Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
11வது பரிமாற்றத்தில் 100 ஓட்டங்களைக் கடந்து விட்டனர். முக்கியமாக, விக்கட் எதுவும் இழக்கவில்லை. அடுத்த 9 பரிமாற்றங்களும், வானவேடிக்கைதான் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அங்கால வாசிங்டன் சுந்தரும் இருக்கிறார். அதோட, அவையின் நடுவாந்திர துடுப்பர்களுக்கு பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. முதல் மூவரில் ஒருவர் எப்போதும் சிறப்பாக செயல்படுகின்றார். முதல் மூன்று விக்கட்டும் 10 பந்துப் பரிமாற்றங்களுக்குள் வீழ்ந்தால், அவர்களின் நிலை தடுமாறக்கூடும். வாசிங்டனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். Cricinfo தளத்தில, போட்டிகள் நடக்கும் போது, வெற்றி சதவிகிதம் போடுவினம். நான் ஒருநாளும் 100% என்று ஒரு அணிக்கும் பாரத்ததில்லை. கணித ரீதியாகவோ புள்ளி விபர ரீதியாகவோ 100% என்று ஒன்றையும் சொல்ல முடியாது. முடிந்த முடிவு என்ற ஒன்று இல்லவே இல்லை. அதுக்காக, சென்னைக்கு ..... 😉 ஓ அப்பிடி வேற நடக்கிறதா. உதைபந்து கழகங்களுக்கிடையே வீரர்களை மாற்றுவார்கள். அப்படி ஏதேன் செயல்பாடு இங்கே இல்லையா. ஜபில் championleagueஅ தழுவித்தானே வடிவமைக்கப் பட்டது. சென்னைக்கு அப்படி நடந்திருக்கலாம். நடக்கலாம். எனக்கென்றால், தங்கக்குடம் இருக்கும் வரையும், பெரிய மாற்றம் வரும் என்று தெரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட... நீங்களுமா. எல்லாப் பெரிய கையும் கீழையா. ஜபிலில் பழம் தின்று கொட்டை போட்ட எல்லாரும் இப்பிடி தெரிவு செய்திருக்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரித்தி ஜிந்தாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் சுவியாரே, வணக்கம். உங்கள் படங்கள் சொல்லும் கதை. ஓ..... 😁 நீங்கள் எப்பிடித்தான் கணக்குப் போட்டாலும்.... வாய்ப்பில்லை இம்முறை. அடுத்த ஏலம் எப்போ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சபாஸ்... சரியான கேள்வி. விடக்கூடாது. பிடிக்கிறம் சீக்கிரம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை என்ற பெயரக்கேட்டாலே சும்மா அதிருமில்ல. நம்ம பாசம் அப்பிடி. ஆனா, இப்போ இங்கே சொல்லப்படும் விடயங்களைக் கேட்டால்! இதுதான் அணி என்று தெரிந்துகொண்டு தெரிவு செய்யவில்லை போல்தான் தெரியுது. அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம் எடுக்கிறம். பிறகு.... பொட்டு வைச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டுத்தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்கரதம் அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட அது வேறையா. கொல்கத்தா நாளையோட சரி என்றுதான் நானும் நினைக்கிறேன். போய்வா பாட்டை திரும்பவும் ஒலிக்கவிடுவம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தக் கிழமை "Revenge Week" என்று star sports உருட்டிக் கொண்டு இருக்கிறான். அனேகமான அணிகள் இரண்டாவது தடவையாக மோதுகின்றன. தோற்றவர் வெல்வாரா என்று உருட்டல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி. புரியுது. பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு என்று. கொஞ்சநாள் சுவி நந்தன். இனி நந்தன் புலவர். தொடர்ந்து பயணிப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது பம்பலுக்கு