-
Posts
929 -
Joined
-
Last visited
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nilmini
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
nilmini replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
வாசிக்க நல்ல சுவராஸ்யமாக இருக்கு சிறி. இலங்கையின் அழகுக்கும் வளத்திற்கும் எங்கேயோ இருக்க வேண்டிய நாடு. இப்போது நிறைய வெள்ளைக்காரர் மரக்கறிக்காரராக மாறுவதால், இணையத்தளத்தில் இருந்து இலங்கை இந்திய உணவு செய்முறைகளை பார்த்து பொருட்கள் வேண்டி சமைக்கிறார்கள். பிலாக்காய், சோயாமீட், பன்னீர் போன்றவற்றை தேங்காய் பால் சேர்த்து சமைக்கிறார்கள். நானும் பார்த்தவரையில் வெள்ளைக்காரருக்கு யாழ்ப்பாணம் நன்றாக பிடிக்கிறது. -
கந்தர்மடத்தை சேர்ந்தவரும் எமது உறவினருமான பாலசிங்கம் நந்தபாலன் லண்டனில் தமது 74 ஆவாது வயதில் காலமானார். மிகவும் செல்வந்தரான (பரம்பரை பணக்காரனான அவர் லண்டனில் பல சேர்விஸ் ஸ்டேஷன்கள் வைத்திருந்தவர்) இவர் விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய பண உதவி செய்திருந்தார். 2009 இற்கு பிறகு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வறிய மக்கள், விதவையான பெண்கள் என்று பலருக்கும் பல விதமான வாழ்வாதார நிதி உதவிகளை செய்து வந்தார். அண்மையில் ஒரு திருமணத்தின்போது அருகில் இருந்தவர்கள் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டத்தை கேட்டுவிட்டு, அவர்களை தொடரபு கொண்டு தேவையான உதவிகளை செய்துள்ளார். அவரது பல உதவிகளும் இப்படி நடந்தவை தான். சரியாகத்தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை வேண்டி போராளிகுடும்பங்களுக்கு அண்மையில் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலாக ஒருவருக்கும் தெரியாது. அவரின் அக்கா (எமது மாமி) சொல்லித்தான் எமக்கே சிலது தெரியவரும். எமது தமிழ் மக்கள் நல்லாக இருக்கவேண்டும், தமிழ் பிள்ளைகள் நன்றாக முன்னேறவேண்டும், தமிழ் மக்களுக்கு நல்ல மருத்துவ உதவி கிடைக்கவேணும் என எண்ணிய நல்ல உள்ளத்தை யாழ் கள உறவுகளும் அறிந்து அவரது ஆன்மா சமாதியடைய வேண்டுகிறேன். சிவராத்திரி அன்று சிவனடி சேர்ந்த தமிழன். அமரர் நந்தபாலன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலிகள்: எப்போதும் கலகலப்பாக இருந்தது எல்லோருடனும் அன்பாக பழகுவார்.யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட CT Scan இயந்திரத்திற்கான பிரதான நன்கொடையளர்களில் அமரர் நந்தபாலனும் ஒருவர். வடபகுதியில் பல உதவிகளை செய்தவர். நேற்று முன்தினம் இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். - Dr.Thangamuthu Sathiyamoorthy, Director of the Jaffna Teaching Hospital
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
nilmini replied to uthayakumar's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
மிகவும் அருமையான கவிதை உதயன். இளமைக்கால நினைவுகள் கண்முன்னே வந்து போனது. -
எமது இந்துக்கடவுள்கள் யாரையும் இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவரவர் விளக்கத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப உருவ வழிபாட்டையோ, ஆன்மிக வழியையோ அல்லது ரெண்டயுமோ பின்பற்றலாம். எமது சமயம் அதைதான் கூறுகிறது. எமது அப்பா அவரது இளமைக்காலத்தில் இருந்து அய்யப்பன் சிலையை சாமி அறையில் வைத்திருந்து அய்யப்பன் பாடல்களையும் கேட்டுவந்தவர். இது ஒரு உதாரணம் தான்.
-
இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன். பாட்டு, குரல், ஹனிபாவின் இயல்பு , எனது சிறு பிராயம் எல்லாவற்றுக்குமாக.
-
சுவிஸில் கணவர் , மனைவியை கொன்றது ஆணவக் கொலையா? ஆண் உளவியல் கொலையா?
