Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். இப்போ expert என்றால், ஏதாவது சொல்லவேணும் என்று அடிச்சு விடுறது. வந்தா மலை. போனா.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டேல் ஸ்டெயின் கூறியிருக்கிறார். SRH இந்தப் போட்டியில் 300 அடிக்கும் என்று. அதில இருந்து அவரை ஓட்டத் தொடங்கி, இன்னும் ஓடிக் கொண்டிருக்கு. SRH 80 ஓட்டங்கள் அடிச்சிருக்கு. இன்னும் எத்தனை அடிப்பார்கள். 9 பரிமாற்றங்கள் இருக்கு. அவருக்கு மட்டும் எங்கே இருந்து படங்கள் கிடைக்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சும்மா போங்க. கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரிதான். எந்த எந்த இடத்துக்கு எந்த வீரர் என்று கணக்கு இருக்கு. ஆரம்பத் துடுப்பாட, மூவர்தான் இருக்கினம். இருவர் எப்போதுமே. அதில் ஒருவர் காயமென்றால்தான் மற்றவருக்கு வாய்ப்பு. இப்பிடித்தான் அணியைக் கட்டமைக்கலாம். பந்து வீச்சும் அப்பிடியே. முக்கியமா, எதிர் அணி வீரர்களையும் கணக்கில எடுத்துத் தான் பந்து வீச்சாளரைத் தெரிவு செய்வினம். மற்றது ஆடுகளம். அதுவும் T20 மாதிரி விளையாட்டில் அணித் தெரிவு இன்னும் கடினம். திருத்தி அமைப்பதற்கு முன்னம் போட்டி முடிஞ்சிடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கில்லாததா. எடுத்துக்கங்க. மண்ணைப் பத்திக் கதைச்சாலே இப்போ திக் என்டுது. அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ. 😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் நினைக்கிறன், முதற்தடவையாக முதல்வர் ஆகியிருக்கிறார் நந்தன். வாழ்த்துகள்!! கந்தப்புவுக்கே எங்கள் ஆதரவு. எல்லாரும் சேர்ந்து அவரை வெல்ல வைப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் தெளிவாத்தானே சொல்றார். தனக்குப் பின்னால போ என்று. இல்லையா?😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதே. அதுவும் அந்த 20வது பரிமாற்றம். விக்கட் பக்கமா வந்தாலும் சரி விக்கட்டுக்கு மேலால வந்தாலும் சரி, யோக்கர் பந்தாப் போட்டார். ஒரே ஒரு பந்து கொஞ்சம் பிசகி வந்தது. ஆனால் சிம்ரனால் அடிக்க முடியவில்லை. அழுத்தம் அப்பிடி. அனுபவம் பேசும் என்பது எவ்வளவு உண்மை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது அல்லவோ போட்டி. நேற்று அப்பிடி ஒரு போட்டி என்றால், இன்று இப்படி. முதலாவது சுப்பர் ஓவர். டெல்லி வென்றது. நமக்கு முட்டை வரக்கூடாது என்று எவ்வளவு கஸ்டப்பட்டு வெல்லுறாங்கள். நம்மேல அவ்வளவு அன்பா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்தடுத்த ஓட்டமிழப்பு. தேவையா இது. 12 ஓட்டங்கள். டெல்லியே என்ன செய்யப் போகிறாய்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மிச்சல் ஸ்டார்க். நீ ஒரு வீரன்டா. ஆறு பந்தும் முத்தான பந்துகள். அப்பிடி எல்லோ கடைசி பரிமாற்றத்த வீசவேணும். வாவ் வாவ். மீண்டும் ஒரு Thriller in Delhi
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மக்களே வாங்க. போட்டி சூடு பிடிக்குது. குல்தீப் சுழட்டுகிறார். ராஜஸ்தான் சுழல்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
66 பந்துகளில் 107. சாஞ்சு காயம் காரணமாக வெளியேறினார். திரும்ப வருவாரா. சுழளர்கள் வந்த பின்பு ஓட்டம் எடுப்பு மந்தமாயிருக்கு. என்ன நடக்கப் போகின்றது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரகானே ஏன் நடப்புச் செய்தார் என்று தெரியேல. விக்கட்டுக்கு வெளியால விழுந்த பந்து. அந்த ஆட்டமிழப்பு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மொயின் அலி இப்போ பழைய ஆள் இல்லை. கனகாலமா, சிறப்பா விளையாடுவதும் இல்லை. அதோட நான்கு வெளிநாட்டு வீரர்களைத்தான் தெரிவு செய்யலாம். மொயின் வந்தாலும் எந்த இடத்தில விளையாட விடுவது. ரசலுக்காகத்தான் அவரைக் கொண்டு வரலாம். ஆனால் அணி ரசலை நம்புவது போல்தான் உள்ளது. சுனில் இருக்கிறபடியால், சுழல் பந்துக்கும் மொயின் தேவையில்லை. அவரின் தெரிவு அணி ஒழுங்கில் சிக்கலைத்தான் கொண்டுவரும். அதிர்ஷ்ட தேவதை அவர் என்ற வகையில கொண்டு வந்தாலும், எப்படி அணியில் பொருந்துவார் என்பதுதான் கேள்வி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் அவரை விட்டு விலகியதால், மிக மனவேதனையில் இருக்கிறார். அந்தக் கோபத்தில், இன்று போட்டுப் பிளக்கப் போறார். எதுக்கும் பங்கர துப்பரவாக்கி வையுங்க. 