Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  85545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. செட்டிநாடு நண்டு வறுவல் என்னென்ன தேவை? சுத்தம் செய்த நண்டு - 8. இடித்த சின்ன வெங்காயம் - 1. பொடியாக நறுக்கிய தக்காளி - 1. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன். கறிவேப்பிலை - 1 கொத்து. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவைக்கு. அரைக்க: தேங்காய்த்துருவல் - 1/4 கப். பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன். கசகசா - 1 டீஸ்பூன். கரம்மசாலா - 1/2 டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - 7. எப்படிச் செய்வது? காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது... என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும். http://www.dinakaran.com
 2. அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி அ-அ+ தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 1 இறால் - கால் கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் கரம் மசால் பொடி - அரை ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் எண்ணெய் - 2 ஸ்பூன் அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும். 5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி. https://www.maalaimalar.com
 3. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 12 ‘‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே! நாகலோகம் அல்லது நாக நாடு என்பது புராணக் கற்பனை அல்லவா..? ரத்தமும் சதையுமான மனிதர்கள் உயிருடன் வாழும் பிரதேசமா..?’’ஆச்சர்யம் விலகாமல் சிவகாமி கேட்டாள். ‘‘ஆம் குழந்தாய்! அந்த உலகத்தைச் சேர்ந்தவன்தான் நான்! பல்லவ குடியின் கிளை மரபினர் மட்டுமல்ல... சோழ அரச பரம்பரையின் வம்சாவளியினரும் அந்த நிலப்பரப்பைத்தான் ஆட்சி செய்கின்றனர். திகைக்க வேண்டாம். கோச்செங்கட் சோழ மன்னனின் சரித்திரம் உணர்த்தும் உண்மை இது...’’ கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தன்னிடம் வினவிய சிவகாமியையும், கேள்வி கேட்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தன்னை இருவரும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ‘‘தமிழக சரித்திரத்தில் மறக்க முடியாத மன்னர்களில் கோச்செங்கட் சோழனும் ஒருவர். அவரது வாழ்க்கையை புலவர் தண்டி வழியாக அறிந்திருப்பீர்கள். என்றாலும் இப்போது அதை நானும் சொல்கிறேன். ஏனெனில் நாம் உரையாடி வரும் விஷயத்துக்கும் அவரது சரித்திரத்துக்கும் தொடர்பிருக்கிறது. முதலில் நீங்கள் அறிந்த வரலாற்றிலிருந்தே தொடங்கலாம். கோச்செங்கட் சோழன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டது என்ன..? ‘சேரன் செங்குட்டுவனால் சோழர் ஒன்பது பேரும் முறியடிக்கப்பட்ட நிலையில், சோழ நாட்டை அபாயமும் வாரிசுப் போட்டியும் சூழ்ந்த சூழலில் பிறந்தவன் கோச்செங்கட் சோழன். இவர் சுபதேவன் என்ற சோழ அரசருக்கும் கமலவதி என்ற அரசிக்கும் பிறந்தவர். நீண்டு அரசாள்வதற்கு உரிய நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதில் தாய் கமலவதி உறுதியுடன் இருந்தார். ஜாதகத்தில் நம்பிக்கை உடையவரான கமலவதி, குறிக்கப்பட்ட நல்ல நேரத்துக்கு முன்பாகவே பிள்ளைப் பேறு நிகழும் சூழல் வந்தபோது ஒரு நாழிகை நேரத்துக்கு குழந்தை வெளிவர முடியாதபடி தன்னைத் தலைகீழாக நிறுத்தி வைக்கச் சொன்னார். ராணியின் பேச்சை மீற முடியாத பணிப்பெண்களும் அவரது கால்களைக் கட்டி அவரைத் தலைகீழாக நிறுத்தினார்கள். அதன் விளைவாக காலம் தாழ்த்தி உலகையே ஆளும் நல்ல நேரத்தில் பிறந்த குழந்தையின் கண்கள் தாமதத்தால் சிவந்திருந்தன. தனது குழந்தையின் சிவந்த கண்களை முதலும் கடைசியுமாகப் பார்த்த தாய் கமலவதி, ‘என் கோச்செங்கணானே...’ என்று அழைத்தார். அதுவே பிறந்த குழந்தையின் பெயராகக் கடைசி வரை நிலைத்தது...’இந்தக் கதையைத்தான் புலவர் தண்டி உங்களிடம் சொல்லியிருப்பார். சரித்திரத்திலும் இதுவே வருங்காலத்தில் பதிவாகப் போகிறது. இவற்றின் நம்பகத்தன்மை குறித்து இங்கு நான் கேள்வி எழுப்பப் போவதில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை. எது எப்படியாக இருந்தாலும் கோச்செங்கட் சோழன் என்ற மன்னர் வாழ்ந்தது உண்மை. சோழ நாட்டை அவர் ஆண்டது சத்தியம். சைவ சமயத்தைக் காக்க 70 சிவன் கோயில்களுக்கு மேல் அவர் கட்டியது நிஜம். அதனாலேயே காலம் கடந்தும் அவர் பெயர் நிலைக்கப் போகிறது என்பது நிச்சயம். எனவே, அப்படியொரு மன்னர் வாழ்ந்தாரா என்ற வினாவைத் தொடுக்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் கேள்விப்பட்ட, உங்களிடம் சொல்லப்பட்ட கோச்செங்கட் சோழன் குறித்த கதையில் மறை பொருளாக ஓர் உண்மை புதைந்திருக்கிறதே... அதைத்தான் சுட்டிக் காட்டி வெளிச்சமிட்டுக் காட்டப் போகிறேன்...’’