Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK க்காக GoT எல்லாம் கூப்பிட்டுக் கொண்டு. அப்பிடி என்டாலும் ட்ராகன் ஒண்ட விட்டாலும் பரவாயில்லை. இன்னுமா லோகம் CSK வை நம்பிக் கொண்டிருக்கு. உபிசி!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த "பினிஷர்" பட்லரத்தான் இங்கிலாந்து அணியும் தேடிக்கொண்டிருக்கினம். கண்டா போகச்சொல்லுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒண்ணு ஓண்ணாத் தூக்கிறம். ஒருக்கா ஓதிவிடச் சொல்லுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு ஒரு முசுப்பாத்திப் போட்டி. கடைசி இரண்டு பேரும் கடைசியா வாறதுக்குப் போடும் போட்டி. வழமை போல், நாம் தெரிவு செய்த அணியே வெல்லும். அதுவும் உங்கட கிளி இருக்கும் போது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தக் கருமத்த மட்டும்தான் பாக்கேல. ஆனால் மற்ற எல்லா கிரிக்கட் போட்டியும் பார்ப்பேன். இந்தவாரம நடந்த பங்களேதேஷ் சிம்பாப்வே போட்டி கூட ஒவ்வொருநாளும் தொடரந்தனான். சிம்பாப்வே வென்றதில் மிக்க மகழ்ச்சி. அனேகமா, ஜபில் இல் உள்ள எல்லா வீரர்களைப் பற்றியும் தெரியும். இந்த வருசம், அந்தக் கருமத்தையும் பார்க்க வைத்த சாபம் உங்களைத்தான் சாரும். போதையேறிக் கிடக்கு. விட முடியேல. இங்கே எழுதுவதற்காகவே பார்க்கிறன். வாசிக்கிறன். தேடுறேன். எனக்கு என்னதான் ஆச்சு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த முடிவு சரியென்றே நினைக்கிறேன். பட்லர் இந்த வருசம் புதுசா விளையாடுறார். போன வருசம் முழுக்க அவற்ற சுதப்பல் பார்க்கேலையோ. இங்கிலாந்து அணி வாங்காத அடியா. அவர் தலைமைப் பொறுப்பிலும் இருந்து விலகிவிட்டார். அது எல்லாவற்றையும் வைத்துத்தான் ராஜஸ்தான் அந்த முடிவை எடுத்திருப்பினம் இல்லையா. ஜுரல் நல்ல தெரிவுதான். இளம்பெடியன் வேற. 24 வயதுதான். இன்றைக்கு அவன் காட்டின காட்டு பார்த்தனீங்கள்தானே. நம்ம சிம்ரன என்ன என்று சொல்லத் தெரியேல. மேற்கிந்தியதீவு வீரர்கள் இந்தமுறை நன்றாகவே இல்லை. அவர்கள் உலகம் முழுக்க விளையாடுற T20 போட்டிகளினால் இருக்கலாம். அங்கிருந்து வரும் வீரர்கள் அடித்துத் துவைக்கும் காலம் மலையேறிவிட்டது. கனகாலத்துக்கு காட்டடி அடிக்க முடியாது. உடல் பலம் மட்டும் போதாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இப்பிடிப் போடு எப்பிடிப் போறார் என்று பார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மையிலேயே இன்று இரு அணிகளிலும் ஒருவரையும் குறை சொல்ல முடியாது. சின்னச் சின்ன கணங்கள் போட்டியின் போக்கை மாற்றிவிட்டது. இரு அணிகளிலும் நன்றாக முயற்சித்தார்கள். RCB ஒரு அடி முன்னுக்குப் போய்விட்டது. அவ்வளவுதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு நின்று 100 அடிச்சிருக்க வேணும் என்று போட்டு உருட்டியிருக்க மாட்டோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாருங்கள் இரண்டாம் இடத்தை. நிறத் தொப்பிகள் வெகு தூரத்தில் இல்லை. RCB பராக்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹேசுல்வூட். என்ன செய்து வச்சிருக்கறாய் என்று பார்த்தியடா. நீ சூரன்டா. Thriller in Bangalore ஹா ஹா.., உங்கள் கிளிக்கும் இன்றைக்கு ஆப்பா. இது @Eppothum Thamizhanன் தணியாத கோபம் தணிந்த தருணம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க. மூச்செடுத்துட்டு வாறன். யப்பா....ஏன்டா இப்பிடி பண்ணுறியல்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடி அடி என்று அடித்த ஜேஸ்வால் ஆட்டமிழந்தார். டேய் RCB விட்டுடாதேங்கடா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசியா நான் பார்த்ததின் படி, இரண்டு துடுப்பர்கள்தான் ஒரே நேரத்தில் துடுப்பாடலாம் 😁. அவரை விட ஜிதேஸ் வந்தது நல்லது என்டுதான் நினைக்கிறேன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று உங்கள் நேரம். RCBயின் உறுதியான ஆட்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சீட்டுக் கட்டு நேரம். சீட்டுக் கட்டுகள் போல் சரிவார்களா அல்லது கம்மாரிசு அடிப்பார்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
