Everything posted by குமாரசாமி
-
ஆனையிறவு உப்பளம்.
ஆனையிறவு (Elephant Pass) இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈழப் போருக்குமுன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கே அமைந்திருந்தது. 1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி எழுப்பியதன் பின்னர் ஆனையிறவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளமாக இருந்து வந்துள்ளது. இக்கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக் காரரினாலும்,[1] பின்னர் பிரித்தானியராலும் மீளக் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் இலங்கைப் படைத்துறை இங்கு நவீன முறையில் இராணுவத் தளம் ஒன்றை இங்கு உருவாக்கியது. ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவு
-
யாழ்ப்பாணத்து வேலிகள்.
யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம். யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். அது சட்ட ரீதியாக இன்றும் நடை முறையில் உள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனையே பேராசிரியர் பத்மநாதனும் குறிப்பிடுகிறார். அடிப்படையில், யாழ்ப்பாணச் சமூகம் விவசாயத்தை ஒட்டியதாக இருந்தது எனலாம். ஆதலால் இச் சமூகத்தில் நிலவி வந்த வழமைகளும், நிலம், அதன் உரிமை, பாதுகாப்பு என இயற்கைவளங்களை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. அதனால்தால் தான் இங்கு வேலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. காணிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் இந்த வேலிகளுக்குப் பெரும் பங்குண்டு. வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகவும் கருதப்பட்டது. அந்த வேலிகள் பலவகைப் பட்டவையாகக் காணப்பட்டன. காய்ந்த இலை குழைகள், பனையோலை, தென்னோலை கிடுகு, காய்ந்த குச்சிகள், ஒருவகை முருகைக் கற்கள், வாழைச்சங்குகள், உயிர் மரங்கள் என பலவகைப் பட்டவற்றைக் கொண்டு வேலிகள் அடைக்கப்பட்டன. வேலி அடைக்கப்பயன்படும் பொருட்களும், முறைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டன எனலாம். அதாவது அந்தந்தப் பிரதேசங்களில் தாராளமாகக் கிடைக்கக் கூடியவற்றை வைத்து வேலிகள் அடைக்கப்பட்டன. அதைவிட தனிப்பட்ட தேவைகள், வசதி வாய்ப்புகளும் கூட வேலிகள் அடைப்பதில் செல்வாக்குச் செலுத்தின. வேலிகள் கொண்டு நிலத்தை அடைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் என்பது வேலிக்கான முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களில் இன்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன்படுத்துவார்கள். காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு. சில ஊர்களின் பெயரில் கூட வேலி என்ற சொல் காணப்படுகிறது. நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலிபோன்ற ஊர்களின் பெயரை உதாரணமாகக் கூறலாம். நீர்வேலியிலே ஊரின் கிழக்கு எல்லையில் நீர்நிலை காணப்பட்டமைதான் அப்பெயர் வரக் காரணம் என்பர். வேலி என்பது தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவையாகும். தஞ்சை மாவட்டத்திலே இக்காலத்திலும் ‘வேலி’ என்ற அளவையால் நிலத்தை குறிப்பிடுகின்றனர். ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் பரப்பளவுக்குச் சமமானதாக இருக்கிறது. இக்கட்டுரையில் நாம் குறிப்பிடும் வேலி எல்லையை நிர்ணயிக்கப் பயன்படுவதாகும். எல்லை வேலி நிலத்துக்குப் பாதுகாப்புத் தருகிறது எனக் கொண்டால், எல்லை வேலிக்கு சட்டம் பாதுகாப்பைத் தருகிறது. தேச வழமையிலும் எல்லை வேலிகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காணிகளின் எல்லை வேலிகள் சரிந்து விழவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் இருப்பதாக வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் கட்டுரையொன்றிலே குறிப்பிட்டிருந்தார். கடந்த யுத்த காலங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரதான பாதையால் செல்லப் பயந்து வேலி வெட்டி இடம்பெயர்ந்த நினைவுகளும் இல்லாமல் இல்லை. முன்னர் ஊர்களிலே அயலவர்கள் எல்லாம் உறவுக்காரராக இருப்பார்கள். அடுத்த பகுதிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு காணி, வீட்டின் வேலியிலும் சிறு புகு வழி விடப்பட்டிருக்கும். அதை வேலிப்பொட்டு என்று குறிப்பிடுவர். அதேபோல வேலிகளில் விடப்பட்டிருக்கும் சிறு இடைவெளிகளையும் கூட வேலிப்பொட்டு என்றே கூறுவர். வேலிப் பொட்டுகளுக்குள்ளால் கதை பேசும், புதினம் பார்க்கும் எம்மவர் பற்றி எத்தனையோ கதைகள், நினைவுகள் இருக்கின்றன. வேலிப் பொட்டுகளால் வளர்ந்த காதல்கள் சொல்லும் கதைகளும் ஏராளம். எம் கலாசாரத்தில் வேலிப்பொட்டை உறவுகளின் நெருக்கத்தையும் இணைப்பையும் காட்டும் அடையாளமாக கலாநிதி குணராசா பார்க்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எம் மூத்தோர் மீட்கும் நினைவுகள் எடுத்தியம்பும். வேலியைத் தள்ளிப் போட்டு அயலவர் காணிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் விபரீத குணங்களும் எம்மவருக்கு இல்லாமல் இல்லை. அதனால் எழும் வேலிச் சண்டைகள் குடும்பப் பிரச்சினைகளாக மாறிப் பின் பொதுப் பிரச்சினையாகிய நினைவுகளும் பலருக்கு இருக்கும். வேலி அடைத்தல் கூட ஒரு கலை எனலாம். ஒரு தசாப்தத்துக்கு முன்னைய காலம் வரை சில குறிப்பிட்ட இடங்களை அங்கு நேர்த்தியாக அடைக்கப்பட்டிருக்கும் பனையோலை வேலிகளை வைத்தே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. உயிர் வேலி மழைக்காலங்களில் போடப்படும். அதற்காக பூவரசு, கிளுவை, முட் கிழுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மாரி காலத்தில் அம் மரங்களின் குழைகளை வெட்டி தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைப்பர். அதே நேரம் கதிகால்களைக் கொண்டு வேலிகளின் இடைவெளிகளை அடைப்பர். கிலுவை மரத்தில் நைதரசன் அதிகளவில் காணப்படுகிறது. இதனைத் தோட்டத்தில் புதைத்தலானது நைதரசன் பசளை போடுவதற்குச் சமமானது என நவீன விவசாய வனவியல் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால், அது அன்றே எம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பனையோலை, பனை மட்டை, தென்னோலை, கிடுகு, காய்ந்த குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு அடைக்கும் வேலிகள் கறையானால் அரிக்கப்பட்டு அல்லது இயற்கைக் காரணிகளால் உக்கிய பின்னர் மீண்டும் புதிதாக அடைக்கப்படும். உயிர் வேலிகளை விட, இவை நெருக்கமானவை. குறிப்பாக நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் ஒருவகை முருகைக் கல் வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதானது தனிச்சிறப்பாகும். இவை மிக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியவை. காலப்போக்கிலே, இந்த வேலிக்கதிகால்களை சீமெந்துக்கட்டைகளும் இடைக் கயிறுகளை முட்கம்பிகளும் பிரதியீடு செய்யத் தொடங்கி, இன்று சீமெந்து மதில்கள் ஆக்கிரமித்துவிட்டன! உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. பல்வேறு தேவைகளுக்காக வேலிகள் வெட்டப்பட்டன. எல்லைகளும் மெள்ள மெள்ள இடம் மாறின. எம்மவர் மனப்பாங்கும் மாறியது. சூழலுக்கு பங்கம் விளைவிக்காத இயற்கை வேலிகள் பயனற்றவையாயத் தெரிந்தன