சொன்ன ஹிரண்ய வர்மர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் பல்வேறு உணர்வுகளும் உணர்ச்சிகளும் தாண்டவமாடின. மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கரிகாலனும் சிவகாமியும் அமைதியாக நின்றார்கள். எதேச்சையாக சிவகாமியின் பக்கம் திரும்பிய கரிகாலன் அவள் ஓரக் கண்ணால் கூட தன்னைப் பார்க்கவில்லை... ஏறிடவும் முற்படவில்லை என்பதைக் கண்டான். வலித்தது. சுரங்கப் படிக்கட்டில் தன்னிடம் ஒண்டிய அவள் தோள்களுக்கு, தான் ஆறுதல் சொல்லாததே இந்த விலகலுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சந்தேகங்கள் பலப்பல எழுந்தாலும் உடனே அவளை அணைந்து ஆறுதல் வழங்க வேண்டுமென்று தோன்றியது. சின்னப் பெண். முகம் தெரியாதவர்கள் எல்லாம் தன் வாழ்க்கையைக் குறித்துப் பேசும்போதும், தன் நடத்தை மீது கேள்விகளை எழுப்பும்போதும் மனம் கொந்தளிக்கவே செய்யும். நம்பிக்கைக்குரியவரின் தோளில் சாய்ந்து, பொங்கும் உணர்வுகள் அடங்கும் வரை அமைதியாக இருக்கவே தோன்றும். இதை எதிர்பார்த்துத்தான் தன்னருகில் வந்திருக்கிறாள். ஆனால், அப்போது, தான் இருந்த மனநிலையில் தன்னையும் அறியாமல் அவளைப் புறக்கணித்துவிட்டோம். அந்தக் காயத்திலிருந்து இப்போது குருதி வழிந்துகொண்டிருக்கிறது. அது வடுவாக மாறுவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும். முடிவுடன் தள்ளி நின்ற கரிகாலன் மெல்ல அவளை நெருங்கி நின்றான். தோள்கள் பட்டும் படாமலும் உரசின. சலனமற்ற பார்வையுடன் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள். நான்கு கண்களும் உரசின. மோதின. அனலைக் கக்கின. துவண்டன. சரிந்தன. சிவகாமியின் நயனங்கள் வெடிக்கும் தருவாயில் ஹிரண்ய வர்மர் அந்த அமைதியைக் கிழித்து சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். ‘‘கோச்செங்கட் சோழன் சிவபிரானின் அருளைப் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். தான் பிறந்த சிதம்பரத்தை மிகச் சிறந்த சிவப்பதியாக மேம்படுத்தினார். தில்லையில் வாழ்ந்த அந்தணர்களைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டார். இதன்பிறகு சோழர்களுக்கு முடி சூட்டும் தகுதி தில்லை அந்தணர்களுக்கு உரிமையானது. அப்பரும் சம்பந்தரும் கோச்செங்கட் சோழனின் கோயில் வளர் நெறியைப் போற்றி உள்ளனர். கோச்செங்கணானின் வாழ்க்கை சோழ அரசின் பதவிக்கான போட்டியில் வென்று அரசராகத் தேர்வான ஒருவரது கதை என்றால், அவரது சமகாலத்தில் வாழ்ந்த சேரரால் தோற்கடிக்கப்பட்ட மற்ற ஒன்பது சோழ இனத்தவர்களுடைய கதை, வாழ்க்கை என்னஆனது..? இந்தப் போட்டியில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் வழி வந்தவர்கள் என்ன ஆனார்கள்..? சோழ வம்சத்தின் அரசராக முடிசூட்ட இயலாதவர்கள், தங்களுக்குரிய அங்கீகாரங்கள் கிடைக்காத நிலையில் புதிய அரச இனங்களைத் தோற்றுவிக்க முயன்றார்களா..? இந்த வினாக்களைத்தான் உங்களுக்கு சரித்திரங்களைக் கற்றுத் தந்தவர்களிடம் தொடுத்திருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையே கோச்செங்கணானின் வரலாற்றுக்குப் பின்னால் இருக்கும் மறை பொருளான சரித்திரம் என்கிறேன்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், இதுவரை, தான் கூறியதை இருவரும் உள்வாங்கட்டும் என சில கணங்கள் அமைதியாக இருந்தார். பின்னர் தொடர்ந்தார்.‘‘இதுவரை நான் சொல்லியவை அனைத்தும் சங்க காலத்தில் நிகழ்ந்தவை. அதன்பிறகு பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள். இந்தப் பல்லவர்கள் யார் என்ற கேள்வி தமிழக வரலாற்றில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னார் வம்சமா அல்லது அன்னார் வழித்தோன்றலா எனக் கேட்டவண்ணம் இருப்பார்கள். இறுதி உண்மை, ‘சாதவாகனப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர், ஆனந்தர், விஷ்ணுகுண்டர், இக்குவாகர், சாலங்காயனார் முதலிய சிற்றரசர்கள் இருந்தனர். சாதவாகனப் பேரரசு சிதைவுற்ற பிறகு பல்லவர்கள் தெற்கே பெயர்ந்து வேங்கடத்தின் தென்பகுதியையும், தமிழகத்தின் வடபகுதியையும் தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்து அதிகாரம் செலுத்தினர்...’ என்பதாக இருக்கும்! அந்தளவுக்கு வேங்கடத்துக்கு அப்பாலும் தமிழக சரித்திரத்துக்குத் தொடர்பிருக்கிறது. ஏனெனில் வட வேங்கடத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் பகுதியும் தமிழர்கள் ஆண்ட பிரதேசங்கள்தான். உதாரணத்துக்கு இப்போதைய சோழர்களையே எடுத்துக் கொள்வோம். பல்லவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள். இந்நிலையில் பழைய சோழ மரபினரில் சிலர் ஆந்திரப் பகுதியில் குடியேறி குறைந்த நிலப்பரப்பை ஆண்டு வருகிறார்கள். ஒருவேளை சோழர்கள் தலைதூக்கி பல்லவர்கள் ஒடுக்கப்பட்டாலும் இதேதான் நிகழும். பல்லவ அரச மரபைச் சேர்ந்த சிலர் வேங்கடத்துக்கு அப்பால் இடம்பெயர்ந்து தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்! ஒரு விஷயம் தெரியுமா..? குகைக் கோயில்களை அமைப்பதில் பல்லவர்களுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சாதவாகனர்கள்தான். கிருஷ்ணா ஆற்றின் கரையில் விநுகொண்டாளைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சாதவாகனர்கள் உண்டவல்லி, பெசவாடா, மொகல்ராசபுரம், சித்தநகரம் ஆகிய இடங்களில் குகைக் கோயில்களை அமைத்தனர். மகேந்திரவர்ம பல்லவரின் வல்லம், மாமண்டூர் குகைக்கோயில்கள் அப்படியே உண்டவல்லியில் விஷ்ணுகுண்டர் அமைத்த குகைக் கோயில்களை அடியொற்றியவை. இப்போது ஒவ்வொரு பல்லவ மன்னர்களாக கோயில் கட்டடக் கலையை மேம்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் இருக்கும் பந்தத்தை அழுத்தமாகப் பதியவைக்கத்தான். அப்போதுதான் நாகலோகம், நாக நாடு குறித்து உங்களுக்குப் புரியும்! கரிகாலா! சிவகாமி! தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் தாய் பீலிவளை நாகர் அரசரான வளைவணனின் மகள் என்பதை அறிவீர்கள். போலவே பல்லவ அரசர் வீரகூர்ச்சவர்மர் நாகர் மகளை மணந்து அரசு பெற்றார்*. இப்படி தமிழகத்துக்கும் நாக நாட்டுக்கும் இருக்கும் தொடர்பைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்த நாக நாடு எங்கிருக்கிறது தெரியுமா..? கடல் கடந்து!