Everything posted by ராசவன்னியன்
-
பழுதான 'ஐபோன் 13' ஐ மீள் உருவாக்குவது எப்படி?
நான் மொபைல் போனிற்குள் ஏகப்பட்ட நுணுக்கமான விடையங்கள் இருக்குமென எண்ணினேன். ஆனால் இந்த ஐபோனின் உள் அமைப்பை பார்க்கும்போது, நம்மிடமும் சில உபகரணங்கள் இருந்தால் மிக எளிதாக திருத்த வேலை தொழில் ஒன்றை ஆரம்பிக்கலாமென தோன்றுகிறது. ஏற்கனவே இந்த கணணி, தொலைக்காட்சி பெட்டிகளை பிரித்துப்போட்டு, துருவி ஆராய்ந்து மறுபடியும் உருவேற்றிய அனுபவம் உண்டு.
-
பழுதான 'ஐபோன் 13' ஐ மீள் உருவாக்குவது எப்படி?
என்னிடமுள்ள ஐபோன் 13 பற்றிய 'உட்பாகங்களை தெரிந்துகொள்ள, அல்லது ஏதும் பழுது ஏற்பட்டல் நாமே அதை திருத்திக்கொள்வது எப்படி?' என இணையத்தில் தேடியபோது இக்கணொளி கிடைத்தது. இதில் இயங்குதள மென்பொருளை பற்றி இல்லையென்றாலும், வன்பொருட்களின் உள்ளார்ந்த அமைப்பை அறிந்துகொள்ளலாம். பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். 😉
-
ஜாஸ்(Jaws) சுறா - முப்பரிமாணத்தில்..in 3D
பாண்டிச்சேரி, ரத்னா தியேட்டர் அன்றும்(48 வருடங்களுக்கு முன்), இன்றும் எப்படி இருக்கிறது என தேடினேன்..! அன்று: இன்று:
-
ஜாஸ்(Jaws) சுறா - முப்பரிமாணத்தில்..in 3D
ஆட்கொல்லி சுறாவின் இறுதி நிமிடங்கள்..! Enjoy.. 🙃 🤗 காஸ் சிலிண்டரை கவ்வி வரும் சுறாவை சுடும்போது, துப்பாக்கி குண்டு சிலிண்டரை துளைத்து வெடித்து சுறா சதை துண்டுகளாக சிதறும்போது வரும் நிம்மதி நம் முகத்திலும் படர்வதுதான், படத்தின் வெற்றி..!
-
ஜாஸ்(Jaws) சுறா - முப்பரிமாணத்தில்..in 3D
யூடுயூபில் சிறந்த ஆங்கிலப் படங்களின் சாகச, மயிர்கூச்செறியும் காட்சிகளை மட்டும் கத்தரித்து வெளியிடும் சில அருமையான தளங்கள் உள்ளன. முதலில் ரசித்துப் பார்த்த முழுப்படத்தையும் திரும்ப பார்க்காமல், ரசிகர்களை கவர்ந்த காட்சிகளை மட்டும் நாம் இங்கே பார்க்கலாம். அம்மாதிரியான தளத்திலிருந்து இந்த ஜாஸ்(Jaws) படத்தின் உச்சக்கட்ட காட்சியின்(Climax) ஒரு பகுதி கிழே..! 👇 இப்பொழுது இக்காட்சியை, புதிய பதிப்பில் (new Release in 3D) முப்பரிமாணத்தில் நாம் பார்த்தால் எப்படியிருக்கும்.. ? 🤔
-
ஜாஸ்(Jaws) சுறா - முப்பரிமாணத்தில்..in 3D
(கல்லூரியில் படிக்கும்போது பாண்டிச்சேரி ரத்னா திரையரங்கில் ஜாஸ் படத்தை இரவுக்காட்சியில் பார்த்தேன். ஊரே அடங்கிப்போன அவ்விரவில் கடைசிக் காட்சி வரை மிரட்டிய படம். இன்றும் பசுமையாக உள்ளது. படம் பார்த்து முடித்து விடுதிக்கு திரும்பும் வரை காட்சிகள் நினைவிட்டு அகலவே இல்லை. அடுத்த சில நாட்கள் கடலில் காலை நனைக்கவே பயந்த காலம் உண்டு.) 48 வருடங்கள் கழித்து அதே ஜாஸ் படத்தை முப்பரிமாணத்தில் -3Dயில் மறுபடியும் புதுப்பித்து வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை இயக்கும்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்கிற்கு வயது வெறும் 26 தானாம். இந்த ட்ரெயிலரை பார்த்தால் அக்காலத்திலேயே எடுக்கப்பட்ட நேர்த்தியான பிரமாண்டம் புரியும். 