Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்" "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன் எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !" "நேரம் போகாத சில நாட்கள் நேசம் கிடைக்காத சில உறவுகள் நேரார் தூற்றும் சில வசைகள் நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !" "வெறுப்பு மனதில் குடி கொள்ள வெளிச்சம் மெல்ல விலகிப் போக வெறுமை தனிமை என்னை வாட்ட வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !" "அல்லும் பகலும் என்னை சுற்றி அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து அரை குறையாய் பசிக்கு உண்டு அக்கினியில் போட்ட விறகு ஆனேன் !" "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு நான் வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனேன் !" "முற்றிலும் திட்ட மிட்ட செயல்களாலும் முழக்க மிட்ட கொள்கை வழிகளாலும் முடிந்த அளவு மற்றவனை தாழ்த்தும் முக மூடி மனிதர்களால் விரக்தியானேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நேரார் - enemies, foes, பகைவர் நேசகன் - Washer-man; வண்ணான் உணக்கம் - dry or withered state, உலர்ந்ததன்மை
  2. "காதல் சடுகுடு" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், ஆலமரங்களுக்கு அடியிலும், போரிலாலான இடிபாடுகளுக்கு மத்தியிலும், தாரிணி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அழகு தேவதையாக இருண்ட நாட்களை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பிரகாசமான புன்னகையையும் மற்றும் அவளுடைய தாய்நாட்டின் அமைதியான குளங்கள் போல பிரகாசிக்கும் கண்ககளையும் கொண்டிருந்தாள். "பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!" இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பல வகைக் கண்களுடன் ஒப்பிட்டு தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என அழுத்தமாக கூறுகிறது. அப்படித்தான் அவளின் கண் உண்மையாகவே இருந்தது! ஆனால் அந்த பாக்கியவான் யார் ? ஒரு மதியம், சமூக ஊடகங்களின் முடிவில்லாத உலகத்தால் ஆட்கொள்ளப்பட்ட தாரிணிக்கு கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர் கார்த்திக் என்ற நபரிடம் இருந்து ஒரு குறும் செய்தி வந்தது. அதில் அவன் பாவிக்கும் நேர்த்தியான கார்களின் படங்கள், பரபரப்பான நகரக் காட்சிகள், மற்றும் அவனின் கம்பீரமான தோற்றங்களென பல படங்களும் காணப்பட்டன. இவை கார்த்திக் கண்ணியமாகவும், எளிமையாகவும், ஆனால் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறாரென பரிந்துரைத்தது. "ஹாய் தாரிணி, உங்கள் சுயவிவரம் என் கண்ணில் பட்டது. நீங்கள் அழகான உள்ளம் கொண்டவர் போல் தெரிகிறது. உங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்." என்று கார்த்திக் சுருக்கமாக குறிப்பிட்டு ஒரு கவிதையையும் இணைத்து இருந்தான். "நறுந்துணர் குழல் கோதி பெருங்கொன்றைப் பூச்சூடி பெருந்துயர் தந்தாயே... செங்கருங்கால் அடியார புல்லுருவி நிலம்போலே செவ்விதழே என்நெஞ்சை செய்துவிட்டதேனோ... செல்லாத திசையெல்லாம் - தினம் சொப்பனத்தில் வருகுதடி... கொல்லாத களம் நோக்கி - மனம் பல்லாக்கில் போகுதடி..." கார்த்திக் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து இன்று ஒரு மென்பொருள் பொறியாளராக பண்புரிகிறான். அவனது தாய்நாட்டிலிருந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்தது அவனுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டியது - அவனது வேர்கள், கலாச்சாரம் மற்றும் ஒருவேளை அவன் எதிர்பார்க்காத இடத்தில் அன்பைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அப்படி இருந்து இருக்கலாம்? கண்ணோடு கண் சேர்ந்த பிறகு புன்னகையோடு பொதுவாப் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் தன்னைப் பத்தி, தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து தன்னோட குறிக்கோள் பத்தி பேசுவாங்க. அப்படித்தான் இவர்களின் பயணமும் தொடங்கியது. தாரிணி, அவனது மிதமிஞ்சிய பாராட்டால் அல்லது வேண்டுதலால் மகிழ்ச்சியடைந்து அவனது நவீன வாழ்க்கை முறையால் மயங்கி, அவனுக்கு பதிலளித்தாள். நாட்கள் வாரங்களாக மாறியது, விரைவில் அவர்கள் தினமும் பேசிக்கொண்டிருந்தனர். வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள சவால்கள், வெற்றிகள் மற்றும் ஒரு நாள் இலங்கைக்கு திரும்பும் கனவுகள் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக், தாரிணியை உண்மையாகவே விரும்பினான். ஆனால் அவளோ தனது குடும்பத்தின் நிலையில் இருந்தும் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாடுகளில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற ஆசையையும் மேலும் ஏதோவொன்றிற்கான ஏக்கமும் கொண்டிருந்தாள். டைம்பாஸ் காதல், மனமுதிர்ச்சி இல்லாத காதல், இப்படி நிறைய இருந்தாலும் உண்மையான காதலும் நிறைய இருக்கிறது. காதல் வழக்கம் போல சங்க காலத்திலிருந்து கண்ணிலிருந்தும் செவ்விதழிலில் இருந்தும் தான் ஆரம்பிக்கிறது. அப்படித்தான் இங்கும் ஆரம்பித்தாலும், அவள் அதை ஒரு டைம்பாஸ் காதலாகவே எடுத்துக் கொண்டாள். ஆனால் அது அவனுக்கு தெரியாது. அவர்களது உறவு விரைவில் எதோ ஒரு காதல் உறவாக மாறியது. தாரிணியின் அழகும் எளிமையும் கண்டு வியந்த கார்த்திக், பெரும் வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கினான். அவளும் அதை தனக்கு சாதகமாக தந்திரமாக பாவித்து, அவனிடம் இருந்து மெல்ல மெல்ல பெரும் பணமும் செல்வமும் பல சாட்டுகளை அழகாகக் கூறி பெற தொடங்கினாள். இவைகளை அறியாத அவனோ, உண்மையில் அவளை காதலித்ததுடன் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருவதாகவும், அவர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக அவளிடம் கூறினான். தாரிணியும், தனது சிறிய நகரத்தின் பழமைவாதக் கண்களிலிருந்து விலகி, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விருப்பம் என்று அவனுக்குத் தெரிவித்தாள்.ஆனால் அவளின் திட்டம் அதுவே என்றாலும், அவள் மனதில், அவளின் இனிமையான வார்த்தைகளுக்குக் கீழே வேறு ஒரு எண்ணமும் இருந்தது. யாழ்ப்பாண வாழ்க்கை அவளுக்கு எப்போதுமே கடினமாகவே இருந்தது. நிதிக் கட்டுப்பாடுகள், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் அழுத்தங்கள். தாரிணி கார்த்திக்கை தனது தப்பிக்கும் பாதையாக மட்டுமே பார்த்தாள். கண்களுக்கு அடுத்த காதல் பரிமாற்றம் புன்னகை தான். காதலன் பேச காதலியோட சிரிப்பும், காதலி பேச காதலனோட சிரிப்பும் பார்க்கக் கண் கோடி வேண்டும். எதுக்கு சிரிக்கிறாங்கன்னு அவங்களுக்குத் தான் தெரியும். எதிலும் சிரிப்பு, எங்கும் சிரிப்பு. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் என்ற பாடல் போல், அவன் தன்னை இழந்து அவளுக்குள் சிறைபோய்விட்டான். இந்தப் புன்னகை என்ன விலை ? என்ற பாடலைப் போல அவனும் விலை கொடுக்க, பணம் கொடுக்க வைத்துவிட்டது இங்கு நினைவு கூறலாம். மாதங்கள் கடந்துவிட்டன, கார்த்திக், ஆழ்ந்த காதலில், இலங்கைக்கு விமானத்தை பதிவு செய்தான். தாரிணியை முதன்முறையாகச் சந்திப்பதையும், அவள் தன் கைகளால் தன்னை கட்டிப்பிடித்து அணைப்பதையும், அவளது புன்னகையின் அரவணைப்பை நேரில் பார்ப்பதையும் அவன் கற்பனை செய்தான். மறுபுறம், தாரிணி, அவன் வருவதற்கு முந்தைய நாட்களில் வெகுதூரம் போய் விட்டாள். கார்த்திக் உற்சாகத்தில் நிரம்பி வழியும் அதே வேளையில், அவள் வஞ்சகத்தின் உச்சத்துக்கே போய்விட்டாள். அவனிடம் இருந்தது அவ்வவ்போது பெற்ற பணமும் செல்வமும் அதற்கு துணை நின்றது. யாழ்ப்பாணம் வந்த கார்த்திக் அந்த ஊரின் அழகையும், மக்களின் அரவணைப்பையும் கண்டு வியந்தான். ஆனால் கடைசியாக தாரிணியைச் சந்தித்தபோது ஏதோ ஒரு குழப்பம் அவளிடம் இருப்பதைக் கண்டான். அவன் இணையத்தில் தெரிந்து கொண்ட துடிப்பான, உற்சாகமான பெண் மாதிரி இப்ப அவள் இல்லை. அவள் அவனை வரவேற்றாலும் கவனம் சிதறியதாகத் தோன்றியது, அவள் கண்கள் எதையோ மறைப்பது போல அடிக்கடி விலகிச் சென்றன. கோவில்கள், கடற்கரைகள் மற்றும் யாழின் சின்னமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று, சில நாட்கள் ஒன்றாகக் கழித்தனர். அவர்களின் எதிர்காலத்தை ஒன்றாக இணைக்க, முன்மொழிய வேண்டும் என்பதில் கார்த்திக் உறுதியாக இருந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி பேசும் போது, தாரிணி அதை எதோ ஒரு விதமாக தட்டிக்கழித்தாள். அதுமட்டும் அல்ல, அவளின் பெற்றோரிடமும் இதைப்பற்றி பேச அவனுக்கு இடம்கொடுக்கவில்லை. தனக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், தன் குடும்பத்தை விட்டு வெளியேற இன்னும் தயாராக இல்லை என்றும் அவள் கூறினாள். ஒரு மாலை, அவர்கள் யாழ்ப்பாணம் நகரத்தின் அண்மைக்கால பொழுதுபோக்கு திடலாக மாறிவரும் யாழ்ப்பாணம் கோட்டையின் தெற்கு பக்கமாக அமைந்துள்ள பண்ணை கடல் கரை ஓரமாக நட்சத்திரங்களுக்கு அடியில் அமர்ந்திருந்த போது, கார்த்திக் தைரியத்தை வரவழைத்து தன் காதலை, திருமண முடிவை முன்மொழிந்தான். அவன் ஒரு சிறிய வெல்வெட் பெட்டியை வெளியே எடுத்தான், அதன் உள்ளே ஒரு மென்மையான வைர மோதிரம் இருந்தது. அது அவனது அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம். அவன் அவள் முன் மண்டியிட்டான், அவன் இதயம் துடித்தது, அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டான். தாரிணி தயங்கினாள், அவள் முகத்தில் ஆனால் உண்மையில் முகமூடி தான் இருந்தது. என்றாலும் இனியும் காலம் கடத்தாமல், ஒரு தேர்வு அல்லது முடிவு அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவனிடம் பெற்ற பணமும் செல்வமும் அவளை மாற்றிவிட்டது. அவளுக்கு அது ஒரு பகட்டு வாழ்வுக்கு வழியும் வகுத்தது. அதனால் சில பணக்கார ஆண்களும் அவளின் பாய் பிரின்ட் அல்லது ஆண் நண்பர்களாகி விட்டார்கள். எனவே இப்ப அவள் கார்த்திக்கை ஏற்றுக்கொள்வதா இல்லை பல மாதங்களாக அவள் வகுத்த திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா என்பதில் ஒரு தயக்கம் கண்டாள். என்றாலும் செயற்கையாக வரவழைக்கப் பட்ட ஒரு கட்டாய புன்னகையுடன், அவள் மோதிரத்தை ஏற்றுக்கொண்டாள், அது வைர மோதிரமும் ஆச்சே. ஆனால் அவளுடைய உள் நோக்கங்கள் உண்மையானவை அல்ல என்பதை அவள் நன்கு அறிவாள். பாவம் கார்த்திக், ஒன்றும் புரியாத காதல் அப்பாவி!! அதன் பின் கார்த்திக் நம்பிக்கையுடன் கனடாவுக்குத் திரும்பினான், அவளுடைய விசாவை ஏற்பாடு செய்து அவர்களின் எதிர்கால வீட்டை தயார் செய்வதாக உறுதியளித்தான். இதற்கிடையில் தாரிணி தன்னை மேலும் மேலும் தூர விலக்க ஆரம்பித்தாள். அவளுடைய செய்திகள் குறைந்தன, அவளுடைய அழைப்புகள் குறுகின. குடும்பக் கடமைகளைப் பற்றி, மற்றும் திருமண வேலைகளைச் செய்து முடிப்பதில் உள்ள போராட்டங்களைப் பற்றி அவள் சாக்குப்போக்கு சொல்வாள். மாதங்கள் கடந்தன, கார்த்திக்கிற்கு சந்தேகம் அதிகரித்தது. ஒரு நாள், சமூக வலைதளங்களில் உலாவும் போது, அவனது மனதைக் கனக்கச் செய்யும் ஒரு பதிவு தடுமாறியது. தாரிணி வேறொருவருடன், கொழும்பைச் சேர்ந்த ஒரு பணக்கார தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டாள் என்பது தெரிய வந்தது. அவனை அது, அதே மோதிரம் சூட்டிய யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இருந்து பல குண்டுகள் கொண்டு தாக்கியது போல் இருந்தது. மனம் உடைந்து ஏமாந்து போன கார்த்திக் அவளை தொலைபேசியில் எதிர்கொண்டான். தாரிணி, எந்த வருத்தமும் இல்லாமல், "காதல் என்பது வெறும் விளையாட்டு, ஒரு சடுகுடு விளையாட்டு. இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. இங்கு அது 'காதல் சடுகுடு' கார்த்திக். நீ கனடாவில் இருக்கிறாய், உன் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறாய். நான் இங்கே பிழைக்க வேண்டும். நீ ஒரு அணி, நான் ஒரு அணி. யாருக்கு ஏமாற்றி பிழைக்க தெரியுமோ அவன் வென்றுவிடுவான். என்ன செய்வது நீ கடைசியாக தந்த விலை மதிப்பற்ற வைர மோதிரம் எனக்கு, என் வாழ்வுக்கு இன்னும் பகட்டை தந்தது. நான் 'காதல் சடுகுடு' ஆடுகளத்தின் நடுக்கோட்டை உன்னை ஏமாற்றி தாண்டிவிட்டேன். அவ்வளவுதான் , பாவம் நீ ? என்றாள். நொறுங்கிப் போன கார்த்திக், உடைந்த இதயத்தின் பாரத்தைச் சுமந்துகொண்டு கனடாவில் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான். அன்று இலங்கையில் எம் மொழி, உரிமை, பண்பாடு போன்றவற்றின் இருப்புக்காக குண்டுகளை எம் உடலில் ஏற்றோம். இன்று அது என்னவாச்சு ? தாரிணி, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 'காதல் சடுகுடு' விளையாட்டை விளையாடி, அதில் ஏமாற்றி வெற்றி பெற்று கொழும்பில் தனது வாழ்க்கையைத் ஆடம்பரமாக தொடங்கினாள். ஆனால் கார்த்திக், புலம்பெயர்ந்து கனடாவில் வசித்தாலும் அவன் பண்பாட்டு விழுமியத்தின் ஒரு முத்து, 'காதல் சடுகுடு'வில் தோற்றத்தில் அவனுக்கு கவலை இல்லை, அது அவனுக்கு இன்று ஒரு பாடமே, அனுபவமே, அவ்வளவுதான் !