** எங்கள் நாட்டுக் கல்வெட்டில் பீமவர்மர், இரணியவர்மர் ஆகிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாரத தேசத்தில் ஓடும் புண்ணிய நதியான கங்கையைப் போலவே அங்கும் ஒரு நதி பாய்கிறது. அதற்கு ‘மாகங்கை’ என்று பெயர். காலப்போக்கில் அப்பெயர் மருவி ‘மீகாங்’ என மாறியது. கடலில் கலக்கும் இந்த மீகாங் நதியின் வழியாக எங்கள் நாட்டுக்குள் எளிதில் நுழையலாம். பல கால்வாய்கள் கடல் வழியில் இருந்து நாட்டின் மையப் பகுதிக்குச் செல்கின்றன. எனவேதான் இந்த நதிக்கரை ஓரத்தில் பூனன்களின் ஆட்சி நிலைபெற்றது. ஆற்றல்மிக்க சந்தையாகவும் உருவெடுத்தது. பல நாட்டுப் பொருட்கள் பூனன் ஆட்சியில் தங்குதடையின்றி கிடைத்தன. இந்த பூனன்களின் ஆட்சிக்கும் தமிழகத்துக்கும், பல்லவர், சோழர்களுக்கும் தொடர்பிருக்கிறது! அந்த சம்பந்தத்தின் ஒரு கண்ணியாக கவுண்டின்யர் என்ற அந்தணர் விளங்குகிறார். இதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இளந்திரையனின் பிறப்புக்கும், கோச்செங்கணான் சோழரின் தாயாதிகளுக்கும் பூனன்களின் வம்சத்துக்கும் இருக்கும் தொடர்பு விளங்கும். இந்த ஆயுதங்களை எப்படி நான் இங்கு சேகரித்தேன்... எந்த வகையில் என் அண்ணனும் இப்போதைய பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மர் சாளுக்கியர்களை எதிர்க்க உதவப் போகிறேன் என்பதும் உங்களுக்குப் புரியும்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், அழியாப் புகழ்பெற்ற சரித்திரத்தை விளக்கத் தொடங்கினார். (தொடரும்) http://www.kungumam.co.in/
 4. முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள் அ-அ+ முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. * மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. * ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். * குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. * முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. * முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு. https://www.maalaimalar.com மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு அ-அ+ பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு. சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு. முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது. கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு. அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம். https://www.maalaimalar.com/
 5. ரத்தமகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் -11 ‘‘கரிகாலா! பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவர் தண்டியையும் என் அண்ணனும் பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மரையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்து விடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தை காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’சொன்ன ஹிரண்ய வர்மர், நிமிர்ந்து குரல் கொடுத்தார். ‘‘சிவகாமி!’’‘‘தந்தையே!’’‘‘உச்சியில் கைக்கு அடக்கமாக ஒரு கல் இருக்கிறதா?’’‘‘ம்...’’‘‘அதை எடுத்துக் கொண்டு ஐந்தடி நகரு... இன்னும் கொஞ்சம்... ஆம். அங்குதான்! வட்டமாகக் குழி ஒன்று தெரிகிறதா?’’‘‘ம்...’’‘‘அதனுள் அந்தக் கல்லை நுழைத்து வலப்பக்கமாக ஐந்து முறை திருகு!’’ஹிரண்ய வர்மர்கட்டளையிட்டபடியே சிவகாமி செய்தாள்.அடுத்த கணம், அவள் நின்றிருந்த இடத்துக்கு நேர் கீழே, கரிகாலனுக்கு சற்றுத் தள்ளி பூமி பிளந்ததுஎவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்த கரிகாலன், தன் முன்னால் நிகழும் சகலத்தையும் ஒரு பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுடன் பேசும்போது ஹிரண்ய வர்மரின் குரலில் வெளிப்பட்ட கோபமும் ஆத்திரமும் சிவகாமியுடன் உரையாடும்போது மறைந்து குழைவுடன் வெளிப்படுவதைக் குறித்துக்கொண்டான். தெளிவாகப் புரிந்தது. சிவகாமியை மையமாக வைத்து, அவள் செய்திருக்கும் சபதத்தை முன்வைத்து, பல்லவர்களைச் சுற்றி வலை பின்னப்படுகிறது. இயக்கும் சூத்திரதாரி யாரென்று தெரியவில்லை. சிவகாமியின் பூர்வீகத்தையும் அவள் செய்திருக்கும் சபதத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே வலையை விரித்து பல்லவர்களை அழிக்க முற்படுபவர்கள் யாரென்று அறியமுடியும். ஒருவேளை கதம்ப இளவரசரும், ஹிரண்ய வர்மரும் சொல்வது போல் சிவகாமியே கூட அந்த சூத்திரதாரியாக இருக்கலாம்.கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நம்பாமல் தீர விசாரித்தே முடிவுக்கு வரவேண்டும். அதன்பிறகே பல்லவர்களை அழிக்க முற்படும் அந்த மர்ம நபரை வீழ்த்த வேண்டும். அது தன் மனதைக் கொள்ளையடித்திருக்கும் சிவகாமியாகவே இருந்தாலும் சரி...கரிகாலன் இந்த முடிவுக்கு வரவும் பாறை மீதிருந்து சிவகாமி இறங்கி வரவும் சரியாக இருந்தது. ‘‘வாருங்கள்... கர்ப்பக்கிரகத்தினுள் நுழையலாம்!’’அழைத்த ஹிரண்ய வர்மர், தன் முன்னால் கீழ்நோக்கி விரிந்த படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து இறங்க முற்பட்ட கரிகாலனின் தோளை உரசியபடி சிவகாமி இறங்கத் தொடங்கினாள்.