Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by மல்லையூரன்

  1. இன்னொரு குந்தவையும் அருள்மொழியும். (கையை எங்கோவோ கட்ட அக்காவின் வாயை மட்டும் பார்க்கிறது. இப்படி பட்ட அவதான விளக்கத்துடன் தான் வருங்கால சி.வி. ராமனும், சந்திர சேகரரும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது )
  2. மத்தியில் இருந்து வந்த அழுத்தத்தால் இடிக்கப்படுவது போல்ப்படவில்லை. மானில அரசின் காணி மீது ஏற்கனவே நெடுமாறன் ஒப்பந்தம் வைத்திருக்கிறார். ஒப்பந்த நேரம் கட்டிய கட்டடங்களை அறிவித்தல் கொடுக்காமல் இடிக்க இப்படி தமிழ் நாட்டின் சட்டக்கோவைகளில் இடம் இருக்கா தெரியவில்லை. நடந்து கொள்ளும் விதம் நாகராஜன் மீது காட்டும் கோபம் போலத்தான் தெரிகிறது. மத்திய தேர்தல் வருவதால் தமிழர் விவகாரங்களை அவ்வளவு விரைவாக மறந்திருக்க முடியாது. ஜெயலலிதா உழைத்து முன்னேறிய அரசியல் வாதி அல்ல. கருணாநிதி போன்ற ராஜதந்திரியும் அல்ல. சினிமா விலாசம், எம்.ஜி. ஆர். கட்டி எழுப்பிய கட்சி என்பவற்றை பாவித்து பதவிக்கு வந்து அராஜரீகமாக ஆண்டு கருணாநிதியிடம் பதவியை கொடுத்தவ. பழைய அனுபவங்களால் படித்திருந்த்தாலும் இன்னும் தெளிந்த அரசியல்வாதி அல்ல. நாகராஜனை பழிவாங்க ஜெயலலித மிக மோசமான தவறாக இதில் நடந்து கொள்கிறார். ஆனால் இது மத்திய தேர்தலுக்கு காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் வாய்ப்பாக மாறப் போகிறது. அது தமிழ் மக்களுக்கு மேலும் இடராக மாறலாம். மானில தேர்தலில் அ.தி.மு..க. தோற்று பதவி கைமாறினாலும், மத்திய தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஒரு தொகுதிகூட பேற முடியாது என்ற நிலை அவசியம். இதை ஜெயலலிதா தொடர்ந்தால் 2014ல் தமிழக மக்கள் வாக்களிக்க கட்சி இன்றி தவிக்கப் போகிறார்கள். பழைய உடல் இருந்திருந்தால் கருணாநிதி சந்தர்ப்பத்தை பாவித்து வந்து குத்தித்திருப்பார். ஆனால் அவரின் அடிதடி பிள்ளைகளை இதற்குள் அனுப்புவது அவ்வளவு நல்ல தல்ல என்று ஒதுங்கியிருக்கிறார் போலும்.
  3. இது போலிப்படம். இதுவரையில் விக்கினேஸ்வரன் சந்தித்த அமெரிக்க அதிகாரி தூதுவர் மிசேல் சிசன். இன்னும் அவர் தமிழர்களின் அபிலாசைகள் மீதோ, கூட்டமைப்பின் கொள்கைகள் மீதோ எந்த தாக்கத்தையும் கொண்டுவரவில்லை. ஏன் இந்த போலிப்பிரச்சாரம். மிசேல் சிசன் யாழ்ப்பாணம் போனவர், எனவே அமெரிக்க உதவிகள் தமிழருக்கு வந்து கிடைத்துவிட்டாலும் என்று அரசை நேரத்திற்கே தூண்டி விடும் ஆப்பா இது? முளையில் கிள்ளிவிடவா? நல்ல படம். மன்மோகன் சிங்கால் இனி இலங்கையின் பாதையை திருப்ப முடியாது. இலங்கையும் சீனாவும் என்று வரும் அல்லது சிறீலங்காவும் சீனாவும், இந்தியாவும் தமிழ் ஈழமும் என்று வரும். தமிழருக்கு இந்தியா கதியோ இல்லையோ, இந்தியாவுக்கு தமிழர்தான் கதி என்பது இது வரையில் எடுத்துக் காட்டப்பட்டுவரும் நடப்புகள்.
