ஒரு வாத்தியார்....தமிழ்வாத்தியார்....சைவ சிந்தனையள் கூடின வாத்தியார்.....எட்டு பிள்ளைகளை பெத்தெடுத்து....வளர்த்து ஆளாக்கினாப்பிறகு.....அதிலை ஏழு வேறைவேறை மதங்களுக்கு மாறீட்டுதுகள். பிள்ளையள் எல்லாரும் நால்லாய்த்தானிருக்கினம்.ஆனால் வாத்தியார் மதம் மாறவேயில்லை கண்டியளோ.வாத்தியாரும் கிட்டடியிலை மோசமாய்ப்போனார்.....செத்தவீட்டுக்கு பிள்ளையள் ஏழு பேரும் வரேலாதகட்டம்...காரணம் அங்கை மத சட்டங்கள் தடுக்குதாமெல்லே.....அதாவது சைவர் சாத்தான்களுக்கு சமமாம்.சைவ கிரியைகள் சாத்தானின் கிரியைகளாமெல்லே....கடைசியிலை வாத்தியார்ற்ரை செத்தவீடு ஒருபிள்ளையும் அவரின்ரை பிள்ளையளோடையும் முடிஞ்சுதாம்..
பெத்த தாய்தகப்பனுக்கே மதம் குறுக்கை நிக்குதெண்டால் மிச்சத்தை யோசிச்சு பாருங்கோ!
மதத்தை விட மனிதாபிமானம்தான் வேண்டும்.அதை எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும்......மனிதாபிமானம்..
இந்த திரி தொடர்ந்தால் கேடுகெட்ட திருமணச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றையும் எழுதலாமென நினைக்கின்றேன்.
பிரி நன்றி உங்கள் கருத்திற்கு....