1975-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட இந்தியா முழுதும் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ படம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. சுறா மீனை வைத்து மக்களை மிரட்டினார் ஸ்பீல்பெர்க். சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் குறித்த அலசல் பார்வை இது. சென்னையில் தமிழ்ப் படங்களுக்கு இணையாக ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்கள் கோலோச்சிய காலம் அது. ஹாலிவுட் படங்களும், ஜேம்ஸ்பாண்ட் படங்களும் போட்டி போட்டு ரசிகர்களை ஈர்த்தன. புரூஸ்லீ மறைந்து சில நாட்கள் கழித்து ஆனந்த் தியேட்டரில் வெளியான ‘எண்டர் தி டிராகன்’ சக்கைப்போடு போட்டது என்றால், கேசினோ திரையரங்கில் வெளியான ‘ஜாஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளைப் பெரிதும் ஈர்த்தது ஜாஸ் திரைப்படம். உலகெங்கும் இந்த புதிய யுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு மீன் இவ்வளவு மிரட்டுமா? என்ற கேள்வி, படத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்களான ரிச்சர்ட் டி ஜானுக், டேவிட் ப்ரவுன் ஆகிய இருவரும், பீட்டர் பென்ச்லீ எழுதிய நாவலான 'Jaws' பற்றித் தெரிந்து கொள்கின்றனர். சிறிய நகரத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு பெரிய வெள்ளை சுறா மீனைப் பற்றியும், அதைக் கொல்வதற்காக கடல் பயணம் மேற்கொண்ட மூன்று நபர்களையும் பற்றி பேசுவதே 'Jaws' நாவல். அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரே இரவில் படித்து முடித்த இருவரும், உடனடியாக இதைப் படமாக்கியே தீரவேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரித்து ஜாம்பவானாகத் திகழ்ந்த யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் நிறுவனம், இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிப்பது அதுவே முதன்முறை. தலையும் புரியாமல், வாலும் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் ரிச்சர்டும், டேவிட் ப்ரவுனும். இந்தப் படத்தை இயக்க முதலில் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநரான ஜான் ஸ்டர்ஜஸ் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஆனால், ஒரு சுறா மீனை எப்படி பிரதான பாத்திரமாகக் காட்டுவது என்கிற குழப்பத்தில் அவர் பின்வாங்கிவிடுகிறார். இந்தச் சமயத்தில்தான் இதே யுனிவர்ஸல் நிறுவனத்துக்காக ‘The Sugarland Express’ என்ற தனது முதல் முழுநீளப் படத்தை இயக்கிய 26 வயதே ஆகியிருந்த ஸ்பீல்பெர்க்கின் நினைவு, ரிச்சர்ட் மற்றும் டேவிட் ப்ரவுனுக்கு வருகிறது. (இதற்கு முன் நாம் பார்த்த ஸ்பீல்பெர்க் இயக்கிய Duel திரைப்படம், முதலில் தொலைக்காட்சிப் படமாக எடுக்கப்பட்டு, பின்னர் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியானது நினைவிருக்கலாம்). ஸ்பீல்பெர்க்கை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்த தயாரிப்பாளர்கள், அவரிடம் பீட்டர் பென்ச்லீயின் நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்கின்றனர். அந்தப் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்படும் ஸ்பீல்பெர்க், அதைப் படமாக்க ஒப்புக்கொள்கிறார். 