  4. ஊசி மட்டுமா குத்துகிறான். ரத்தத்தை ஒட்ட உறிஞ்சிட்டாங்கள். அமெரிக்கா GSP+ கொடுத்து காப்பாறி வைத்திருந்த ஆடை தொழிலும் அவர்களின் கைகளுக்கு போய்விட்டது. இனி Gap, Victoria Secret எல்லாம் சீனாவிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். உபத்திரவம் கொடுக்காமலிருக்க பொதுமக்களுக்கு மயக்க ஊசி போட்டுவிட்டு அரச குடும்பம் தனக்கு கூத்தடிக்க காலிமுகத்திடலில் செய்கை தீவு கட்டுகிறார்கள். கொழும்பில் இருக்கும் விதிகள் அங்கே இருக்கமாட்டா. பலே ஜோர்தான். "இரவு பகல் தூக்கமில்லை ஒரே கொண்டாட்டம்". ஆபிரிக்க நாடுகளின் கூட மன்னர்கள், சட்டம் என்று ஒன்று தமக்கு இல்லாமல் இந்த அளவுக்கு அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க முடியாது.
  5. கூகுளில் தேடிய படமாயின் அதை நேரே இணைக்க முடியாது. நீங்கள் முதலில் அந்த படத்தில் கிளிக் செய்து அது காணப்படும் தளத்துக்கு சென்று அங்கு வைத்து copy பண்ண வேண்டும். அதை இணைத்தால் யாழ் ஏற்றுக்கொள்ளும்.
  6. இந்த பகிடி சாடையாக ஸ்ரலினை குத்துவத்தாக இருக்க வேண்டும். கனிமொழி அழகிரியை பார்த்துச் சிரிக்கிறா. ஸ்ரலின் நேராக பார்த்துக்கொண்டு ஒப்புக்கு சிரிக்கிறார்.
  7. எல்லாம்தான் படத்திலை போட்டாங்க, பறுவாயில்லை. நம்ம Fried Rice யும் போட்டு கடுப்பேத்தறாங்க. அதுதான் பசி தாங்கிக்க முடியல்ல. சந்திரமண்டலத்திலிருந்து இருந்து அரசி வாங்கிவருவத்தாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறி அது வரையில் எந்த கட்சியும் அடையாத அமோக வெற்றியை தேர்தலில் அடைந்து, சோல்பரியின் பிரிடிஷ் பாராளுமன்றத்தை பின்பற்றிய ஜனநாயக அரசியல் அமைப்பை அரசர் ஆட்சிக்கு ஏற்ற மாதிரி திருப்பிய மோடைய நாட்டின் சரித்திர உண்மையை இந்த கேலிசித்திர வரைபாளர் தெரிந்துகொண்டில்லையா?. இந்த படங்கள் தான் இலங்கைத் தேர்தலில் வெல்லும் என்று வேட்பாளர்கள் நினப்பது சரி. அதுக்கு இவர் ஏன் நக்கல் அடிக்கிறார்?
  8. UNP எத்தனையோ தடவை யார் கொண்டுவந்தார்கள் என்று கேட்டுவிட்டது. பதில் வரவில்லை. உள்ளே இன்னமும் துமிந்த,பிரேமசந்திராவுகள் இருக்கிறார்கள். ஒருவர் கொண்டுவர மற்றவர் பொறமையால் பிடிக்கிறார் போலிருக்கு. ஒருவேளை வாசின் ஆட்களோதான் பிடித்தார்கள் தெரியவில்லை.
  9. விஞ்ஞாபனம் வாசித்து வாக்கு போடும் வாழ்க்கையில் தமிழ் மக்கள் இன்று இல்லை. அது செல்வா காலத்தில் அரச உத்தியோகத்தில் இருந்த தமிழ் மக்களுக்கு சிக்கலான விசையங்களை எழுதி தமிழரசு கட்சி பிரசுரித்தது. இன்றய விஞ்ஞாபனம் அரச ஆய்வாளர்கள் underemployment போகாமல் எதையாவது படித்துக்கொண்டிருக்கவும், கொழும்பு ராஜ தந்திர வட்டாரங்களில் தமிழ் மக்கள் தேர்தலில் எதை கேட்க விரும்புகிறார்கள் என்றை எடுத்துக்காட்டவும் தான் உதவும்.
