Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ பார்வதி அம்மா உன் தாயல்லவோ ஸ்ரீ கணேசன் உந்தன் அண்ணல்லவோ என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா கண்கள் உன்னை தேடும் வடிவேலவா எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா
  2. குழலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் மயிர்க்காலில் மயிலிறகாய் நடமாடுவேன்.. குயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் குழல் ஓசைக்கிசைவாக தினம் கூவுவேன் குழல் ஏதும் எனக்கில்லை கண்ணா எந்த பிறவியிலும் உன்னை எண்ணி உயிர் வாழ்வேன்
  3. பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா முன்னோர்கள் செய்த பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோட்டி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக சங்கணினி முதல் நவநிதி தாராய் கங்ஙனம் கையால் மங்களம் செய்தல் குங்கும பூவாய் மங்கைய பாவை வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய் அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம் நித்த மஹாச்சவம், நித்ய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிரவார பூஜையில் இருந்து அக்கறை யோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விதலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா... என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
  4. எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம்
  5. லக்ஷ்மி வாராய் என் இல்லமே
  6. ஒற்றை கொம்பனை பற்றி பார் அதில் உள்ளத் தாமரை தித்திக்கும் பற்றும் நம் பணி வெற்றி பாதையில் பற்றும் நாள் வரை சித்திக்கும் (2) தித்தித்தால் அது சித்திக்கும் சித்தித்தால் அது தித்திக்கும் சித்தித்தால் அது தித்திக்கும் தித்தித்தால் அது சித்திக்கும் சங்கர சங்கரி பங்கயர் கண்களில் மங்களம் புரிந்திட வந்தானே பக்தியுடன் பூவை போட்டால் பொன்னை தரும் தெய்வம் சக்தி மகன் கண்ணை கண்டால் தானே வரும் செல்வம் பெற்றவரை உலகமென்று சுற்றி வரும் பிள்ளை தான் பிள்ளைகளின் பாசம் என்ன சொல்லி தரும் எல்லை தான் (2) நம்பிய தம்பியை காத்தவனே வள்ளலை வள்ளியில் சேர்த்தவனே (2) தும்பிக்கை ஒரு நம்பிக்கை என துன்பம் தீர்த்திடும் தூயவனே ஐங்கரன் என்பவன் அற்புதம் செய்பவன் பொற்பதம் மின்னிட வந்தானே குஞ்சரத்தை பாடும் போது கொஞ்சும் சுகம் கோடி நெஞ்சகத்து பொய்கை தன்னில் நீந்தும் விளையாடி (2) வஞ்சகத்தை வெல்லும் தெய்வம் வாழ்வில் நல்கும் நன்மை தான் தஞ்சமென்று சொன்னால் போதும் காவல் நிற்கும் உண்மை தான் உத்தமி புத்திர நாயகனே வித்தக மித்ரா விநாயகனே தும்பிக்கை ஒரு நம்பிக்கை என துன்பம் தீர்த்திடும் தூயவனே ஐங்கரன் என்பவன் அற்புதம் செய்பவன் பொற்பதம் மின்னிட வந்தானே
  7. அரோகரா அரோகரா அரகரோகரா ஆறுமுக வேலனுக்கு அரகரோகரா.
  8. மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் சீதா மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் துளசி மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ராகம்: சங்கராபரணம் https://www.youtube.com/watch?v=07Be3YbFqpE
  9. தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் 1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனைத் துதித்திடுவோம் 2. வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் 3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை வாழ்த்திடுவோம் 4. தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி என்றுமே ஆதரிப்பார் மறந்திடாமல் உறங்கிடாமல் நினைத்த தேவனை துதித்திடுவோம் 5. நமது போரை தாமே முடித்து ஜெயமே என்றும் அளித்திடுவார் சேனை அதிபன் நமது தேவன் அவரை என்றும் போற்றிடுவோம் துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்
  10. சுட சுட டீக்கடை பக்கோடா 😋 ஐந்தே நிமிடத்தில் ரெடி | பட்டணம் பக்கோடா | மெது பக்கோடா
  11. காதலின் தேடலில் எப்பொழுதேனும் ஒருமுறை இழப்பின் தருணத்தையே உணர்ந்துள்ளோம் பிரிதலின் வலியை உணர்ந்துள்ளோம் எப்பொழுதேனும் ஒருமுறை நெருப்பின் பொறிகளால் தூண்டப்பட்டுள்ளோம் நீயும் நானும் உனதும் எனதும் என்பதிலிருந்து நீங்கும் கணத்தில் நாங்கள் அகன்ற நீயும் நானும் மட்டும் இன்பத்தில் திளைத்திருக்கக்கூடும்!
  12. திருப்புகழ் பாடல் 0441 A திருவருணை பகுதி 0424
  13. ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க (ராதை மனதில்..) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (ராதை மனதில்...) கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள் அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா எங்கே சொல் சொல் கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.. (ராதை மனதில்..) கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய் கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
  14. தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும் கொடிய எகிப்து அகன்றிடும் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. ஆற்றலாலும் அல்லவே சக்தியாலும் அல்லவே ஆவியினாலே ஆகும் என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே
  15. வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை.
  16. 1.வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகல கலாவல்லியே! 2. நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்; பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகல கலாவல்லியே! 3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ? உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு, களிக்கும் கலாப மயிலே! சகல கலாவல்லியே! 4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும், சொல்சுவை தோய் வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்; வட நூற்கடலும், தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே! 5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன் பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந் நாவும், அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்; சகல கலாவல்லியே! 6. பண்ணும், பரதமும், கல்வியும் தீஞ்சொல் பனுவலும், யான் எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்; எழுதா மறையும், விண்ணும், புவியும், புனலும், கனலும்,வெங்காலும் அன்பர்க் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்; சகல கலாவல்லியே! 7. பாட்டும், பொருளும், பொருளால் பொருந்தும் பயனும், என்பதால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே! 8. சொல்விற்பனமும், அவதானமும், கவி சொல்லவல்ல நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகல கலாவல்லியே! 9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம் தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண, நடை கற்கும் பதாம்புயத் தாயே! சகல கலாவல்லியே! 10. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்; படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!
  17. பாடல் இயக்கம் : வீரமணி ஐயர் குரல்: TM சௌந்தரராஜன் ராகம்: ராகமாலிகை (ஆனந்த பைரவி, கல்யாணி, பாகேஸ்ரீ, ரஞ்சனி) தாளம்: ஆதி கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா! (கற்பக வல்லி) நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! (கற்பக வல்லி) அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள் தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா! (கற்பக வல்லி)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.