Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. உடல் எனும் இயந்திரம் 40: உயிர் எங்கே இருக்கிறது? ‘நினைவாற்றல்’ என்பது மூளை செய்யும் விந்தை; சரியாகப் புலப்படாத புதிர்! இன்னும் இது குறித்து நாம் முழுமையாக அறியவில்லை. இதுவரை தெரிந்தவரை, பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன. அதற்குத் துணைபுரிய ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா அடங்கிய ‘லிம்பிக் சிஸ்டம்’ என்ற அமைப்பும் மூளையில் உள்ளது. நினைவாற்றலுக்கும் அறிவாற்றலுக்கும் ஆதாரமாக இருப்பது இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நினைவாற்றலில் ‘குறுகிய கால நினைவாற்றல்’ (Short term memory), ‘நீண்ட நாள் நினைவாற்றல்’ (Long term memory), ‘திறமை சார்
 2. ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 18 என்ன நடந்தது என்பதே அப்பெரியவருக்கு சில கணங்கள் வரை புரியவில்லை. கண்களைச் சுற்றி விண்மீன்கள் வட்டமிட்டன. நாசிக்குப் பதில் வாய் வழியே சுவாசிக்க வேண்டிய நிலை. ஓரளவு சுயநினைவு வந்த பிறகு தன் முன்னால் புற்கள் விஸ்வரூபம் எடுத்து மரங்களாக வளர்ந்திருப்பதைக் கண்டார்!அதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்தது!‘‘டேய்... எழுந்திரு!’’ கரிகாலன் அதட்டினான். பெரியவர் தலையை உயர்த்த முற்பட்டார். முடியவில்லை. கபாலம் பி
 3. 119. நிதி சால சுகமா? கண் விழித்தபோது அவன் ஒரு குடிசைக்குள் படுத்திருந்தான். அந்தப் பெண் அவன் அருகே அமர்ந்திருந்தாள். வினோத்துக்கு உடலெங்கும் நிறைய சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. முழங்கால் எரிந்தது. மூக்கு எரிந்தது. இடது கன்னத்தில் எரிந்தது. அனைத்தையும்விடத் தன்னால் எழுந்திருக்கவே முடியாதோ என்று எண்ணும்படியாக இடுப்பில் உக்கிரமாக வலித்தது. ‘எழுந்திருக்காதே. அப்படியே படுத்திரு’ என்று அந்தப் பெண் சொன்னாள். அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான். இவள் தனியாக எப்படித் தன்னைத் தூக்கிவந்து இங்கே கிடத்தியிருப்பாள்? சிறிது வெட்கமாக இருந
 4. அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு அ-அ+ சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாளை கருவாடு - 6 துண்டுகள், வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு -
 5. ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை! பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா? ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான் பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது. `வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, பொறுமையாக உணவைச் சாப்பிடலாம்’ என்றிருந்த காலம் மாறி, `உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மற்ற அலுவல்களுக்க
 6. 118. கிருஷ்ண லீலா முதலில் வினோத்துக்கு சிரிப்பு வந்தது. பேருந்தை விட்டு இறங்கிய சில நிமிடங்கள் அங்கேயே சாலை ஓரமாகச் சென்று அமர்ந்து அந்தக் குழலோசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். சிரிக்க வேண்டும்போலத் தோன்றியதால் அனுபவித்துச் சிரிக்கவும் செய்தான். பிறகுதான் அந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஓசைதான் அது. இசையல்ல. வாசிக்கத் தெரியாத யாரிடமோ ஒரு புல்லாங்குழல் சிக்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தான். அவன் ஏன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு தான் வந்து இறங்கும் நேரத்துக்குச் சரியாக அதை ஊத வேண்டும்? ஆளை நேரில் பார்த்த
 7. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை அ-அ+ இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மேல் மாவு செய்ய: கொழுக்கட்டை மாவு - ஒரு கப், தண்ணீர் - ஒன்றே கால் கப், உப்பு - ச
 8. 117. குழலோசை சென்னை வந்து இறங்கியதும் வினோத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. எங்கோ தடுமாறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதைக் குறிப்பாக எடுத்து நோக்க முடியவில்லை. தன்னையறியாமல் சிவனை நெஞ்சத்தில் இருந்து நகர்த்திவைத்தது பிழையோ என்று தோன்றியது. இதைக் குறித்து யாரிடமும் பேசவும் முடியாத அவலம் அவனை வதைத்தது. கழிந்த வருடங்களில் அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாக சக பிரம்மச்சாரிகளாலும் சன்னியாசிகளாலும் கருதப்பட்டு வந்திருந்தான். கணப்பொழுதும் ஓய்வின்றி கிருஷ்ண கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண
 9. கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தேகத்தை இந்நூலாசிரியர் துரைரத்தினமும் எழுப்பியிருக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகு. குணசீலன் தெரிவித்தார். ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆ
 10. ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 160) ராஜீவ் காந்தி - லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய - இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின்
 11. 116. கப்பல் இருளில் ஒரு பூனையின் கண்களைப் போல அந்தக் கிழவியின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஆனால் அவள் பார்வையில் உணர்ச்சிகள் இல்லை. வெறியோ, கோபமோ இல்லை. அனைத்தையும் அந்த ஒரு அடியில் இறக்கிவைத்துவிட்டவள் போல அமைதியாக வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். தடுமாறிக் கீழே விழுந்த வினோத், ஒன்றும் புரியாமல் மீண்டும் எழுந்து நின்றபோது அவள் சட்டென்று நடந்துபோக ஆரம்பித்தாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளை அழைப்பதா, எதற்கு அடித்தாள் என்று கேட்பதா, அல்லது போகிறவளை அவள் வழியில் போகவிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்த
