-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டியை திறம்பட நடத்தியமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் கந்தப்பு அண்ணா. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக ஈழப்பிரியன் அண்ணா, வீரப்பையன்.
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி, இது நிரந்தரமில்லை, பிரான்ஸ் பிரதமர் மாதிரி, எந்நேரமும் கதிரை காலியாகலாம். நன்றி, எத்தனை முறை விழுந்தாலும், எழும்பி தூசை தட்டி விட்டு ஓட வேண்டியதுதான்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இங்கிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? - பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா தென்னாபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? கொழும்பு 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன், நானும் இம்முறை கலந்து கொள்கின்றேன்.- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
இவரின் தனித்துமான குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.- வாடியிட்டபுலம்
- வாடியிட்டபுலம்
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1.பிள்ளை பிடிகாரன் வாரான் என்று பள்ளிக்கூட பின் வேலியை கடந்து போகையில் முட் கம்பி வேலி கீறினது. (வந்தது ஊசி போடுறவங்கள் ) 2. சுகாதார படம் காட்ட வருவாங்கள் என்று காத்திருந்து ஏமாந்தது 3. சிவாஜி மற்றும் பிரபு நடித்த முதல் படம் "சங்கிலி" வீடியோ செட் கொண்டு வந்தவன் கார் பிழைபட்டு வராமல் நின்றது இவற்றில் ஏமாந்ததில் ஒரு ஆனந்தமும் இருந்தது. (நீங்களே யோசியுங்கள் )Ahasthiyan changed their profile photo- வாடியிட்டபுலம்
- வாடியிட்டபுலம்
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் குரலோசை கிராமத்தின் அமைதியை உடைத்து மகிழ்ச்சியை பரப்புகிறது. சேந்தன் தலை நகரத்தில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் கணனி துறையில் வேலை செய்கிறான். இக்கரைக்கு அக்கரை பச்சை போல் பலரும் வரத் துடிக்கும் அதிக வருமானம் கொண்ட தொழில். கார் வீடு என பல வசதிகள் இருந்தாலும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் சேந்தன். 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இளமையை தொலைத்து இரவு பகல் வேலை செய்தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நகரத்தின் கொந்தளிப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு அமைதி தரும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சேந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது. ஒரு நாள் தனது பள்ளி நண்பன் மலரவனை பார்க்க அந்த அழகான கிராமம் வாடியிட்டபுலத்திற்கு புறப்பட்டான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே காதுக்கு இனிமை தரும் பறவைகளின் ரீங்காரம் சேந்தனை வரவேற்றது. கிராமம் என்றாலே இளையராஜாவின் பாடல் இல்லாமலா போகும், எங்களை போன்ற நகரத்து வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அவரின் பாடல்களே. "வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே" . . பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு பச்ச மனசு பத்திக்கிருச்சு கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு” எங்கிருந்தோ வந்த பாடல் வரிகள் செவிக்கு விருந்தளித்தது. மலரவனை அவன் வீட்டில் சந்தித்தான். மலரவனும் உரிய முறையில் உபசரித்தான். மதிய உணவின் பின்பு மாமர நிழலில் சாக்கு கட்டிலில் சரிந்தவாறு தங்கள் பாடசாலை கதைகளை அசை போட்டார்கள். பாடசாலையில் தங்களுடன் படித்த செங்கமலம் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தில் படித்ததாகவும், அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் சேந்தன் சொன்னான். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு "விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது" என்றான். அவள் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டாள், காரணம் தெரியவில்லை. அவளின் சிநேகிதி மூலமாக பல கடிதங்கள் அனுப்பினேன், பதிலில்லை என்றான். சேந்தன் பல்கலைக்கழக படிப்பை முடித்து கணனி துறையில் வேலை செய்ய தொடங்கினான். ஒரு நாள் செங்கமலத்தின் சிநேகிதி ஊடாக ஒரு கடிதம் சேந்தனுக்கு வந்தது. ஆம் அது செங்கமலத்திடம் இருந்து தான் வந்தது. படபடப்புடன் கடிதத்தை திறந்து படித்தான். அன்பின் சேந்தன், நான் நலம், நீங்களும் அது போலவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தன, நான் பதில் போட முடியாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும். உங்கள் உள்ள கிடைக்கைகளை தெளிவாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர், அன்பானவர். நான்தான் உங்களை அடைய கொடுத்து வைக்கவில்லை. கடமையா? காதலா? என்றால், என்னுள் கடமைதான் வென்றது. அன்று உங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் தேசம் காக்க புறப்பட்டுவிட்டேன். சிலவேளை இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இந்த உலகில் இருப்பனோ தெரியாது. என்னை மறந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்றும் அன்புடன் செங்கமலம் சேந்தனின் கதையை கேட்டு மலரவன் கண்களில் நீர் பனித்தது. அவனது வீட்டு வானொலியில் ஸ்ரீனிவாஸின் பாடல் ஒலித்தது. "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" மன்னிக்கவும் எனது சோகக் கதையை சொல்லி உன்னை அழ வைத்து விட்டேன், என்றான் சேந்தன். மூன்று நாட்கள் மலரவனுடன் தங்கி விட்டு, அவனது உந்துருளியில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையம் சென்றான். அவன் பேருந்து படிகளில் ஏறும் போது கால்கள் இயலாத பொண்ணு ஊன்று தடிகளுடன் இறங்க முற்பட்டாள். சேந்தன் அவளுக்கு உதவ போனான் "உங்களுக்கு சிரமம் தந்து விட்டேன் " என்றாள். எங்கேயோ கேட்ட பழகிய குரல், திரும்ப கண்களை பார்த்தான் " ஆமாம் நம்ம செங்கமலம்". தனது நண்பன் மலரவனை அழைத்தான், அவன் மனம் ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. பேச்சு வரவில்லை. மலரவன் அந்த பெண் செங்கமலம் தான் என்று உறுதி செய்தான். அவள் அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருப்பதாக சொன்னாள். தனது சக தோழியை காப்பாற்ற போய் கண்ணி வெடிக்கு கால்களை இழந்ததாக சுருக்கமாக கூறினாள். சேந்தன் கண்களில் நீர் வழிந்தது. என்னவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசமா? இல்லை இந்த நிலையில் அவளை பார்க்கிறேன் என்ற சோகமா? நிச்சயமாக முதலாவதுதான். நகரத்தில் தனது சொத்துக்களை விற்று, தனது வேலையும் ராஜினாமா செய்தான் சேந்தன். அவளையும் அவளைப்போன்று இருக்கும் பலருக்கு தான் உதவி செய்ய போவதாக முடிவெடுத்தான். மலரவனின் உதவியுடன் வாடியிட்டபுலத்தில் 6 ஏக்கர் நிலம் வேண்டி கூட்டு பண்ணை விவசாயம் தொடங்கினான். செங்கமலத்தை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்தான். இன்று இவர்களின் நிழலில் பலர் வாழ்கிறார்கள். ரெண்டு மரங்கள் வைத்தவன் இன்று ஒரு தோப்பையே உருவாக்கினான். நகரத்தில் ஒரு நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த சேந்தன் இப்போ மிகவும் சந்தோசமாக வாழ்கிறான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், மரங்களுக்கு இடையே வரும் குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே தனக்கு பிடித்தவளுடன் வாழ்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவனது இதயத்தை நிரப்புகிறது. முற்றும் அகஸ்தியன் - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.