போலும். அத்துடன் பணமும் தாராளமாகப்புழங்கத் தொடங்கியது. பல இயற்கை வேலிகள் தகர வேலிகளாகி இன்று கொங்கிஅட் மதில்களாகிவிட்டன என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம் ஆகும். கொங்கிஅட் சுற்று மதில்கள் உயர் அந்தஸ்தின் சின்னம் என்ற பரவலான நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது. பசுமை வாழ்வியலின் மதிப்பு எம்மவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும். இனி வரும் காலங்களில் இந்த வேலிகளை எல்லாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. கண்காட்சி வளாகத்தினுள் அடைத்துக்காட்டப்பட்டிருந்த வேலி மாதிரிகள், இனி எம்மை எங்கு காண்பீர்? என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது. சாரதா மனோகரன் ... http://archives.thinakaran.lk/Vaaramanjari/2011/11/27/?fn=f1111278
-
புகையிலை
இன்று யாழ்மாவட்டத்தை போதைவஸ்துகளும், தடை செய்யபட்ட சிகரட்டுக்களும் தாராளமாக ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில் தெல்லிப்பளை சுகாதாரப் பணிமனை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் புகையிலை பயிர்ச் செய்கையை விவசாயிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டியது!! சிகரட் விற்பனை முகவர்களிடம் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழில் பார்க்குமாறு வைத்திய அதிகாரி நந்தகுமார் கோரவில்லை சிகரட் விற்பனையாளர்களிடம் சிகரட் விற்பனையை நிறுத்துமாறு நந்தகுமார் கோரவில்லை. ஏன் சிகரட் விற்பனைக்கு விதிக்கபட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கூட மிக இறுக்கமாக பின்பற்றுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நந்தகுமார் கோரிக்கைவிடுக்கவில்லை. புகையிலைப் போர் வட தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு மோசமான காழ்ப்புணர்வு ஏற்படக் காரணம் புகையிலை வர்த்தகம். சிங்களவர்களைப் பொறுத்தவரை புகையிலை வர்த்தகம் என்பது அந்தஸ்திற்கான அடையாளமாக கருதினர். ஒல்லாந்தர்களால் பெரும் வர்த்தக பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைக்கு கொண்டுவரபப்பட்ட புகையிலை வர்த்தகத்தில் யாழ்ப்பாண தமிழர்கள்தான் அதில் ஆதிக்கம் செலுத்துவதாக பெரும்பான்மை சிங்களவர்கள் கோபம் கொண்டிருந்தனர். புகையிலை பயிரிடுதல் மற்றும் அதை பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவருதல் என்பனவற்றில் யாழ்ப்பாண விவசாயிகளின் பொறிமுறையை சிங்களவர்களால் வீழ்த்த முடியவில்லை. புகையிலை வர்த்தகத்தால் நாட்டின் பொருளாதார கட்டுமானத்தில் தமிழர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்திய காரணத்தால்தான் ஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருந்ததாகவும், அதன் மூலம்தான் தமது நிலத்தைப் பாதுகாக்க "தேசவழமைச் சட்டத்தை" தமிழர்கள் கொண்டு வந்ததாகவும் சிங்களவர்கள் கருதினர். இலங்கையின் புகையிலை ஏற்றுமதியில் "யாழ்ப்பாண புகையிலை" முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. அந்த முதலாளிகள் "செல்வாக்கு மிகுந்த தமிழர்களாக" உருவெடுத்திருந்தனர். இந்த பின்னணியில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் பொருளாதார அடித்தளங்களை சிதைக்க வேண்டும் என்பதில் சிங்களவர்கள் குறியாக இருந்தனர். 1. யாழ்ப்பாண புகையிலையின் ஏற்றுமதி குறைக்கபட்டது. 2. உள்நாட்டு சந்தையைக் கூட பிடிக்க முடியாத பயிர்களை விவசாயம் செய்ய வட தமிழர்கள் ஊக்குவிக்கபட்டனர் அல்லது கட்டாயப்படுத்தபட்டனர். 