Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. என் ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..
  2. இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..
  3. இப்படத்தை திரையரங்கில் இன்று பார்க்க நேரிட்டது. முதல் காட்சியான ரயில் குண்டு வெடிப்பும், அதில் பாதிக்கப்பட்டவர்களாக காண்பித்ததில் , இயற்கையாக இல்லாமல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பது அப்பட்டமான பல இடங்களில் தெரிகிறது. தண்டவாளத்தின் தொடர்ச்சியே இல்லாமல் தனியாக நதியில் தெரிவதால் போடபட்ட செட் பல்லிளிக்கிறது. மற்றபடி அடர்ந்த வனத்தில் இயற்கையாக படமாக்கி தொய்வில்லாமல் படத்தை கொண்டு சென்றிருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. க்ளைமாக்ஸில் உக்கிர துப்பாக்கி சண்டைக் காட்சிகளில் தெருவில் நிற்கும் பொது மக்கள், சர்வ சாதாரணமாக சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போல நிற்பது சிரிப்பை வரவழைக்கிறது. சிறுசிறு குறைக்களை கவனத்தில் கொள்ளாமல் பார்த்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.
  4. தமிழ் நாட்டிலிருந்து பலரும் உறுப்பினராகி கலந்துரையாடிவர்கள், இப்பொழுது யாரும் கருத்துக்களை பதிவதில்லை அல்லது ‘ஆண்டு 2009தோடு எல்லாம் முடிந்துவிட்டது, இங்கே வருவதற்கு இனியென்ன தேவை?’ என அசிரத்தையாக இருக்கலாம். ஈழ உறவுகளும் அப்படியே ஒதுங்கிவிட்டார்கள் போலும். கிட்டதட்ட 2005லிருந்து ஒரே முனைப்புடன் வாசித்து வருகிறேன். நான் இங்கே உறுப்பினராகி 14 வருடமாகிவிட்டது. களத்தில் இணைந்த புதிதில் ஒரு யாழ் கள பெரியவர் ‘இன்னாப்பா நீ.. அப்பா டக்கரா?’ என்ற மாதிரி கேட்டுவிட்டார். ‘அப்படியெல்லாம் விடலாமா?’ என இங்கே தொடர்ந்தேன். அப்பெரியவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க! ஈழம் பற்றிய நுணுக்கங்களை யாழ் களமே எனக்கு கற்றுவித்தது. அவ்வகையில் யாழ் களத்திற்கு மனமார்ந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்!
  5. இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..
  6. சில கொடூரங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் பார்க்கும்போதும் (முக்கியமாக ஈழத்தில் நடந்தவை) கடவுள் இல்லையென்றே தோன்றும். அதே சமயம் சில அதிசயங்களையும், மனிதனின் சக்திக்கு அப்பால் நடக்கும் இயற்கையின் செயல்களை பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி இருக்கிறதென சடுதியில் உறைக்கும். வாழ்க்கை முழுவதும் இந்த தளும்பு நிலை இருந்துகொண்டே இருக்கிறது. எனது வீட்டிலும் பூசை அறை இருக்கிறது, அது இல்லாளின் கட்டுப்பாட்டில். நான் அதிகம் செல்வதில்லை. பெரியாரின் கொள்கைகள் பல பிடிக்கும், ஆனால் கடவுள் மறுப்பில், மேலே சொன்னபடி மனம் இன்னும் தளும்பு நிலைதான்.
  7. நீங்கள் இருவரும் சொல்வது உண்மைதான். இங்கு மத்திய கிழக்கு நாடு வந்தவுடன் எந்த மல்லு கடைக்கு போனாலும் இந்த பிட்டு தான். அதுவும் வாழைப்பழம், அப்பளம் போன்றவற்றை பிட்டுவோடு பிசைந்து அடிப்பார்கள்.. ‘வ்வ்வேவே’ என வாந்திதான் வரும். ஆனால் ஊரில் கிராமத்தில் எப்பொழுதாவது அம்மா பச்சரிசி மாவை இடித்து குழைத்து அவித்து அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் சீனியை கலந்து அம்மா செய்து கொடுப்பார்கள். அம்மா செய்த அவ்வகை புட்டு பிடிக்கும்.
  8. இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இணையவன்..💐
  10. 'கிராஃபிக்ஸ் வடிவமைப்பு' யாழுக்கு மெருகூட்டி கண்களை கவர்ந்திழுக்கிறது. வடிவமைத்த கரங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை.
  11. சிறந்த தேர்வு. விரைவான உள்ளக சேவைகள், வசதிகள், கட்டுப்பாடுகள் போன்றவை சிறப்பாக உள்ளன. வெளியே ஜ்வல்(Jewell) கூண்டும், அதனுள்ளே அம்சங்களும் மிக அருமையான திட்டமிடலும், வடிவமைப்பும், நீர் வீழ்ச்சியும் பிரமிக்க வைக்கின்றன.
  12. பேசி சட்டு புட்டுன்னு முடிவுக்கு வாருங்கள். ஈழத்தமிழர் ‘வேறு இனம்’ என்றால் எங்களுக்கு இங்கே வேலையில்லைதானே? கொல்லன் பட்டறையில் ஈ க்கு என்ன வேலை? 😜
  13. வடகிழக்கு தமிழர்கள் முதலில் இலங்கையர்கள், பிறகுதான் தமிழர்கள். இந்த உலக நியதியையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 😉 'ஈழத் தமிழர்கள்' என தங்களை அழைத்துக்கொள்ளக் கூடாது. 😍
  14. நன்றி சுவி, துடுப்பாட்டத்தில் ஈடுபாடு இல்லையாதலால், உறவுகள் கும்மியடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலைமை. இந்தியனா..? புரியலையே.. உண்மைதான், நன்றி.. 🙏
  15. குறுகிய விடுமுறையில் தமிழ்நாடு சென்றுவிட்டதால், களத்திற்கு வர இயலவில்லை. அழைப்பிற்கு மிக்க நன்றி, கு.சா. 🙏 ஆனால் துடுப்பாட்டம் பற்றி எந்த அடிப்படை ஞானமும் எனக்கில்லையே!😞
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ் சிறி! வாழிய பல்லாண்டு..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.