தன் தோளை வரவேற்க வேண்டிய, தைரியம் சொல்லி அரவணைக்க வேண்டிய கரிகாலனின் தோள், உணர்ச்சி ஏதுமின்றி அருகிலிருக்கும் பாறை போல் சலனமற்று இருந்ததை கணத்தில் சிவகாமி உணர்ந்தாள். பாறை மீது, தான் ஏறியிருந்த சமயத்தில், தன் சிறிய தந்தை ஏதேனும் கூறியிருக்க வேண்டும்... அதுவும் தன்னைப் பற்றி. அதனால்தான் கரிகாலன் கடினப்பட்டிருக்கிறான். அவள் கண்களில் அதுவரை பூத்திருந்த இனம்புரியாத உணர்வு மெல்ல மெல்ல வடிந்தது. அவனைப் போலவே அவளும் உள்ளுக்குள் இறுகினாள். ஓரடி தள்ளி நகர்ந்தாள்.சிவகாமிக்குள் நிகழ்ந்த மாற்றத்தை கரிகாலனும் உணர்ந்தான். இப்போது அமைதி காப்பதே நல்லது என்பதை அவன் புத்தி உணர்த்தியது. அதற்குக் கட்டுப்பட்டு அவளை முன்னால் நடக்கும்படி சைகை செய்தான்.மறுப்பு சொல்லாமல் ஹிரண்ய வர்மரைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினாள் சிவகாமி. முப்பது படிக்கட்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக அமைதியாக இறங்கினார்கள். சமதளத்தை அவர்கள் அடைந்ததும் சற்று நிதானித்தார்கள். மேலிருந்து வந்த வெளிச்சம் தவிர வேறு ஒளி அங்கில்லை. இதற்குள் ஹிரண்ய வர்மர் முன்னோக்கி நகர்ந்து அங்கிருந்த கல்தூணை அடைந்தார். அதனுள்ளிருந்த பொறியைத் திருகினார்.அடுத்த கணம் அவர்கள் இறங்கி வந்த பாதை மூடிக்கொண்டது. இருள் சூழ்ந்தது. இருளின் ஒளி பழக்கப்படும் வரை மூவரும் அசையாமல் நின்றார்கள். மெல்ல மெல்ல வானில் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அவர்கள் கண் முன்னால் ஒளிக்கற்றைகள் பூக்கத் தொடங்கின. அவை அனைத்தும் வாளிலிருந்து வெளிப்பட்ட ஒளிகள் என்பதும், வாட்களை ஒளிர வைத்தது ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என்பதும் கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் புரிய சில கணங்களாகின.‘‘தந்தையே..!’’ தன்னையும் மறந்து சிவகாமி கூவினாள். ‘‘எத்தனை வாட்கள்... ஆயிரக்கணக்கில் இருக்கும்போல் தோன்றுகிறதே...’’‘‘ஏன் லட்சங்கள் என்று சொல்லத் தயங்குகிறாய்?’’ சிரித்தபடி ஹிரண்ய வர்மர் கேட்டார். ‘‘எப்படி இது சாத்தியமாயிற்று தந்தையே?’’பிரமிப்புடன் கேட்டபடியே வாட்களின் பக்கம் சென்ற சிவகாமியை சடாரென்று கரிகாலன் இழுத்தான். ‘‘அருகில் செல்லாதே! இவை அனைத்தும் கொடிய நாகங்களின் விஷத்தில் ஊறியவை. சின்ன கீறல் கூட உயிரை மாய்த்துவிடும்...’’‘‘உண்மையாகவா..?’’ சிவகாமியின் குரலில் திகைப்பு வழிந்தது.‘‘சத்தியமாக. தமிழகத்தில் மட்டுமல்ல... சாளுக்கியர்கள் உட்பட இப்பரப்பில் இருக்கும் எந்த தேசத்திலும் இப்படிப்பட்ட வாட்கள் தயாராவதில்லை. ஹிரண்ய வர்மர் ஆட்சி செய்யும் பகுதியில்தான் சர்வ சாதாரணமாக இந்த ஆயுதங்களை உருவாக்க முடியும்...’’சொன்ன கரிகாலனையும், அதை ஆமோதித்தபடி பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹிரண்ய வர்மரையும் மாறி மாறி சிவகாமி பார்த்தாள். அடக்கி வைக்கப்பட்டிருந்த வினா, அவளையும் அறியாமல் வெளிப்பட்டது. ‘‘தந்தையின் நாடு எங்கிருக்கிறது..?’’‘‘கடல் கடந்து!’’ கரிகாலன் பதிலளித்தான். ‘‘கடல் கடந்தா... பல்லவர்கள் அங்குள்ள நிலப்பரப்பையுமா ஆள்கிறார்கள்..?’’‘‘சின்ன திருத்தம் மகளே!’’ அதுவரை அமைதியாக இருந்த ஹிரண்ய வர்மர் வாய் திறந்தார்.‘‘என்ன தந்தையே..?’’‘‘பல்லவர்கள் என்பதற்கு பதில் தமிழர்கள் என்று சொல்!’’‘‘விளங்கவில்லை தந்தையே..?’’‘‘உன் பிழையல்ல சிவகாமி... வரலாற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யாத தமிழர்களின் குற்றம் அது. அதனால்தான் ஆய கலைகளிலும் வல்லவரான புலவர் தண்டியின் ரகசிய மாணவியாக நீ இருந்தபோதும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறாய்...’’‘‘புலவரை குற்றம்சாட்டுகிறீர்களா தந்தையே..?’’‘‘இல்லை! உன் அறியாமையைச் சுட்டிக்காட்டுகிறேன்!’’‘‘சற்று விளக்க முடியுமா?’’‘‘புலவர் தண்டி ஒரு சக்தி உபாசகர் என்பதை நீ அறிவாய் அல்லவா..?’’‘‘ஆம்!’’ ‘‘சாக்தர்களுக்கு லலிதா சகஸ்ரநாமம்தான் பிரதானம்...’’‘‘ம்...’’‘‘அந்த லலிதா சகஸ்ரநாமத்தை அகத்தியருக்கு உபதேசித்தவர் ஹயக்ரீவர்!’’‘‘புலவர் சொல்லியிருக்கிறார் தந்தையே...’’‘‘அவர் சொல்லாமல் விட்டதில்தான் உனது அறியாமையை நான் சுட்டிக் காட்டியதற்கான விஷயம் அடங்கியிருக்கிறது சிவகாமி...’’‘‘...’’‘‘எடுத்ததுமே அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை. லலிதா பரமேஸ்வரியின் அருமை பெருமைகளை கும்ப முனிக்கு அவர் விளக்கி வந்தபோது... போகிறபோக்கில், ‘அம்பாளின் ஆயிரம் நாமங்கள்’ என்றார். உடனே ஹயக்ரீவரை இடைமறித்த அகத்தியர், ‘ஆயிரம் நாமங்களா..? அதென்ன...’ என்று கேட்டார். இதன் பிறகே, தன் முன் மாணவராக கைகட்டி அமர்ந்திருந்த அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசித்தார். இப்போது சூட்சுமம் புரிகிறதா சிவகாமி...’’ ‘‘இல்லை தந்தையே!’’‘‘மறைபொருளாக இருக்கும் ரகசியத்தை எடுத்ததுமே எந்த குருவும் தன் மாணவர்களுக்குக் கற்றுத்தரமாட்டார். மாணவர்களுக்குள் தேடல் இருக்க வேண்டும். கற்றுத் தரும்போது உற்றுக் கவனித்து வினாக்களைத் தொடுக்க வேண்டும். அப்போதுதான் பாத்திரமறிந்து குரு கல்வி என்னும் பிச்சையை இடுவார். அப்படி ஹயக்ரீவரிடம் இடைமறித்து அகத்தியர் கேள்வி கேட்டதால்தான் லலிதா சகஸ்ரநாமம் உலகுக்கே கிடைத்தது...’’‘‘அதுபோல் புலவரிடம் நான் கேட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா..?’’‘‘ஆம் சிவகாமி. சங்ககால சோழர்களுக்குள் நடந்த வாரிசுரிமைப் போட்டி குறித்த பாடங்கள் வரும்போது புலவரை இடைமறித்து நீ வினா தொடுத்திருக்க வேண்டும்!’’ ‘‘தவறுதான் தந்தையே. இப்போது கேட்கிறேன். கடல் கடந்த நாடுகளிலும் தமிழர்கள் ஆட்சி செய்கிறார்களா..?’’‘‘ஆம்! அதற்கு அத்தாட்சியாக நானே உன் முன்னால் நிற்கிறேன்!’’ நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தமிழக சரித்திரத்துக்குள் அடங்கிய தன் வரலாற்றை விளக்கத் தொடங்கினார். ‘‘கேள் மகளே! நீயும்தான் கரிகாலா... தமிழர்களின் மகோன்னதமான சரித்திரத்தை இருவரும் கேளுங்கள்...’’ உணர்ச்சிப் பிழம்புடன் ஹிரண்ய வர்மர் சொல்லத் தொடங்கினார். செவிக்குக் கிடைத்த உணவை எவ்வித குறுக்கிடலும் செய்யாமல் கரிகாலனும் சிவகாமியும் பருகத் தொடங்கினார்கள்.‘‘மிக மிகப் பழமையான நிலப்பரப்புகளில் தொண்டை மண்டலமும் ஒன்று. சோழர்களும், பல்லவர்களும், ஆதொண்டச் சக்கரவர்த்தியும் ஆட்சி செய்வதற்கு முன்பே தொண்டை மண்டலம் இருந்திருக்கிறது. அப்போது அதன் பெயர், ‘குறும்பர் நிலம்’. குறும்பர் இன மக்கள் தங்கள் நிலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்து வந்தனர். காவிரிப்பூம்பட்டினத்து சோழ வணிகர்களுடன் கடல் வாணிகம் நடத்தி வந்தனர். சோழப் பரம்பரையின் ஒப்பும் உயர்வும் அற்ற கரிகாலச் சோழன், குறும்பர் நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் இப்பகுதியை தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு கடல்வழி வந்த நாகர் மகனான இளந்திரையன் ஆண்டதால் இப்பகுதி ‘தொண்டை மண்டலம்’ எனப் பெயர் பெற்றது.இதையெல்லாம் இலக்கியங்களில் நீங்கள் இருவரும் படித்திருப்பீர்கள். போலவே, சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்ததையும், அதில் வென்று கரிகாலன் மன்னரானார் என்பதையும். இந்தப் போட்டியில் கரிகாலனைக் கொல்ல சதிகள் அரங்கேறியிருக்கின்றன. கரிகாலன் தன் தாயோடு தங்கியிருந்தபோது அந்த இடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது தன் மாமன் இரும்பிடத்தலையாரால் அவர் காப்பாற்றப்பட்டார். என்றாலும் நெருப்பில் அவர் கால் கருகிவிட்டது. அதனாலேயே அவருக்கு கரிகாலன் என்ற பெயர் நிலைத்தது... என்பதையெல்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால், மறைபொருளாக இதனுள் அடங்கிய செய்தியை கவனிக்கத் தவறியிருப்பீர்கள். அதில் பிரதானமானது சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்தது என்பது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சோழர்கள் சங்க காலத்தில் ஆட்சி உரிமை கோரியிருக்கிறார்கள் என்பது. இதில் மன்னராகப் பொறுப்பேற்றவர்களின் பெயர் மட்டுமே வரலாற்றில் பதிந்திருக்கிறது. எனில், மற்றவர்கள் என்ன ஆனார்கள்..? எங்கு சென்றார்கள்..?இந்தக் கேள்வியை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இப்போது நாம் தவறவிட்ட அடுத்த செய்திக்கு நகர்வோம். அதுதான் தொண்டைமான் இளந்திரையன் கதை! புகார் நகரத்தை நெடுமுடிக்கிள்ளி ஆட்சி செய்து வந்தபோது, ஒருநாள் உலா சென்றான். அப்போது நாக நாட்டைச் சேர்ந்த அரசன் வளைவணனின் மகளானபீலிவளையைக் கண்டான். காதல் கொண்டான். இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். ஒரு திங்கள் சதி பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.அவர்களது அன்புக்கு அடையாளமாக பீலிவளை கருவுற்றாள். திடீரென்று ஒருநாள் நெடுமுடிக்கிள்ளியிடம் எதுவும் சொல்லாமல் அவள் மறைந்துவிட்டாள்.காதலியைப் பிரிந்து நெடுமுடிக்கிள்ளி தவித்தான். யாருக்கும் எந்த விபரமும் தெரியவில்லை. தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு புகாரில் அவன் வாழ ஆரம்பித்தான். இந்நிலையில் நாகர் நாட்டிலிருந்த தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்றுவிட்ட பீலிவளை உரிய காலத்தில் அழகான ஆண் மகனை ஈன்றாள். ஒருநாள் மணிபல்லவத் தீவில் இருந்த புத்த பீடிகைக்கு வழிபட குழந்தையுடன் சென்ற பீலிவளை, அங்கு புகார் நகரத்தைச் சேர்ந்த பெரு வணிகரான கம்பளச் செட்டியைச் சந்தித்தாள். தன் அருமை மகனைப் பட்டுத் துணியில் வைத்து, ஆதொண்டைக் கொடியால் சுற்றி, ஒரு மணிப்பேழையில் வைத்து, ‘உங்கள் மன்னரிடம் இவனை ஒப்படையுங்கள்’ என்று கொடுத்தாள்.குழந்தையுடன் புகாருக்கு கம்பளச் செட்டி புறப்பட்டார். நள்ளிரவில் அலைகள் மோதி அவரது கலம் கவிழ்ந்தது. பயணம் செய்தவர்கள் அனைவரும் பரதவர்களால் காப்பாற்றப்பட்டனர். ஆனால், குழந்தை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. செய்தி அறிந்த நெடுமுடிக்கிள்ளி, துயருற்றான். தன் மகனை நினைத்து ஏங்கினான். இதற்கிடையில் மணிப்பேழையில் ஆதொண்டைக் கொடியால் சுற்றப்பட்டிருந்த குழந்தை கடலில் மிதந்து ஓர் இடத்தில் கரையை அடைந்தது. பின்னர், தான் அடைந்த இடத்தை அக்குழந்தை வளர்ந்து ஆளானதும் ஆட்சி செய்தது. அதுதான் ‘தொண்டை மண்டலம்!’ அந்தக் குழந்தைதான் இளந்திரையன்.‘மணிமேகலை’யில் இந்தக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். இதில் பீலிவளையின் நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே நாக நாடு... அதுதான் மறைபொருள் செய்தி! அதனுள்தான் தமிழகத்தின் மகத்தான சரித்திரம் புதையுண்டிருக்கிறது. ஆம். நாகலோகம் அல்லது நாகநாடு என்பது புராணக் கதை அல்ல; கற்பனையல்ல! அது ரத்தமும் சதையுமான மனிதர்கள் வசிக்கும் ஓர் நாடு!’’கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தொடர்ந்தார். அவர் சொல்லச் சொல்ல கரிகாலனின் கண்களும் சிவகாமியின் விழிகளும் விரிந்தன. (தொடரும்) http://www.kungumam.co.in