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தனும் விடுற மாதிரி இல்லை. நாளைக்கு ஆட்சியைக் கவிழ்ப்பார் என்று, குருவி சாத்திரம் சொல்லுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அத்தோட, மைதானம் வேகப்பந்துக்கும் சுழல் பந்துக்கும் சாதகமாய் இருந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் 10 விக்கட்டுகளையும் சுழல் பந்து வீச்சாளர்கள் 9 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். ஒருவர் ஓட்டமிழந்தார். ஆனால் சுழளர்கள் கொடுத்த அழுத்தம் அதிகம். இதுவல்லவோ போட்டி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். நல்ல இறுக்கமான பந்து வீச்சு. முதல் இரண்டு விக்கட்டுகளும் உடனேயே விழுந்தது. அதன் பின், சுழளர்கள் வர, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. சாகலும் மக்ஸ்வெலும் ஜந்து விக்கட்டுகளைக் கைப்பற்ற (4 பரிமாற்றங்களில், 14 ஓட்டம், 5 விக்கட்), பின்னர் சட சடவென சரியத்தொடங்கினர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பந்து வீச்சின் உச்சம். சாகலை அவர்களால் தொடவே முடியவில்லை. ரசல் அந்த கடைசிப் பரிமாற்றத்தில் அடிச்சது மட்டும்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன வசி.... இதுக்குப் போய். வாங்க இனி ஆராயாலாம். என்ன களத்தில் உள்ள "விற்பன்னர்கள்" பாடுதான் இப்போ கரைச்சல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வரே வா. என்ன ஒரு சம்பவம். பஞ்சாப் ஆபார வெற்றி. Thriller in Mullanpor @ஈழப்பிரியன் என்ன சொல்றேல் குறைந்த ஓட்டங்களுடன் KKR. எப்பவுமே சொல்வது. விளையாட்டில், முடியும் வரை அது முடியவில்லை. மீண்டும் நிருபணமாகியிருக்கிறது. சாகலின் உருட்டலில் உருண்ட கொல்கத்தா. வாவ்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நடந்திச்சு. இப்பத்தான் கடையைத் திறந்தா, பெரிய சம்பவமா எல்லோ பண்ணி வைச்சிருக்கினம். பஞ்சாப் பஞ்சாகப் பறந்துதா. அடுத்த முட்டையுமா. தொடர் முட்டைத்தாக்குதல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட அந்த முனாவா. மூவன்னா என்டத் தான், கொஞ்சம் குழம்பிட்டன். அப்ப சரி. தலையையும் ஆட்டத்தில் சேர்த்துக்கலாம். என்ன இப்பிடி சொல்லிப் போட்டீங்கள். ஆறுமுகம் ஏறினா நம்மபாடு அதோகதிதான். விடக்கூடாது. மந்திர தந்திரம்தான் போடவேணும் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடித்தான் கதை இப்போ. எல்லாம் அவர் மயம். வென்றால் அவர், தோற்றால் அணி. இந்தப் போக்கு மாறவேயில்லை. தரவுகளின் அடிப்படையில், தொடரந்து ஜந்து தோத்தால், அடுத்த போட்டியை வெல்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதுபோல் நடந்தது. எல்லாம் ஒன்றாக நன்றாக இருந்தது. அவர்கள் மிகவும் நன்றாகவே விளையாடினார்கள். லக்னோ பந்து வீச்சு மாற்றங்கள் நினைத்தபடி எடுபடவில்லை. அதுவும் 19வது பரிமாற்றத்தை தாக்கூருக்குக் கொடுத்தது. அவருக்குத்தான் இன்று செம அடி. அதன் பின்னும் அவருக்குக் கொடுக்க, அவரும் கூச்சமில்லாமல் நன்றாகவே போட்டுக் கொடுத்தார். அதுவும் அந்த full tose எல்லாம். எங்க போய் அழ. ஏழு ஓட்டங்கள் அந்தப் பந்தில். ஒவ்வொரு பந்தையும் அடியடா என்று போட்ட மாதிரியே இருந்துது. என்னமோ, தலசிவயோக நமக.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதென்னங்க மூனா. எனக்கு தமிழ்நாட்டு அரசியல் ஞானம் அவ்வளவு இல்லீங்க😁 நீங்கள் எங்க வீட்டு மருமகனைச் சொல்லேல்லதானே