Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போற போக்கில, குறைந்த ஓட்டங்களைப் பெறப்போகினமோ. KKRன் 95 ஓட்டங்களைத் தாண்டுவார்களா. 6 விக்கட்டுகள் போய்விட்டன
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயையோ. உங்களை அல்ல. கொஞ்சம் கவனமாத்தான் இருக்க வேணும் போல. எல்லாரும் டக்கென்டு தொப்பியப் போடுறியலே இரண்டு மூன்று பேட்டிகள் பார்த்தேன். தொலைக்காட்சியில் தோன்றும் விளையாட்டு விற்பன்னர்கள்தான் அப்படிக் கூறினார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வைபவ் ஓட்டமெதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ராஜஸ்தான் நடையைக்கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல ஒரு இணைப்பாட்டம். இருவரும் மாற்றி மாற்றி அடிப்பதும், ஓற்றை ஓட்டங்கள் ஓடி மற்றவருக்கு அடிக்கக் கொடுப்பதும். இப்பிடித்தான் ஆட வேண்டும் என்று ஒரு பாடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இருவரும் சமமாக 23 பந்துகளில் 48 ஓட்டங்கள். 217 காணும் என்றுதான் நினைக்கிறேன். போல்டும் பூம்ராவும் முடிச்சு விடுவினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சூரியகுமார் செந்நிறத் தொப்பியைத் தனதாக்கிக் கொண்டார். 200 ஓட்டங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கினம். 220 வருது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிகாரன் இன்னும் ஆறடிக்கவில்லை. இணைப்பாட்டம் அருமை. ஒரு 220 ஓட்டங்கள் எதிர் பார்க்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடங்கிட்டாங்களா. முந்தி பாக்கிஸ்தான் வீரர்களை அப்பிடிச் சொல்லுவினம். அப்ரிடி தனது 18 வயதில் வேகமான சதம் அடித்த போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வந்திருந்தது. இப்படி கதைப்பவர்களின் மனதில் எரிச்சலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நூருக்கு ஒரு பந்துதான் இருந்தது. அதன் பின் கடைசிப் பரிபாற்றம். சிவம்தான் எல்லாப் பந்தையும் அடிக்கப் போகின்றார். அவர்கள் ஒன்று ஓடுவதற்கு முயற்சியே செய்யப்போவதில்லை. ஆதலினால் இருக்கும் அந்த ஒரு பந்தை அடி என்றுதான் நூருக்கு சொல்லி இருபடும். வந்தால் மலை அல்லது..... அவர்கள் விட்ட பிழை என்னவென்று சொன்னால், சாகல் வரும்போது, தலை தான் அடிக்காமல் ஒரு ஓட்டத்தை எடுத்து மிச்ச பந்துகளை சிவத்திடம் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சிவம் தான் சுழல் பந்து வீச்சாளர்களை போட்டு விளாசுவார். அணித் தலைவரே அவ்வாறு யோசிக்காவிட்டால், எப்படி மற்ற வீரர்கள் யோசிப்பார்கள். இதெல்லாம் சிறிய விடயங்கள். ஆனால் போட்டியின் போக்கையே மாற்றி விடும். மாற்றியே விட்டது. சரி அடித்தது தான் அடித்தார் ஏன் எல்லா பந்தையும் படிக்க வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
70வது போட்டி வரையும் அவர்தான். இனி அசைக்க முடியாது. எடக்கு முடக்குக் கேள்விகளில் ஏதாவது நடந்தால்தான் உண்டு. வாழ்த்துக்கள் நந்தன். உங்கள் தெரிவுகள் எல்லாம் பக்கா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது ஒரு காதல் கதை போல. சென்னை என்றாலே ஜில்லுனு இருக்கும் போல. எப்பிடியும் அரைவாசிப்பேர் பதிவினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது. சென்னை வெளியில என்டு, நாம் எப்பவோ சொல்லிப்போட்டம். யாழ் தளமா கொக்கா. இப்பத்தான் அவங்கள் எல்லாரும் சொல்லினம். இப்போ அதிகாரபூர்வமாக அவர்கள் வெளியில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதென்னங்க.