Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  85545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. சூப்பரான ஸ்நாக்ஸ் பாசிப்பருப்பு பக்கோடா அ-அ+ பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - சிறிய துண்டு தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை : பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார். https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/06/25150739/1172516/moong-dal-pakora.vpf
 2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம் அ-அ+ காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும். மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும். புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். https://www.maalaimalar.com
 3. ரத்தமகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் : 7 காபாலிகனின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. அவன் மனக்கண்ணில் எண்ணற்ற காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அலைமோதின. புருவங்கள் முடிச்சிட்டுப் பிரிந்தன.இவை அனைத்துமே சில கணங்கள்தான். பின்னர் அவன் முகம் தெளிந்தது. ஒருவழியாக காபாலிகன் உண்மையைப் புரிந்துகொண்டான் என்பதை அறிந்த வல்லபனின் உதட்டில் புன்னகை அரும்பியது. ‘‘நமது ஒற்றர் ஒருவழியாக நிதர்சனத்தை உணர்ந்து விட்டதாகத் தெரிகிறது...’’ என்றான்.ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த காபாலிகன், பல்லவ மன்னரை ஏறிட்டான். ‘‘மன்னா... சிவகாமி என்றால்...’’ ‘‘அவளேதான்!’’ இடையில் வெட்டி வாக்கியத்தை முடித்தார் பரமேஸ்வர வர்மர். ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அறிந்துகொண்ட உண்மையைப் பகிரங்கப்படுத்தாதே. உனக்குள் அதை புதைத்துவை. சமயம் வரும்போது அதுவாக வெடித்துச் சிதறும். அப்போது உலகுக்கு சிவகாமி யார் என்று தெரியட்டும்! அதுவரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!’’‘‘உத்தரவு மன்னா...’’ காபாலிகன் தலைவணங்கினான். ‘‘அப்படியானால் இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம்!’’ என குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் புலவர் தண்டி.‘‘ஆச்சார்ய தேவோ பவ...’’ என முன்னால் வந்து அவரை வணங்கினார் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர்.இதனைத் தொடர்ந்து வல்லபனும் பின்னர் காபாலிகனும் புலவரை வணங்கினார்கள். ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என மூவரையும் ஆசீர்வதித்த புலவர் தண்டி, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.‘‘கதம்ப இளவரசர் இரவிவர்மனை மல்லை அரண்மனையில் சேர்ப்பித்து விட்டாய் அல்லவா?’’ ‘‘தங்கள் ஆணையை நிறைவேற்றி விட்டேன் ஆச்சார்யரே...’’ வல்லபன் பதில் அளித்தான். ‘‘நல்லது. இனி அவரை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் திட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். அதற்குள் கரிகாலனும் சிவகாமியும் வெகுதூரம் சென்றிருப்பார்கள்...’’ வளர்ந்திருந்த தன் தாடியைத் தடவியபடி புன்னகைத்தார் புலவர்.‘‘திட்டத்தின் அடுத்த படிக்கு இனி செல்லலாமா ஆச்சார்யரே..?’’ பயபக்தியுடன் பல்லவ மன்னர் கேட்டார்.