Everything posted by மல்லையூரன்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இது மற்றைய மானிலங்களுக்கு பரவுமாயின் காங்கிரஸ் அமெரிக்கா மீதான தனது அழுத்தத்தை விட்டுத்தான் கொடுக்க வேண்டும். அப்போது கனடா ஐயர்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளின் பிடி இறுகும். அமெரிக்கா இந்த பிரேரணையிலேயே சர்வதேச விசாரணையயை கேட்கும்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று மேடைகளில் பேசினார்கள் சிலர். தமிழ் நாட்டின் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று யாழில் எழுதினார்கள் சிலர். நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோர் அங்கு வேண்டப்படாதவர்கள் என்று சோடிக்கமுயன்றார்கள். அவர்கள் தங்கள் வாசகங்களின் அரசியல் சரியை இப்போ சரி பார்த்துக்கொள்ளட்டும். லையோலா கல்லூரி உண்ணாவிரதம் அடக்கப்படும் என்று ஆருடம் கூறியவர்கள் அது இப்படி திரண்டு எழ போகிறது எனற ஆருடத்தை கூற மறந்துவிட்டர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு அதுவாக இருக்கவில்லை.
-
கருத்து படங்கள்
சும்மா என்ன திறமைகளை குறைத்து எழுதுகிறீர்கள். 1.குடி 2.பால் பண்ணை வியாபாரம். (உலகிலேயே வேகமாக வளரும் நாடு) 3. கலவரங்களுக்கு பேர் போன நாடு. 1915சிங்கள முஸ்லீம், 1958 சிங்கள தமிழ் ,1970 யாதிக விமுத்தி பெரமுன,1977 சிங்கள தமிழ், 1983-பிறகு என்றுமே 4. எங்குமே காணாத வெள்ளைவான். 5. தனி குடும்ப ஜனநாயக ஆட்சி 90% வரவுசெலவுத்திட்டம் தனி ஒரு வீட்டால் கையாளப்படுகிறது 6.உலகிலேயே மிக கூடுதலான ஊடகவியலார் கொலை, அடக்கு முறை. 7. சுதந்திரத்தின் போது இலங்கைக்கு நாடுகள் கடன் கொடுக்க வேண்டும். இப்பொது இலங்கைக்கு கடன் கொடுக்க நாடுகளை தேடவேண்டியிருக்கு. பின்னோக்கிய அதீத வளர்ச்சி. 8..விரைவில் அதி கூடிய சுருற்றுலா பயணிகள் சொந்த அரசால் கொலை நடக்கும் நாடு என்ற பெயர் வரப்போகிறது. 9.சுதந்திரத்தின் பின்னர் 5 வகை அரசை பரீட்சாத்தம் பார்த்து, 3 அரசியல் அமைப்பை பரீட்சாத்தம் பார்த்து 25 வருடங்களுக்குள் 20 முறை அரசியல் அமைப்பை திருத்திவிட்ட நாடு. 10 1965 ல் டட்லியில் தொடக்கம் ஆண்ட தலைவர்கள் பின்னால் வந்த அரசால் தண்டிக்கபட்டார்கள். மகிந்த காலத்தில் எதிர்த்துக்கேட்ட பொன்சேக்கா, பிரதம நீதி அரசர் எல்லோரும்தான். 11. உலத்திலேயே ஒரே ஒரு நாடு ஜனநாயக எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணைகொண்டுவந்து பதவியை பறித்தது. ............... ........................
-
கருத்து படங்கள்
உங்களுக்கு ஆசுயுசு கெட்டு. நீங்க தப்பிசுடுவீங்கள். பா.ஜ.க தான் வரும் போலை இருக்கு. காங்கிரசை சரியான நேரம் கூடைக்குள் டம் பண்ண வேண்டியிருக்கும். அதுதான் இலங்கைத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்திருக்கே. உடன் பிறப்புக்களுக்கு உடனே தபால் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே.
-
கருத்து படங்கள்
சீனா கடன் கொடுக்கும், மார்ச்சில் மகிந்தாவின் முடிவுகளை பார்த்து. மேலும் கடன்ங்கள், இனி இனி, ரோட்டு போட, டீசல் வாங்க கொடுக்காது. திருப்பி எடுக்கத்தக்க தொழில் துறைகளில்தான் முதலிடும். இதனால் வடக்கு வசந்த ரோட்டுக்களின் முடிவு arab spring க்கு போகும் மாதள விமான நிலையத்துடன் முடிவடைந்துவிடலாம்.
