Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்போ நீங்கள்தான் ஆளவந்தான். கலந்து செய்த கலவை நீங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தப் பயம் எப்பவோ வந்திட்டுது. நானும் அதற்கு தயாராகவே இருக்கிறேன். அதிர்ஷ்டம் அடிக்குது என்டு ஒரே பேச்சாக் கிடக்கு. ஆனால் ஒன்று. எப்படி அமைந்தாலும், இலகுவாக எடுத்துக் கொள்வேன். குய்யோ முறையோ என்டு ஓடமாட்டேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தனிய அங்கின என்ன செய்து கொண்டு இருக்கிறியல். ரண்டு மூண்டு பேரக் கூட்டிக்கொண்டு போறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Strategic Timeout - என்ன மாதிரியான நகைச்சுவை இது. சும்மா timeout என்றே வைத்திருக்கலாம். 16வது ஓவர் முடிவில எடுக்க வேணுமாம். ஏதாவது strategy பண்ண என்றால் எடுக்கலாம். ஓட்ட எண்ணிக்கை சமமாக இருக்கும் போது என்ன மாதிரியான strategy பண்ணலாம். நகைச்சுவையின் உச்சம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னுடைய எண்ணம் என்னவென்றால், இப்பிடியான திரியில எப்போதும் நக்கலும் நையாண்டியும் தானே. வேறு ஏதாவது இருந்தால் சொல்லிப் போடுங்க, நான் அடக்கியே வாசிக்கிறன். நமக்குள்ளே யாழ் களம் என்ற ஒரேயொரு தொடர்புதானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப்புக்கு இது இரண்டாவது போட்டி. பங்குனியில ஒரு போட்டியும் சித்திரையில ஒரு போட்டியும் வைத்தால் கடுப்பேறுமா இல்லையா. அதுதான் போட்டுத் தாக்கிறாங்கள். சங்க நல்லாத்தான் ஊதிட்டார். இனி முடிஞ்சுது என்றுதான் நினைக்கிறன். சுமைதாங்கிகளின் எண்ணிக்கை கூடப்போகுது. @goshan_che இனி தனியாள் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொன்னதற்குத்தான் நானும் சொல்லிப் பார்த்தன். சும்மா முசுப்பாத்திக்காக. விளையாட்டில் உள்ள விருப்பமே அந்த தெரிவு செய்ய முடியாமை (unpredictability). நாம சுற்றிச் சுழன்டு எங்கட புலைமையை வீரத்த காட்டலாம் (சும்மா கம்பு சுத்துற என்டு இந்தியாவில சொல்லுவினம்). உண்மையிலேயே அவ்வளவுதான் நம்மால முடியும். நாம் வழமை போல குப்பையைக் கொட்டுவம். ஜபில தன்பாட்டில நடக்கும். இப்போதும் நானும் நீங்களும்தான் குப்பை கொட்டுறதில முதல்வரும் துணை முதல்வரும். வேறு ஒருவரும் கிட்டக்கூட இல்லை. குப்பைக் கணக்கு கீழே:
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிம்ரன் என்டு பெயர் வைச்சா அடிச்சு ஆட வேணுமோ என்னமோ. சிம்ரன் ஹெட்மேயர் என்டும் ஓராள் பலத்த அடி அடிப்பார். நம்ம சிம்ரனும் நல்லா ஆடுவா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுக்க முடியேலையோ. வாழ்க்கையில ஒன்றையுமே கணிக்க முடியாதுதான். 😁 நானும் அந்த அதிஷ்டத்தைத் தேடிக் கொண்டிருக்கிறன். எங்க போட்டுது என்டுதான் தெரியேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹா ஹா.... அவசரப் படாதீங்க. தாக்கூர் இருக்காரு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரனும் ஆட்டமிழந்தார். 