‘‘அதிலென்ன சந்தேகம் மன்னா? உன் கனவு எந்தளவுக்கு விரிந்தது... மானுட சமுதாயத்தைத் தழுவியது... என்பதை விரைவில் பல்லவ நாடு மட்டுமல்ல... சாளுக்கிய நாடும் உணரும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளைச் செய்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்...’’ ‘‘ஆச்சார்யார் சொல்வது...’’‘‘நாம் இருவரும் வகுத்த திட்டத்தைத்தான் மன்னா...’’ சொன்ன புலவர், மூவரையும் அருகில் அழைத்தார். பல்லவ மன்னர் அவருக்கு அருகில் வந்தார். வல்லபன், பரமேஸ்வர வர்மருக்கு ஓரடி தள்ளியும், காபாலிகன் ஈரடி தள்ளியும் நின்றார்கள்.‘‘ஒற்றர்களை எட்டு திசைக்கும் அனுப்பியிருக்கிறேன். மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அவர்கள் இரண்டறக் கலந்து, ‘பல்லவர்கள் படை திரட்டி வருகிறார்கள்...’; ‘விரைவில் சாளுக்கியர்களுடன் போர் நடக்கப் போகிறது...’; ‘காஞ்சி மீண்டும் கைப்பற்றப்படும்...’ என பேச ஆரம்பிப்பார்கள். ‘மழையில்லாமல் ஏற்கனவே தவித்து வரும் நாம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பல்லவ மன்னர் காஞ்சியை விட்டு வெளியேறினார்... இதனால் காஞ்சிச் செல்வங்கள் மட்டுமல்ல... நமது வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன...’ என எடுத்துச் சொல்வார்கள்...’’ விவரித்துக்கொண்டே வந்த புலவர், பேசுவதை நிறுத்திவிட்டு வல்லபனையும் காபாலிகனையும் மாறி மாறிப் பார்த்தார். தான், சொல்வதைத் தவிர வேறு சிந்தனைகளுக்குள் அவர்கள் செல்லாதபடி மானசீகமாகக் கட்டிப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.‘‘இவற்றில் எதுவுமே பொய்யில்லை; மிகையில்லை. உண்மையைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒற்றர்கள் புரிய வைக்கப் போகிறார்கள். ஏனெனில், எந்த நாடுமே எந்த மன்னரின் ஆட்சிக்குக் கீழும் தொடர்ச்சியாக இருந்ததில்லை. ஆதி நாள் முதலே அடிக்கடி கைமாறிக் கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். குறிப்பாக காஞ்சி மாநகரம்...’’ நிறுத்திய புலவரின் கண்களில் கடந்த காலம் விரிந்தது. அதனுள் பயணித்தபடியே தொடர்ந்தார்.‘‘சோழர்களின் ஆளுகைக்குக் கீழ் காஞ்சி தொண்டை மண்டலமாக இருந்தது. அப்போது பல்லவர்கள் வடக்குப் பக்கம்தான் ஆட்சி செய்து வந்தார்கள். பின்னர் காஞ்சியைக் கைப்பற்றி தங்கள் தலைநகரமாக அறிவித்தார்கள். இடையில் சிலகாலம் காஞ்சி மற்றவர்கள் கையில் இருந்தது. பின்னர் மீண்டும் பல்லவர்கள் வசம் வந்தது. அந்த வகையில் இப்போது சாளுக்கியர்கள் பிடியில் காஞ்சி இருக்கிறது. இந்த வரலாறு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஆட்சியாளர்கள் மாறுவது குறித்த அச்சமோ குழப்பமோ அவர்களுக்கு இருக்காது. ஆனால்...’’நிறுத்திய புலவர் தன் முன்னால் நின்ற மூவரையும் ஏறிட்டார். ‘‘இழந்த நாட்டை ஒரு மன்னன் மீண்டும் அடைய வேண்டுமென்றால் அதற்கு படை பலத்தை விட இன்னொரு பலம் அவசியம். அதுதான் மக்களின் நம்பிக்கை! இது மட்டும்தான் எந்தவொரு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித் தரும். நம் மன்னர் மீண்டும் காஞ்சியின் அரியாசனத்தில் அமரப் போவது அந்த பலத்தால்தான்!’’சொல்லி முடித்த புலவர், நிகழ்காலத்துக்கு வந்தார். ‘‘மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘சாளுக்கியர்களுக்கு பயந்து பல்லவ மன்னர் கோழையைப் போல் போர் புரியாமல் காஞ்சியை விட்டு ஓடி விட்டார்...’ என்றுதான் நினைக்கத் தோன்றும்...’’ ‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இந்த பிரசாரத்தைத்தான் மேற்கொள்ளப் போகிறார் ஆச்சார்யரே...’’ நிதானமாகச் சொன்னார் பல்லவ மன்னர்.‘‘இதை முன்பே நாம் ஊகித்ததனால்தானே மன்னா நம் தரப்பு நியாயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம்...’’ கண்சிமிட்டிய புலவர், தொடர்ந்தார்.‘‘இதனுடன் கூடவே பல்லவ இளவரசர் பெரும் ஆயுதங்களுடன் வந்துகொண்டிருக்கும் தகவலையும், வந்திறங்கிய அரபிப் புரவிகளின் அருமை பெருமைகளையும் கசியவிடப் போகிறோம். அதுமட்டுமல்ல...’’நிறுத்திய புலவர் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் கண்களைச் சந்தித்தார். நான்கு விழிகளும் எதையோ உரையாடின. வல்லபனும் காபாலிகனும் இதை கவனிக்கவே செய்தார்கள். பேச்சின் உட்பொருள் அவர்களுக்குப் புரிந்தது. என்றாலும் புலவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதி காத்தார்கள்.அதற்கேற்ப புலவரே அதை வெளிப்படுத்தினார். ‘‘சிவகாமி குறித்த ரகசியத்தை வதந்திகளாகப் பரவவிட ஏற்பாடு செய்திருக்கிறோம்... ‘சாளுக்கிய மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள்...’; ‘பல்லவர்களை நேர் வழியில் வீழ்த்த முடியாது என்பதால் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிவகாமியை பல்லவ மன்னரின் குடும்பத்துக்குள் ஊடுருவ விட்டிருக்கிறார்...’; ‘அவள் வழியாக ஆயுத ரகசியங்களை அறிந்து சாளுக்கியர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்...’ என்றெல்லாம் விரைவில் மக்கள் பேசப் போகிறார்கள்...’’ ‘‘சிவகாமி விஷயம் நமக்கு சாதகமாக அமையாது என்று தோன்று கிறது புலவரே...’’ வல்லபன் இடைமறித்தான்.‘‘எதனால் அப்படிச் சொல்கிறாய்?’’ புருவத்தை உயர்த்தியபடி பல்லவ மன்னர் கேட்டார்.‘‘கதம்ப இளவரசருக்கு அவளைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது மன்னா...’’‘‘அதனால் என்ன? ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும்தான் அது தெரியும்...’’ சட்டென்று புலவர் பதில் அளித்தார்.வல்லபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்தக் குழப்பம் அடுத்து அவன் பேசியபோது வெளிப்பட்டது. ‘‘எனில் நாம் கிளப்பிய வதந்தியை ஸ்ரீராமபுண்ய வல்லபர் உடைக்க மாட்டாரா..?’’‘‘அவரால் மட்டுமல்ல... ஒருவராலும் முடியாது வல்லபா... வதந்திகளுக்கு அந்தளவு சக்தி இருக்கிறது. அதன் ரிஷிமூலத்தைக் கண்டவர் மட்டுமல்ல... அதை அழிப்பதற்கான வழியை அறிந்தவரும் இந்தப் பிரபஞ்சத்திலேயே எவரும் இலர். அதனால்தான் ‘அர்த்த சாஸ்திரம்’ எழுதிய கவுடில்யர், வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லி முடித்த புலவர், அதன்பிறகு நேரத்தைக் கடத்தவில்லை. ‘‘காபாலிகனே... காற்றைவிட விரைவாக சோழ நாட்டுக்குச் சென்று சோழ மன்னரிடம் இந்த ஓலையை நீ கொடுக்க வேண்டும்...’’‘‘உத்தரவு ஆச்சார்யரே...’’ பயபக்தியுடன் அந்த ஓலையை வாங்கி தன் இடுப்பில் மறைத்து வைத்த காபாலிகன், புலவரையும் மன்னரையும் வணங்கிவிட்டு வந்த வழியே சுரங்கத்தை விட்டு வெளியேறினான்.அவன் செல்லும்வரை காத்திருந்த புலவர், பல்லவ மன்னரை நோக்கி கண்களால் உரையாடிவிட்டு வல்லபன் பக்கம் திரும்பினார்.கட்டளையை ஏற்க சித்தமாக அவர் அருகில் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி வந்தான்.