Everything posted by ராசவன்னியன்
-
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 நிறைவு விழா காணொளி..நல்ல முறையில் நிறைவுற்றது. ஈ.பி.எஸ் முதல்வராக இருந்திருந்தால், நிச்சயம் இவ்விழா சென்னையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்..! 💐
-
அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
- ஏம்பா, இப்படியுமா..?
அதிலும் பறந்து செல்லும்போது (0:52 வது நொடியில்) குறிப்பாக செங்குத்தாக நிற்கும் உயர்ந்த பாறைக்கு நடுவே நுழைந்து வெளியே செல்வது அற்புதம்.. ரொம்ப மனோதிடம் வேண்டும்..- ஏம்பா, இப்படியுமா..?
இவ்வளவு உயர மலையிலிருந்து குதிச்சி, குறிப்பிட்ட இடத்துக்கு காற்றில் நீந்தி இறங்கும் துல்லியம் அபாரமான திறமை..! சென்ற ஆண்டு இன்டர்லாகன், லாட்டர்புரூனன் சென்றுவிட்டு 'டாப் ஆஃப் ஈரோப்'(Jungfraujoch) சென்றபோது இம்மாதிரி சிலர் பறப்பதை பார்த்து வியந்தேன்.. நிச்சயம் துணிவு வேண்டும்..!- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
முடிந்தளவு உயிரபாயத்தை குறைத்து/தவிர்த்து வாழத்தான் சிந்திக்கும் திறனை இறைவன் கொடுத்துள்ளான். அதை பயன்படுத்தி வாழத்தெரியாமல், வேண்டுமென்றே அதை நெருங்கினால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான், சாமி. 😉- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
அட போங்க சார்..! 🤗 எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡 மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும். இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..! சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
அருவியின் சில படங்கள்- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
விபத்து நடந்த புல்லாவெளி அருவியின் இடத்தை குறிக்கும் படம்.- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
அது ஒன்னுமில்லைங்க, திமிர்.- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
அருவியை பார்க்கப்போன அர்னால்டு..😪 இது தேவையா..? 😱- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
ரெண்டு அரசுகளும் சேர்ந்துதான் இச்செயலை செய்கின்றன..! சில ஆண்டுகளுக்கு முன்பே இப்போதிருக்கும் விமான நிலையத்தை 'விரிவாக்கம் செய்ய, இரண்டாவது ஓடுதளத்தை நீட்டிக்க..' என்ற முனைப்போடு மீனம்பாக்கம் அண்மித்த நிலங்களை அரசுக்கு கொடுக்க சொல்லி அப்பகுதி மக்களுக்கு நில ஆர்ஜித ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது அங்கே அதிக வீடுகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நீதி மன்றத்தில் வழக்குகளும், எதிர்ப்புகளும் வலுக்கவே மீனம்பாக்க விமான நிலைய விரிவாக்கம் கைவிடப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே காலியாக கிடக்கும் ராணுவ இடத்தையும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். விளைவு..? ஏறக்குறைய 70 கி.மீ தூரத்திற்கும் மேலே தாண்டி, அத்துவான காட்டில் விவசாய நிலங்கள், நீர் நிலைகளை அழித்து இப்பொழுது இத்திட்டம் வரப்போகிறது..! 😪 சில நல்ல திட்டங்களை சிறு குழு மக்களின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றத்தான் வேண்டும், பதவியிலிருக்கும் அரசுக்கு அந்த துணிவு இருக்கவேண்டும். முடிவில் பின்வாங்கக்கூடாது. உதாரணத்திற்கு, சென்னை கடற்கரை-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) இறுதி இணைப்பாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை 500 மீ தூர நிலப்பகுதிக்கு நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்காக 15 வருடங்கள் நடைபெற்றது. இப்பொழுதான் அத்திட்டதின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு பணிகள் மேற்கோள்ளப்படுகின்றன. ஆனால் திட்டச் செலவு 5 மடங்காகிவிட்டது. யாருக்கு நட்டம்..? சிரமங்கள்..? மற்ற மக்களுக்குத்தானே..? சென்னை துறைமுகம்-மதுரவாயல் 18 கிமீ.மேம்பால திட்டம் செயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியால், 'ஈகோ'வால் திட்டம் கைவிடப்பட்டு இன்னமும் திக்கி திணறுகிறது..இப்போதிருக்கும் அரசு திடம்கொண்டு மறுபடியும் கொண்டுவந்தால் தான் உண்டு. அரசுக்கு வரும் தலைவர்களுக்கு சீரிய எதிர்கால திட்டங்களும், அதை நிறைவேற்ற துணிவும் இருக்க வேண்டும். சுயநலம் கூடாது..!- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
