Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட பரவாயில்லையே. நல்ல தெரிவா எல்லோ கிடக்கு. அவர்களுடன் நாமளும். ஆனா அந்த இரண்டு பேரும் எல்லோ என்னோடநிற்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@vasee வசி, என்ன கணக்கு இது. பஜனைக் கோஷ்டி இப்பிடி மும்முரமா நிற்குது. என்னைப் பிடிக்க ஒரு நாலு பேர். உங்களப் பிடிக்க ஒரு ஜந்து பேர் வரிசையில நிற்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு ஒரு அதிரடியான, விறுவிறுப்பான் போட்டி. வெல்பவர் அடுத்த கட்டத்துக்கு. மும்பையா டெல்லியா நந்தன் - புலவர் யாரைத் தெரிவு செய்திருக்கினமோ. பாவம் மற்ற அணி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள்தான் இதில கரை கண்ட ஆள். உங்களுக்குத் தெரியாததா. தோனிய வைச்சு எவ்வளவு கல்லாகட்டேலுமோ கட்டுவினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்களையெல்லோ சவட்டி விட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடிச்சு விட்டாங்கள். சென்னை கடைசியில கடைசியா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாமளும் எவ்வளவத்தான் முட்டுக் குடுக்கிறது. 200 அடிப்பாங்கள் என்று பார்த்தால்...... நீங்களும் சென்னையும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி இல்லைங்க. அவர் ஒரு பக்கத்தில் உறுதியா நிற்கிறார். இல்லாட்டி, அவை எப்பவோ எல்லா விக்கட்டையும் இழந்திருப்பினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200க்கு மேல அடிப்பினம் போல. பாத்தீங்களா. நான் சொன்ன மாதிரி நடக்குது. எல்லாம் பெரிய திட்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க. பொறுங்க. உங்களுக்கு அவையின் திட்டம் புரியவில்லை. முதலே எல்லா குஞ்சு குருமனையும் அனுப்பி பந்து வீச்சாளரைக் கழைக்கப் பண்ணியாச்சு. அவர்கள் அந்த ஜந்து பேரையும் ஆட்டமிழக்க வைக்க எவ்வளவு பாடு பட வேண்டியிருந்தது. இனி குட்டி ABயும், டுபேயும் சேர்ந்து ஒரு வெளு வெளுக்க, தல வந்து முடிச்சு வைப்பார். அதுதான் உச்சக் கட்ட முடிவு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காலநிலை காரணமாகத்தான் மாற்றப் பட்டுள்ளது. அடுத்த RCB இன் போட்டி கூட இதன் காரணமாக லக்னோவுக்கு மாற்றப் பட்டுள்ளது. எல்லாமே குளறுபடியில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பத்தான் பொறி தட்டிச்சு. இதுதான் ராஜஸ்தானின் கடைசிப் போட்டி. இப்பருவகாலத்தில் பையனை பார்ப்பதற்கு கடைசி சந்தர்ப்பம். எங்கே தாரை தப்பட்டைகள் முழங்கட்டும் மந்திரிமாரே. போட்டியை ஆரம்பியுங்கள். 🤗
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனா உங்களுக்கு நந்தன் புலவர் கூட்டணியப் பத்தித் தெரியேல போல. RRஜ அப்படியே தூக்கி வைத்துடுவினம். அதோட நானும் நீங்களும் சென்னையைத் தெரிவு செய்தோமா..... எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தால்..... பாவம் சென்னை என்டுதான் வருது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் நடக்கப் போகுது. முலான்பூரில் முதல் இரண்டு playoff போட்டிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாவம். ஏராளனும் அதுக்க மாட்டுப்பட்டுப் போனார். பூவோட சேர்ந்த நார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன், பேசாம நந்தனுக்கும் புலவருக்கும் அவர்களோட சேர்ந்த ஏராளனுக்கும் புள்ளியக் குடுத்துட்டு, கடைய சாத்தி விடுங்க. உங்களுக்கும் நாளைக்கு வேலை மிச்சம். சென்னை வேற சுதப்புது. நந்தன் புலவர் கை வைச்சதெல்லாம் துலங்குது. ஒன்றையும் ஒன்றையும் கணக்குப் போட்டுப்பாருங்க. எல்லாம் சரியா வரும். எனக்கும் அந்த இருவரோட சேர்ந்தா ஆகாது. பிறகென்ன. சென்னை கதி அதோகதிதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணி விசிறிகளுக்கு, அணி வென்றால் என்ன தோற்றால் என்ன. தோனி இரண்டு ஆறு விட்டாரா. அவர் களத்தடுப்பை மாத்த விக்கட் விழுந்துதா. அவர் அவர் அவர்.... படையப்பா படத்தில அப்பாஸ் காருக்க இருந்து, ஒன்று சொல்லுவாரே. அதே அப்பாஸ் மாதிரிதான் சென்னை விசிறிகளும்.😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். கிருபனும் இதைப் பத்திச் சொன்னவர். எனக்கும் அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எவ்வளவு முயன்றாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ரசோதரனும் அவர்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார். ம்க்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒருத்தன் போனா. இன்னொருத்தன் வாறான். நமக்கு புள்ளி கிடைக்கக் கூடாது என்பதில் எவ்வளவு ஆர்வமா இருக்காங்க. ஏன் இப்பிடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க. பிஸ்னோய்க்கு நாலு ஆறு விட்டான் சிங்கன். அவங்கள் 9வது பரிமாற்றத்தில் 100 அடிச்சா, இவங்கள் 8வது பரிமாற்றத்தில் 100 அடிக்கிறாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அபிஸேக் முடிவு பண்ணிட்டான் போல. பாத்துப் பண்ணு தம்பி. நமக்கு புள்ளி வேணும் 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏலத்தில் எடுக்கும் போது, எப்பிடித் தெரியும். அந்த நேரத்தில் எது இருக்கோ அதைத்தானே எடுக்க முடியும். RCBஉம் SRHஉம் அவனுக்காக போட்டி போட்டு, 27 கோடியில கொண்டுபோய் விட்டவை. பாந்தின் மேல், அந்த நேரத்தில், அவர்கள் வைத்த நம்பிக்கையில் பிழை இல்லை. இப்போ அவரின் மதிப்பு அதல பாதாளத்தில் போட்டுது. அடுத்த ஏலத்தில் அவரின் மேல் ஒருவரும் இவ்வளவு பணம் போட மாட்டினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200 அடிப்பாங்களா. எல்லாம் அப்பிடியே மெதுவாகப் போய்விட்டது. போன போக்கில 200அத் தாண்டுவினம் போலக் கிடந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வந்ததும் போட்டார் பாந்த். அவன் ஆட்டமிழக்க கோயங்கா அப்பிடியே உள்ளே போட்டார். கதை இருக்கும் போல. பாந்தும் ஏதோ எல்லாம் செய்து பாக்கிறான். ஆனால் அவனால இந்த மோசமான நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை. இப்போ இது அவனின் தன்னம்பிக்கையை முற்று முழுதாக உடைச்சிருக்கும்.