‘‘கரிகாலன் இப்போது சிவகாமியுடன் நடு நாட்டில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து ‘சிவகாமி ஆபத்தானவள்... பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக நல்லவள் போல் வேடமிட்டிருக்கிறாள்... அவளிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி’ நான் சொன்னதாகத் தெரிவித்துவிடு! முடிந்தால் உன் கற்பனை வளத்தைக் கலந்து சிவகாமி குறித்து மேலும் சில புகார்களை என் பெயரில் தெரிவி!’’ என்றார் புலவர். வல்லபனுக்குத் தலை சுற்றியது. வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த கவுடில்யர் மேல் கோபம் வந்தது. எது நிஜம்... எது பொய்... என்று பிரித்துப் பார்க்க முடியாத மாயச்சூழலில் தன்னையும் புலவர் சிக்க வைத்திருப்பதை உணர்ந்தான். என்றாலும் உருட்டப்படும் பகடையின் இறுதி இலக்கு பல்லவ நாட்டை மீட்பது என்பதால் தன்னைச்சமாளித்துக் கொண்டு மன்னரையும் புலவரையும் வணங்கிவிட்டு விடைபெற்றான்.‘‘பாவம்... எனது புரவிப்படைத் தளபதி அதிர்ச்சியிலிருந்து மீள நாளாகும்...’’ அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே பல்லவ மன்னர் முணுமுணுத்தார்.‘‘எல்லாம் பல்லவ நாட்டின் நன்மைக்குத்தான்...’’ கம்பீரமாக அறிவித்த புலவர், ‘‘விடைபெறுகிறேன் மன்னா. புலவர்களைக் கைது செய்யும் துணிச்சல் எந்த மன்னனுக்கும் இல்லை. சாளுக்கியன் விக்கிரமாதித்தனும் அதற்கு விதிவிலக்கல்ல. காஞ்சியில் எனது மாளிகையிலும், கடிகையிலும் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் நம் வழக்கப்படி என்னைத் தொடர்பு கொள்ளலாம்...’’ ‘‘நல்லது ஆச்சார்யரே... திட்டப்படி காய்களை நகர்த்தப் புறப்படுகிறேன்...’’ என்ற பரமேஸ்வர வர்மர் குனிந்து புலவரின் காலைத் தொட்டு வணங்கினார். ‘‘ஜெயம் உண்டாகட்டும்!’’ பல்லவ மன்னரின் தலையைத் தொட்டுப் புலவர் ஆசீர்வதித்தார். ‘‘ஆச்சார்யரே... ஒன்றே ஒன்று கேட்கலாமா?’’‘‘கேள்மன்னா!’’‘‘உண்மையிலேயே கரிகாலனும் சிவகாமியும் இப்போது நடு நாட்டில் இருக்கிறார்களா?’’‘‘இல்லை மன்னா! வல்லபன் அவர்களைச் சந்தித்து விடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன்!’’‘‘அப்படியானால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்..?’’ பரமேஸ்வர வர்மர் கேட்க நினைத்தார். ஆனால், மவுனமாக விடைபெற்றுச் சென்றார். ‘‘பல்லவ நாட்டை ஆள நீயே தகுதி வாய்ந்தவன் பரமேஸ்வரா... உனது இப்போதைய மவுனம் அதை நிரூபிக்கிறது. கரிகாலனும், சிவகாமியும் உன் கனவை நிறைவேற்றுவார்கள்..! ’’மனதுக்குள் சொல்லிக் கொண்ட புலவர் அந்த இடத்தை விட்டு கடைசியாக அகன்றார். எப்போதும்போல் அப்போதும் அவர் உள்ளம் கரிகாலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. ‘ஆமாம்... இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? சிவகாமியின் சபதத்தைக் கண்டறிந்திருப்பானா..?’புலவரின் கணிப்புப் படியே சிவகாமியின் ரகசியத்தைத்தான் அந்தக் காட்டின் மறைவிடத்தில் கரிகாலன் அறிந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் செய்த சபதத்தை அல்ல; மாறாக, அவளது வழுவழுப்பை!இருவரும் மெய்மறந்திருந்த அந்த நிலையை மறைவாக இருந்தபடி ஓர் உருவம் பார்த்துக் கொண்டிருந்தது! (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/