15வது பரிமாற்றங்களில் 150 ஓட்டங்களைக் கடந்தாலும், கோலி ஆட்டமிழந்துவிட்டார். முக்கியமான நேரம். இனி வாறவங்கள் இதே மாதிரி தொடர்வார்களா. ஒரு 220 அடிக்க வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பில் சோல்ட் அடித்து ஆட முயன்று, ஆட்டமிழந்தார். எவ்வளவு அதிஸ்டத்தைத்தான்டா உனக்குத் தாறது என்று அதிஸ்ட தேவதையே நினைச்சிருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல ஒரு ஆரம்பம். அவர்களின் அதிர்ஷ்டம் நன்றாக வேலை செய்கிறது. மட்டையின் கரைகளில் படும் பந்துகள் கூட, பட்டு தெறித்து எல்லைக்கோட்டை நோக்கி செல்கின்றன. ஐந்தாவது பரிமாற்றத்திலேயே 50 ஓட்டங்களை கடந்து விட்டார்கள். நல்லாச் சொல்லுறீங்கள் போங்க. கிருபனின் தத்துவங்கள்!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் நாணயச் சுழற்சியில் தோல்வி. அதன்பின் பத்திடார் தேமே என்று அணிப் பயிற்சியாளர் அன்டி பிளவரைப் பார்த்தாராம். மீண்டும் முதலாவதாகத் துடுப்பாடப் போறார்கள். முதல் இருவரும் நின்று நிதானித்து ஆடினால் பெரிய ஒரு ஓட்ட எண்ணிக்கையை அடையலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB அணித்தலைவர்: எந்தப் பந்தை எப்பிடி அடிப்பது முக்கியம் என்று சொல்லியிருக்கிறார். சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகள் விளையாடி மூன்றையும் தோள்றிருக்கினம். மூன்றிலும் நாணயச் சுழற்சிலும் தோல்வி. மற்ற அணி வேகப் பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆரம்பகட்ட துடுப்பாளர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கினம். அதுதான் பந்துகளைப் பார்த்து அடியுங்கள் என்று அணித் தலைவர் சொல்லி இருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லாச் சொன்னீங்க போங்க. அவரிட்ட கிளி, குருவி, எறும்பு ஒன்றும் இல்லை. பார்ப்போம் எவ்வளவு பாய்ச்சல் காட்டப்போறார் என்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரியாக அடித்து ஆடுகிறீர்கள். அப்பிடியே தொடருங்கோ. விடக்கூடாது. எனக்கு இப்ப ஏழாம் கட்டம். எங்க போய் நிக்குமோ தெரியேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப உங்கள் வீழ்ச்சியும் எப்போதும் தமிழனின் எழுச்சியும் ஒரு நாளிலா. நாம பதுங்க வேண்டியதுதான் போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள் ஏலவே அணிகளைத் தெரிவு செய்தபடியால், இனி ஒரு மாற்றங்களையும் செய்ய முடியாது. அன்று அணிகள் எவ்வாறு விளையாடுகின்றன என்பதுதான் புதிரே. இன்று ஹைதராபாத் செய்ததெல்லாம் ஜீரணிக்கவே முடியாத விளையாட்டு. ஒரு வித தயாரிப்பும் இல்லாத மாதிரி மட்டையைத் தூக்கிக் கொண்டு வந்த மாதிரித்தான் கிடக்கு. அதனால மும்பையைக் குறைத்து மதிப்பிடவில்லை. ரென்ட் போல்டையெல்லாம், சில நாட்களில் தொடவே முடியாது. இன்று அப்படி ஒரு நாள் அவருக்கு. ஹைதராபாத்தின் அணுகுமுறைதான் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அணிப் பயிற்சியாளர் டானியல் விட்டோரி. ஒரு மென்மையான மனிதர். அவரின் பேச்சை இவங்கள் கேப்பாங்களா இல்லை அவருக்கே என்ன நடக்குது என்று புரியுதில்லையோ. நமக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கென்டா, அவரின் பேச்சு பெருசா எடுபடுறமாதிரித் தெரியேல. தோல்வி என்பது சகஜம். கேவலமான தோல்வி அப்பிடியில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்குத் தொடங்குது உங்களின் எழுச்சி. இனித் திரும்பிப் பாக்கிறேல. (Mind voice: ஆரேன் கீழ நின்டாத்தானே திரும்பிப் பாக்க 😁)