Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1,639
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by மல்லிகை வாசம்

 1. முட்டை சேர்த்த கோவா வறை ஒரு வித்தியாசமான முயற்சி. கோவா வறை எனக்கு மிகவும் பிடிக்கும். இனி முட்டை சேர்த்துச் சமைத்துப் பார்க்க வேண்டியது தான்! சமையல் குறிப்புக்கு நன்றி நிகே.
 2. ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் என எனக்குப் பிடித்த நடிகர் நடிகையர்கள்; சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பு வேறு. எனவே இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
 3. சுவைப்பிரியன் அண்ணா, இப்படிப் பல இடங்களில் நடப்பதுண்டு. வடிவங்கள் தான் மாறும். இவற்றைத் தலைக்கு எடுப்பதால் நேர விரயமும், மன உளைச்சலுமே மிஞ்சும். எனவே, இவற்றைக் கண்டும் காணாதது மாதிரி விட்டு விட்டு நம்ம பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்க வேணும்! (காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தக்க சமயத்தில் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்!)
 4. ஆழ்ந்த இரங்கல்களும், பிரார்த்தனைகளும் நெடுக்ஸ்.
 5. சுவைப்பிரியன் அண்ணா, உங்களது ஆதங்கத்தில் நியாயம் இல்லாமலில்லை. மற்றோரின் பரிகாசத்துக்கு அஞ்சி அஞ்சியே நாம் வாழ்வில் பலவற்றைத் தொலைத்துவிட்டோம்; மற்றோரைப் பரிகசித்தும் நமது காலத்தை வீணடித்தும்விட்டோம். இவ்வாறான சூழ்நிலைகளில் நான் நினைத்துக்கொள்வது: நாம் எது செய்தாலும் அதைப் பிறர் பரிகசிப்பார்கள் - பரிகசிப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை. 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்' உலகம் இது. பிறரைப் பரிகசித்து, அவர்களை அவமானத்தால் கூனிக்குறுக வைத்து, வேடிக்கைபார்த்து அவர்கள் தாழ்ந்துபோவதில் மகிழ்வடைவோரைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? அவ்வாறு நாம் அஞ்சுவதால் அவர்களது நோக்கத்தை நாமாகவே நிறைவேற்றுகிறோம். 50 வயதானால் கிழவர் எனப் பரிகசிக்கும் அதே நபர்கள் 50 வயதில் 40 வயதுக்குரிய தோற்றத்தில் இருப்பவரைக் கண்டு பொறாமைப்படலாம். அதேவேளை 40 வயதுடைய ஒருவர் நோய் வந்து தளர்ந்தால் 'இப்பவே வயசாகிக் கிழவனாயிட்டாய்' என்று பரிகசிக்கவும் செய்யலாம். எனவே, போட்டி பொறாமைகள் நிறைந்த உலகில் இவ்வாறான யதார்த்தங்களை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு எதிர்வினை ஆற்றாது, பிறர் பரிகசிப்புக்களைக் கண்டுகொள்ளாது புறக்கணித்து நமது கருமமே கண்ணாக இருந்தால் நாம் நிம்மதியான, நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பது எனது எண்ணம். இந்த மனோதிடத்தை வளர்ப்பது அவ்வளவு இலேசான விடயமுமல்ல. எவ்வாறு உடற்பயிற்சி செய்து நமது உடல் தசைகளை முறுக்கேற்றி உடல் வலுவைப் பெறுகிறோமோ, அவ்வாறே நமது மனோதிடத்தையும் தினமும் பயிற்சி செய்து வளர்க்க வேண்டும். நாம் முன்பு கலந்துரையாடிய தியானம் போன்ற விடயங்களும் இதற்கு உதவும். யோகாவையும் இதனுடன் சேர்க்கலாம். கூடவே பிரார்த்தனையின் சக்தியும் அளப்பரியது. நல்ல நூல்களைப் படித்து நமது அறிவை விருத்தி செய்தல், நல்ல இசையில், இயற்கை எழிலில் அவ்வப்போது மூழ்கித் திளைத்தல் என்று ஏராளம் விடயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக்கிப் பயிற்சி செய்யும்போது, புறச் சூழலில் இருந்து வரும் எதிர்வினைகளின் தாக்கத்தைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். நாளாந்த முயற்சி நாளடைவில் பயிற்சியாகி நம்மில் ஓர் அங்கமாகிவிடும். தினமும் பல் துலக்குவது போல, உணவு உண்பது போல இவையும் மிக அவசியம். வயதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டபடியால் இன்னொரு விடயம்: 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்'. அந்தக் குருத்தோலையும் ஓர் நாள் காவோலையாகும். காவோலைகளும் சிரித்துப் பரிகசிக்கலாம்; எல்லா ஓலைகளுக்கும் வீழும் நாள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் நாம் நமது சமநிலையைப் பேண அது உதவும். அந்த சமநிலை தான் இந்த உலக வாழ்வு என்ற சமுத்திரத்தில் நீச்சலடிக்க உதவும்!
