Everything posted by செம்பாட்டான்
-
நானும் ஊர்க் காணியும்
இப்போதைக்கு அப்பிடி காணி கீணி வாங்கிறமாதிரி யோசினை இல்லை. காலம் மாறலாம். பார்ப்போம். இயந்திரங்களை வாங்க முடியுமாயின் வாங்கி உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொன்னமாதிரி, அங்கே இருந்து செய்வதுதான் நல்லது. சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் உங்களிடம் வருகைதரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். அவர் தனது இணையரையும் விட்டு, ஒரு மாரக்கமாத்தான் போய்க்கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் சுவி. நல்ல வேளை, காவிய நம்பி கவுளேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு அடிக்க வேணும் என்டு அடிச்ச மாதிரிக் கிடக்கு. SRH இப்பிடிப் போட்டு வெளுத்துவிட்டாங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெருசா செய்யிறம் நாளை. மாற்றம் ஒன்றே மாறாதது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. என்ன நடந்தது. யார் செய்த வேலை இது. சுவி நந்தன் இணைப்பாட்டம் தகர்க்கப்பட்டது. எங்கள் பழைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்பிடி ஒரு நிலைமையா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்படி நம்ம உறுதி. சென்னை அடிச்சது ஒரே ஒரு ஆறு. KKR அடிச்சது பத்து. எல்லாரும் ஆளுக்கொன்று என்றாலும் அடிச்சினம். இது என்ன மாதிரியான போட்டி என்று ஆராயவே முடியாது. எவ்வளவத்தான் சொல்ல முடியும். என்ன சொன்னாலும் அணியைக் கலைச்சுப்போட்டு புது அணி வேண்டும் என்றுதான் வந்து முடியும். அதுதான். அதுவும் சுனிலு சும்மா நின்டபடி அடிக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குறைந்த ஓட்டங்கள் எடுத்து எனக்கு வரவேண்டிய அந்த புள்ளிகளுக்கும் ஆப்பு வைத்து விட்டார்களே. நம்ம அதிர்ஷ்டம் இப்பொழுது அதள பாதாளத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்துக்கு அடிக்கும் தூபே என்ன செய்தார். முதலாவது பந்திலே ஒரு ஓட்டத்தை எடுத்து, மற்றப் பக்கம் போய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார். 16வது பரிமாற்றத்திலும் 17வது பரிமாற்றத்திலும் அதையே செய்தார். உண்மையிலேயே எனக்கு புரியவே இல்லை. தூபே செய்வது மிக மிக மட்டமான ஆட்டம். இப்போ 9வது விக்கட்டும் போட்டுது. 17.1 தூபே ஒரு ஓட்டம் 17.2 விக்கட் 17.3 கடைசி பையன் ஒரு ஓட்டம் 17.4 தூபே ஒரு ஓட்டம் - டேய் உண்மையாவாடா...... எப்பிடிடா முடியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பசங்களா, அந்த 116அ அடிச்சு, குறைந்த ஓட்டம் என்டத தாண்டுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல வந்திட்டார். ஏன் கவலை. அவர் கெத்து மாதிரி, முதல் பந்து, சாமிக்கு விட்டு, தனது ஆட்டத்தைத் தொடங்கி விட்டிருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்ப என்ன சொல்லுறியல். அஸ்வினையும் வீட்டுக்கு அனுப்பியாச்சு. அடுத்து ஜடஜாவையும் அனுப்பிட்டா, தல வாறதுக்கு எல்லாம் வடிவா செய்து விட்டிருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மனத்த விட்டுடாதீங்க. சம்பவம் இருக்கும்.
