வெறும் பழமைவாத கருத்துகளை வைத்து தமிழ் வளர்சியை தடுக்கும் பார்ப்பன அடிமைக் கூட்டமாக தமிழர்களை வைத்திருக்கும் மனப்பாங்கை இவர் கொண்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இவரின் இசைத்திறமை பாராட்டத்தக்கதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.