Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 55 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தரின் வலது காறை எலும்பு எப்படி சொர்க்கத்திற்குச் சென்றது?' தேவநம்பியதிஸ்ஸ தூபாவைக் [Thupa / ஒரு புனித நபரின் சாம்பலின் மேல் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்.] கட்டுவதாக உறுதியளித்தார். மேலும் மகிந்த தேரரை வணங்குவதற்கு ஒரு நினைவுச்சின்னத்தைக் [புத்தரின் தாதுவைக்] கண்டுபிடிக்குமாறு கோரினார். மகிந்த, சுமணாவை [Sumana] பாடலிபுத்திரத்திற்குச் [Pataliputta] சென்று அசோகனிடம் புத்தரின் தாது [relic] ஒன்றைக் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அசோகன் மகிழ்ச்சியுடன் அன்னதானக் கிண்ணத்தை நினைவுப் பொருட்களால் [தாதுவால்] நிரப்பினான். அதன் பிறகு சுமணா தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று வலது காறை எலும்பைப் பெற்றான். பின் அவன் பாடலிபுத்திரத்திற்கு எப்படி பறந்து சென்றார் என்பதும் அவர் எப்படி தேவ உலகத்திற்குச் சென்றார் என்பதும் மற்றொரு அதிசயம். அதை விட அதிசயம், புத்தரின் தாதுவை எட்டுப் பகுதிகளாக பிரித்து, தூபாக்கள் [Thupas] அதன் மேல் எழுப்பிய பின், எப்படி இந்திரன் புத்தரின் வலது காறை எலும்பை முழுதாகக் எடுத்துக்கொண்டு தேவலோகம் போனார் என்பது? என்றாலும் இந்த கேள்விகளை தற்காலிகமாக ஒருபுறம் தள்ளி வைப்போம். தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த நினைவுச்சின்னம் [தாது] இலங்கைக்கு பறந்து எடுத்துச் செல்லப்பட்டது ? மேலும் முந்தைய புத்தர்களின் [previous Buddhas] கதைகளும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த கௌதம புத்தருக்குப் பிறகு தான் புத்த சமயமே, அப்படி என்றால், முன்னையவர்களை எப்படி முந்தைய புத்தர்கள் என்று கூறலாம்? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புத்தரே பிராமண சமயத்தில் தான் பிறந்தார், இருந்தார். அவர் அங்கு புரட்சி ஒன்றையே செய்தார் என்பதே உண்மை. மற்றும்படி மாற்றுச் சமயம் அவர் அமைக்கவில்லை! ராணி அனுலா [Queen Anula] தானும் மத சபையில் சேர விரும்பினார். அதனால், பின்னர் மகிந்த தேரர் தனது சகோதரி சங்கமித்தாவை இலங்கைக்கு அழைத்து வந்து பெண்களுக்கு, அவர்களை பெண் துறவியாக்கும் சடங்கு செய்ய முடிவு செய்தார். தீபவம்சத்தின்படி சங்கமித்தாவின் சகோதரியின் மகன் தான் சுமணா. 15-93 ஐ பார்க்கவும் [(மகள் சங்கமித்தாவுக்கு அசோகன் பதிலளித்தார்:) "உங்கள் சகோதரியின் மகன் சுமணா மற்றும் என் மகன், உங்கள் மூத்த சகோதரர், / (93. the great Sage has communicated to me the message of my brother.” (Asoka replied:) “Your sister’s son Sumana and my son, your elder brother]. இருப்பினும், சுமணா மகாவம்சத்தின்படி சங்கமித்தாவின் மகன் ஆவார். 13-5 ஐ பார்க்கவும் [மற்றும் சங்கமித்தாவின் மகனும், அதிசயமான பரிசு பெற்ற புதிய ஆண் துறவி சுமணா, / and also Sanghamitta’s son, the miraculously gifted samanera Sumana]. இன்னும் ஒன்றையும் நான் இந்த இடத்தில் சொல்லவேண்டும். மகவசத்தின் படி, மேலும் அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது தாதுவா ? இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தை வசனம் 65 இல் இருந்து பார்க்கவும். [The naga said: If thou shalt see the relics, venerable sir, take them and go.’ Three times the thera made him repeat this (word), then did the thera standing on that very spot create a (long) slender arm, and stretching the hand straightway down the throat of the nephew he took the urn with the relics, and crying: Stay, naga !’ he plunged into the earth and rose up (out of it) in his cell. The naga-king thought: The bhikkhu is gone hence, deceived by us,’ and he sent to his nephew to bring the relics (again). But when the nephew could not find the urn in his belly he came lamenting and told his uncle. Then the naga king also lamented: We are betrayed,’ / வணக்கத்துக்கு உரியவரே, தாது உங்கள் கண்ணில் பட்டால், எடுத்து செல்லுங்கள் என்று நாகராஜன் கூறினான். தேரர் இவ்வார்த்தைகளை மூன்று முறை திருப்பச் சொல்லும் படி செய்தார். பிறகு, தேரர் அந்த இடத்தில் நின்றவாறே, தமது கையை நீளுமாறு செய்தார். நீண்ட அவரது கை [நாகராஜனின்] மருமகனுடைய தொண்டைக்குள் நுழைந்து சென்றது. [அங்கு, வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த] தாதுவுடன் இருந்த பேழையைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், ' நாகா நில்' என்று இரைந்து விட்டு, பூமிக்குள் புகுந்து மறைந்து, தமது இடத்தில் வந்து தோன்றினார். தம்மால் ஏமாற்றப்பட்டு பிக்கு இங்கிருந்து போய்விட்டார் என்று எண்ணிய நாகராஜன், தாதுவை இனி கொண்டுவா என்று மருமகனுக்கு சொல்லி அனுப்பினார். ஆனால், தன் வயிற்றுக்குள் பேழையைக் காணாத மருமகன் அழுது புலம்ம்பிக்கொண்டே அரசனிடம் வந்தான்] சங்கமித்தாவை போதிமரக் கிளையுடன் அனுப்ப அசோகன் மூன்று அரசுகளையும், விந்திய மலைத் தொடர்களையும் [Vindya mountain range], பெரும் காடுகளையும் கடந்து சமுத்திரத்தை அடைந்தான். இலங்கைக்கு போதிமரக் கிளை [அரசமரக் கிளை / Bo branch] செல்லும் வழியில் நாகர்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. தீபவம்சத்தில் அரசமரக் கிளையைக் கண்டு நாகர்கள் மகிழ்கிறார்கள். நாகர்கள் அரசமரக் கிளையைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடல் வழி முழுவதும் வழிபடுவதாகவும் காட்டப்படுகிறது. நாகர்களின் தாராள மனப்பான்மைக்கான தீபவம்சத்தை, 16 - 8 முதல் 29 வரை பார்க்கவும். என்றாலும், எப்பொழுதும் பகைமையையும் முரண்பாட்டையும் உருவாக்கும் பழக்கம் கொண்ட மகாநாம தேரர் [Mahanama], நாகர்கள் முதலில் அரசமரக் கிளையை எடுக்க முயன்றார்கள் என்றும், ஆனால் சங்கமித்தா ஒரு கிரிஃபின் [யாளி / griffin / a mythical animal typically having the head, forepart, and wings of an eagle and the body, hind legs, and tail of a lion / ஒரு புராண விலங்கு. கிறிப்பன் அல்லது கிரிஃபின் ஒரு சிங்கத்தின் உடல், வால் மற்றும் பின் கால்கள் மற்றும் கழுகின் தலை மற்றும் இறக்கைகள் கூடிய ஒரு பழம்பெரும் உயிரினமாகும்] வடிவத்தை எடுத்து நாகர்களை பயமுறுத்தினாள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்யும்படி கட்டாயப்படுத்தினாள் என்கிறது. அவநம்பிக்கை மற்றும் முரண்பாடுகளை விதைப்பதற்காக சமூகங்களுக்கு இடையில் நிலவும் நட்பு சூழ்நிலையை மகாநாம தேரர் சிதைத்தார். எனினும், அக்காலத்தில் இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் வாழ்ந்ததாக தீபவம்சத்தில் உள்ள தகவல்களில் இருந்து ஊகிக்க முடிகிறது. Part: 55 / Appendix – Dipavamsa / 'How did Buddha's right-collar bone go to heaven?' Devanampiyatissa promised to build a Thupa, and requested Mahinda Thera to find a relic so that he could worship. Mahinda asked Sumana to go to Pataliputta and obtain relic from Asoka. Asoka gladly filled alms-bowl with relics. Then Sumana went to Indra, the head of Devas, and obtained the right-collar bone. He flew to Pataliputta, but how he managed to go to Deva’s world is another miracle. Ignoring the details, the relic was brought to Lanka. Stories of previous Buddhas are also stated in this Chapter. The Buddha prophesied at his deathbed that ‘they will deposit a relic of my body in the most excellent island’, 15-73. The author of Dipavamsa never anticipated that they would bring another relic of the Buddha, the tooth relic. He would have, otherwise, stated two relics instead of one. Queen Anula wanted to be admitted to the Order. Mahinda Thera then decided to get his sister Samghamitta to Lanka to perform ordination of women. Sumana is the son of the sister of Samghamitta as per the Dipavamsa, 15-93. He is, however, the son of Samghamitta as per the Mahavamsa, 13-5. Asoka crossed three kingdoms, Vindya mountain range and great forest to reach the ocean to send off Sanghamitta with the Bo branch. Numerous mentions of Nagas on the way of the Bo tree branch to Lanka. Nagas are happy to see and go along with the Bo branch in the Dipavamsa. Nagas are shown to be very happy about the Bo branch and venerating all the way along sea passage. See the Dipavamsa, 16 – 8 to 29, for the liberal and generous way the Nagas accompanied the Bo branch along the sea passage. Mahanama, who is always in the habit of creating enmity and discord, says Nagas tried first to take the Bo branch, but Sanghamitta took the form of a griffin and terrified the Nagas and forced them to seek submission. Mahanama distorted the prevailing friendly atmosphere among communities to sow distrust and discord. It can be inferred from the information in the Dipavamsa that Nagas were living from Lanka to Gandhara at that time. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 56 தொடரும் / Will follow துளி/DROP: 1925 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55] https://www.facebook.com/groups/978753388866632/posts/32637271075921451/?
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 54 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'எதிர்காலத்தில் நடக்கும், தனிப்படட ஒருவரின் சம்பவங்களை முன்னறியும் திறன் உண்மையா?' இந்த நூல்களில், எதிர்காலத்தில் நடக்கும் ஒன்றை நேரத்துடன் முன்னமே பார்க்கும் திறன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை வாய்மொழியாகக் முன்னறிவிக்கும் திறன், மற்றும் அறிவு, பகுப்பாய்வு அல்லது அவதானிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வைப் பற்றி கணிக்கும் திறன் [Foreseeing, foretelling and predicting] ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக புத்தரின் வாயிலிருந்து, 12-30. இல், "மரியாதைக்குரிய ஐயா, புத்தர் உங்களைப் பற்றி முன்னறிவித்துள்ளார்: எதிர்காலத்தில், துறவி மகிந்த தீவுக்கு புத்த மதத்தைக் கொண்டு வருவார். புத்தரின் போதனைகளைப் பரப்புவார், சன்மார்க்கத்தை நிலைநாட்டுவார், துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். வலிமையான மற்றும் நிலையான பாதையில் அவர்களை வழிநடத்துவார். அவருடைய பணி பலருக்கும் நன்மை பயக்கும்." என்கிறது. பௌத்தர்கள் இவற்றை நம்பலாம், ஆனால் இவை நிதானமான, உண்மையான வரலாறு அல்ல. இராமாயணம், மகாபாரதம் போல ஒரு புராணக் கதையே! அது மட்டும் அல்ல அங்கிருந்தும் பல நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தர் இன்னும் ஒரு முன்னறிவித்தலில், 15-73, “அந்த நேரத்தில் தீவு, தம்பபாணி [Tambapaṇṇi] என்ற பெயரில் அறியப்படும்; அந்த மிகச்சிறந்த தீவில் அவர்கள் என் உடலின் ஒரு நினைவுச்சின்னத்தை [தாதுவை] அங்கு வைப்பார்கள்." இந்த குறிப்புகளில் உள்ள நினைவுச்சின்னம் புத்தரின் வலது காறை எலும்பு [right-collar bone] ஆகும், இது இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடமான, தூபாராமயவில் (Thuparamaya) கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நூல் எழுதிய பக்திமான்களுக்கு, சர்வ ஞானியான புத்தர் தனது உடலில் இரண்டு நினைவுச்சின்னங்களை இலங்கையில் வைத்திருப்பார் என்று அன்று அவர்கள் உணரவில்லை போலும்! தீபவம்சத்தில் உள்ளிணைக்கப்பட்ட வலது காறை எலும்பும் மற்றும் அசாதாரண அளவிலான பல்லும் இந்த இரண்டும் ஆகும்! தீபவம்சத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Cūḷavaṃsa) பல்லின் வருகை கண்டு பிடிக்கப்பட்டது; அது புத்தர் இறந்து சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகும். சூலவம்சத்தின் [Culavamsa] வருங்கால ஆசிரியர் ஒருவர், புத்தரின் பல் என்ற மற்றொரு நினைவுச்சின்னத்தின் வருகையை கண்டுபிடிப்பார் என்று தீபவம்சத்தின் ஆசிரியர் அன்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அல்லது முன்னறியவில்லை அல்லது அவரால், இதையும் புத்தரின் வாயிலிருந்து பெற முடியவில்லை? 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' என்ற புத்தகத்தின் பக்கம் 411 இல், பல்லின் அளவை 2 அங்குல நீளம் மற்றும் ஒரு அங்குல விட்டம் எனக் கூறுகிறது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' இல், பக்கம் 176 இல், சிவனொளிபாத மலையின் [ஆடம்ஸ் சிகரம் / Adam’s Peak] மீது ஐந்தடி ஏழு அங்குல நீளமும், இரண்டடி ஏழு அங்குல அகலமும் கொண்ட தடயத்தை கூறுகிறது. இரண்டும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. புத்த துறவிகள் தங்கள் கற்பனைகளில் இவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும், 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கங்கள் 31 மற்றும் 32 இல், பல் நினைவுச் சின்னம் போர்த்துக்கேயர்களால் [Portuguese] கைப்பற்றப்பட்டு, அதைத் தூளாக்கி, பொடியை எரித்து சாம்பலாக்கி, பின்னர் கடலில் கரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட அளவீடு, 1815 இல் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், அதாவது, போர்த்துக்கேயர்களால் அசல் அழிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அளவீடு செய்யப்பட்டது ஆகும். என்றாலும் பல்லை பாதுகாக்கும் துறவிகள், புத்திசாலித்தனமாக இரண்டு கதைகளை கண்டுபிடித்தனர். ஒரு கதையில், அழிக்கப்பட்ட பல் உண்மையில் அசல் மூலத்தின் நகல் என்கிறது. இரண்டாவது கதையில், தூளாக்கி, பொடியாகிய பல், தெய்வீக சக்தியால், ஒன்றிணைத்து அசல் பல்லாகி, முன்னைய வடிவத்திற்கு மீண்டும் வந்தது ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேடம் எலனா பெத்ரோவ்னா பிளவாத்ஸ்கி [Helena Petrovna Blavatsky, அல்லது பொதுவாக எலனா பிளவாத்ஸ்கி அல்லது பிளவாத்ஸ்கி அம்மையார் என்பவர் பிரம்மஞானத்தையும் பிரம்மஞான சபையையும் தோற்றுவித்தவர் ஆவார்.] இலங்கைக்கு விஜயம் செய்தார், மேலும் பல்லின் நினைவுச்சின்னம் அவருக்குக் காட்டப்பட்டது. அப்பொழுது, அது ஒரு முதலையின் பல்லின் அளவு பெரியது என்று உடனடியாக கூச்சலிட்டார். 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கம் 246 இன் கீழே பார்க்கவும். அத்தியாயம் 13 இல் நிறைய அற்புதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. எட்டு நிலநடுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. அத்தியாயம் 13 முக்கியமாக மத விடயங்களைப் பற்றியது, மேலும் மத விடயத்தின் உரிமைகள் மற்றும் தவறுகளை பகுப்பாய்வு செய்வது இங்கு எமது நோக்கம் இல்லை. அத்தியாயம் 14, மத விடயங்கள், பூகம்பங்கள், விகாரைகள் கட்டுதல் போன்றவற்றைப் பற்றியது, மேலும் இது பற்றி கருத்து தெரிவிப்பது எமக்கு அவசியம் இல்லை. தமிழர்களின் நேர்மையான நலனை நேரடியாக பாதிக்காத எந்த மத விடயத்திலும் கருத்து தெரிவிக்கப்படாது. அதில் எமக்கு அக்கறையில்லை. மகிந்த தேரர் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜம்புதீபாவிற்கு (இந்தியாவிற்கு) திரும்பிச் செல்ல விரும்பினார். காரணம், இலங்கையில் வழிபட புத்தரின் நினைவுச்சின்னம் இல்லை என்று சுட்டிக்காட்டினார், 15 - 1 முதல் 5 வரை பார்க்கவும். Part: 54 / Appendix – Dipavamsa / 'Is it true that an individual can predict future events?' Foreseeing, foretelling and predicting happen very often, and especially from the mouth of the Buddha, 12-30. The Buddhists may believe these, but these are not sober history. Buddha foretold, 15-73, “...they will deposit a relic of my body in the most excellent island”. The relic in reference is the right-collar bone of Buddha, which was allegedly interned in the Thuparama. Unfortunately for the pious, the omniscient Buddha didn’t realize that there would be two relics of his body, the right collar bone which was interned in the Dipavamsa and a tooth of abnormal size. The arrival of tooth relic was invented in the Culavamsa which was written about seven hundred years after the Dipavamsa; about one thousand two hundred years after the Buddha’s death. The author of the Dipavamsa never expected a future author of the Culavamsa would invent the arrival of another relic, the tooth of Buddha, and therefore could not get this also from the mouth of the omniscient Buddha. Page 411 of ref - 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' gives the size of the tooth relic as 2inches in length and one inch in diameter. Page 176 of ref - 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the footprint on the Adam’s Peak as five feet seven inches in length and two feet seven inches in breadth. Both could not belong to a human kind. Monks invented these in their flight of fancies. Furthermore, on the pages 31 and 32 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' , it is stated that the tooth relic was captured by the Portuguese and it was ground to powder, burnt the powder into ashes and then dissolved the ashes in the sea. The measurement quoted above was made just after the conquest of Kandy in 1815, more than two hundred years after the destruction of the original by the Portuguese. The custodian monks smartly invented two stories. One storey was that the obliterated tooth was in fact a copy of the original and the other storey was that the ground tooth reformed to its shape by the divine power. Madame Helena Petrovna Blavatsky visited Ceylon during the latter part of the nineteenth century and the tooth relic was shown to her, and she immediately exclaimed that it was as large as that of an alligator. See the bottom of the page 246 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' . Quite a lot of miracles are described in the chapter 13. Eight earthquakes occurred one after the other. Chapter 13 is mainly of religious matters, and it is not intended here to analyse the rights and wrongs of the religious matter. Chapter 14 is also about religious matters, earthquakes, construction of viharas etc., and it is not intended to comment on these. Any religious matter, which is not directly jeopardizing the bona fide interest of the Tamils, will not be commented upon. Mahinda Thera wanted to go back to Jambudipa (India) after about five months, indicating that there is no relic of Buddha in Lanka to worship, 15 – 1 to 5. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 55 தொடரும் / Will follow துளி/DROP: 1924 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54] https://www.facebook.com/groups/978753388866632/posts/32626689843646241/?