 6. எனது பள்ளிக் காலங்களில் ஜீவா அவர்கள் நடாத்திய 'மல்லிகை' சஞ்சிகையை வாசித்த அனுபவங்கள் என்றும் பசுமையானவை. அன்னாருக்கு நன்றி கலந்த அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும்.
 7. சிறு வயதில் என் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் டொமினிக் ஜீவா ஐயாவின் 'மல்லிகை' இதழுக்கும் பெரும் பங்கு உண்டு. அனேகமாக நான் வாசித்த முதல் சஞ்சிகை 'மல்லிகை'யாகத் தான் இருக்க வேண்டும். எழுத்துக்கூட்டலும், புரியாத சொற்களுமாக வாசித்த காலம் அது. இடையிடையே அந்தக் கால ஞாபகங்கள் வந்து போனாலும் ஐயா அவர்கள் இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாமல் காலங்கள் கடந்துவிட்டன. இன்று அவரது மறைவும், உங்கள் கவிதையும் அந்த இனிய நினைவுகளை மீளவும் என் மனத்திரையில் கொணர்ந்துள்ளன, பசுவூர்க்கோபி. உங்கள் கவிதைக்கு நன்றி. ஜீவா ஐயாவுக்கு எனது அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும். தமிழ் இலக்கியத்துக்குத் தாங்கள் ஆற்றிய அளப்பரிய சேவையினை என்றென்றும் நினைவுகூர்வோம்.
 8. அதே இடம் தான் என்று நினைக்கிறன் சுவி அண்ணா. 90களின் ஆரம்பத்தில் சென்ற ஞாபகம்.
 9. இந்த இடம் யாழ் இந்து மைதானத்திற்கு மிக அருகாமையிலுள்ள இடமா சுவி அண்ணா? சிறு வயதில் அங்கு சென்ற ஞாபகம்.
 10. தத்துவங்கள் சொல்லிச் சென்ற அறிஞர்கள், ஞானிகள் எவரும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் புனிதர்களாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் விட்ட தவறுகள், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அவர்கள் மனதில் தோன்றியவையே அவர்களின் தத்துவங்கள். அத்துடன் அவர்களது காலத்தில் அவர்களைச் சூழ உள்ள சமூகம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பிற தகவல்களை உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்துப் பெறப்பட்ட முடிவுகளும் தத்துவங்களாயின. இன்னும், ஆழ்நிலை தியானங்கள், சுய விசாரம் (self-analysis) இவை மூலம் தம்முள்ளே உண்மையை நோக்கிய தேடலை மேற்கொண்டு தாம் உணர்ந்தவற்றை ஞான மொழிகளாகச் சொல்லிச் சென்றனர் மெய்ஞானிகள். எனவே, இந்த அறிஞர்கள், ஞானிகளது தத்துவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தும் முன்னர் நம்மைப் பற்றிய சுய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். இயன்ற அளவுக்குச் சுய விசாரம் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஓரிரவில் நிகழ்ந்துவிடக்கூடிய செயற்பாடல்ல. என்னைப் பொறுத்தவரை இது வாழ்க்கை முழுவதற்கும் நீண்டது. இதன் மூலம் நமது நோக்கங்கள், இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக்கிக்கொண்டு அந்த இலட்சியங்களுக்கு ஞானிகள், அறிஞர்களின் தத்துவங்கள் எவ்வாறு பயன்படும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும்போது நமக்குப் பொருத்தமான