Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. மிக்க நன்றி நுணா.🙏 தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂 மிக்க நன்றி பெருமாள்.🙏 யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏 நலமா.? குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி, கு.சா.🙏 நலமா.? பரிமளம் அம்மணி நலமா?🙂
  2. மிக்க நன்றி, நிலாமதி அக்கா(?)..🙏 நீங்கள் நலமா? 🙂 இங்கு எல்லோரும் நலமே. வணக்கம் சுவி..நலமா? 🙏 பேசி ரொம்ப நாளாச்சி ஐயா..😌 எத்தனை பேரப் பிள்ளைகள்? எல்லோரும் சுகமா?🙂
  3. வணக்கம் விசு.. 🙏 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🙂 இங்கு அனைவரும் நலம்.. புதுவருடத்தில் யாழ் எப்படி இருக்கிறது என எட்டிப் பார்த்தேன் ஐயா. ஏன் திண்ணைக் கிணற்றை காணேல்ல..?🙂 பெரியவர் பாஞ் அவர்களிடம் அலைப்பேசியில் பேசினேன். 'ஏன் யாழ் வருவதில்லை..?' என ஆதங்கப்பட்டார். குதிச்சிட்டேன்.😌
  4. உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..🙂
  5. நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌
  6. வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍
  7. “ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க.. ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை.. இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. “என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க.. அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்.. பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு... அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..! “யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..! கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு.. “அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு. அவன்கிட்ட தான் செயின் இருந்தது..! அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர். இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..! “அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க.. அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு. “அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க. கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு. " ****** " (அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎) படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..! - டிவிட்டரில் ரசித்தது
  8. இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..
  9. இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..
  10. நீங்கள் இருவரும் சொல்வது உண்மைதான். இங்கு மத்திய கிழக்கு நாடு வந்தவுடன் எந்த மல்லு கடைக்கு போனாலும் இந்த பிட்டு தான். அதுவும் வாழைப்பழம், அப்பளம் போன்றவற்றை பிட்டுவோடு பிசைந்து அடிப்பார்கள்.. ‘வ்வ்வேவே’ என வாந்திதான் வரும். ஆனால் ஊரில் கிராமத்தில் எப்பொழுதாவது அம்மா பச்சரிசி மாவை இடித்து குழைத்து அவித்து அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் சீனியை கலந்து அம்மா செய்து கொடுப்பார்கள். அம்மா செய்த அவ்வகை புட்டு பிடிக்கும்.
  11. இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இணையவன்..💐
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ் சிறி! வாழிய பல்லாண்டு..!
  14. அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ.. திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க.. *..Rest is history.....!* 😛 - ட்விட்டரில் ரசித்தது.
  15. ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌 வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜
  16. 80 ரூபாய்க்கு மாமா வாரார்..! இந்தக் காணொளி நகைச்சுவையாக இருந்தாலும் கோவை, திருப்பூர் பகுதிகளில் கள யதார்த்தமும் அப்படித்தான் உள்ளது.
  17. யாழ் கள உறவுகளுக்கு, இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
  18. (படத்தின் தாற்பரியம் புரிகிறதா..?) 😜 👇 https://twitter.com/jaikumar0431974/status/1604344044926033920?s=20&t=w0_orSODJq911mH0JUtJng
  19. இன்னும் விரிவான அம்சங்களுடன் இக்காணொளி.. என்னப்பா இது சமையல் மெனு மாதிரி குழந்தைகளை நம் விருப்பபடி தயாரித்து பெற முடியுமாமே..?
  20. செயற்கை கருப்பை மூலம் 'ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம்' என்று சொல்லும் நிறுவனம்! பெர்லின்: 'பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும்' என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், புற்றுநோய் மற்றும் பிற உடல் சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு செயற்கை முறையில் குழந்தை உருவாக்கும் முறை ஒரு தீர்வாக அமையும் என்றும் எக்டோ லைப் தெரிவிக்கிறது. வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் தற்போது வியாபார மயமாகியுள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் இந்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.