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "ஆதிக்க சாதி வெறி" கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும். அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம் என்கிறது . கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் / பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: அதிகாரம்-8 ,சுலோகம்-4,14 , அடிமைத்தனம் சூத்திரருடன் பிறந்தது. அதில் இருந்து எவராலும் அவர்களை விடுவிக்க முடியாது. அதிகாரம்-19 ,சுலோகம்-413 , பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும். அடிமையாகவே வாழவேண்டும். அடிமையாகவே சாகவேண்டும் . "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது இந்த ‘மனுதர்மம்’. "இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எப்படி பட்டவன் என்று கூற இயலும். மனுநீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே.? வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே." -திருநாவுக்கரசர் (தேவாரம்) உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம். இவரது இனத்தை புலையர் என்பார்கள். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார். நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ ?யார் அறிவார் ? நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கருத்து பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மனுதர்மத்தை [மனுஸ்ம்ருதி] நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற மனுதர்மத்தை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும். ஒரு சூத்திரன் சூத்திரருக்கு என வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள், அந்த வர்ண சாத்திர எல்லைக்குள், நல்லவனாக செயல் பட்டால், அவன் அடுத்த பிறவியில் பிராமணனாக பிறக்கலாம். ஆனால் இந்த பிறவியில் ஒரு போதும் இல்லை. இதன் பொருள் என்ன ? இது ஒரு மிகவும் புத்திசாலித்தனமான சமயத்தின் பெயரில் தீட்டப்பட்ட திட்டம் . இன்னும் ஒரு "பிரெஞ்சுப் புரட்சி (French Revolution,]" நடை பெறாமல் தடுக்க ? நன்றி
  4. "அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" "சூரியன் மறைய, தனிமை வாட்டுதா சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா சூதுவாது தெரியா, அழகு தேவதையே சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்" "நேர்த்தியான சுருள்முடி, தோளைத் தழுவ நேரே வந்து, புன்முறுவல் எனோ நேரார் வருமுன், நான் அணைக்கவா நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்" "புத்தன் சொன்ன, கருனை இரக்கம் புரிந்தோர் சொற்பர், இன்று இருக்கினம் புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்" "அரசு தராத, பேச்சு சுதந்திரம் அழகி உன்னில், நான் காண்கிறேன் அக்கம் பக்கம், யார் இருந்தாலும் அச்சம் இன்றி, காதல் பேசு" "உன் கன்னத்தில், ஒருவன் அறைந்தால் உன் மறுகன்னத்தை, காட்டு என்றான் உகவை கொண்டு, கன்னத்தில் தந்தேன் உலோபி இல்லாமல், மறுகன்னம் காட்டாயோ " "வலிந்த குடியேற்றமும், காணாமல் போக்குவதும் வளமான ஜனநாயக, அரசின் செயல்பாடோ வளைத்துநெளித்து, மனதை காணாமல் போக்குவதும் வனப்பான எழில் மேனியின், செயல்பாடோ" "அதிகாரம் குவிய, இருபதாம் திருத்தமாம் அற்பன், தொப்பி பிரட்டி கைதூக்கினான் அன்பு குவிய, உள்ளம் திருத்தி அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [சூசகம் - மறைமுகம், நேரார் - பகைவர், புங்கலம் - ஆத்துமா, உலோபி - கருமி]
  5. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 27 ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பல களிமண் சிற்பங்களில் பெண் தெய்வீக உருவங்கள் உள்ளன. சில விக்கிரகங்களில், பெண் உருவத்தின் வயிற்றிலிருந்து செடி ஒன்று வளர்ந்திருக்கிறது. எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதியான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம். உடை அரைகுறையாகச் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், பல நகைகளும், விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின் மேல் புகை படிந்து இருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப் பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப்படலம் சொல்கிறது. சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை உடையவர்களாக இருந்தனர் என்பது விந்தையானதன்று. பண்டைய நாகரிகம் நிலவிய எகிப்து, சுமேரியா முதலிய இடங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின என்பது குறிப்படத்தக்கது. எந்த ஒரு சமுதாயத்திலும் தலைமை தெய்வம் பெண்ணாக இருந்தால் அங்கு பெண்கள் கட்டாயம் நாளாந்த வாழ்வில் மதிப்பளிக்கப்படுவார்கள். அத்துடன் சர் ஜான் மார்ஷல் சிந்து வெளி சமயத்தில், பெண் இயல்புகள் ஆண் இயல்புகளை விட, உயர இல்லாவிட்டாலும் குறைந்தது சமமாக இருந்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். சிந்து சம வெளி மக்கள் தமது இறந்த உறவினரை, அடக்கம் செய்தல் மூலமாகவோ அல்லது தகனம் செய்தல் மூலமாகவோ [அந்த மாண்டவரை] அப்புறப்படுத்தினார்கள். அது மட்டும் அல்ல அந்த இறந்து போனவரை, வீட்டுப்பயன் பாட்டுப் பொருள்களான மட்பாண்டப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் தினம் பாவிக்கப்படும் பண்டங்களுடன் புதைத்தார்கள். மேலும் அவர்கள் தகனம் செய்யும் போதும், அங்கு எடுத்த சாம்பலை களி மண்ணால் செய்யப்பட்ட தாழியில் பாதுகாத்து வைத்தார்கள். இந்த இரண்டு முறையும் அவர்கள் மறுமையை [afterlife] நம்பினார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு புறம் ஆரியர் சமுதாயம் விரிவுபட்ட குடும்பமாகவும் ஆணாதிக்க தந்தை வழி [patriarchal] குடும்பமாகவும் இருப்பதுடன் அங்கு மகன் பிறப்பதை மிகவும் விரும்பியதாகவும் தெரிகிறது. மகன் பின் தமது மந்தைகளை கவனிப்பார்கள், போரில் தமக்கு கௌரவம் கொடுப்பார்கள், கடவுளுக்கு தியாகம் செய்வார்கள், சொத்துக்கு வாரிசுரிமை பெற்று அதை குடும்ப பெயர் வழியில் கடத்துவார்கள் போன்ற பல எண்ணங்களின் பிரதிப்பலிப்பாக இது இருக்கலாம். மேலும் கணவரின் சாவின் பொழுது அங்கு மனைவிவின் சடங்கு ரீதியான தற்கொலை [ritual suicide] எதிர் பார்க்கவும் பட்டது. இதுவே சதி [sati] என்றழைக்கப்படும் உடன் கட்டை ஏறுதல் தோன்ற வழி சமைத்த தாகவும் இருக்கலாம். மறுபுறம் ஹரப்பான் சமுதாயம் ஒரு பெண் ஆதிக்க தாய் வழி [matriarchal] சமுதாயமாக காணப்படுகிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட பல சிறிய பெண் உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்கள், அவற்றிலே உருவகப் படுத்தப்பட்டுள்ள காட்சிகள், தாய் தெய்வத்தின் செல்வாக்கு அங்கு நிலவியதை காட்டுகிறது. மேலும் இன்னும் சிந்து வெளி எழுத்துக்கள் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. ஆகவே இந்த பெண் சிலைகளின் அடிப்படையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல, சிந்து வெளியில் காணப்பட்ட சிவலிங்கம், பின்னர் வேதத்தால் இழிவு படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொல் பொருள் ஆய்வாளர்களின் கருத்தின் படி, சிந்து வெளி பெண் தெய்வம் எந்த ஒருவரினதும் துணைவி என்ற பதவிக்குள் முடங்காமல், மிகவும் சுதந்திரமானவர் ஆகவும் காணப்பட்டார். என்றாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு வைதீக இந்து புராண தெய்வங்களில் [orthodox Hindu pantheon] இருந்து துணை கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வளப்பத்தை அல்லது செழுமையை குறிக்கும் லிங்கம், யோனி போன்றவற்றை பெரும் அளவில் அங்கு தோண்டி எடுக்கப்பட்டது இதற்கு உதாரணமாகிறது. இந்த மேலோங்கிய பெண் கூறுகள், அங்கு வழிபாடு, பெண் ஆதிக்க தாய் வழி அம்சமான, பெண்ணை நோக்கி இருந்ததை அறிவுறுத்துகிறது. திராவிட பண்பாட்டில் பெண் தன் கணவனை தானே தன்பாட்டில் தேர்ந்து எடுக்கும் உரிமை இருந்தது உதாரணமாக இலங்கை அரசன் இராவணனின் தங்கை, சூர்ப்பனகை தனது காதலை [ஆசையை] காட்டில் கண்ட ஆரியரான இராமனிடம் கூறுகிறாள். ஆனால் இராமனோ அவளை தனது தம்பி,இலட்சுமணனிடம் அனுப்புகிறான். இங்கு தான் நாம் ஆரிய திராவிட மோதலை காணுகிறோம். இலட்சுமணன் அவள் வெட்கம் அற்றவள் எனக் கருதி, அவளின் மார்பகங்களையும், மூக்கையும் வெட்டித் துரத்திவிடுகிறான். இது மேலும் திராவிடர்கள் நேசமானவர்கள்,பரஸ்பரம் அளவளாவக் கூடியவர்கள், வலுச் சண்டைக்குப் போகாதவர்கள் என்பதையும், அங்கு திராவிட பெண் ஆரிய பெண்களை விட மிக அதிகமான சுதந்திரத்துடன் வாழ்ந்தாள் என்பதையும் காட்டுகிறது. இன்னும் ஒரு உதாரணமாக, தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆனால் அவன் எந்த சூழ் நிலையிலும் சிறைப்பிடிக்கப்பட்ட அவளை கட்டாயப்படுத்தவும் இல்லை மானபங்கம் செய்யவும் இல்லை. ஏன், தனக்கு சாபம் இருக்குது என்றால், வேறு யாரையாவது ஏவிக்கூட அப்படி செய்யவில்லை என்பதைக் கவனிக்க. இதை எல்லா உரைகளும் கூறுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. முன்பு ஒரு காலம் ஆரியரே இந்தியாவிற்கு நாகரிகத்தை கொண்டு வந்தார்கள் எனவும், இந்து சமயத்திற்கு திராவிடர்களின் பங்களிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை எனவும் கருதப்பட்டது. ஆனால் இந்த தவறான வாதம் இப்ப சர் ஜான் மார்ஷல் அவர்களின் மொஹெஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாய்வின் பின், வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அவர் முடிந்த முடிவாக இந்து சமயத்தின் பெரும்பாலான அம்சங்கள் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என நிரூபித்து உள்ளார். உதாரணமாக தாய் தெய்வ வழிபாடு, சிவ [பசுபதி] வழிபாடு, காளை, குரங்கு, யானை போன்ற மிருகங்களுக்கான பெரு மதிப்பு, மர வழிபாடு, லிங்க, யோனி, உருவம் அற்ற கல் வழிபாடு, யோகா போன்றவை ஆகும். உண்மையில் இவை வேத பிராமண சமயத்துக்குள் [அல்லது இந்து சமயத்துக்குள்] பிற்பாடு உள்வாங்கப்படவையாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 28 தொடரும்
  6. "மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்] / இரண்டாம் பாகம் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவாரம் பாடிய மூவருடன் மற்றும் மணிவாசகர் பாடல்களில் வாழ்க்கைச் சக்கரத்தின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். இந்த நால்வரும் உடலை இழுக்கென்று கருதி, அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர். உதாரணமாக, சுந்தரர் தனது தேவாரத்தில், மதத்தையுடைய யானையின் மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அப்போது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர்; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் என "மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள், செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்" என்று பாடுகிறார். மேலும் இன்னும் ஒரு பாடலில், மனிதனாக மட்டும் அல்ல, இவ்வுலகில் ஓர் உயிராக தோன்றி விட்டாலே, மரணம் என்பது நிச்சயம் என்று "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரமனை வாழ்க்கை, மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்சமனத் தீரே" என்று பாடுகிறார். ஆனால், “சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்” என்பது ஒரு பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் எம்மால் செய்ய முடியாது என்பது உண்மை, எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணி பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. எனவே, திருமூலர் இதை வலியுறுத்தி, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்,உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.” என்கிறார். அதாவது, உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறார். மேலும் “உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், உடம்பினுக் குள்ளேயுறுபொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.” என்கிறார். அதாவது உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு உடலை பாதுகாத்தேன் என்கிறார் சைவ சித்தாந்தம் தந்த திருமூலர். இந்த உலக வாழ்வு எந்த ஒரு நோக்கமும் இன்றி கடவுளால் ஏற்படுத்தி இருக்க முடியாது. எமக்கு இங்கு ஏற்படும் நல்லவையும் தீயவையும் காரணம் இன்றி நடைபெறாது. இந்த துயர்மிகுந்த / பரிதாபத்துக்குரிய உலகில் கடவுள் எம்மை காரணம் இன்றி வைத்திருக்கிறார் என்றால், நாம் எப்படி அவரை அருளிரக்க முடையவனே / மன்னிக்குமியல் புடையவனே ["Merciful"] என அழைப்போம் எனவும் சைவம் வினாவுகிறது. மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து, அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம் - திருமூலர் தமது திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார். இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!" [திருமந்திரம்] இன்னும் சற்று ஆராய்ந்த போது இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்தவரும் ஒரு நாள் மரணிக்கிறார். கெட்டவரும் மரணிக்கிறார். இறந்த பின்பு என்ன நடக்கிறது என்ற இந்த கேள்விக்கும் பதில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகவே, பிறப்பு, இறப்பு - இந்த இரு விடயங்களும் எப்படி இந்து மதத்தின் பகவத் கீதையில் சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம். "தேஹினோ' ஸ்மின் யதா தேஹே ,கௌமாரம் யௌவனம் ஜரா,ததா தேஹான்தரப் ப்ராப்திர்,தீரஸ் தத்ர ந முஹ்யதி" (பகவத் கீதை 2.13 ), இதன் கருத்து "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை" என்கிறது. மேலும் கண்ணன்,“என் மனசுக்கு பிடிச்ச அர்ஜுனா !" என்று அழைத்து ,கவலையோட அழுதுக்கிட்டு உட்கார்ந்த அர்ஜுனனைப் பார்த்து , "ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்,நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।,அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ,ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥," அதாவது, ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது ! ஒரு சமயம் இருந்து அப்புறம் அழிஞ்சு போவது இல்லை இந்த ஆத்மா! உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை ! என்று கூறுகிறான். சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி எல்லா மதங்களிலும் கூறப்படுகிறது. அது போல, சைவ சமயமும் சொர்க்கம் மற்றும் நரகம் என்பது நாம் செய்யும் நன்மை தீமையினை பொறுத்தே கிடைக்கின்றதாக கூறுகிறது. தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தவரும் "நான் 96 வயதில் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று பக்தர்களுக்கு உறுதிபட ஆருடம் கூறிய வரும், அதன் பின் எட்டு ஆண்டுகளின் பின், ‘கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் பரத்வாஜா கோத்ரத்தில் பிரேம சத்ய சாய்பாபாவாக எனது அடுத்த பிறவி இருக்கும்’ என்று ஆருடம் கூறிய வரும், ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபா வின் அவதாரம்’ என தனது இன்றைய வாழ்க்கையை கூறிய வரும், அப்படியான அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே அவருக்கு தெரியாமலே மரணமானார், இதில் இருந்து நாம் அறிவது என்ன? மரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்பதை எவராலும் ஊகிக்க முடியாது என்பதாகும். மேலும் பட்டினத்தார் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா" என்றும், சுந்தரமூர்த்தி நாயனார், உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; என "வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்" என்று பாடுகிறார். என்றாலும் இன்று ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். சோதிடர்களிடமும் கூட்டம், சுவாமிகளின் ஆச்சிரமத்திலும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளி வைத்து விட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது ஆகும்! மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்து கொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன். மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு, இறப்பைக் குறித்தத்துடன், அவன் பயன் படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன. மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம். அது பண்பாட்டு உருவம் கொள்ளும் போது பல்கிப் பெருகும் சொற்களாயின. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "மழைக்காலம்" ஒரு காலத்தில், பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரத்தில், ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் எப்பொழுதும் இயற்கையின் அழகில் தன்னை இழந்து, அதில் இன்பம் காண்பவள். அதிலும் அவளுக்கு பிடித்தமான காலம் மழைக்காலம். ஆவணி புரட்டாசி மாதம் என்றால் அவளின் மகிழ்வை சொல்லவே முடியாது. மழைத்துளிகள் மலையில் நடனமாடி ஓடும் விதம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் புரட்டிக்கொண்டு நெளிந்து வளைந்து துள்ளி செடிகள் மரங்களுக்கிடையே, பெரிய பாம்புபோல ஊர்ந்து போவது, அவள் இதயத்தை நிரப்பி ஒரு மகிழ்ச்சி உணர்வை, ஒரு மயக்கத்தை தானாகவே ஏற்படுத்தும். அதை பார்த்து ரசிக்கத்தான் அவள் கார்காலத்தை விரும்பினாள். ஏன் பெயர்கூட ஈரநிலா, ஆமாம் மழையில் நனைந்த நிலா அவள்! ஈரநிலா நகரின் ஓரளவு வசதியான பொது நூலகத்தில் உதவிப் நூலகராகப் பணிபுரிந்தாள். எனவே ஓய்வு வரும்பொழுது எல்லாம், தன் நேரத்தை புத்தகங்களால் நிரப்பப்பட்ட அலமாரிகளில், காதல் மற்றும் சாகசக் கதைகளில், தன்னை இழந்தாள். அதில் காணப்படும் கதாநாயகியாகவே பலவேளையில் ஆழமாக மாறிவிடுவாள், அது அவளுக்கு தனது சொந்த காதல் வாழ்வை எப்படி எப்படி அமைக்கவேண்டும் என்று ஒரு கற்பனை வடிவத்தை கொடுத்து, அப்படி அனுபவிக்க கனவில் ஏங்கினாள். ஒரு நாள் ஒரு மழைக்கால பிற்பகலில், ஈரநிலா ஒரு காதல் நாவலில் மூழ்கியிருந்தபோது, இசைநிலவன் என்ற இளைஞன் தன் இலக்கிய தேடுதலுக்காக, பணிமனையில் இருந்து கொட்டும் மழையியில் கொஞ்சம் நனைந்தவாறு, கலைந்த தலைமுடியுடன் நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்தான். அவன் கையில் கட்டப்பட்டு இருந்த நீல நிற மணிக்கூடு ஐந்துமணி என்று காட்டியது. இன்னும் ஐந்து மணித்தியாலம் நூலகம் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவன், மற்றவர்களை குழப்பாதவாறு மெல்ல மெல்ல அடியெடுத்து மெதுவாக, அதே சமயம் கண்கள் மேலோட்டமாக மேய்ந்தவாறு உள்ளே, இலக்கிய பகுதியை நோக்கி நடந்தான். அது ஈரநிலாவின் கவனத்தையும் எனோ ஈர்த்தது. அதிகமாக குழம்பிய தலை முடியும், கம்பீரமான தோற்றமும், நேர் கொண்ட கூரிய விழிகளும், புன்னகைக்க மறுக்கும் இறுகிய உதடுகளும், பரந்த மார்பும் கூட காரணமாக இருக்கலாம்? இப்ப அவள் படித்துக்கொண்டு இருந்த காதல் நாவலில், இலக்கியத்தில் வர்ணித்த தலைவன் இவனோ என்று அவள் ஆச்சரியத்தில் பார்த்தது போல இருந்தது. இசைநிலவன் பல்வேறு புத்தகங்களை ஆர்வத்துடன் பிரட்டி பிரட்டி பார்த்தபடி நூலகத்திற்குள் அலைந்தான். ஈரநிலாவின் கண்கள் இன்னும் அவனையே எந்த வெட்கமும் இன்றி பார்த்துக்கொண்டே இருந்தது. அவளது இதயமும் ஒவ்வொரு கணமும் கொஞ்சம் வேகமாகத் துடித்துக்கொண்டு இருந்தது. அவன் தன்னை திருடுவது போல அவள் உணர்ந்தாள். இறுதியாக, அந்த ஈர்ப்பின் தாக்குப்பிடிக்க முடியாமல், ஈரநிலா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இசைநிலவனை அணுகினாள். வான்முகந்த நீர் மழை பொழியவும், மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும், மாரி பெய்யும் பருவம் போல் அவள், மழைபொழிந்த நதியாய் வளைந்து நெளிந்து சிறிய புன்னகையுடன் கடலான அவனை அணுகினாள். "ஹலோ," என்று ஈரநிலா அவனிடம் சொன்னாள், அவள் குரலில் வெட்கம் நிறைந்திருந்தது. "புத்தகத்தைக் கண்டுபிடிக்க ஏதாவது உதவி வேண்டுமா?" இசைநிலவன் சட்டென திரும்பினான். மழைநீர் கழுவிய இலை முகம் போல, மணம் விரிந்து நிறம் பொழியும் பல பூக்கள் போல, மழை நனைந்து கிளையமர்ந்து தலை துவட்டும் பறவைகள் போல, கார் நிலையாலே நீர் நிலை நிரம்பி ஊர்விழி கவரும் ஆம்பல்கள் போல, அவளின் அழகும் புன்னகையும் அவனை ஒருதரம் அப்படியே அசைத்துவிட்டது. அவன் ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் ஒரு சூடான குறும் புன்னகை பரவியது. அது, புன்னகை வீசிடும் கார்முகில் போல மின்னியது. "நிச்சயமாக, நான் அதை பாராட்டுகிறேன்," என்று அவன் பதிலளித்தான், கோடை மழை போல அவனது குரல் இனிமையாக இருந்தது. பழைய தரமான [கிளாசிக் / classic] கதைகள் நிறைந்த பகுதிக்கு ஈரநிலா இசைநிலவனை வழிநடத்தினாள், அங்கு அவர்கள் புத்தகங்கள் தேடிக்கொண்டு, தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய தங்கள் தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் இருவரும் இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கிடையேயான தொடர்பை இன்னும் இன்னும் நெருக்கமாக வலுப்படுத்தியது. வெளியில் இன்னும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், ஈரநிலாவுக்கு இசைநிலவன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு விரைவாக போக உதவினார். அந்த மழைக்கூடான பயணம் இருவர் இதயத்திலும் காதல் மழையையும், அதேநேரம் வீதியின் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இரங்கி எற, அவர்களின் ஈர உடல்கள் முட்டி மோத, ஈரநிலா, தான் விழாமல் இருக்க அவனை இறுக்கி பிடிக்க, யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே! என்பது போல இருவரும் ஒருவராகி, அந்த மழைக்கு நன்றி செலுத்தினர். அதன் பின் நூலகத்தில் அவர்கள் சந்திப்பது வழக்கமான விடயமாக மாறியது, இது மழைக்காலம் என்பதால், அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே என்பது போல, அவர்களின் காதலும் அழகாக மழையாக பொழிந்து அவர்களை நெருக்கமாக்கியது. அவர்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கவும், பரிந்துரைகளைப் பரிமாறவும், அவர்கள் படித்த பக்கங்களுக்குள் புதிய உலகங்களைக் கண்டறியவும் அவர்களின் உறுதியான நட்பு உதவியது. ஒவ்வொரு நாளும், இசைநிலவனுடனான தனது தொடர்பு புத்தகங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதை ஈரநிலா உணர்ந்தாள். அவனுடைய அன்பும், புத்திசாலித்தனமும், புரிதலும் ஒரு மென்மையான மழையைப்போல் அவளது ஆன்மாவில் பெய்தது. இசைநிலவனும் ஈரநிலாவின் முன்னிலையில் ஆறுதல் அடைந்து, தன்னை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு துணை கிடைத்ததைப் போல உணர்ந்தான். காதல் கண்ணை மறைக்கும் என்பது எல்லாம் பொய் என்பது போல, ஈரநிலா மிக கவனமாக மெல்ல மெல்ல பழகி பழகி, அவன் பெயர் கேட்டு, அவன் நிலை கேட்டு, ஊர் கேட்டு, அவை அறிந்த பின்பே தான், அவன் மேல் நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். "முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" ஒருநாள் அவர்கள் இருவரும், நகரத்தின் வழியாக உலாவ முடிவு செய்தனர். அவர்கள் கைகோர்த்து நடக்கையில், கார்மேகமும் உணர்ச்சி பட்டதோ என்னவோ, மழைத்துளிகள் அவர்களைச் சுற்றிப் பாய்ந்தன, ஈரநிலாவால் தன் இதயத்தின் உணர்ச்சிகளின் எழுச்சியை உணராமல் இருக்க முடியவில்லை. அவனும் 'ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே' என்று கேட்பதுபோல அவளின் நனைந்த உடலை பார்த்தான். அவன் அவளை பக்கத்தில் தெரிந்த ஆலமரத்தின் அடியில் கொஞ்சம் மழைக்கு ஒதுங்க அழைத்தான். அவள் முகம் அவனை பார்த்து சொல்லாத பாசத்தால் பிரகாசித்து, "இசைநிலவன்" என அவள் கிசுகிசுத்தாள், அவள் குரல் பலவீனத்தால் நடுங்கியது, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றது. அதே ஏக்கமும் மென்மையும் நிறைந்த இசைநிலவனின் கண்கள் அவளைச் சந்தித்தன. "ஈரநிலா, நாங்கள் சந்தித்த முதல் நாளிலிருந்து என் இதயம் உனக்காக ஏங்குகிறது," என்று அவனும் ஒப்புக்கொண்டு, "நான் உன்னை ஆழமாக காதலிக்கிறேன்." என்றான். அந்த நேரத்தில், மழைத்துளிகள் ஆலமர இலைகளின், கிளைகளின் இடைவெளியினூடாக சொட்டு சொட்டாக விழுந்ததால், அவர்கள் தங்களை அறியாமல் ஒரு உணர்ச்சிமிக்க முத்தத்தை பரிமாறினர். அது தான் அவர்களின் முதல் முத்தம். ஒரு காலத்தில் ஈரநிலாவின் நேசத்துக்குரிய தோழனாக இருந்த மழை, அவர்களின் அன்பின் நித்திய அடையாளமாக மாறி, அவர்களை ஒன்றிணைத்த அழகான மழைகாலமாக மாறியது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "உறவை மறவாதே" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "உறவை மறவாதே நட்பைக் குலைக்காதே உலகம் உனதாகும் கைகள் இணைந்தாலே! உயிரும் உடலுமாக ஒன்றி வாழ்ந்தாலே உயர்ச்சி பெறுவாய் மனிதம் காப்பாற்றுவாய்!" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்பாதே தேசம் ஒன்று உனக்கு உண்டே! தேய்வு அற்ற உறவைச் சேர்த்து தேசியம் காக்க ஒன்றாய் இணை!" "ஆதி மொழி பேசும் மனிதா ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ? ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆறஅமர்ந்து ஒன்றாய் நின்றால் என்ன?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால் ! உதவும் கரங்கள் வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உவகை கொண்டு எல்லோரையும் அணைக்கட்டும்!" "யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்று சொன்னான் எமக்கு வேதமாய்! யாவரும் ஒன்றாய்க் கூடி இருந்து இன்று ஒன்றாய் களத்தில் நிற்போம்!" "கூட்டுக் குடும்பம் கூடி மகிழவே கூத்து அடித்து ஆடி மகிழவே! கூழும் கூட அமுதம் ஆகும் கூடிக் குலாவி ஒன்றாய் இருந்தால்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்] உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும். ஒரு மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இந்த இறைசக்தி (அல்லது சக்தி / ஆற்றல்) ஆகும். சக்தி கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா ? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்கு என்றுமே கிடையாது என்கிறது ["Energy can neither be created nor destroyed"]. உடலினின்று செயல் பட முடியாத ஒரு நிலைக்கு நோயினால் உடல் மிகவும் தளர்ந்து விடும் போது அல்லது ஏதாவது காரணத்தால் உடல் முறிந்து விடும் போது அல்லது விபத்தில் சிக்கிக் கொள்ளும் போது அல்லது குடித்துவிட்டு கல்லீரலை அழித்துக் கொள்ளும் போது அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போகும் போது அல்லது மிகவும் வயதாகி விட்டதால் உடல் தளர்ந்து விடும் போது, உயிரை தக்கவைத்துக் கொள்ள, இந்த உடலால் முடியாது போனால், ஆன்மா பிரிந்து சென்று, வேறு ஒரு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் வாழ்க்கைச் சுழற்சியை ஆரம்பிக்கிறது. இப்படி பல சுழற்சியின் பின், இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சத்தை, அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை, அடைகிறது என்கிறது இந்து சமயம். இன்றைய இந்து சமயத்தின் கிளை நெறிகளில் ஒன்றாக உள்வாங்கப் பட்ட சைவம், எல்லா மதமும் சம்மதம் [எம்மதமும் சம்மதம்!] என்கிறது!. நீர், மழைத்துளியாக விழுந்து, வெள்ளமாக பெருகி, நதியில் கலந்து, கடலில் சங்கமித்து, ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக நீர் பூமியில் விழுகிறது. ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான். நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் முழு நிலை அல்லது நிறைவு வரும் வரை உட்கார வைக்கிறார்கள். அப்படியே ஆத்மாவும் முழு நிலையை அல்லது பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது. நமது சைவ நூல்கள் (சாஸ்திரங்கள்) ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது. அதாவது பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. அது ஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை நடைபெறுகிறது. இந்த உண்மையை மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் அழகாக பாடுகிறார். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்" இங்கு, மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனி வராய் , தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார். ஆகவே மரணம் என்பது ஒரு பெருந்துன்பம் [great calamity] அல்ல. ஒரு முடிவும் அல்ல. உதாரணமாக, மகாபாரதத்தில், மிகவும் கலங்கி, தவிக்கும் அருச்சுனனை பார்த்து கண்ணன் கூறுகிறான்: ' ஓ ! அர்ஜுனா, உன் துயரம் நியாயம் அற்றது. போர்க்களத்தில் வெற்றி, தோல்வி சகஜம். மரணம் என்பது ஒரு நியதி ... உடல் தான் மரணமடையும், ஆன்மா அழியாதது.' என்கிறான். மேலும் இல்வாழ்க்கையில், வினைப் பயன்களுக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள். இளமை, மூப்பு போல, இறப்பும் நிச்சயமானது. மரணம் என்பது உடலை துறப்பதே ... ஆன்மா என்றும் இருப்பது! மரணத்திற்குப் பின் ஆன்மா புதிய உடலைப் பெறுகிறது என்கிறான் கண்ணன். அதாவது மரணத்தால் தனது செல்வழியை சரிபடுத்தி மீண்டும் இவ்வுலகில் திரும்பி வந்து தனது பயணத்தை தொடர்கிறது எனலாம். அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிட பிறவியை எடுத்துள்ளோம். அதை நாம் மதிப்போம்" என்று ."பிறவி பாவமானது அல்ல". "இது கடவுளால் தந்த கொடை." , "இந்த அருமையான மானிட பிறப்பை, நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான [எடுத்ததிற்கான], அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார். இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. உதாரணமாக, மாதவி தன் மகள் மணிமேகலையைப் பத்தினித்தெய்வம் கண்ணகியின் மகள் என்று தன் தோழி வயந்தமாலைக்குக் கூறி, அவளை அறவண அடிகளிடம் அடைக்கலப்படுத்துகிறாள். அப்போது பிறந்தவர்க்குப் பெருந்துன்பம், பிறவாதவர்க்குப் பேரின்பம், பற்றால் பிறவி வரும் என்று அடிகள், தனது அருளுரையை. "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிகென்று அருளி" (மணிமேகலை, ஊர் அலர் உரைத்த காதை) என வழங்குகிறார். மேலும் உதயகுமரன் இறந்ததற்காகப் புலம்பும் மணிமேகலை, உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளதால், நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை [நரகத்தை] அடைதலும், உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர் என "பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்" (மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை) என்று வாழ்க்கைச் சக்கரத்தைப் பற்றி இங்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இந்த கருத்தை முதன்மையாக வலியுறுத்தி அவர்கள் பரப்புரை [பிரசாரம்] செய்தனர். இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது, எல்லோரையுமே பொதுவாக இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] இரண்டாம் பாகம் [சைவ மதம் /இந்து மதம்] தொடரும்
  10. "நிழலாடும் நினைவுகள்" "நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும் நித்திரை செய்கையில் கனவாய் வரும்! மகரிகை தொங்க வலதுகால் வைத்து மணமகளாய் வந்தது படமாய் போச்சு! ஆறடி சேலையில் தொட்டில் கட்டி, காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு! வாழையடி மரபை பெருமையாக பேணி வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது! இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 03 சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப் [Dr.Pope] "சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற் பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப் பட்டது என்று கூறியுள்ளார். தமிழர்களின் படிப்படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி, அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும், நான்கு வேதங்களின் சிந்தனைகளாலும் அதன் நடை முறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது. ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது. பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின், முந்தியது திராவிட குழுவினருக்கு [தமிழருக்கு] உரியது ஆகும். திராவிட குழுக்களிலும் தமிழரே, வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள். ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும். எனவே, சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது. எடுத்ததற்கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும். ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்கவில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே, தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக, மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளையும் தாண்டி, 'சிவஞான போதம்' என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார். அதற்கு முன், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப் பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன், இன்னும் ஒரு இலக்கியம், பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின. இவையும் சைவ சித்தாந்தம் போல், மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த நூல்களின் தொகுப்பை பன்னிரண்டு திருமுறைகள் என அழைக்கப் படுகின்றன. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும். இது மிக உயர்ந்த கருத்துக்களும், மறைபொருட்களும் கொண்ட, ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல, இது தீர்க்கதரிசி மற்றும் துறவிகளின் ஆன்மீக அனுபவங்களை கொண்டுள்ளதே. மற்றவைகளை விட மிகவும் முக்கியமானது ஆகும். இது, அறிவாளர்களை அன்றும் இன்றும் வியப்பில் ஆழ்த்துக்கிறது. இது பல புதிர்களைக் கொண்டுள்ளது. இதன் நூல் ஆசிரியர்,இந்த புதிர்களை,இன்னும் ஒரு புதிர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறார். உதாரணமாக, திருமூலரின் எட்டாம் தந்திரத்தில், ஒரு பாடலை பாருங்கள். எப்படி இது புதிர் மூலம் புதிரை தீர்க்கிறது என்பது உங்களுக்கு புரியும். "மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே" ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் சோதனையிடுவதற்க்காக இன்னொரு தச்சன் போனான். அவன் தன்னோடு தன் குழந்தையையும் கூட்டிக் கொண்டு போனார். மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.மர யானையைப் சோதிப்பதற்காக அவன் அப்பாவான தச்சன் நெருங்கிய போது குழந்தை, "அப்பா யானைக்கு கிட்டப் போக வேண்டாம் அது முட்டி மோதும்" என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், "இது மரப் பொம்மைதான்; முட்டாது, மோதாது" என்று சொல்லிச் சமாதானம் செய்து குழந்தையையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான். குழந்தைக்கு அந்த வாகனம் உண்மையான யானையாகவே இருந்தது. அது, மரம் என்கிற உண்மையை குழந்தையிடமிருந்து மறைத்தது. அதே சமயத்தில், அது யானை மாதிரி இருந்தும், தச்சன் பயப்படாததற்குக் காரணம், அது மரம்தான் என்கிற அறிவு அவனிடம் இருந்ததேயாகும். யானை வேறு,மரம் வேறு இல்லை என்பது போல் பரமாத்மா வேறு,உலகம் வேறு இல்லை என்று இப்படி எடுத்துக் காட்டி விளக்குகிறார் திருமூலர். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன ? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன? ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல் படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முது மொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன், இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு- 192 இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடுகிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்து காட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும், விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் - புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்! "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆறாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." அது மட்டுமா, விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து; "நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள் நமது செயல்களேயன்றி பிறரல்ல" என்று நயம்படி உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்! மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எமது திருக்குறள், மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது. என்றாலும் அவர், வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை. முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டு இருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கிறது. இங்கு கருத்து அற்ற சடங்குகளுக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு" வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலர். இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார். இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி-1421 யில் "கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம், முற்பத ஞான முறைமுறை நண்ணியே, சொற்பத மேவித் துரிசற்று மேலான, தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே." என்று காணப்படுகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). எனவே ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப் பட்டது இந்த சைவசித்தாந்தம் ஆகும், மேலும் இதன் சிறப்பு என்ன வென்றால், இது பொதுவாக, தர்க்க ரீதியானது (Logic), அறிவியற் பூர்வமானது (Scientific), வரலாற்றுத் தொன்மையுடையது (Historic), நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt), உலகளாவியது (Universal) மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic) ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 தொடரும் "An analysis of history of Tamil religion" - PART: 03 The Saiva Siddhanta System [சைவ சித்தாந்தம்] is the most elaborate, influential, and undoubtedly the most intrinsically valuable of all the religions of India. It is peculiarly the South Indian and the religion and philosophy of the Tamil people. Dr.Pope says: "Saivism is the old pre-historic religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of the Tamil people. "The Saiva Siddhanta as it appears to be, is solely a product of the evolution of thought of the Tamils. It is a well known fact that the agamic [tradition or "that which has come down"] principles and the religion that is associated with are intrinsically different from the vedic thought and practices, So-much-so the two cannot be conceived to belong to the same nationality. If the latter belongs to the Aryans. the former falls to the lot of the Dravidians [Tamils]: Of the Dravidians too, the Tamils only seem to have had a culture which extends back wards even before the vedic period. Therefore the presumption that the Tamils are responsible for the production of the Saiva agamas is not without force or truth, and this presumption leads us to the logical conclusion that Saiva Siddhanta belongs to the Tamils. Hence, Since Saiva Siddhanta is belonged to be a system built up by the Tamils, One would expect a host of Tamil literature on the subject. Disappointment will be starting in the face, If anyone looks for early Tamil work on philosophy & religion. The learned among the ancient Tamils of the historical period did not choose to write philosophic and religious treatises in Tamil. It was only in the thirteenth century AD, When there was a social upheaval and religious turmoil in the Tamil nadu that Meykanda Thevar broke off all traditions and appeared with his Siva Gnana Potham [சிவஞான போதம்] in Tamil, indicating among other things the culmination of the Tamilian genius in speculative philosophy; for before his time it was the fashion of the Tamils except for two minor works, thiruvunthiyar & thirukkalirrup padiyar, [திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார்] to write philosophic and religious works in Sanskrit language. In addition to the above, there is another class of literature of a devotional kind which are as important as the Saiva Siddhanta. These books form what are called 'The twelve Thirumurai' [திருமுறை], All belongs to fifth to seventh century AD. The 5th century AD, Thirumoolar's Thirumanthiram [திருமந்திரம்] recognized as the tenth Thirumurai, deserved special attention. It is important not because it has a high literary merit, but since it contains a record of the spiritual experiences of a seer and a saint. It has puzzled and is puzzling many an intelligent reader; for it is full of riddle and author tries to solve for us the riddle of existence by means of riddles. As an example, We are giving below a poem from his eighth thanthiram [தந்திரம்], which deals with the experience stages of soul. ["மரத்தை மறைத்தது மாமத யானை" ] "Think of wood Image of toy-elephant recedes; Think of toy-elephant Image of wood recedes; Think of elements five Thought of Param recedes Think of Param Thought of elements recedes." If there is an elephant wooden statue, for the one who sees the beauty of the elephant carving it does not appear as a log of wood, Whereas for the one who looks at the material of the make the elephant form does not catch the attention as much as the fact that it is made of wood. Similarly all these manifestations we see in the world conceal the presence of God. Whereas the enlightened one sees the Supreme in all the things ! Saiva Siddhanta, as a system of philosophy, first assumes a palpable form in Tirumantiram, composed by Saint Tirumular of 5th century AD, who said: "The Lord made me, my task assigned, In sweetest Tamil His Glory to expound ./ "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே". The term Siddhantam also was first used by this great Saint / Saiva mystic (சித்தர்) Tirumular [திருமூலர்] in his great work, Tirumantiram [திருமந்திரம்] verse 1421.["தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே."] “Having learned all that learned must be. Having practised all yoga that have to be, They, then, pursue the path of Jnana in graduation sure, And so pass into the world of Formless Sound beyond; And there, rid of all impurities, Envision the Supreme, the Self-created; They, forsooth, are the Saiva Siddhantis true." It is stated here that the goal of Saiva Siddhantam is to get rid of all impurities. Who am I? Is there a God? What are the natures of God, Soul and the cosmos? What is my relationship with God and the worldly things? What is the reason for happenings in life over which one has no control? Such questions often arise in any philosophical system. Saiva Siddhanta gives plausible answers and explanations to them. This philosophy does not advise us to practice anything against nature or interfere with freedom and liberty of people. There is no place for superstitions and blind faith. In the name of God and religion, it does not divide or dissect people. The founders and propagators of the Saiva religion and philosophy are broad minded and noble hearted. They taught us that "God is LOVE and LOVE is God" ["அன்பே சிவம்" "ANBE SIVAM." -"தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" / "Thennadudaiya Sivane potri; Ennattavarkkum iraiva potri"] ie God and Love are not two, but identical! This saying, which permeates Tamil literary and social thought, is a revolutionary statement that departed from the contemporary opinion that love was a means to God (but not God itself, by implication).Our Saiva view of life is universal even 2000 years ago. The Tamils, as a race, have always evinced a broad outlook on life and have set a high premium for all humane virtues. They were basking in the sunshine of culture and civilisation when more than half the globe was completely enveloped in darkness and weltering in savagery. Here is a poem by Kaniyan Pungundranar, from our Sangam Tamil classic Puranaanooru, long before Julius Caesar had crossed the Rubicon in 49 B.C., which will testify to you the clarity of expression, the universality of views and a comprehensive range of vision about the very fundamentals of life, enjoyed by this ancient race in that remote past: "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" / “Yaathum Uure, Yaavarum Keelir” - words fit enough to be engraved in gold at the portals of the United Nations in New York today. "All places are ours, all our kith and kin; Good and evil come, not caused by others; Pain and relief are brought likewise, not by others; Dying is not new; nor living gave us joy; Misery we hated out. As in the flood, Caused by clouds that poured in torrents On a mountain top with lightning flash. A raft goes in the direction of the stream, So the swarm of lives move onward In the way of destiny. This we have discerned From the teachings of sages strong in wisdom So we admire not the great; nor scoff at the churl." (Purananuru-192) So, this says "every country is my own and all the people are my kinsmen." & also it is guided by the universal concepts ["ஒன்றே குலம் ஒருவனே தேவன்"/ “Onre Kulam Oruvane Thevan”] "All humanity is one family, and God is but one!". Our Thirukkural [திருக்குறள்], outlined a four fold path of positive life-affirmation based on Aram [அறத்துப்பால் / righteousness,] Porul [பொருட்பால் / wealth], Inpam [காமத்துப்பால் / pleasure] and fulfillment [வாழ்வில் நிறைவு அடைதல்] leading to a Saiva religious way of life without recourse to meaningless rituals and foolish blind faith. Though Thiruvalluar specifically not mentioned about fulfillment, He could have simply assumed that, If any one who followed the first three paths successfully will automatically fulfill his life. "வையத்துவாழ்வாங்கு" / "Vaiathu valvangu" living well the earthly life is the aim. And Saivism has echoed and re-echoed the sentiments of well-being of all ."எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே" / "ellorum inbutrirukka ninaippathuve..." Let there be prosperity for all!. In brief, Saiva Siddhantam is Logic, Scientific, Historic, Easy to Adapt, Universal as well as Optimistic. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 04 Will follow
  12. "ஆசிரியர்" [உலக ஆசிரியர் தினம் 2024 அக்டோபர் 5 சனிக்கிழமை / World Teachers' Day 2024 Saturday 5 October] "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" "பெற்றோர் இருவரும் வேலைக்கு போக பெரிதாக கவனம் இல்லாமல் போக பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!" "குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம் குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" "காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!" "மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை மருந்துக்கு கூட இன்று ஒழுக்கமுமில்லை மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" "ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும் ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும் ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும் ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" "சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும் சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" "பெற்றோர் இருவரும் வேலைக்கு போக பெரிதாக கவனம் இல்லாமல் போக பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!" "குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம் குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" "காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!" "மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை மருந்துக்கு கூட இன்று ஒழுக்கமுமில்லை மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" "ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும் ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும் ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும் ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" "சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும் சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 ஆம் தேதி ஆகும் Teacher's Day is celebrated in India on September 5 to honour the contribution of teachers in our lives. Every year, Teacher's Day is celebrated in India on September 5 to commorate the birth anniversary of former President Dr Sarvepalli Radhakrishnan. BUT World Teacher’s Day 2022 falls on Wednesday, October 5th.
