Everything posted by ராசவன்னியன்
-
கொடுமை.. அட்ராசிடீஸ்..!
நல்ல பாடல்..! மேடையில் பாடிய பாடகரும் (சந்திரசேகர்) நன்றாகவே பாடுகிறார்..!! ஆனால் கீழே ஆடியவர்கள் நடனம்(????) என்ற பெயரில் அவர்களின் கொடுமையை (அட்ராசிடீஸை) சகிக்க முடியவில்லை.😡 'தண்ணி கேஸ்' போலிருக்கு..! 🤔
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
சரி, சென்னை செல்ல விருப்பமா..? 🤗
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
ஒங்க ஊர்க்காரர் சொல்லியிருப்பார் போலுள்ளதே..? 😉
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
ஏன் சார் அவ்வளவு நாள் காத்திருக்கோணும்..? வரும் மார்ச் 18ன் திகதி (18-03-2022), சென்னை தீவுத்திடலில் "ராக் வித் ராஜா" என்ற தலைப்பில் இளையராஜா எல்லோரையும் "ஆடுவோம்.. பாடுவோம்" என அழைக்கிறாரே..? நுழைவு சீட்டு, ரூ. 1000 முதல்..! இதன் முக்கிய அனுசரணையாளர்கள், Noice & Grains (சிங்கப்பூர் கச்சேரியை கொடுத்தவர்கள் என நினைக்கிறேன்..) போகலாமா? 😎
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
நேற்று மேடையில் கச்சேரி நிறைவில், இளையராஜா மறுபடியும் துபைக்கு இசை நிகழ்ச்சி நடத்த வரும் அக்டோபரில் வருவதாகவும், அப்பொழுது அதிக நேரம் ரசிகர்களை மகிழ்விக்க முடியுமென தெரிவித்தார். பார்க்கலாமே..!
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
மேலேயுள்ள பாடல்கள் சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் பாடியது.. எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என ஒவ்வொன்றையும் கேட்டால் புரியும்..! அதிகமான இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் போன்றவையுடன் சிறப்பான பாடல்கள் தெரிவும், ரசிகர்களை இருக்கையின் நுனியில் துடிப்புடன் இருக்க வைத்து, மிக சிறப்பாக மகிழ்வித்ததையும் பார்க்கலாம். 😍
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
இசைக் கச்சேரி எடுத்தவுடனேயே சூடு பிடித்து ஆட்டம், கரகோசத்துடன் செல்லும்போது திருஷ்டியாக சில இந்தி, தெலுங்கு, மல்லு பாடல்களை பாடி தொய்வை ஏற்படுத்தி கடுப்பேத்திவிட்டார். என்ன செய்வது..?விதியே என கேட்க வேண்டியதாயிற்று. இம்முறை, துபை கச்சேரியில் பாடல்களின் தெரிவில் அவ்வளவு நேர்த்தியில்லை. 75 வருட சிங்கப்பூர் கொண்டாட்டத்தில் இளையராஜாவின் பாடல்களின் தெரிவு மிக நன்றாக, அற்புதமாக இருந்தது. இந்நிகழச்சி துபையிலுள்ள பிரபல தமிழ் நிறுவனத்தின் சிபாரிசுடன் எக்ஸ்போ2020 நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு நடைபெற்றது.
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
நேற்றிரவு துபை எக்ஸ்போ 2020யில் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரியை கீழேயுள்ள இணைப்பில் HD தரத்தில் பார்த்து ரசிக்கலாம். 👌 https://virtualexpodubai.com/listen-watch/events/raaja#video
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
நிச்சயம் 5000க்கு மேலேயே மிக அதிகமாக இருக்கும்..! ஜூப்ளி பார்கை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ரசிக மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. இதில் சிறந்த விசயம் என்னவென்றால், குறிப்பிட்ட கொள்ளளவு மக்களால் பூங்கா நிரம்பியவுடன், அரங்க பாதுகாவலர்கள் எல்லா 'கேட்'களையும் மூடிவிட்டனர். அதனால் உள்ளே ரசிர்கர்களின் நெரிசல் அதிகம் இல்லை. கச்சேரியை ஆரம்பிக்கும் முன், மேடையில் அரபிய பெண் தொடக்கத்தில், "இவ்வளவு ரசிகர் கூட்டத்தை இந்த அரங்கம் இதுவரை சந்திக்கவே இல்லை..!" என பாராட்டினார். "ஜூப்ளி பார்க்" எக்ஸ்போ திருவிழா ஆரம்பிக்கும் முன்..
