Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் எனவோதும் இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவிநாலும் தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகஜக தலத்தினில் நவிற்றுதல் அறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புடன் ஒளித்தெய்த மதிவேளை கருத்தினில் நினைத்தவர் எருப்பெழ நுதற்படு கனற்கணில் எரித்தவர் கயிலாய பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கொரு புறத்தினை அளித்தவர் தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தரிசனம் தரவேண்டும் ஏசைய - என்மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா ! பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலம் காலமாக எனைக்காக்கும் திருக்குமரா! நாளும் பொழுதும் உம் நினைவோடு நான் வாழும் நல் வாழ்வு தரவேண்டுமே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே தேனின் சுவையோடு...... கீதம் பாடிடுமே ராக தாள பாவ கால லயமுடனே வானும் விண்மீனும் உலகோடுதான் யாவும் உன் சாயல் தெளிவாகுதே பாரில் எமக்காக தேவ சுதனாக நாதர் கனிவோடு தாமே நாடிநீரே பாவ நாச தேவ பாலன் தயவுடனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ரசூலே யா ஹபீபே ரஹ்மதுல் லில் ஆலமீன் யா முசம்மில் யா முதஸ்ஸிர் கருணையாளர் முஹம்மதே தாஹா நபியே அல்-அமீனே ஹாஷிம் குலத்தின் செல்வமே விண்ணுலகம் சென்ற அற்புத நபியே மர்ஹபா யா முஸ்தஃபா யா ரசூலே.. பாரசீகமும் ரோமும் ஆண்ட காலத்தில் நீர் பிறந்தது ஆட்டை மேய்த்த முஹம்மதே நீர் உலகை ஆண்டதும் நடந்தது ஹபஷா மன்னரின் மாளிகை எங்கும் தூய இஸ்லாம் நுழைந்தது கிஸ்ரா நகரமும் மத்யன் மாளிகையும் உங்கள் முன்னே பணிந்தது ஏழைகளுடனே சுவனம் செல்லும் முஹம்மதே நீர் வாழ்கவே யா ரசூலே.. உங்கள் கொள்கையை ஏற்ற நாங்கள் மறுமையில் உம்மை காணுவோம் வாழ்வின் இறுதி நிமிடம் வரையில் உங்கள் வழியை பேணுவோம் உங்கள் உபதேசங்கள் யாவும் உணர்ந்து வாழ்வோம் யா நபி அண்டை வீட்டார் மீதும் கரிசனம் காட்டுவோமே யா நபி வாழ்க உங்கள் நாமம் என்றும் யா இமாமே அம்பியா யா ரசூலே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோயில் திரு அகவல் - 2 காதள வோடிய கலகப் பாதகக் கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும் காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள் பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச் சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர் ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம் சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்; வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்; ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை; நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம் அடலைப் பெரிய சுடலைத் திடருள்; ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்; ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம் மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்; சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்; காற்றில் பறக்கும் கானப் பட்டம்; விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை; சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை; ஈமக் கனலில் இடுசில விருந்து; காமக் கனலில் கருகும் சருகு; கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி, பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு; மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல் ஊரில் கிடக்க வொட்டா உபாதி; கால் எதிர் குவித்தபூளை; காலைக் கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்; அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்; அதிரும் மேகத்து உருவின் அருநிழல்; நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து; கண்துயில் கனவில் கண்ட காட்சி; அதனினும் அமையும் பிரானே! அமையும்; இமைய வல்லி வாழிஎன் றேத்த ஆனந்தத் தாண்டவம் காட்டி ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏது புத்திஐ யாஎ னக்கினி யாரை நத்திடு வேன வத்தினி லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ ஓத முற்றெழு பால்கொ தித்தது போல எட்டிகை நீசமுட்டரை யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே ஓத மொய்ச்சடை யாட வுற்றமர் மான்ம ழுக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே மாதி னைப்புன மீதி ருக்குமை வாள்வி ழிக்குற மாதி னைத்திரு மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் .....முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ......முடிசாயத் தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ......பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள்புய முருக சரணென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் கமரில் விழவிடு மழகுடை யரிவையர் களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் கருணை யடியரொ டருணையி லொருவிசை சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தரவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில் அகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அற்புதம் நிகழ்த்தும் ஈப்போ அரசமர பிள்ளையாரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாராயோ தஞ்சம் யேசுவண்டை சேராயோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் யேசு தேடி வந்தார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் குழம்பு கம கமன்னு வீடே மணக்கும் படி செய்வது எப்படி ?| மீன் குழம்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி
கேணல் ராயூ ஒரு இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு ‘கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயூ அந்தச்செய்தி புற்றநோய் போல மெல்ல மெல்லத் தமழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்த காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடை காண எம்மக்கள் தவித்துக்கொண்டிருந்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. எங்கள் போரியற் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும் போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். எங்கள் கேணல் ராயூ அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்த போதும் தமிழீழத்தேசம் விடியும் நாள் வரை அவர் வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மை கருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம் செய்ய எப்படி முடியும்? ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழிந்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம் போல் எம்முட் பாய்கின்றன. பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்து விடும் அவாவுடன் 1983 ஆம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள்இ பெரியோர்இ பெண்இ ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எவ்வித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயூ எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சிபெற வேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார். இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும் போது பொன்னம்மானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சி முகாமின் பொறுப்பாளர் லெப். கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். ஈற்றில் அவருடனேயே தமிழீழத்திற் கால் பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பெரியது. தொலைத்தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயூ கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன்கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார். துரோகி ஒருவன் வீசிய குண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயூவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயூவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிக்குண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலை கொடுத்தான். பலாலி காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப்பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார். பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப் படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக்கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மென்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்த பின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள் வரை தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீக்கவனத்திற்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத்தொடர்பு வெடிமருந்து இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார். இந்தியப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கோலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரைஇ இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார்இ ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கவனாய் வளர்தெடுத்ததுவரைஇ எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிக்குண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார். இந்திய அமைதிப்படைகளின் வன்கொடுமைக் காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயூ தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்த போது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர். தலைவரை அடைந்த ராயூ ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன. இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயூ உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூருகிறான். “அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும் தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன் மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன் முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்து கொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.” இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைக்குப் பொறுப்பாகவிருந்து பலவெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்கு காத்திரமான பங்களித்த “பசிலன் 2000” அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆனையிறவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனத்தில் “பசிலன் 2000” இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதியவகை ஆயுதங்கள் ராயூவின் கைபட்டுத்தான் வெளியே வரும். இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கறையைத் தன்பொறுப்பின் கீழ்ச் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேடிப்பிடித்து விடயங்களை நுணுகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடி மருந்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக்கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக் கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப்பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள்; என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்ய வேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக் கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றம் வரை அவர் ஓய்வதில்லை. சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும். 1992 ஆம் ஆண்டு ஆயுத வெடிப்பொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புக்களைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்கதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது. அந்த நாட்களில் ராயூவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோகூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக்கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயூ நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். ஆதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஓய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது. சிறுத்தைப் படைப் பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்பு மிக்க அதிரடிப் படையை உருவாக்க வேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் எண்ணத்தை முழுமையாக உணர்ந்த ராயூ தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்ட போது ராயூவின் மீதான சுமை இரட்டிப்பானது. பயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயூ எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு ஏதுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொடக்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற் பட்டனவாகவே இருந்தன. நாங்கள் எல்லாவற்றிலும் கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயூ அண்ணனின் செயல்கள் தான். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயூ அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்.” ராயூவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக பயன்படுத்தப்பட்டதுடன் சிறுத்தைப் படையணிப் போராளிகளாற் படைத்துறை உட்கட்டமைப்புக்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற் துறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டன. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதற்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியே இருந்தார். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் பிரமிக்க வைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார். “ராயூ அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குறித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதித்துவைத்துவிடுவார். தேவைப்படும் போது எல்லாவற்றையும் உடனுக்கடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்திற்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்தில் புத்தகத்துடன் அமர்ந்து விடுவார். தான் வாகனத்தை ஓட்டும் போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்து கேட்டுக் கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக்கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயூ அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்து விடுவார். எப்போதும் அதிகாலை வேளையில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்து விடுவார். இப்படியான இயல்புகளால்த்தான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்க முடிந்தது” உண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ். குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்க முடிந்தது. வன்னிப் போர்க்களத்தில் எமது படைத்துறைப் பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புக்களுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயூ வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின் போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயூ வின் உழைப்பே காரணமாகும். முல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்னளில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புக்களும் ராயூவிடமே விடப்பட்டன. “ராயூ எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயூவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப் படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார். “எங்களைப் பொறுத்தவரை அப்போதும் எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில் அப்போது ஆட்லறி பற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்தவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயூ அண்ணை அந்த இரும்புக்குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகர முடியாமல் முடங்கி விடுவோம். சிலவேளைகளில் நம்பிக்கையின்மை கூட ஏற்படும். “ராயூ அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கை தான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயூ அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின் படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின் போது ஆட்லறிகள் துல்லயமான சூடுகளை வழங்கின.” ஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும் மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப்பிரிவைப் பயன்படுத்துவதில் ராயூ வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின் போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழிப் படைகள் அக்காலநிலைமைகளில் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக் கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஜயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது எமது ஆட்லறிப் பிரிவான கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயூவே தலைமைதாங்கி வழிநடத்தினார். எல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆடலறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழலிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பகற் சண்டையில் நாம் குதித்த போது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்து சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது. வரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போதும், ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கோலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக் காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயூவின் பொறுப்பிலிருந்த பொறியியற் துறையால் “அக்கினிக்கோலா” நடவடிக்கைக்கு எதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வெடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின. போர்க்களங்களில் ஆயுத வலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாதென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒரு நாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தறியாத எங்கள் தளபதி ராயு கொடும் நோயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவராற் பிள்ளைகள் போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தால் வாடினர். ராயூவின் நோயின் கடுமை அதிகரித்துக்கொண்டே போனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்று விட்டன. எங்கள் அன்புக்குரிய ராயூமீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதைச் செரிக்க முடியாதவராக இருந்தார். “வருத்தமென்று சும்மா படுத்துக் கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறி வருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயூவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்க முடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்க நிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. ஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயூ அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாரென்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயூ நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கம். ஆனால் 25.08.2002 ஆம் நாளன்று எல்லாமே பொய்த்துப்போயின. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி, 2002). https://thesakkatru.com/special-commander-colonel-raju/
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ. ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது. “முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார். ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார். ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும். விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று. விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது. இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார். தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன. 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும். அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது. சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது. சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின. அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது. 1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார். ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள். 1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை. ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம். பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது. 1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார். ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார். எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும். ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது. அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது. இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”. ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/commander-colonel-raju-was-a-major-contributor-to-the-development-of-the-liberation-tigers-of-tamil-eelam/
-