  13. எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான் கண்ட முதல் வைத்தியரும் நீயே.... மண்ணும் பெண்ணும் உய்ர்ப்புடமை அம்மா....தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என் அழுகையில் பதறி சிரிக்கையில் மகிழிந்த்வளே.... நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "தூரத்துப் பச்சை" போரின் பின் தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க நகரமாக இன்று மாறி வரவேற்கும் இலங்கை வடபகுதியின் எல்லையில் இன்னும் துயரமுகத்துடன் யுத்த வடுக்களை தங்கியவண்ணம் அந்தக் கிராமம் இருக்கிறது. விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி, முகத்தில் யுத்தம் கொடுத்த கொடும் காயங்களை வரைந்தபடி அவள் தன் மகன் கண்ணனுடன் நின்றாள். வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று முன்னைய நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன. யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் இன்னும் அதன் எல்லைப் பகுதி காணப்படுகிறது. இந்த கிராமமும் அதனை சுற்றிய கிராமங்களும் நம்பிக்கையுடன் மீளக் குடியேறி சில ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால், அன்றைய மனதை குளிரச் செய்த காட்சிகளும் இதமான காற்றையும் வீதிக்கு அருகாக கூட வரும் ஆற்றையும் இன்று காணவில்லை. நீண்ட கால விவசாயக் கிராமமான அது 1950களில் மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை கடந்த கிராமம் இது. அப்படிச் சொல்வதைவிட ஆறு தலைமுறைகளின் உழைப்பில் வளர்ந்த கிராமம் என்றே சொல்லலாம். அது தான் இன்று பச்சையை இழந்து இப்படி வாடி இருக்கிறது. இலங்கையின் வறண்ட வட சமவெளிகளுக்கு இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான அங்கு, மக்கள் எளிமையான வாழ்க்கை இன்று வாழ்கின்றனர். அவர்களின் நிலம் இப்ப கடுமையாகக் காணப்படுகிறது. விளைநிலங்கள் பயிர்களை விளைவிக்க போராடுகின்றன. ஒவ்வொரு நாளும் கொளுத்தும் வெயிலுக்கும், மழைக்குப் பதிலாக புழுதியை வீசிய காற்றுக்கும், போருக்கு முந்தைய சிறந்த காலத்தின் நினைவுகளுக்கும் இடையில் இன்று அந்தக் கிராமம் தன்னை மீண்டும் கட்டியெழுப்ப போராடிக்கொண்டு இருந்தது. ஆனாலும், அந்த மக்கள் தங்களிடம் உள்ளதைக் குறித்து பெருமிதம் கொள்வதில் எள்ளளவும் குறையவில்லை. மாலை நேரங்களில், அன்றைய வேலை முடிந்ததும், கிராமத்து பெரியவர் அப்பா சுந்தரத்திடம் கதைகள் கேட்க, கிராம மக்கள் ஆலமரத்தடியில் கூடுவார்கள். அவரது கதைகள் புனைவுகளால் நிரம்பியுள்ளன, சில பழமையானவை, சில போரினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் அடிக்கடி சொன்ன ஒரு கதை இருந்தது, அது "தொலை தூரத்துப் பச்சை [பசுமை]" கதையாகும். "இது மலைகளுக்கு அப்பால் உள்ளது," அப்பா சுந்தரம், தொலைதூர அடிவானத்தை சுட்டிக்காட்டி, "மிகவும் செழிப்பான, மிகவும் வளமான நிலம், சிறிய விதை கூட வலிமையான மரமாக வளரும். அங்குள்ள ஆறுகள் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் ஓடுகின்றன, மேலும் மண் வளமானது. பசி தெரியாத இடம், பூமி தாராளமாக செழிப்பை கொடுக்கிறது" என்றார். தங்கள் சொந்த முயற்சிப் போராட்டங்களால் சோர்வடைந்த இளைய கிராம மக்கள் இந்தக் கதைகளால் மயங்கினர். அன்றாட வாழ்க்கையின் சுமைகள் மறைந்து போவதாகத் தோன்றும் அந்த தொலைதூர இடத்தில் அவர்கள் வாழ்வதாக அவர்கள் அடிக்கடி கற்பனை செய்தனர். இந்த இளம் கிராமவாசிகளில் ஒருவரான அந்த கண்ணன் என்ற வாலிபன் குறிப்பாக இந்த கதையில் முற்றாக தன் மனதைப் பறிகொடுத்தான். போர் அவர்களின் வயல்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பறித்தது. ஒரு காலத்தில் பசுமையாக செழித்து வளர்ந்த இடத்தில், இப்போது வறண்ட பூமி மட்டுமே, விரிசல் மற்றும் தரிசாக உள்ளது அது தான் கண்ணனின் தாயின் முக்கிய கவலை. அதை அவள் தன் மகன் கண்ணனிடம் பலதடவை கூறியுள்ளாள். அப்பா சுந்தரத்தின் ஒவ்வொரு சொல்லும் அவன் காதில் மோதிக்கொண்டு இருந்தன. "பரம்பரை பரம்பரை பரம்பரையாக பெரிய மரங்கள் உயர்ந்து நிற்கும் , ஆறுகள் தாராளமாக ஓடும். மோதலுக்கு முன்பு, தமிழ் விவசாயிகள் அந்த நிலத்தை நோக்கிப் போனதாகவும் அப்பா சுந்தரம் கூறியதை கண்ணன் மறக்கவில்லை. கிராமத்தில் மூத்தவரான அப்பா சுந்தரம், அடிக்கடி புளியமரத்தின் நிழலில் அமர்ந்து, தொலைந்து போன சொர்க்கத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார். அதை கண்ணனும் குந்தி இருந்து கேட்பான். “அங்கு, சூரிய ஒளி அரிதாகவே தரையைத் தொடும் அளவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. புதிய மல்லிகைப்பூவின் வாசனையுடன் காற்று இனிமையானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலம் பசுமையானது. ஆனால்…” அப்பா சுந்தரத்தின் குரல் சற்று நின்றது, “இது தூரத்து பச்சை. அதனால் நாம் இன்னும் அங்கு பொதுவாக போகவில்லை. கனவில் மட்டுமே, கதையில் மட்டுமே நின்றுவிட்டது" என்றார் பெரியவரின் பேச்சைக் கேட்டதும், கண்ணன் மலைகளை ஏக்கத்துடன் பார்த்தான். வறண்ட வயல்கள் மற்றும் இடைவிடாத வெப்பம் கொண்ட அவனது கிராமம், தொலைதூர பசுமையைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் அணுஅணுவாக உணர்ந்தது. பல மாதங்கள் கனவு கண்டு, ஒரு நாள் கண்ணன் ஒரு முடிவெடுத்தான். அவன் தன் கிராமத்தை விட்டு வெளியேறி மலைகளுக்கு அப்பால் உள்ள அந்த பசுமையான நிலத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டான் . ஆனால் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. "கண்ணன், இந்த நிலம் எங்கள் வீடு" என்று அவன் தந்தை கூறினார். "இது கடினமாக இருக்கலாம், ஆனால் இது நம்முடையது. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாங்கள் வாழப்பார்க்க வேண்டும். நீ தேடுவது பொய்யாகக் கூடப் போகலாம்?" என்கிறார். ஏன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உனக்கு தெரியாதா என்று முடித்தார். ஆனால் கண்ணன் மனதை உறுதி செய்தான். அடிவானத்திற்கு அப்பால் வாழ்க்கை நிறைந்த ஒரு நிலத்தை கற்பனை செய்துகொண்டிருக்கும் போது அவனது கால்களுக்குக் கீழே விரிசல் விழுந்த பூமியைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை. ஒரு விடியற்காலையில், அவன் தனது பயணத்தைத் தொடங்கினான். அவன் போகும் வழியில், செழித்த தென்னை மற்றும் மா மரங்களுக்கு இடையில் எறிகணையால் உயிரிழந்த மரங்களும் முகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றன. அவனுக்கு பல ஞாபகங்களை அந்தத் தெருக்கள் கிளறிக் கொண்டிருந்தன. அவன் இன்னும் கொஞ்ச தூரம் செல்லும் பொழுது, அண்மையில் குடியேறி பாம்பு தீண்டியதனால் மரணித்த சிறுவனின் வெற்றுடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு தூரம் உன்னை பொத்திப் பொத்தி கொண்டு வந்த பிறகு பாம்பு உன்னை தின்று விட்டதே? என்ற அந்த சிறுவனது தாயின் அழுகை அந்தப் பகுதியை மட்டும் அல்ல அவனையும் உறைய வைத்தது. மேலும் பாடசாலையடி கடுமையான போர் நடந்த களமுனை போலும், பக்கத்தில் உள்ள பல வீடுகள் சிதைந்திருந்தன. பாடசாலையின் பக்கத்தில் உள்ள முன்பள்ளிகள் கூரை அலுவலகங்கள் கூரை பொது மண்டபங்கள் எல்லாம் அழிந்த நிலையில் வீழ்ந்து கிடந்தன மிதிவெடிகள் விதைக்கப்பட்ட நிலம் என்று, பார்க்கும் இடமெல்லாம் ‘மிதிவெடிகள் கவனம்’ என்ற வார்த்தைகள் தொங்கிக்கொண்டு இருந்தன. மிதிவெடி அபாயப்பலகைகள் உக்கி உடைந்து போகும் நிலையிலும் அந்தப் பகுதிகளில் மக்கள் பெரியளவில் குடியேறவில்லை என்பதைக் கவனித்தான். பல குடும்பங்கள் திரும்பி வந்து அறிந்த தெரிந்த வர்களின் காணிகளில் கூடாரம் அமைத்திருந்தார்கள் . அந்த தெருவின் தொடக்கத்தில் ஒரு காணியில் கூடாரத்தை நட்டு ஒரு குடும்பம் இருந்ததது. அதன் முற்றத்தில் குழந்தைகள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் காணிகளுக்கு மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் குடியிருக்க அனுமதிக்காத காரணத்தினால், அந்தக் காணியில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள் போலும். அப்படி பல குடும்பங்களைப் பார்த்துக்கொண்டு தன் பயணத்தை கண்ணன் தொடர்ந்தான். சனங்களறற்ற பல காணிகளை தாண்டிச் சென்ற பொழுது ஒரு குடி ஆற்றங்கரை ஒன்றின் பக்கத்தில் தங்கள் காணியில் உள்ள தென்னைகளில் விழுந்த ஓலைகளை பின்னி அழகான வீடு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வயதான தாய் ஓலைகளை பின்னிக் கொண்டிருக்கிறார். பழைய வீடு இடிந்தபடி அப்படியே பக்கத்தில் இருக்கிறது. குழந்தையும் தாயும் மண்ணெடுத்து வந்து வீட்டிற்கு கொட்டுகிறார்கள். அழகான மண் அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிற அந்த குடியைச் சேர்ந்த மூதாட்டி இந்த நிழலில் வந்து கிடக்க எத்தனை இடர்களுக்கு முகம் கொடுத்தோம் என கண்ணனிடம் சொல்லி பெரு மூச்சு விட்டார். இவற்றை எல்லாம் தாண்டி மலைகளில் ஏறிய அவன் தனது கிராமத்தை திரும்பிப் பார்த்தான். கிராமம் சிறியதாகவும் சோர்வாகவும் காணப்பட்டது, அதன் வயல்கள் பல வருட போராட்டத்தால் பச்சை இழந்து இருந்தது. அதை விட்டுவிட்டு போவது அவனுக்கு ஒரு நிம்மதி உணர்வைக் கொடுத்தது, மலைகளின் உச்சியை அடைந்ததும் அவன் இதயம் எதிர்பார்ப்பில் துடித்தது. கற்பனை நிலத்தை, தன் கனவுகளை நிரப்பிய தொலை தூரப் பசுமையைப் பார்க்க எதிர்பார்த்து அங்கேயே நின்றான். ஆனால் கீழே உள்ள பள்ளத்தாக்கைப் பார்த்தபோது, அவனதுஉற்சாகம் குழப்பமாக மாறியது. அந்த தூரத்து நிலம் கதைகள் கூறியது போல் பசுமையாக இல்லை. உண்மையில், அது அவன் கிராமம் போலவே இருந்தது. தன் கிராமத்தைப் போல,அதே கடுமையான வெயிலால் காய்ந்து, வாடி, தேய்ந்தது இருப்பதைக் கண்டான், ஆனால் அங்கு யுத்தத்தின் வடுக்கள் மட்டும் இல்லை. கண்ணன் பள்ளத்தாக்கில் இறங்கினான், ஒருவேளை அவன் போதுமான தூரம் செல்லவில்லை என்று நம்பினான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, நிலம் அவன் விட்டுச் சென்றதை விட வேறு எதையும் வழங்கவில்லை. அங்கு அவன் சந்தித்த கிராம மக்கள் அதே போராட்டங்கள், அதே வறண்ட மண், அதே மழைக்கான ஏக்கம் பற்றி பேசினர். கேட்காத கானங்கள் இனிமையானது.பார்க்காத ஒன்று பச்சையாக தெரியும். அருகில் சென்றால் நம்மை முகம் சுளிக்க வைக்கும். 'தெரிந்த பேய்க்கு பழகிய நிலையில் தெரியாத தேவதையை நாடுவது ஆபத்தானது' என பழமொழி உண்டு. அக்கரை பச்சைக்கு நாட்டம் இல்லை. இக்கரை எதுவோ அதுவே பூஞ்சோலை. அது அவனுக்கு அப்பத்தான் காலம்கடந்து புரிந்தது! கண்ணன் விரைவில் உண்மையை உணர்ந்தான். அவன் கனவு கண்ட பசுமையான நிலம், குறைந்தபட்சம் அவன் கற்பனை செய்த விதத்தில் இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகவும் சரியானதாகத் தோன்றியது, உண்மையில், அவனுடய சொந்த வீட்டிலிருந்து வேறுபட்டதல்ல. இந்த மண்ணின் போராட்டங்கள் தனது கிராமத்தில் நடந்ததைப் போலவே இருந்தன. பசுமையான மேய்ச்சல் நிலங்களின் கதைகள் அவனது சொந்த ஆசைகளின் பிரதிபலிப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டறிந்தான். கனத்த இதயத்துடன் கண்ணன் தனது கிராமத்துக்கு திரும்பினான். கிராம மக்கள் அவனை மீண்டும் வரவேற்றனர், அவன் தனக்கு பழக்கமான தன்னுடைய கிராம வயல்களில் நடந்து செல்லும் போது, அவனது பார்வையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. விரிசல் விழுந்த பூமியும் வறண்ட காற்றும் ஒரு காலத்தில் அவனை விரக்தியில் ஆழ்த்தியது, இப்போது பழைய தோழர்கள் போல் தோன்றியது. கடினமான இந்த நிலம் அவனுக்குச் சொந்தமானது. அன்று மாலை, கிராம மக்கள் மீண்டும் ஒருமுறை ஆலமரத்தடியில் கூடியபோது, அப்பா சுந்தரம் கண்ணனிடம் தன் கதையைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். கண்ணன் தன் மக்களின் முகங்களைப் பார்த்தான், ஒரு காலத்தில் தான் வெறுப்படைந்த நிலத்தைப் பார்த்து, பேசினான். மனம் எப்போதுமே இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆலாய் பறக்கும். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு எல்லாமே அழகாகத்தான் தெரியும். மலையும் அதன் காட்சிகளும் தொலைவிருந்து பார்க்கும்போது அழகாக இருக்கும். பசுமையான புல்வெளிகள் நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும் போது தான் கொள்ளை அழகு என்று சொல்லி பிரமிக்க வைக்கும். இக்கரையோ அக்கரையோ எதுவாக இருந்தாலும் பசுமையாக வைப்பது நம் கையில்தான் உள்ளது. இருப்பதில் திருப்தி கொண்டு வாழ அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும். அக்கரையைப் போல இக்கரையையும் பச்சைப் பசேலென்று பசுமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் மனம் தனக்குள்ளே பேசிக்கொண்டது "நான் மலைகளுக்கு அப்பால் சென்றேன், நான் எதிர்பார்த்தது இல்லை, என்பதை நான் அங்கு கண்டேன். அங்குள்ள நிலம் நமது நிலத்தை விட பசுமையானது இல்லை. நம்மிடம் இல்லாதது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கற்பனை செய்கிறோம், ஆனால் உண்மை என்ன வென்றால், ஒவ்வொரு இடத்திற்கும் அதன் அதன் போராட்டங்கள் உள்ளன. இந்த எம் நிலம், அதன் எல்லாக் கஷ்டங்களோடும், நான் தேடியதை விடக் குறைவான தகுதியுடையது அல்ல. கிராம மக்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், மெதுவாக அவர்களிடையே புரிதல் பரவியது. வேறொரு வாழ்க்கையை, ஒரு சிறந்த இடத்தைப் பற்றி அவர்கள் நீண்ட காலமாக கனவு கண்டார்கள், அவர்கள் ஏற்கனவே வைத்திருந்தவற்றின் மதிப்பை மறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தார்கள். அன்று முதல் கண்ணன் புதிய நோக்கத்துடன் வயல்களில் வேலை செய்தான். சிறு சிறு வெற்றிகளைப் பார்த்தான். வறண்ட பூமியில் உந்தித் தள்ளும் பச்சைத் தளிர்களையும் தென்றல் மழையின் வாசனையையும் கண்டான். 