nilmini replied to island's topic in சமூகச் சாளரம்
பெண்களுக்கெதிரான வன்முறை உலகமெல்லாம் நடை பெற்றுக்கொண்டே தான் இருக்கு.ஆண்கள் உடலால் வலிமை பெற்றிருப்பதால் பலரும் அதனை ஒரு பலமாக எடுத்துகொள்கிறார்கள். பெற்றோர் சிறுபிள்ளளைகளை அடிப்பதும் அதனால்தான். அவர்கள் வளர்ந்தபின் அடிக்கவோ வெருட்டவோ முடியாது. இந்த வழக்கம் அப்படியே ஆண்களின் மரபணுக்களில் தங்கி பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது எல்லா ஆண்களும் பெண்களை உடல் ரீதியாக தாக்காவிட்டாலும் எதோ ஒரு வகையில் தமது ஆதிக்கத்தை காட்டுவது நிறைய பேரிடம் இருக்கிறது. பெண்கள், பொருளாதாரத்தில் ஆண்களிடம் தங்கி இருக்கும்போது இந்த அடக்குமுறை மேலோங்கி நிற்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆதாரத்துடன் காட்டியுள்ளது. எனக்கு பெண் உரிமை, சம அந்தஸ்து என்ற கொள்கைகளில் நம்பிக்கை இல்லை. ஆணோ பெண்ணோ தமக்குள் நல்ல புரிந்துணர்வோடு இருந்தால் ஒரு பிரச்னையும் வராது. சமுதாயத்தில் பெண்களுக்கு என்று ஆண்களுக்கு என்றும் சில கடமைகள் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே பொறுமை, எல்லாவற்றையும் சாமளித்து குடும்பத்தை சேர்த்து வைத்து நடத்துதல், சமையல், பிள்ளைகளை பராமரித்தல் போன்ற தன்மைகள் இருப்பதால் அவற்றை அவர்கள் நன்றே செய்யவேண்டும். ஆண்கள் அவர்களுக்கே உரிய உடல், மன பலத்தை கொண்டு குடும்பத்தை சந்தோசமாகவும், வெற்றிகரமாகவும் நடத்த வேண்டும். ஆனால் இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதில்லை. இருவரில் ஒருவர் அல்லது இருவரும் நிறைய பிழைகளை தொடர்ந்து செய்வதால் குடும்பம் சிதறுகிறது. -
ஓம் கிருபன், இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. பல்கலைக்கழகத்தின் மூலமாக போனதால் தான் இப்படி கல்வி சார்ந்த எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்து, பல வகையான சரணாலயங்கள், ஆராய்ச்சி கூடங்கள் இன்று பார்க்கக்கூடியதாக இருந்தது.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
கிடுகுக்கொட்டில் ஒன்றை போட்டிட்டால் போச்சு😂 -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி நிலாமதி. எனக்கு பழமையை பேணிப்பாதுகாப்பதில் மிகுந்த விருப்பம். மனதுக்குள் நினைத்த மாதிரி செய்வதில் சில தடங்கல்கள். என்றாலும் அம்பது வீதமாவது செய்யக்கூடியதாக இருக்கு. அரச மரமே வேண்டாம். சில மாதங்களில் போ ய்ய பினிஷிங் செய்யலாம் என்று இருக்கிறேன். அரசமரம் இருந்தால் தறிக்க வேண்டியதுதான். கு. சா அண்ணாவும் நுணாவிலா? எழுதுமட்டுவாள் தேத்தண்ணி அந்த தண்ணீருக்கு மிகவும் சுவையாக இருக்கும் -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நுணாவில் உறவினர்களிடம் அவர்களை தெரியுமா கேட்டுப்பார்க்கிறேன். திலகா டீச்சர் அவ்வளவு வடிவா? பெயரும் அழகாகத்தான் இருக்கிறது. உண்மைதான் PIRA. நான் போட்ட பிளானின் படி வேலைகள் முடிந்து விட்டது. இற்கு முதலே செய்ததால் செலவு பரவாயில்லை. மீண்டும் சந்தித்ததில் சந்தோசம் ஏராளன். நலமாக இருக்கிறீர்களா? தொடர்ந்து ஏதாவது சுவாரசியமான , பிரயோசனமான விடயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். -
புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம்
nilmini replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அரச மரங்களையெல்லாம் தறித்து விட்டு வேறு பிரயோசனமான மரங்களை நடவேணும். அவர்களுக்கு அரச மரத்தை கண்டால் உடனே புத்தர் ஞாபகம் தான். அதுவும் ஒருவகையில் உண்மைதான் -
சாப்பாட்டு வகைகளை கேட்கவே நல்ல ருசியாக இருக்கு சிறி.எலும்பு சரியாக பொருந்துவது, நரம்பு சதைகள் மீண்டும் தொடர்பு கொள்வதெல்லாம் எமது உடல் கச்சிதமாக செய்தாலும், ஒரு தவறும் நடக்காமல் எல்லாம் சரிவந்து , சமநிலயையும் எடுத்துவிட்டது பெரிய ஒரு விடயம்தான்.பழையபடி வேலைக்கும் போகத்தொடங்கியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. வேலைக்கு போனால் உடல் நிறை விரைவாக குறையும்
-
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பல வகையான லெமூலர் விலங்குகள் வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளன. அதனால்மடகாஸ்கர் தீவிலுள்ள பல காடுகளையும் சரணாலயங்களாக மாற்றி இந்த லெமூர் விலங்குகள், பச்சோந்திகள் மற்றும் தாவர விலங்கினங்களை பாதுகாக்கிறார்கள். எலி மாதிரி காதுகளும், நீண்ட அகண்ட வாலும், வவ்வால் மாதிரி கால்களும் கொண்ட அய்யி அய்யி என்னும் இனம் (மேலே படத்தில் உள்ளது) தன்னுடைய கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறனைப் பயன்படுத்தி உணவின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது. இதனுடைய அடர் பழுப்புநிற விநோதமான உருவ அமைப்பு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் அதிகளவு அழிக்கப்பட்டு அரிய விலங்கினத்தினுள் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. இந்த விலங்கை பற்றிய ஒரு சுவாரசியமான செய்தியை அண்மையில் படித்தேன். இந்த இணைப்பில் உள்ளது https://www.bbc.com/tamil/science-63427908 நன்றி. படங்களுக்கு இடையில் சில விளக்கங்களும் எழுதி வருகிறேன். பார்க்கவில்லையா நிலாமதி?
