Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மேல்காவில் வாழும் தேவிபாடல்
  2. சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் . அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் . பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் . மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
  3. 1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன் மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ? இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்? யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே! 2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன் நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன் நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்; மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ? இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே! 3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்: நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்: நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்: சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந் திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ? இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன் யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே! 4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன் சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்: யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன் உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்: ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ? ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்! 5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்: திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்: உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ? இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே
  4. கலிலேயா கடற்கரையோரம் ஓர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இயேசு இரட்சகர் உன் பாவத்தைப் போக்கும் உத்தமர் 1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது உன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர் அன்பினை ருசித்திடு 2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த நானிலம் வெறுத்தாலும் பெற்றோர்கள் மறந்தாலும் உன் உற்றார்கள் பிரிந்தாலும் நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே 3.ஏன் இந்த வேதனைகள் என்று ஏங்கிடும் மனிதர்களே என் இயேசுவின் போதனையை ஏன் இன்று மறந்தீர்களோ வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே
  5. அஞ்சனையின் மைந்தா நமோ நமோ
  6. குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா பரிமலத்திருநீறும் உடல் மணக்கும் ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும் சிரகிரிவேலவன் சன்னிதியே நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி தேடினார் முருகனை கவசம் பாடி ஆடினார் காவடி உன் பாதம் நாடி நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா சென்னிமலை மகிமை அற்புதங்கள் அவை சொல்லி மாளாத அதிசயங்கள் கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள் கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள் முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா முருகா முருகா முருகா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .
  7. படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என் உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய் வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே, குரு மணியே, மாணிக்க மணியே நடன சிகாமணியே என் நவமணியே, ஞான நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!
  8. மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது 1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார் 2. அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது 3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு
  9. ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம் மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில் தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...
  10. மரவள்ளி இலை & சுண்டைகாய் கறி. முதல் இருந்த வீட்டில் பத்தையாக நின்றது இந்த சுண்டைக்காய் மரம், பத்தை பத்தையாக வளர தொடங்கிவிட்டது. இப்ப இல்லை, எடுத்து வைக்கனும்
  11. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
  12. மன மோகனா… ஆஆ மன மோகனா… ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா நவனீதா முரளி மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ
  13. நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே – திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே – கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே – நான் 5. ஆதி ஓலோலமே பாதுகாலமே – உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த – நம்பிவந்தேனே – நான்
  14. குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கடலும் வானும் அவனே என்பதைக் காட்டும் குருவாயூர்க் கோலம் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு மாலைகள் இடுவார் குறை ஓடி குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே பாவையர் தாய்மை ரீங்காரம் நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று நித்தம் தருவாள் ஸ்ரீதேவி நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண சாத்திரம் தந்த கண்ணனுக்கு ராத்திரி பூஜை ஜகஜோதி பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
  15. எண்ணி எண்ணி துதிசெய்வாய் எண்ணடங்காத கிருபைகளுக்காய் இன்றும் தாங்கும் உம் புயமே இன்ப இயேசுவின் நாமமே 1. உன்னை நோக்கும் எதிரியின் கண்ணின் முன்பில் பதறாதே, கண்மணிப்போல் காக்கும் கரங்களில் உன்னை மூடி மறைத்தாரே! 2. யோர்தான் புரண்டு வரும்போல் எண்ணற்ற பாரங்களோ எலியாவின் தேவன் எங்கே உந்தன் விஸ்வாச சோதனையில் 3. உனக் கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே உன்னை அழைத்தவர் உண்மை தேவன் அவர் தாசர்க்கு நீதியவர்
  16. பன்னீர் மசாலா - எனக்கு இவா சமைக்கின்ற பாத்திரம் பிடித்திருக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.