Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கரக்கது ராமாரே அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியை வென்ற பின்னால் தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியை வென்ற பின்னால் தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி அவன் கனியிதழில் பால் குடித்து பூதகியைக் கொன்ற பின் தான் அவன் கனியிதழில் பால் குடித்து பூதகியைக் கொன்ற பின் தான் கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி சேலை திருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் சேலை திருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம் பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம் பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
  2. வாராரு பிள்ளையாரு வாராரு
  3. லெப்டினன்ட் செல்லக்கிளி வேர் விட்ட விடுதலையின் உயிர் மூச்சு செல்லக்கிளி, அம்மான், சந்திரன்…. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி, கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது. ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கு வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான அமைப்புகளைக் கொண்ட மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது, கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம். சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி. “செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள். இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி. முதல் முதலில் இயக்கம் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, பொலிஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான் தாக்குதல், உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல், பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனி முத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி. பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் இட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மெயில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் படாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும். 07.04.1978 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த பொலிஸாரிடம் பேச்சுக்கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறான் செல்லக்கிளி. பொலிஸார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் பொலிஸாரின் மேல். அடுத்தகணம் பொலிஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்களில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகிறன. புலிகளை வேட்டையாடவென வந்த பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ்பெக்ரர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக பொலிஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆபத்து வரும் வெளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது கூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்” என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான். தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர். 1983ம் ஆண்டு ஜீன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின் மீது செல்லக்கிளி தலைமையிலான பதின்நான்கு விடுதலைப் புலிகள் கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது வேகமாக வந்த ஜீப் வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிரை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடி எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதேநேரம் ஜீப் வண்டிக்குள் இருந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி. 13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப் புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்கம் முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக்கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான். படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை. ஆம்! சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டப் பாதையில் ஒரு புதிய சகாப்தம் உருவாக்கப்பட்ட நாள். நன்றி: சூரியப்புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/lieutenant-sellakkili/
  4. அதிகாலையிலே அலையோசையிலே
  5. பாலா அவள் எங்கள் குழந்தையடி
  6. ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் (2) பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2 ஆயனே என்னை மன்னியும் 1. வலது கரத்தின் காயமே -2 அழகு நிறைந்த ரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் 2. இடது கரத்தின் காயமே -2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன் 3. வலது பாதக் காயமே -2 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன் முத்தி செய்கின்றேன் 4. இடது பாதக் காயமே -2 திடம் மிகத்தரும் தேனமுதே அன்புடன் முத்தி செய்கின்றேன் 5. திருவிலாவின் காயமே -2 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன் முத்தி செய்கின்றேன்
  7. கருணைக் கடலாம் காதர் வலியின்
  8. ஹர ஹர சிவமாய் ஈஸ்வர லிங்கம் அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம் ப்ரம்மா முராரியர் போற்றிடும் லிங்கம் நிர்மல நல்ளொளி தேற்றிடும் லிங்கம் கர்ம துக்க வினை நீக்கிடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் பவித்திர லிங்கம் பரமேஸ லிங்கம் பசுபதி லிங்கம் பரமாத்ம லிங்கம் பக்தியை தந்திடும் பரம லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் தேவர்கள் முனிவர்கள் போற்றிடும் லிங்கம் காமதகனக் கருணாகர லிங்கம் ராவண தர்ப்பம ருத்திடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் பருவ லிங்கம் சுவரூப லிங்கம் குபேர லிங்கம் குருபர லிங்கம் முக்தியை தந்திடும் ஸ்ரீமூர்த்தி லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் நினைப்பதை எல்லாம் கொடுத்திடும் லிங்கம் நினைப்பவர் உள்ளத்தில் ஜொலித்திடும் லிங்கம் நிரந்தர சுகம் தரும் நித்திய லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் பரப்ப்ரம்ம லிங்கம் சதாசிவ லிங்கம் திகம்பர லிங்கம் ப்ராபகர லிங்கம் நலம் பல செய்திடும் நாகேஸ லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் கனக மகாமணி பூஜைக்குள் லிங்கம் மங்கல தாமரை மாலைக்குள் லிங்கம் வஞ்சனை பாவம் அகற்றிடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் வேதாந்த லிங்கம் நாதாந்த லிங்கம் பரம லிங்கம் பிரணவ லிங்கம் அச்சம் தவிர்த்திடும் அச்சுத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் தேவகனங்களும் போற்றிடும் லிங்கம் தேயுறு பக்தியும் ஈவது லிங்கம் சாம்பலின் தத்துவம் விண்ணூற்ற லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் காசி லிங்கம் கைலாச லிங்கம் கற்பக லிங்கம் காயத்ரி லிங்கம் காற்றுருவாகிய வாயு லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் வரங்களை கொடுத்திடும் ஸ்ரீ ஹர லிங்கம் வந்தெம்மை காத்திடும் வடமகை லிங்கம் சித்தி அளித்திடும் பவித்திர லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் கரியம லிங்கம் ஸ்ரீ வர்ம லிங்கம் நாகலிங்கம் பூஜிதலிங்கம் பித்துகள் போக்கிடும் பித்தளை லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் அரூப லிங்கம் அருள்தரும் லிங்கம் சுவரூப லிங்கம் சுவர்ண லிங்கம் அன்பர்கள் மனதினில் அமர்ந்திட்ட லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம் வில்வமதை