Everything posted by ராசவன்னியன்
-
கொஞ்சம் சிரிக்க ....
- பெயர் மாற்றங்கள்.
https://tradingeconomics.com/country-list/retirement-age-men ஜெர்மனியில் தற்போதைய பணி ஓய்வு வயது, 65 வருடம் 7 மாதங்களாம்.- பெயர் மாற்றங்கள்.
இல்லை, ஜெர்மனியில் பென்சன் எடுக்க குறைந்தது 67 வயது முடிந்திருக்க வேண்டுமென படித்த ஞாபகம் உள்ளது.- பெயர் மாற்றங்கள்.
ஏன், பென்சன் எடுக்க ஆரம்பித்தாச்சா..? வேறு பெயரை நாங்கள் ஆலோசனையாக சொல்லலாமா? 🤣- இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
தவறை சுட்டியமைக்கு மிக்க நன்றி, பிரியன். 🤝 இப்பொழுது திருத்தியுள்ளேன்.- இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
இதில் வரும் "கொழும்பேத்துது.." என்ற சொல் 'கொழும்பு சென்று பொருளீட்ட உந்துதல் ஏற்படுத்துகிறது' என்ற பொருள்படுமா? 🤔- இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
ஈழத்து பொப்பிசை பாடல்கள் என மதியம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்..அதில் இந்த எளிமையான "இரயிலோடுது.." பாடல் மிகவும் பிடிக்கும். 'ஈழம்' பற்றி எந்த விபரமும் எமக்கு தெரியாது, ஆனால் அவற்றைப் பற்றி தெரிந்து உருவகப்படுத்திக்கொள்ள தூண்டுதலானது இம்மாதிரி பாடல்களே... அதுவும் மிகக் குறிப்பாக, இலங்கை வானொலியும், அதன் தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்களுமே..! 😍- சிங்காரவேலனே தேவா..!
உலகெங்குமுள்ள 93 குரல்கள் இணைந்த பாடல்..!- சிங்காரவேலனே தேவா..!
சில நாட்களுக்கு முன், யாழ்கள உறவு திரு.பாஞ் அவர்கள் இந்தக் காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.. காணொளி பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு.. பொறுமையாக கேட்டால் மெய்மறந்து ரசிக்கலாம்..!- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இப்படியும் 'மென்டல்'களா..? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..! னடிப்பை ரசிக்கலாம், இவரென்ன பூஜிக்கிறார்?- ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் - காவல் துறை அதிகாரி ஓபன் டாக்..
ராஜீவ் காந்தி கொலையில் இப்படி ஒவ்வொருத்தரும் கொடுக்கும் பேட்டிகளை படித்தால் தலைசுற்றுகிறது..!- "யார் அந்த நிலவு..?"
"என்னை காதலித்தால் மட்டும் போதுமா..?" "ஆசை முகம்" படத்தின் இந்த பாடலை ஜேபிஎல்(JBL) ஸ்பீக்கரில் கேட்க ஒலியின் தரம் மிக அருமையாக உள்ளது.- "யார் அந்த நிலவு..?"
"மலர்கள் நனைந்தன பனியாலே..!" இந்த பாடலை காலையிலோ, பின்னிரவிலோ கேளுங்கள்.. நிச்சயம் புத்துணர்ச்சி கிட்டும்..😎- "யார் அந்த நிலவு..?"
டி.எம்.எஸ் பாடியதில் மிக பிரபலமான பாடலான "யார் அந்த நிலவு..?" டிஜிட்டல் ஒலிமயமாகியதன் விளைவு கீழே..! 😎 👇- நான் ஆணையிட்டால்..
மெட்டுப் போடு.. மெட்டுப் போடு..! என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு..!! 😍 (சில அருமையான 5.1 ஒலி தரத்திலுள்ள பழைய பாடல்களை 'சவுண்ட் க்ளவ்டி'ல்(Sound Cloud) காப்பீடு காரணமாக தரவேற்றம் செய்து இங்கே இணைக்க முடியவில்லை.) ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி..! 🌹🙏- நான் ஆணையிட்டால்..
நான் ஆணையிட்டால்..! விடுமுறை.. பொழுது போகலை..! தேவையான சில பழைய பாடல்களின் அட்டவணையை தயாரித்து இணையத்தில் எங்காவது உயர்தர துல்லிய 5.1 ஒலி தரத்தில் பாடல்கள் இருக்கிறதா? என தேடினேன். சில பாடல்கள் கிட்டின. அவற்றை தரம் பிரித்து இணைக்கப் பார்க்கிறேன். என்னிடமுள்ள ஜேபிஎல் ஸ்பீக்கரில்(Charge 5) 'மொபைல் ப்ளூ டூத்' மூலம் இணைத்து இப்பாடலை கேட்டேன். பாடலின் ஒலி தரமுடன் உள்ளது. நீங்களும் கேட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன்..! 😉- 'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம்..?
சில கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் ஓரளவு தமிழர் வரலாற்று அடிப்படைதான். மிகுதி புனைவு.- 'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம்..?
வரலாற்று சான்றுகளோடு விளக்கும், முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள்.- 'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம்..?