  3. கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி” என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் பாடுகிறார். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான். அப்படியான முருகனின் திருவிழாவில் கலந்துகொள்ள, ஆரன் வேட்டி மற்றும் வெள்ளை சட்டையுடன், பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லாமல், என்றாலும் தேர்த் திருவிழா காலை என்பதாலும், யாழ் வெக்கையான பகுதி என்பதாலும், சன் கிளாஸ் (Sun Glass) அணிந்து இருந்தாலும், அதை சரிசெய்து, ஒரு வெளிநாட்டவரைப் போல அதிகமாகத் தோன்றாமல் இருக்க முயன்றான். பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளிநாடு என்பதால், அவனுக்கு இயல்பாக தமிழ் பேசுவது கடினமாக இருந்தது. ஆனாலும், கோயில் மணிகள் முழங்கும்போது, அவனுக்குள் ஏதோ ஒரு ஒலி எழுந்தது. இந்த ஒலி ... அவனின் தந்தை மற்றும் அம்மா, உயர் வகுப்பு படிக்கும் பொழுது, தம் தம் பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறும் பொழுது, என்னென்னெ நடந்தது என்று, அவனுக்குச் சொன்ன கதைகளில் ஒலித்த ஒலி, அது அவனின் தாத்தா பாட்டியின் இதயத் துடிப்பு! கோயிலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் ஒரு மூலையில் திரும்பி நின்றான். அப்போது தான் அவன் அவளைப் பார்த்தான். அனலி தன் சகாக்களுடன், நல்லூரில் தற்காலிகமாக அமைந்துள்ள, 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' என்ற நிறுவனத்தின் விளம்பர குடிலில், தங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்திக் கொண்டும், அதேவேளை பக்தர்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்கிக் கொண்டும் நின்றாள். அவளுடைய சேலை சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் மின்னி, தெய்வத்தின் அலங்காரங்களை கிட்டத்தட்ட எதிரொலித்தது. அவளுடைய தலைமுடியில் இருந்த மல்லிகை, தூபத்துடன் கலந்த ஒரு நறுமணத்தை வெளியிட்டது. அவளுடைய சகாக்கள் ஏதோ கிசுகிசுத்ததைப் பார்த்து அவள் சிரித்தாள், அவளுடைய சிரிப்பு திருவிழா சத்தத்தை விட அதிகமாக அவன் உள்ளத்தில் பதிந்தது. சுற்றுலா பற்றி மேலதிக விபரங்களை நேரடியாக அறியும் சாட்டில், ஆரன் அங்கு சென்றான். அவன் இதயம் மிருதங்கத்தை விட பலமாக துடித்தது. தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற, “மன்னிக்கவும்,” என்று கூறிக் கொண்டு, சக்கரைத் தண்ணீரை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு, “வடக்கு கிழக்கு சுற்றுலா ஏற்பாடு பற்றி விபரமாகக் கதைக்கலாமா? ” என்று அனலியிடம் கேட்டான். அனலி அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் குறும்புத்தனமாக இருந்தன. “ஆமாம் … தாராளமாக, ஆனால், அதற்கு முதல், நீங்கள் இந்த சக்கரைத் தண்ணீரை குடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறீர்களா? இது மிகவும் இனிப்பானது. யாழ்ப்பாணத்தைப் போலவே.” என்றாள். ஆனால் அவன் உள்ளம், 'ஆமாம் மிகவும் இனிப்பானது உன்னைப் போலவே' என்று சொல்ல துடித்தாலும், அவளின் கடைவிழி பார்வையில், கொஞ்சம் தடுமாறி, தனக்கு தெரிந்த தமிழில், அவன் வாய் தனக்குள் முணுமுணுத்தது. பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? அவளுடைய சகாக்கள் சிரித்தனர். ஆரன், ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “நான் மேப்பிள் சிரப்பை [பாகு / syrup] சாப்பிட்டு வளர்ந்தவான். சக்கரை ஒன்றும் எனக்குப் பெரிது இல்லை" என்றவன், தான் முதலில் சொல்ல விரும்பியதைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. "ஒருவேளை யாழ்ப்பாணத்தின் இனிப்பு கொஞ்சம் வலிமையானதாக இருக்கலாம், உன்னைப்போல” என்று அவளை ஏறிட்டுப் பார்த்தான். தினமும் அவன், தன் வேலைத்தளத்தில் பல பெண்களோடு கதைக்க, பழக நேரிடும். சில நேரங்களில் அருகில் நெருக்கமாக அமர்ந்தும் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஏற்படாதா ஓர் உணர்வும் புது மாற்றமும் அவளுக்கு எதிராக இப்ப நிற்கும் பொழுது ஏற்படுவது அவனுக்குப் புரியவில்லை. ‘என்ன பொண்ணு டா இவ’ என சொல்லத் துடித்த நா வை அடக்க முடிந்தாலும், மனதை அடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் ‘என்ன பொண்ணு டா இவ’ என்றே மனசு முணுமுணுத்தது. அனலி புருவத்தை உயர்த்தி, “மேப்பிள் சிரப்? .. அப்ப … நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவரா?” என்று கேட்டாள். “ஆம். கனடா. முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். பிரச்சனைகளின் போது என் பெற்றோர் வாலிப வயதில் இங்கிருந்து வெளியேறினர்.” அவனின் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாறினாலும், சமாளித்து முழுமையாகத் தமிழில் கூறினான். அவள் புன்னகை கொஞ்சம் தணிந்தது. "அப்போ நீங்கள் சரியான நேரத்தில் தான் வந்து விட்டீர்கள். நல்லூர் திருவிழா உள்ளூர்வாசிகளை மட்டும் வரவேற்காது, புலம்பெயர்ந்தோரையும் வரவேற்கிறது." என்றாள். பின் அந்த குடிலில் இருந்த மேசை அருகில் போய், தானும் அமர்ந்து அவனையும் அமரச் சொன்னாள். அப்போது, தங்கத் தேர் தெருவில் திரும்பும் போது கூட்டம் அலை மோதியது. மணிகள் முழங்க, சங்குகள் முழங்க, "வேல் வேல்!" என்ற கோஷங்கள் காற்றை நிரப்பின. ஆரனும் அனலியும், சுற்றுல்லா பற்றிய உரையாடலை சற்று நிறுத்தி, வெளியே எட்டிப் பார்த்தனர். ஆனால், பக்தர்களின் அலையால் இருவரும் மிக நெருக்கமாக தள்ளப்பட்டு, தோளோடு தோள் நின்று, பூக்களால், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரக் கந்தனை வழிப்பட்டனர். அனலி கிட்டத்தட்ட பயபக்தியுடன் அவனின் காதில், "நல்லூர் ஒரு கோயில் அல்ல, யாழ்ப்பாணத்தின் இதயம்" என்று கிசுகிசுத்தாள். ஆரன் அவளைப் பார்த்தான் - அவள் ஒரு அழகு தேவதை போல் அவனுக்கு இருந்தது. அவள் கண்கள் எண்ணெய் விளக்குகளைப் போல அவன் இதயத்தில் பிரகாசித்தன. தேர் விலகிச் செல்லும் போது, கூட்டம் குழுக்களாகப் பிரிந்தது - சிலர் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி கடைகளுக்குச் சென்றனர், மற்றவர்கள் காவடி நடனக் கலைஞர்களுக்காக வாசிக்கும் மேளதாளங்களை நோக்கிச் சென்றனர். கூட்டம் குறைய, அவர்கள் மீண்டும் மேசைக்குப் போய், சுற்றுலா ஏற்பாடு பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால், ஆரன் அனலியே சுற்றுலா வழிகாட்டியாக வரவேண்டும் என்று வலியுறுத்தினான். அப்பொழுது அனலியின் அக்காவின் குட்டி மகள், அவளது கையை இழுத்து, “சித்தி, நாமும் காவடி நடனத்தைப் பார்ப்போம்!” என்று கெஞ்சினாள். அனலியின் அப்பா தான் இந்த நிறுவனத்தின் முகாமையாளர். அப்பாவை கேட்டு நாளை பதில் சொல்லுகிறேன் என்று அவனது தொடர்பு இலக்கத்தை அவசரம் அவசரமாக பதித்துக் கொண்டு, தன் அக்காவின் மகளுடன் காவடி நடனம் பார்க்கப் புறப்பட்டாள். அவனின் மனதில் அவளின் அழகு, பேசும் தொனி ஒரு சொல்ல முடியாத உணர்வைக் கொடுக்க, அவன் ஒரு தைரியத்தை வரவைத்துக் கொண்டு உச்சந்தலை முதல், முன் பாதம் வரை அவளைப் பார்வையிட்டான். உச்சந்தலையில் குங்கும பொட்டில்லை, காலில் மெட்டியில்லை. 'கலைந்துபோன அவளின் கூந்தலை கண்டு, கட்டிபோட்டிருந்த அவன் மனமும் கொஞ்சம் கலைந்தே போனது !' ஆரன் தயங்கி, “நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா?” என்று கேட்டான். அனலி அவனிடம் ஒரு குறும்புத்தனமாக புன்னகைத்து, “ காவடி நேரடியாக பார்ப்பது இதுவா முதல் முறை” என்றாள். ஆனால், அவன் மௌனமாக, அவர்களுடன் ஒன்றாகக் காவடி நடனக் கலைஞர்களிடம் நடந்து சென்றான். ஆண்கள் வெறுங்காலுடன், மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தோளில் சுமந்து, தாளத்துக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனம் ஆடினர். அதேவேளை ஒரு குழந்தைகள் குழு குச்சிகள் மற்றும் வண்ண காகிதங்களால் செய்யப்பட்ட பொம்மை காவடிகளை ஏந்திச் சென்றது. அவர்களில் ஒரு குழந்தை ஆரன் மீது மோத, பொம்மைக் காவடி நிலத்தில் தவறி விழுந்து, சிறிது அலங்கோலமாகி விட்டது. ஆரன் சாரி [sorry] என்று சொல்லி, அதை எடுத்து கொடுத்தான். அனலி சிரித்தாள். “பார்த்தாயா? குழந்தைகள் கூட நீ இங்கே சேர்ந்தவனா என்று சோதிக்கிறார்கள்.” என்றாள். ஆரனுக்கு, யாழ்ப்பாணம் அவனது பெற்றோரின் நினைவாக மட்டும் அல்ல. அது குறும்புத்தனத்தையும் அழகையும் சுமந்த ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில், அவனுக்கு முன்னால் உயிருடன் நின்றது. அனலியை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த அந்நியன் மற்றொரு பார்வையாளர் மட்டுமல்ல. அவன் நல்லூரை நோக்கிப் பார்த்த விதம் - உடைந்த வேர்களைத் தைக்க முயற்சிப்பது போல - அவளை அமைதியாகத் தொட்டது. அன்று இரவு, கோயில் கோபுரங்களுக்கு மேலே பட்டாசு வெடித்தபோது, ஆரன் நினைத்தான்: ஒருவேளை யாழ்ப்பாணம் வந்தது கடந்த காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாக மட்டும் அல்ல, அது எதிர்காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாகக் கூட இருக்கலாம்? என்று. அன்று மாலை, கோயில் வருகைக்குப் பிறகு, ஆரன், அனலி தந்தையின் வீட்டோடு சேர்ந்த 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' டின் முதன்மை அலுவலகத்திற்கு சென்றான். அனலியின் தந்தையுடன் அங்கு அமர்ந்தான். தெருவில் இருந்து மல்லிகை மற்றும் வறுத்த நிலக்கடலையின் வாசனை அங்கு வீசிக்கொண்டு இருந்தது. அனலியின் தந்தை ஆரனை அளவான புன்னகையுடன் பார்த்து, ' கான் ஐ ஹெல்ப் யு? [can I help you]' என்று கேட்டார். அவன் வந்த நோக்கத்தை விபரமாகச் சொன்னான். “ஆரன், நீ கனடாவில் இருந்து இவ்வளவு தூரம் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலத்தின் மீது இவ்வளவு அன்புடன் பேசுகிறாய். ஆனால் சொல்லுங்கள் - ஏன் எங்கள் மகளை சுற்றுலா வழிகாட்டியாக, இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் ஆரன் மரியாதையுடன் அவரை அழைத்து, "நான் வெளிநாட்டில் பிறந்திருக்கலாம், ஆனால் என் வேர்கள் இங்கேதான். புலம்பெயர்ந்த நம்மில் பலர் கதைகளை மட்டுமே கேட்கிறோம். ஆனால் நாம் நம் கண்களால் இந்த நிலத்தைப் பார்க்க வேண்டும். அனலி சுற்றுலா துறையிலும் வரலாற்றிலும் கல்வி பயின்றவள் என்று அறிகிறேன். எனவே, நாம் பார்க்கவேண்டிய இடங்களையும் அந்தந்த இடத்தைப்பற்றி சரியான விபரத்தையும் தரக்கூடியவள் என்று எண்ணுகிறேன். அதனாலத்தான் ... '' என்று இழுத்தான். ' மற்றும்படி, இந்த அறிவுகளுடன் யார் வந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று முடித்தான். “ஆரன், உன் வேர்களை மீண்டும் கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். நான் உன்னுடன் ஒரு பெரியவரை அனுப்பினால், நீ கவனமாகப் பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்பாய். ஆனால், உன் விருப்பம் படி அனலி வழிகாட்டியாக வந்தால், இருவரும் சுதந்திரமாகப் பேசுவீர்கள் - இளைஞர்களாக, சமமாக. உண்மை வரலாறு ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்திற்குப் பரவும் என்று நம்புகிறேன்” அனலி ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தாள். அப்பா (புன்னகையுடன்): “ஆமாம், குழந்தாய். ஆரனின் மரியாதையையும் உன் ஞானத்தையும் நான் நம்புகிறேன். நீ நம் நிலத்தின் வரலாற்றைக் கற்றுக் கொடுக்க, அதை இன்றைய நிலைமையில் இருந்து எடுத்துச் செல்லப் போகிறாய். அவ்வளவுதான் ” என்றார். ஆரன் நன்றியுடன் தலை குனிந்தான். “நான் அனலியை என் சொந்த சகோதரியைப் போலவே மரியாதையுடன் நடத்துவேன்.” என்றான். அனலியின் தந்தை தலையசைத்தார். "நீ நன்றாகப் பேசுகிறாய், ஆரன். இவை புனிதமான பயணங்கள் - நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம், நல்லூர். உனது நோக்கம் - பண்பாடு மற்றும் வரலாறு என்பதால், நாங்கள் உன்னை நம்புகிறோம்." அனலியின் தந்தை, ஆரனின் கண்களைப் பார்த்து, அங்குள்ள நேர்மையை அளந்து, இறுதியாக தலையசைத்தார். "சரி. போ. பயணம் செய், கற்றுக்கொள், பெரியவர்கள் கூட மறந்துவிட்ட கதைகளுடன் திரும்பி வா" என்றார். அருகில் அமர்ந்திருந்த அனலி கீழே பார்த்தாள், ஆனால் அவள் கண்கள் உற்சாகத்தால் பிரகாசித்தன. அவள் தான், தனக்கு ஒரு துணையாக, அக்கா மகளையும் - பாடசாலை விடுமுறை என்பதால் - கூட்டிப்போகவா என்று கேட்டாள். அவளுடைய தந்தை , “அப்படியானால் ஓகே , ஆனால் கவனமாக. நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் உங்கள் இளமையை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும் சுமக்கிறீர்கள். ஆரன், நீ அவளைப் பாதுகாக்கவும். அவள் துக்கத்துடன் அல்ல, அறிவுடன் திரும்பட்டும்.” என்றார். அன்று இரவு, மேசை விளக்கின் கீழ், அனலி தனது நாட்குறிப்பில் எழுதினாள் : “நாளை நான் ஆரனுடன் நடப்பேன்; அந்நியனோடு அல்ல, அவன் மறந்துபோன பாரம்பரியத்தின் கதவுகளைத் திறக்கும் ஒரு வழிகாட்டியாக! அவன் காலடி பாதைகளில் எம் முன்னோரின் நிழல்கள் விழித்தெழட்டும் என் வார்த்தைகளில் நாம் இழந்த வரலாறு மீண்டும் உயிர்பெறட்டும்!” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/32609831688665390/?
  4. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 52 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா?' புத்தரின் இலங்கை வருகையின் போது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பலகோடி ?? ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அவர்கள் விஜயன் வரும் பொழுதும் அதற்குப் பிறகும் இலங்கையில் இருந்து இருந்தால், தானாகவே புத்த மதம் அங்கு தழைத்து ஓங்கி இருக்கும். ஆனால், அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து சென்ற பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் அவரது கொள்கைகளை விட்டுவிட்டு முந்தைய கொள்கைகள் மற்றும் சிவ மற்றும் நாக வழிபாடுகளுக்கு திரும்பிச் சென்றனவா? அல்லது புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா? எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் சொல்லவும். பழங்கால அல்லது இன்றைய உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கிறார்கள். மேலும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்த பண்டைய காலத்தில் கடினமாக இருந்தது. இரண்டாவதாக, புத்தர் விஜயனின் வருகைக்கு முன் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் முதலில் வந்தபோது, பல தெய்வீக மனிதர்கள் (தேவர்கள்) கூடினர், மேலும் அவர் அவர்களுக்கு தனது போதனைகளை போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. எனக்கு இதில் புரியாதது, தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு போதனை ஏன் ? எதற்காக ?? அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போது, கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர்?? பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இலங்கை சனத்தொகை, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 23.50 மில்லியனை எட்டும் என்று இன்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது [ஒரு கோடி என்றால் பத்து மில்லியன்] இப்பதான் மொத்த சனத்தொகை அல்லது போதனைகளை கேட்கக்கூடிய அறிவுள்ள உயிரினங்கள் 2.35 கோடியை எட்டப்போகிறது. அப்படி என்றால், எண்பது கோடி இப்ப இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின், இரண்டரைக்கோடி ஆகிவிட்டதா? தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். புத்தர் ஏற்கனவே இலங்கையில் தனது போதனைகளைப் பரப்பியிருப்பதால், விஜயனும் அவனது சீடர்களும் வந்தபோது புத்த மதம் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், சிவன் மற்றும் நாகா (பாம்பு தெய்வங்கள்) வழிபாடுகள், மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவின் காலம் வரை தொடர்ந்தன என்பதே உண்மையான வரலாற்றுச் சான்றுகள். பிற்காலத்தில் இந்திரன் கடவுள் கூட? [ இந்திரன் ஒரு இந்து கடவுள், அவர் எப்படி புத்த சமயத்தை பரப்ப துணை போனார் ?, தேவலோக துரோகியா?] புத்த துறவி மகிந்தவை இலங்கைக்கு சென்று பௌத்தத்தை பரப்புமாறு அறிவுறுத்தினார். மகிந்த தீவில் பௌத்தத்தை கொண்டு வருவார் என புத்தரே முன்னறிவித்ததை [ ஏன் புத்தர், தானே புத்த கொள்கையை இலங்கைக்கு கொண்டு வந்ததை, அதுவும் மூன்று தடவை என்பதை, மறந்து விட்டாரா?] இந்திரன் மகிந்தவுக்கு நினைவுபடுத்தினார். Part: 52 / Appendix – Dipavamsa / 'Did the Buddha not teach correctly?' What I still don't understand is that if billions of souls, including Nagas and Devas, converted to Buddhism during Buddha's visit to Sri Lanka, what happened to them? Why was Mahinda Thera sent to convert them? Or after the Buddha came and went, did all those beings abandon his principles and go back to the previous principles and Siva & Naga worships? Or did the Buddha not teach correctly? If one takes a look at the history of the ancient world, one tends to establish his teachings first in the country where he was born and brought up. After that it may or may not spread to other countries. Because they especially know their country, their language, their environment and culture. And transportation, especially to foreign countries, was a difficult at the time. Second, the Buddha visited Ceylon three times before Vijaya's arrival, and on his first visit, the Devas assembled, and in their assembly the Master preached them the doctrine. The conversion of many kotis of living beings took place Similarly, in the second visit, he, the Lord, established in the (three) refuges and in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland. And on the third visit, the merciful Lord, had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta / A mountain peak in Ceylon If that is the case, Buddha's teachings must have been there at the time of Vijaya's arrival, but Siva worship and Naga worship have been continued there till the time of Devanampiya Tissa and Even the great Indra sought out the excellent thera Mahinda and said to him: `Set forth to convert Lanka; by the Sam buddha also hast thou been foretold (for this). நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 53 தொடரும் / Will follow துளி/DROP: 1921 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52] https://www.facebook.com/groups/978753388866632/posts/32588228377492388/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 53 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்தவும் சங்கமித்தாவும் கற்பனை கதாபாத்திரங்களா?' மூத்தசிவனின் முதல் மகனான அபயாவுக்கு என்ன நடந்தது என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. மகாவம்சமும் அவனைப் பற்றி மௌனமாக இருக்கிறது. சுருக்கமாக, இலங்கை பண்டைய நூலின் படி, அசோகா & தேவநம்பியதிஸ்ஸ இருவரும் சமகாலத்தவர்கள், ஒரே மாதிரியான பட்டப்பெயர்களைக் கொண்ட , ஒரே மாதிரியான சமயத்தைக் கொண்ட, ஒரே மாதிரியான இரண்டாவது மகனாக, நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவை கற்பனையாக ஒருவருக்கு ஒருவர் இணைக்கப்பட்ட ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையின் திஸ்ஸா இந்தியாவின் உண்மையான அசோகரின் கார்பன் நகலாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் அசோகருக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. ஆனால், இலங்கையில் தேவநம்பியதிசாவைப் பற்றி தொல்பொருள் அல்லது கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மகிந்த மற்றும் சங்கமித்தா பிறந்த ஆண்டு இலங்கையின் பண்டைய வரலாற்று நூலில் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு சந்தேகத்தை கொடுக்கிறது. எனவே, இது நம்பகமாக இல்லை. காரணம் இருவரும் கண்டுபிடிக்கப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கலாம். ஏனென்றால், மகிந்த மற்றும் சங்கமித்தா அவர்களின் பிறந்த இடமான இந்தியாவில் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனவே தேவநம்பியதிஸ்ஸ, மகிந்த மற்றும் சங்கமித்தா கற்பனை பாத்திரங்களாகத் தோன்றுகிறது? இது ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது, ஆனால் சுருக்கமாக கீழே தருகிறேன்: மகிந்தவையும் சங்கமித்தாவையும் குறிப்பிடும் இந்திய ஆதாரங்கள் இல்லை. அசோகரின் கல்வெட்டுகளோ, ஆணைகளோ மகிந்தவையோ, சங்கமித்தாவையோ குறிப்பிடவில்லை. மகிந்த உண்மையிலேயே இளவரசராகவும், அசோகரின் மகனாகவும் இருந்தால், குறைந்தபட்சம் ஒரு இந்திய ஆதாரம் அல்லது கல்வெட்டு அவரைக் குறிப்பிடும் என்று எதிர்பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸ மற்றும் அசோகரின் நட்பும் சந்தேகத்திற்குரியது. அவர்கள் நேரில் சந்திக்காத போதிலும், அவர்கள் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க அசோகரின் பதிவுகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை. மற்றொரு முக்கிய பிரச்சினை தேவநம்பியதிஸ்ஸவின் இரண்டாவது முடிசூட்டு விழா மற்றும் பயண நேரங்களின் சாத்தியக்கூறு ஆகும். அசோகரின் செல்வாக்கின் கீழ் தேவநம்பியதிஸ்ஸ இரண்டாவது முடிசூட்டுக் கொண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது, ஆனால் அந்த நாட்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணம் பருவக்காற்றை நம்பியிருந்தது. ஒரு சுற்றுப்பயணம் பல பல மாதங்கள் ஆகலாம், போய் வர அண்ணளவாக ஒரு ஆண்டு ஆகும். எனவே இந்த நிகழ்வுகள் மிகவும் சாத்தியமற்றது. இவை விபரமாக முன்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் புராண கதைகளுக்கான சாத்தியமான காரணங்கள் சமயச் சட்டமாக்கல்: இலங்கையின் பௌத்த பாரம்பரியம், தீவின் ஆட்சியாளர்களை நேரடியாக அசோகருடன் இணைக்கும் வகையில் இந்தக் கதைகளை உருவாக்கி, அதன் மூலம் இலங்கையில் பௌத்தத்தின் புனிதத் தன்மையை வலுப்படுத்தி யிருக்கலாம்? மன்னராட்சி முறை: தேவநம்பியதிசாவை அசோகருடன் தொடர்புபடுத்துவது, இலங்கை மன்னரை சக்திவாய்ந்த மௌரியப் பேரரசுடன் இணைப்பதன் மூலம் அவருக்கு அதிக அங்கீகாரத்தை அளித்திருக்கும். இலங்கை ஆதாரம் இலங்கையில் காணப்படும், மிஹிந்தலை போன்ற கல்வெட்டுகள், மகிந்தவைக் குறிக்கும் ஒப்பீட்டளவில் [ஆனால்] பிற்கால கல்வெட்டுகள் ஆகும். மகிந்த மற்றும் சங்கமித்தாவுடன் தொடர்புடைய ஸ்தூபிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் (மிஹிந்தலை மற்றும் அனுராதபுரத்தின் போதி மர ஆலயம் போன்றவை) பாரம்பரியத்தால் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவற்றின் கல்வெட்டுகள் ஒப்பீட்டளவில் பிந்தியதாகவே காணப்படுகிறது. அவற்றின் இருப்பை உறுதிப்படுத்தும் சமகால கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. Part: 53 / Appendix – Dipavamsa / 'Are Mahinda and Sanghamitta invented personalities?' Devanampiyatissa ruled for forty years. Though the Ceylon chronicles give 37 years for Asoka, the Indian sources give 36 years for Asoka after coronation. Asoka commenced ruling four years before the coronation. Therefore, both Asoka and Tissa had same length of reigns, forty years. Asoka is the second son of his father and Tissa is the second son of his father Mutasiva; another coincident. Dipavamsa is silent on what happened to the first son of Mutasiva, Abhaya. The Mahavamsa is also silent about the first son of Mutasiva. In summary, both are contemporaries, intimate friends with similar sounding names with same length of reigns, the same religion, and the second sons. They had not met each other and separated by more than one thousand five hundred miles in travelling distance. It is quite impossible to be true about two thousand three hundred years ago! These must have been invented coincidences; Tissa of Lanka must be carbon copy of the real Asoka of India. There are concrete evidences for Asoka all over India, and there is no archaeological or inscriptional evidence about Devanampiyatissa in Ceylon. Year of birth of Mahinda and Samghamitta are precisely given in the Ceylon chronicles. The reason could be that both are invented personalities. There are no information about Mahinda and Samghamitta in their birthplace, India. Therefore, Devanampiyatissa, Mahinda and Samghamitta must be invented personalities. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 54 தொடரும் / Will follow துளி/DROP: 1922 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53] https://www.facebook.com/groups/978753388866632/posts/32596343023347590/?
  5. சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025 இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது. இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை. ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான். புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர். ஒவ்வொரு சுடரும் ஒரு கதை. அங்கே அவள் நின்றிருந்தாள். சாம்பிராணி நிறச் சேலையில், கரும்பச்சை மேல்சட்டையுடன் — முகத்தில் சோகமில்லை, ஆனால் ஒரு பெரும் அமைதி. அந்த அமைதி தான் அவனைத் திடீரென தடுத்து நிறுத்தியது. “நீங்க…” என்றவாறு அவள் பார்வை அவன்மேல் தங்கியது. “நான் ஆதித்தன்…” என்றான் மெல்ல. “நான் இங்கே வணங்க வரவில்லை … தேட வந்தவன்.” அவள் மெதுவாக ஒரு விளக்கைத் தன் முன்னால் வைத்து ஏற்றினாள். “தேடுபவர் எல்லாம் இழந்தவர்கள்தான்,” என்றாள். “சிலர் மனிதரைத் தேடுவார்கள்… சிலர் தங்களைத் தாங்களே தேடிவிடுவார்கள்…” ஒளி அவள் முகத்தில் விழ, அவள் ஒரு நிழலும் ஆனாள்… ஒரு தீபமும் ஆனாள். “எவர் நினைவுக்கு?” என்று அவன் கேட்டான். “எனக்குத் தெரியாத ஒருவருக்கு… ஆனால் அவர் இல்லையென்றால், நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்,” என்றாள். ஒரு கணம் — வானம் இன்னும் கருமையானது போல தோன்றியது. பிறகே — அருகிலிருந்த நூறு தீபங்களும் ஒன்றாக மினுங்கின. அந்த ஒளி — அவனுக்குள் புதைந்திருந்த தந்தையின் முகத்தை எழுப்பியது. அண்ணனின் குரலினை ஒலிக்க வைத்தது. அம்மாவின் வாசத்தை மீட்டுக் கொண்டுவந்தது. “நீங்க பயப்படவில்லையா ?” என்றான். “இல்லை,” என்றாள். “தீபம் எரிய பயந்தா, இருளே ராஜா ஆகிவிடும்…” அவன் சிரித்தான். மூன்று வருடங்களாகச் சிரிக்க மறந்த உதடுகள் — இன்று கார்த்திகையின் காரணமாக சிரித்தன. அவள் பெயர் தீபிகா. ஒரே எழுத்தை மாற்றினால் போதும் — அவளே ஒரு தீபம். அவள் தன் கைகளால் இன்னொரு விளக்கை ஏற்றி அவனிடம் கொடுத்தாள். “இது உங்களுக்கல்ல,” என்றாள், “உங்களுக்குள் இன்னும் வாழ்கிறவர்களுக்கு…” அவன் கண்களில் நீர் தேங்கியது. அதே நீரில்தான் — ஒரு காதல் முளைத்தது. அது உடனடியான காதல் இல்லை. அது தோன்றி வளர்ந்த தீபக்குஞ்சு. மௌனத்தில் ஏற்பட்ட உறவு. கண் மொழியில் உருவான இரு உள்ளங்களும் இணைந்த நிலை வலியில் மலர்ந்த நம்பிக்கை. தூரத்தில் ஒரு பழைய பாடல் ஒலித்தது : "விளக்கேற்றும் இரவினிலே விழிகளில் விழுந்த கனவினிலே அகம் திறக்கும் அன்பினிலே உலகம் மறந்த தருணமிதே..." அவர்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்தனர். மற்ற எந்தச் சொற்களும் தேவையில்லை. இந்த கார்த்திகை தீபம் — ஆதித்தனுக்கு, அகதி என்ற அடையாளத்தை அழித்தது. தீபிகாவுக்கு, புதுவாழ்வு என்ற அர்த்தத்தைக் கொடுத்தது. நூறு தீபங்கள் முன் இரு இதயங்கள் ஒரே சுடரில் ஒன்றாயின. 2025 நவம்பர் 27 அன்று எரிந்த தீபம்… இன்னும் அவர்களின் உள்ளத்தில் அணையாமல் எரிகிறது. விளக்கின் சுடர் காற்றில் ஆடியது. ஆனால் அது அணையவில்லை. அந்த இரவின் அமைதி — சொற்கள் இல்லாத சங்கீதம். நூற்றுக்கணக்கான உயிர்களின் மௌன ஒலி காற்றில் நின்று கொண்டிருந்தது. ஆதித்தனும் தீபிகாவும் ஒன்றாக நிற்பதாலோ, அல்லது அவர்களைச் சுற்றி திரண்ட நினைவுகளாலோ, இந்த மண் ஒரு கணம் உயிர்பெற்றது போலவே இருந்தது. “நீங்க எங்கிருந்திங்க?” என்று தீபிகா திரும்பவும் கேட்டாள். “பல இடங்களில்…” என்றான் அவன். “ஆனா எந்த இடத்திலும் இல்லை.” அவளுக்குப் புரிந்தது. இது ஒரு அகதியின் பதில். நாட்டை இழந்த ஒரு ஆணின் வாக்கியம். அவள் சொன்னாள்: “நீங்க இங்கே இருக்கிங்கன்னு மட்டும் தான் இப்போ முக்கியம்.” அந்த வார்த்தைகள் காற்றை அல்ல, அவன் உள்ளத்தைக் குத்தியன. முதன்முறையாக — அவன் “உள்ளே” உணர்ந்தான். அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர். தீபங்கள் இடையே அமைந்த அந்த குறுகிய பாதை — இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தது. ஒவ்வொரு விளக்கும் கடந்து செல்லும் போது தீபிகா ஒரு பெயரைச் சொன்னாள். ஒரு சகோதரன்… ஒரு காதலன்… ஒரு சிறுவன்… ஒரு தாய்… ஆதித்தனுக்கு தெரியாத முகங்கள். ஆனால் அவன் உணர்ந்து கொண்டிருந்த வலி. “நீங்க இங்கே ஒவ்வொருவருக்கும் விளக்கு ஏற்றுறீங்களா?” என்றான். “இல்லை…” “நான் என் எதிர்காலத்துக்காக ஏற்றுறேன்,” என்றாள். அவன் திடீரென நின்றான். “எதிர்காலம்?” “ஆமா… இந்த மாதிரி ஒரு நாள்ல என் குழந்தை விளக்கு ஏத்த வேண்டாம்னு எதிர்காலம்.” அந்த ஒரு வாக்கியம் அவனுக்குள் ஒரு நாடு உருவாக்கியது. அவன் கண்களில் ஒரே நேரத்தில் இருளும், ஒரே நேரத்தில் ஒளியும் பளிச்சிட்டன. முதல் முறையாக, அந்த மண்ணை அவன் மன்னித்தான். அந்த வானத்தை அவன் ஏற்றுக் கொண்டான். அவர்கள் அருகே ஒரு சின்ன பையன் வந்து நின்றான். அவன் கைவிரலில் அழிக்காத மெழுகு. “அண்ணா… உங்க விளக்கு அணையுது” என்றான். ஆதித்தன் சிரித்தான். “அது வெளிச்சம் முடிவதால இல்லை, காற்று பயப்படுத்துறதால தான்.” அருகே நின்ற தீபிகா ஒரு குச்சியை எடுத்து அவன் விளக்கை மீண்டும் ஏற்றினாள். அந்தச் சுடர் — இருவர் உள்ளங்களையும் ஒன்றாக எரிய வைத்தது. அது விளக்கின் சுடர் அல்ல. அது நம்பிக்கையின் நெருப்பு. அன்றிலிருந்து… அவர்கள் தினமும் சந்திக்கவில்லை. ஆனால், வாரம் ஒருமுறை, அதே நினைவுத் திடலில், ஒரே நேரத்தில், விளக்குடன் வந்தனர். ஒன்றும் பேசாது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பேசத் தொடங்கிய நாள், மழை பெய்த நாள். மண்ணின் ஈரம் மணந்த இரவு. “நீங்க போர்ல யாரையாவது இழந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்டாள். அவன் தூரத்தை பார்த்தான். “இழக்காம இருக்கிறவங்க யாரு தீபிகா?” “நான் என்னையே இழந்தேன்.” அவள் மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்தாள். “அப்படின்னா, இப்ப நான் உங்க கண்ணாடி…” “உங்களையே திரும்ப காட்டுறவன் மாதிரி…” அவன் பேசவில்லை. விசும்புதல் மட்டுமே பதிலாய் இருந்தது. அந்த நாள்தான், கார்த்திகாவின் துணி நிறமான சிவப்பும், மஞ்சளும் அவனுக்குப் ‘கொடி’யானது. அந்த இரவுதான், ஒரு கன்னத்தின் மீது முதல் முத்தம் விழுந்தது. அது ஆசையல்ல. அது — மீட்பு. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [[ஒரு வருடம் கழிந்தது 27 நவம்பர் 2026. அதே இடம். ஆனால் இப்போது — இரண்டு அல்ல, மூன்று விளக்குகள். நடு விளக்கு — புதிய உயிரின் சுடர். தீபிகா மெதுவாக கிசுகிசுத்தாள்: “இது நம்ம நினைவுகளின் குழந்தை…” ஆதித்தன் அந்த தீபத்தை பார்த்தவண்ணம் சொன்னான்: “இது இனி மரணத்துக்கான நாள் இல்லை…” “இது பிறப்பு நாளாகும்…” அந்த வானத்தில் ஒரு நட்சத்திரம் கூடுதலாகத் தோன்றியது. அது மாவீரன் அல்ல. அது — வாழும் வீரன்]] துளி/DROP: 1920 [சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32568321442816415/?