செய்திருக்கிறார். நண்பர்கள் குசும்பு. அடுத்த நொடி சிரேயாஸிற்ற நடந்து போய் சிரிச்சுக் கதைத்தார். நந்தனின் நர்த்தனம் தொடர்கிறது. இனி அவர் ஆட்சிதான். புலவரும், எங்கிருந்தோ வந்தான் எனக்காக யார் என்றான். இரண்டாம் இடத்தை நான் பெறவே என்ன தவம் செய்தனை. அவருக்கு இப்ப தலைகால் புரியாதே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தாளுக்கு புரிஞ்சிடுச்சு. அடுத்த வருசமும் "பொத்தி வைச்ச தங்கக்குடம்" தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட சங்கதியே வேற. இப்பிடிச் செய்தால் நாம என்ன பண்ண. எனக்கு இரண்டும் புஷ்வானம். இரண்டுபேரும் வீட்டில சாப்பிடாம போற போற இடமெல்லாம் தின்டுகொண்டு. இவங்கள எப்பிடி நம்பி ஒரு விளையாட்ட விளையாடுறது. இது அடுத்த கட்ட வேலை. போட்டுப் பிளந்து விட்டுக்கிருக்கு. சென்னையின் கதி அதோ கதிதான். அடுத்த அடுத்த வருசம் பார்ப்பம். சென்னையைத் தெரிவுசெய்த எல்லாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தப் பையனை விளையாட வச்சிட்டாங்களா. வாவ்..... போட்டுப் பிளந்திருக்கிறான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்பிடீங்க ராஜஸ்தான் தோத்தாங்கள். ஒன்று மட்டும் உண்மை. நமக்கு முட்டை தாறதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ. செய்தாச்சு. இன்று முழுதும் ஒன்றுமே பார்க்க முடியவில்லை. என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியாது. நீங்க வேற. நம்மோட ராசி நல்ல ராசி. ஏன் இதுக்க சேர்ந்தீங்க
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Fixing என்று இல்லை. ஒரு வித, கொடுக்கல் வாங்கல் என்ற தொனியில்தான் எழுதியிருக்கிறார். ஊகம்தான். ஆகா. அந்தக் குரங்குப் படமே மிச்சக் கதையைச் சொல்லுது. சாராம்சத்துக்கு நன்றி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர்களுக்கு நடுவில் வரும் துடுப்பாட்டக்காரர்களாள்தான் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்யத்தான் இவர் உதவுவார். அதனால்தான் சங்கரோ என்று நினைத்தேன். ஓவர்டன் அவர்களுக்குத் தேவை. பேபிய impact sub ஆகக் கொண்டு வரலாம். அப்படியாயின் டூபே தொடங்க வேணும். அப்படியாயின் சங்கர்தான் பலி. திருப்பாதி மூன்றாம் இடத்துக்குத் தேவை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Facebookல் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார். நீண்டநாள் IPL ரசிகர்கள்தான் இது உண்மையா இருக்குமா என்று சொல்ல வேண்டும். அவரின் பத்தி கீழே: நேற்றைய போட்டியில் லக்னவ் அணியின் பல முடிவுகள் வினோதம் - பவர் பிளெவில் அவர்கள் பந்துகளை நிறைய விட்டது, பண்ட் மிக மெதுவாக ஆடியது, மில்லரை மிகத் தாமதமாக இறக்கியது. கட்டக்கடைசியாக முக்கியமாக பிஷ்னாய்க்கு நான்காவது ஓவரைக் கொடுக்காதது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வினோதமோ சர்ச்சையோ இல்லை - எல்லா ஐ.பி.எல்களிலும் சில போட்டிகளை தாரை வார்ப்பார்கள் - பெரும்பாலும் சென்னையும் மும்பையும் மோசமாக ஆடிவரும்போது அவர்களுடைய ரசிகர் படையை சோர்வடையச் செய்யாமல் இருக்க, விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள் வெளியேறாமல் இருக்க, ஆட்டத்தொடரை விறுவிறுப்பாக்க நிர்வாகக் குழுவும் அணி உரிமையாளர்களுமாக இம்முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அதிகாரபூர்வ fixing இது. நேற்றைய போட்டியை சென்னைக்கு விட்டுக்கொடுத்தால், அதற்கு முந்தின நாள் போட்டி மும்பைக்குப் போனது. ஐ.