தஞ்சை பெரிய கோவிலில் வியக்க வைக்கும் தமிழர்களின் கட்டுமான பொறியியல்.. இக்கணொளியை பார்த்தால் உணரலாம்..- 'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம்..?
மேலேயுள்ள மருத்துவர்.காந்தராஜ் அவர்களின் செவ்விக்கான காணொளியில் திரு.குமார் இட்டுள்ள இந்த பின்னோட்டம், கவனத்திற்குரியது.. ***** அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து "புல்லரிப்போடு" இருக்கின்ற அனைவருக்கும்... 1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது. 2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து "நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்" என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் 'விக்ரம் - ஐஸ்வர்யா ராய்' ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள். 3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி 'அரசியல்' இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள 'பொன்னியின் செல்வனில்' அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும். 4. எல்லாவற்றிற்கும் மேலாக 'அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற 'ராஜராஜ சோழன்' இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார்' என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற 'அரசியல்' புரியும். 5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல. இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும். 6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் . இது கற்பனை. அவ்வளவுதான்.) எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய " "சிவகங்கைச் சீமை" தோற்றது. காணொளி- 'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம்..?
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள "பொன்னியின் செல்வன்" படத்தை பார்த்து பலரும் இணையத்தில் சோழர்களின் வரலாற்றை பற்றிய தேடல்களை ஆரம்பிக்க.. இப்பொழுது பல காணொளிகளை யூடுயூபில் காணக்கூடியதாக இருக்கிறது.. அவற்றில் கவர்ந்த இந்த இரு பேட்டிகளும் மிகவும் சுவாரசியமானவை..! இக்கால தமிழர்கள், மறந்த அல்லது தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது இக்காணொளிகளின் சிறப்பு. இருவருக்கும் நன்றிகள்..👌 ஆரிய மாயையை விலக்க, வரலாற்று திரிப்புகளை இனம் காண இம்மாதிரி காணொளிகள்/பேட்டிகள் இன்னும் பல வரவேண்டும்..!- கங்கை கொண்ட சோழபுரம் - ஈழத் தமிழில்..
- கங்கை கொண்ட சோழபுரம் - ஈழத் தமிழில்..
நான் இதுவரை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்றது இல்லை..! இங்குள்ள ராசேந்திர சோழன் கட்டியுள்ள கோயில், சரித்திரப் புகழ் வாய்ந்தது. கோயிலின் உட்புறத்தை ஈழத் தமிழில் வர்ணித்து சுற்றிக் கட்டுவது இன்னும் சிறப்புடன் இருப்பதாக உணர்கிறேன். இந்தப் பொடியர் யாழ்ப்பாணத்திலிருந்து மினக்கெட்டு தமிழ்நாடு வந்து, நாட்டின் பல பகுதிகளை சுற்றிகாட்டியுள்ளார் போலும். வாழ்த்துகள்..! 💐- சூப்பர்சோனிக் பயணிகள் விமானம்..
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் "பூம் ஓவர்சர் சூப்பர்சோனிக் (Boom Overture)" விமானத்தின் பிரச்சனைகள் இன்னும் முடிவடையவில்லை. பல பெரிய நிறுவனங்கள் இந்த சூப்பர்சோனிக் விமான திட்டத்திற்கான இன்ஜினை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அறிவித்தன. செப்டம்பர் தொடக்கத்தில், ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce) இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்திறனுக்கு இத்திட்டத்தில் பங்கு பெறுவது உதவாது என காரணங்கள் சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து, பிராட் & விட்னி(Pratt & Whitney), ஜி.இ ஏவியேஷன்(GE Aviation), ஹனிவெல்(Honeywell) மற்றும் சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்கள் (Safran Aircraft Engines) ஆகிய விமான எஞ்சின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் 'சூப்பர்சோனிக் விமான திட்டத்தில் ஆர்வம் இல்லை' என்று தெரிவித்தன. பூம் திட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என இத்திட்டத்தின் நிறுவனர் தெரிவித்தார். முன்னணி எஞ்சின் உற்பத்தியாளர்கள் 'பூம் ஓவர்சர் திட்டத்தில்' பங்கேற்க மறுத்தபோதிலும், பூம் நிறுவனம் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 35 விமானங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் ஒரு ஆலையை உருவாக்கவும், 2029-க்குள் பயணிகள் சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு சமீபத்தில் சூப்பர்சோனிக் விமானங்களை உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்தது, ஏனெனில் அவை சப்சோனிக் விமானத்தை விட ஒரு கி.மீக்கு ஒரு பயணிக்கு 7 முதல் 9 மடங்கு அதிக எரிபொருளை செலவழிக்கும் என தெரிவித்தது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜெட் எரிபொருள் (SAF) மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஈடுசெய்யும் என்று பூம் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், SAF இன் திறமையற்ற நுகர்வு இருக்கும் என்று சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் கட்டுப்பாட்டாளர் கூறுகிறார். பொறுத்திருந்து பார்க்கலாம். இணைத்திலிருந்து- சென்னை விமான நிலைய விரிவாக்கம்..!
- பெயர் மாற்றங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.