3. வட இலங்கை மரக்கறிகளுக்கான சந்தை சிறிது சிறிதாக முடக்கப்பட்டு "யாழ்ப்பாண மரக்கறிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் விற்கமுடியும் அதுவும் கஸ்டம்" என்ற நிலை உருவாக்கபட்டது. 4. வட இலங்கைச் சந்தைக்குள் பெருமளவு தென்னிலங்கை மரக்கறிகள் இறக்குமதி செய்யபட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டன. இப்படி வட இலங்கை தமிழர்களின் பொருளாதாரம் சிறுகச் சிறுக சிங்களவர்களின் பிடிக்குள் சென்றது. தமிழினம்த பெரும் பின்னடைவை சந்தித்தது. தமிழர்கள் மத்தியில் புதிய செல்வாக்கானவர்கள் உருவாகவில்லை, புதிய முதலாளிகள் உருவாகவில்லை. புகையிலை விவசாயம் செய்து செல்வாக்காக இருந்தவர்களின் குடும்பங்கள், விவசாயக் குடும்பங்கள் காலப் போக்கில் அரச வேலைகளின் அடிமைகளாக மாற்றபட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களின் கூலியாட்களாக மாற்றபட்டனர். ஆனாலும் தம்மை தாழ்த்திய புகையிலையை யாழ்ப்பாணத்தைத்தை விட்டு அடியோடு அகற்றியே ஆக வேண்டும் என்பது சிங்கள கோவிய சாதியினரின் வெறி. (சிங்களவர்களின் கோவிய சாதியினர்தான் செல்வாக்கு மிக்கவர்கள். தமது செல்வாக்கைக் கூட யாழ்ப்பாண புகையிலை தகர்த்தது என்பதுதான் அவர்களின் கோபம்) புகையிலை விவசாயமா உண்மையில் தடை செய்யப்பட வேண்டியது?? நூற்றாண்டுகாலமாக புகையிலை பயிரிட்டுவரும் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் புள்ளிவிபரத்தை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் வெளியிட வேண்டும். 1996 களின் பின்னர் சிகரட் விற்பனையில் சூடுபிடித்த யாழ்ப்பாணம் 2009 ற்கு பிறகு உச்சகட்ட விற்பனையை பார்த்துவருகிறது. எனவே புற்றுநோயால் பாதிக்கபட்டவர்கிளின் புள்ளிவிபரத்தை ஆண்டுரீதியாக வரிசைப்படுத்தி அந்த புள்ளிவிபரத்திற்கும் புகையிலை விவசாயத்திற்குமான தொரர்பு அறிவியல் ரீதியாக பேசப்பட வேண்டும். குறிப்பு: 2009ற்கு பிறகு வடபகுதியில் புற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில் அதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி பக்கச்சார்பற்ற வைத்திய அறிக்கையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் வெளியட இதுவரை யாரும் முன்வரவில்லை. 2010 காலப்பகுதியில் இலங்கையில் தடைசெய்யபட்ட சிகரட்டுக்களுடன் யாழ்ப்பாணத்தில் 2 முஸ்லீம் இளைஞர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டனர். ஆனால் அந்த இரண்டு இளைஞர்களுக்காகவும் சட்டத்தரணி சர்மினி வாதாடி விடுவித்தார். தடை செய்யபட்ட சிகரட்டுகள் எப்படி வந்தன? எங்கு விற்கபட்டன? ஏன் யாழ்ப்பாணத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்பது குறித்து எந்த தகவலுமே வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனத்தொகை கூடிய வட மாவட்டமான யாழ்ப்பாணத்தில் சிகரட் சந்தையை சுகாதார அமைச்சு எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்பது குறித்து இதுவரை பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை. (விவாதிக்கமாட்டார்கள். பெரும் வியாபாரிகளுடன் மோதிக்கொள்ளும் திராணி படித்தவர்களுக்கு இல்லை) உண்மையில் புகையிலை உற்பத்திதான் புற்றுநோய்க்கு காரணமா என்பதை அறிவியல் ரீதியாகவும் புள்ளிவிபர ரீதியாகவும் அணுக வேண்டும். புகையிலை விவசாயத்தை கைவிடச் சொல்லும் படித்தவர்கள் மாற்று விவசாயத்தின் சந்தையை விசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். விவசாயச் சந்தை என்பது பாயை விரித்து மரக்கறியை அடுக்கி விற்பதல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். மா.குருபரன் 21௰௨016 http://www.kuruparanm.com/2016/10/blog-post_20.html
-
கடற்கரை வாடி.