-
கருத்து படங்கள்
அருமையான படம். இதை விட இன்னொரு விதமாக ரம்புக்கவெலவுடன் நடக்கும் பேட்டிகளை விவரிக்கவே முடியாது. ரம்புக்க வெல இருக்கும் வரை இலங்கையில் குழந்தைகளுக்காக Walt-Disney பூங்காக்கள் திறக்க முடியாது.
-
கருத்து படங்கள்
மகிந்தா செய்தது ராஜதந்திரமா, அல்லது அவருக்கு உதவியவர்கள் செய்தது ராஜந்திரமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
-
கருத்து படங்கள்
உந்த அத்வாணி, கித்துள் பாணி கதைகளை எல்லாம் விட்டுவிட்டு வன்னியில் தலைவர் அமைத்தது போல தமிழ் நாட்டில் ஒரு அரசை நிறுவுங்கள். ஒரு வருடத்தில் சிங்கப்பூரை விழுத்தலாம் அடுத்த வருடத்தில் அமெரிக்காவையே பொருளாதார சாதனைகளில் விழுத்தலாம்.
-
கருத்து படங்கள்
சூரை..... இந்த பச்சை எனக்குதான். ஒருவரும் வில்லண்டமாக தட்டிப்பறிக்ககூடாது
-
கருத்து படங்கள்
கரட் தின்னுகிற களுதைகள் எல்லாம் மகிந்தவை சுற்றி மொய்க்கின்றன. அவர்தான் என்ன செய்ய முடியும்?
-
கருத்து படங்கள்
அருமையான படம். நிறைய அரசியல் கருத்தோடு இணைத்து வரைந்திருக்கிறார்.விலங்குகள் இடப்பட்ட நிலையிலும் சிங்கள திருமகனை, நவீன கைமுணு, மேடைக்கு இழுத்துவந்து சுதந்திரக் கொடியேற்றவும் வைக்கிறார்.
-
கருத்து படங்கள்
திருப்பதி குடும்பி மொட்டைகளிடம் போய் மனித நிந்தனையைக் கேட்டுக்கொண்டுவந்து இலங்கை முழு மொட்டைகளுக்கு மகிந்த சிந்தனையாக படிப்பிப்பார்.
-
கருத்து படங்கள்
இவ்வளவு நாளும் சம்பந்தரும், சுமந்திரனும் தான்.... இப்போது சுரேசும்?
-
கருத்து படங்கள்
மார்சுக்கு பிறகு அரசியல் யாப்பில் திருத்தம் செய்யும் போது ஆமிக்கு தெற்கிலும் தேவை வரும். ரணிலோ, JVP யோ இனி வாய் திறக்க போவதில்லை. இதை எக்கொனோமிஸ்ட் அவதானித்து எழுதிவிட்டது. ஆனல் சில புத்த பிக்குகள் போராடவருவார்கள். அதற்கு முதல் வரிசைப் பாதுகாப்பாக கக்கீம் என்ற எலும்புத்துண்டை அரசு விட்டெறியும். அவர்கள் கக்கீமை எளிதில் மென்றுவிட்டு மேலும் உள்ளே வந்தால் ஆமி தேவைப்படும்.
-
கருத்து படங்கள்
சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தமிழ்பெண்கள் பட்டதற்கு நிகர நீதி தேவதையும் பட்டுவிட்டா.
-
கருத்து படங்கள்
மகிந்தாவை இப்ப இப்ப வேறு முகத்தோடுதான் வரைகிறார்கள். இந்த முகம் கறுப்பர் மாதிரி காட்டுகிறது. தப்பிக்க வழி போல்.
-
கருத்து படங்கள்
http://epaper.dailymirror.lk/epaper/viewer.aspx In the late sixties, citizens of this country woke up to read a strange Obituary in a newspaper which announced the tragic death of one Mr. D.E.M.O’Crazy, loving father of T. Ruth and beloved husband of Justicia who died under tragic circumstances, cortege leaving villa “Anduru Wela”. சிறிமாவோ பதவிக்கு வந்த போது வெளிவிடபட்ட மரண அறிவித்தல். Daily News இதனால் பல கஸ்டங்களை சந்தித்தது. நாம் மட்டும் அல்ல சில சுய சிந்தனை உள்ள சிங்களவர்கள், தமிழர் மீது நடந்த அட்டூயங்களை கணக்கில் எடுக்கமலே, இலங்கை போகும் பாதையை துல்லிமாக கணித்திருந்தார்கள். இது அந்த மரண அறிவித்தலின் ஒரு பகுதியே. பிளெக் போன்ற சிலர், வெளியே இருந்து பார்த்துவிட்டு, இலங்கையை ஜனநாயக நாடாக வர்ணித்திருந்தார்கள்.இலங்கையில் இருந்த எமக்கு மட்டும் தான் இலங்கை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை காத தூரம் விழுந்துவிட்டது என்பது தெரியும்.