  6. "🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" “🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“ ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் தமிழ் உலகம் நினைவுகூருகிறது போரை அல்ல, அரசியலை அல்ல — மக்களை, உயிர்களை, கனவுகளை! சம உரிமைகளுக்கான ..... கண்ணியத்திற்கான ..... தாயகத்திற்கான ..... குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான .... நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது வெறுப்பின் தீயால் அல்ல நம்பிக்கையின் ஒளியால் — நாம் விளக்கை ஏற்றுகிறோம் — உலகம் தங்கள் ஒளியைத் தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்! நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் - திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்! நாம் துக்கப்படுகிறோம் — ஏனென்றால் நாம் மனிதர்கள் மேலும் அவர்களும் மனிதர்கள்! நாளையத் தலைமுறைக்கென்று கண்ணீரிலே விதைத்த மறக்க முடியாத கனவொன்று எம் இதயத்தில் எழுகிறது! அந்தக் கனவே — நவம்பர் 27 தீபம், அணையாத நினைவு! ======================== “வன்னியின் குரல்கள்” மாங்குளம் முதல் ஒட்டுசுட்டான் வரை குழந்தைகள் வயல்களில் மகிழ்ந்தனர் காற்றில் பறக்கும் தென்னோலை போல கிளிநொச்சியில் கனவுகள் பின்னின! பனை மரங்களின் கீழ் குடும்பங்கள் கூடி புதுக்குடியிருப்பில் உண்டு பேசி பகிர்ந்தனர் ஆனால் போர் ஒரு அழிப்பேரலையாக வந்தது எல்லாவற்றையும் அடித்துச் சென்றது! சுதந்திரபுரம் குண்டுகளால் நடுங்கியது மந்துவில் மதிய வேளையும் இருட்டானது வலையர்மடத்தில் கூடாரங்கள் நிரம்பி வழிந்தன வட்டுவாகலில் உலகம் மறுபக்கம் திரும்பியது! இறுதியாக — முள்ளிவாய்க்கால் கைவிடப்பட்ட மக்களின் இறுதி மூச்சானது! இன்று நவம்பர் 27 வன்னியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு வயலுக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தீபம் ஏற்றுகிறோம்! ஏனென்றால், அவர்களின் மண் இரத்தம் சிந்தினாலும் உண்மை இன்னும் நிலைத்திருக்கிறது — உடைக்கப்படாமல், தோற்கடிக்கப்படாமல். ====================================== “முள்ளிவாய்க்கால் மறவாத நினைவு” உலகம் கண்களை மூடிய போது முள்ளிவாய்க்கால் அமைதியாக அலறியது! தாய்மாரின் வெற்றுக் கரங்களுக்கும் தந்தையர் தோண்டும் கல்லறைகளுக்கும் நிமிர்ந்து நின்ற பனை சாட்சியானது! மே மாதம் 2009 இல் உலகம் காணாத பெரும் துயரம் சில நாட்களில் அரங்கேறியது! இல்லாமல் போனவர்களின் பிரதிபலிப்பு ஏரியில் தெளிவாய் தெரியுது வானமும் சாட்சி சொல்லுது! பென்சிளை பிடிக்கும் குழந்தைகள் குண்டின் நெருப்பிற்கு மூச்சைப் பிடித்தன அவர்களின் குற்றம் தமிழராகப் பிறந்ததே! புகையில் மறைந்தன கிராமங்கள் குடும்ப வரலாறும் சேர்ந்து எரிந்தன! மனிதகுலம் அழித்ததை பிரபஞ்சம் வைத்திருக்கும் என்று - மக்கள் தங்கள் பெயர்களை காற்றிடம், விண்மீன்களிடம், கிசுகிசுத்தனர்! வன்னியின் இறுதி அலறல்கள் ஒலியின் அலையில் கரைந்தபோது - புதிய மௌனம் எழுந்தது! முழு மக்களும் கத்திப் புரண்டு கண்ணீருக்கு அப்பால் அழுதபோது அந்த மௌனம் உருவாக்கியது! ===================================== “🕯️ எமது வாக்குறுதி“ உங்கள் நினைவு மறையாது உங்கள் கதைகள் கடலுடன் கரையாது உங்கள் முகங்கள் மங்காது! இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தீபம் எழும்பும் ஒவ்வொரு கனவு முடியும்போதும் ஒரு பாடல் தொடங்கும் ஒவ்வொரு குரல் மௌனிக்கும்போதும் ஒரு புதிய தலைமுறை பேசும்! இதனால்தான் நவம்பர் 27 வாழ்கிறது போரின் நினைவாக அல்ல — மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது மீண்டும் எப்போதும் அது மறக்கப்படாது மீண்டும் எப்போதும் அந்த உண்மை அழிக்கப்படாது என்ற ஒரு உறுதிமொழியாக! ==================================== “உலகம் பதிலளிக்க வேண்டிய நாள் இது ” குற்றத்தை உலகம் பெயரிட சங்கிலிகளை உடைத்து சத்தியம் மலர பொய்களின் நிழலில் இருந்து நீதி வெளியே வர - முள்ளிவாய்க்கால் அமைதியாக இல்லை அது பதிலுக்காக காத்திருக்கிறது! உலகம் கண்களை மூடினாலும் வன்னிமண் எலும்புகளை பாதுகாக்கிறது யாரும் சேகரிக்கா விட்டாலும் கடல் உடல்களை வைத்திருக்கிறது ஐ.நா. மண்டபங்கள் செவியை மூடினாலும் காற்று அழுகைகளைச் சுமந்து செல்கிறது! நீதி ஒரு மெதுவான நதி என்றாலும் ஆறுகள் தங்கள் பாதையை மறப்பதில்லை! ஒரு நாள், முள்ளிவாய்க்கால் உலக நீதிமன்றத்தில் பேசப்படும் ஒரு நாள், மணல் பிளந்து உண்மை புயலாக எழும் ஒரு நாள், உலகம் வாய்திறந்து மௌனத்திற்கு பதிலளிக்கும்! அந்த நாள் வரும்போது நாம் ஏற்றி வைக்கும் விளக்குகள் நினைவால் மட்டுமல்ல வெற்றியாலும் ஒளிரும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "🕯️ The Flame of November 27" ------------------------------------------ “🕯️ Why We Light the Lamp?“ Every November 27, the Tamil world remembers Not war, not politics — But the people. The lives. The dreams. The ones who left home in school uniforms And never returned. The ones who answered the call Not out of hatred, But out of hope — Hope for equal rights, Hope for dignity, Hope for a homeland Where children could grow without fear. We light the lamp Because the world refused to hold their light. We whisper their names Because justice refused to speak them. We mourn Because we are human — And because they were too. ======================== “Voices of the Vanni” From Mankulam to Oddusuddan, the Vanni once bloomed with fields of paddy and laughter of children. In Kilinochchi, dreams were woven like coconut leaves in the wind. In Puthukkudiyiruppu, families gathered under palm trees, sharing meals, stories, futures. But the war came like a wave— sweeping everything. In Suthanthirapuram, the earth trembled with shells. In Manthuvil, the sky turned dark at noon. In Valaiyarmadam, tents overflowed with the wounded. In Vattuvaagal, the world turned its face away. And at last— Mullivaikkal, the final breath of a people cornered by fate and abandoned by humanity. Today, we light a lamp for every village of the Vanni, every river, every field, every home scarred by the war. For even if their soil still bleeds, their truth still stands— unbroken, undefeated. ================================ “Mullivaikkal and the Unbroken Memory“ When the world turned its eyes away, The shores of Mullivaikkal learned to scream in silence. Palm trees stood as witness-towers, Watching mothers run with empty arms, And fathers dig graves with trembling hands. The lagoon held the reflection Of a thousand fleeing shadows, But the sky held the truth — No place on earth Has ever swallowed so much sorrow In so few days. Children who should have held pencils Held their breath instead, While shells carved fire Into the crowded sands. Their only crime: Being born Tamil. Villages disappeared in smoke, Pages of family history burned, Yet the people whispered their names To the wind, to the stars, Hoping the universe might hold What humanity destroyed. And when the final screams dissolved Into the sound of waves, A new silence rose — The silence that forms When an entire people Has cried beyond tears. ============================= “🕯️ The Promise We Carry“ We will not forget. We will not allow the sea To swallow their stories. We will not allow time To blur their faces. For every child lost, A lamp will rise. For every dream ended, A song will begin. For every voice silenced, A new generation will speak. This is why November 27 lives in us. Not as a memory of war — But as a pledge: Never again. Never forgotten. Never erased. ================================= “The Day the World Must Answer” Mullivaikkal is not quiet— it is waiting. Waiting for the world to name the crime. Waiting for truth to break its chains. Waiting for justice to step out of the shadows. The earth still holds the bones the world refused to see. The sea still keeps the bodies no one came to collect. The wind still carries the cries that never reached the UN halls. But justice is a slow river— and rivers do not forget their path. One day, Mullivaikkal will be spoken in the courtrooms of the world. One day, the truth buried in sand will rise like a storm. One day, the world will answer for the silence it kept. And when that day comes, the lamps we light will glow not only with memory— but with victory. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1919 ["🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/32568135796168313/?
  7. சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு [பக்தி, அதிகாரம், சர்ச்சை மற்றும் அறிவியல்] சத்திய சாய் பாபா யார்? சத்திய சாய் பாபா (1926–2011) இந்தியாவின் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்தவர். தன்னை சீரடி சாய் பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அவர் பெயரில் உருவாக்கப்பட்டன. அவர் போதனை: "அனைவரையும் நேசி. அனைவருக்கும் சேவை செய். எப்போதும் உதவு. ஒரு போதும் காயப்படுத்தாதே" பக்தர்கள் அவர் இது போன்ற அற்புதங்களைச் செய்ததாகக் கூறினர்: புனித சாம்பல் (விபூதி), மோதிரங்கள் மற்றும் பதக்கங்களை உருவகப்படுத்துதல் நோய் குணப்படுத்தல் எதிர்காலம் கூறுதல் ஒரேநேரத்தில், இரு இடங்களில் தோன்றுதல் பக்தர்களுக்கு – கடவுள் அறிவியலாளர்களுக்கு – வெறும் மனிதர் / மாயாஜால கலைஞர் டாக்டர் ஆபிரகாம் கோவூர் மற்றும் சாய் பாபா டாக்டர் ஆபிரகாம் கோவூர் (1898–1978) ஒரு விஞ்ஞானி, முற்போக்குச் சிந்தனையாளர் மற்றும் நான் கல்விகற்ற யாழ் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆசிரியர். போலி சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் எதிர்த்தவர். கோவூர் சாய்பாபாவிடம் வெளிப்படையாக சவால் விடுத்தார்: "அறிவியல் கண்காணிப்பின் கீழ் ஒரு பொருளை உருவாக்கினால் மட்டுமே உங்களைக் கடவுள் என ஏற்கிறேன்" சாய் பாபா இதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, ஓடி ஒழித்துவிட்டார் கோவூர் கூறியது: இதுவெல்லாம் மாயாஜாலக் கலை – தெய்வ சக்தி அல்ல அவரின் கருத்துகள் இன்றும் பல முற்போக்குச் சிந்தனைகளுக்கு அடிப்படையாக உள்ளன. நானும் இன்னும் நம்புகிறேன். பாபாவின் தோல்வியடைந்த கணிப்புகள் 1. தனது இறப்பு காலம் சாய் பாபா கூறினார்: "நான் 96 வயது வரை வாழ்வேன்" ஆனால் அவர் இறந்தது: தேதி: 24 ஏப்ரல் 2011 வயது: 84 அவர் தனது இறப்பைத் தவறாகக் கணித்தார். அவர் தன்னை கூட குணப்படுத்த இயலவில்லை. கோவூர் கூறியது உண்மை ஆனது: "தன்னை காப்பாற்ற முடியாதவர் கடவுள் அல்ல, நோயாளி மட்டுமே" 2. மறுபிறவி – பிரேமா சாய் அவர் கூறியது: சீரடி சாய் → சத்திய சாய் → பிரேமா சாய் ஆனால்: 14 வருடங்களாக எந்த உறுதியான பிறவியும் இல்லை பல போலிகள் நிராகரிக்கப்பட்டனர் பாபாவின் அமைப்புகளும் இப்போது இதைப் பற்றி மௌனம் இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் எவராவது இந்த உலகில், நான் இவரின் மறுபிறவி என்று சொன்னதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? சிலவேளை யாரையாவது ஒருவர், அவர் இவரின் மறுபிறவி என்று ஒருவேளை சொல்லி இருக்கலாம் ? அவ்வளவுதான்! உங்களுக்கு தெரியும் உலகம் பெரியது, மொழிகள், பண்பாடு பல,பல. அப்படி இருக்கையில் சாய்பாபா மிக குறுகிய மனப்பான்மையுடன், தனது மறுபிறவி, தான் பிறந்த தென் இந்தியாவிலேயே நடக்கும் என்று கூறியிருப்பதைக் காண்க. பாலியல் குற்றச்சாட்டுகள் & மறைமுகம் சில முன்னாள் பக்தர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டினர். அவரது ஆசிரமத்தில் நடந்தது: 1993 துப்பாக்கிச்சூடு மறைமுக நிதி மேலாண்மை அரசியல் பாதுகாப்பு சுயாதீன விசாரணை இல்லை இவை எல்லாம் பெரிய சந்தேகங்களை உருவாக்கின. பணக்காரர்களும் வெளிநாட்டவர்களும் ஏன் இன்றும் கொண்டாடுகிறார்கள்? இது ஒரு உளவியல் மற்றும் சமூகவியல் நிகழ்வு: உணர்ச்சி ரீதியான பிணைப்பு மற்றும் ஏக்கம் புலம்பெயர்ந்தோருக்கான கலாச்சார அடையாளம் சங்கங்களால் சமூக அந்தஸ்து நன்கொடை வலையமைப்புகள் மற்றும் செல்வாக்கு பழைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்த பயம் சமூக அழுத்தம் பல தசாப்தங்களாக நற்பெயரின் முதலீடு சாய்பாபாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆதாரம் மருத்துவமனைகள் & பல்கலைக்கழகங்கள் தொண்டு திட்டங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் பக்தி அனுபவங்கள் மனிதாபிமான பணிகள் சாய்பாபாவுக்கு எதிராக தோல்வியுற்ற மரண கணிப்பு வெளிப்படுத்தப்பட்ட மந்திர தந்திரங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அறிவியல் ஆதாரம் இல்லை நிதி ரகசியம் மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் இருக்கலாம் – அதனால் ஒருவர் கடவுள் ஆகிவிட மாட்டார். இறுதி தீர்மானம் சாய் பாபா: ✅ மக்களுக்கு ஆறுதல் அளித்தார் ✅ நிறுவனங்கள் உருவாக்கினார் ❌ தன் கணிப்பில் தோல்வியடைந்தார் ❌ தன்னை காப்பாற்ற முடியவில்லை ❌ அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை அவர் கடவுள் அல்ல. அவர் ஒரு மனோவியல் ஆளுமை. அவ்வளவுதான்! உண்மையான ஆன்மீகம் – சத்தியம், வெளிப்படை தன்மை, பொறுப்பு. இதில் எது சாய்பாபாவிடம் இருந்தது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON [A rational, historical and ethical re-examination] Who was Sathya Sai Baba? Sathya Sai Baba (1926–2011), born as Sathyanarayana Raju in Puttaparthi, India, was one of the most influential spiritual leaders of the 20th century. He claimed to be the reincarnation of Shirdi Sai Baba and later announced that a third incarnation, “Prema Sai Baba”, would be born after his death. He gathered millions of followers around the world, including politicians, judges, scientists, industrialists, artists and diaspora communities. His organisation built hospitals, universities, water supply projects and schools — all of which still function today. His central teachings were simple: “Love all. Serve all. Help ever. Hurt never.” Devotees claimed he performed miracles such as: Materialising sacred ash (vibhuti), rings and pendants Healing incurable diseases Predicting the future Appearing in two places at once To his followers, he was God. To critics, he was a charismatic magician. Dr Abraham T. Kovoor vs Sai Baba Dr Abraham T. Kovoor (1898–1978) was a Sri Lankan-born Indian scientist and one of South Asia’s most famous rationalists. A former Professor of Zoology, he dedicated his life to exposing fake godmen, miracle-workers and superstition using science. Kovoor openly challenged Sai Baba: “If Sai Baba can materialise an object under controlled scientific conditions, I will accept him as divine.” Sai Baba never accepted this challenge. Kovoor repeatedly stated that Sai Baba’s miracles were simple sleight-of-hand tricks, no different from stage magic. After Kovoor’s death, many of his ideas became the foundation for modern rationalist movements in India. The Failed Prophecies 1. Sai Baba’s own death prediction Sai Baba repeatedly told his followers: “I will live until the age of 96.” Born in 1926, this meant he should have lived until 2022. But he died on 24 April 2011, at the age of 84 — around 8 to 12 years earlier than his own prediction. He also failed to cure himself, despite suffering from kidney failure and respiratory illnesses. He was put on life support and treated by specialist doctors in his own hospital. A being who claimed to cure others could not cure himself. This is a powerful contradiction. As Kovoor once said: “A god who cannot save himself is not a god, but a patient.” 2. Rebirth prophecy – the missing “Prema Sai” Sai Baba declared: Shirdi Sai Baba → Sathya Sai Baba → Prema Sai Baba (future incarnation) He said Prema Sai would be born in a village in Karnataka. More than a decade after his death: No verified incarnation has appeared Many false claimants were rejected Even his own institutions avoid mentioning it This is another failed prophecy. Sexual abuse & other serious allegations Several former male devotees accused him of sexual abuse, saying he used spiritual authority to exploit them. Documentaries, testimonies and investigative journalists reported these claims.Although Sai Baba was never legally convicted, the number, consistency and seriousness of the allegations cannot be ignored. There was also: A mysterious shooting incident in his ashram in 1993 Secretive financial management Political protection at the highest level No open independent investigation His inner circle remained closed, powerful and untouchable. Then why do rich people and diaspora still celebrate him (even his 100th birthday)? This is a psychological and sociological phenomenon: Emotional attachment and nostalgia Cultural identity for diaspora Social status by association Donation networks & influence Fear to question old beliefs Community pressure Investment of reputation over decades For many, it is no longer about truth — It is about identity, memory and belonging. Proof FOR and AGAINST For Sai Baba Hospitals & universities Charity projects Millions of followers Devotional experiences Humanitarian works Against Sai Baba Failed death prediction Exposed magic tricks Sexual abuse allegations No scientific proof Financial secrecy Important distinction: A person can do charity — yet not be divine. Hospitals do not prove godhood. Final balanced conclusion Sathya Sai Baba was: A powerful communicator A master of psychology A builder of institutions A symbol of faith A source of both comfort and controversy But he failed: To prove his divinity scientifically To fulfil his own prophecies To answer serious accusations To escape death like an ordinary human History will remember him not as a proven God, but as one of the most mysterious and disputed figures of modern India. True spiritual greatness does not need miracles. It needs truth, transparency and accountability. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1918 [சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON https://www.facebook.com/groups/978753388866632/posts/32561918190123407/?