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஊசி ஏத்தியும், வயசுக்கொடுமை தாங்க முடியலை.. சாமியோவ்! 🤗
-
நம்ப முடியவில்லை..!
நேரமிருந்தால், அடுத்த வாரம் இந்த மியூசியத்திற்கு சென்று வரலாமென உள்ளேன். அதற்கு முன், இந்த கட்டிடக் கலை பற்றிய விவரங்கள் கீழேயுள்ள காணொளியில்.. புதுவிதமான ஹெலிகாப்டர் இதற்கென வடிவமைத்தது என எண்ணுகிறேன்.
-
யாழ் எனும் திமிர்.
'விதி' மேல் நம்பிக்கை என்றும் இருந்ததில்லை, ஆனால் மேலேயுள்ளவற்றை படிக்கும்போது 'அதுவும் இருக்கலாமோ?' என மனதில் நெருடலை ஏற்படுத்திய தருணம்.😔 என்னத்தை சொல்ல..! 😕
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், குழந்தாய்.
-
நம்ப முடியவில்லை..!
145/3.67 = $ 39.50
-
நம்ப முடியவில்லை..!
துபையின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட சாலையான ஷேக் சையத் சாலையில் ரொம்ப காலமாக கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதான் முடிவிற்கு வந்துள்ளது போல. நான் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள, இக்கட்டிடத்தின் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்குதான் சென்று வந்தேன். தமிழில்..
-
நம்ப முடியவில்லை..!
துபையின் புது வரவு "மியூசியம் ஆஃப் தி ஃபுயூச்சர் (Museum of the Future)" வரும் 22ம் திகதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. நுழைவுக் கட்டணம்: 145 திர்ஹாம்கள். இணையதளம்: https://museumofthefuture.ae/en
-
நம்ப முடியவில்லை..!
நம்ப முடியவில்லை..!
-
8K தொலைக்காட்சி திரைகள்..2022
முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்குவது கொஞ்சம் எளிதான காரியமாக இருக்கும். தொழிற்நுட்ப அம்சங்கள், அதனால் கிட்டும் வசதிகள் என பட்டியலிட சிறப்பம்சங்கள் அவ்வளவாக இருக்காது. நுகர்வோரை எளிதில் குழப்பாமல் திரையில் தோன்றும் படத்தின் துல்லியத்தை மட்டும் கருத்தில்கொண்டு தீர்மானித்து வாங்குவோம். ஆனால் தற்கால தொலைக்காட்சி திரைகளை (பெட்டி அல்ல 😋) தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒப்பீடு செய்து செலவழிக்கும் பணத்திற்கு மதிப்பாக நெடுநாள் உழைக்கும் தொலைக்காட்சி திரைகளை தெரிவு செய்து வாங்குவது இமாலய சோதனை. கண்ணையும் கருத்தையும் கவரும் விளம்பரங்கள், நம்மை எளிதாக குழப்பிவிடுகின்றன. அதுவும் மிக வேகமாக முன்னேறிவரும் தொழிற்நுணுக்கங்கள், வியாபார போட்டிகள்.. அப்பப்பா..! இந்த காணொளியில் வரும் தொறிநுட்ப அம்சங்களை காட்சிபடுத்தியிருக்கும் விதம் அற்புதம்..! (ஆனால், நான் தொலைக்காட்சி திரையை வாங்கினால், நிச்சயம் எனது தெரிவு சோனி (Sony) தான்..!)
- ஆஹா.. ஆஹா..
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
நன்றி திரு.கிருபன். 80 களின் மத்திய பகுதியில் நான் யுனிக்ஸ்(UNIX) இயங்கு தளம் மற்று நாவல் நெட்வேர்(Novell NetWare) போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது விண்டோஸ்(Windows) தனி இயங்குதளமாக இல்லை. இது எம்.எஸ்-தாஸ்(MS-DOS) இயங்குதளத்தின் மேல் இயங்கும் ஒரு ஊடுதள பாவனை மென்பொருளாகவே(GUI) இருந்தது. கணிபொறி வன்பொருளின்(Hardware) உள்ளே இருக்கும் சில பாகங்களை சரியாக நிறுவ, இந்த அய்யார் க்யூ(IRQ)விற்காக ஜம்ப்பர்(Jumper)களை மாற்றி மாற்றி, இயங்குதளத்தை கணிப்பொறியில் வெற்றிகரமாக இயக்க அப்பொழுது நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. 🤔
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