 12. கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா சுவிஸ் நடைபெற்றுள்ளது. கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்.. ( காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்) கருணா
 13. 115. இருவர் தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அந்தப் பேரொளியின் தரிசனம் கிட்டுமா என்று வினோத் அந்த முதல் தரிசனம் நிகழ்ந்த கணத்தில் இருந்து ஏங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு முறை அப்படியொரு தரிசனம் கிடைக்குமானால், கண்டிப்பாக ஒளியின் ஊடே கிருஷ்ணனைத் தரிசித்துவிட முடியும் என்று அவன் மனத்தில் உறுதியாகத் தோன்றியது. விழித்திருந்த நேரமெல்லாம் அதைக் குறித்து மட்டுமே அவன் யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால் என்ன யோசித்தும் அந்த முதல் தரிசன அனுபவத்தை மீளக் கொண்டுவர முடியவில்லை. இடைவிடாது பக்தி செய்வதன் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று திரும்பத் த
 14. 114. ஒளியின் வழி மூன்று பகல்கள், நான்கு இரவுகள். வினோத் நடந்துகொண்டே இருந்தான். அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த ஒளிக்கோடு ஒரு கட்டத்தில் அவன் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆனாலும் தனக்கு வழி தெரியும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு தீர்மானத்துடன் செலுத்தும் சக்தியைப்போல அவன் மனமே அவனை வழிநடத்திப் போய்க்கொண்டிருந்தது. இடையில் அவன் எங்கும் நிற்கவில்லை. உணவு உட்கொள்ளத் தோன்றவில்லை. நீர் அருந்தவும் அவசியம் இருக்கவில்லை. தன் உணர்வு முற்றிலும் இல்லாமல் போய் அவன் மனமும் மூளையும் முற்றிலும் பாதங்களுக்கு இறங்கி அவற்றைச் செலுத்திக்கொண்டிருந்தன. விடிந்தால் த
 15. ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் பிரமாண்டமான சரித்திரத் தொடர்-17 கரிகாலனின் பார்வை பதிந்த திக்கை சிவகாமியும் கவனித்தாள். பெரியவரின் இடுப்பில் வாள் இருந்தது. அந்த வாள் சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று என்பதை ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்த வாட்களில் இரண்டை தன் கைகளில் ஏந்தி சாளுக்கிய வீரர்களை நிர்மூலமாக்கியது அவள்தானே..? அதன் அமைப்பும் பிடிப்பும் அவள் அறியாததா என்ன..? அந்தப் பெரியவர் யாராக இருக்கும் என்ற வினா நாடி நரம்பெல்லாம் பரவியது. சுரங்கத்துக்கு எதிர்த் திசையில் புரவியில் வந்த பெரியவருக்கு எப்படி அ
 16. உடல் எனும் இயந்திரம் 39: மூளைக்குள் ஒரு தொலைபேசி நிலையம்! முன் மூளை எனும் பெருமூளையைத் தெரிந்துகொண்டோம். நடுமூளை (Mid brain) என்பது பெருமூளைக்கு அடியிலும், தண்டுவடத்துக்கு மேல்முனையிலும் அமைந்துள்ளது. பின் மூளை (Hind brain) என்பது நடு மூளைக்கு அடியில் ஒளிந்திருக்கும் சிறுமூளை (Cerebellum), மூளைப் பாலம் (Pons), முகுளம் (Medulla oblongata) ஆகிய அமைப்புகள் கொண்ட பகுதி. நடுமூளை, மூளைப் பாலம், முகுளம் ஆகிய பகுதிகள் கொண்டது, ‘மூளைத்தண்டு’ (Brain stem). பெருமூளைக்கு உதவ, அதற்கு அடியில் மூளைத்தண்டுக்கு மேல் முனையில் தலாமஸும் ஹைப்போதலாமஸும் உள்ளன. அதோடு
 17. 113. வா! ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டாற்போல உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி இல்லை. என்றுமே இருந்ததில்லை. என் சன்னியாசத்தின் சாரமான சுதந்திரத்தை அதன் பூரண வடிவில் நான் அனுபவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரே நாளில் அனைத்தையும் யாரோ கலைத்துப் போட்டுவிட்டாற்போல் இருந்தது. நான் ஊருக்கே வந்திருக்கக்கூடாதோ என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அது சரியல்ல என்றும் தோன்றியது. என்னைப் போன்ற இரண்டு வேறு வேறு சன்னியாசிகளை நான் சந்தித்திருக்கிறேன். தற்செயலாக அவர்கள் என் உடன் பிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொள்வது
 18. அருமையான நெத்திலி மீன் பொரியல் அ-அ+ தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் - 1/2 கிலோ, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, சாம்பார் வ
 19. ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...? இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள். அறிகுறிகளை அலட்சியப்படுத்தியவர்கள் இவ்வகையினதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தையும் சந்தித்திருக்கிறார்கள். முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரைய
 20. 112. கிருஷ்ணனாவது வினோத்தால் அந்த நாளை மறக்கவே முடியாது. பூரண ஞானமடைந்த ஒரு யோகியின் எதிரே அமர்ந்திருக்கும் பரவசத்தில் நெடுநேரம் அவன் பேச்சற்று இருந்தான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.அவன் சம நிலைக்கு வரும்வரை அண்ணா அமைதி காத்தான். பிறகு, ‘எனக்கு இடப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன்’ என்று சொன்னான். ‘என்ன செய்தாய்?’ ‘சொன்னேனே. உன் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்திருக்கிறேன்’. ‘இல்லை. என்னால் எதையும் உணர முடியவில்லை. உன்னிடம் இருந்து எந்தத் தகவலும் வரவ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.