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 51 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 51 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மலர்களை ஒவ்வொன்றாக வீச வீச, பூமியதிர்ச்சிகள் அதற்கு ஏற்றவாறு, ஒன்றன் பின் ஒன்றாக நடக்குமா?' மகிந்த தேரர், அந்த முதல் சந்திப்பிலேயே, அரசனையும் அவரது நாற்பதாயிரம் படை வீரர்களையும் புத்த மதத்திற்கு மாற்றினார் என்கிறது இலங்கை நாளாகமம்கள். எவரும் தனது மதத்தை ஒரேயடியாக விட்டுவிட மாட்டார்கள். மத மாற்றம் பொதுவாக ஒரு பிரசங்கத்திற்குப் பிறகு உடனடியாக நடக்காது. பொதுவாக சமூகத்தின் ஒரு சிறு பகுதியைக் கூட மாற்றுவதற்கு வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன. இரண்டாவது மகிந்த தேரர் வட இந்தியாவில் இருந்து வருகிறார். அவரின் மொழி வேறு, எனவே உடனடியாக முறையான பிரசங்கம், முக்கியமாக பொதுவான படைவீரர்களுக்கு, எப்படி செய்தார்? எப்படி அதை முழுமையாக எல்லோரும் கேட்டார்கள்? மூன்றாவது, நாற்பதாயிரம் படை வீரர்களுடன், காட்டிற்குள் வேடடையாட மன்னன் போவது மிக மிக சந்தேகமே, ஏனென்றால், அவர் மிருகங்களுடன் போர்புரிய கட்டாயம் போயிருக்க மாட்டார்? எனினும் தீபவம்சம் 12- 58 யை பார்க்கவும். [12- 58. When they had heard that most excellent (portion of the) Doctrine, these forty thousand men took their refuge (with Buddha), like a wise man in whose mind faith has arisen. / அந்தச் சிறந்த கோட்பாட்டைக் கேட்டவுடன், மனதில் நம்பிக்கை எழுந்த ஞானியைப் போல, இந்த நாற்பதாயிரம் மனிதர்கள் (புத்தரிடம்) உடன் தஞ்சம் புகுந்தனர்.] புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்து, இயக்கர்களையும் நாகர்களையும் அடக்குவதற்காக, பயமுறுத்துவதற்காக அற்புதங்களைச் செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது. அவரது சக்தியை நிரூபிக்க பூகம்பங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட சில இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் செய்தார். அதேபோல, மகிந்த தேரரும் பூகம்பங்கள் உட்பட பௌத்தத்தின் சக்தியை வெளிப்படுத்த அற்புதச் செயல்களை நிகழ்த்தியதாகவும் மகாவம்சம் கூறுகிறது. தீபவம்சத்திலும், புத்தர் இலங்கைக்கு சென்றதாகக் கூறப்படும் முதல் இரண்டு பயணங்களில் பயன்படுத்திய அதே பயங்கரவாதத் தந்திரங்களை, பயன்படுத்துவதைக் காண்கிறோம். இங்கு, மகிந்த தேரர் பூக்களை வீசிக் கொண்டிருக்கும் பொழுது, ஒவ்வொரு வீசுதலுக்குப் பிறகும் நிலநடுக்கம் உடனடியாக ஏற்பட்டதைக் காண்கிறோம். தயவுசெய்து 13- 39, 43, 47 & 52 ஐப் பார்க்கவும். [39. தேரர் மலர்களை எடுத்து ஓரிடத்தில் எறிந்தார்; பின்னர் பூமி மீண்டும் அதிர்ந்தது; இது இரண்டாவது நிலநடுக்கம். 43. ராஜா, இன்னும் மகிழ்ச்சியடைந்து, தேரருக்கு மலர்களை வழங்கினார்; தேரர் பூக்களை ஏற்றுக்கொண்டு வேறொரு இடத்தில் எறிந்தார்; பின்னர் பூமி மீண்டும் அதிர்ந்தது; இது மூன்றாவது நிலநடுக்கம். 47. தேரர் பூக்களை ஏற்றுக்கொண்டு வேறொரு இடத்தில் எறிந்தார். அப்போது பூமி மீண்டும் அதிர்ந்தது. இது நான்காவது நிலநடுக்கம். 52. தேரர் பூக்களை ஏற்று தரையில் எறிந்தார்; அந்த நேரத்தில் பூமி அதிர்ந்தது; இது ஐந்தாவது நிலநடுக்கம்.] பூமியதிர்ச்சிகள் கணிக்கக்கூடிய வகையில் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதில்லை; இது மிகப்பெரிய அளவிலான ஆற்றல் வெளியீட்டை உள்ளடக்கிய மிகவும் சீரற்ற நிகழ்வாகும். பூகம்பத்தை எதிர்க்கும் கட்டமைப்புகளை வடிவமைப்பவர்கள் இதை நம்ப மாட்டார்கள். இது பௌத்தத்தை இழிவுபடுத்தும் நோக்கமல்ல, நாளிதழ்களின் ஆசிரியர்களின் தவறான நாடகத்தை அம்பலப்படுத்துவதாகும். வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவில் சில இடங்கள் நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு, இதன் நினைவு, அவர்களின் கற்பனையில் தாண்டவம் ஆடி, மகிந்தவின் அற்புதமாக இங்கு சோடிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை! இலங்கையில் பயங்கரவாத இயக்கம், அதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் தடை வித்திப்பது வழமை. பூர்வீக குடிகளை பயமுறுத்துவது, வேறு இடத்துக்கு கட்டாயப்படுத்தி அனுப்புவது, அவர்கள் வாழ்ந்த இடத்தை தன் கொள்கை பரப்ப கையகப்படுத்துவது ... இப்படியான செயல்கள் பயங்கரவாதம் இல்லையா? அப்படி என்றால், தடைகள் எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்? நீங்களே சொல்லுங்கள். வரலாற்று ரீதியாக, இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல பாறை மற்றும் தூண் ஆணைகள் [rock and pillar edicts] கண்டு பிடிக்கப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸ்செப் (James Prinsep) (20 ஆகஸ்டு 1799 – 22 ஏப்ரல் 1840) என்பவர், ஆங்கிலேயே மொழி மற்றும் கீழ்திசை இயல் மற்றும் தொல்பொருள் அறிஞரும் ஆவார். பண்டைய இந்தியாவில் புழக்கத்தில் இருந்த கரோஷ்டி எழுத்து முறை மற்றும் பிராமி எழுத்து முறை கல்வெட்டுக்களை படிப்பதில் தேர்ச்சி பெற்ற றவரும் ஆவார். இவர் இந்த கட்டளைகளைப் புரிந்து கொள்ள முயன்றார். அப்பொழுது, அங்கே 'தேவநம்பியா' மற்றும் 'பியதாசி' [Devanampiya and Piyadasi] என்ற பெயர்களைக் கண்டார். அந்த நேரத்தில், பிரின்செப் இலங்கை அரசு ஊழியர் ஜோர்ஜ் டேனருடன் [Ceylon Civil Servant George Turnour] தொடர்பில் இருந்தார். இவர் தான், அந்த நேரத்தில், 1837 இல், இலங்கை வரலாற்றைக் கொண்ட மகாவம்சத்தை, மொழிபெயர்த்தவர் ஆவார். ஜேம்ஸ் பிரின்ஸ்செப், ஜோர்ஜ் டேனரில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், பெயர்கள் சற்றே ஒத்ததாக இருந்ததால், இந்த ஆணைகள் இலங்கை மன்னன் தேவனம்பிய திஸ்ஸாவின் படைப்புகள் என்று முதலில் நினைத்தார். என்றாலும் ஆழ்ந்து ஆராய்ந்து, தீபவம்சத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் அடிப்படையில் அசோகர் உண்மையில் தேவநாம்பிய பியதாசி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். தொலைந்து போன அல்லது வேண்டுமென்றே மறக்கப்பட்ட பௌத்த பேரரசர் அசோகர் இருபத்தி இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படித்தான் கண்டுபிடிக்கப் பட்டார். அசோகன் பெரும்பாலும் தனது உண்மையான பெயரை குறைந்த பட்சம் பெரும்பாலான ஆணைகளில் பயன்படுத்தியதில்லை. ஆனால், 1915 இல் மஸ்கி-ஹைதராபாத்தில் [Maski-Hyderabad] ஒரு அரசாணை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அந்த ஆணையை எழுதியவரின் பெயர் தேவனாபியச அசோகசா [Devanapiyasa Ashokasa] என்று வழங்கப்பட்டது. இது பௌத்த பேரரசர் அசோகரின்ஆணைகள் தான் அவை எல்லாம் என்று நம்பிக்கையாக உறுதியாக நிருபித்தது. Part: 51 / Appendix – Dipavamsa / 'Will Earth quakes happen one after another in a predictable manner; After each throw of the flowers?' Mahinda Thera converted the king and his forty thousand troops to Buddhism. It is quite unbelievable as no one easily forsakes his religion at once and do not adopt a new religion on the fly. Religious conversion usually does not happen immediately after a sermon. Usually coercion, inducement, authoritarian measures, and continuous exertions are required to convert even a minor portion of the community. Mahinda Thera preached first, 12-8, about the consequences of former deeds, which terrified and frightened the people; used the same terror tactics as used by the Buddha in his alleged first two visits to Lanka. Mahinda Thera was throwing flowers and there were earthquakes after each throw. Earthquakes never happen one after another in a predictable manner; it is a very random event involving colossal amount of energy. Those who design earthquake resistant structures would not believe these. It is not the intention to denigrate Buddhism, but to expose the foul play by the authors of the chronicles. Certain places in North India and North Western India are earthquake prone, and this is the memory legacy of that. Many rock and pillar edicts were discovered in the early part of the eighteenth century in India. James Prinsep was trying to decipher the edicts and came across the names Devanampiya and Piyadasi. Prinsep was in contact with the Ceylon Civil Servant George Turnour who around that time, in 1837, translated the Ceylon chronicle Mahavamsa. Prinsep, based on the information that came from Turnour, first thought the edicts were the work of the Lankan king Devanampyatissa as the names sounded somewhat similar. Delving deep, they found Asoka was indeed Devanampiya Piyadasi based on the chapter 6 of the Dipavamsa. This was how the lost or intentionally forgotten Buddhist Emperor Asoka was discovered after more than twenty-two centuries. Asoka mostly never used his real name on the edicts, at least in most of the edicts. An edict was found in Maski-Hyderabad in 1915 on which the name of the author of that Edict was given as Devanapiyasa Ashokasa. This conclusively proved the bona fide of the Buddhist Emperor Asoka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 52 தொடரும் / Will follow துளி/DROP: 1917 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 51] https://www.facebook.com/groups/978753388866632/posts/32558902903758269/?
  9. கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03] / In English & Tamil அந்த இரவு மிக வித்தியாசமாக அமைதியாக இருந்தது. பீரங்கி சத்தமில்லை. பறவைகள் மிருகங்கள் கத்தும் சத்தமில்லை. கடலின் மெதுவான மூச்சுக் குரலும், காற்றில் சாயும் கிளைகளின் நடுங்கும் சத்தமுமே கேட்டன. அவள் அவன் சட்டையைப் பற்றிக் கொண்டாள். “கவின்... கேள். இதை உடனடியாக எழுதி வை...” என்றாள். அவன் அங்கே நிலத்தில் இருந்த ஒரு பிஸ்கட் பெட்டியிலிருந்து ஒரு அட்டையைக் கிழித்தான். எரிந்த ஒரு மரக்கிளை குச்சியை எழுது கோலாகப் பாவித்து, அவள் கிசுகிசுத்தபடி அவன் எழுதத் தொடங்கினான். அவனது கைகள் சாம்பலால் நிறைந்திருந்தன. சட்டையின் கைப்பகுதி கிழிந்திருந்தது. ஆனால் அவன் எழுத்து மட்டும் இன்னும் நேர்த்தியாக, மென்மையாக இருந்தது **“நான் இறந்தால்... நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று உலகிற்குச் சொல்லுங்கள். நாங்கள் மனிதர்கள். எங்களுக்கு கனவுகள் இருந்தன. எங்களுக்கு பெயர்கள் இருந்தன. எங்களுக்கு அன்பு இருந்தது. நான் குண்டுகளுக்கு அடியில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள்... அவர்கள் இந்த சூழலிலும் சிரித்துக்கொண்டு தான் இருந்தார்கள் . இருட்டில் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தீர்கள், ஆனால் நான் பயப்படவில்லை. அங்கு ஒரு கட்டுப்பாடு ஒழுங்கு எந்த நிலையிலும் இருந்தது என்று சொல்லுங்கள் ... முள்ளிவாய்க்கால் மரண இடம் அல்ல என்று அவர்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் உண்மையாக மாறிய இடம் அதுதான்.”** அவள் உதடுகள் நடுங்கின. அவள் இறுதி மூச்சு ஒரு கிசுகிசுப்பாக இருந்தது: "எங்கள் இருவருக்காகவும் நீ வாழ வேண்டும்." அந்த இறுதி வார்த்தையுடன் அவள் கை சோர்ந்து விழுந்தது ... அவள் கண்கள் உறைந்தன - ஆனால் இன்னும் திறந்திருந்தன, அவள் ஒருபோதும் பார்க்காத எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருந்தன. அவள் இறந்ததைக் கண்டு ,கவின் சத்தமாக கத்தவில்லை. அந்த ஒலி காற்றை கிழிக்கவில்லை ஆனால் அவன் ஆன்மாவைக் கிழித்து சென்றது. கடிதம் எழுதப்பட்டது — அவளுக்காக. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒன்று சொன்னது: இந்தக் கடிதம் இன்று வாசிக்கப்படுவதற்கல்ல … நாளைக்காக … என்றாலும் கடல் காற்று அந்தக் காகிதத்தின் ஓரத்தைத் தூக்கியபடி, வார்த்தைகளைப் படிக்க முயல்வதைப்போல் அசைந்தது. அவன் கடிதத்தை மெதுவாக மடித்து கவனமாக தன் கால்சட்டை சட்டைப்பைக்குள் வைத்தான் — ஒரு வாழ்க்கைப் பக்கம் மூடப்படுவது போல… இறுதி தாக்குதல் முடிந்த போது, மாதங்களாக அழுத வானம் திடீரென மௌனமானது, துப்பாக்கிகளும் குண்டுகளும் அசாதாரண அமைதியில் உறைந்தது, கவின் இன்னும் காயங்களுடன் இருந்தாலும் உயிருடன் இருந்தான். அவனைச் சுற்றி உடல்கள் கிடந்தன — சில அறிந்த முகங்கள், பல தெரியாத மனிதர்கள். உயிருடன் இருந்தவர்கள் நிழல்கள் போல நடுங்கிக் கொண்டு, குண்டுகளால் எரிந்தும் உணவு இன்மையால் தளர்ந்தும் இருந்தார்கள், அவர்கள் இராணுவத்தினரால் கூட்டமாக இழுத்துச் செல்லப்பட்டனர். சில காயங்களுக்கு துணி கட்டப்பட்டது; பல காயங்கள் புறக்கணிக்கப்பட்டன. பலர் கருகிய மணலோடு மங்கிப் போயினர். ஆனால் கவினின் இறுகப் பிடித்த கைக்குள், இரத்தமும் மண்ணும் படிந்த விரல்களுக்கு நடுவே, ஒரு சிறிய கிழிந்த மட்டைத் துண்டு இருந்தது. அதன் ஓரங்கள் கருகியிருந்தன; எழுத்துக்கள் மங்கியிருந்தன; ஆனாலும் அது புனிதமான உண்மை — ஈஸ்வர்யாவின் இறுதி உண்மை. மேலும் ஐக்கிய நாடுகள் சபை (2011 நிபுணர் குழு அறிக்கை): "நம்பகமான ஆதாரங்கள் 40,000 பொதுமக்கள் வரை இறந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன" என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை (உள் மதிப்பாய்வு குழு 2012): பின்னர் வந்த ஒரு உள் அறிக்கையின் படி , இந்த எண்ணிக்கை குறைந்தது 70,000 பேர் கணக்கில் வராதவர்கள் என்று கூறியது. அதேநேரம் உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு: உள்ளூர் அரசு மற்றும் உலக வங்கி மக்கள்தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்களின் படி, போருக்குப் பிறகு மோதல் பகுதிகளில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கணக்கில் வராதவர்கள் என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. 2009 மே 18 அன்று கொழும்பில் கொண்டாட்டங்கள் நடந்தன; பட்டாசு, முழக்கம், கொடிகள் — “வெற்றி தினம்” என்று அதை அழைத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் அந்த “வெற்றி” சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை — ஆண், பெண், குழந்தை, முதியோர் — இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களுக்குள் அடைத்த நாடாகவே இருந்தது. அவற்றுள் மிகப்பெரியது மெனிக் பாம்; முள்ளுக் கம்பிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஆயுதம் தூக்கி நிற்கும் சிப்பாய்கள், உணவே கைப்பிடி அளவு, நம்பிக்கை ஒரு மௌன கிசுகிசுப்பாக மட்டுமே இருந்தது. அங்கு கவின் ஒரு பெயர் அல்ல; ஒரு எண் மட்டுமே! 2009 டிசம்பரில் சில கம்பிகள் திறந்தன, 2012-ல் கடைசி முகாம்களும் மூடப்பட்டன; அவன் விடுவிக்கப்பட்ட கடைசி ஆண்களில் ஒருவன் — அவன் ஆபத்தானவன் என்பதாலோ அல்ல, நேரடி சாட்சியாக உண்மையைச் சுமந்தவன் என்பதாலே, இந்தக் கெடுபிடி! பிறகு ஒரு எதிர்பாராத அதிசயம் நடந்தது: லண்டனில் இருந்த அவனுடைய பழைய பேராசிரியர் அவனை நினைவுகூர்ந்தார்; அவனின் பொறியியல் கல்வியின் திறமை அவரின் மனதில் இன்னும் இருந்தது. அவர் தான் இப்ப கற்பிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் அவனுக்கு ஒரு இடம், ஒரு கல்வியுதவியுடன், ஒரு ஆண்டு விலக்குடன் பெற்றுக் கொடுத்தார். கவினுக்கு அது ஒரு தற்காலிக மீட்ப்பாக இருந்தது. கவின் எந்தச் சாமானும் எடுத்துச் செல்லவில்லை; புகைப்படம் இல்லை; நினைவுப் பொருட்கள் இல்லை. அவனுடன் இருந்தது அந்தக் கிழிந்த காகிதத் துண்டு மட்டும் — அந்த உண்மை மட்டும்! நாளடைவில், லண்டனில் பகலில் சிவில் இன்ஜினியரிங் படித்து, இரவில் மனித உரிமைகள் குறித்து பேசும் குரலாக மாறினான். பல்கலைக்கழக அரங்கங்களிலும், நினைவேந்தல் கூட்டங்களிலும் அவன் முள்ளிவாய்க்காலைப் பற்றிப் பேசினான். அந்தச் சிறு மட்டையை உயர்த்தி, “இது ஈஸ்வர்யாவின் கடைசி கடிதம். இது முள்ளிவாய்க்காலின் உண்மை. குரல் இல்லாதவர்களின் குரல் இது” என்று கூற என்றும் தவறவில்லை. சிலர் அழுதார்கள், சிலர் உறைந்தனர், சிலர் வெளியேறினர் — ஆனால் கவின் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே 18 மற்றும் நவம்பர் 27 அன்று அவன் இரண்டு தீபங்கள் ஏற்றினான்: ஒன்று அவளுக்காக, ஒன்று அவள் காப்பாற்றிய குழந்தைகளுக்காக. அவன் திருமணம் செய்யவில்லை. போரில் எரிந்த காதல் அவனுக்குள் இன்னும் அணையாத தீபமாக எரிந்துகொண்டிருந்தது. 2025-ஆம் ஆண்டு, பல ஆண்டுகளாக எடுத்துச் சென்ற சாட்சியத்துக்கும் போராட்டத்துக்கும் பிறகு, கவின் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினான். முள்ளிவாய்க்கால் கரையில் நின்றபோது, அலைகள் ஆவிகளின் குரல்கள் போல மெதுவாகக் கிசுகிசுத்தன. அவன் ஈஸ்வர்யாவின் கடைசிக் கடிதத்தை ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் வைத்து, ஒரு இளம் பனையடியின் அடியில் புதைக்கிறபோது, அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. அவன் மிகவும் மெதுவாக “இப்போது நீ வீட்டுக்குத் திரும்பிவிட்டாய்” என்று சத்தமில்லாமல் உரைத்தான். காற்று, அவள் பதில் சொல்வது போல, இலைகளை அன்போடும் பரிச்சயமான தொடுதலோடும் அசைத்தது. என்றும் கரையை நோக்கி திரும்பும் அந்தக் கடல், அவர்களுடைய காதலும் வலியும் நிறைந்த கதையை, காலம் கொண்டாடும் நித்தியத்துக்குள் [அழியாமைமைக்குள்] எடுத்துச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03 That night was strangely quiet. There was no cannon fire. There was no sound of birds or animals screaming. All that could be heard was the gentle breathing of the sea and the trembling sound of branches swaying in the wind. She clutched his shirt. “Kavin… listen. Write this down…” she said. He tore a piece of cardboard from a biscuit box, that was on the ground there.Using a burnt twig as a writing utensil, he began to write as she whispered.His hands were covered in ashes. The sleeves of his shirt were torn. But his handwriting was still neat and smooth. **“If I die… tell the world we were not terrorists. We were people. We had dreams. We had names. We had love. Tell them I taught children under bombs… and they still smiled. Tell them you held my hand in the dark… and I was not afraid. Tell them Mullivaikkal is not a place of death. It is where we all became truth.”** Her lips trembled. Her final breath was a whisper: “Live… for both of us.” Her hand fell. Her eyes froze — still open, still searching for a future she would never see. Kavin did not scream loudly. The sound tore through his soul instead of the air. When the final assault ended, when the sky fell silent after months of screaming, when the last echoes of artillery faded into an unnatural stillness — Kavin was still alive. Bodies surrounded him — some known, many unknown. The living were herded like shadows: trembling, burnt, broken. Wounds were wrapped or ignored. Names were lost in ash. But in his clenched fist, beneath blood and grime, he held something sacred: A torn piece of cardboard. Burnt edges. Fading words. Yet holy. It was her truth. May 18, 2009 In Colombo, the capital erupted in celebration. Drums pounded. Flags waved. Fireworks split the sky. “Victory Day,” they called it. But in Mullivaikkal, victory looked like this: Nearly 300,000 Tamil civilians were rounded up — men, women, children, the elderly — and confined in military-guarded detention camps. The largest was Menik Farm, surrounded by barbed wire, watchtowers, armed soldiers, and silence. No movement. No voices. Food in handfuls. Hope in whispers. Kavin became a number. A body to be inspected. A truth to be feared. By December 2009, some gates opened. By 2012, the last camps closed. He was one of the final men released — not because he was dangerous, but because truth was. An unexpected miracle followed. From his forgotten past, a professor in London had remembered him. A place awaited him. A scholarship. One year exemption. It was not just admission — it was a lifeline. He carried no suitcase. No photographs. Only that piece of cardboard. Only that truth. In London, by day he studied Civil Engineering. By night, he became a voice. University halls. Human-rights forums. Memorial gatherings. He spoke of Mullivaikkal. And he held up the cardboard and said: “This is Ishwarya’s last letter. This is Mullivaikkal’s truth. This is the voice of the voiceless.” Some cried. Some froze. Some walked out. But he never stopped. Every year, on May 18 and November 27, he lit two lamps: One for her. One for the children she saved. He never married. The love burned in war continued to burn within him — like an undying flame. In 2025, after years of advocacy, Kavin returned to Sri Lanka. He stood at Mullivaikkal shore, where the waves whispered like ghosts. He placed Ishwarya’s letter in a small glass box and buried it beneath a young palmyrah sapling. He whispered: “Now you are home.” The wind rustled the leaves — soft, familiar, loving. As if she answered. And the sea, endlessly returning to the shore, carried their story towards eternity. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Ended துளி/DROP: 1915 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03] https://www.facebook.com/groups/978753388866632/posts/32553773044271255/?
  10. மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்கட்டும்! 🌸 தாத்தா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🎂 Happy 12th Birthday, Arunan! Born as dawn lit London skies, A spark of joy in gentle eyes. Years have flown, yet bright you stay, A shining star in life’s ballet. From Jaffna roots your story grew, Through England’s dreams, life shaped anew. Now Swiss hills echo your name, In two sweet tongues, you play the same. A mind that learns, a heart so kind, With light of wisdom intertwined. Let courage lead, let laughter flow, Let love and kindness ever grow. Dear Arunan, twelve years today, May sunshine light your every way. With sister Anikka by your side, May life forever bloom with pride! 💫🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Joyeux 12ᵉ Anniversaire, Arunan ! Né à l’aube sous le ciel de Londres, Une étincelle de joie dans tes yeux tendres. Les années passent, tu brilles toujours, Étoile rayonnante des plus beaux jours. Des racines de Jaffna ton histoire s’élève, Par les rêves d’Angleterre, ta vie s’achève. Maintenant les collines suisses murmurent ton nom, En deux douces langues, tu fais ton son. Un esprit curieux, un cœur sincère, La lumière du savoir t’éclaire. Que le courage te guide, que le rire t’entoure, Et que l’amour grandisse chaque jour. Cher Arunan, douze ans aujourd’hui, Que le soleil éclaire tes nuits et tes vies. Avec ta sœur Anikka à tes côtés, Que la fierté et la joie soient à jamais partagées ! 🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! https://www.facebook.com/groups/978753388866632/posts/32547543381560888/?
  11. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 50 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இயக்கர்கள் பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரா?' டாக்டர் சுவாமிநாத ஐயரின் [உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் / Mahamahopadhyaya Dr V. Swaminatha Aiyar] கூற்றுப்படி, பாரம்பரியமாக சைன நெறி என்று அறியப்படும், ஒரு பண்டைய இந்திய சமயமான, சைனம் (Jainism) மதத்தில், 24 தீர்த்தங்கரர்களில் (ஆன்மீக ஆசிரியர்கள் அல்லது துறவிகள்) ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இயக்கர் (யக்கா மற்றும் யாக்கினி என்று அழைக்கப்படுபவர்கள்) இருந்தனர் என்று அறியப்படுகிறது. கேப் கொமோரின் (Cape Comorin / இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரியை ஆங்கிலத்தில் cape comorin என்பர்) அருகே சில இடங்களில் யாக்கி அல்லது யக்ஸி க்குப் பதிலாக, இன்று அது 'இசக்கி' என்று அழைக்கப்படுகிறது. சமண சமய சாத்திரங்கள் 24 யட்சினிகள் குறித்து பேசுகிறது. இந்த யட்சினிகள் சமணர் கோயில்களில் காணப்படுகிறது. மேலும் 'யக்ஷி ' என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக இன்று மாறிவிட்டது. பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரில் இயக்கர்கள் ஒருவராக இருந்ததாகவும், கிறிஸ்தவ சகாப்தம் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்பே அவர்கள் அழிந்து விட்டதாகவும் இராமாயணம், மகாவம்சம் மற்றும் புராணங்களில் இருந்து நாம் அறிகிறோம். மேலும் 'இசக்கிமுத்து' என்பது தமிழ்நாட்டில் மிகவும் பொதுவான பெண் பெயர் ஆகவும், இயக்கச்சி என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயராகவும் உள்ளதைக் கவனிக்கவும். மேலும் மகாவம்சத்தின் 10 ஆம் அத்தியாயத்தின் 86 முதல் 88 வரையுள்ள வசனங்களைப் பார்க்கவும் [கடந்த காலத்தில் மன்னன் பண்டுகாபயனுக்கு உதவிய அடிமைப் பெண் ஒரு யாக்கினியாக மீண்டும் பிறந்தார். நன்றியுள்ள மன்னன் நகரத்தின் தெற்கு வாசலில் அவளைக் குடியேற்றினார். அரச அரண்மனைக்குள்ளும் அவர் யாக்கினியை பெண்குதிரை வடிவில் வைத்திருந்தார். ஆண்டுதோறும் அவர் அவர்களுக்கும் மற்ற இயக்கர்களுக்கும் பலியிடுதல்களைச் செய்து வந்தார்; ஆனால் திருவிழா நாட்களில் அவர் யக்கா சித்தராஜனுடன் [yakkha Cittaraja] சமமான உயரத்தில் அமர்ந்திருந்தார். மேலும் அவர்களுக்கு முன்பாக தெய்வங்களும் மனிதர்களும் நடனமாடின.] அங்கு யக்கா சித்தராஜா மன்னன் பாண்டுகாபயனுக்கு இணையாக அமர்ந்திருந்தார். அதாவது இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாகத் தெரிகிறது. மேலும் மன்னன் இந்த கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி அடைந்ததுடன், அவர் தெய்வீக மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயக்கர்களுக்கும் மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தார் என்றும் தெரியவருகிறது. ஆனால் ஒன்றை மீண்டும் நினைவு படுத்துங்கள். இந்த இயக்கர்களைத்தான், விஜயன் இலங்கைக்கு வரும் முன், புத்த சமயம் அங்கு வாழவென, முற்றாக இலங்கையில் இருந்து தீபவம்ச, மகாவம்ச புத்தர் வெருட்டி அகற்றினார்? Part: 50 / Appendix – Dipavamsa / 'Is Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon?; Quote: ‘Yaksi devata. Dr. Swaminatha Aiyar in a note informs us that in the Jaina books, every one of the twenty four Tirthankaras [a saviour and supreme preacher of the dharma (righteous path)] was served by a Yakka and a Yakkini. This name is current as Issaki in places round about Cape Comorin. we know from history and legends as testified to Ramayana and Mahavamsa that Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon, and died out some time before the commencement of the Christian era’. Unquote It may also be added that Issakimuttu is a very common female name in Tamil Nadu. Iyakkachchi is the name of a place in the Kilinochchi District of the Northern Province of Sri Lanka. Also see the verses 86 to 88 of the chapter 10 of the Mahavamsa [The slave-woman who had helped him in time past and was re-born of a yakkhini, the thankful (king) settled at the south gate of the City. Within the royal precincts he housed the yakkhini in the form of a mare. Year by year he had sacrificial offerings made to them and to other (yakkhas); but on festival-days he sat with the yakkha Cittaraja beside him on a seat of equal height, and having gods and men to dance before him, the king took his pleasure, in joyous and merry wise.] to see how the Yakkha Cittaraja was treated by the king Pandukabhaya. Yakkha Cittaraja was seated on par with the king Pandukabhaya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 51 தொடரும் / Will follow துளி/DROP: 1916 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50] https://www.facebook.com/groups/978753388866632/posts/32546205285028031/?