 6. வெந்தயக்குழம்பு... தனி ருசி! அ+ அ- எந்த வேலையையும் ஈஸியா செய்றதுக்கு வழி என்னன்னு தெரியுமா என்று அம்மா அடிக்கடி கேட்பார். அந்த வழி. அந்த வேலையை ரசித்து ரசித்துச் செய்யவேண்டும் என்பார். சமையல் என்பதும் கலையே! அற்புதமானதொரு வேலைதான்! இந்த வேலையை எல்லா வீட்டுச் சமையலறையிலும் அம்மாக்களோ, மனைவிமார்களோ, சகோதரிகளோ நமக்காக, ரசித்து ரசித்து, ஆத்மார்த்தமாகச் சமைப்பார்கள். அப்படி முழுஈடுபாட்டுடன் செய்தால், சமைப்பது எளிது. பொதுவாகவே இதில் இன்னும் எளிதானது... வெந்தயக்குழம்பு! குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்றெல்லாம் பண்ணுவார்கள். இந்த வெந்தயக்குழம்பு, எல்லா வீடுகளிலும் பண்ணுவதில்லை. ஏன் இப்படி வெந்தயத்தை விரோத மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள்? உண்மையில், வெந்தயக்குழம்பு எளிமையானது. சுவையானது. உடலையும் குளிர்ச்சிப்படுத்தக்கூடியது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மரகதம் பாட்டி, ‘வெந்தயக்குழம்பு பிரமாதம். பேச்சிலர்ஸ் கூட ஈஸியாப் பண்ணி இறக்கிடலாம்’ என்று விளக்கினார். என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு பூண்டு - எட்டு அல்லது பத்து பல் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன் புளி - ஒரு கோலிக்குண்டு அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு இப்படித்தான் செய்யணும்! முதலில் புளியை நன்றாக ஊறவைத்து கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்தச் சக்கையை நீக்கிவிடுங்கள். இதையடுத்து வெந்தயத்தை வெறுமனே வாணலியில் வறுத்து நைசாக பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் நன்றாக எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்களை அதில் இட்டு, நன்றாகத் தாளித்துக்கொள்ளவேண்டும். சின்ன வெங்காயத்தை உரித்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்றாக வதக்குங்கள். பிறகு, புளித்தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி , மல்லிப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து போதுமான நீர் விட்டு கொதிக்கவிடுங்கள். குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். அப்புறம் என்ன... ஒருவித புதிய சுவையுடன் வெந்தயக்குழம்பு தயாராகிவிட்டது. நீங்கள் சாப்பிடவேண்டியதுதான் பாக்கி! சுவைக்கும் சுவையாச்சு. உடம்பின் உஷ்ணத்தையும் தணிக்கவும் செய்யும். சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு இறக்கிடலாம்... வெந்தயக்குழம்பு! https://www.kamadenu.in/news/cooking/3897-vendhyakuzhambu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category
 7. தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய் அ-அ+ வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - பத்து, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, பெருங்காயம் - தேவையான அளவு, வெல்லம் - நெல்லிக்காய் அளவு, கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை : வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும். மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும். ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும். சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி. குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம். https://www.maalaimalar.com
 8. வாழை இலை ஃபிஷ் ஃப்ரை என்னென்ன தேவை? மீனை பொரிக்க... நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம், லெமன் ஜூஸ் - சிறிது, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு. கிரேவி செய்ய... பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1/2 கப், டொமேட்டோ சாஸ் - 1/4 கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2½ டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - சிறிது, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. வாழை இலையில் வைத்து மடிக்க... பெரிய வாழை இலை - 1, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? மீன் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து மீனில் பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மொறு மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி டொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். வாழை இலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வாழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். http://www.kungumam.co.in/
 9. ரத்தமகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 10 ‘‘சண்டையிட வரவில்லை. சிவகாமியின் சபதம் குறித்து பேசவே வந்திருக்கிறேன்!’’ சொன்ன அந்த மனிதன் சிவகாமியின் கழுத்தில் பதித்திருந்த தன் குறுவாளை எடுத்துவிட்டு அவளை கரிகாலனை நோக்கித் தள்ளினான். தனது வாள் வீச்சை அநாவசியமாகத் தடுத்து நிறுத்திவிட்டு எதுவும் நடக்காததுபோல் தனது சபதம் குறித்து அந்த மனிதன் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், மிதமான வேகத்தில் அவன் தள்ளியதாலும், பரந்து விரிந்திருந்த கரிகாலனின் மார்பில் வந்து சிவகாமி விழுந்தாள். என்றாலும் சமாளித்து அவன் தோளை உரசியபடி அருகில் நின்றாள். பலவித உணர்ச்சிகளும் கேள்விகளும் அலைக்கழித்ததால் கரிகாலன் அவளைத் தாங்கிப் பிடிக்கவுமில்லை. தோளோடு உரசிய அவள் தோளுக்கு ஆறுதலோ செய்தியோ சொல்லவும் முற்படவில்லை. தன் முன்னால் அலட்சியமாக நின்றிருந்த அந்த மனிதனை உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசினான். நாற்பது வயதிருக்கும். விடாமல் உடற்பயிற்சி செய்பவன் என்பதற்கு அறிகுறியாக அவன் உடல் உருண்டு திரண்டு கட்டுக்கோப்புடன் காணப்பட்டது. வயிறு ஒட்டியிருந்தது. அது பசியினால் அல்ல