  10. பொறுத்த படம்தான். ஆனால் உண்மை இல்லை. கூட்டமைப்பு தேசியம் பற்றி பேசாவிட்டாலும் மகிந்தாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு தலையிடி அது மட்டும்தான். அது இருந்திருக்காவிட்டால் சென்ற கிழமை வெலிவேரியாவில் கூட்டித்துடைக்கவும் ஒன்றும் இருந்திருக்காது. கூட்டமைப்பு மட்டும்தான் உலக நாடுகளை இலங்கையின் என்ன நடக்கிறது என்று அறியத் தூண்டுகிறது. உலக நாடுகளால்த்தான் வெலிவேரிய ஆட்டாம் அந்த அளவில் நின்றது.
  11. ஆட்டிகலைக்கு வாழ்த்துக்கள். வடக்கு-தெற்கு படம் கீறிய அன்றை விட இன்று பொருத்தம் கூடவாக இருக்கு. கேலிச்சித்திர காரர்களில் "நாடி பிடிக்கும்" ஆற்றல்தான் எது எங்கே போகும் என்று முற்கூட்டி கீறுவது.
  12. அத தெரன இந்த படத்தை போடுவத்தால் அதி மற்றய மொழிகளிலும் வந்திருக்கும்.
  13. கன எலி கூடினால் மண் எடுக்காது. மகிந்தரின் வள்ளமும் தாழத்தான் சந்தர்ப்பம். சிங்கள மோடைய அரசியலில் பாதைகள் இது. ஆழ்வதற்கும் கட்சி இல்லை எதிர்ப்பதற்கும் கட்சி இல்லை என்ற மிக்க்கொடுமையான ஜனநாய வங்க்குரோத்தில் நாடு தள்ளப்பட்டு போய்விட்டது. வாழ்க இலங்கையின் ஜின்னா. D.S சேனநாயக்கா. எல்லாப் புகழும் அவருக்கே. இது இன்னொரு இடத்தில் பதிந்தது, இங்கேயும் பொருந்தும்: Posted Today, 06:07 AM கோழிக் குஞ்சுதான் முட்டையை உதைத்து வெளியே வர வேண்டும். ஆனால் சிங்களவர் மாறாக தமிழரை அழிப்பத்தாக நினைத்து அந்தப் பக்கத்து(மாகாண சபை) வாசலுக்கும் கல்லை வைத்து மூடி தம்மைத்தான் சிறையில் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்தான் இனி தமக்கு விடிவு தேட வேண்டும். இரண்டு முறை சுதந்திரம் இனாமாக வந்தது. இனி மூன்றாவது தடவை வர வேண்டும். இந்தியா வெற்றிகரமாக மாகாண சபைகளை இலங்கையில் கொண்டு வந்தால் சிங்களவருக்கு 1948 தொடக்கம் அது மூன்றாவது சுதந்திரம். முதலில் வெள்ளைகளிடமிருந்து, 1989ல் இந்தியாவிடமிருந்து, இனி மகிந்தாவிடமிருந்து. ரணில் முட்டாள், மகாண சபையை எதிர்க்கிறார். இன்றைய நிலையில் அதை இந்தியாவிடம் அவர் கேட்டுப் பெற வேண்டும். இப்படி ஒரு சர்வாதிகாரம் நாட்டை இறுக்கி கழுத்து நெரிக்கும் போது, அதிகாரமுள்ள மாகாண சபைகள் இருந்திருந்தால் சிங்கள மக்கள் சுவாசிக்க நிறைய இடம் இருந்திருக்கும். மோடைய ரணில் இலங்கையில் ஒரு கோட்டில் ஒரு நீதி பெறமுடியாமல் மாட்டியிருக்கிறார். இதைத்தான் சந்திரிக்கவும் உணரவேண்டும். மாகாண சபை தமிழ் மக்களுக்கு 10% உபயோகமானதாக இருந்தால் அது சிங்கள மக்களுக்கு 110% உபயோகமானதாக இருக்கும். எமக்கு ஐ.நா எதாவது செய்து தந்தால் உண்டு. ஆனால் சிங்கள மோடையக்களுக்கு மாகாணசபை இன்றைய இக்கட்டில் நல்லதொரு இடவசதியாக இருந்திருக்கும். மோடைய அரசியலில் பண்பு அது. தமிழரை பார்க்க வெறுத்த்தால் தங்கள் கண்களை குத்தி தங்களைத் தாங்கள் குருடாக்கியிருக்கிறார்கள்.