  12. கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 02 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02 நாள்ப்பட நாள்ப்பட பொதுமக்கள் வாழும் வன்னி மற்றும் முல்லைத்தீவு நிலம் மெதுவாகச் சுருங்கியது. குடும்பங்கள் ஒரு பதுங்கு குழியிலிருந்து இன்னொரு பதுங்கு குழிக்கு ஓடினர். அதனால் அவர்களின் உலகமும் மேலும் பின்னிப் பிணைந்து, நெருக்கமாக, இறுக்கமாகச் சுருங்கியது. அந்த அவலத்திலும், கவின் தற்காலிக தங்குமிடங்களை சரிசெய்து ஓரளவு வசதியாக அமைத்தான். ஐஸ்வர்யா கிழிந்த கூடாரங்களின் கீழ் குழந்தைகளை மகிழ்வாக வைத்திருக்க ஆடிப்பாடி கற்பித்தாள். அவன் அவளுக்கு தப்பித்தவறி இருக்கும் புத்தகங்களையும் பென்சில்களையும், தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தான். பீரங்கித் தாக்குதல்களுக்கு இடையில், நடப்பது என்னவென்று பெரிதாக தெரியாமல், எப்படியோ இன்னும் மகிழ்வாக இருக்கும் குழந்தைகள் இடமிருந்து சேகரிக்கப் பட்ட கதைகளை, அவள் அவனுடன் பகிர்ந்தாள். அது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கத் தவறவில்லை. பீரங்கிச் சத்தங்களுக்கும், நீருக்கான மற்றும் கஞ்சிக்கான வரிசைகளுக்கும் இடையில் – அவர்கள் நட்பு … மெளனமாக ஆழமடைந்தது. ஒரு இரவு, விண்மீன்கள் கூட நொறுங்கியது போல பகுதியாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதன் கீழ், அவன் முறிந்த மரத்தின் அடியில் இருந்தவாறு, “நீ பயப்படுகிறாயா?” என்று அவளைக் கேட்டான். “ஒவ்வொரு நிமிடமும்.” என்று அவள் தலை ஆட்டினாள். “அப்புறம் ஏன் சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்று கவின் திருப்பி கேட்டான். ஈஸ்வர்யா அவன் பக்கம் திரும்பினாள். “ஏனென்றால் நான் சிரிக்கவில்லை என்றால், இந்தப் போர் இரண்டு முறை வெல்லும்.” என்றாள். அவன் அவள் விரல்களை மெதுவாகத் தொட்டான். இன்னும் ஒரு மாலை, நந்திக்கடல் காயலில் [lagoon] அவள் கேட்டாள்: “கவின்… இந்தப் போர் முடிந்தால்… நீ என்ன செய்வாய்?” “வீடுகள் கட்டுவேன்.” “யாருக்காக?” “நீ கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்.” அவள் வெட்கத்தால் கண்களைத் தாழ்த்தினாள். அந்த நொடியிலேயே ஒரு அமைதியான காதல் மலர்ந்தது. ஆனால் அவர்கள், இந்த அவலச் சூழ்நிலையில், அதை ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஈவிரக்கம் இன்றி பரவலான துன்பம் அல்லது வன்முறையால் ஆதிக்கம் செலுத்தும் போர் சூழலில், அன்பின் மென்மையான, மிகவும் நுணுக்கமான காதல் எனும் மொழியை நினைத்துப் பார்க்க அல்லது வெளிப்படுத்த முடியாது என்பது இருவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே காதலை தங்களுக்குள்ளேயே புதைத்து விட்டார்கள். 2009 ஜனவரி அளவில் முள்ளிவாய்க்காலை நோக்கி மனிதப் பெருக்கு ஓடியது. மருத்துவமனை ஒன்றும் அங்கு ஓரளவாவது மருத்துவமனையாகக் கருதப்படும் நிலையில் இல்லை .. ஜன்னல்கள் நொறுங்கின ... படுக்கைகள் புரண்டன ... மருந்துகள் — பணம் போல மாறின. ஆனாலும் ஈஸ்வர்யா காயமடைந்தவர்களின் நடுவே ஒளி போல அசைந்தாள். ஒரு காயமடைந்த சிறுவன் அவளது கரத்தைப் பற்றினான். “அக்கா… நான் சாகுவேனா?” அவள் அவன் கன்னத்தில் விரல்கள் வைத்துச் சொன்னாள்: “இல்லை கண்ணா… இன்று எம தூதர்களுக்கு நேரமில்லை. உன்னை அழைத்துச் செல்ல அவர்களால் முடியாது. ஏனென்றால் ஈவிரக்கம் அற்ற படைகள், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் ஆயுதங்களையும் கண்மூடித்தனமாக பாவிக்கிறார்கள்” கவின் அப்பொழுது உடைந்த கதவின் வழியே அதைப் பார்த்தான். “நீ ஒரு சிப்பாயைவிடவும் வலிமையானவள்,” என்றான். அவள் மெதுவாகச் சிரித்தாள். “இல்லை … நான் இறப்பைவிட அதிகப் பிடிவாதம் கொண்டவள்.” என்றாள். ஒவ்வொரு காலையும் அவன் அவளைத் தேடினான். ஒவ்வொரு மதியமும் அவள் அவனைத் தேடினாள். அவர்கள் பிஸ்கட்டுகளையும் கனவுகளையும் பயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். ஒருநாள், பயங்கர குண்டுவீச்சின் போது, இருவரும் ஒரே பங்கரில் மறைந்து இருந்தார்கள். முழு இருளின் நடுவே அவளது கைகள் நடுங்கின. அவன் கைகளை பிடித்தான். காதலர்களாக அல்ல - ஆனால் பயம் அவர்களை விழுங்க மறுக்கும் இரண்டு மனிதர்களாக. ஒருவாறு எறிகணை தாக்குதல் தணிந்ததும், அவள் கிசுகிசுத்தாள், "நாங்கள் இறந்தால் ... என்னை உன் அருகில் இறக்கவிடுங்கள்." கவின் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனது மௌனம் ஒரு சத்தியமாக அதை ஏற்றுக் கொண்டது இன்று 2009 மே 14. ... வானமே சிதைந்தது .... முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் மோசமான குண்டு வீச்சு தொடங்கியது .... நிலம் நடுங்கியது .... சுவர்கள் பிளந்தன .... காற்று கூட கத்தியது ... மக்கள் ஓடினார்கள் .... எந்தத் திசையும் பாதுகாப்பில்லை. “ஈஸ்வர்யா!” என்று கவின் குண்டு வெடிப்புகளின் தூசுக்கும் தீயுக்கும் நடுவே கத்தினான் ... .காயல் அல்லது கடற்கழி ரத்தமாக மாறியது .... மக்கள் அலறினர் ... விழுந்தனர் ... காணாமல் போனார்கள். கவினும் ஐஸ்வர்யாவும் ஒரு தார்ப்பாய்க்கு [tarpaulin] அடியில் ஒரு தொகுதி குழந்தைகளை வழிநடத்திக் கொண்டிருந்த போது, ஒரு ஷெல் அருகில் விழுந்து பூமியை பிளந்தது. கவின் தன் தோளில் கடுமையான தீப்புண் வலி ஒன்றை உணர்ந்தான். என்றாலும் அவன் திரும்பி ஐஸ்வர்யாவை பார்த்தான். ஐஸ்வர்யா அங்கு நிற்கும் நிலையில் இருக்கவில்லை. அவள் தரையில் விழுந்து கிடந்தாள், வயிற்றைச் சுற்றி எங்கும் இரத்தம் — ஆனால் இன்னும் சுயநினைவுடன், இன்னும் மூச்சுக்கு போராடிக் கொண்டிருந்தாள். அவன் குனிந்து அவளைத் தூக்கினான். அவள் நடுங்கினாள். ஆனால் இன்னும் சிரித்தாள். “அழாதே … நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் …” என்றாள். உடனடியாக கவனமாக அவன் ஒரு பகுதி இடிந்து விழுந்த பதுங்கு குழிக்குள் [பங்கருக்குள் / bunker] அவளைச் சுமந்து சென்றான். அவளது மூச்சு திணறிக் கொண்டு இருந்தது. அவளது கண்கள் — மெதுவாய் அணைந்துகொண்டிருந்தன. என்றாலும் அவள் உறுதியாக இருந்தாள். நேரம் ஆகி இருள் சூழத் தொடங்க, அவன் அவளை வெளியே தூக்கி வந்து முறிந்த ஒரு பனை மரத்தின் அடியில் உட்கார்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 03 தொடரும் THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02 As the territory shrank, as families fled from one bunker to another, their world also shrank — closer, tighter, more intertwined. Kavin repaired shelters. Ishwarya taught under torn tents. He brought her notebooks and pencils. She brought him stories collected from children who somehow still laughed between artillery blasts. Their friendship grew in stolen moments — between air-raid sirens and endless queues for water. Some nights, they sat beneath broken stars. “Are you afraid?” he asked her once. She nodded. “Every single moment.” “Then why do you keep smiling?” She turned to him. “Because if I don’t smile, this war wins twice.” He gently touched her fingers. Another evening, by the Nandikadal lagoon, she asked, “Kavin… if this war ends… what will you do?” “Build houses.” “For whom?” “For every child you teach.” She lowered her eyes. A quiet bloom of love spread between them. But they never confessed. There was no vocabulary for love in a land where death carried a megaphone. By January 2009, the displaced population flooded towards Mullivaikkal. The hospital was no longer a hospital. Windows shattered. Beds overturned. Medicine became currency. Yet Ishwarya moved among the wounded like light. A wounded child clung to her arm. “Akka, will I die?” She brushed the boy’s hair away from his eyes. “No, my precious. Angels are too busy today. They cannot take you.” Kavin watched her from the doorway. “You’re stronger than any soldier,” he said. She smiled weakly. “No. I’m just more stubborn than death.” Kavin searched for her every morning. She searched for him every lunchtime. They shared biscuits, dreams, and fears. Once, during a heavy aerial bombardment, they hid in the same bunker. In the pitch darkness, her hand trembled. He held it. Not as lovers — but as two humans refusing to let fear consume them. When the shelling subsided, she whispered, “If we die… let me die near you.” Kavin said nothing. His silence was a vow. On May 14, 2009, the army shelled Mullivaikkal with unbearable ferocity. The sky shattered. The ground trembled. Walls split open. People ran in every direction — yet there was no safe direction. “Ishwarya!” he shouted through dust and fire. The lagoon turned red. People screamed, fell, disappeared. Kavin and Ishwarya were guiding a group of children under a tarpaulin when a shell landed nearby, splitting the earth and the world. Kavin felt a burning pain tear through his shoulder. He turned — And Ishwarya was no longer standing. She lay on the ground, blood pooling around her abdomen — still conscious, still fighting for breath. He lifted her. She trembled violently — yet she smiled. “Don’t cry… I’m still here.” He carried her into a partially collapsed bunker. Her breathing was jagged. Her eyes slowly losing focus. But she was determined. As time passed and darkness began to fall, he carried her outside and sat under a broken palm tree. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Chapter 03 Will follow துளி/DROP: 1914 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 02 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/32542349015413658/?
  13. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 49 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 49 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'கடமானின் [elk] வடிவம் எடுப்பது, இதிகாச ராமாயணத்தின் பிரதியா?' தேவநம்பிய திஸ்ஸாவின் ஆட்சி, புகழ்பெற்ற இந்திய மன்னர் அசோகரின் முழுமையான நகல் [copy] என்று நம்புவதற்கு வலுவான நிகழ்தகவு (Probability) உள்ளது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்கள் 12 முதல் 17 வரை முக்கியமாக மத விடயங்களைப் பற்றியும், திஸ்ஸ, மகிந்த தேரர் மற்றும் அசோகா பற்றியும் உள்ளது. இந்த ஆறு அத்தியாயங்களிலும் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தான் முடிசூடி, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தரின் கோட்பாட்டின் சாதாரண மாணவரானார் என்று செய்தியை திஸ்ஸாவுக்கு அசோகர் அனுப்பினார். ஆனால், இது இந்தியாவில் அசோகர் உருவாக்கிய அசோகர் கல்வெட்டு 13 உடன் நேரடியாகவே முரண்படுகிறது. காரணம் பாளி நூலை, பக்தர்களின் மகிழ்வுக்காக மட்டும் தொகுத்த புத்த தேரர்களுக்கு, அப்படி ஒரு கல்வெட்டு இருப்பதோ, அது தங்கள் வஞ்சனைப் பொய்யை ஒரு நாள் வெளிக்கொணரும் என்றோ அன்று தெரிய வாய்ப்பு இருக்கவில்லை. பாவம் தேரர்கள் ! ஆனால் இன்னும் பெரும்பாலான சிங்கள மக்களோ, தேரர்களோ அல்லது அரசோ அதை அப்படியே முழுமையாக நம்பியபடியே, வடக்கு கிழக்கில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்கிறது. சிவத்த கொடி பிடிப்பவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல! அசோகரின் முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கப் போர் நடந்தது; ஆனால் கலிங்கத்தை கைப்பற்றிய உடனேயே, அங்கு நடந்த கொடுமைகளையும் அவலங்களையும் கண்டு, கலங்கி, அசோகர் விசுவாசத்தின் பக்கம் உடனே சாய்ந்தார். ஆனால் இலங்கையில், உள்நாட்டு போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும், அதற்கு ஒரு விசாரணையோ, நீதியோ வழங்காமல், ஏன் ஒரு மன்னிப்புக்கூட கேட்காமல், புத்த பக்தர்கள், குருக்கள் உட்பட இன்னும் புத்தர் சிலையாக வாழ, இடம் அபகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்? என்ன பக்தி! மேலதிக தகவலுக்கு, 13 ம் பாறை ஆணையைப் பார்க்கவும். மகிந்த தேரர் பறந்து இலங்கை வந்தார். [12-36; They flew through the air from Jambudīpa, as the king of swans flies in the air. Having thus risen, the Theras alighted on the best of mountains (Missaka).] அசோகர் மற்றும் தேவியின் மகனான அவர் மனிதனாக இருந்ததால், கட்டாயம் பறக்க இயலாது; மேலும், மகிந்த தேரரும், அவருடன் பறந்து வந்த மற்ற தேரர்களும், ஒரு பெரிய தூரத்திலிருந்து இனி நடக்கப் போகும் விடயங்களைப் பார்க்கும் அல்லது உணரும் திறன் அல்லது எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறன் கொண்டவர்களாகப், தேவநம்பியதிஸ்ஸ, தனது நாற்பதாயிரம் படைவீரர்களுடன் வேட்டையாடப் போவதாக முன்கூட்டியே அறிந்தனர் என்கிறது. [12-28; (They added:) “It is time, venerable sir, let us go to the mountain called Missaka; the king (Devānampiyatissa) is just leaving the town in order to hunt.”] மனிதர்களுக்கான தொலைநோக்குத் திறன் [far-seeing capability] மற்றொரு கட்டுக்கதை. மகிந்த தேரர் தேவநம்பியதிஸ்ஸவைச் சந்திப்பதைத் திட்டமிட்டாலும், அது வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர் இலங்கைக்கு அதற்கு ஏற்றவாறு பறந்து வர திட்டமிட்டார். மகிந்த தேரர் மிஸ்ஸகா மலையில் [mount Missaka / இதை இன்று மிகிந்தலை என்று கருதுகிறார்கள்] பறந்து வந்து, இறங்கிய போது, ஒரு கடவுள் கடமானின் [elk] வடிவம் எடுத்து, தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்கு முன் தோன்றினார். அரசன் உடனடியாக கடமானுக்குப் பின் சென்றான். ஆனால், கடமானின் உருவத்தில் வந்த அந்த இயக்கர், அரசனுக்கு முன் மறைந்தது [12- 46 & 47: The king, seeing the elk, quickly rushed on him and running behind him he came to a place enclosed by hills. There the Yakkha disappeared near the Thera; seeing the Thera sitting there, the king was frightened.] புத்தர் தனது இலங்கை பயணத்தில், தகுதியற்றவர்கள், மனித பிறவியற்றவர்கள் என்று யாரை இலங்கையில் இருந்து துரத்தினாரோ, அதே இயக்கர், இங்கு, இப்போது கடவுளுக்குச் சமமானவர் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்! எனவே, புத்தர், தனது முதல் பறந்து வந்த இலங்கைப் பயணத்தின் போது, கடவுள்களான இயக்கர்களை விரட்டியடித்தார் என்று கருதவேண்டி உள்ளது!! அது தான் பெரும்பாலும் காடையர்கள் மலிந்த இலங்கை போலும்? தீபவம்சத்தின் அத்தியாயம் 1 யும் பார்க்கவும். மேலும், கடமானின் வடிவத்தை எடுப்பது இதிகாச இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரதியாகும் என்று இலகுவாக முடிவெடுக்கலாம். புத்தர் மற்றும் மகிந்த தேரரின் பறக்கும் நிகழ்வுகளும் இதிகாச இராமாயணத்தில் இருந்து எடுத்த திருட்டு போலத்தான் தெரிகிறது? அதாவது பொசென் போயா [Poson, also known as Poson Poya] தினத்தன்று அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்ததாகவும் தேவநம்பிய தீசன் மான் வேட்டைக்குச் சென்ற போது அங்கு சந்தித்ததாகவும் அதன் பின் சிறிது நேரம் நடத்திய போதனையின் மூலமாக பௌத்த மதத்தை தேவநம்பியதீச மன்னனிடம் அறிமுக்கப்படுத்தியதாகவும் மகாவம்சம் கூறுகின்றது. தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தின்படி, சிலப்பதிகாரம் 5. அடைக்கலக் காதை - வசனம் 115 முதல் 124 வரை, இயக்கி ஒரு தெய்வம் எனக் கூறுகிறது. அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி யையையைக் கண்டடி தொழலும் ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி [115 - 124 / சிலப்பதிகாரம் 5. அடைக்கலக் காதை] அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியடிகளைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்; என்று கூறுகிறது. அதாவது இயக்கி - ஒரு பெண் தெய்வம் என்கிறது! ஆகவே, ஒரு விதத்தில் புத்தர் தனது நம்பிக்கைக்குத் தயாராக்க இலங்கையின் பாரம்பரிய தெய்வத்தை விரட்டுகிறார், அதுவும் அவர் ஞானமடைந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு! அப்படி என்றால் அந்த ஞானம் தான் என்ன? நான் இங்கு உண்மையான இந்தியாவில் பிறந்து, அங்கு தருமம் போதித்த புத்தரைச் சொல்லவில்லை, இலங்கையில் இன்று சிலைகள் ஆகிவிட்ட புத்தரை மட்டுமே சொல்கிறேன். Part: 49 / Appendix – Dipavamsa / 'Is the taking the form of an elk is a copy from the Epic Ramayana?' There is a strong probability to believe that the rule of Devanampiya Tissa is a carbon copy of the famous Indian monarch Asoka. It is already elaborated earlier. Chapters 12 to 17 are mainly about religious matters, and about Tissa and Mahinda Thera, and Asoka. No significant of human historical events that took place in Lanka are given in these six chapters. Asoka sent message to Tissa eighteen years after his coronation that he, Asoka, became lay pupil of the doctrine. This is in direct conflict with the Rock Edict 13 made by Asoka in India. Asoka became inclined towards the Faith soon after his conquest of Kalinga. The Kalinga war took place eight years after his coronation; See the Rock Edict 13. Mahinda Thera came to Lanka flying, 12-36; it is impossible for him to fly as he was a human, being the son of Asoka and Devi; both humans. The Theras with Mahinda Thera far-saw that Devanampiyatissa was about to go on hunting with forty thousand soldiers, 12-28; far-seeing capability for humans is another myth. He planned his flying to Lanka accordingly so that Mahinda Thera would have planned but apparently unplanned meeting with Devanampiyatissa. When Mahinda Thera alighted on mount Missaka, a god took the form of an elk and appeared to the king Devanampiyatissa. The king went after the elk, and the elk, the Yakkha, disappeared in front of the king, 12-47. It should be noted that it is indirectly indicated Yakkha is equivalent of god. The Buddha, therefore, chased away the gods, Yakkhas, on his first flying visit to Lanka; see the chapter 1 of the Dipavamsa. Furthermore, the taking the form of an elk is a copy from the Epic Ramayana. The flying visits of the Buddha and Mahinda Thera are also plagiarism from the Epic Ramayana. As per the Tamil Epic Silappthikaram, Canto 15-verse 115 to 124, Iyyakki is a goddess, see the Reference 'The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939.' In a way the Buddha is chasing away the traditional goddess of Lanka to prepare for his Faith, he was doing it nine months after his enlightenment! The abstract of the meaning of the above referenced verses in the Epic Silappthikaram in part is given below: Quote: ‘Just then, Madari, an old woman of the cowherd caste, who was returning after making the usual offering of milk to the flower eyed Yakkini, enshrined outside the city gates in the quarters of the monks practising Dharma saw and prostrated herself before the saint Kavundi who then thought within herself: ‘The life of cowherds who protect cows and offer what they yield is not harmful. This aged lady is without fault and is, besides, virtuous and merciful. It is not therefore wrong to lodge Kannaki with Madari’. Unquote The above meaning of the verses is from the page 214 of the Reference 'The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939.' நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 50 தொடரும் / Will follow துளி/DROP: 1913 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 49] https://www.facebook.com/groups/978753388866632/posts/32532755169706376/?
  14. கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1 வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது. 'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ? கமை உறு மனத்தினால் கருத வந்ததோ? சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக- இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!' நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின். உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான். 'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!' அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது. ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது. ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள். அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான். “போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு. “போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள். அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்? 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.' இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான் ஈஸ்வர்யாவும் நோக்கினாள். அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?” அவள்:“ஈஸ்வர்யா.” அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.” அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது. அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது. "நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ." "அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான். அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........ 'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, அறத்து ஆறு நுவலும் பூட்கை' பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல். பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்! அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான். அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 02 தொடரும் THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01 The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war. It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope. She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm. She bent down to a frightened little boy and whispered, “Don’t worry, kanna… write your name. I will protect your books.” At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped. “Even in a war?” he asked softly. She looked up at him. Her smile was tired — but firm and unbreakable. “Especially in a war.” And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break. That afternoon, he finally spoke to her. “What is your name?” he asked. “Ishwarya,” she replied. “Meaning?” he teased gently. “Grace and prosperity,” she said, then added with a faint smile, “Though these days, just call me a wandering teacher of wandering children.” Kavin smiled. No one had spoken to him like that in months. Her courage felt like warmth in a frozen desert. Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun. “Do you ever imagine a different world?” he asked. She skipped a small stone across the surface of the water. “I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.” “And you?” he asked, turning towards her. She looked at the distant horizon. “I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.” He laughed softly. “When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.” She stopped walking and turned to face him. “No, Kavin… when this ends… you won’t just build a school.” She looked into his eyes, with a hope that belonged to another world. “You will rebuild a country.” Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Chapter 02 Will follow துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01] https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?
