Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தம்பி! ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.... முதலாவதாய் குறிப்பை அனுப்பும்..... அடுத்தது நீங்கள் எந்தநாட்டு சிற்றிசன் எண்டது வலு முக்கியம்..... மற்றது வேலை சம்பளப்பட்டியல் கட்டாயம் வேணும்.... நீங்கள் வைச்சிருக்கிற கார் வீடு கவனத்தில் எடுக்கப்படும். எயிட்ஸ் இல்லையெண்ட சேட்டீக்கர் கட்டாயம் வேணும்...... ஆனந்தராஜ் மாதிரி இல்லாமல் அரவிந்தசாமி மாதிரி இருந்தால் வரவேற்கத்தக்கது.... ஊரிலை உங்கடை மூதாதையர்ரை ஊர் பேர் கட்டாயம் வேணும்.... அப்பதான் நீங்கள் என்ன சாதியெண்டதை கண்டுபிடிக்க லேசாய் இருக்கும். இப்ப எல்லாரும் கார்த்தி,வினோத்,துசாந்த்,சாருக்,சஞ்சேய்,சிந்துசன் எண்டு பேர் வைச்சு எங்களை பேப்பட்டம் கட்டேலாது. இன்னுமொண்டு தம்பி! உங்கடை சகோதர சகோதரிகள் எங்கை முடிச்சவை எண்ட விபரத்தையும் தந்தியளெண்டால் வசதியாய் இருக்கும். நிற்க..... ஒரு ரேமின் வைச்சு பிள்ளை உங்களோடை தனிய இருந்து கோப்பி குடிக்கிற சாட்டிலை உங்களை இன்ரவியூ வைக்கும்.....? அதுக்கு நீங்கள் டான்...டான் எண்டு பதில் சொல்ல வேணும். ? அதுக்குப்பிறது உங்கடை கான் போனுக்கு எஸ் எம் எஸ்லிலை ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லுவம்......? ஓகேயா?
  2. ம்....பண்ணியில் பண்ணிப்பாருமன்...
  3. போனகிழமை ஒருக்கால் காத்து வாங்க நடப்பமெண்டுட்டு....வாகனங்கள் சந்தடி குறைஞ்ச ரோட்டாய் பாத்து நடந்து போய்க்கொண்டிருந்தன்....அப்ப நினையாய் பிரகாரமாய் கனகாலமாய் எனக்கு தெரிஞ்ச புங்குடுதீவு மைந்தர் குறுக்காலை வந்தார்..... உடனை ஜேர்மன் வெதரிலை தொடங்கி ஊர் உலக கதையளை அலசி ஆராய வெளிக்கிட்டு கடைசியிலை அவரவர் குடும்ப சமாச்சாரத்துக்கு வந்தம். அப்ப அவர் தன்ரை மூத்தவங்களுக்கு வயதும் முத்திக்கொண்டு போகுது இன்னும் ஒண்டும் சரிவரேல்லை எண்டார்....அப்ப நான் சொன்னன் எனக்கு தெரிஞ்ச இடத்திலையும் மாப்பிளை தேடிக்கொண்டு திரியினம் கதைச்சு பாக்கட்டோ எண்டன்....அவரும் சந்தோசமாய் கதைச்சு பாருங்கோவன் எண்டு சொல்லி அப்பிடியே நாங்களும் அவரவர் அலுவலை பாக்க போயிட்டம். அடுத்த நாள் எனக்கு தெரிஞ்ச அந்த பொம்புளை வீட்டுக்கு ரெலிபோன் அடிச்சு தேப்பன் காரனோடை சும்மா சுகம் விசாரிக்கிறமாதிரி கலியாண பேச்சு கதையை குடுத்தன்....அவரும் சந்தோசமாய் மாப்பிளையின்ரை இடம்வலம் வேலை எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு.....எதுக்கும் இவவிட்டை குடுக்கிறன் கதையுங்கோ சொல்லி போனும் காப்புக்கையுக்கு மாறிட்டுது...... சொல்லுங்கோ அண்ணை எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ எண்டு கேட்க நானும் பதிலுக்கு நல்ல சுகமெண்டு சொல்லி கலியாண கதையை தொடக்கினன்...... அவவும் மாப்பிளையின்ரை இடம்வலம் வயது உத்தியோகம் எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு......மாப்பிளையின்ரை ஊரை விசாரிச்சா....நான் புங்குடுதீவு எண்டன்..... அதுக்கு அவ சொன்னா தாங்கள் பண்ணைப்பாலத்தை தாண்டி அங்காலை போறேல்லையாம். #அப்ப போட்ட டிசைன் இன்னும் அழியேல்லை.