3.5 மில்லியன் டாலர்கள் பட்ஜெட், 55 நாள் ஷூட்டிங் என முடிவு செய்யப்படுகிறது. 1974-ம் ஆண்டு முதல் நாள் படப்பிடிப்புடன் தொடங்குகிறது ‘ஜாஸ்'. அமிட்டி தீவின் கடற்கரை ஓரத்தில் ஒரு பீச் பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் குளிப்பதற்காக கடலை நோக்கி ஓடுகிறார்கள். முழு போதையில் இருக்கும் ஆணால், அந்தப் பெண்ணுக்கு ஈடாக ஓட முடியவில்லை. போதை தலைக்கேறி கரையிலேயே படுத்து விடுகிறான். நீந்தியபடி கடலின் உள்ளே சென்றுவிடும் அந்தப் பெண்ணை, ஏதோவொன்று நீருக்கடியிலிருந்து கொடூரமான முறையில் தாக்குகிறது. இப்படியான பரபரப்புடன் தொடங்குகிறது ’ஜாஸ்’ படத்தின் முதல் காட்சி. மறுநாள் காலையில் போலீஸ் அதிகாரி ப்ரோடியின் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. போனில் சொல்லப்பட்ட இடத்துக்குச் செல்லும் ப்ரோடி, கரையில் கண்ட காட்சியைப் பார்த்து உறைந்து நிற்கிறார். ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியிருக்கிறது. இது நிச்சயம் சுறா மீனின் தாக்குதல்தான் என்று உறுதி செய்யும் ப்ரோடி, கடற்கரையைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயல்கிறார். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அமிட்டி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று, இதை அப்படியே மூடி மறைத்து விடுமாறு ப்ரோடிக்கு கட்டளையிடுகிறார் மேயர் லாரி வான். வேறுவழியின்றி தலையாட்டுகிறார் ப்ரோடி. சிறிது இடைவெளியிலேயே அடுத்த தாக்குதலும் நடக்கிறது. உஷாராகும் காவல்துறை, சுறாவின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கிறது. உள்ளூர் வேட்டைக்காரரான குயிண்ட், தான் சுறாவைக் கொன்று கொண்டு வந்தால் 10,000 டாலர்கள் தரவேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார். இதற்கிடையே, கடல் ஆராய்ச்சியாளரான ஹூப்பர் என்பவரைக் காவல்துறை நியமிக்கிறது. இறந்த பெண்ணின் உடலைக் கூறாய்வு செய்யும் ஹூப்பர், இந்தத் தாக்குதலுக்குக் காரணம் ஒரு ராட்சத சுறா என்று அடித்துக் கூறுகிறார். இந்நிலையில், மீனவர்கள் கூட்டம் ஒன்று சுறாவை வேட்டையாடக் கிளம்புகிறது. அன்று மாலையே ஒரு மிகப்பெரிய சுறாவைக் கொன்றுவிட்டும் கரை திரும்புகிறது. காவல்துறையும், ஊர் மக்களும் சுறா ஒழிந்தது என கொண்டாடித் தீர்க்கின்றனர். ஆனால், சுறாவின் உடலை ஆய்வு செய்யும் ஹூப்பர், இது சாதாரண Tiger Shark என்றும், அதன் உடலில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மனித உறுப்புகளும் இல்லை என்றும் ப்ரோடியிடம் கூறுகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த நாளே கடற்கரையில் மக்கள் குழுமியிருக்கும் ஒரு நேரத்தில் அடுத்த உயிரையும் காவு வாங்குகிறது ராட்சத ஆட்கொல்லி சுறா. இந்தத் தாக்குதலில் ப்ரோடியின் மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதனால் கடும் கோபமடையும் ப்ரோடி, ஹூப்பர் மற்றும் குயிண்ட் உதவியுடன் சுறாவை