Everything posted by ராசவன்னியன்
-
சாமி சிறீ பாஞ்
மீண்டு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.🙏 தங்களை நேரில் சந்தித்ததில் பல மடங்கு மகிழ்ச்சி. கடல் கடந்த தேசத்தில் இனிய உறவாக, அண்ணனாக தங்களை கிடைக்க வழி சமைத்த யாழ்களத்திற்கும் நன்றி.😍 தாங்கள் என்றும் நலமுடன் நீடூழி வாழ வேண்டுதல்கள்.🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்படியா? மூவருக்கும் மிக்க நன்றி. 🙏 5 வருசத்துக்கு முன் நான் பார்த்த பாஞ், இப்பொழுது பார்த்தபோது கொஞ்சம் உடலால் தளர்ந்து இருந்தார். ஆனால் மென்மையான பேச்சில், அதே துள்ளல்..! அடுத்த முறை வரும்போது என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று காண்பிப்பதாக சொல்லியிருக்கார்.😍 என்றும் நலமுடன் வாழ்க.🙏 ஆமாம், சமயம் கிட்டும்போதெல்லாம் அவரிடம் தொலைபேசியில் பேசி, நலம் விசாரிப்பதுண்டு.
-
எனது அறிமுகம்
மிக்க நலம். எப்படியுள்ளீர்கள்? விசாரித்தமைக்கு மிக்க நன்றி தம்பி.🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
ஏன் சார் சொல்லவே இல்லை?😋 சந்தித்த இனிய நினைவுகளுடன் இருவருக்கும் மனமுவந்த வாழ்த்துகளும், வணக்கமும்..!🙏 பூரண நலமுடன் வாழிய பல்லாண்டு..🙏😍
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
வினா விடை
வணக்கம். 🙏 வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜
-
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
உயிர் நீத்த உறவுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்😢💐🙏
-
எனது அறிமுகம்
விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி💐🙏 ஆமாம். 🌷 மிக்க நன்றி விசு💐🙏 வலி சுமந்த வரிகள்😥
-
எனது அறிமுகம்
நன்றி. நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐
-
எனது அறிமுகம்
இதே பொலுசன் பிரச்சனை தமிழ் நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
-
எனது அறிமுகம்
நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
-
எனது அறிமுகம்
மிக்க நன்றி, கு.சா🙏 பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி, ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
-
எனது அறிமுகம்
அட, இப்பொழுதுதான் பார்த்தேன்.. நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍
- சென்னையின் முகம்..
-
எனது அறிமுகம்
தில்லையில் படித்த பொறியாளன் நான், தில்லை அவர்களை வாழ்த்தி வருக வருகவென வரவேற்கிறேன்.🙏 இப்போதைக்கு நான் ஓய்வு பெறுவதாக எண்ணமில்லை..!😍
-
இரண்டாம் பயணம்
முழுவதையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படிக்கும்போது பல்வேறு உணர்வலைகள்.. அதுவும் முல்லைத்தீவு நோக்கிய பயண விவரிப்பு மனசை மிகவும் அலைக்கழித்து கவலை கொள்ளச் செய்தது. மீண்டும் சுயநினைவிற்கு வர நேரமெடுத்தது. காலம் நல்ல தீர்வை வழங்கட்டும். வலிகளை சொல்லிய அருமையான பயணக் கட்டுரைக்கு மிக்க நன்றி, திரு.ரஞ்சித் 😌🙏
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
🙏
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
உருட்டுகள் எல்லாம் கனஜோரா இருக்கு..! 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமை, உண்மைதான்..😃
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
நான் கடந்த இரண்டு வருடங்களாக ஐபோன் 13 ஐ உபயோகிக்றேன். இன்னமும் பாவிக்கும்போது தடுமாற்றம்தான்.வேறு கைப்பேசிக்கும் மாற இயலாது, ஏனெனில் இந்த ஐபோன் என் பிள்ளைகள், எனக்கு பரிசளித்தது. அவர்களிடம் பாவிப்பதில் சிரமத்தை சொன்னால் 'இவ்வளவு கணணி மென்பொருள்களை கையாள்கிறீர்கள், இது கூட புரிந்து பாவிக்க இயலாதா?' என சிரிக்கிறார்கள். ஒன்னும் சொல்ல இயலாது.😟
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
பெரிய மனுசர், பெரிய மனுசர்தாய்யா. அதுதான் அழகு. 😃 ஆனாலும் அரசியல் கருத்துக்களை ஈயம் பூசினால் போல வைப்பதில் தவறில்லை. நீங்கள் கருத்து வைக்காமல், வெளியாட்களாகிய நாங்கள் கருத்து வைப்பதால் என்ன பயன்? 😌
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
யாழ் உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. 🙏
- திண்ணை