Source: Times of India.- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
Proposals & Facts: DT-NEXT- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
பரிசுப்பொதியினுள் என்னென்ன வழங்கப்பட்டன? "தமிழ் நாட்டின் செல்வங்கள்" புத்தகமும் காண்பிக்கப்பட்டுள்ளது.- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
தமிழ்நாடு சுற்றுலா துறை இணைய முகவரி கீழே..! அருமையான படங்கள், விவரங்கள் இருக்கின்றன. https://www.tamilnadutourism.tn.gov.in/ https://www.tamilnadutourism.tn.gov.in/img/ebrochure/Chennai-Ebrochure.pdf- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை. சென்னையில் தமிழ் நாடு சுற்றுலா துறை அலுவலகத்தில் கிடைக்கலாம். முன்பு எத்திராஜ் கல்லூரி(ஸ்பென்சர்ஸ் பின்புறம்) அருகே இதன் அலுவலகத்தை பார்த்துள்ளேன். புத்தகத்தின் முகப்பு அட்டைப்படம் இப்படித்தான் இருக்கும். "சென்னை ஒலிம்பியாட் 2022" துவக்க விழாவில், இரு தேசிய கீதங்கள் பாடப்பட்டன.💐 பாடியதில், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும், தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை மெல்லிதாக பாடுவதை ரசிக்கலாம். 🤗👌- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
இந்த "சென்னை ஒலிம்பியாட் 2022" நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து வீரர்கள், விருந்தினர்களுக்கு வரவேற்பு பொதி ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது. அதில் தமிழ் நாட்டின் சிறப்பு பற்றிய வண்ணப் படங்களுடனான புத்தகம் மிக அருமை. காணொளியில் 03:26 வினாடியிலிருந்து பாருங்கள் புரியும். 👌- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
தற்பொழுது கட்டிமுடிவுறும் நிலையிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் தலைமை அலுவலகம்,(Head Quarters) சென்னை அண்ணா சாலையில் நந்தனம் பகுதியில் உள்ளது. கட்டிட வேலைகள் முடிந்தவுடன், சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் இத்தலைமை அலுவலகம் இங்கே மாற்றப்படும். 😌 கோயம்பேட்டில் இயங்கும் தற்காலிக சென்னை மெட்ரோ தலைமை அலுவலகம்.- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
இது இணையத்தில் வெளிவந்த மாதிரி வரைவு படம். ஏறக்குறைய பத்து ஏரி குளங்களை நிரப்பி அமையப்போகிறது போலும். இது ஆக்கிரமிப்பு இல்லையா? எவ்வளவு விவசாய நிலங்கள், சுற்றுப்புற சூழல்கள் பாதிக்கப்பட போகிறதோ? 🤔- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
நிச்சயம் வரும். நானும் பங்களூர் செல்லும் வழியில் சென்னைக்கு அண்மித்த பகுதியில் சிறிய காலி மனை ஒன்றை வாங்கிப் போட்டுள்ளேன். கோயம்பேட்டிலிருந்து கூவம் நதி ஓரமாக இன்னொரு மெட்ரோ வழித் தடம் திட்ட வடிவில் உள்ளது, அது இந்த விமான நிலையம் வரை நீட்டிக்கப்படலாம். பார்க்கலாம். 😌- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
இந்த மண் சாலைக்கு இடதுபுறம் தான் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளதாம். கள்ள வேலையா? அது "Indirect Jobs" என நினைக்கிறேன்.- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
'கோபுரங்கள் சாய்வதில்லை' மாதிரி இப்பொழுது 'கூரைகள் விழுவதில்லை'யாம். உதாரணத்திற்கு இப்பொழுது பன்னாட்டு முனைய விரிவாக்க பணிகளில் புதுவித தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகிறார்களாம். இந்த மாதிரி, "சென்னை பசுமை விமான நிலையம்"(Chennai Greenfield Airport) அமைந்தால் எப்படி இருக்கும்? 🤔- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்நிலவன் (76 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பெரியவரே! 💐 கடல் கடந்து வாழ்ந்தாலும், இப்பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்..😛- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
கணபதி ஐயர்வாள், உங்கள் பேக்கரியிலிருக்கும் பலாலி விமான நிலையத்தையும் சூட்டோடு சூடா இயக்கப் பாருங்கள்..!🤗 - ஏம்பா, இப்படியுமா..?
Important Information
By using this site, you agree to our Terms of Use.