வேட்டையாட கடலுக்குள் பயணம் செய்கிறார். இறுதியில் சுறா கொல்லப்பட்டதா? என்பதே ‘ஜாஸ்' படத்தின் கதை. படத்தின் டைட்டிலுக்குப் பிறகு ஒரு பெண் கொல்லப்படும் காட்சியில் வேகமெடுக்கும் படம், எங்கும் நிற்காமல் டாப் கியரிலேயே இறுதிவரை பயணிக்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் பெரிதாக வளராத காலகட்டம் என்பதால், படம் முழுவதும் செயற்கை சுறாவே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனாலும், ஒரு காட்சியில் கூட அது பொம்மை என்று நம்ப முடியாதபடி காட்சிப்படுத்தப்பட்டிருப்பதே இயக்குநர் ஸ்பீல்பெர்க்கின் சாமர்த்தியம். அடிப்படையில் 'ஜாஸ்' நாவல் சீரியசாகச் செல்லும். ஆனால், அதைப் படமாக்கும்போது அப்படியே எடுத்துவிடாமல், படத்தில் சுவாரஸ்யத்தைக் கொண்டுவர ஆங்காங்கே பல நகைச்சுவை வசனங்களைத் தூவியிருப்பார் ஸ்பீல்பெர்க். பெரும்பாலான காட்சிகள் கடலில் எடுக்கப்பட்ட முதல் படமும் இதுவே. இதில், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. படத்தை 55 நாட்களில் முடித்துத் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என 159 நாட்கள் நீண்டது. இது ஸ்பீல்பெர்க்குக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பின்னாட்களில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய ஸ்பீல்பெர்க், “ ‘ ஜாஸ்’ படம் எடுக்கும்போது ஏற்பட்ட நீண்ட கால இழுபறியால், என் சினிமா வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன்” என்று கூறினார். ஏனெனில், அப்போதைய காலகட்டத்தில் ஒரு படம் எடுக்க உச்சபட்சமே 100 நாட்கள்தான். படத்தின் இறுதிக்காட்சி ஷூட்டிங்கின்போது, கோபத்தில் இயக்குநரான தன்னையும் தூக்கிக் கடலில் போட்டுவிடுவார்கள் என்று பயந்து படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்ததாக ஸ்பீல்பெர்க் நகைச்சுவையாகக் கூறினார். ஒரு வழியாகப் படம் முடிந்து, 1975-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வெளியானது . படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஒரு சுறா மீனை வைத்து இப்படிக்கூட படமெடுக்க முடியுமா என ரசிகர்கள் வியந்தனர். உலகெங்கும் பல கோடிகளைக் குவித்தது. விளைவு, ஹாலிவுட் வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படமாக ‘ஜாஸ்’ விளங்கியது. 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஹாலிவுட்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ‘ஜாஸ்’ 7-வது இடத்தில் இருக்கிறது. சுறா மீனை வைத்து ஸ்பீல்பெர்க் எடுத்த பின்னர், அதைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான படங்கள் மீன்களை, கடல் விலங்குகளை மையமாக வந்துவிட்டாலும், ‘ஜாஸ்’-க்கு என்றுமே கிரேஸ்தான். தமிழ் இந்து
-
யாரு பார்த்த வேலையப்பு..?
இதோ பாருங்கள்.. இன்னொரு 'தங்கப்ப....தக்க' சிவாஜி..! 😜 கடலூர் மஞ்சக்குப்பத்தில், கண்ணன் என்பவர் அசல் சிவாஜி போல ஒரு திருமண விழாவில்..! 🤭 👌
-
மனைவிக்கு பயந்து பனைமரத்தில் வாழ்க்கை..!