'உன்னிப்பாகக் கவனித்தால், நிலத்திற்குத் திரும்பும் பச்சைப் பளபளப்பைக் காண்பீர்கள். ஒரு நாள், அது எங்களிடம் திரும்பி வரும்' என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவனது கிராமத்தின் நிலம் தொலைதூர நாடுகளின் கதைகள் போல் பசுமையாக இருந்திருக்காது, ஆனால் அது அவர்களுடையது. மற்றும் சில நேரங்களில், பார்க்க கடினமான விடயம் என்ன வென்றால், நம்மிடம் ஏற்கனவே இருப்பது உண்மையில் எமக்கு போதுமானது என்பதேயாகும். எனவே, தொலைதூரக் கனவில் அல்ல, இழந்தவற்றின் சாம்பலில் கூட பசுமை மீண்டும் வளரும் என்ற நம்பிக்கையில் கண்ணனும் அவனது கிராம மக்களும் வாழத் தொடங்கினர். "இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை என் வீட்டு கண்ணாடி என் முகத்தை காட்டவில்லை இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை" . "சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம் சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம் கானலுக்கு மானலயும் கண்கண்ட காட்சி கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி" "இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை" "கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள் வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள் கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா, காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா," "இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை" "மழை நாளில் உன் எண்ணங்கள் வெயில் தேடும் - கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும், அது தேடி, இது தேடி அலைகின்றாய், - வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய், அவரவர்க்கு வைய்த்த இடம் அவன் போட்ட பிச்சை, அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "குழந்தையும் தெய்வமும்" குழந்தையானாலும் சரி , தெய்வமானாலும் சரி அதை வைத்துச் சீராடி, விளையாடிக் கொண்டாடும் இடத்திலேதான் அவையும் தம் மனம் மறந்து நம்மையும் மகிழ்வித்துத் தானும் மகிழும் ! என்ற பொருள்பட 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்ற ஒரு பழமொழி, அங்கே விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நான் பாலர் பாடசாலை ஆசிரியராக இன்று தான் கடமையை ஏற்றுக்கொண்டேன். "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்" என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை முணுமுணுத்தபடி வகுப்பு அறைக்குள் புகுந்தேன். இது ஒரு கிராமப்புற பாடசாலை. நகரத்தில் பிறந்து வளர்ந்து படித்த எனக்கு, கவிஞரின் பாடல் வரிகளும் சேர்ந்து இது ஒரு புது உணர்வைத் தந்தது. முன் வாங்கில், பொன்மதி என்ற சிறுமி, மற்றவர்கள் எல்லோரிடமும் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக எனக்கு தெரிந்தது. நாளடைவில் அவளது மென்மையான இயல்பு, அனைத்து உயிரினங்களின் மீது அசைக்க முடியாத இரக்கம் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அழகைக் காணும் திறமை என்னை கவர்ந்தது மட்டும் அல்ல, என்னையும் அவளின் பொன்னாலான நிலவு பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது எனலாம். நான் நகரத்தில் வாழ்ந்து இருந்தாலும், என் மனைவி கோமதி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் பெயருக்கு ஏற்ப இறைவி பார்வதி போல என்னுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தாள். அவள் சிவன், பார்வதி இருவர் மேலும் பக்திகொண்டவள். அதனாலோ என்னவோ நானும், மகா மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் போல, அவளுடன் சேர்ந்ததால், இதுவரை இல்லாத தெய்வ பக்தி கொஞ்சம் முளை விட்டது. என்றாலும் எனக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை. கிராமங்களில் பொதுவாக காவல் தெய்வங்களை கண்டு உள்ளேன். தங்கள் கிராமத்தை அது வாழ வைப்பதாக அவர்களுக்குள் அப்படி ஒரு நம்பிக்கை. அதில் ஊறி வளர்ந்தவள் தான் என் மனைவி கோமதி. கிராமவாசிகளின் வாழ்க்கையில் அந்த காவல் தெய்வம் மகிழ்ச்சியையும் சமநிலையையும் கொண்டு வருவதாக மனைவி எனக்கு அடிக்கடி கூறுவதுடன் அதன் தனி அழகிலும் மற்றும் கருணையிலும் ஒரு தீவீர பக்தி கொண்டவள். தெய்வம் என்பது ஒரு கட்டுக்கதை, ஆதி காலத்தில், காட்டுமிராண்டியாக திரிந்த மனிதனுக்கு ஒரு கட்டுப்பாட்டை, ஒரு பண்பாட்டை ஏற்படுத்த, அவனுக்குள் ஒரு பயம் , பக்தியை உண்டாக்க தோன்றியதே இந்த தெய்வங்கள் என்பது என் நிலைப்பாடு. என்றாலும், மனைவியின் நம்பிக்கையில் நான் குறுக்கீடு செய்வதில்லை. என் வகுப்பில் இருக்கும் பாலர்கள் சராசரியாக நாலு அகவை, அதில் பொன்மதி தான் இளையவள். என்றாலும் துடிதுடிப்பும் ஆர்வமும் உள்ளவள். தங்க இழைகளை திரித்து நூலாக்கி முத்துகள் கோர்த்த "பொன் நகை" போல் அவளின் புன்னகை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. விளிம்பை பிடித்து தரை படாமல் தாவித் தாவி செல்லும் அவளின் அழகு சொல்லவே முடியாது. பொன்மதி குழந்தையை பார்க்கும் போது எல்லாம், நாம் திருமணம் செய்து ஐந்து ஆண்டு கழிந்தும், இன்னும் ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் தானாக என் இதயத்தை வாட்ட தொடங்கியது. என் மனைவி கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தன் அழகு, தன் உடல் வடிவம் இரண்டிலும், எப்படி தெய்வத்தின் ஆர்வம் உடையவளோ, அப்படியே கூடிய ஆர்வம் கொண்டு இருந்தாள். அதனால் தான் குழந்தை பேறை கொஞ்ச ஆண்டுகள் பொறுத்து என்று, தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாள். நான் உயர் வகுப்பில், தமிழ் இலக்கியத்தில் படித்த பாடல் ஒன்று இன்னும் என் மனதில் அரித்துக்கொண்டே இருக்கிறது. அது இப்ப பொன்மதியை கண்டதும், இவளை மாதிரி ஒரு குழந்தையை நாம் தவற விட்டுக்கொண்டு இருக்கிறேமே என்று ஒரு குற்ற உணர்வு கொஞ்சம் ஆழமாக என்னை குத்த தொடங்கி விட்டது. தெய்வம் தெய்வம் என்று வழிபாடும் என் மனைவிக்கு, கோமதிக்கு, அந்த தெய்வம் குழந்தையின் சிரிப்பில் வாழ்கிறது என்பது தெரியவில்லையே என்று ஒரு எரிச்சல், கோபமும் அறியாமலே என்னை பொத்துக்கொண்டு வந்தது. "படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லை தாம் வாழு நாளே." [புறநானூறு 188] அதாவது, பலரோடு கூடி உண்ணும்போது இடையிலே குழந்தை சின்னச் சின்ன அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில் கையை வைத்து, அதே கையால் தன்னையும், தன் தாய் தந்தையரையும் தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய் மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும் உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது அந்தக் குழந்தைச் செல்வம் என்கிறது. அப்படியானவள் தான் இந்த பொன்மதியும்! மனைவியின் பிறந்த நாளான 15 / 06 / 2023 அன்று, நான் பொன்மதியையும் அவளின் பெற்றோரையும் என் வீட்டிற்கு அழைத்து, அவர்களை மனைவிக்கு அறிமுகப்படுத்தி, பின் பொன்மதியை தனியாக மனைவியுடன் விட்டுவிட்டு நானும் , பொன்மதியின் பெற்றோரும் எமக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சாட்டு சொல்லிவிட்டு வெளியே போய்விட்டோம். இள வயது பெண்களுக்குச் சிக்கென்ற உடல், பளபளப்பான முகம், பட்டுக் கூந்தல், வெள்ளை நிறம்தான் அழகு என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் மனதில் ஊடகங்களால் விதைக்கப்படுகிறது. இந்த வரிசையில் அகப்பட்டவள் தான் என் மனைவி. அவள் இன்னும் சில ஆண்டுகளுக்கு அழகு காதல் மனைவியாக இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வை மேலதிகமாக கொண்டு இருந்ததுடன் தாய் அல்லது தாய்மை பருவம் ஒருவேளை இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை குறைத்துவிடும் என்று நம்பினாள். உண்மையில் அழகு என்றால் என்ன? அழகுக்கான இலக்கணம் என்ன? உண்மையில் அழகானவர் யார் என்ற கேள்விக்கு உங்க பதிலும் என் பதிலும் வேறு வேறாகத்தான் இருக்கும். பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள், பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்தகுழல் மறச்சிறுமி விழிக்குநிக ராகும், .... இப்படி பலவற்றை பலவிதமாக அளவிட்டு வர்ணிக்கிறார்கள். ஆனால் திருமணமாகிய பெண்ணுக்கு தாய்மையே பெரிய அழகு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. குழந்தை பிறப்பதால் , உடல் எடையும் அதிகரிக்கும். என்ன தான் கஷ்டம் இருந்தாலும் தான் பெற்ற குழந்தையை பார்க்கும் போது அந்த துன்பங்கள் எல்லாம் காணமல் போகும். உடல் அழகு உண்மையான அழகு இல்லை குழந்தை தான் உண்மையான அழகு என்கிறார் கிறிஸ்டின் மெக்கின்னஸ் [christine mcguinness]. அது தான் பொன்மதியையும் மனைவி, கோமதியையும் தனிய விட்டுவிட்டு வெளியே போயுள்ளேன். ஆழமான தெய்வ பக்தி நிறைந்த கோமதி, விரைவில் குழந்தையும் தெய்வமும் ஒன்றே என உணருவாள் என்ற நம்பிக்கையுடன்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்" "கொஞ்ச ஆண்டு உருள, நண்பர்களை நினைத்தேன் நெஞ்சு நனைய, கண்கள் கண்ணீர் சிந்தின விஞ்சும் வேகத்தில், ஓயாத பலரின் வாழ்வு குஞ்சும் கோழியுமாய், ஊர் உலகம் சுற்றின" "பற்பல ஆண்டுகளின் பின், மீண்டும் கூடுகிறோம் உற்சாகமாக அன்று விட்டுச்சென்ற, அதே இடத்தில் அற்புதமான மகிழ்ச்சியையும், தொலைத்த கிண்டலையும் உற்ற நண்பர்களையும், இதயத்தில் மீண்டும் சிறைபிடிக்க" "அன்று கழித்த நேரம், இன்னும் இதயத்தில் பசுமையாக இன்றும் என் நெஞ்சில், அந்த கிசுகிசுப்பும் கேலியும் குன்று குன்றாய் மரத்தில் வளரும், இலைகளின் கொத்தாய் சான்றாய் நின்றன, அந்த நினைவுகள் என்றும்" "சந்திக்கிறோம் மீண்டும், மனதில் இன்பம் பொங்குது சிந்திக்கிறோம் இளைஞராக, உடலில் துடிப்பு பிறக்குது நிந்தனை செய்கிறது, இன்றைய கவலை கடமை வாழ்வை வந்தனை செய்து, அன்றைய நினைவை மனதில் பதிக்குது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "We sought enjoyment, we inflicted sarcasm One thousand songs fill our souls The withered heart flowers again, and Dances at the thought of getting together" "With fear and trepidation we made it through Year One We lifted ourselves to meet Challenges in Year Two We boldly set forth in Year Three To blossom with mature knowledge in Year Four" "Lots of study between some love and fun Less and less play with exams nearly begun The mind was numb as the learning came to an end The curtain came down as the passing time flew" "University life faded in our minds The good stayed with us, the bad did not Neither ethnic divide nor prejudice tainted us We learned of ourselves and of the world" "As years rolled, I remembered old friends Teared at the thought of past good times Faced the never-ending battles of life As families and friends moved far and wide" "Fifty years on, we gather again In the place we left behind to conquer the world To rediscover old joys and laughter among old friends And to refresh our hearts and our souls" "The time we spent together is still fresh in the heart. All the gossip, all those jokes, remembered still. Like the leaves crowding a tree The memories will always stay with me" "Everything is fresh in our minds as we meet again. Let's laugh, play and rejoice as of old. E’en with life’s many commitments and countless cares Etched in our hearts, those cherished moments will forever stay" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  18. "சைவ சித்தாந்தம்" [ஒரு விளக்கம் ] &“எரிச்சலை ஊட்டுகிறது” [ஒரு கவிதை] சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப் பட்டது என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டள விலேயே என்று கருதப்படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன ? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ?ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன ? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மேலும் பழந்தமிழ்ப் பேரிலக்கணம், தொல்காப்பியம் தமிழ் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. மாயோன் [திருமால்], சேயோன் [முருகன்], வேந்தன் [இந்திரன்], வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களை குறிப்பிடுகிறது. ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே / சத்தியாகவே வழி பட்டார்கள். உதாரணமாக குலக்குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் கடமையாற்றும் வேலன் என்ற ஒருவன், பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும்போது, அங்கு வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான். அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் ஆவியாக சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது என சங்கப்பாடல் வர்ணிக்கிறது. பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா, மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 4000-5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். எனினும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல் காப்பியத்தில் காணமுடியவில்லை. எனினும் சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச் சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. எப்படியாயினும் 4000-5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் [ஹரப்பா, மொகெஞ்சதாரோ] சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்றான தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு ஆகும் என்று இன்று கருதப்படுகிறது. எனினும் காலப்போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட தெய்வங்கள் புதிய உருவம் பெற்று விட்டது. முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. உறவு முறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள / சந்திக்க நேர்ந்தாலும்,தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் . மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்? என கேள்வி கேட்கிறார். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக் கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று இன்று கூறுவரோ?! யாம் அறியோம் பரா பரமே!! இனி எனக்கு எரிச்சல் ஊட்டியதை கவிதை வடிவில் கிழே தருகிறேன் "எரிச்சலை ஊட்டுகிறது ........." "எனக்கு மேல்- ஒரு சக்தி உண்டு -அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி உண்டு -அதை நம்புகிறேன் உனக்கு மேல்- ஒரு மோகம் உண்டு -அதை நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைகளுக்கு- ஒரு தீர்வு உண்டு -அதை நம்புகிறேன்" "நந்தியை விலத்தி- ஒரு அருள் காட்டியவனை-எனக்கு புரியவில்லை மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை கொன்றவனை-எனக்கு புரியவில்லை அந்தியில் வாடும்- ஒரு மலரை மாட்டியவளை -எனக்கு புரியவில்லை இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம் மூட்டியவனை -எனக்கு புரியவில்லை?" "வருணத்தை காப்பற்ற- ஒரு பக்தனை நீ அழைக்காதது -எரிச்சலை ஊட்டுகிறது கருணைக்கு அகலிகை- ஒரு சீதைக்கு நீ தீக்குளிப்பு -எரிச்சலை ஊட்டுகிறது ஒருவனுக்கு ஒருத்தி- ஒரு பஞ்சபாண்டவருக்கும் நீ ஒருத்தி-எரிச்சலை ஊட்டுகிறது எருமையில் ஏறி- ஒரு சாவித்திரியை நீ கலக்கியது -எரிச்சலை ஊட்டுகிறது!" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்)
  19. "உண்மையில் கிருஷ்ணா ஒரு கடவுளா ? அல்லது அவர் மிகவும் தீய மற்றும் ஏமாற்றும் நபரா?" / "Was Krishna really a god or he was a very evil and deceiving person?" கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். ஆனால் துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர் தன் கை போர்க் கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன வாளால் வெட்டினான். எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்? அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், அவரை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார் . அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலை நிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகாபாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டு கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தை தள்ளி வைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது People consider Krishna as their philosopher, guide, teacher, friend and protector and by no means i am all against Krishna but when it comes to his role in Mahabharat, the feelings are not the same.You may think Krishna as a hero / God who supported the “good” Pandavas in the battle against the so called “evil” Kauravas .But if you dig a little deep you will realize that Krishna's antics were actually evil and deceiving For example ,We find,,Krishna regularly secures victory for the Pandavas side through purely devious means which stand in direct violation of dharma.Though Kunti advice to Krishna that :“Do whatever is good for them in whatever way you see fit, without hurting the Law (dharma) and without deception, instead of safeguarding the law, Krishna instructs the Pandavas to do precisely the opposite. “Casting aside virtue, ye sons of Pandu, adopt now some contrivance for gaining the victory.” This bold statement stands in sharp contrast to Krishna’s familiar statement in the Bhagavad Gita, where he asserts that he has been incarnated in order to safeguard dharma, not to cast it aside. How can a reader of the Mahabharata make sense of a God who encourages atrocious ethical misbehavior among his followers? When Arjuna had unlawfully cut off Bhurisravas’ arm, for instance, Bhurisravas rails against him, “Who indeed would commit such a crime who was not a friend of Krishna?” Here, Bhurisravas’ insight is unambiguous; as he understands it, deception and evil invariably characterize Krishna and afflict those associated with him. Since Krishna couldn’t get Karnan to his side by revealing his true identity , he tried to use the way from the back door by playing with his generous nature. He suggested Lord Indra to meet him in disguise and ask for his golden armor and ear-ring; fearing that it would make him victorious. Karna, knew the man in disguise was Lord Indra, still he obliges him and gives up his armour. Impressed, Lord Indra offers him with “Brahmashtra" in return. Krishna is now worried what Karna would do with the Brahmashtra therefore he sends Kunti as his aid to Karna. Karna in turn gives Kunti his words that he would use the Ashtra only once and never harm Pandavas. Karna did not harm any of the Pandavas and remained true to his words. However, Krishna again played a dirty trick when he met Arjuna in the war. He cunningly brought the chariot down to save Arjuna. Karna had aimed at Arjuna’s neck and not on his waist. Krishna was well aware that Karna would never use the Brahmashastra again. Watching Karna struggle with his chariot, Krishna orders Arjun to attack him but Karna’s dharma for others saved him every time. Krishna knew killing Karna was a difficult task and so he ordered Arjuna to kill him while he was busy struggling with the chariot. So , By killing Karna on the battleground, Krishna actually became a murderer of humanity and a villain by eradicating the potential dharma from the masses ,who used all the wrongful means to justify his cause and claim the victory
  20. அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்" [எங்கள் சிறிய அண்ணாவின் மகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வைத்த அன்புக்கு அடையாளமாக நான் பலவற்றை சொல்லலாம் என்றாலும், நான் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நான் உடுப்புகளை, அதிகமாக வார இறுதியில் தோய்த்து [கழுவி] நூல் கொடியில் காய்வதற்காக போடுவது வழமை. என்றாலும் இது வார இறுதி என்பதால், சிலவேளை வெளியே நடக்கப் போய்விடுவேன். அப்படியான ஒரு நாள் திடீரென மழை தூர தொடங்கிவிட்டது. கலைமதி, என் உடுப்புகளுடன், அவர்களின் உடுப்புகளும் ஈரமாவதை கண்டார். அவருக்கு ஒரே பதற்றம். என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும். தாயிடம் ஓடினார். மழையில் என் உடுப்புக்கள் நனைவதை சுட்டிக்காட்டி, அதை முதலில் எடுக்கும் படி அடம் பிடித்தார். இன்றும், அவரை பற்றி எண்ணும் பொழுது, நிழலாக ஆடும் நினைவுகளாக அண்ணி என்னிடம் அதை சொல்லுவார். எனக்கும் மறுமொழி வந்து, வேலைகளுக்கு விண்ணப்பித்து, முதல் நிரந்தர வேலையும் இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியலாளர் விரிவுரையாளராக கொழும்பிலேயே கிடைத்தது. ஆகவே அண்ணாவின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினேன். இப்ப வேலை முடிந்து, வீடுவந்தால் அவருடனும், மற்றும் அண்ணாவின் மூத்த பிள்ளைகளுடனுமே பொழுது போக்கு. நேரம் போவதே தெரியாது. அவருக்கு மூன்று வயது தாண்ட, எனக்கும் அரசாங்க கல்வி உதவி தொகை [Scholarship] கிடைத்து ஒரு ஆண்டு மேல் படிப்பிற்கு ஜப்பான் செல்ல வேண்டி வந்தது. அவரை விட்டு பிரிய மனமே இல்லை. அப்படியே அவருக்கும். என்றாலும், நான் விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி வர விமானத்தில் போவதாக கூறி, ஒருவாறு, அவரும் கட்டி பிடித்து முத்தம் தந்து விடை தந்தார். அப்பொழுது நான் யோசிக்கவில்லை, இது தான் அவரின் கடைசி முத்தம் என்று. இன்றும் என் மனதில், நிழலாக ஆடும் நினைவுகளாக அது இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. நானும் எல்லோரிடமும் விடைபெற்று, முதல் முறையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தின் ஊடாக பயணம் செய்தேன். என்றாலும் விமானத்தில் அயர்ந்து தூங்கும் பொழுது எல்லாம் அவரின் விடை தந்த முத்தம் தான் நிழலாக ஆடும்!! கலித்தொகை 80 இந்த சில அடிகள் என் ஞாபகத்துக்கு வந்தன. "கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர் நடை காண்டல் இனிது!" "ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது!" "ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது!" ஆமாம் நீ அணிந்திருக்கும் ஒளி திகழும் மணியொலி கேட்கும்படிச் சாய்ந்து சாய்ந்து தளர் நடை போட்டு நீ செல்வதைக் காணும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது. என் ஐயனே! அன்பு ததும்ப நீ பார்க்கிறாய். "அத்தா அத்தா" என்று அழைக்கிறாய். இந்தத் தேன் மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது. என் ஐயனே வருக! பிறை நிலாவே என் ஐயனிடம் வருக! என்று நான் அழைத்து உனக்கு அம்புலி காட்டுவது இனிமையாக இருக்கிறது. என் செல்லக் குழந்தை கலைமதியை வர்ணிக்க கலித்தொகை போதாது! என்றாலும் அவளின் குறு குறு நடை நடந்து மழலை மொழி பேசி இதயம் கவரும் அழகும் அம்புலிகாட்டி நிலா சோறு ஊட்டிய நினைவுகளும் என் மனதில் இன்னும் புதைந்து இருப்பதை காண்கிறேன்! "காற்று வீசுது காகம் பறக்குது காலைப் பொழுது இருளாய் மாறுது காடைக் கோழி எட்டிப் பார்க்குது காவி வருகிறேன் அன்னம் உனக்கு!" என நிலாவைக் காட்டி கதை சொல்லி, சோறு தீத்தியது "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ ?" என துயிலவைத்தது எல்லாம் எப்படி மறக்கமுடியும்? எதோ ஜப்பானில் படிப்புடன் காலம் உருள, ஒரு ஆண்டு நிறைவுற்றதே தெரியாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக அவளுக்கு சில மின்னணு பொருட்களும் பொம்மைகளும், உடுப்புகளும் மற்றவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு டோக்கியோவில் இருந்து இலங்கை திரும்பினேன். கட்டாயம் இன்னும் ஒரு பெரிய முத்தம் கிடைக்கும் என்ற பெருமிதத்தில்! ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை அக்கா குடும்பமே வரவேற்றது. அவர்கள் கண்கள் ஈரமாக இருந்தது. அக்கா மெல்ல என் காதில், அண்ணா குடும்பம், ஒரு திருமண கொண்டாட்டத்திற்காக இடைக்காட்டுக்கு போனதாகவும், நேற்று அங்கு எல்லோரும் கல்யாண விழாவுக்கு தேவையான முன் ஏற்பாட்டு அமளியில் இருக்கும் பொழுது, அது மாரி காலம் என்பதால் கிணறு முட்டி இருந்ததாகவும், கலைமதி அவர்களிடம் இருந்து நழுவி, தனிய வீட்டிற்கு பின் பக்கம் போய், தவறுதலாக யாரும் காணாமல் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என கூறினார். எனக்கு, என் மனதில் இடி முழங்கிய மாதிரி இருந்தது. அந்த கடைசி முத்தம், அவளின் குறும்புகள், அவளின் மழலை பேச்சு, என் நெஞ்சில் படுக்கும் அழகு, சித்தப்பா என்று பின்னால் ஓடிவரும் காட்சி .... எல்லாமே நிழலாக ஒன்றின் பின் ஒன்றாக வந்தவண்ணம் இருந்தன. அந்த நாலுவயது குழந்தை என்னை மீண்டும் காணாமலே கண் மூடிவிட்டது!! "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து நெஞ்சை கவர்ந்தவளே மவுனமாய் இன்று உறங்குவது ஏன் ? மகிழ்வு தரும் முத்தங்கள் எங்கே ?" "மயக்கம் தரும் அழகு அழிந்ததோ ? மனதை கவரும் குறும்பு மறைந்ததோ ? மரண தேவதைக்கு இரக்கம் இல்லையோ? மதியென்று இனி யாரை கூப்பிடுவேன்!" முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே, எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.