  14. யாழில் முன்னர் மாதிரி இணைக்கவும் முடிவதில்லை. இப்போது "share" இருந்து பிரதி பண்ணிக்கொண்டு வந்துதான் இணைக்கிறோம்.
  15. தயாசிறி ஜெய சேகர இரண்டு தவையும் சரி போலத்தான் படுகிறது.
  16. 2011 களில் "நாங்கள் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே" என்று தட்டிக்கழித்தவர்கள், தமிழக மாணவர்களாலும், தங்களை தனியே விட்டுவிட்டு முன்னால் போகும் ஐ.நா பிரேரணைகளாலும் கலங்கிப்போய் 13யை மீள வைக்க பார்க்கிறார்கள். அதனுடன் இன்னும் 25 வருடம் ஓடிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.
  17. நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. நன்றி ஊர்பூராம்.
  18. உதயனுக்கு நடந்ததை சொல்கிறார்கள் போலிருக்கு. அதுதான் மகிந்தா ஆபிரிக்க போக முதல் செய்து முடித்தது. வலம்புரிக்கு எதிராக முஸ்லீம் ஆர்ப்பட்டம் ஒன்று நடத்தியிருந்தார்கள். அது அரச ஏவலா தெரியாது. மகிந்தாவை சால்வை இல்லாமல் கீறுகிறார்கள். அதுவும் ஊடக சுதந்திரந்தில் வந்த முன்னேற்றம்.
  19. பிரசாத் எக்னிலிகொட காணாமல் போன பின்னர் cartoonistகள் கையிலிருக்கும் மனத்தைரியத்துடன் மட்டும்தான் படங்கள் வரைகிறார்கள். மகிந்தாவின் உருவங்கள் இருக்க வேண்டிய இடங்கள் எங்கும் வேறு எதையாவது தான் வரைகிறார்கள். இந்த படத்தில் முழந்தாளிட்டு நிற்பவரை கரும்பலகைக்கு முன்னால் வெண்கட்டியோடு நிற்கும் பெண்ணாகவும், கதையுடன் நிற்பவரை துட்ட கைமுனு மாதிரியும் வரைந்திருந்தால் இலங்கையின் அவலத்தை தெளிவாக காட்டியிருக்கும். இந்த பக்கத்தில் நம்மை விட அவர்கள் எண்ணங்களில் கூட இருப்பத்தால் அல்லவா அவர்கள் Cartoonists ஆகிறார்கள். எப்படி Cartoonists கட்டிலின் கீழ் ஒழிக்க நேர்கிறதோ, அதையேதான் இனிமேல் ஆசிரியர்கள் செய்வார்கள். இந்த அரசியல் வாதியை தண்டிக்கிறோம் என்று கூறி பகிரங்க இடத்தில் தூக்கு போட்டாலும், பள்ளி மாணவர் உடுபில்லாமல் பள்ளிகு வந்தாலும் ஆசியர்கள் மற்ற பக்கம் பார்த்துகொண்டுதான் இருக்க போகிறார்களே அல்லாமல் பிரசாத் எக்னிலிய கொட பரிசில் மாறு வேடத்தில் உலாவுகிறாக என்ற தேவையில்லாத வம்புகளில் மாட்ட மாட்டர்கள்.
