தம்பி! ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்....
முதலாவதாய் குறிப்பை அனுப்பும்.....
அடுத்தது நீங்கள் எந்தநாட்டு சிற்றிசன் எண்டது வலு முக்கியம்.....
மற்றது வேலை சம்பளப்பட்டியல் கட்டாயம் வேணும்....
நீங்கள் வைச்சிருக்கிற கார் வீடு கவனத்தில் எடுக்கப்படும்.
எயிட்ஸ் இல்லையெண்ட சேட்டீக்கர் கட்டாயம் வேணும்......
ஆனந்தராஜ் மாதிரி இல்லாமல் அரவிந்தசாமி மாதிரி இருந்தால் வரவேற்கத்தக்கது....
ஊரிலை உங்கடை மூதாதையர்ரை ஊர் பேர் கட்டாயம் வேணும்....
அப்பதான் நீங்கள் என்ன சாதியெண்டதை கண்டுபிடிக்க லேசாய் இருக்கும்.
இப்ப எல்லாரும் கார்த்தி,வினோத்,துசாந்த்,சாருக்,சஞ்சேய்,சிந்துசன் எண்டு பேர் வைச்சு எங்களை பேப்பட்டம் கட்டேலாது.
இன்னுமொண்டு தம்பி! உங்கடை சகோதர சகோதரிகள் எங்கை முடிச்சவை எண்ட விபரத்தையும் தந்தியளெண்டால் வசதியாய் இருக்கும்.
நிற்க.....
ஒரு ரேமின் வைச்சு பிள்ளை உங்களோடை தனிய இருந்து கோப்பி குடிக்கிற சாட்டிலை உங்களை இன்ரவியூ வைக்கும்.....?
அதுக்கு நீங்கள் டான்...டான் எண்டு பதில் சொல்ல வேணும். ?
அதுக்குப்பிறது உங்கடை கான் போனுக்கு எஸ் எம் எஸ்லிலை ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லுவம்......?
ஓகேயா?