ஒளி பிறக்கும் வேலையில்உயிர் தொடும் காற்று !!அலையின் அசைவில்சலங்கையின் நாதம் !!கரை தட்டும் தண்ணீரின்கால் தொடும் பணிவு !!காதல் பறவைகளால்வெப்பத்தின் வீழ்ச்சி !!மணல் பாதையின் எல்லையில்நீல வானத்தின் பிம்பங்களாய்கடற்கரை .............!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உந்த கோதாரிவிழுந்த கமராக்காரன்களின்ரை தொழில்பக்திக்கு அளவேயில்லை பாருங்கோ....
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இவரை போன்ற உழைப்பாளிகள் அவ்வப்போது நம் கண்ணில் பட வேண்டும்!! அப்போதுதான் நான் கடுமையாக உழைக்கின்றேன் என்ற ஆணவம் குறையும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பெண்... அம்மா- அவன் உயிர்மெய் தங்கை - அவன் வீட்டு வைரக்கொடி மனைவி - அவன் உலகின் மஹாராணி மகள் - அவன் கண்ட பொக்கிஷம் பெண் என்ன பாக்கியம் செய்தவளோ.?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அழிந்து வரும் அரிய கலைகளில் இதுவும் ஒன்று...!! "குழாய் சண்டை" "கிணத்தடி சண்டை"
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விட்டுக் கொடுத்து போதலை எவ்வளவு அருமையாக விளக்குகிறது இந்த புகைப்படம்...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதிசய புகைப்படம். தலைகீழாக பாருங்கள்..
- மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அவர்களுக்கு! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நடனங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
நாளை சென்னையில் நடக்கும் கிரிக்கட் போட்டியை காண வருபவர்கள் •குடிநீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது •கூலிங்கிளாஸ் அணிந்து வரக்கூடாது ...•பேனர்கள் கொண்டு வரக்கூடாது •கொடிகள் பிடிக்கக்கூடாது •செல்போன் வைத்திருக்கக்கூடாது •லேப்டாப் கொண்டு வரக்கூடாது •ரேடியோ வைத்திருக்கக்கூடாது •டிஜிட்டல் டைரி வைத்திருக்கக்கூடாது •கைப்பை, சூட்கேஸ் அனுமதிக்கப்படாது •தின் பண்டங்கள் எடுத்து வரக்கூடாது •பைனாக்குலர், இசைக் கருவிகள் கொண்டு வரக்கூடாது •தீப்பெட்டி வைத்திருக்கக்கூடாது •நாளிதழ், வேஸ்டு பேப்பர் அனுமதிக்கப்படாது •வெள்ளைப் பேப்பர், பேனா வைத்திருக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார்கள். இதைவிட நிர்வாணமாக வரவும் என்று ஒற்றைவரியில் அறிவித்திருக்கலாமே! யுத்தம் நடந்த காலத்தில் சிங்கள ராணுவம்கூட இந்தளவு கெடுபிடிகள் விதித்ததில்லை. FB- மோடியே திரும்பிப் போ..!
- மோடியே திரும்பிப் போ..!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு அந்த பாலாற்றில் நீராட வா...- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்...- நடனங்கள்.
இப்படி அன்னியோன்யமாக ஒன்றிணைந்து ஆடும் பழக்கம் நம்மவரிடம் இல்லை. Kurdish wedding காணொளியின் இறுதிவரைக்கும் பாருங்கள். அனைத்து வயதினரும் இணைந்து கொள்வார்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்க மட்டும் வாங்க
"ஈ லோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாம எப்பவுமே ஜாலியா இருப்பது என்ட குருநாதர் மட்டுமே... ஜெய் நித்தியானந்தா..!!"- சிரிக்க மட்டும் வாங்க
இந்த போட்டோவை நன்றாக உற்றுப்பார்க்கவும்.- பென்சனர் குரூப்..!
- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.