44 ஓட்டங்களை வேகமாகப் பெற்றார். மற்றவர்கள் சேர்ந்து ஓட்டங்களைக் குவிப்பார்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க பொறுங்க. இப்பத்தானே ஆரம்பம். கடைசியில எங்க போய் நிற்குதோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2024ஆம் ஆண்டிலிருந்து T20ல் மிகப்பெரிய துடுப்பர். அவரின் ஆறுகள் எல்லாம் பார்த்தா, நாமளும் அடிக்கலாம் போல தோனும். அப்பிடி ஒரு அழகு. முயற்சி இல்லாமல் அடிப்பதில் மன்னன். நிக்கோலஷ் பூரான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி வேறை இருக்கோ. நீங்கள் நன்றாக இறங்கி தூர் வாருறீங்கள் போல. உங்கள வெட்டி ஒட்டின கோசான் பாடுதான்..... அவருக்குப் பாத்து உதவி செய்யுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம். போட்டி எவ்வாறு அமையப் போகின்றது என்று பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். அத்தோடு இந்த மைதானத்தில், பூரானின் துடுப்பாட்டம் இதுவரை சோபிக்கவில்லை. இன்று என்ன செய்யப் போகின்றார். பஞ்சாப் பஞ்சு மாதிரி பறக்குமா. லக்னோ சுழட்டி சுழட்டி அடிக்குமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அதையே தான் நினைத்தேன். இப்போது ஒற்றை ஆளாக சுமைதாங்கியாகியுள்ளார். விரைவில் அவருக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகின்றேன். சரியாக சொன்னீர்கள். என் நிலைமையும் அதேதான். எப்போ அடி விழும் எப்போ இடி விழும் என்று தெரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கே இப்போது பயம் வர ஆரம்பித்து விட்டது. எல்லாம் ஓரிடத்திலே வந்து வேறு எங்கே போய் அடிக்கப் போகின்றதோ என்று தெரியவில்லை. நீங்கள்வேற தவிடு தங்கம் என்று ஏதோ பூச்சாண்டி காட்டுறீங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் ஒன்பது பந்துகள் மிக அருமையாக வந்தன. அப்பிடியே இறுக்கிப் பிடித்திருந்தால், நல்லதொரு ஆட்டமாக அமைந்திருக்கும். ஆறு பந்தையும் அப்படி வீச யாரால்த்தான் முடியும். போறபோக்கில உங்களுக்கு காரணங்கள் இல்லாமல் போகப் போகின்றன. வேறு ஏதாவது புதுசு புதுசு காரணங்களை கண்டுபிடிக்க பாருங்கள். உபிசியாக 😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரை இரண்டும் காரணிகளாக அமையவில்லை. இப்படி போட்டி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுதான் குறைந்த ஓட்டமாக இருக்கப் போகின்றது போல. KKRதான் குறைந்த ஓட்டம் பெறும் என்று ஞான் தெரிவு செய்துள்ளேன். அவ்வாறே ஆகுக.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விக்கட்டுகள் விழுந்தவண்ணமே உள்ளன. மும்பையின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகிக் கொண்டே வருகின்றது. யாரெங்கே எல்லோரும் வெளியே வரலாம். களம் மிகவும் அமைதியாகவே இருக்கின்றது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR கடுமையான நெருக்கடியில். விக்கெட்டுகள் விழுவதினால் அவர்கள் impact sub ஆக மனிஷ் பாண்டேவை இப்போதே எடுத்து விட்டார்கள். ஆதலினால் அவர்களுக்கு பந்து வீச்சில் நெருக்கடி வர இருக்கின்றது. ஐந்தாவது ஆறாவது பந்துவீச்சாளர்களாக யார் வர இருக்கின்றார்கள். மும்பையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில், இன்று ரிங்கு சிங்கின் வானவேடிக்கை இருக்குது போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லது. ஆடுகளம் பெரிய காரணி இல்லை என்றால் பந்துக்கும் மட்டைக்குமான போட்டியாக இருக்கும். யார் நிதானமாக நின்று ஆடுகிறார்களோ, ஒன்று இரண்டு என்று ஓடி ஓடி ஓட்டம் எடுக்கிறார்களோ, அவர்கள் அதிக ஓட்டங்கள் பெறுவார்கள். அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வார். யார் அந்த வீரன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுமைதாங்கிகள் தாக்கப்பட்டனரா. எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம். மும்பை தோற்றால் பயமயம் அவர்க்கு.