தத்துவங்களின் பயன் அதிகரித்து அவை மேலும் அர்த்தமுள்ளதாகின்றன. மறுபுறம் நமக்குத் தேவையற்ற தத்துவங்களை இனங்கண்டு ஒதுக்கவும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கும். அத்துடன் நாம் வாழும் காலம், வாழ்க்கைச் சூழல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் சில தத்துவங்கள் மிகப் பயனுள்ளதாகவும், ஏனையவை பொருத்தமற்றதாகவும் அமையலாம். எனவே, அவை பற்றிய அறிவு / விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். குறிப்பாக உலகியல் சார்ந்த தத்துவங்களுக்கு இது மிக மிக அவசியம்! ("எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெயப்பொருள் காண்பது அறிவு" - திருவள்ளுவர்)
 11. அரசியல், பிரிவினைகள் இவையெல்லாவற்றையும் தாண்டி, நமக்கெல்லாம் உன்னத கலைகள், கலாசாரம், இலக்கியம், ஆன்மீகம், பண்டைய அறிவியல் எனப் பலவற்றைத் தந்த பாரதத் தேவிக்கு எளியேனின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! நல்ல அறங்கள் ஓங்கிப் பாரத சமுதாயம் வாழ்கவே!
 12. சிரிப்பாகவும் இருக்கிறது; அதில் உண்மையும் இல்லாமலில்லை!
 13. பல கோடி ரசிகர்கள் மனதை வென்ற பாலு ஐயாவுக்கு இந்த விருது ஒன்றும் பெரிதல்ல. எனினும் அவருக்கு இவ்விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி - கூடவே அவரை மீண்டும் நினைவுபடுத்திக் கவலையும் தருகிறது!
 14. தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி பிரபா. எனக்கும் இதே தேடலில் மிக்க ஆர்வம் உண்டு. ஆதியை நோக்கிய தேடல் எப்போதும் சுவாரசியமானது. கூடவே இன்னோர் உலகத்துக்குச் செல்லும் உணர்வைத் தர வல்லது. ஆகவே இந்தத் தேடலில் உள்ள இன்னொருவரைக் கண்டதில் மகிழ்ச்சி! தொடர்ந்தும் தேடுங்கள், சொல்லுங்கள்; அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்.
 15. தமிழ்நிலா, உங்கள் மரபுக்கவிதைகள் மனதைக் கவர்கின்றன. இந்தக் காலத்தில் இப்படியான செந்தமிழ் வார்த்தைகளும், ஆழமான அர்த்தமும் ஒருங்கே சேர அமைந்த கவிதைகளைக் காண்பது அரிது. வாழ்த்துக்கள்!
 16. சங்கீத ரசனை பெரிதும் இல்லாத எனது பதின்ம வயதுகளின் இறுதியில் வெளிவந்த பாடல் இது. இதைப் பாடிய நித்யஶ்ரீ மகாதேவனின் கணீர்க் குரலே என்னைக் கர்நாடக சங்கீதம் பால் முதன்முதலில் ஈர்த்தது. இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் நானாக விரும்பிச் சென்ற முதல் கர்நாடக சங்கீதக் கச்சேரி நினைவுக்கு வருகிறது. நித்தியஶ்ரீ மகாதேவன் அவர்களின் கச்சேரி அது. 2002 ஆம் ஆண்டென நினைக்கிறேன். யாழில் அவரது முதற் கச்சேரியும் அதுவே. சரஸ்வதியே நேரில் வந்து பாடுவது போல உணர்ந்தேன்.
 17. 'அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ' 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' (1978) எம்.எஸ்.வி|புலமைபித்தன்|P.ஜெயச்சந்திரன்&வாணி ஜெயராம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.