  4. சுத்தம் சுகாதாரம் ஒண்டுமில்லை ராசா! நாங்களும் சேற்றுத்தண்ணியிலை குளிச்சு.....குளத்து தண்ணியை குடிச்சு வளர்ந்த உடம்பு ராசா இது......பிரச்சனை என்னெண்டால் இங்கத்தையான் மருந்து கலந்த சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சு நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சுது ராசா....என்ன செய்ய? அது சரி உங்கை கடையள்ளை போத்தில் தண்ணி விக்கினமெல்லோ அது ஆர் குடிக்க ராசா? இருந்த குளிக்கக்கூசை இடிச்சுப்போட்டு வெஸ்ரேன் ஸ்ரையிலை கக்கூஸ் கட்டுறியளாம்.....ஆருக்கு ராசா வெள்ளைக்காரன் வந்து குந்தவே? தேத்தண்ணிக்கடையிலை போய் வாழைப்பழம் வடையோடை தேத்தண்ணியும் குடிச்சு தம்முக்கு சிகரெட்டும் வாங்கிப்போட்டு கொப்பியிலை எழுதுங்கோ எண்டு சொன்ன காலத்திலையெல்லாம் ராசன் பிறக்கேல்லை போலை கிடக்கு.. ஏன் ராசா இதிலை எங்கை பந்தா இருக்குது? இதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையே? உப்பிடிப்பட்டனியள் ஏன் மாட்டு வண்டிலை கைவிட்டனியள்? சைக்கிளை கைவிட்டுட்டு மோட்டசைக்கிளுக்கு ஏன் காசு கேக்கிறியள்! நடந்து போற தூரத்துக்கு ஓட்டோவிலை போறியளாமெல்லே... நாங்கள் முடிந்தளவுக்கு சைக்கிளை பயன்படுத்துறம். அதின்ரை அருமை எங்களுக்குத்தான் தெரியும்...உங்கை சைக்கிள்ளை போனால் மரியாதை இல்லையாமெல்லே... உலகமே வெக்கை கூடீட்டுது எண்டு ஆய்வாளர்மார் கத்துறது ராசனுக்கு கேக்கேல்லை போலஒ கிடக்கு....அது சரி ஏன் இப்ப உங்கை எல்லாரும் வீட்டுக்குவீடு ஏசி பூட்டுறியள்? பந்தாவா? வெக்கையா? உண்மைதான்.....ஒருசில ஆக்கள் இப்பிடியான பந்தாக்கள் காட்டீனம் தான். ஆனால் புலம்பெயர் நாட்டிலையெல்லாம் தமிழ் பள்ளிக்கூடங்கள் நிறையவே இருக்குது ராசா.....நிறைய பிள்ளைகள் கன சிரமங்களுக்கு மத்தியிலையும் சிரத்தையெடுத்து படிக்கினம் ராசா.....தமிழை படிச்சு நாக்கூத்தையே வளிக்கிறது எண்டு சொல்லுற ஒரு சில சனமும் இருக்குது ராசா.. அவர்கள் எதையும் மறக்கவில்லை....மறுக்கவில்லை அதன் நினைப்பிலையே வாழ்கிறார்கள் எண்டதுக்கு இதைவிட என்ன உதாரணம் வேணும் ராசா? அந்த நிலமையை சொல்லுங்க ராசா....சொல்லுங்க....எப்பிடீன்னு சொல்லுங்க ராசா...காது குளிர கேட்பம்.. உங்க பாசையிலை சொல்லப்போனால் நாங்கள் இஞ்சை கக்கூஸ் கழுவின காசிலை உங்கை இருக்கிறவை மோட்டச்சைக்கிள் வாங்கி...வீடுகட்டி...... நடந்து போறதை கேவலமாய் நினைச்சு ஓட்டோவிலை போறதை பார்த்து பின்பக்கக்கத்தாலை சிரிக்காமல் நாங்களும் கொடுப்புக்குள்ளை தான் சிரிக்கிறம். இதுவும் தொப்பி அளவானவர்களுக்கு மட்டும். அது சரி ஏன் ராசா? வெளிநாட்டிலையிருந்து வாற ஆக்கள் சொந்தங்கள் பந்தங்களுக்கு பிஸ்கட்டும் சொக்லேட்டும் குடுத்தால் மூஞ்சையை நீட்டி நக்கலடிக்கிறியளாம்....அப்ப வேறை ஏதோ எதிர்பாக்கிறியள் போலை கிடக்கு!!!!!!
  5. யாராவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நலம் விசாரிக்கப் போறவர்கள் சொல்வது, American: Get well soon. British: Wish you speedy recovery. Germany: Gute Besserung Sri Lankan: இதே நோய் வந்துதான் எங்கட பக்கத்து வீட்டுக்காரனும் செத்தவன்.
  6. இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்...... June_ஆரம்பம் .... 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க.. (அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி) 7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை). ? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்......... நம்மகிறுக்குபயபுள்ளைங்க 9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........! 10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும். தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... ஷேர் செய்யுங்கள்
  7. உழைத்து களைத்து வயல் வழியில் அமர்ந்து உண்ணும் உணவின் ருசியை... எந்த ஒரு உயர்தர ஹோட்டலாலும் தரமுடியாது....
  8. அதை நிர்வாகம் புது சிஸ்டத்தாலை செய்யுது போலை கிடக்கு...... உங்கை கன பழைய பழைய ஐடியள் எல்லாம் வெளிச்சத்திலை வந்து போகுது.
  9. நெற்றில் போட்டு.... கழுத்தில் கொட்டை... வெளுத்துக் கட்ட... வாடி கிட்ட....
  10. ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????
  11. 'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.’ அறிவுடையவர் வேறு எந்தச் செல்வம் இராதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவார். ஆனால், அறிவில்லாதவர் எந்தச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் எதுவும் இல்லாதவரே ஆவார். அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்வியறிவு. இன்னொன்று அனுபவ அறிவு. கல்வியறிவை விட உயர்வானது அனுபவ அறிவு தான். வாழ்க்கைப் பாடத்தை ஏட்டுக் கல்வி மூலம் கற்க இயலாது. அனுபவங்களின் மூலமே கற்க முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.