மலர் மாலைக்குள் லிங்கம் அன்புடன் அருளைக் கொடுத்திடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் ஜம்பு லிங்கம் தத்துவ லிங்கம் சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம் சங்கடம் தவிர்த்திடும் சுந்தர லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் குங்கும சந்தன ஹேபித லிங்கம் குறைகளைக் தீர்த்திடும் ஷோபித லிங்கம் சஞ்சலம் தீர்க்கும் சதாசிவ லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் ஆத்ம லிங்கம் அருள் தரும் லிங்கம் அபூர்வ லிங்கம் மாணிக்க லிங்கம் இன்பத்தைக் கொடுத்திடும் ஈஸ்வர லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் எட்டொடு பத்தெனும் தத்துவ லிங்கம் எனைத்துமாம் தோற்றமும் காரண லிங்கம் எட்டெனும் வறுமைகள் நீக்கிடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் ஓங்கார லிங்கம் ஒளி தரும் லிங்கம் சந்திர லிங்கம் சதாசிவ லிங்கம் சுடரொளியான வினாசக லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் வேதத்தின் சாரத்தை உணர்த்திடும் லிங்கம் வேண்டும் வரங்களை கொடுத்திடும் லிங்கம் வலம்பெற வாழ்க்கையைத் தந்திடும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம் இமய லிங்கம் ஈஸ்வர லிங்கம் சிதையாத நெஞ்சினில் சிலையான லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் மொத்த சுகத்தையும் தந்திடும் லிங்கம் புத்தி மிகுந்தருள் காரண லிங்கம் சோதனை போக்கிடும் சோமநாத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் ஜலேஸ்வர லிங்கம் ஜகம் புகழ் லிங்கம் பழ மழை லிங்கம் பார்புகழ் லிங்கம் மகிமை புரிந்திடும் மண்ணு லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் மங்களம் அருளும் மாசற்ற லிங்கம் ஐஸ்வர்யம் அளிக்கும் ஐஸ்வர்ய லிங்கம் ஓங்கார வடிவாய் ஒலி தரும் லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் கலியுக லிங்கம் காரண லிங்கம் சத்திய லிங்கம் நித்திய லிங்கம் அமரரை காத்திட்ட அச்சுத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
  9. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிவில் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆஆஆஆஆஆ கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே
  10. எந்த வேலு வந்தாலும் காந்தவேலு முன்னாடி சரணம் சரணம்
  11. ராகம்: நாட்ட குறுஞ்சி இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பால்வடியும் முகம் நினைந்து நினைந்து உள்ளம் பரவசம் மிக வாகுதே நீலக்கடல் போலுன் நிறத்தழகா கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் என்றும் சிந்தனை செய்யதொழிய (பால்வடியும்) வானமுகத்தில் சட்று மனம் வந்து நோகினும் மோன முகம் வந்து தோணுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் கான குழலோசை மயக்குதே கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி அமைத்த திரத்திலே கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே குழல் முதல் எழில் இசை குழைய வரும் இசையின் குழலோடு மிளிரில கரத்திலே கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)
  12. உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இல்லை
  13. ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார், இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய் வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் உத்தமர் தோன்றி விட்டார்! நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம் ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார் காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில் கர்த்தர் தோன்றி விட்டார் – நம் கர்த்தர் தோன்றி விட்டார்!!![
  14. நீராடும் கண்கலோடு நெஞ்சம் இறை பாசத்தோடு
  15. யாழ்ப்பாணத்தில் தயாரிக்கும் சுவையான பத்திய கறி
  16. முருங்கைக்காய் இப்படி செய்துபாருங்க கறிக்குழம்பு தோத்துப்போகும்
  17. மேல்காவில் வாழும் தேவிபாடல்
  18. சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் . அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் . பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் . மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
  19. 1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன் மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ? இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்? யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே! 2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன் நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன் நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்; மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ? இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே! 3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்: நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்: நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்: சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந் திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ? இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன் யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே! 4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன் சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்: யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன் உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்: ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ? ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்! 5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்: திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்: உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ? இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்? யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே
  20. கலிலேயா கடற்கரையோரம் ஓர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இயேசு இரட்சகர் உன் பாவத்தைப் போக்கும் உத்தமர் 1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது உன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர் அன்பினை ருசித்திடு 2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த நானிலம் வெறுத்தாலும் பெற்றோர்கள் மறந்தாலும் உன் உற்றார்கள் பிரிந்தாலும் நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே 3.ஏன் இந்த வேதனைகள் என்று ஏங்கிடும் மனிதர்களே என் இயேசுவின் போதனையை ஏன் இன்று மறந்தீர்களோ வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே
  21. அஞ்சனையின் மைந்தா நமோ நமோ
  22. குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா பரிமலத்திருநீறும் உடல் மணக்கும் ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும் சிரகிரிவேலவன் சன்னிதியே நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி தேடினார் முருகனை கவசம் பாடி ஆடினார் காவடி உன் பாதம் நாடி நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகா முருகா முருகா முருகா சென்னிமலை மகிமை அற்புதங்கள் அவை சொல்லி மாளாத அதிசயங்கள் கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள் கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள் முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா முருகா முருகா முருகா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.