  20. அரசியல் கருத்துப்படம் என்றால் இதுதான். இதில் சுரேசுக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கலாம் . சுரேஸ் இதுக்குள் ஓடிப்போய் தனக்கு 107 மந்திரிகளில் 3 பேரின் ஆதரவு உண்டு என்கிறார். இவருக்கு ஏன் 13ம் திருதத்தை கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கம் கெட்டுப்போய்விட்டது. 13 யை வைத்து கொண்டு கற்பனை கோட்டை கட்ட ஆயத்தம் ஆகிறார் போலிருக்கு. 13ம் திருத்தம் தமிழரின் சில உரிமைகளை பாதுகாக்கிறது. அதை வைத்து மிரட்டி அரசு தமிழரை அதில் பாதி தன்னும் தா என்ற கேட்க பண்ணும் நிலைமையை ஏற்படுத்த தான் இந்த பொமைகளை அரசுகாட்டுகிறது. 13ம் திருத்தத்திற்கு நடப்பவைக்கு அரசு பொறுப்பு எடுக்க வேண்டும். ஐ.நா வில் ஒரு பிரேரணை அரசு இவற்றை எப்படி நடை முறைப்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கு. சுரேஸ் அரசு அதை செய்ய வேண்டும் என்றுதான் அரசிடம் கேட்க வேண்டுமேயல்லாமல் இரண்டு கரைக்கும் பேசிக்கொண்டிருக்கும் அரச ஒட்டுண்ணிகளான வாசு தேவா, டி.டபியூ குணசேகர என்பவர்களுடன் பின் கதவுச் சிநேகிதம் பிடிக்க கூடாது. இது அரசு காட்டு யானையை பொறி கிடங்குக்குள் விழுத்தி பிடிக்க வீட்டு யானையை ஏவுவதாகும். சுரேஸ் இதில்போனாராகில் இந்த சிநேகிதத்தையும், சுரேஸ் மீது அரசு புத்தியாக ஆரம்பித்த பயங்கரவாத குற்றச்சாடையும் வைத்து கூட்டமைப்பிலிருந்து பிரித்து எடுத்துவிடும். ஏற்கனவே சுரேஸ் ரணிலிடம் சென்று கூட்டமைப்பை பற்றி முறைப்பாடும் வைத்தவர். ஆனந்த சங்கரி கூட திருந்தியதின் பின்னர் இன்னொரு புதிய ஆனந்தசங்கரி தேவை இல்லை.
  21. சாம்பூர் பொது மக்களின் வாய்க்குள் செருகிவிட்ட குண்டல்ல. பொது மக்களின் வாய்க்குள் செருகப்பட்ட மற்றைய குண்டு நுரை சோலை. அது 87% மின்கட்டண உயர்வை கொண்டுவந்து அணுகுண்டுக்கு உள்ளே வெட்டிகும் TNT வெடி வெடித்திருக்கிறது. அந்த வெடிப்பால் அருட்டப்படும் கதிரியக்க மூலகங்கள் அருண்டு இனி அணுக்குண்டு வெடிக்கும் போது மின்கட்டணம் 300%, 400% வீதமாக உயரும். கடன் சுமை சபுகஸ்கந்தவுக்கும் தொற்றி அது பூரணமாக மூடப்படும். சாம்பூர் திணிக்கப்படும் வாய் தமிழ் மகனின் வாய். இதில் இந்தியா வருவத்தால் சிங்கள போது மகனின் வாய் காப்பற்றப்படும். சிங்கள பொது மகன், தமிழ் மகன் என்று பார்த்துப் பாராமல் குண்டு வைக்க வேண்டுமாயின் சீனாவிடம் தான். போக வேண்டும். ஆனால் சிங்கள பொது மகனின் வாய்க்குள் இந்தியாவை கொண்டு குண்டு வைப்பிக்க முடியாது. தமிழ் மகன் மீது என்றால்த்தான் கேட்டு பெற்று செய்யும். 50,000 வீடுகள் கட்டி வடக்கு, கிழக்கில், சிங்கள குடியேற்றம் செய்த்து 13ம் திருத்தை சூறையாடுகிறது.
  22. நீதி தேவதைக்கு ஒரு மனித முகம் வைத்து இப்போதெல்லாம் சிராணி மாதிரியே வரைகிறார்கள். ஆனால் மகிந்தரை முழுவதாக மாற்றி இதில் பார்த்தால் கருணாநிதி மாதிரி இருக்க வரைந்திருக்கிறார்கள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.