மனைவிக்கு பயந்து பனைமரத்தில் வாழ்க்கை.. உத்தரபிரதேசத்தின் 'மவு' மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். இவருக்கும் இவரது மனைவிகும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பலமுறை பொறுத்துப்பார்த்த அவர், பின்னர் பொறுக்கமுடியாமல் விபரீத முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அதன்படி ஒருநாள் மனைவியோடு சண்டை ஏற்பட்டதும், வீட்டின் அருகே இருக்கும் பனை மரத்தில் ஏறியவர், அங்கேயே தங்கியுள்ளார். 'எப்படி என்றாலும் அவர் இறங்கத்தானே வேண்டும்' என்று காத்திருந்த மனைவி, அவர் இறங்காமல் போகமே கடும் வருத்தமடைந்துள்ளார். இயற்கை உபாதை கழிக்க மட்டும் கீழே இறங்கும் ராம் பிரவேஷ், மற்ற நேரங்களில் பனைமரத்திலேயே இருந்து வருகிறார். அவருக்கான உணவை அவர் தந்தை வின்சுராம் மேலே அனுப்பி வந்துள்ளார். மரத்தில் இருந்து இறங்குமாறு ராம் பிரவேஷிடம் பல முறை கிராமத்தினர் கூறியும் மனைவிக்கு பயந்து அவர் மரத்திலிருந்து இறங்க மறுத்துள்ளார். இதனால் கிராமத்தினர் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர். போலிஸார் வந்து பேசியும் பலன் ஏதும் இல்லாததால் சம்பவத்தை வீடியோ பதிவாக எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இருக்கும் பனைமரம் கிராமத்தின் நடுப்பகுதியில் இருப்பதால் அது கிராமத்தினருக்கு கடும் அசௌகரியத்தை கொடுத்துள்ளது. இது தொடர்பாக கூறிய அந்த கிராம தலைவர், "கிராமத்தின் நடுவில் இருக்கும் பனைமரத்தில் 1 மாதமாக அவர் இருப்பது பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அசௌகரியத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் மீது புகார் கொடுத்திருக்கிறோம். விரைவில் அவர் கீழே இறங்குவார் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர். கலைஞர் செய்திகள்
-
மூளையை இனிமேலாவது பாவிங்கோ..!
- PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒருமுறை ட்ரெண்டிங் செய்தியாகியுள்ளார். நிதியமைச்சராக அவர் பொறுப்பேற்றதும் முதன்முதலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு' என்று கூறி மாநிலங்களுக்கான உரிமைகள் பற்றி விரிவாக பேசினார். அவரது பேச்சு அனைத்து மாநிலங்களுக்குமான இருந்தது. ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன், பாஜக மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தாலும், அசாரமல் பலவற்றை இடது கையால் கையாண்டும் வருகிறார் பிடிஆர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின்னர், வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர், கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு, என அவர் பதிலளித்த விதங்கள் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டாலும், மற்றவர்களிடம் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என அவர் பேசினாலும், அவரது பேச்சும், விமர்சனங்களும் ஆழமாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது. அந்த வகையில், இலவசங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடக விவாதம் ஒன்றில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்தே, அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுகு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ‘இலவசங்களும், சமூகநலத் திட்டமும் வேறு’ என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலவசங்கள் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. அதன்படி, வட இந்திய ஊடகம் ஒன்று இலவசங்கள் பற்றிய விவாதத்திற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அழைத்திருந்தது. நிகழ்ச்சியின்போது, 'இலவசம் தேவையில்லை, அது மக்களை பாதிக்கிறது என்று பிரதமர் மோடி சொல்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “நீங்கள் சொல்வதை சொல்ல உங்களுக்கு அரசியலைப்பு அடிப்படை இருக்க வேண்டும். உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் அல்லது எங்களை விட சிறப்பாக நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்தை வளர்த்து விட்டீர்கள், கடனை குறைத்து விட்டீர்கள், தனிநபர் வருமானத்தை அதிகரித்து விட்டீர்கள், வேலைவாய்ப்பை உருவாக்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை கேட்கலாம். ஆனால், இதில் எதுவுமே இல்லாமல் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதை கேட்க வேண்டும். நான் கடவுளை நம்புகிறேன். நான் எந்த மனிதனையும் கடவுள் என்று நினைக்கவில்லை. நான் ஏன் ஒருவரின் பார்வையை ஏற்க வேண்டும். தேர்தலின் மூலம் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றிய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம். அடுத்த 3 ஆண்டுகளும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வோம். நாங்கள் ஒன்றிய அரசுகு அதிக நிதி பங்களிப்பை வழங்குகிறோம். நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 30/33 பைசாதான் திரும்ப கிடைக்கிறது. நாங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும். நாங்கள் எந்த அடிப்படையில் கேட்க வேண்டும். உங்களுக்கு அரசியலமைப்பு அடிப்படை உள்ளதா? இல்லை. நீங்கள் நிதி நிபுணரா? இல்லை. உங்களிடம் நோபல் பரிசு உள்ளதா? இல்லை. எங்களை விட சிறப்பாக செயல்பட்டீர்களா? இல்லை. எந்த அடிப்படையில் நான் உங்களுக்காக எனது கொள்கையை மாற்ற வேண்டும். இது என்ன வானத்தில் இருந்து வரும் கூடுதல் அரசியலைப்பு ஆணையா? என்ன பேசுறீங்க நீங்க?” என்று ஆவேசமாக பேசினார். பிடிஆரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், விவாதத்தின்போது, பிடிஆரின் உடல்மொழியும் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, வட இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கருத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும் எனவும், மத்திய அரசை போன்று, தமிழகத்தை வட இந்திய ஊடகங்களும் சற்றி தள்ளி வைத்தே பார்க்கும் என்ற விமர்சனங்கள் உண்டு. அப்படி இருக்கையில், வட இந்திய ஊடக விவாதத்தில் பங்கேற்று பிடிஆர் பேசிய தொனியும் வைரலாகி வருகிறது. சமயம்- PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
இந்திய நாட்டில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளித் தெளித்து வாக்குகளை கவரும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இலவசங்களினால் அரசிடமுள்ள வரிப்பணம் வீணாவதாகவும், அவற்றை வேறு உபயோகமான முறைகளில் செலவழிக்கவும், தேர்தல் ஆணையத்தின் மூலம் இம்மாதிரி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும் சங்கிகளின் ஆதரவு ஊடகங்கள் எழுதி வருகின்றன. அவ்வகையான ஒரு விவாத நிகழ்ச்சியில், ஆறு நாட்களுக்கு முன் 'இந்தியா டுடே' நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சரின் விளாசல் கீழே.. இதில் வேடிக்கை என்னவென்றால், வட மாநிலங்களிலும் இந்த இலவசங்களை ஆளும் பி.ஜே.பி அளித்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதானி, அம்பானி போன்ற கார்பொரேட் நிறுவனங்களின் நிலுவையிலிருக்கும் வங்கிக் கடன்களை ரத்து செய்ததும் பி.ஜே.பி அரசுதான்.- PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
மேலேயுள்ள காணொளிகளை பாருங்கள், ரசிக்கலாம், தெளியலாம். 😉- PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேட்டி, வட இந்திய அதிகார வர்க்கத்தை, பிராமணிய குழுவை அசைத்துப்பார்த்து எரிச்சலடைய வைத்துள்ளது. பேட்டி ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் நாட்டின் சுயநிர்ணய, சுயமரியாதைக்கான தேவையை, விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நுணுக்கமாக எடுத்துரைத்துள்ளார். பொறுமையாக பார்த்தால், இக்காணொளியை நிச்சயம் ரசிக்கலாம். 👌 நேர்காணலின் முடிவில் 'பல்வேறு கலாச்சாரம், மொழிகள், இனங்கள் கொண்ட இந்தியா ஒரு நாடாக இருப்பது அதிசயம், அது இன்னும் 25 கழித்தும் அது தொடருமா? என்பதை காலம்தான் சொல்லும்' என முத்தாய்ப்பாக முடித்துள்ளது சிறப்பு..!- பசுமையை அழித்து... பசுமை விமான நிலையமா..?
