Jump to content

கோமகன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    7395
  • Joined

  • Last visited

  • Days Won

    26

Everything posted by கோமகன்

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் இன்றுபோல் என்றும் வாழ்க !!!!
  2. வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .
  3. கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."
  4. பவழ மல்லிகைப் பூவும் இரவில் பூத்து காலையில் உதிர்வதுதானே ??? கூர்ப்பியல்
  5. கவிஞரின் கைது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது .அவர் நலமாக மீண்டும் வரவேண்டும் என்பதே எனது பிரார்தனை .
  6. இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2
  7. நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

  8. ஏறத்தாள 47 வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலைப் பொழுதில் எனது முதல்மொழி என்னை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் . இறைவன் வகுத்த சிருஷ்ட்டியில் எல்லாவற்றுக்குமே ஒருகாரணம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் , இன்று வரை எனது தேடல்கள் அதை நோக்கியே எனது ஆழ் மனதில் இருந்ததுண்டு . நான் கடந்து வந்த பாதைகள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இருந்த போதிலும் , எனது பிறப்பின் காரணதுக்கான தேடல்கள் இன்றுவரை தொடர்கின்றன . எனது பிறப்பை நினைவில் வைத்து வாழ்த்திய எனது அனைத்துக் கள உறவுகளுக்கும் , எனது தலை " நன்றி " என்று சொல்லிச் சாய்கின்றது . நண்பர் கிருபன்ஜிக்கும் எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க :) .
  9. அனுபவப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் . தொடருங்கோ நீதிமதி .
  10. நீண்ட காலத்தின் பின்பு யாழ் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தெரிகின்றன . நீங்கள் முகத்தாரின் பாணியில் ஒருநாடகம் எழுதியதை நிட்சயம் பராட்டவேண்டும் . ஒரு கார் வாங்கப்போவதை " வெத்திலை போட வைக்கும் " பக்குவம் கண்டு பிரமிக்கின்றேன் . ஒரு கதைசொல்லிக்கான பக்குவத்தை விரைவில் அடைந்ததையிட்டு மகிழ்சி . மேலும் கிராமியத் தமிழில் எழுதும் பொழுது சிறிது அவதானம் வேண்டும் ( உ + ம் = டாக்டர் இட்டை = டாக்குத்தரிட்டை , டப்பாக் கார்ல போறனான்.= ஓட்டைக் காறிலை போறன் ,வச்சிருக்கன் = வைச்சிருக்கிறன் ) இவைகளையும் , எழுத்துப் பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . உங்கள் நாடகத்திற்குப் பாராட்டுக்கள் சுமே .
  11. நுணாவுக்கு, எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
  12. தொலையாத உரு மாற்றத்திற்கில்லை ஓய்வு. அவ்வப்போது அடுப்புத்தணலாக மூண்டெழுகிறது வயிறு. ஓசைகள் தெறித்ததிரும் காதுச்சவ்வுகள். எவரெவவோ என் கனவுகளைப் பயங்கரங்களாக்கி மறைகின்றனர். நித்திரை தரும் இரவுப் பூதம். அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது. தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம் அருகில் வருகின்றன. நாடுமில்லை இருப்பதற்கொரு வீடுமில்லை இது என் பெயருமில்லை அடையாளங்களற்ற நான் அகதியுமில்லையாம். உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து படிகளின்றி இறங்க யாருமற்ற காட்டுக்குள் என்புகளைப் பாம்புகள் நொருக்குகின்றன. முன் குவிந்த ஆடைகளிலிருந்து எதுவொன்றும் அணிய முடியவில்லை. கடிகார முட்களின் வேகம் குரூரத்தைக் குத்துகிறது. அந்தரித்த நித்திரையில் அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான். அதுவல்லாப் போதில் அந்நியம் சுற்றிக் கிடக்கிறது. ‘எதுவும் எதுவும் எனதல்ல. அதுவும் இதுவும் எனதல்ல. இதுவும் அதுவும் எனதல்ல’ நீ அந்நியமானவள் என்கிறது இம்மொழி. தோல்நிறம் நீ எவளோவெனச் சொல்கிறது . இவை உனக்கல்ல என்பதாக அலுவலகங்கள். மிரண்ட கண்களின் குற்றத்தால் அடையாளஅட்டை கேட்கப்படுகிறது. தொலையட்டுமே என்று எறிபட்ட ஏதோ ஒரு உயிரினமாக வீதிகளின் இருள் மறைவில் இன்னும் துலையாது அலைகிறது இவளுரு. தர்மினி http://thoomai.wordpress.com/2013/01/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81/
  13. நாளை பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் சாத்திரியாரைப் , பல வளமும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்!
  14. மதுரைச்சிங்கம் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் .
  15. பத்துத்தலை றாவணனுக்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள் :) .
  16. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். 334 பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார் :) .
  17. வரலாற்றின் பக்கங்கள் நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது இயற்கை எல்லாவற்றையும் எப்பொழுதும் சகித்துக்கொள்வதில்லை அது கணிக்கும் கண்காணிக்கும் அழிவின் தும்மலை அறிவித்து வாரிக்குடிக்கும் உண்மை........... கசப்பான உண்மை . பகிர்வுக்கு நன்றி கிருபன்.
  18. அவள் அலைகளுக்கிடையில் நுரை பிடிக்க முயற்சித்தாளுமில்லை! நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது அவள் விழிகளில்… அவளறியாத எதையோ… அவளிடமிருந்து யாரோ… பறித்துவிட்டார்கள்… அவளறிய… அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு… தொட்டுவிட்டது.............. இணைப்புக்கு நன்றி கிருபன் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.