என்பதைக் குறித்துக் கொண்டான். அதிக உயரமில்லை. அதேநேரம் உயரம் குறைவுமில்லை. கை மணிக்கட்டில் வாள் காயங்கள் தென்பட்டன. அக்காயங்கள் வேறு இடங்களில் படராததால் வாள் வீச்சில் அந்த மனிதன் சளைத்தவனில்லை என்பது புரிந்தது. கூர்மையான நாசி. நாடி, நரம்பை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை. முகம் மட்டும் எங்கோ பார்த்தது போலவும் நெருக்கமாகவும் தோன்றியது. பார்வையை இடுக்கி அம்முகத்தை கரிகாலன் உள்வாங்கினான். மனதுக்குள் பதிந்திருந்த பல்வேறு முகங்களின் பிம்பங்களோடு அதை சரசரவென ஒப்பிட்டான். சட்டென்று அவன் கண்கள் விரிந்தன. இந்த மனிதன்... தவறு... ஒருமையில் விளிக்கக் கூடாது. இந்த மனிதர்... அவரா..? கரிகாலன் தன்னை இனம் கண்டுகொண்டான் என்பதை உணர்ந்த அந்த மனிதரும் ஆமோதிக்கும் வகையில் கண் சிமிட்டினார். கம்பீரமும் எதிர்க்கும் உணர்வும் மறைந்து தன் உடல் முழுக்க மரியாதை பரவுவதையும் அது தன் உடல்மொழியில் வெளிப்படுவதையும் அறிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவ்வுணர்வுக்குக் கீழ்ப்படிந்து தன் முன்னால் நிற்பவருக்கு வணக்கம் தெரிவிக்க அவன் முற்பட்டபோது சிவகாமியின் குரல் அச்சூழலை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றது. ‘‘யார் நீ? எனது சபதம் குறித்து உனக்கு என்ன தெரியும்..?’’ ‘‘பரவாயில்லையே... கரிகாலனுடன் இணைந்து இயைந்து பயணப்பட்டதில் பக்குவப்பட்டு விட்டாயே..?’’ முகம் மலர அந்த மனிதர் புன்னகைத்தார். கரிகாலன் மெளனமாக இருப்பதைக் கவனித்துவிட்டு குழப்பத்துடன் தானே உரையாடலைத் தொடர்ந்தாள். ‘‘எதைக் குறிப்பிடுகிறாய்?’’ ‘‘மல்லைக் கடலுக்கும் இந்த வனத்துக்குமான இடைப்பட்ட தூரத்தை!’’ தடங்கலின்றி அந்த மனிதர் பதிலளித்தார். ‘‘என்ன சொல்கிறாய்..?’’ சிவகாமியின் குரலில் மெல்ல மெல்ல கோபம் படர ஆரம்பித்தது. ‘‘உண்மையை!’’ அலட்சியமாக விடையளித்த அந்த மனிதர் நிதானமாக சிவகாமியை நெருங்கினார். ‘‘மல்லைக் கடலில் கரிகாலனுக்குச் சமமாக மூழ்கியும் மூழ்காமலும்; நீந்தியும் நீந்தாமலும் ஒரு மனிதனை நெருங்கினாய். வாள் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாய். அப்போது அந்த மனிதனும் உனது சபதத்தைக் குறித்துத்தான் குறிப்பிட்டான். உன்னை நம்ப வேண்டாமென்றும் கரிகாலனிடம் அழுத்திச் சொன்னான். பல்லவ அரச குடும்பத்தை வீழ்த்த வந்திருக்கும் கோடரி என உன்னைச் சுட்டினான். அப்போது நீ கோபம் கொண்டு உன் வாளை உயர்த்தி அவனைத் தாக்க முற்பட்டாய். கரிகாலன் அதைத் தடுத்தான்!’’ நேரில் பார்த்தது போல் நடந்த சம்பவங்களை அப்படியே விவரித்த அந்த மனிதர் கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தபடியே தொடர்ந்தார். ‘‘கதம்ப இளவரசரை உனக்கு அறிமுகப்படுத்தினான்! அதே நிகழ்வுதான் இங்கும் அரங்கேறியிருக்கிறது. என்ன... உனது சபதத்தை மட்டுமே நான் குறிப்பிட்டேன். மற்றபடி பல்லவ அரச குடும்பத்தைச் சிதைக்க வந்தவளாக உன்னைக் கருதவில்லை! ஒருவேளை அதனால்தான் கதம்ப இளவரசன் இரவிவர்மனுக்குக் கொடுத்த வாள் மரியாதையை இப்போது எனக்கு நீ வழங்கவில்லையோ என்னவோ! என்றாலும் நீ பக்குவப்பட்டிருப்பதாக நான் நினைப்பது பொய்யாக இருந்தாலும் அதில் எனக்கு ஆனந்தமிருக்கிறது! எனவே அப்படியே கருதிக் கொள்கிறேன்! என்ன கரிகாலா, நான் சொல்வது சரிதானே? சரியாகத்தான் இருக்கும். சற்று நேரத்துக்கு முன் நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை என் கண்ணால் கண்டேனே! பக்குவப்படுத்தித்தான் இருக்கிறாய்! உன் தீண்டல் வாள் மகளைக் குழைத்து வைத்திருக்கிறது!’’ வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதரை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் சிவகாமி தன் பார்வையைத் தாழ்த்தினாள். எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆனந்தத்தை அல்லவா சற்று நேரத்துக்கு முன் கரிகாலனுடன் அனுபவித்தாள்..? அது அவளுக்கு மட்டுமே உரியதல்லவா..? அதைப்பற்றி முன்பின் அறியாத ஒரு மனிதர் அவளிடமே விவரிக்கும்போது அர்த்தங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுதானே பூக்கும்? சிவகாமிக்குள்ளும் அதுவேதான் பூத்தது. குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. இதற்கு மேலும், தான் அமைதியாக இருப்பது அழகல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான். எனவே எதிரிலிருந்த மனிதரை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். ‘‘இவர் உன்னை ஒருமையில் அழைத்ததற்காக வருத்தப்படாதே சிவகாமி. அந்த உரிமை இவருக்கு இருக்கிறது!’’ ‘‘என்ன உரிமை?’’ சட்டென பார்வையை உயர்த்தி கரிகாலனை ஊடுருவினாள். ‘‘தகப்பன் உரிமை!’’கரிகாலன் இப்படிச் சொன்னதுமே சிவகாமியின் உணர்வுகள் தாண்டவமாடின. ‘‘புரியவில்லை...’’‘‘பல்லவ மன்னர் உன்னைத் தனது மகளாகக் கருதுகிறார் அல்லவா?’’ ‘‘ஆம். அவர் என் தந்தைக்குச் சமமானவர்..!’’‘‘எனில், இவர் உன் சிறிய தந்தை!’’‘‘என்ன..?’’‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் சித்தப்பா மகன்தான் இவர்!’’ என்று சொன்ன கரிகாலன் முறைப்படி அவரை வணங்கினான். அதை ஏற்று தலையசைத்த அந்த மனிதர் சிவகாமியை வாஞ்சையுடன் பார்த்தார். ‘‘அடியேனை ஹிரண்ய வர்மன் என்பார்கள்! ஹிரண்யன் என என்னை பெயர் சொல்லியும் நீ அழைக்கலாம்! தந்தையை பெயர் சொல்லி மகள் அழைப்பது உலக வழக்கம்தானே!’’ மறுகணம் முன்னால் வந்து ஹிரண்ய வர்மரின் காலைத் தொட்டு சிவகாமி வணங்கினாள். ‘‘மனம் போல் மாங்கல்யம் அமையட்டும் மகளே! உனக்கு ஏற்ற மணமகனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்!’’ தோளைத் தொட்டு அவளை நிமிர்த்தினார் ஹிரண்ய வர்மர். ‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும் கரிகாலனை விட்டுவிடாதே! உன்னைப்பற்றிய சந்தேகங்களை கதம்ப இளவரசன் இரவிவர்மன் கிளப்பியபிறகும் புலவர் தண்டியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உன்னிடம் எதையும் விசாரிக்காமல், முழுமையாக நம்புகிறானே... இப்படி ஒருவன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்! பரஸ்பர நம்பிக்கைதான் வாழ்க்கைப் பயணத்தை எல்லா சிரமங்களிலும் கடக்க வைக்கும்! இவன் உன்னை தன் கைகளில் ஏந்திக் கடக்கவும் வைப்பான்; உன் சபதம் நிறைவேறவும் துணை புரிவான்!’’ சிறிய தந்தை சொல்லச் சொல்ல தன் கன்னங்கள் சூடாவதை சிவகாமி உணர்ந்தாள். ஓரக் கண்ணால் கரிகாலனைப் பார்த்துவிட்டு நிலத்தை அளந்தாள். கண்கொள்ளாக் காட்சியாக ஹிரண்ய வர்மருக்கு இது அமைந்தது. மகளின் மலர்ந்த வெட்கம் எப்போதும் தந்தையை மகிழ்விக்கும்! ‘‘உங்கள் இருவரது வீரத்தை அளவிடத்தான் சற்று முன் என் வீரர்களை வைத்து நாடகமாடினேன். எதிர்பார்த்ததுக்கு மேலாக இருவரும் அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இனி நாம் காலத்தைக் கடத்த வேண்டாம். வாருங்கள்..!’’‘‘எங்கு மன்னா!’’ என்று கரிகாலன் கேட்கவில்லை. மாறாக சிவகாமி ‘‘எங்கு தந்தையே!’’ என்று கேட்டாள். ‘‘ஆயுதச் சாலைக்கு மகளே! கரிகாலா... நாம் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடந்திருக்கிறது. காஞ்சியும் பல்லவ நாடும் இப்போது சாளுக்கியர்களின் வசம். போருக்கு இன்னும் சில திங்களே இருக்கின்றன. அதற்குள் பல்லவ இளவலை நீங்கள் அழைத்து வர வேண்டும். இடையில் உங்களைச் சந்தித்து ஆயுதச் சாலை இருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டும்படி புலவர் தண்டி உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான் இங்கு வந்தேன். புரவிகள் வேண்டாம். நடந்தே செல்லலாம் வாருங்கள்...’’ என்றபடி ஹிரண்ய வர்மர் வனத்துக்குள் புகுந்தார். ‘‘இதற்காகவா கடல் கடந்து உங்கள் நாட்டிலிருந்து வந்தீர்கள்?’’ சிவகாமியுடன் அவரைப் பின்தொடர்ந்தபடி கரிகாலன் கேட்டான். ‘‘அண்ணனுக்கு உதவ வேண்டியது என் கடமையல்லவா? நரசிம்ம வர்மர் வாதாபியைத் தீக்கரையாக்கியபின் சாளுக்கியர்கள் எப்போது வேண்டுமானாலும் பழிக்குப் பழி வாங்க முற்படுவார்கள் என்று தெரியும். அதை எதிர்கொள்ள வேண்டுமென்று வணிகர்கள் வழியாக அவ்வப்போது ஆயுதங்களை அனுப்பி மறைவிடத்தில் சேகரித்து வருகிறேன்...’’ அதன்பிறகு மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெளனமாக நடந்தார்கள். அரை நாழிகை பயணத்துக்குப் பின் மலையடிவாரத்தை அடைந்தார்கள். ‘‘இதற்குள்தான் ஆயுதங்கள் இருக்கின்றன!’’ கம்பீரமாக அறிவித்தார் ஹிரண்ய வர்மர். ‘‘மலைக்குள்ளா..?’’ கரிகாலன் புருவத்தை உயர்த்தினான். ‘‘ஆம். மலையின் கர்ப்பத்தில் பாதுகாப்பாகக் குடிகொண்டிருக்கிறது!’’‘‘சுரங்கத்தின் திறவுகோல் எங்கிருக்கிறது தந்தையே!’’ பரபரப்புடன் சிவகாமி கேட்டாள். ‘‘புத்திசாலிப் பெண்!’’ மெச்சிய ஹிரண்ய வர்மர், ஆளுயரப் பாறைகளுக்கு மேல் இருந்த உச்சியை தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். ‘‘அங்கு!’’மறுகணம் மடமடவென்று பாறை மீது சிவகாமி ஏறத் தொடங்கினாள். கரிகாலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மாலைச் சூரியன் அவளை ஒளியால் நீராட வைத்தான். இதனைத் தொடர்ந்து செண்பக மலர் இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழுவழுப்பையும் பெற்று பொன் அவிழ்ந்து கொட்டுவது போல் அவள் மேனி தங்கத் தகடாகப் பளபளத்தது. அந்தக் கணத்தில் அவள் சரீரமே ஸ்ரீசக்கரமாக ஜொலித்தது. பார்வை ஊசியால் மடமடவென்று பிசிறின்றி அவள் மேனியென்னும் தகட்டில் ஸ்ரீசக்கரத்தை வரைய ஆரம்பித்தான். கால்களை உயர்த்தி உயர்த்தி அவள் ஏறியபோது பிரஹ்ம ரந்தரம், பிந்துஸ்தானமாகவும்; சிரசு, திரிகோணமாகவும்; நெற்றி, அஷ்டகோணமாகவும்; புருவ மத்தி, அந்தர்த்தசாரமாகவும்; கழுத்து, பஹிர்த்தசாரமாகவும்; ஸ்தனங்கள், மந்வச்ரமாகவும்; நாபி, அஷ்டதள பத்மமாகவும்; இடுப்பு, ஷோடசதள பத்மமாகவும்; தொடைகள், விருத்தத்ரயமாகவும்; பாதங்கள், பூபுரமாகவும் மாறி முழுமை பெற்றன. ‘‘பார்வையைத் திருப்பாமல் சொல்வதை மட்டும் கேள் கரிகாலா!’’ஹிரண்ய வர்மரின் குரல் அவனை நடப்புக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. ‘‘சொல்லுங்கள் மன்னா!’’ ‘‘புலவர் தண்டியிடம் பாடம் கற்றதால் நீயும் சாக்த உபாசகனாகி இருக்கிறாய்! அதனாலேயே மனம் கவர்ந்த பெண்ணின் உடல், ஸ்ரீசக்கரமாக உனக்குக் காட்சியளிக்கிறது!’’ ‘‘இதை தவறென்று சொல்கிறீர்களா?’’‘‘ஆண் / பெண் விஷயத்தில் சரி / தவறு என மூன்றாம் மனிதர் கருத்து சொல்ல முடியாது. தன்னை ஆவாஹனம் செய்யச் சொல்லி ஆணிடம் தன்னையே ஒரு பெண் ஒப்படைத்தபின் தந்தையானாலும் அவன் அந்நியன்தான்...’’‘‘மன்னா!’’‘‘சொல்ல வந்தது வேறு. சிவகாமி விஷயத்தில் புலவர் தண்டி சொல்வதை எந்தளவுக்கு நம்புகிறாயோ அதே அளவுக்கு கதம்ப இளவரசன் இரவிவர்மன் சொன்னதையும் நம்பு!’’ ‘‘...’’ ‘‘பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவரையும் என்அண்ணனையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்துவிடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தைக் காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’ (தொடரும்) http://www.kungumam.co.in/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.