பசுமையை அழித்து... பசுமை விமான நிலையமா..? இருக்கும் விமான நிலையத்தின் அருகில் உள்ள இடங்களை வாங்கி விரிவாக்கம் செய்யலாம்.. இத்தனை நாள் அரசு தூங்கிவிட்டு இப்பொழுது 75 கி.மீட்டருக்கு அப்பால் 2 வது விமான நிலையம் தேவையா..?- இன்று சென்னைக்கு வயது 383 - வாழ்த்துக்கள்..!
- தொட வரவோ..?
இரண்டு வாரங்களுக்கு முன், கிரீஸிலுள்ள ஸ்கியதோஸ்(Skiathos Airport)விமான நிலைய ஓடு பாதையில் இறங்கிய "விஸ் ஏர்" விமானம் வேடிக்கை பார்பவரின் தலையை ஏறத்தாழ தொட்டு இறங்குவதை பார்த்தால், அந்தப் பக்கமே போக தோன்றாது. ஆனால் இந்த இடம் சுற்றுலா தலமாகவே இன்னும் உள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மொத்தமே 1628 மீட்டர்கள் தான். ஆகவே விமானங்கள் தரையிறங்க நெருங்கும்போது அண்மித்த கடற்கரையை ஒட்டி மிகவும் தாழ இறங்குவதால் இந்நிலை. இந்த நீளம் குறைந்த ஓடுதளத்தில் போயிங் 767 ரக விமானங்களும் வந்து செல்கின்றன. மேலதிக தகவல்: (யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் நீளம் 1400 மீட்டர்கள்.) அபிவிருத்திக்கான திட்ட வரைவு.. https://www.caa.lk/images/pdf/downloads/KKS_Airport.pdf- சென்னையின் இன்னொரு முகம்..
இதே வீதி வியாபாரிகளை, வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவால் இடித்துவிட்டால் போதும், சென்னை தமிழில் வைவார்கள். 😄 'பேமானி, கசுமாலம், ஒன் மூஞ்சியில கையை வைக்க..! வீட்ல சொல்லிக்கினு வந்துட்டையா..?' என ஒருமையில் விளித்து திட்டும் வசவுகளை காது கொடுத்து கேட்க இயலாது. 🤭 'சென்னை தமிழ்' புரிய கற்றுக்கொண்டது, இம்மாதிரி மக்கள் பேசும்போது கேட்டு பழகியதுதான்.- சென்னையின் இன்னொரு முகம்..
பூக்கடை காவல் நிலையத்திலிருந்து தேவராஜ முதலி தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு போன்ற தெருக்களில் மக்கள் நெரிசல் மிக அதிகமாக இருக்கும். இங்கிருக்கும் கிளை தெருக்களான காசி செட்டி தெருவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கிவிட்டு, வரும்வழியில் அகர்வால் பவனின் ரசமலாய் வாங்கி சாப்பிட்டுவிட்டு அப்படியே கந்தசாமி கோவிலுக்கு சென்று வணங்கி வருவதும் உண்டு. இந்த ரசமலாய் என்பது திரட்டுப்பாலுடன் பாலாடை கட்டிகள், மசாலா பொருட்களை சேர்த்து சுண்ட காய்ச்சிவிட்டு, பாதாம், குங்கும பூ தூவி, சிறு மண்பானைகளில் குளிரவைத்து கொடுப்பார்கள். அகர்வால் பவனில் இவ்வகை இனிப்புகள் மிக நன்றாக இருக்கும். இப்பகுதிகளில் மொத்த விலைக்கடைகள் அதிகமாக இருப்பதால், இந்த மீன் பாடி வண்டிகள், குட்டி யானை வாகனங்கள் அதிகமாக ஓடும். தேர்ந்தெடுக்க வகை வகையான பொருட்கள், அவைகளின் விலையும் கொஞ்சம் மலிவாக கிட்டும். இரு சக்கர வாகனத்தில் செல்வது மிகக் கடினம். சில தெருக்கள் ஒரு வழிப்பாதையாகவும் இருக்கும். மாலைவேளைகளில் நடந்து செல்லவே மிக நெருக்கடியாக இருக்கும். பெரும்பாலும் மார்வாடி (ராஜஸ்தான், குஜராத்திகள்)கடைகள்தான்.- சென்னையின் இன்னொரு முகம்..
சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது. கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும் இன்றும் உள்ளது. மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கறையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள். ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை முகச் சாயல்கள்.. யார், எப்படி, எந்த மொழி என தெரியாத தடுமாற்றம். சாலையில் செல்வோரிடம் ஏதாவது கேட்டால், உடனே பதில் வராது. ஏற இறங்க பார்த்துவிட்டு, விட்டேத்தியாக பதில் வரும்.. அல்லது "தெரியாது சார்.." என முடித்துவிடுவார்கள். முதலில் இவர்களின் பேசுமுறை, தெரியாதவர்களிடம் சாக்கிரதையாக பேசும்/பழகும் விதம் அந்நியமாக தெரிந்தாலும், பரபரப்பான எந்திர வாழ்க்கை, ஏமாற்றுதல், திருட்டு பயம் போன்றவற்றால் அனைவரும் எச்சரிக்கையுடன் பழகுவது பாதுகாப்பானது என்ற அவர்களின் அணுகுமுறையை நாளடைவில் அனுபவத்தில் யாரும் உணர்வர். நிற்க. இலங்கையிலிருந்து வந்துள்ள இந்த தம்பி, வெள்ளேந்தியாக சென்னை மக்களிடம், அதுவும் செளகார் பேட்டையில்(இது பெரும்பாலும் வட இந்தியர்களின் வியாபார பகுதி, இந்திதான் இங்கே கோலோச்சும், தமிழிலில் அரைகுறையாக பேசுவார்கள்) பேச எத்தனித்தால், எப்படி சிநேகமான முறையில் பதில் வரும்..? (தெருவோர கடை வைத்திருக்கும் சில கடைநிலை தமிழ் தொழிலாளிகளை தவிர.) வேடிக்கை..! இப்பகுதிக்கு பல வருடங்களாக சென்று வந்துள்ள அனுபவத்தில் எழுதுகிறேன். (மின்ட் தெரு, கோவிந்தப்பன் தெரு, பிராட்வே, ஏழு கிணறு, தம்பு தெரு இன்ன பிற..)- கொஞ்சம் ரசிக்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கு.சா மற்றும் புத்தன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நாலு செகன்டுல தற்செயலாக கீழிருந்து பார்த்துக்கொண்டே வரும்போது கண்டுபிடிச்சேன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
'தம்'மடி தம்..! 😉- யார் தமிழன்..?
என்ன இது? அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்தால் ஏகப்பட்ட காணொளிகள் இருக்கே? எல்லாம் தி.மு.க வை முன்னிறுத்துபவையாக இருக்குமா? இல்லை, நடுநிலையான பேட்டிகளாக இருக்குமா? நேரம் கிட்டும்போது பொறுமையாக பார்க்கவேணும். 😌 இணைப்புக்கு நன்றி, கு.சா. 🤝- யார் தமிழன்..?
அவர் பேரு முக்தாரா? இவரின் பேட்டிகளை பார்த்தது இல்லை. இன்றுதான் பார்த்தேன். ஆனால் அன்பர், அப்பட்டமான திமு.க அபிமானி என தெரிகிறது. - PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.