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
பக்கத்து வீட்டு அல்சேசன் நாய் குரைக்கிறதை கேட்டு எங்கவீட்டு பெட்டை நாயும் போட்டிக்கு குரைத்தது! இதுதான் இலங்கையின் சர்வல்லமை படைத்த ஜனாதிபதிக்கும் பிரதம நீதியரசர் சிராணிக்கும் இடையில் நடக்கும் பலப் பரீடசை. மேற்கு நாடுகள் இலங்கையில் உள்ளே வர கதவை திறவென்றபோது அதை திறக்க முயன்று தோற்றிருக்கிறது உயர்நீதிமன்று. சிராணி பதவிக்கு வந்த கதை வழமையான இலங்கையின் அரசியலில் ஒருபாகம்தான். அதில் அவர் "நான் ராஜபக்சா குடும்பத்தை விட படித்தானான்" என்ற மிடுக்கு நினைப்புக்கு இடமளித்தது தவறு. சிராணிக்கு ஒன்று தெளிவாக விளங்க வேண்டும்; "தான் மட்டும் அல்ல ,தேவையாய் இருந்தால் சட்டக் கல்லூரியில் சோதனை எழுதாமலே பாஸ் பண்ணிய நாமல் வரைக்கும் இலங்கையின் பிரதம நீதி அரசர் பதவில் வந்து அமரமுடியும்" என்பது. இந்த பதவிக்கு தேவையானது அறிவும், அனுபவமும் அல்ல. உயரத்தூக்கிப்பிடிக்க ஒரு அரசியல் பந்தமே. இதில் அவ தன்னை பெரிதாக காட்ட முயல்வது பேதமை. 1948க்கு பின்னர் அதை அலங்கரித்த வெள்ளையர், தமிழ்ர், பறங்கியர் வரைக்கும்தான் அதில் தரம் இருந்தது. அதன் பின்னர் உயர் நீதிமன்றக்கட்டிடம், பாராளுமன்ற மேளத்திற்கு காண்டியன் டாண்ஸ் நடக்கும் இன்னொரு தெருக்கூத்தாடிகளின் கொட்டகையாகிவிட்டது. நீதி அரசர் பதவியும் ceremonial post மட்டுமென்றாகிவிட்டது. சிராணி வந்த அதே அரசியல் கதவைவே திறந்து அரசு, அவவை வெளியே போ என்று சொன்ன போது போய் இருந்தால், குடும்பம், சொத்து, கௌரவம் நிம்மதி பலவற்றை சிராணி காப்பாற்றியிருக்கலாம். இனி அவற்றில் பல நடுத்தெருவில்தான். பிரதீப் காரியவாசத்தை காக்க சிராணி நீதிமன்றை பாவித்து திவி நெகும்ப சட்டமூடாக சவால் விடுத்தது தவறு. இதில் சிராணி தனக்கு பதவி போட்டுத்தந்தவர்களின் நலத்தை மறந்து, சுயநலம் காரணமாக, அவ ஆடியிருக்க வேண்டிய கண்டியன் டான்ஸை ஆடாமல், இடையில் வந்த மேற்கு நாடுகளின் தளத்திற்கு பலே டான்ஸ் ஆடியிருந்தா. இலங்கையில் சமாதனத்தை காப்பாற்ற தவறிய தலைமைகளான D.S.சேனநாயக்கா, S.W.R.D. பண்டாராநாயக்கா போன்றோர் இலங்கையின் சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி". அந்த வகையில் இலங்கையில் இந்தியா வந்திறங்கத்தக்கதாக, தலையால் அல்லாமல் வாயால் மட்டும், இலங்கை தலைவர்கள் தொடர்ந்து அரசியல் செய்தார்கள். அன்று அதை கண்டு பிடித்து அன்றே திருத்தாமல், சீனாவின் சீலைக்கு கீழ்ப் போய் ஒழிந்தர்கள். இதனால் இன்று சரவதேசமும் அரசியல் செய்யும் தனித்தீவாக இலங்கைத் தீவை மாற்றிவிட்டார்கள். மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் புகுவதற்காக, சுதந்திரம் தேடிய புலிகளை தோற்கடித்தார்கள். அதில் பெரிய பலன் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பொன்சேக்காவை தூண்டினார்கள். ஆனால் அந்த பந்தயத்தில் சறுக்கி விழுந்த பொன்சேக்காவை காப்பாற்ற அவர்களேதான் ஓடிவரவேண்டியிருந்தது. இன்று சிராணியையும், உச்ச நீதிமன்றத்தையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். பொன்சேக்கா