  15. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 48 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 48 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் அனைவரையும் கிரிதீபா தீவுக்கு விரட்டிய பின், இயக்கர்கள் (Yaksha) மீண்டும் இலங்கையில் எப்படி வந்தார்கள்?' அத்தியாயம் 11 அபயன் அல்லது அபயாக்குப் [Abhaya] பிறகு இலங்கையின் நான்கு மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது. அபயாவுக்குப் பிறகு, பதினேழு ஆண்டுகள் இடைக்காலம் இருந்தது. பகுண்டா [பண்டுகாபயன்] தனது தாய்வழி மாமன்கள் ஏழு பேரைக் கொன்ற பிறகு, அரியணையைக் கைப்பற்றுவதற்கு முன்பு, அந்த இடைக்காலத்தின் போது ஒரு கொள்ளையனாக 17 ஆண்டுகள் வாழ்ந்தான். பகுண்டா முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். தொடர்புடைய மகாவம்ச அத்தியாயத்தின் கீழ் பகுண்டா பற்றிய, மேலதிக கருத்துக்களைப் பார்க்கவும். அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் இறக்கும் போது அவனுக்கு குறைந்தபட்சம் நூற்றி ஏழு வயது இருக்க வேண்டும்; இது வாழ்க்கையின் மிக நீண்ட காலம் ஆகும்! 11-4: Enjoying sovereignty both over men and Yakkhas, Pakuṇḍa reigned during full seventy years. மனிதர்கள் மற்றும் இயக்கர்கள் இருவரின் மீதும் இறையாண்மையை [sovereignty] செலுத்தி அல்லது பாவித்து, பகுண்டன் முழு எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறப்படுகிறது. புத்தர், அத்தியாயம் 1 இன் படி, இயக்கர்களை மற்றொரு தீவான கிரிதீபாவிற்கு அனுப்பினார். கிரிதீபா [Giridipa] என்பது மற்றொரு தீவு அல்ல, ஆனால் இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பகுதி (கிரி - மலை) என்று நாம் இப்போது கருத வேண்டும் போல் உள்ளது?; இல்லையேல் கட்டாயம் மீண்டும் இயக்கர்கள் ஆளப்பட்டிருக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை? மேலும், இயக்கர்கள் மீதான இறையாண்மை பற்றிய கருத்து குழப்பமானது. உதாரணமாக ஒரு அரசுக்கு தன் குடி மக்கள் மீதான- மூலமான முழுமையான வரையற்ற அதிகாரமே இறைமை எனப்படுகிறது. அப்படியாகின் இயக்கர்களும் குடி மக்கள் என்பது தெளிவாகிறது! ஏனென்றால், விலங்குகள் அல்லது துணை மனிதர்கள் மீது யாருக்கும் இறையாண்மை இல்லை, ஏனெனில் அவர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். இறையாண்மை என்பது மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கருத்து. ஆகவே, இயக்கர்கள், தீபவம்சத்தின் ஆசிரியர் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதேதோ கூறினாலும், அவர்கள் இலங்கையின் ஒரு பூர்வீக மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, அந்த பண்டைய காலத்தில், மொழி மக்களிடையே ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை என்றும் தெரிகிறது. பகுண்டானின் ஒரே மகன் முத்தசிவா அல்லது மூத்தசிவன் [Mutasiva] ஆகும். இவன் அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; மற்றொரு நீண்ட ஆட்சி. இருப்பினும், அவரது அறுபது ஆண்டுகால ஆட்சி, அவரது நீண்ட ஆட்சியைப் பற்றிய எந்த விவரமும் இல்லாமல், வெறுமனே கடந்து செல்கிறது. அவருக்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் அல்லது தீசன் அரியணை ஏறியபோது, திஸ்ஸவின் முடிசூட்டு விழாவில் பல அற்புதங்களும் பல பொக்கிஷங்கள் தானாக - பரிசு பொருட்களாக - வெளிவந்த நிகழ்வுகளும் நிகழ்ந்தன. திஸ்ஸாவும் அசோகாவும் ஒருவரை யொருவர் சந்தித்ததில்லை, ஆனால் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அந்த பழமையான நாட்களில் ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நபர்களிடையே இந்த நெருக்கம் எப்படி உருவானது என்று விளக்கப்படவில்லை. திஸ்ஸ என்ற பெயரை சிங்களவர்கள் பாசத்துடன் ஏற்றுக் கொண்டாலும், இந்தப் பெயர் வங்காளத்திலிருந்து தமிழகம் மற்றும் இலங்கை வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து உள்ளது. எடுத்துக்காட்டாக, 2014 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சியானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொல்பொருட்களின் மீது 'திஸ்ஸா' என்ற பெயர் தமிழில் பதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது. பௌத்தம் முதலில் தமிழ் நாட்டிற்கு வந்து, பின்னர் சிறிது காலத்திலேயே படகு மூலம் இலங்கைக்கு வந்தது என்பதுக்கு பல தடயங்கள் உள்ளன. இவை பற்றி முன்பும் கூறியுள்ளோம். மீண்டும் பேசுவோம். அன்னம் போல மகிந்த தேரர் பறந்து இலங்கை போனார் என்பது, அப்பாவி பக்திமான்களின் நுகர்வுக்கு ஒரு விசித்திரக் கதை. அவ்வளவுதான்! திஸ்ஸ (தேவநம்பியதீசன்) அந்த விலைமதிப்பற்ற பொருட்களை அசோகருக்கு அனுப்பினார். இதையொட்டி, அசோகர் தேவநம்பியதீசனின் இரண்டாவது முடிசூட்டு விழாவிற்கு பொருட்களை அனுப்பினார். தேவநம்பியதிஸ்ஸ முதல் முடிசூட்டுக்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களில் இரண்டாவது முடிசூட்டு விழா நடந்தது மிகவும் விசித்திரமானது. இதன் உண்மைத் தன்மையை ஏற்கனவே விரிவாக அலசி உள்ளோம். மகிந்த தேரர் திஸ்ஸவின் இரண்டாவது முடிசூட்டு விழா முடிந்து, முப்பது நாட்களுக்குப் பின்னர் புத்தரின் நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வதற்காக தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்தார். ஆகவே அதற்கு முதல், புத்த மதம் இலங்கையில் இல்லை என்றாகிறது! Part: 48 / Appendix – Dipavamsa / 'How Yakkhas again appeared in Lanka, After Buddha chased all of them to another island Giridipa? The Chapter 11 speaks of four kings of Lanka after Abhaya. After Abhaya, there was an interregnum of seventeen years. Pakunda [King Pandukabhaya] lived as a robber during that interregnum before capturing the throne after killing seven of his maternal uncles. Pakunda was crowned when he was thirty seven years age. See comments on Pakunda under the related Mahavamsa chapter. He ruled for seventy years. He must be at the least one hundred and seven years of age when he died; very long span of life! It is said that, 11-4, Pakunda enjoyed sovereignty over men and Yakkhas, 11-4. The Buddha, as per chapter 1, sent Yakkhas to another island Giridipa. We have to assume now that Giridipa is not another island but the hilly area (Giri) in the central part of Lanka; otherwise, Yakkhas would not have been there to rule over. Furthermore, the concept of sovereignty over Yakkhas is confusing. No one has sovereignty over animals or sub-humans as they do not understand it. Sovereignty is a political concept invented for human beings. Yakkhas must be humans whom the author of the Dipavamsa unhappy with based on their faith. Mutasiva was the only son of Pakunda, and he ruled for sixty years; another long reign. However, his rule of sixty years is simply passed over without any detail about his long rule. When his second son Tissa ascended to the throne after him, Many miracles happened on the coronation of Tissa along with many treasures. Tissa and Asoka never met each other, but they are said to be very intimate friends. It is not explained how this intimacy developed between persons living more than a thousand five hundred miles apart in those primitive days. Though Sinhalese fondly adopted the name Tissa, the name had long been in vogue more than two millenniums from Bengal to Tamil Nadu as well as in Ceylon. For example, The famous Keezadi archaeological excavation in Tamil Nadu during the period 2014 to 2015 brought forth the name Tissa on artefacts of more than two thousand years old. It will be shown later that the Buddhism came to Tamil country first and then to Sri Lanka by ferry shortly after. Mahinda flying like kings of swan is a fairy tale for the consumption of the naive pious. Tissa (Devanampiyatissa) sent the precious items to Asoka as present. In turn, Asoka sent him items for his second coronation. It is very strange that Devanampiyatissa had second coronation in about six months after his first coronation. Mahinda Thera came to Lanka with his companions to propagate the faith of the Buddha thirty days after the second coronation of Tissa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 49 தொடரும் / Will follow துளி/DROP: 1911 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 48] https://www.facebook.com/groups/978753388866632/posts/32517648617883698/?
  16. 🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்! 🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும் 🕯️ உங்கள் உண்மை உயரட்டும் 🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul” O spirits of Mullivaikkal, restless in the wind, gentle in the waves we bow our heads before you. May your suffering never be forgotten. May your names never fade from memory. May your dreams live through us. To the mothers who shielded their children, to the babies who never saw the sunrise, to the youth who carried only hope we light this lamp. May this flame guide you where the world failed you. May peace hold you in the embrace we could not give. O souls of Mullivaikkal we honour you. We speak for you. We remember you in every lamp, every tear, every heartbeat. 🕯️ Let your light endure. 🕯️ Let your truth rise. 🕯️ Let your memory shine forever. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”] https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?
  17. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 47 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 47 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தரின் சாக்கிய குலத்துடன் இலங்கைக்கு, உயிரியல் ரீதியாக தொடர்புடையதா?' வடகிழக்கு பருவக்காற்று [North East Monsoonal wind] அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கணிசமான வலிமையுடன் அமைகிறது, இது [பாய்க்] கப்பல் ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஒரு இடத்துக்கு நகர அல்லது இடம்பெயர்வுக்கு உதவி இருக்கலாம். இருப்பினும், விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் 'மே [may]' மாதத்தில் தரையிறங்கினர். அவர்கள் முதலில் சுப்பராவிற்கும் பின்னர் பருகாச்சாவிற்கும் சென்றனர். ஆனால், வடகிழக்கு பருவக்காற்றுடன் அசைந்து செல்வதால், இலங்கையை கடந்து, சுப்பரா மற்றும் பருகாச்சாவை அடைய, வடக்கு நோக்கி திரும்ப முடியாமல் கட்டாயம் போயிருக்கும். சுமார் மூவாயிரம் மைல்களுக்கு மேல் கடல் பயணம் வெறுமனே காற்றோடு அலைந்து திரிந்து இலங்கைக் கடற்கரையில் தரையிறங்கியிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தாகம் மற்றும் பசியின் கொடுமையில் மிக விரைவில் அழிந்திருப்பார்கள். எனவே விஜயன் மற்றும் அவனது சகாக்கள் வந்ததாகக் கூறப்படுவது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு நிலத்தை அபகரிப்பதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட கற்பனைக் கதையாகும். அத்தியாயம் 10 இலங்கையின் இரண்டு மன்னர்களின், பண்டுவாசுதேவன் அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவர் மகன் அபயனின் [Panduvasa and his son Abhaya.] ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறது; ஆனால், தீபவம்சத்தில் பாண்டுவாசன் எங்கிருந்து வந்தான், விஜயனுக்கும் அவனுக்கும் எப்படி சம்பந்தம் என்று தெளிவுபடுத்தப் படவில்லை. அவர் எப்படி இலங்கைக்கு வந்தார் என்பதும் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. இருப்பினும், அவர் இலங்கைக்கு வந்த அதே ஆண்டில் மன்னராக முடிசூட்டப்பட்டார். 10 - 1 முதல் 2 வரை இந்தியாவிலிருந்து வந்த சக்க இளவரசர் பாண்டுவின் மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசியை பண்டுவாச மணந்தார். மற்றும், பாண்டு கௌதம புத்தருடன் தொடர்புடையவர் என்பதை சக்கா [Sakka] அடைமொழி குறிப்பிடுகிறது. என்றாலும் அவர் கௌதம புத்தருடன் எவ்வாறு தொடர்புபட்டார் என்பது தீபவம்சத்தில் தெளிவுபடுத்தப் படவில்லை. சக்யா, சில சமயங்களில் சக்கா [Sakya, sometimes also Sakka], ஒரு பிராந்தியத்தின் பெயராகவும், அங்கு வாழ்ந்த மக்களின் குலமாகவும் இருந்தது. புத்தர் என்று வரலாற்றில் அறியப்பட்ட கௌதம சித்தார்த (Gowthama Siddartha) ஒரு சக்கியன். புத்தரின் தந்தை சுத்தோதனன் சக்கியர்களின் அரசன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கச்சனா எப்படி இங்கு வந்தாள் என்பதும் தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. பண்டுவாசன் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சம், தீபவம்சத்தில் காரணங்கள் சொல்லப்படாத அல்லது அடையாளம் காட்டப்படாத நிகழ்வுகள் மற்றும் உறவு முறைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி அதைச் சுற்றி பொய்களையும் வஞ்சனைகளையும் ஒன்று சேர்த்து பெரும் புரளியைச் சுழற்றியது போல் தெரிகிறது. பண்டுவாசுக்கும் கச்சனாவுக்கும் பதினொரு குழந்தைகள் பிறந்தன; பத்து மகன்கள் மற்றும் ஒரு மகள். அபயன் அல்லது அபய, திஸ்ஸ, உத்தி, திஸ்ஸ, அசேல, விபாதா, ராம, சிவா, மட்ட அல்லது மத்தா, மற்றும் மட்டகலா [Abhaya, Tissa, and Utti, Tissa, and Asela the fifth, Vibhāta, Rāma, and Siva, Matta together with Mattakala.] ஆகிய மகன்கள், சித்ரா [Cittā or Ummādacittā] என மிகவும் வசீகரமாக விவரிக்கப்படும் மகள் ஆவார்கள். 10 - 3 முதல் 4. அபய தனது தந்தை பண்டுவாசனுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சித்தார்த்தாவின் தந்தை (அறிவொளிக்குப் / ஞானத்திற்குப் பிறகு தான் புத்தர் என்று அழைக்கப் பட்டார்), சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். அமிதோதனாவுக்கு ஏழு பேரன்கள் இருந்தனர்; இராம, திஸ்ஸ, அனுர்தா, மஹாலி, திகாவு, ரோஹனா மற்றும் காமணி 10 - 6: There were seven Sākiya princes, the grand-children of Amitodana, born in the family of the Lord of the world: Rāma, Tissa, and Anurādha, Mahāli, Dīghāvu, Rohana, Gāmanī the seventh of them. இவ்வளவும் தான் தீபவம்சத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தீபவம்சத்தின் பின் எழுதிய மகாவம்சத்தில் தான், கச்சனா அல்லது புத்தகாஞ்சனா என்ற மகளும் இருந்தாள், அவள் பின்னர் பண்டுவாசனை மணந்தாள் எனக் கூறப்பட்டுள்ளது. அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் எப்படி, ஏன் இலங்கைக்கு வந்தனர் என்பது தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். எனினும் அமிதோதனைப் பற்றி மேலே கொடுக்கப்பட்ட விவரம் தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை, ஆனால் புரிந்து கொள்வதற்கான உதவியாக சேர்க்கப்பட்டுள்ளது, அது தீபவம்சத்தின் பின் எழுதிய மகாவம்சத்தில் தான் உள்ளது. திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி, Dighagamini ,son of Prince Digayu and Princess Disala] ஆவான். இவன் அன்றைய இலங்கையின் ஆட்சியாளரான பண்டுவாசுதேவவுக்கு (பண்டுவாச என்றும் அழைக்கப்படுகிறார்) சேவை செய்தார். அந்த தருவாயில் இளவரசி சித்ராவுடன் [அல்லது உன்மாதசித்திரா / Unmadachithra] தொடர்பு ஏற்பட்டு, பண்டுகாபயனைப் [In the Dipavansa, Pandukabhaya is mentioned as Pakundaka] பெற்றெடுத்தார். மேலும் இங்கே பண்டுகா, பகுண்டா மற்றும் பகுண்டகா [Panduka, Pakunda and Pakundaka] ஆகிய அனைத்தும் பண்டுகாபயனைப் குறிக்கின்றன. பண்டுவாசன் இறந்தபோது பண்டுகாபயன் பிறந்தார், இளவரசர் அபய முடிசூட்டப்பட்டார். பண்டுகாபயனின் தாய் மாமன்கள் அவரைக் கொல்ல முயன்றனர், அவர் தனது மாமாக்களிடமிருந்து மறைந்து வாழ்ந்தார். Part: 47 / Appendix – Dipavamsa / 'Is Sri Lanka biologically related to the Sakya clan of Buddha?' North East Monsoonal wind sets in appreciable strength during October to February, which might have aided the drifting of the ship. However, Vijaya and his companions landed in May. They first drifted to Suppara and then to Bharukaccha. Drifting with North-East Monsoon would not have enabled them to turn northwards after passing Lanka to reach Suppara and Bharukaccha. There is no way that they could have landed on the coast of Lanka more than about three thousand miles of sea journey simply drifting and going with the wind. They would have perished very early on their drift of thirst and hunger. The alleged arrival of Vijaya and his companions is an invented fiction to misappropriate land for a particular group. The Chapter 10 speaks reigns of two kings of Ceylon only Panduvasa and his son Abhaya. It is not clarified in the Dipavamsa that where Panduvasa came from, and how he is related to Vijaya. How he arrived in Lanka is also not given in the Dipavamsa. He was, however, crowned the king on the same year he arrived in Lanka. Panduvasa married the princess Kaccana, the daughter of Sakka prince Pandu, who also came from India. Sakka epithet indicates that Pandu is connected to Gautama Buddha. It is not clarified in the Dipavamsa how he is connected to Gautama Buddha. How Kaccana came here is also not elaborated in the Dipavamsa. Panduvasa reigned for 30 years. The Mahavamsa took advantage of this to spin another canard around it. Eleven children were born to Panduvasa and Kaccana; ten sons and one daughter. Abhaya, Tissa, Utti, Tissa, Asela, Vibhata, Rama, Siva, Matta, and Mattakala are the sons, and Cita is the daughter who is as very fascinating in appearance. Abhaya ruled after his father, Panduvasa, for twenty years. Suddhodana was the father of Siddhattha (Buddha after enlightenment), and Suddhodana had four brothers. Amitodana was the youngest. Amitodana had seven grandsons; Rama, Tissa, Anurdha, Mahali, Dighavu, Rohana, and Gamani, and one granddaughter; Kaccana. How and why Amitodana’s grandchildren ended up in Lanka is not given in the Dipavamsa. Amitodana’s nephew was Buddha and the monks who wrote the chronicles wanted Lanka to have biological connection with the Buddha’s Sakya clan, and must have invented the presence of Amitodana’s grandchildren in Lanka. The detail given above about Amitodana is not given in the Dipavamsa, but added as an aid to understand, and it is from the Mahavamsa. Dighavu’s son was also Gamani, and he was attending to Panduvasa. He, Gamani, while attending Panduvasa cohabitted with Cita and gave birth to Panduka. Panduka, Pakunda and Pakundaka all refer to the same person. Panduka was born when Panduvasa died, and prince Abhaya was crowned. Pakunda’s maternal uncles were trying to kill him and he resided at Dovarikamandala, hiding from his uncles. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 48 தொடரும் / Will follow துளி/DROP: 1909 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 47] https://www.facebook.com/groups/978753388866632/posts/32498496956465531/?
  18. சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out” “அணையாத விளக்கு” [ஆருரான் & மையழகி — போரின் விளிம்பிலிருந்து ஒரு காதல் கதை] ஆரூரன் கொழும்பில் பிறந்து வளர்ந்த, சகவாழ்வில் இன்னும் நம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் இளைஞன். அவன் கொழும்பு றோயல் கல்லூரியில், தனது உயர் வகுப்புவரை படித்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அங்கு அவன் உயிரியல் பாடத்தில் தனது வகுப்புகளில் முதலிடம் பிடித்ததுடன், ஆங்கில மற்றும் தமிழ் விவாதக் குழுக்களுக்கும் தலைவராகவும் இருந்தான். மேலும் சிங்கள நாடக விழாக்களில் கூட சிலவேளை நடித்தான். யோசிக்காமல் மூன்று மொழிகளையும் மாற்றி மாற்றி பேசும் வல்லமை கொண்டவன். பள்ளியில் ஆங்கிலம், நண்பர்களுடன் தமிழ் மற்றும் சிங்களம், தனது குடும்பத்துடன் தமிழ் என, தன் வாழ்வை அமைத்த அழகான, வாட்டசாட்டமான, பயமற்ற தைரியம் கொண்ட இளைஞன் அவன். அவனது ஆசிரியர்கள் ஒருமுறை பள்ளி மன்றபத்தில் [school assembly], அவனை சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்: “அமைதிக்கு ஒரு முகம் இருந்தால், அது மென்மையான புன்னகையுடன் இருக்கும் இந்த சிறுவனாகத் தான் இருக்கலாம்.” என்று. அவன் பின்னாளில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ இளங்கலை, அறுவை சிகிச்சை இளங்கலை [MBBS] ஐ முடித்து பெருமையுடனும் நிம்மதியுடனும் தனது வெள்ளை அங்கியைப் பெற்றான். அவனது இலட்சியம் எளிமையானது: “யாரையும், எங்கிருந்தும் குணப்படுத்துவது, மகிழ்ச்சி கொடுப்பது” அவனது முதல் நியமனக் கடிதம் வந்தபோது, அதில் பதியப் பட்டுள்ள "யாழ்ப்பாண போதனா மருத்துவமனை - ஜூனியர் ஹவுஸ் ஆபீசர்" என்ற வார்த்தைகளை உற்றுப் பார்த்தான். அவன் மகிழ்ச்சியில் சிரித்தான். அவன் இதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததில்லை. ஆனால் அவனது தந்தையின் பிறந்த இடம் அது, அவனது மூதாதையரின் வீடு, ஒரு காலத்தில் குண்டுகள் அழிக்கப்படுவதற்கு முன்பு அங்கு நிமிர்ந்து இருந்தது. அதன் படத்தை அவன் பலதடவை பார்த்துள்ளான். அதுதான் அவன் அங்கு சேவை செய்ய விரும்பினான். ஆனால், விதி தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நபரைச் சந்திக்க அங்கு அனுப்புகிறது என்பது அவனுக்குத் தெரியாது. மையழகி — புத்தகங்கள், பரதநாட்டிய அணிகலன்கள், வேலிக்கு மேல் வளர்ந்த மல்லிகையின் மெல்லிய வாசனை, உயர்ந்து நிமிர்ந்து திடமாக நிற்கும் பனைமரம், செவ்வரத்தம் பூமரம் என பலவற்றால் நிரம்பிய ஒரு வீட்டில் பிறந்தாள். அவள் வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தாள், அங்கு அவள் தனது வகுப்புகளில் முதலிடம் பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்திலும் சிறந்து விளங்கினாள். அவள் வடக்கிற்கு வெளியே ஒருபோதும் காலடி எடுத்து வைத்ததில்லை. அதுமட்டும் அல்ல, அவளது ஒரே மொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் - ஆனால் அவளது கனவுகள் பரந்ததாக இருந்ததால் அவளது உலகம் பரந்ததாகவே இருந்தது. மையழகி தான் மருத்துவராக வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்தாள். மிகவும் நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கூட சிரிக்க வைக்கக் கூடிய ஆற்றல் அவளுக்கு இருப்பதாக, அவளது நண்பர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அவளின் இளமை, அழகு, நளினம் , நடை, உடை எவரையும் திரும்பி பார்க்க வைக்கும். காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் மையழகி பற்றி எப்படி சொல்ல முடியும். என்றாலும் போர் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் அச்சுறுத்தியது. ஆனால் அவள் படிப்பை நிறுத்த மறுத்துவிட்டாள். கனவு காண்பதை நிறுத்த மறுத்துவிட்டாள். வாழ்ந்து காட்டுவேன் என்று பனைமரம் போல் துணிந்து நின்றாள். அவர்கள் இருவரும் ஒரு ஈரப்பதமான காலையில், மருத்துவமனை வார்டு கண்காணிப்பின் போது சந்தித்தனர். ஆரூரன் ஒரு நோயாளியின் அட்டவணையை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தபோது, மையழகி வெள்ளை கோட் படபடவென்று ஆட , தலைமுடி லேசாக பின்னப்பட்ட நிலையில், உள்ளே நுழைந்தாள். “ஆயுபோவன் … ஓ—மன்னிக்கவும்,” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே தன்னைத் திருத்திக் கொண்ட, ஆரூரன் “வணக்கம். நீ மையழகியாகத்தான் இருக்க வேண்டும்?” என்று ஆரூடம் கூறினான். அவள் கண் சிமிட்டினாள். கொழும்பிலிருந்து வந்த பெரும்பாலான மருத்துவர்கள் அவ்வளவு எளிதாகத் தமிழ் பேச மாட்டார்கள். அன்று காலை முதல், நோயாளர்களின் மருத்துவ விவாதங்கள் மூலம் உருவான நட்பு மெதுவாக மென்மையான, சொல்லப்படாத அன்பாக மலர்ந்தது. அவளுடைய அமைதியான வலிமையை அவன் பாராட்டினான். அவனுடைய கருணையை அவள் பாராட்டினாள். தெற்கிலிருந்து இங்கு வாழும் நோயாளிகளுடன் அவன் சிங்களத்தில் சரளமாக பேசியபோது, அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் மருத்துவச் சொற்களை குறைபாடற்ற ஆங்கிலத்தில் விளக்கியபோது, கவிதையைக் கேட்டு ரசிப்பது போல் அவளைப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் ரசித்தனர். காலப் போக்கில், அவர்கள் தங்களுக்கென ஒரு சிறிய உலகத்தை உருவாக்கினர். ஆனால் போர் இறுக்கமடைந்தது. சோதனைச் சாவடிகள் பெருகின. சந்தேகம் அதிகரித்தது. இளம் தமிழ் சிறுவர் சிறுமிகள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், அதிகளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர், விசாரிக்கப்பட்டனர், தடுத்து வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் பற்றிய வதந்திகள் பரவின. செம்மணி அருகே ஆழமற்ற கல்லறைகளில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. கடமைகள் செய்ய வேண்டியிருந்தது. ஒரு மதியம், ஆருரன் அவளைத் தனது மோட்டார் சைக்கிளில், அவளின் வீட்டிற்கு இறக்கிவிட முன்வந்தான். அவனுக்கு சாலைகள் நன்றாகத் தெரியும். அவனுக்கு மொழி நன்றாகத் தெரியும். எனவே அது அவர்களைப் பாதுகாக்கும் என்று அவன் நம்பினான். அவர்கள் செம்மணி சோதனைச் சாவடியை நெருங்கினர். மணல் மூட்டைகள். துப்பாக்கிகள். காற்றில் சுழலும் சற்று கிழிந்த இலங்கைக் கொடி அங்கு காணப்பட்டது. சோதனைச் சாவடி நெருங்க, ஆருரன் மோட்டார் சைக்கிளை மெதுவாக்கினான். மையழகி அவனின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்தாள். அவர்கள், அங்கு நின்ற இராணுவ வீரர்களால் கீழே