-
நானும் ஊர்க் காணியும்
சொந்தக்கார வக்கில் ஒருவராள், எனக்கு மாறிச் சொல்லப்பட்டது. இருக்கிற காணிய வைத்திருக்கலாம் ஆனால் வாங்க முடியாது என்றுதான் சொல்லப்பட்டது. எனக்கு இப்போது இலங்கை குடியுரிமை இல்லை. ஏதேன் வாங்கிற என்டால், இரட்டைக் குடியுரிமை எடுக்கவேணுமாம். ஆனால் நீங்கள் வாங்கியிருக்கிறபடியால், எனக்குக் கிடைத்த தகவல் பிழை போல. ஜயகோ. ஈழப்பிரியன் சொன்னமாதிரி, ஆளுக்கொரு தகவலோட இருக்கிறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR நாணயச் சுழற்சியில் வென்று கலைப்பதற்கு முடிவு செய்திருக்கினம். திரிப்பாதி விளையாடுகிறார். யாழ்களத்தின் விருப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்குது. ஆதலினால், சென்னை வெல்வது உறுதி.
-
நானும் ஊர்க் காணியும்
இருக்கிற சொத்தை விக்கலாம். ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள். Non resident கணக்கு தொடங்க வேணும். இல்லாட்டி நகை வாங்கலாம். அங்கேயே செலவழிக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட குறி தப்பாது என்று...... அந்த வடையைச் சுட்டது யார் என்று ஆராய்வோம்.
-
நானும் ஊர்க் காணியும்
இல்லை. சொத்து/காணி எதுவும் வாங்க முடியாது. High rise builidingல முழுக் காசும் கொடுத்து flat வாங்கலாம் என்று நினைக்கிறன். குத்தகைக்கு காணி எடுக்கலாம். NRS ஆக வங்கிக் கணக்கில பணம் வைத்திருக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பவும் லோகம் நம்பிக் கொண்டிருக்கோ. நீங்கள் என்னைக் கரைசேக்கிறதில் மும்முரமா இருந்ததால, இதைக் கோட்டை விட்டிட்டியல் போல. இப்ப பாருங்கோ அவர்களின் பாய்ச்சலை. படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. கேட்டியலா கேட்டியலா கேட்டியலா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCBயின் பந்து வீச்சுதான் எப்போதுமே அவர்களின் பிரச்சனை. Hazlewood அதனை நிவர்த்தி செய்கிறார் என்று பார்த்தால், இன்று எல்லாமே தலைகீழ். அவர்கள் கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுவே. அவருக்குத் தெரியும். எப்போ புள்ளிவைக்க வேணும் என்று. புள்ளி கூடக் கூட அவரின் தலை இங்கே அடிக்கடி தென்படுகிறது.
-
நானும் ஊர்க் காணியும்
தகவலுக்கு நன்றி. உங்கள் பிரயாசை மேன்மேலும் வலுப்பெற வாழ்த்துகள். அதையேதான் நானும் சொன்னேன். அவர்களால் அங்கு வாழ முடியாது. களைகள் எல்லாம் அழிந்து நல்ல நெற்கதிர்களே மிஞ்சியிருக்கும். கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் அங்கே போய் இருந்தபின்பு, வடிவாக விசாரிச்சு மேன்மேலும் செய்யலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனாலும் உந்த வயசில அந்தாள் விக்கட் காப்பளரா விளையாடுறார். மின்னல் வேக தகர்ப்புகள், அது இது என்டு போட்டு உழட்டுறாங்கள். இனிப் பாருங்க. அந்தாள் வலக்கையை உயர்த்தினா இப்பிடி, இடக்கையால சொறிஞ்சா இப்பிடி என்டு எத்தினை வரும் என்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள். சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)
-
நானும் ஊர்க் காணியும்
அதுதான் எல்லா இடமும் கழுவி ஊத்தினமே. வெளியில இருக்கிற ஆக்களும் சரி அங்கே இருக்கிற அவர்களின் நிழல்களும் சரி, செய்கின்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது. நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே யோசிப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க. பொறுங்க. ராகுலோட என்னமோ பூசை போட்டிருக்காம். பெங்களூரிடம், குல்தீப் மாதிரி ஒரு சுழளலர் இல்லாதது தெரியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நடக்குது. 3 விக்கட். அதுவும் Hazlewood வாறதக்கு முதலே. Hazlewood ன்ர பயத்திலேயே மூன்று பேரும் நடையைக் கட்டிட்டினமோ. களத்தில நின்றால்தானே எங்கள விழுத்தலாம். இல்லாட்டி என்ன செய்வாய் மகனே.