Everything posted by nilmini
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் . நின்றது ஒரே ஒரு பனை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு. வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளாட்டு நட்டிருக்கு.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
என்ன ஈழப்பிரியன் , கு. சா அண்ணாக்கள் எல்லாரும் ஒரே கள்ளுக்கொட்டில் கதையா கிடக்கு? அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா? இப்பதான் கு .சா அண்ணா ஆர் என்று தெரியுது. உண்மையிலேயே நல்ல ஐடியா. மேலும் விளக்கம் தர முடிந்தால் பகிரவும். ஆடி மாதம் போய் வேலைகளை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நன்றி நிலாமதி. சின்னனில பிளா வில் கூழ் குடிக்க ட்ரை பண்ணினான். ஆனால் பெயர் தெரியவில்லை. சிரட்டையில் குடித்திருக்கிறேன் நன்றி நுணாவிலான். கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கவேணும். உங்கள் புனை பெயர் எமது அய்யாவின் (அம்மாவின் அப்பா) ஊரை ஞாபகப்படுத்துகிறது (எழுதுமட்டுவாள்).
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
புழுதி மண்ணுக்குள்ள தென்னங்குத்தி. சூப்பர் ஐடியா. அது என்ன பிழா? கேள்விப்படேல. கிணத்துக்கு துலா செய்து தோய்க்கிற கல்லு, வக்குகள் எல்லாத்தயும் நல்லா பொலிஷ் பண்ணலாம் என்று இருக்கிறன்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
தோட்டம் 1 பரப்பில் தான் செய்திருக்கு. ஆனால் நல்ல டிசைன் பண்ணி செய்திருக்கிறர். அது அம்பரல்லா காய் அண்ணா. சம்பல் சொதி செய்யலாம். சிங்களவர் அச்சாறும் செய்வார்கள்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
சுந்தரம் பிரதேர்ஸ் இன்னும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். 2019 இல் போயிருந்தேன். மாமா இன்னும் அங்கு மருந்துகள் வேண்டுகிறவர். அண்ணாச்சி கடை, ராசா கடை எல்லாம் இல்லாமல் போய்விட்டது.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
சிலை வைத்த நோக்கம் எதுவோ அது கட்டாயம் நாடாகும் சிறி ( உண்டியல் உற்பட). இலங்கையிலும் அப்படி சட்டங்கள் இருக்குது. உள்ளூர் ஆட்சியாளர்கள்தான் கவனிக்கவேணும். மிகவும் நன்றி சுவி
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வரமாட்டார்கள். மோடிக்கு பின் வருபவர்களும் இதே கொள்கையுடன் செயல்பட வேணும்
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
மோடி ஆட்சி இருக்கும்வரை கை வைக்க முடியாது. பிறகு என்னென்னமாதிரியோ.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அதென்றால் மெத்த சரிதான். புத்தர் குடியேற முன் எங்கெங்கு சிலைகள் வைக்கலாம் என்று பார்த்து பார்த்து வைத்துவிடவேணும். நிச்சயம் கள்ளக்குடியேற்றம் என்று சாட்டு சொல்லுவான். வீடு மற்றும் தோட்டம் படங்கள் கொஞ்சம் இணைக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வருடம் போய்த்தான் நான் நினைத்தமாதிரி பினிஷிங் செய்து முடிக்கவேணும்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேலைக்கு போக தொடங்கி இருப்பீர் என்று தெரிந்தாலும் இந்தப்பதிவை இன்றுதான் பார்த்தேன் சிறி. வீட்டில கவனிப்பு பலமாக இருந்திருக்கு. வேலையில் ஓடியாடி பிசியாக இருக்கும்போது உடல் நிறை விரைவாக குறைந்து விடும். உமது அனுபவங்களை தொடர்ந்து பதிவிடும். பிகு: அது எப்படி Qtexபற்றி கேட்காமல் இருக்கமுடியும்?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
உண்மையில் நான் சிலையை வடிவாக பார்க்கவே இல்லை. கருங்கல் மற்றும் உலோகங்களால் சிற்பிகள் செய்த சிலைகள் தான் எனக்கு விருப்பம். தகவலுக்கு நன்றி
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
https://postimg.cc/gallery/5MFvjjg இந்த இணைப்பா அண்ணா?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நல்லபடியா முடிந்தால் சந்தோசம். மோடியின் சிவசேனா, ருத்ரசேனா என்று சந்திக்கு சந்தி சிவபெருமானுடன் கொடிகளும் பறக்குது. சிலைகளின் தரமும் (முகவெட்டு, நிறங்கள்) குறைவு. இந்த சாந்தி தான் ஆலடி சந்தி (எமது வீடு, சிறியின் வீடுகள் இருக்கும் பலாலி வீதி, பழம் வீதி சந்தி)சிறி சொன்னமாதிரி பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஆலமரத்தை கவனிப்பார் இல்லை. கன நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிக்க நன்றி சிறி இப்ப எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. திருத்தித்தந்த நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள். சிறி குடும்பம் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் நில்மினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிகே அவர்களுக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சும்மா அந்த மாதிரி நினைவு மீட்டல் கு.சா அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவ கிருபையை முன்னிற்று வாழும், இன்று பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் குமாரசாமி அண்ணா, புத்தன் இருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். என்றும் இளமையுடன் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக. அன்புடன் நில்மினி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திருத்தம் : சீனாக்காரி 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பறுவத்துக்கு இன்னும் ஒரு கிழமை கிடக்கு . இப்பவே இப்படியெண்டால் .அருமந்தாப்போல இருந்த மனுசன் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன நடந்தது இருந்தாப்போல குமாரசாமி அண்ணை ?🤣