மாதிரியே கண்ணை மூடிக்கொண்டு மேற்கு நாடுகளின் இசைக்கு ஆடிய நீதி மன்றம், தெரிவுக்குழு விவகாரத்தில் என்ன பிழையை கண்டது என்பது தெரியவில்லை. ஒரு நாட்டு நீதி மன்றும், பராளுமன்றமும் பலப்பரிசையில் போவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியல் அமைப்பு சட்டங்கள், அவை ஒன்றை ஒன்று, தேவையாயின், கண்டிக்கத்தக்க முறையில் தான் வழமையில் வரையப்படும். ஆனால் அதற்கென ஒரு விதி இல்லாமல், இலங்கை உச்சநீதிமன்றம், போட்டியில் இறங்கியதுதான் வீட்டுக்குலிருந்து பெட்டைநாய் குரைத்தது மாதிரி இருந்தது. நீதிமன்றம் இலங்கை பாராளுமன்றத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றுதான் கோடிஸ்வரன் வழக்கின் பின்னர் இலங்கை குடியரசாக்கப்பட்டு அரசியல் அமைப்பு மாற்றி எழுதப்பட்டது. இன்று வரை அது இரண்டு அமைப்புக்களாலும் ஒற்றுமையாகவே பின் பற்றப்பட்டும் வந்தது. இதில் தனி ஒரு நீதி அரசர் தனது கணவருடன் அரசு முரணுகின்றது எனபதற்காக தான் நீதித்தீர்பை அரசுக்கு எதிராக வழங்கிவிடமுடியும் என்று நப்பாசை வைத்தது தவறு. சிராணி கொடுத்த திவி நிவிகும்ப சட்டத்திற்கெதிரான தீர்ப்புக்கு சிங்கள மக்களிடமிருந்து ஆதரவு வரப்போவதில்லை. இதை மீறி பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தெரிவு குழுவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முயன்ற போது தனது கட்சி மீதான ஆணையை மதித்து எதிர் கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க மறுத்துவிட்டார். மேற்கு நாடுகளின் தூண்டுதலால் ஆடும் நீதிமன்றம் பாரளுமன்றத்தை கட்டுப்படுத்த முயல்வதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். எந்த ஜனநாயக நாட்டிலிலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேல் வந்தால் சட்டத்தை மாற்ற முடியும். இது இலங்கையில் ஒவ்வொரு அடுத்த தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கிறது. பதவியை பிடிக்க வேண்டுமாயின் தமிழரை எதிர்த்து ஒரு மேடையில் பேச வேண்டியது மட்டும்தான் என்ற நிலை இலங்கையில் இருக்கிறது. இந்த யதார்த்தை மறந்த சிராணி தனது கணவரை காப்பாற்ற நீதிமன்ற பதவியை பாவித்து தமிழருக்கு ஆதரவான 13ம் திருத்தை எதிர்த்த திவி நிகும்ப சட்டத்தை கையில் எடுத்தார். அதில் ஆரம்பித்த நாடகம் மேற்கு நாடுகளின் தலையீட்டால் இன்றுஅவரையே காப்பாற வேண்டிய நிலைக்கு இட்டு சென்றுவிட்டது. இது நாடகத்தின் முடிவு மாதிரி தெரியவில்லை. ஏன் எனில் மேற்குநாடு தமக்கு இலங்கையில் கிடைக்க வேண்டிய பங்குக்கு ராஜபக்சா கதவை திறப்பார் என்றுதான் அவர்கள் அவருக்காக புலிகளை தோற்கடித்தார்கள். ஆனால் அவர் உடனே கதை மூடிவிட்டதுமல்ல, இருக்கத்தக்க பின்கதவுகளான பொன்சேக்கா, சிராணி போன்றவற்றையும் தாள்ப்பாள் போட்டு மூடிவிடுகிறார். எக்கொனொமிஸ்ட் எழுதிருந்த கட்டுரையை படித்தால் வேறு எதாவது யன்னல்களாவது திறந்திருக்கா என்றுதான் மேற்கு நாடுகள் தேடுவது போல இருக்கு. இது மேற்குநாடுகளும் ராஜபக்சாவும் இடையிலான கள்ளன் பொலிஸ் விளையாட்டின் ஆரம்பம் போலத்தான் படுகிறது.