இறக்கப்பட்டனர். முதலில் வீரர்கள் ஆருரனின் அடையாள அட்டையைச் சரிபார்த்தனர். “டாக்டரா? கொழும்பு?” அவர்களின் தொனி மாறியது. அவர் “ஏற்றுக்கொள்ளத்தக்கவர்.” ஆனால் மையழகியின் அடையாள அட்டையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - மருத்துவ பீடம்” என்று இருந்தது. ஒரு சிப்பாயின் கண்கள் சுருங்கின. “இளங்கலைப் பட்டதாரியா? நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் யாரைச் சந்திக்கிறீர்கள்?” தொனி கூர்மையாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. ஆருரன் உடனடியாக முன்னுக்கு வந்து, சிங்களம் மூலம் அவர்களுடன் அமைதியாக, சரளமாக பேசினான். “அவள் என் சக ஊழியர். ஒரு மருத்துவ மாணவி. நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். அவள் அப்பாவி.” ஆனால் அவனது சிங்களம் அவர்களை மேலும் கோபப்படுத்தியது. சிங்களம் நன்றாகப் பேசி, தங்களுடன் எதிர்த்து வாதிடுகிறான். அது ஒன்றே காணும், அவன் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறான் என்று சந்தேகிக்க என்று இராணுவ வீரர்கள், வழமைபோல் நினைத்தார்கள். ஒரு இராணுவ வீரன் திடீரென்று தன் கையால் அறைந்தான். பின்னர் அடித்தார்கள். அவன் தரையில் விழுந்தான். மற்றோரு இராணுவ வீரன் பூட்ஸ் காலால் உதைத்தான். துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கினர். அதனால், அவன் மூச்சுத் திணறும்போது, அங்கேயே அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் மையழகியை முகாமை நோக்கி இழுத்துச் சென்றனர். அவன் ஒருவாறு தவழ்ந்து, தன் கை நீட்டி - "நிறுத்து! அவள் ஒரு பெண்! அவள் ஒரு மாணவி! தயவுசெய்து - தயவுசெய்து -" என்று கத்தினான், கெஞ்சினான். ஆனால், உடனடியாக ஒரு சிப்பாய் அவன் முகத்தில் அடித்தான். ஒரு ஐந்து ஆறு இராணுவவீரர்கள் தங்களுக்குள் சிரித்து பேசியபடி மகிழ்வாக பின் தொடர்ந்தனர்? ஆருரன் சாலையோர மணலில், இரத்தம் வழிய, அரை மயக்கத்தில் கிடந்தான். முகாம் வாயிலை அங்கிருந்து அரைகுறை மயக்கத்தில் பார்த்தான். நுழைவாயிலில் புத்தர் சிலை சிறப்பாக குந்தி இருந்தது. அங்கே இரண்டு துறவிகள் பிரித் சத்தமாக உச்சரித்துக் கொண்டிருந்தனர். அது உலக மக்களின் ஆசிர்வாதத்திற்கான தாள ஒலி - ஆனால், அதே காற்றினால் சுமந்து செல்லும் அலறல்களின் கொடூரமான சத்தம் பறைமேளமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. அவள் குரல் கேட்டது. குறுகிய அழுகைகள். பின்னர் மூச்சுத் திணறல். பின்னர் அமைதி. பின்னர் மீண்டும் - அழுகை ... முனகல் ... பலவீனம்... கெஞ்சுதல். அவன் நிற்க முயன்றான் .... முடியவில்லை ... சரிந்தான் .... மீண்டும் முயற்சித்தான். ஒரு சிப்பாய் அவனை எட்டி உதைத்தார். "அங்கேயே இரு. இல்லையெனில் நீ சாவாய்." என்று கத்தினான். அவனுக்கு மணிநேரங்கள் வருடங்கள் போல கடந்தன. முகாமில் இருந்து வரும் ஒவ்வொரு சத்தமும் அவனை நெஞ்சில் குத்தியது. ஒரு கட்டத்தில் அவன் கண் , உணர்வு எல்லாம் இருண்டு போய்விட்டது. விடிந்ததும், முகாம் மிகவும் அமைதியாக இருந்தது. வீதியின் ஒருபுறம் சுடலையருகேயும் மறுபுறம் வயல் வெளிகளாகவும் இருந்தன, ஆருரன் சாலையை நோக்கி ஊர்ந்து சென்றான். அந்த வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர் அவனைப் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாதால் அவன் உயிர் பிழைத்தான். மையழகி வீட்டிற்கு வரவில்லை. அவளுடைய பெற்றோர் தேடினர். அவளுடைய நண்பர்கள் தேடினர். மனித உரிமைக் குழுக்கள் தேடினர். ஆனால் எந்த விபரமும் இல்லை. செம்மணி இராணுவத்தினர் தமக்கு தெரியாது என்று , அதே புத்தர் சிலைக்கு முன்பே கைவிரித்தனர். ஆனால், சமீபத்தில் செப்டம்பர் 2025 வரை, செம்மணி வெகுஜன புதைகுழி தளத்தில், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 240 மனித எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் 239 முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிப் பகுதியை ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்க்கர் தூர்க் 2025 சூன் 25 அன்று நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அரசாங்கம் அனுமதித்து தேவையான வசதிகளை வழங்கினால், அடுத்த அகழ்வாராய்ச்சியில் இன்னும் நிறைய உடல்கள் காத்திருக்கிறது. அதில் மையழகியும் ஒன்றாக இருக்கலாம்? மண் பல பாவங்களை மறைத்தது ஒவ்வொன்றாகத் தெரிய வருகிறது. செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்கோ! அன்றிரவு பணியில் இருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுக்கடங்காத ஆண்களால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கிசுகிசுத்தனர். 1996 ஆம் ஆண்டு இராணுவ சோதனைச் சாவடியில் காணாமல் போய் பின்னர் கொலை செய்யப்பட்ட இளம் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் துயரத்தை அவளுடைய விதி எதிரொலித்தது, மேலும் அவளைத் தேடிய குடும்ப உறுப்பினர்களும் அதே இராணுவ சோதனைச் சாவடி உறுப்பினர்களால் கொல்லப்பட்டது வரலாறு மட்டும் அல்ல, சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மற்றவர்கள் அவள் எப்படியோ தன்னைத் துன்புறுத்தியவர்களிடமிருந்து தப்பித்து, பின்னர் விரக்தியில் தன்னைத் தானே மாய்த்து இருக்கலாம் என்று கற்பனை செய்தனர். இருப்பினும், உண்மை செம்மணி மண்ணில் புதைந்துவிட்டது . ஆனால் ஆரூரனுக்குத் தெரியும். இரவுக் காற்றால் சுமந்து செல்லும் அவளுடைய கடைசி அழுகையை அவன் கேட்டிருந்தான். அவளுடைய இறுதி மணிநேரங்கள் எப்படி வெளிப்பட்டன என்பதை அவன் மட்டுமே புரிந்துகொண்டான் - அது அவனுக்குள் எரிந்துகொண்டு இருக்கிற ஒரு நினைவு, இதயத்தில் மூட மறுத்த ஒரு காயம். இராணுவ உளவுத்துறையின் அச்சுறுத்தலுக்கு ஆளான ஆரூரன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கையை விட்டு தற்காலிகமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். மருத்துவமனைகளில் உடனடியாக வேலை கிடைத்து, அங்கே, அவன் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கினான். அத்துடன் பல்வேறு நாடுகளிலிருந்து, முக்கியமாக இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் அகதிகளுக்கு உதவினான். ஆனால் அவன் எந்த சந்தர்ப்பத்திலும் அவளுடைய நினைவை மட்டும் விடாமல் எல்லா இடங்களிலும் சுமந்து சென்றான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, மையழகிக்கும் அவளைப் போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், மற்றும் அவனைப் போன்ற ஒவ்வொரு பையனுக்கும், அவன் ஒரு விளக்கை ஏற்றி வைக்க என்றும் மறப்பதில்லை. “இந்த நாள் ஏன் இவ்வளவு முக்கியமானது?” இங்கிலாந்தில் உள்ள மக்கள் கேட்டபொழுது, அவன் மெதுவாக ஆனால் ஆணித்தரமாக, “ஏனென்றால் காதல் அங்கே இறந்துவிட்டது. ஏனென்றால் உண்மை அங்கே புதைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மௌனம் இன்னும் அங்கே அழுகிறது.” என்று பதிலளித்தான். சில நேரங்களில், யாரும் பார்க்காதபோது, அவன் தீபத்துக்கு கண்ணீருடன் கிசுகிசுப்பான்: "மையழகி... என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் உலகம் உன்னை மறக்க விடமாட்டேன்." நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் “The Lamp that Did Not Go Out” [Aaruran & Maiyazhagi — A Love Story from the Edge of War] I. The Boy from Colombo Aaruran—ஆரூரன்—grew up in Colombo, the child of a Tamil family that still believed in coexistence. He studied at Royal College, where he topped his classes in biology, captained the debate team, and even acted in Sinhala drama festivals. He was the boy who could switch languages without thinking: English in school. Tamil & Sinhala with friends. Tamil with his family. His teachers said: “If peace had a face, it might be this boy with the gentle smile.” He completed his MBBS at the University of Colombo, receiving his white coat with pride and relief. His ambition was simple: “To heal—anyone, from anywhere.” When his first appointment letter arrived, he stared at the words: “Jaffna Teaching Hospital — Junior House Officer.” He smiled. He had never lived in Jaffna before. But that was where his father was born, where his ancestral house once stood before shells destroyed it. He wanted to serve there. He did not know that fate was sending him to meet the one person who would change his life forever. II. The Girl from Jaffna Maiyazhagi—மையழகி—was born in a house filled with books, Bharatanatyam bells, and the faint smell of jasmine that grew over the fence. She studied at Vembadi Girls’ High School, where she topped her classes and excelled in English literature. She had never stepped outside the North. Her only languages were Tamil and English— but her world was wide because her dreams were. She entered the Faculty of Medicine, University of Jaffna, with the clear purpose of becoming a pediatrician. Her friends said she had a gift: she could make even the sickest child smile. War threatened everything around her. But she refused to stop studying. Refused to stop dreaming. III. The Meeting in the Ward They met on a humid morning during rounds. Aaruran was reviewing a patient chart when she walked in, white coat fluttering, hair lightly braided. “Ayubowan… oh—sorry,” he corrected himself with a shy laugh, “Vanakkam. You must be Maiyazhagi?” She blinked. Most doctors who came from Colombo did not speak Tamil with such ease. From that morning, friendships formed over case discussions slowly bloomed into a gentle, unspoken love. He admired her quiet strength. She admired his kindness. When he spoke Sinhala with patients who fled from the South, she watched, amazed. When she explained medical terms in flawless English, he looked at her as if discovering poetry. They completed each other. In a world tearing itself apart, they built a small world of their own. IV. Shadows Near Chemmani But the war tightened. Checkpoints multiplied. Suspicion deepened. Young Tamil boys and girls—especially university students—were increasingly stopped, questioned, detained. Rumors spread of disappearances. Of bodies found in shallow graves near Chemmani. Still, life had to be lived. Exams to be written. Duties to be done. One afternoon, Aaruran offered to drop her home on his motorbike. He knew the roads. He knew the language. He believed that would protect them. They approached the Chemmani checkpoint. Sandbags. Rifles. A torn Sri Lankan flag twisting in the wind. Aaruran slowed the bike. Maiyazhagi tightened her hold around his waist. They were flagged down. V. The Checkpoint The soldiers checked Aaruran’s ID first. “Doctor? Colombo?” Their tone changed. He was “acceptable.” But Maiyazhagi’s ID said: “University of Jaffna – Medical Faculty.” A soldier’s eyes narrowed. “Undergraduate? What are you doing here? Where are you going? Who are you meeting?” The tone was sharp, rehearsed, dangerous. Aaruran stepped forward immediately. He spoke Sinhala—calmly, fluently. “She is my colleague. A medical student. We work together. She is innocent.” But his Sinhala only seemed to anger them more. A Tamil who spoke Sinhala well, who argued back— that was threatening. The slap came suddenly. Then the blows. He fell to the ground. Boots kicked. Rifle butts struck. Even as he gasped for breath, he heard them dragging her toward the camp. He crawled, reached out— “Stop! She is just a girl! She is a student! Please—please—” One soldier struck him across the face. VI. A Nightmare with No Sunlight He lay in the sand by the roadside, bleeding, half-conscious. He saw the camp gate. The Buddha statue at the entrance. Two monks chanting pirith loudly there, the rhythmic sound meant for blessings — but here it felt like a cruel mockery of the screams carried by the wind. He heard her voice. Short cries. Then choked ones. Then silence. Then again— fading… weak… pleading. He tried to stand. Collapsed. Tried again. A soldier kicked him down. “Stay there. Or you die.” Hours passed like years. Every sound from the camp stabbed him. At some point he blacked out. VII. What Happened After When dawn broke, the camp was silent. Too silent. Aaruran crawled toward the road until a passing lorry driver saw him and took him to a clinic. He survived—but barely. Maiyazhagi never came home. Her parents searched. Her friends searched. Human rights groups searched. But, as recently as September 2025, a total of 240 human skeletal remains, including many women and children, were identified at the Chemmani mass grave site, It is worth noting that 239 of them were completely excavated.It is also worth noting that the UN High Commissioner for Human Rights, Volker Durk, personally visited the mass grave discovered in Chemmani on June 25, 2025. If the government allows and provides the necessary facilities, there are many more bodies waiting to be excavated in the next excavation. Could Meizhagi be one of them? The soil is revealing the many sins it has hidden, one by one. Buried in red earth, they do not sleep— little innocent bodies the soil itself refuses to hold, while wild men dance above their graves. A schoolgirl lies shattered, her schoolbag still beside her. Buddha’s teachings lie in dust, yet worship is done with one hand, while the other hand commits atrocities against Tamil-speaking, non-Buddhist people— denying justice, taking their lands, and twisting the Dharma into a tool for conquest. Even animals show some culture. Blind preaching without truth defiles this sacred soil. Rows of bones speak pain; tiny remains expose the sin. O Buddha, who came to end suffering— why do your name and statues now march to erase other lives and cultures? Some whispered that she may have been sexually assaulted by one or more unruly men who were on duty that night and was later killed. Her fate echoed the tragedy of Krishanthi Kumaraswamy — the young Tamil schoolgirl who vanished at an army checkpoint in 1996 and was later found murdered, along with the family members who searched for her. Others imagined she had somehow escaped her tormentors, only to surrender later to despair. The truth, however, lay buried in shadow. But Aaruran knew. He had heard her last cries carried by the night wind. He alone understood how her final hours unfolded — a memory that burned within him, a wound that refused to close. VIII. The Man Who Survived to Speak Threatened by military intelligence, unable to sleep, unable to stay, Aaruran migrated to England, leaving Sri Lanka temporarily through Katunayakka International Airport He built a new life. Worked in hospitals. Helped refugees who come to England from varies countries, mainly Srilanka . But he carried her memory everywhere. On November 27, each year, he lights a lamp. For Maiyazhagi. For every girl like her. For every boy like him. For every dream that was cut down too soon. People in England ask him: “Why does this day matter so much?” He answers softly: “Because love died there. Because truth is buried there. Because silence still cries there.” And sometimes, when no one is watching, he whispers into the flame: “Maiyazhagi… I could not save you. But I will not let the world forget you.” Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1908 [சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”] https://www.facebook.com/groups/978753388866632/posts/32487883494193544/?
  19. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 46 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 46 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீயகுணங்களும் செயல்களும் கொண்ட விஜயனின் வருகைக்கு, புத்தர் உண்மையில் இலங்கையைத் தயார்படுத்துவாரா?' அத்தியாயம் 9, ஏற்கனவே விளக்கியது போல, விஜயனின் வம்சாவளி, அவரது தீய பாத்திரங்கள் அல்லது செயல்கள், அவரது கட்டாய நாடுகடத்துதல், கடல் பயணம் மற்றும் இறுதியாக இலங்கைக்கு வந்ததைப் பற்றி பேசுகிறது. ஆனால், அவர்கள் இலங்கையில் இறங்கிய இடத்தை தீபவம்சம் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர்கள் இறங்கிய இடம் மண்ணின் நிறத்தின் அடிப்படையில் தம்பபன்னி [Tambapanni] என்று பெயர் பெற்றது. [34. The town of Tambapaṇṇi surrounded by suburbs was built by Vijaya in the south on the most lovely bank of the river.] தம்பபன்னி என்ற பெயர் இலங்கையில் எங்கும் இருக்கவில்லை. இந்தப் பெயர் எதிர்க் கடற்கரையில் உள்ள தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. மனைவிகளையும் குழந்தைகளையும் நாட்டை விட்டு அகற்ற அரசன் ஆணையிட்டதால், விஜயனுக்கு அப்பொழுதே மனைவி, பிள்ளைகள் இருக்கலாம்? அப்படி என்றால் அவனுக்கு, இலங்கையில் நடந்த திருமணத்துடன் சேர்த்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கையில் தரையிறங்கிய பிறகு, அவனோ அவனுடன் வந்தவர்களோ தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவும் இல்லை அல்லது அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும் இல்லை. புத்தர் ஆதரித்த அவர்களிடம், என்ன மனிதத் தன்மை! யாராவது இதற்கு பதில் கூறுவார்களா? 9-38 இன் படி, ஏழு ஆண்டுகளில் நிலம் மக்கள் கூட்டமாக இருந்தது. [38. (அவரது ஆட்சியின்) ஏழு ஆண்டுகள் கடந்தபோது, நாடு மக்கள் கூட்டமாக இருந்தது. அந்த இளவரசன் முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.] ஏழெட்டு ஆண்டுகளில் விஜயன் ஆண்ட நிலப்பரப்பை மனிதர்களால் நிரப்புவதற்கு, கட்டாயம் அண்டை நாட்டில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறி வந்திருக்க வேண்டும். அப்படி வரக்கூடிய இடம் தென் இந்தியா மட்டுமே என்பதையும் கவனிக்க? ஏன் என்றால், அதற்க்கு முதல் இலங்கையில் வாழ்த்த பூர்வீக குடிகளை, அன்பின், கருணையின் சொரூபமான புத்தர் வெருட்டி, பயம்காட்டி கலைத்துவிட்டாரே? சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், ஏழு வருடங்களில் தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் கூட்டமாகத் தீவில் வந்து குடியேறுவது சாத்தியமில்லை. அது மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எந்த புராணம் அல்லது வரலாற்று பதிவுகளிலும் கூட, வங்க நாட்டில் இருந்து அல்லது அருகிலுள்ள ஒரிசாவிலிருந்து [Vanga or from the nearby Orissa] இலங்கைக்கு மக்கள் வெகுஜன நடமாட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விஜயன் தனது சொந்த நாட்டிலும், சுப்பரா [சுப்பராகா] மற்றும் பருகாச்சாவிலும் [Suppara and Bharukaccha] குற்றவியல் அல்லது தீய நடத்தையில் ஈடுபட்டவர் ஆகும். அதில் இருந்து அவர் விலகவும் இல்லை. அப்படிப்பட்ட, இந்த குற்றவாளியின் வருகைக்கு இலங்கையைத் தயார்படுத்துவது, ஞானம் பெற்ற புத்தரின் உருவத்திற்கு அவமானத்தை விட வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரூச் (Bharuch) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆறு காம்பத் வளைகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நகர் பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் பரூச் துறைமுக வாயிலாக சீனா, எகிப்து, ரோம், இலங்கை, மதுரை, சுமத்திரா, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுடன், தங்கம், நவரத்தினங்கள், யாணைத் தந்தம், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பட்டு பருத்தி துணிகள் கொண்ட வணிகம் செழிப்பாக இருந்தது. இது பண்டைய காலத்தில் பாருட்கட்சா [Bharutkatccha] என்று அழைக்கப்பட்டது. மேலும் சுப்பரா [சுப்பராகா] பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்தின் மேற்கு விளிம்பில் உள்ள ஒரு நிலத்தைக் குறிக்கிறது. இதில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற துறைமுகமான சுப்பராகா (இன்றைய சோபாரா / Sopara) அடங்கும் என நம்பப் படுகிறது. தீபவம்சத்தின்படி விஜயன் இலங்கையில் திருமணம் ஒன்றும் செய்து கொள்ளவில்லை, எனவே அவருக்குப் பின், அவருக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை. அவர் தனது சகோதரன் சுமித்தாவிடம் [Sumitta] இலங்கைக்கு வந்து அரசாட்சியை தொடரும் படி செய்தி அனுப்பினார். மேலும் புத்தரின் மரண நாளில், மகாபரிநிர்வாண நாளில் அவர் [விஜயன்] இலங்கைக் கரையில் இறங்கியதும், எதோ ஒரு நோக்கத்தை நிலைநாட்டிட, கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்? தீவின் பக்திமிக்க பௌத்தர்கள் விஜயனின் தீய குணாதிசயங்களைப் பற்றி வெட்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மாறாக, பொல்லாத, பயமுறுத்தும் செயல்களைச் செய்து, மக்களைக் கொள்ளையடித்த விஜயனை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்கள். கடந்த காலத்திலும், பெரும்பாலான துறவிகள் மற்றும் புத்த சமயத்தை பின்பற்றும் பாமர மக்களின் கைதட்டலுக்கு, தமிழர்கள் இதே தீய சிகிச்சைக்கு ஆளானதில் ஆச்சரியமில்லை. இலங்கையின் கடந்த கால 100 ஆண்டு வரலாறு இவற்றைப் பற்றி பேசும். நான் கோடிட்டு காட்டத் தேவையில்லை? Part: 46 / Appendix – Dipavamsa / 'Is Buddha really prepare Lanka for the arrival of this criminal, Vijaya?' The Chapter 9 speaks of Vijaya’s ancestry, his evil characters, his forced exile and drifting in the sea, and finally his arrival in Lanka. As shown elsewhere, Vijaya’s birth is biologically impossible. Vijaya and all his brothers are invented personalities. Naïve Buddhists may believe in it, but the Tamils need not consider these as human historical facts. Vijaya and his companions first landed at the port city of Suppara. This must be the present day Surat in Gujarat. They behaved very badly though the people of Suppara first hospitably received them. Their behaviour made the people of Suppara angry, and Vijaya and his companions had to flee. They landed next in Bharukaccha, the present day Broach in Maharashtra. Again, they exasperated the people of Bharukaccha and they had to flee again and landed in Lanka. The map in the ‘Appendix – Asoka’ locates these two port cities on the western coast of India. The Dipavamsa does not identify the place at which they landed in Lanka. The place where they landed is Tambapanni based on the colour of the soil. There was no place with the name Tambapanni in Lanka. This name must have been from the Tamil country on the opposite coast. The Dipavamsa does not say he had seven hundred companions. Vijaya, his attendants, man-servants and the hired workmen are together seven hundred men. Vijaya seems to have more than one wife, as the king decreed to remove wives and children. He never tried to find them after landing in Lanka. As per 9-38, the land was crowded with people in seven years. There must have been a mass exodus of people from adjoining countries to crowd the land in seven years. The people must have come from the adjoining Tamil countries. It is impossible for people to come from faraway places to crowd the island in seven years about two thousand five hundred years ago. There is no mention of mass movement of people from Vanga or from the nearby Orissa to Lanka in any Puranic records in India. Vijaya is a person of criminal behaviour in his home country, as well as at Suppara and Bharukaccha. It is a shame on the image of the enlightened Buddha to prepare Lanka for the arrival of this criminal. Vijaya is not married in Lanka as per the Dipavamsa, and therefore he had no offspring to succeed him. He sent a message to his brother Sumitta to come to Lanka to take over the kingship. His landing on the shore of Lanka on the day of Mahaparinirvana, death, of Buddha, must also be an invented fiction. It is a pity that the pious Buddhists of the Island are not ashamed of the evil characters of Vijaya. All saffron clad monks all over the Island are very proud of Vijaya who committed wicked and fearful deeds, and plundered people. No wonder Tamils are subject to the same evil treatment to the applause of the monks and the laity. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 47 தொடரும் / Will follow துளி/DROP: 1907 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 46] https://www.facebook.com/groups/978753388866632/posts/32475581668757060/?
  20. 'காதல் சொல்லத் தூண்டாதோ?' பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'காதல் சொல்லத் தூண்டாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32458742860440941/?