நடனங்கள்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!🙏 சொல்லாலே இயம்பிடல் இயலாதையா ஆடல் வல்லோனின்..... Siva Keerthanam: This is one of Smt. Sheela Unnikrishnan’s early choreographies which her students have been performing in many Bharathanatyam competitions for the last 15 years. And this piece has always fetched the first place, owing to its timeless choreography and the soulful lyrics and music composition by Madurai Sri R. Muralidharan. This presentation by the four dancers is a mark of their evolvement during SDN’s lockdown sessions. In this song, the devotee declares that the beauty of Nataraja in Chidambaram, cannot be expressed in words! He, who is the Lord worshipped by thousands of sages, is omnipresent in this Universe. Words can not suffice His eternally ecstatic Dance, says the devotee. His bow like eye brows twitch this way and that way as He dances with the matchless Nine Rasas. His consort, Uma dances gracefully by His side and the Ganaas accompany Him on the music. The crescent moon, the Kondrai flower and His matted hair dance asserting the annihilation of sorrow. The tiger skin which adorns His waist, dances; the Universe dances; the devotees who seek refuge, also dance. The snake ornaments dance and the entire cosmos dances in Ananda! Words cannot describe His blissful dance in Chidambaram. சிவ கீர்த்தனம்: இது திருமதி. ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஆரம்பகால நடனங்கள் அவரது மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல பாரதநாட்டியம் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். காலமற்ற நடன மற்றும் மதுரை ஸ்ரீ ஆர். முரளிதரனின் ஆத்மார்த்தமான பாடல் மற்றும் இசை அமைப்பின் காரணமாக இந்த துண்டு எப்போதும் முதல் இடத்தைப் பிடித்தது. நான்கு நடனக் கலைஞர்களின் இந்த விளக்கக்காட்சி SDN இன் பூட்டுதல் அமர்வுகளின் போது அவர்களின் வளர்ச்சியின் அடையாளமாகும். இந்த பாடலில், சிதம்பரத்தில் நடராஜாவின் அழகை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என்று பக்தர் அறிவிக்கிறார்! அவர், ஆயிரக்கணக்கான முனிவர்களால் வணங்கப்படும் இறைவன், இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்தவர். அவரது நித்திய பரவசமான நடனத்திற்கு வார்த்தைகள் போதுமானதாக இருக்காது என்று பக்தர் கூறுகிறார். கண் புருவங்களைப் போன்ற அவரது வில் இந்த வழியையும் அந்த வழியையும் இழுக்கிறது, அவர் பொருந்தாத ஒன்பது ராசாக்களுடன் நடனமாடுகிறார். அவரது துணைவியார், உமா அவரது பக்கத்திலேயே அழகாக நடனமாடுகிறார், மேலும் கானாஸ் அவருடன் இசையில் வருகிறார். பிறை நிலவு, கோண்ட்ராய் மலர் மற்றும் அவரது பொருத்தப்பட்ட முடி நடனம் ஆகியவை துக்கத்தை அழிப்பதை உறுதிப்படுத்துகின்றன. அவரது இடுப்பை அலங்கரிக்கும் புலி தோல், நடனமாடுகிறது; யுனிவர்ஸ் நடனங்கள்; அடைக்கலம் தேடும் பக்தர்களும் நடனமாடுகிறார்கள். பாம்பு ஆபரணங்கள் நடனமாடுகின்றன மற்றும் முழு பிரபஞ்சமும் ஆனந்தத்தில் நடனமாடுகிறது! சிதம்பரத்தில் அவரது ஆனந்தமான நடனத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பைரவா பைரவா - கால பைரவர் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ அஷ்ட பைரவர் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : S P தேவராஜன் | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக் பாடல் வரிகள் : ஸ்வானத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத் ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம் தத்கா சூலகபால பாச கதரம் ரக்ஷா கரம் பைரவம் நிர்வாணம் ஸுநவாகனம் திரிநயனஞ்சானந்த கோலாகலம் வந்தே பூத பிசாச நாதவடுகம் ஷேத்ரஷ்ய பாலம்சிவம் பைரவா வைரவா ஸ்ரீ மஹா கால பைரவா ஓடி வா நாடி வா உலகம் யாவையும் காக்க வா நால்வேதம் நாயின் ரூபம் வான் மேகம் சிவந்து போகும் காடு வனங்கள் இருண்டதாம் கரியமேகம் திரண்டதாம் மூவரில் முதல்வனே காலகாலனே வைரவா போற்றி தேவ தேவனே சம்ஹாரநாதனே சங்கரா போற்றி இரண்யாட்சன் மைந்தன் அந்தகன் மூச்சை அடக்கியவா செய்த தவத்தால் கர்வம் கொண்டான் ஆணவம் நீக்கியவா அனுதினமும் உனதிரு திருவடி வழிபடுவேன் நலமுடன் வளம் அருள் அரண் அருளே அவனியில் வடிதனை தொழுதிடுவேன் வரமுடன் சுகம் தரும் உம்மை என்னும் எண்ணம் தந்திடு ஓடி எந்தன் முன்னே வந்திடு அந்தகாசுரன் ஏவி விடுகின்ற ஆயுதம்தனை பொடியாக்கி அவனின் தலையை அறுத்து எறிந்தாய் சூலமதை செலுத்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இனி நான்னல்ல
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாயையான மண்ணில் பிறந்து மதி மயங்கும் உலகில் வீழ்ந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகன் காவடி பாடல்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அய்யா அந்த குளக்கரையில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காணிப்பாக்கம் பிள்ளையாரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ஷபியே... யா ஷஹீதே... யா ரசூலுல்லாஹ் || இசை முரசு E,M.நாகூர் ஹனிபா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோயில் திரு அகவல் - 1 நினைமின் மனனே ! நினைமின் மனனே சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே ! நினைமின் மனனே ! அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்; உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்; என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்; பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன. தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன; பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன; ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின; செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை; சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை; இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை; ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும், புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள் பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி; மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி; உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி; வளியும் மலமும் வழங்கும் ஒருவழி; சலமும் சீயும் சரியும் ஒருவழி; உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து, கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை. ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை, நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனதற நினைவற இருவினை மலமற வரவொடு செலவற மருளற இருளற இரவொடு பகலற இகபரம் அற ஒரு முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித் திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை, நினைமின் மனனே ! நினைமின் மனனே ! சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை நினைமின் மனனே ! நினைமின் மனனே !