நல்ல கதையாக் கிடக்கு. ஏத்துக்க முடி..... ஓ முடிஞ்சுதா தோனி, அந்த நாலு ஓட்டங்களை விட்டுவிட்டாரே என்டு உருட்டலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு நாலும் ஒரு ஆறும் அடிச்சமில்ல. கை கொஞ்சம் கழைச்சதால, அந்தப் பந்து கொஞ்சம் உள்ளுக்க வந்திட்டுது. எனது குற்றமா கோபால்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் ஒரு காதல் கதை மாதிரி, மீண்டும் இடிந்து விழுந்த சென்னை. எப்படி என்று நினைப்பதற்கு முன், எல்லாம் முடிந்தது. சிவம் டுபே மற்றப் பக்கம் நிற்கிறார். வாற துடுப்பர் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு தட்டுத் தட்டி, மற்றப் பக்கம் போவதுதான். நானும் அடிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டமிழந்து செல்ல, தொடர்ச்சியாக எல்லாரும், வந்தார்கள், சென்றார்கள். மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது . போட்டி எப்படிப் போகுது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் வீரர்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அர்ஸ்டீப்பின் அந்த பரிமாற்றம். அகலப் பந்துகளும். 3வது நடுவரின் கணக்கு வழக்குமாக சென்னையின் ஓட்டங்களைக் குறைத்துவிட்டன.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உஙகள் விருப்பம் நிறைவேறிக் கொண்டே இருக்கு. 16வது பரிமாற்றத்தில் பட்டும் 26 ஓட்டங்களை அடித்தான். இந்தப் பருவ காலத்தில், CSK வீரனின் அதி கூடிய ஓட்டம் இதுதான். 100 அடிப்பானா கரண்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கரையில் நின்று ஆடும் பெண்களுடன் ஒரு இயந்திர நாயும் ஆடுது பார்த்தீர்களா. அவனவன் எதுக்கோ எல்லாம் இவ்வாறான ரோபட்டுகளை உருவாக்க, இந்தியாக்காரர் ஆட விடுறாங்கள். இது Boston Dynamics உருவாக்கின இந்த நாய் இயந்திரம் என்று நினைக்கிறேன். ஆடுகிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்படியே போனால் 200 அடிக்கலாம். சிவமும் தோனியும் வரக்கடக்கு. அடிப்பார்களா. அடிக்க வேண்டும். 6 பரிமாற்றங்களில் 75 அடிக்கணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ம்ம்ம். பிராவிஸ் அன்றைய மாதிரி, இன்றும் அடித்தால் நல்ல தொகையான ஓட்டங்களைப் பெறலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொதுவாய்த்தான் சொன்னேன். உங்களை என்று குறிக்கவில்லை. சென்னை அணிதான் மிகவும் அதிகமாக கழுவி ஊத்தப்பட்டது. அவ்வளவு பாசம். நீங்கள் தெரிவுசெய்த அணியை இறக்கேல போல. உங்கட ராசி 21 பேரையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல. அவ்வளவு சக்தி. கொஞ்சம் பாத்து செய்துவிடுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் அவங்கள் எல்லாரையும்தானே கழுவி ஊத்துறீங்கள். பாவம் சின்னப் பசங்க. தோனியக் கேக்காம, அவங்களை ஏலத்தில் எடுத்திட்டாங்கள் என்று ஒரு உருட்டு ஓடித்திரியுது. பார்த்தீங்களா. அதனால, தோனியால என்ன செய்ய முடியும். ஏதோ தன்னால ஆனதச் செய்யுறாராம். அவரைக் கேட்டு எடுத்திருந்தா, இப்ப நிலமையே வேறவாம். உருட்டுறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதென்ன கணக்கு. 62வது போட்டி டெல்லிக்கும் குஜராத்துக்கும். என்ன ஏதென் பெட்டி கை மாறிட்டுதோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பிடியான கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கிறோம். மனிதம் இன்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை இன்னும் கூடிக் கொண்டே போகிறது. அவனுக்கு RR கொடுக்கும் அந்த ஒரு கோடி ரூபாய் எவ்வளவு பெரிய தொகை. அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் இல்லையா.நேற்றைய அடி, அதற்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கும். கொடுக்க வேண்டும். அவன் இப்பத்தானே ஆரம்பிச்சே இருக்கிறான்!!!! அதை நினைத்தாலே ஜிவ் என்டுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பரவாயில்ல. நாங்கள் எல்லாரும் முன்னுக்கு இருக்கும் உங்களுக்கு 2 புள்ளி கிட்ட வரலாமோ இல்லையோ. அதுதான் கணக்கு. ரசோதரன் துணை முதல்வராகிறாரோ. நாளைக்கு மீண்டும் உங்களோட. ஆனால் என்ன மொத்தமா 18 பேர் இன்னும் இருக்கினம். அந்த 18 பேரின் ஈர்ப்பு உங்கள் இரண்டு பேரையும் அடக்கும் என்று நினைக்கிறன். உங்கட இராசி அப்பிடி. நானும் வேற சாமியாரைப் பாக்கப் போகவேணும். ஆரோ எல்லாம் மாற்றி மாற்றி வந்தாங்கள். அக்ஸர் மாதிரி ஒருத்தராலும் செய்ய முடியவில்லை. கையில கட்டோட, என்ன அடி அடிச்சான். இன்னும் ஒரு இரண்டு மூன்று பரிமாற்றத்துக்கு நின்றுருந்தால், கதையே வேற. ஆஷுதோசையும் கடைசிவரையும் வச்சிருந்தினம். அதுவும் வேலைக்காகேல. என்னத்த யோசிக்கிறாங்களோ