  21. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45B பகுதி: 45 B / பின் இணைப்பு - தீபவம்சம் / 'அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை சொல்லவது என்ன?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை: இந்த அசோகன் ஆணையில், இந்தியாவின் பேரரசர் அசோகர் மற்றும் அவரது யோசனையான "தம்மத்தால் வெற்றி" பெறுவது பற்றி, அதாவது, போரை விட நீதி மற்றும் தார்மீக மதிப்புகள் மூலம் மக்களை வெல்வது பற்றிப் பேசுகிறது. அன்பு, கருணை மற்றும் நல்ல ஒழுக்க விழுமியங்களைப் பரப்புவதே மக்களை வெல்வதற்கான சிறந்த வழி என்று அசோகர் நம்பினார். அவர் தனது தருமத்தின் [தம்மத்தின்] செய்தி தனது சொந்த பேரரசுக்குப் அப்பால் பரவியுள்ளது என்று கூறுகிறார். இது எல்லைப் பகுதிகளையும், அறுநூறு யோசனைத் தொலைவில் உள்ள கிரேக்க மன்னர் அந்தியோகஸ் ஆட்சிக்கும் சென்றுள்ளது. அத்துடன், இதனால், டோலமி, ஆன்டிகோனோஸ், மாகாஸ் மற்றும் அலெக்சாண்டர் [Ptolemy, Antigonos, Magas and Alexander] ஆகிய நான்கு கிரேக்க மன்னர்களால் ஆளப்பட்ட நாடுகளுக்கு அவரது போதனைகள் சென்றடைந்ததாகவும் அசோகர் குறிப்பிடுகிறார். அதே போல, தெற்கே சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் தாமிரபரணி வரையிலும் அது (தம்மத்தால் கைப்பற்றப்பட்டது) வென்றுள்ளது என்கிறார். யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது நவீனகால சிரியா, துருக்கி, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்ட கிரேக்க மன்னன் மூன்றாம் அந்தியோகஸ் பற்றி பேசுகிறது. அவரது தலைநகரம் அந்தியோக்கி (இன்றைய துருக்கியில்) இருந்தது. அவரது பேரரசு அசோகரின் மௌரியப் பேரரசுக்கு நெருக்கமாக, மேற்கில் மத்திய தரைக்கடல் கடற்கரையிலிருந்து கிழக்கில் சிந்து நதி வரை நீண்டு, அண்டை நாடாக இருந்தது, அதனால்தான் அசோகர் தனது தர்மத்தின் பரவலைப் பற்றி பேசும்போது அவரைக் குறிப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க. பண்டைய கிரேக்கரால் வரையப்பட்ட உலக வரைபடத்தில் (தொலெமி அல்லது தாலமி (Ptolemy) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியசு தொலெமாயெசு, கிபி 150ல் எழுதப்பட்ட ஜியோகிரபிக்கா என்னும் புவியியல் தொடர்பான நூல் / Claudius Ptolemaeus "Geographia", 150 CE), இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரிய தீவு கிரேக்கர்களால் "Taprobane" என்று குறிப்பிடப்படுகிறது, இது நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கை தீவு என்று அடையாளப் படுத்துகிறார்கள். இந்த சொல், தாமிரபரணி யில் இருந்து பெறப்பட்டது என்று ஊகிக்கிறார்கள். இருப்பினும், வி ஏ ஸ்மித்தின் சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி (Shahbaz Garhi, or Shahbazgarhi) உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் [English translation of the Shahbazgarhi text by V A Smith], தாமிரபரிணி (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) என்பது தமிழ்நாட்டில் ஒரு நதியாகக் காணப்படுகிறது.- சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் தாமிரபரிணி வரை [நதி] என்று இருக்கிறது. / இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வழியாகப் பாயும் ஒரு நதியின் பெயர் இது. சமஸ்கிருத வார்த்தைகளான தம்ரா (Tamra / செம்பு) மற்றும் பர்ணி (parni / இலை) ஆகியவற்றிலிருந்து இந்த பெயர் வந்தது. இந்த நதி இந்துக்களால் புனிதமாகவும் கருதப்படுகிறது. சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி அசோகரின் கல்வெட்டுகள் கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 293 மீட்டர் (964 அடி) உயரத்தில் உள்ளது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 46 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45B https://www.facebook.com/groups/978753388866632/posts/32442451962070031/?
  22. 🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil அமைதியான வடக்கின் கரைகளிலும் காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது அது புனிதமானது, நிலையானது அது மையால் எழுதப்படாத நாள் அது நவம்பர் இருபத்தியேழு! மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம் கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்! பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள் வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள் கதிரவனுடன் உதித்த விவசாயிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள் பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள் வாழ, பேச, வாக்களிக்க, சமமான மனிதர்களாக மதிக்கப்பட சாதாரண உரிமைகளைக் கேட்கும் சாதாரண மனிதர்களே இவர்கள்! அவர்களின் அமைதியான நம்பிக்கைகளை அரசின் இரும்புக்கரம் உடைத்தது அவர்களின் அடையாளத்தை அச்சுறுத்தியது அவர்களின் குரலை பயங்கரவாதியாக்கியது அவர்களின் இருப்பை நசுக்கியது! நீண்ட போர் அரசு திணித்தது முப்பது வருடங்கள் இடம்பெயர்வு எறிகணை வீச்சு, வீடுகள் எரிந்தன குடும்பங்கள், நிலங்கள் உடைந்தன கல்லறைகள் முளைத்தன ஆயிரம்ஆயிரம் மண்ணின் கீழ் அமைதியாக மறைந்தன! வீழ்ந்த ஒவ்வொரு போராளிக்கும் பருவம் அடையாத பிஞ்சுக் குழந்தைக்கும் கற்பு பறிகொடுத்து மரணித்த பெண்ணுக்கும் இரவில் கடத்தப்பட்ட ஒவ்வொரு அப்பாவிக்கும் இப்போது ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது! யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை டொராண்டோவிலிருந்து லண்டன் வரை பாரிஸிலிருந்து சிட்னி வரை இதயத்தில் நிறுத்தி விளக்கு ஏற்றி தமிழர் வணங்கும் நாளிது! போருக்காக அல்ல பழிவாங்குவதற்காக அல்ல கண்ணியத்திற்காக நீதிக்காக உலகம் பார்க்க மறுத்தவர்களுக்காக துக்கப்படுவதற்கான உரிமை இது! விளக்குகள் ஒளிர்கின்றன, உண்மைகள் புலப்படுது தேசத்தின் ஒற்றுமை குலைக்க முடியாது இறந்தவர்களை வணங்க தடுக்க முடியாது சமத்துவம் மறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டாலும் அணைக்கப்படாத சுடராக ஓங்கி எரியும்! நவம்பர் 27 அரசியலல்ல, அன்பைப் பற்றியது தாய்நாட்டிற்காக, மொழிக்காக, தொலைந்து போன குழந்தைகளுக்காக, அழிக்கப்பட்ட உண்மை வரலாற்றுக்காக ஒரு மக்களின் தாய்நாட்டின் அன்பு! ஒவ்வொரு விளக்கும் சிமிட்டும் போதும் உலகம் அழைக்கப்படுகிறது அப்பாவிகள் வணங்கப் படுகிறார்கள் பெயர்கள் பூச்சிக்கப் படுகின்றன! ஏனென்றால் ..... நினைவாற்றல் - ஒரு எதிர்ப்பின் செயல் ஒளி - நீதியின் ஒரு வடிவம் நினைப்பது - அழிக்கப்படுவதை மறுப்பது! சவக்குழிகள் மறைந்திருக்கும் இடத்திலும், குரல்கள் மௌனமாக்கப்பட்ட இடத்திலும், உயிர்கள் திருடப்பட்ட இடத்திலும் ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் பொன்னான, உறுதியான, நித்தியமான விளக்குகள் இன்று எரிகின்றன! தீபஒளியில் வாக்குறுதி வாழ்கிறது ஒரு நாள் உண்மை எழும் சிதறப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் அதே சூரியனின் கீழ் சமமாக நிற்பார்கள்! அதுவரை, ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் - நாங்கள் நினைவில் கொள்கிறோம் நாங்கள் தீபம் ஏற்றுகிறோம் நாங்கள் பேசுகிறோம் நாங்கள் மதிக்கிறோம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🌾 “November 27 — Lamps of Memory On the quiet shores of the North, and the wind-swept plains of the East, a date returns each year— solemn, unbroken, undefeated! November 27. A day written not in ink, but in blood, tears, and the breath of a people who refused to disappear! They were sons who dreamed of universities, daughters who whispered poems in classrooms, farmers who rose with the sun, mothers who hum lullabies to sleeping children, fathers who bent over fields of palmyra shadow— ordinary lives asking for ordinary rights: to live, to speak, to vote, to be treated as equal human beings! But their peaceful hopes met the iron fist of a state that saw their identity as a threat, their voice as a rebellion, their existence as something to erase! And so the long war came— thirty harrowing years of displacement, shelling, burning homes, broken families, broken lands, and a thousand unmarked graves hidden beneath the soil of silence! For every fallen fighter, for every child who never reached adulthood, for every woman whose final cry vanished in the smoke, for every innocent man taken in the night— a lamp now glows! And the Tamil people, wherever they are— from Jaffna to Batticaloa, from Toronto to London, from Paris to Sydney— pause, remember, and pray! Not for war. Not for revenge. But for dignity. For justice. For the right to grieve openly for those the world refused to see! The lamps illuminate more than memory. They expose the truth: that a nation cannot kill its way to unity, that a people cannot be forced to forget their dead, that equality denied returns again and again as the unextinguished flame! November 27 is not about politics— it is about love. The love of a people for their homeland, their language, their lost children, their erased history! And as each lamp flickers, the world is invited— at last— to understand why Tamils bow their heads and whisper the names of the unreturned! For memory is an act of resistance. Light is a form of justice. And to remember is to refuse erasure! So the lamps burn on— golden, steadfast, eternal— in every Tamil home across the globe. They stand where graves were hidden, where voices were silenced, where lives were stolen! And in their glow lives a promise: that one day, the world will hear, the truth will rise, and the Tamil people— scattered, scarred, but unbroken— will stand equal under the same sun that once witnessed their suffering! Until then, we remember. We light. We speak. We honour. Every November 27, and every day after! Kandiah Thillaivinayagalingan, Athiady, Jaffna. துளி/DROP: 1904 [🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” https://www.facebook.com/groups/978753388866632/posts/32427541396894421/?
  23. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 45 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஏன் அசோகனால் புத்த சமயம் பரப்பிய தமிழ் நாடுகளின் பெயர்கள், இலங்கை பண்டைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை?' அத்தியாயம் 8, மொகாலிபுத்தாவால் [Moggaliputta] புத்தரின் நம்பிக்கையைப் பரப்புவதற்காக அண்டை நாடுகளுக்கு தூதுகளை அனுப்புவது பற்றியது. அசோகரின் பேரரசின் பரப்பளவு பற்றிய விபரத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும். தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் அசோகரின் பேரரசுக்கு தெற்கில் உள்ள அண்டை நாடுகளாகும், இதை அசோகர் தனது பதின்மூன்றாவது அரசாணையில் தெளிவுபடுத்தியுள்ளார். அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில் , தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது. / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். அசோகரின் பேரரசுக்கு, இலங்கை அண்டை நாடாக இருக்கவில்லை. கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Chola, Pandya, Kerala, Satyaputra and Tamraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில, சத்யபுத்திரர்கள் யார் என்ற கேள்விக்கு விடையாக ஒரு பிராமி கல்வெட்டு கிடைத்தது. தென் இந்தியயாவின், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் பிராமியில் இருந்த இந்தக் கல்வெட்டில், “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி” என்று காணப்பட்டது, அதாவது, அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. அதாவது, தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்று சொல்லுகிறது. எனினும், இந்த தீபவம்ச அத்தியாயத்தில் இந்த தமிழ் நாடுகள் குறிப்பிடப்படவில்லை. இந்த புறக்கணிப்பில் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் கட்டாயம் இருக்க வேண்டும் அல்லது இந்த தமிழ் நாடுகள் ஏற்கனவே பௌத்த மதத்தை பின்பற்றி வருகின்றன என்பதை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். பௌத்தம் கிமு 300 முதல் 250 வரையான காலப்பகுதியில் தமிழ் நாடுகளுக்கு வந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இலங்கையில் பௌத்தம், இந்தியாவின் பேரரசர் அசோகனிடமிருந்து நேரடியாக வரவில்லை என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். மகிந்தா (அசோகரின் மகன்) மற்றும் சங்கமித்தா (அசோகரின் மகள்) ஆகியோர் பௌத்தத்தை தீவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை நூல்கள் கூறினாலும், இவர்கள் உண்மையான வரலாற்று நபர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். வி. ஏ. ஸ்மித் & ஓல்டன்பெர்க்கின் பார்வை [V. A. Smith & Oldenberg's View]: வி. ஏ. ஸ்மித் என்ற வரலாற்றாசிரியர், பௌத்தத்தின் வருகையைப் பற்றிய இலங்கை வரலாற்றுக் கணக்குகள் கட்டுக்கதைகள் என்று நம்பிய மற்றொரு அறிஞரான ஓல்டன்பெர்க்கைக் குறிப்பிடுகிறார். அசோகரின் கல்வெட்டுகளில் (கல்லில் செதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துக்களில்) இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைப் பற்றி சிறிதளவாவதும் குறிப்பிடவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் இலங்கை பாரம்பரியக் கதைகள் கூறுவதை விட, மெதுவான, குறைவான வேகத்தில் தான் பௌத்தம் இலங்கையில் பரவியிருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது என்றாலும் மேற்கூறிய பார்வையில் சிறு திருத்தம் பின்னர், வரலாற்று ரீதியாக காணப்படுகிறது. V. A. ஸ்மித் தனது புத்தகத்தின் பிற்கால பதிப்பில் (1924), இலங்கையில் பௌத்தத்தை பரப்ப அசோகர் உதவியதாக அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அது அவரது ஆட்சியின் பிற்பகுதியில் நடந்தது என்று கூறுகிறார். சந்தேகத்திற்கான காரணங்கள்: அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் பௌத்த தூதுவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அவை இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைக் குறிப்பிடவில்லை. தம்பபண்ணி (Thambapanni) அல்லது தாமிரபரணி (Tamraparni) என்ற பெயர் அசோகரின் எழுத்துக்களில் காணப்படுகிறது, ஆனால் சில அறிஞர்கள் இது தென்னிந்தியாவில் உள்ள ஒரு நதியைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள், இலங்கை அல்ல. காரணம் அசோகனின் பேரரசுக்கு இலங்கை அயல்நாடு அல்ல. இலங்கை பாரம்பரிய கதை, மகிந்தா அன்னம் போல காற்றில் பறந்து இலங்கை மன்னனையும் 40,000 மக்களையும் உடனடியாக மதம் மாற்றினான் என்கிறது. அறிஞர்கள் இதை நம்புவதற்கு கடினமாகக் கருதுகின்றனர் மற்றும் பௌத்தம் படிப்படியாக பரவியிருக்கலாம் என்று கருதுகின்றனர். அடிப்படையில், முக்கிய வாதம் என்னவென்றால், பௌத்தம் இலங்கையை ஆரம்பத்தில் சென்றடைந்தாலும், அது இலங்கை வரலாற்று நூல்கள் விவரிக்கும் படி கட்டாயம் நடந்திருக்காது. References: [1 Ind. Ant. 1918, pp. 48-9 ; Asoka (R. I. Series, 1919) pp. 47-8. 2 Intro. to the Vinayapitakam, by Oldenberg, vol. I, pp. lii-lv. 3 Imp. Gaz. of India (1908), sub. voc. Tambraparni, pp. 215-16 ; Hultzsch, JRAS.(1910), p. 1310, n.4. Hultzsch, Corpus Ins. Ind. (vol. I), p. xxxix ;p.3, n. 10. Although he revises his opinion and takes Tamraparni to mean Ceylon, he still maintains that it was the name of a river in S. India. Apparently he keeps the problem open. 4 V. Smith, Asoka, p. 50.] இந்த அத்தியாயத்தின்படி, மஜ்ஜந்திகா தேரர் [Majjhantika (also known as Madhyantika was the Indian Buddhist monk of Varanasi who was deputed by Ashoka to spread Buddhism in the regions of Kashmir and Gandhara.] காந்தார தேசத்திற்குச் சென்று கோபமடைந்த நாகர்களை சமாதானப்படுத்தினார். இது இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் இருந்ததற்கான அறிகுறியாகும். மகிந்த தேரரும் இலங்கைக்கு வந்தது, இதே புத்த சமய நம்பிக்கையை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகவே. மகிந்த தேரர் இலங்கைக்கு விசுவாசத்தை நிலைநாட்ட வந்தபோது அவருக்கு வயது சுமார் 32. இந்த அத்தியாயம் மகிந்த தேரரின் 8 - 13 வருகையைத் தவிர, இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 45 A / Appendix – Dipavamsa / 'Why Tamil countries are not mentioned?' Chapter 8 is about sending missions to the neighbouring countries to propagate the Buddha’s Faith by Moggaliputta. Lanka was not a neighbouring country to the Asoka’s empire. See the map of extent of the Asoka’s empire is given below. Tamil countries, Chera, Chola and Pandya are the neighbouring countries in the South to the Asoka’s empire, and Asoka made this clear in his Thirteenth Edict. Asoka says in the Thirteenth Edict that he sent Dhamma missions to neighbouring countries. Lanka was not a neighbouring country to Asoka’s empire. Missions were sent to Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Cola, Pandya, Kerala and Satyaputra. However, these Tamil countries are not mentioned in this chapter. There must be a hidden agenda in this omission or that the author must have been aware that these Tamil countries were already following the Buddhist faith. The Buddhism came to Tamil countries about 300 to 250 B. C. As per this chapter, Thera Majjhantika went to Gandhara and appeased the enraged Nagas. This is an indication that Nagas existed from Lanka to Gandhara. Mahinda Thera came to Ceylon for this purpose of introducing and propagating the Faith. Mahinda Thera was about 32 years of age when he came to Lanka to establish the Faith. This chapter is also not about human historical events that took place in Lanka, except the alleged arrival of Mahinda Thera, 8 - 13. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 45 B தொடரும் / Will follow துளி/DROP: 1903 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45A https://www.facebook.com/groups/978753388866632/posts/32412676671714227/?
  24. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44C பகுதி: 44 C / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இந்தியா இலங்கை மரபுக்களுக்கிடையில் வேறுபாடு ஏன்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] அலகாபாத் தூணில் உள்ள ராணியின் ஆணை கருவாகியின் அறச் செயல்களைக் குறிக்கிறது "கடவுளின் பிரியமானவரின் ஆணைப்படி, எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு, இரண்டாவது ராணியின் பரிசாக இருந்தாலும், ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தர்மம் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவலாவின் தாயாரின் பெருமைக்கு கணக்கிடப்பட வேண்டும்." என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை பாரம்பரியம் மகிந்த என்று அழைக்கப்படும் ஒரு மகனைக் குறிப்பிடுகிறது, அவர் இலங்கைக்கு ஒரு பௌத்த மதப் போதகராக அல்லது தூதராக அனுப்பப்பட்டார் என்று சொல்லுகிறது. ஆனால், இந்த மகன், அவன் தாய் தந்தை வாழ்ந்து, இறந்த வட இந்திய பாரம்பரியத்தில் எதிலும் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes transcribed Xuan Tsang) மகிந்த உண்மையில் அசோகரின் இளைய சகோதரர் (விடஷோகா அல்லது விகடஷோகா) என்றும், அவர், அசோகனின் மகனாக இருக்க முடியாது என்றும் கூறுகிறார் [The Chinese pilgrim Xuanzang states that Mahinda was Ashoka's younger brother (Vitashoka or Vigatashoka) rather than his illegitimate son. Here Vitashoka was a prince of the Maurya Empire as the only full-brother of Ashoka and the only brother left alive by Ashoka]. அவர் மேலும், பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது. என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மகிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் (Romila Thapar) பின்வரும் காரணங்களின் அடிப்படையிலும் மற்றும் பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "சங்கமித்தா" என்ற பெயர், பௌத்த ஒழுங்கின் (சங்க) தோழி என்று பொருள்படும் [The name "Sanghamitta", which literally means the friend of the Buddhist order (sangha)], இது வழக்கத்திற்கு மாறானது [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press, p. 23], ஏன் என்றால் அவள் பிறக்கும் பொழுது புத்த மதத்தில் இருக்கவில்லை. மேலும் இலங்கை ராணியை புத்த மதத்திற்கு நியமிக்க வேண்டும் என்பதற்காக அவள் இலங்கைக்குச் சென்ற கதை மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றுகிறது. அவள் அசோகரின் மருமகன் அக்னிபிரம்மாவை [Agnibrahma] மணந்தார் என்றும், தம்பதியருக்கு சுமனா [Sumana] என்ற மகன் இருந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. அன்று வழக்கத்தில் இருந்த, எக்ஸோகாமி [exogamy / ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பே தான் மணம் செய்து கொள்ள வேண்டு மென்று கட்டுப் படுத்தும் வழக்க மரபு] தொடர்பான சமகால சட்டங்கள் முதல் உறவினர்களுக்கு இடையே அத்தகைய திருமணத்தை தடை செய்திருக்கும் [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.]. மகாவம்சத்தின் படி, அவர் கன்னியாஸ்திரியாக நியமிக்கப்பட்டபோது அவளுக்கு 18 வயது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது கணவர் மற்றும் அவரது குழந்தை புனிதப்படுத்தப்பட்டதாக கதை கூறுகிறது. இவ்வளவு இளம் குழந்தையுடன் அவள் கன்னியாஸ்திரியாக அனுமதித்திருக்க வாய்ப்பில்லை [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 45 A தொடரும் / Will follow துளி/DROP: 1902 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44C https://www.facebook.com/groups/978753388866632/posts/32395692390079322/?
  25. “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025) “சிவப்புத் தீப நாளில்” (நவம்பர் 27, 2025) சிவப்புத் தீப நாளில் கல்லில் செதுக்காத பெயர்களையும் காற்று கிசுகிசுத்து செல்கிறது! சிதறிய தேசத்தின் நினைவுகளை நடுங்கும் எம் இதயங்களில் மீட்டுப் பார்க்கும் நாளிது! தோட்டாக்களுக்கு இடையில் புத்தகங்கள் ஏந்தி விடியலுக்குப் பதிலாக சாம்பல் ஆகிய குழந்தைகளை நாம் நினைவில் கொள்கிறோம்! கண்ணீரால் உலகையே இணைத்த தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்கள் புலம்பல்களாக மாறின வரலாற்றை நாம் நினைவில் கொள்கிறோம்! அநீதியின் புயல்களுக்கு எதிராக எழுந்து பனைமரம் போன்று உறுதியாக நின்ற தந்தையரை நாம் நினைவில் கொள்கிறோம்! வகுப்பறைகள் வயல்களில் எதிர்காலக் கனவுகண்டு சோதனைச்சாவடிகள் துப்பாக்கிச்சூடுகளில் காணாமல் போன இளைஞர்களை நாம் நினைவில் கொள்கிறோம்! முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியது ஒவ்வொரு துளியும் கதையைச் சொல்லுது! நம்பிக்கை மறுக்கப்பட்டது குரல்கள் நசுக்கப்பட்டது வீடுகள் சாம்பலானது சுதந்திரம் கனவானது சுவாசிக்கவும் தடையானது ஆனாலும் உண்மை நிலைத்தது தமிழ் உணர்வு உயர்ந்தது! யாழ்ப்பாணத்தின் பண்டைய மணலிலும் முல்லைத்தீவின் துயரக் கரையிலும் மட்டக்களப்பின் தடாகங்களிலிலும் திருகோணமலையின் புனிதபூமியிலும் மன்னாரின் பண்டைய கடலிலும் கனடா, லண்டன், பாரிஸ், ஒஸ்லோ, சூரிச், சிட்னியிலும் தமிழ் இதயங்கள் துடிக்கின்றன சிவப்புத் தீபம் எழுகிறது! நீதிக்கான தீபம் நினைவிற்கான தீபம் பெயர் தெரியாதவர்களுக்கும் தீபம் கேள்விப்படாதவர்களுக்கும் ஒரு தீபம்! போருக்கான அழைப்பல்ல இது உண்மைக்கான அழைப்பு இது வெறுப்பின் பாடல் அல்ல இது மனிதகுலத்தின் பாடல் இது! சிறிய கல்லறை கூட உலக அன்பின் தீபமே மீறப்பட்ட வாக்குறுதிகளின் தீபமே! வீரர்களாக மட்டும் அல்ல புள்ளி விவரங்களாக அல்ல மறக்கப்பட்ட நிழல்களாக அல்ல தமிழ் மகன்கள் மகள்களாக சமத்துவத்தின் கனவு காண்பவர்களாக கண்ணியத்தை என்றும் தேடுபவர்களாக பூர்வீக இடத்திற்காக துடிப்பவர்களாக நாம் அவர்களை நினைவில் கொள்கிறோம்! அவர்களின் கதைகள் நட்சத்திரங்களாக தலைமுறைகளை முன்னோக்கி வழிநடத்த தியாகம் எல்லாம் விதையாகமாற நீதி அங்கே ஒருநாள் மலரட்டும்! இன்றைய நமது நினைவுகள் காயமடைந்த கடந்த காலத்திற்கும் சுவாசிக்கக் கூடிய எதிர்காலத்திற்கும் பாலமாக இனிமேல் அமையட்டும்! வீழ்ந்தவர்களுக்காக மறக்கப்பட்டவர்களுக்காக எதிர்காலத்திற்காக மண்ணிலிருந்து கடலிலிருந்து வானத்திலிருந்து நம்மிடமிருந்து அழிக்கமுடியாத தியாக பெயருக்காக சிவப்புத் தீப நாளில் ஒரு சுடர் எழுகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “On This Day of Red Flame” (27 November, 2025) On this day of red flame, When the wind carries whispers of names Carved not on stone, But on the trembling hearts Of a scattered nation— We remember. We remember the children Who carried books instead of bullets, But were met with smoke instead of dawn. We remember the mothers Who held the world together with their tears, Whose lullabies became laments For sons who never came home. We remember the fathers Who stood like palmyra trees Against storms of injustice, Their shadows long, their courage longer. We remember the youth, bright as early fire, Who dreamt of classrooms and fields and futures, But found only checkpoints, boundaries, and gunfire. For thirty years, the island bled, And every drop carried a story— Of hope denied, Of voices silenced, Of homes turned to ash, Of freedom dreamt but never allowed to breathe. But still, the Tamil spirit rose. From Jaffna’s ancient sands To the shores of Mullaitivu’s sorrow, From the lagoons of Batticaloa To the seas of Mannar, To Canada, London, Paris, Oslo, Zurich, Sydney— Wherever Tamil hearts beat, A flame rises on this day. A flame for justice. A flame for memory. A flame for those unnamed and unheard. This is not a call to war, But a call to truth. This is not a song of hatred, But a song of humanity. For even the smallest grave Holds a universe of love And a history of broken promises. We remember them— Not as soldiers alone, Not as statistics, Not as shadows of a forgotten war— But as Tamil sons and daughters, Dreamers of equality, Seekers of dignity, Hearts that beat for their rightful place In the land that bore them. May their stories become stars Guiding generations forward. May their sacrifice become seed From which justice one day blossoms. And may our remembrance today Be the bridge Between a wounded past And a future where all can breathe freely. Today, we light the flame— For the fallen. For the forgotten. For the future. For the Tamil name that cannot be erased From the soil, From the sea, From the sky, From us. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025 / 27 November, 2025) https://www.facebook.com/groups/978753388866632/posts/32389047344077160/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.