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
கென்ன என்ன இந்த பாவாடைக் கூட்டத்தை பார்க்க பயங்கர காடைக்கூட்டம் மாதிரியல்லவா இருக்கிறது. 2009 மே 19திலும் இப்படித்தான் வெடி கொழுத்தி கொண்டாடியவர்கள். சிலாபம் கோவில் திருவிழாவை குழப்பியவர் ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கிறார். இராமநாதனின் வெற்றியை, தங்கள் வெற்றியாக மதித்து வண்டிலில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு வண்டிய தங்கள் இழுத்து தங்கள் மனத்தின் பெருந்தனமையை காட்டிய சிங்கள மக்களை, டி.எஸ். சேனநாயக்கவினதும் பண்டாரநாய்க்காவினதும், வகுப்புவாத வெறி நெறிப்படுதல் ஒருவனின் வேதனையை இன்னொருவன் கொண்டாடுவதுதான் இன்றைய கீழ்த்தரமான சிங்கள-பௌத்த கலாச்சாரமென்றாக்கிவிட்டது.
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
எக்னமிஸ்ட் தமிழர்கள் இதை எதிர்த்து முழுமனதாக போராடவில்லை என்பது போல எழுதியிருந்தது. அதை மேற்கு நாட்டு அரசுகளின் விருப்பமாக கணிக்கலாம். இப்படி உசுப்பேத்து எதற்கும் பலன் படாது. மேற்குநாடுகள் இலங்கையில் தமது அஜெண்டாவைத்தான் முன் வைக்கிறார்கள். இலங்கையின் எந்த நியாயமான பிரச்சனையிலும் தலையிடத் தயார் இல்லை. இது தொடர்ந்து சீனாவுக்குதான் லக்குகாக இருக்கும். இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்க இனப்பிரச்சனைதான் காரணம் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளத்தயாராக இல்லை. இலங்கையை குடியரசாக்கும் சட்டமூலம் கொண்டுவந்ததே பிறிவு கவுன்சில் அரைகுறையாக கோடீஸ்வரன் வழக்கில் நீதி தீர்த்தமையால் ஆகும். அன்று மேற்கு நாடுகள் இலங்கை குடியரசாவதை 100%மும் ஏற்றார்கள். சிற்றினத்துக்கான சோல்பரி பாதுகாப்பு அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்ப்ட்டது. இன்று சிராணி திவிநிகும எதிர்ப்புக்கு அரைகுறையாக நீதி தீர்த்தா. இதனால் அவர் பதவி நீக்கப்படுகிறார். அன்று இங்கிலாந்து நீதியரசர்களை பதவி நீக்க முடிய வில்லை. ஆனால் அரசியல் அமைப்பு திரும்ப எழுதப்பட்டது. திவிநிகுமவுடன் முரணும் 13ம் திருத்தம் இனி நீக்கப்படாவிட்டாலும் அதில் ஒரு பலனும் இல்லை.
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை - நியமன எம்.பி என்பதால்தான் அப்படி. தேர்தலில் நின்றிருந்தால் சிங்கள மக்களுக்கு வேண்டியது என்ன என்பது புரிந்திருக்கும்.
-
கருத்து படங்கள்
6 லட்சம் சிங்களவரும் முஸ்லீம்களும் சவுதியில் தொழில் செய்கிறார்கள். கக்கீமோ அல்லது மகிந்தாவோ சவுதிக்கு முன் வாயே திறக்க மாட்டார்கள்.
-
கருத்து படங்கள்
தரையில் விழுந்து தலையை மோதிக்கொண்ட கில்லரி கிளின்ரன் வேலைக்கு திரும்ப, நகைச்சுவையாக, வேண்டு மென்று தலைக்கவசம் பரிசளிக்கப்பட்டார். சிரித்துகொண்டு பெற்றுக்கொண்டாராம்
-
கருத்து படங்கள்
மாற்றுக்கருத்துகளுக்கு பஞ்சமில்லை?
-
கருத்து படங்கள்
இதுவும் கருத்து படத்திலா? (இது வரையும் தொடந்து கருத்துப்படங்களை தரும் தமிழரசுக்கு நன்றி )