-
பதிவுகள் இடும்போது மற்றவர்கள் போடும் கமெண்ட்ஸுக்கு லைக்குகள் போட முடியாமல் இருக்கிறது. ஐந்து லைக்குகள் தான் நேற்றைக்கு காலையில் இருந்து போட விடுகிறது.எல்லோருக்கும் அப்படிதானா?
-
உண்மைதான். அங்கு பயணிக்கும்போது திடீரென ஸ்ரீலங்கா பெயர் பலகைகளை பார்த்ததும் வியந்து போனேன். மாணிக்கக்கற்களை புராதன முறையில் தண்ணீரில் அகல்வதை படம் எடுத்தேன். கண்டுபிடித்து அதையும் பகிர இருக்கிறேன். மாணிக்கக்கற்கள் இருக்கும் ஒரு இடத்துக்கு போனோம். அங்கு இலங்கையர்களையும் சந்தித்தேன்.
-
-
மனிதர்களை நம்பும் விலங்கினகளுக்கு அதுதான் முடிவு. நம்பாவிட்டாலும் மனிதர்கள் விடப்போவதில்லை. இந்த லெமூர் இனங்களை பாதுகாப்பதற்கு முதன் முதலில் ஆர்வம் காட்டியவர் ஒரு அமெரிக்க பெண் விஞ்சானி. அந்த முயற்சி இப்ப நல்ல பலன் அளிக்கிறது. கணணி தான். முயன்று பார்க்கிறேன். நன்றி ஏராளன்.
-
எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும் மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம். இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப் என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. நாற்சார் வீட்டின் கால் பகுதியை அப்படியே வைத்துக்கொண்டு இரன்டு அடுக்காக கட்டினது. மிகுதியை பழையமாதிரியே இருக்கத்தக்கதாக சீலிங் அடித்து, நிலத்தையும் திருத்த வேணும். பாசையூர் கட்டிட்டா என்ஜினீயர் ஒருவர்தான் இதுவரை செய்து தந்தவர். வேலை நல்லம் ஆனால் ஸ்லோ. -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
வணக்கம் புங்கையூரான், இது பொன்னொச்சி மரம் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. போனமுறை கேதீஸ்வவரம் போய்த்தான் முதல் தடவையாக கொன்றை பூவை அடையாளம் கண்டேன். உண்மைதான் சிட்னி கோவில்காரர் கண்டுபிடித்து விட்டால் உங்கள் நினைவு மீட்டல்களையும் குழப்பி விடுவார்கள். எனது தோட்டத்தில் நான் முதன்மையாக கேட்டது பாக்கு மரம் தான்.அப்பாவுக்கு விருப்பமானது. மிச்சம் எல்லாம் lanscaperரே தெரிவு செய்தது. -
சிறி எனது தந்தை வழி நெருங்கிய உறவினர். மிகவும் கண்ணியமான தாய் தந்தையர், சகோதரி சகோதரனுடன் யாழ்ப்பாணம் நல்லூரான் அடியில் பிறந்து வளர்ந்தவர். அவரை பற்றி எனது தகப்பனுக்கு தான் அதிகம் தெரியும். ஆனால் அவர் இன்று இல்லை. எனக்கு அவரின் பெற்றோர் மற்றும் தம்பியை தான் அதிகம் பழக்கம். அருமையான மனிதர்கள். நன்றாக ஆடம்பரமின்றி வாழ்ந்த குடும்பம்(எனது தகப்பனை போலவே). அம்மாவுக்கும், மாமாவுக்கும் சிறியய் நன்றாக ஞாபகம் உள்ளது. சிறி தன்னை மிகவும் எளிமையாய் காட்டிக்கொள்வதை பார்த்தாலே தெரியும் அவரது தன்னடக்கம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. வீட்டின் கால்வாசி பகுதிதான் புதிதாக காட்டியது. மிகுதியாய் பழைய நாட்சார் அமைப்புடன் மெருகு படுத்த முடியுமா என்று Hari Engineering இடம் கேட்டு பார்க்கிறேன்,