பி.எல் தொடரின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இதனாலே மக்கள் மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பார்கள். விளையாட்டை முழுமையான பொழுதுபோக்காக, வியாபாரமாக மட்டும் பார்க்கையில் வரும் விபத்து இது. இறுதிப் போட்டியிலாவது பிக்ஸிங் பண்ணாதீங்க என்பதே என் வேண்டுகோள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@கிருபன் ஒரு சுருக்கம் தர முடியுமா. இறுதிப் போட்டியில் இந்த இந்த அணி வெல்லும் என்று கணித்தவர்கள் எத்தினை பேர். யார், எந்த அணி என்று தேவையில்லை. எத்தனை பேர் எந்த அணி என்று தெரிந்தால் பம்பலா இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். இப்போ எங்கே அப்பிடி ஒரு பந்து வரும் என்று பார்த்துக் கொண்டு நிற்கினம். கொஞ்சம் மேல வந்தாலே வெளுக்கிறாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாவம் அவரை இப்பிடி ஏத்திவிட்டே மண்ணாக்கி விட்டுட்டாங்கள். டிவில்லியர்ஸ் மாதிரி ஒருவர் இனி வருவாரோ தெரியாது. கிரிக்கட்டில் ஒரு பாரிய பாய்ச்சல் அவருடையுது. களத்தடுப்பு என்றால் என்ன என்று ஒவ்வொருவருக்கும் பாடம் எடுத்தவர். அவர் நிற்கும் பக்கம் எப்படியும் ஒரு 25 தொடக்கம் 30 ஓட்டங்களை தடுத்து விடுவர். அதுவே தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பெரிய வெற்றி. அவரின் பின் தான் எல்லா அணிகளும் களத்தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. அதற்கு என்றே தனியாக பயிற்சியாளர்களை நியமித்தார்கள். இந்தியா இலங்கை போன்ற நம் நாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தன. கடந்த காலத்தை பார்த்தீர்கள் என்றால், எமது வீரர்கள் எப்படி களத்தடுப்பார்கள் என்று தெரியும் தானே. சில வீரர்களை நோக்கி பந்து சென்றால், இன்னும் ஒரு ஓட்டம் அதிகமாக ஓட முடியும் என்று துடுப்பாட்டக்காரர்களுக்கு தெரியும். சமீப காலத்தில் அஸ்வினைப் பற்றி அப்படி சொல்வார்கள். அவரை நோக்கித் தட்டி விட்டு ஒன்றுக்கு இரண்டாவது ஓட்டம் ஓடிவிடுவார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வானிந்து அப்பிடிப் போட்டா அடிக்கிறது கஷ்டம். அவற்ற பந்து நல்லா கீழ வரும். அவர் நல்லாக் குனிந்து, பந்தை விடும்போது மிகவும் கீழ இருந்துதான் விடுவார். அவருக்கு இப்போ அந்த லைன் சரியா வருதில்லை. இன்று ஹேசுல்வூட்டும் புவனேஷும் குடுத்த அழுத்தத்தை, மற்றவர்களால் குடுக்க முடியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் நினைக்கிறன். ஒரு 15 பேர் சென்னை என்று. ஆறுமுகத்துக்கு ஏறுமுகம் என்று வசி சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவங்கள விடுறதா இல்லை போல. நம்ம வானிந்துவுக்கு ஒரு போனப் போடவேண்டியதுதான். நாளைக்கு உருட்டுறம். அது எங்களுக்கா. ஏதோ சனி என்று கதைக்கினம். நாளைக்கு சனிக்கிழமை வேற.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி, நந்தன், ரசோதரன். மூவரையும் கொஞ்சம் கீழே இறக்குவதற்கு நல்ல சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். குலுக்கல் இன்றே கடைசி நாள். அம்மாமாரே ஜாயாமாரே. வாருங்கள் வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். உங்கள் அதிஷ்டம் உங்களை அழைக்கிறது.