 4. ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-6 அரசருக்கு உரிய எந்த ஆடை, ஆபரணங்களும், பாதுகாப்பு வீரர்களும் இன்றி சாதாரண உடையில் வெகு சாதாரண மனிதரைப் போல் தன்னந்தனியாக பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் ஆதிவராகன் குகைக் கோயிலுக்குப் பின்னால் அந்த விடியற்காலையில் வருவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத காபாலிகன் உணர்ச்சிவசப்பட்டான். அந்த உணர்ச்சியை அதிர்ச்சியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் செயலை அடுத்து அவர் செய்தபோது தடுமாறினான். ஏனெனில் ஸ்ரீராமபுண்ய வல்லபரைச் சந்தித்த பிறகு எந்த மூங்கில் குழலை ஊதும்படி புலவர் தண்டி தனக்கு கட்டளையிட்டிருந்தாரோ அதேபோன்ற மூங்கில் குழலை எடுத்து பல்லவ மன்னர் ஊதியதுதான். இதனையடுத்து நூறு வராகங்கள் சேர்ந்து எழுப்பும் ஒலி பிறந்து அந்த இடத்தையே அதிர வைத்தது. ‘‘மன்னா... தாங்கள்... இங்கு...’’ என வார்த்தைகள் வராமல் தடுமாறிய காபாலிகனின் வாயை தன் கரங்களால் பல்லவ மன்னர் மூடினார். கண்களால் ‘பேசாமல் இரு...’ என ஜாடை காட்டினார். அது ஏன் என அடுத்த கணமே புரிந்தது. ஆதிவராகன் கோயிலுக்குள்ளிருந்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் வேகமாக வெளியில் வந்தார். மறைந்திருந்த வீரர்களும் பதற்றத்துடன் அவரை நெருங்கினார்கள். அவர் மூங்கில் குழலை ஊதவில்லை என்பதும், வேறு யாரோ ஊதியிருக்கிறார்கள் என்பதும் வந்த வீரர்களுக்குப் புரிந்ததால் அவர்கள் திகைத்தார்கள். ‘‘எல்லாம் புலவர் தண்டியின் வேலை...’’ வீரர்களிடம் ஸ்ரீராமபுண்யவல்லபர் சொல்வது மறைந்திருந்த பல்லவ மன்னருக்கும் காபாலிகனுக்கும் தெளிவாகக் கேட்டது. ‘‘மூங்கில் குழலின் ஓசைக்கும் நமது நடமாட்டத்துக்கும் இருக்கும் தொடர்பை தனக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள புலவர் முயற்சிக்கிறார்...’’ புன்னகைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்தார். ‘‘புலவரை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். வாருங்கள்...’’ என்றபடி நடக்க முற்பட்டார். ‘‘அமைச்சரே...’’ முன்னால் நின்றிருந்த வீரன் தயங்கினான். ‘‘என்ன..?’’ ‘‘அந்த காபாலிகனை...’’ ‘‘ஒன்றும் செய்ய வேண்டாம். சற்று நேரத்துக்கு முன் புலவரின் கட்டளைப்படி மூங்கில் குழலை ஊதியது கூட அவன்தான். திடீரென காபாலிகனைக் கைது செய்தால் அது மக்கள் மத்தியில் தேவையில்லாத மதக் குழப்பத்தை ஏற்படுத்தும். தவிர இன்னும் சிறிது காலத்துக்கு அவன் வெளியில் நடமாடுவதுதான் நமக்கு நல்லது...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு மந்தகாசத்துடன் முன்னால் நின்ற வீரனை ஏறிட்டார். ‘‘தன்னைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்பதை நமக்கு அறிவிக்கும் விதமாக முதலில் கதம்ப இளவரசன் மூங்கில் குழலை ஊதினான். இப்போது இரண்டாவது முறையாக நூறு வராகங்கள் ஒலி எழுப்பியதோ நம் வீரர்களுக்கான செய்தி. ஊதியது நாமல்ல என்பது வீரர்களுக்குத் தெரியாது. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி இந்நேரம் மல்லைக் கடற்கரையை நோக்கி நகர்ந்திருப்பார்கள். அவர்களை இப்போது தடுக்க முடியாது. தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஊதியது யாராக இருந்தாலும் அது நமக்குப் பயனளிப்பதுதான். எனவே, இப்போது மல்லை அரண்மனைக்குச் சென்று அடுத்து செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசிப்போம்...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் விடுவிடுவென்று வீரர்கள் சூழ நடந்தார். அவர் மறையும் வரை காத்திருந்த பல்லவ மன்னர் குறுஞ்சிரிப்புடன் தலைப்பாகையைப் பிரித்து அதன் ஒரு நுனியால் தன் முகத்தை மறைத்தார். பிறகு தன்னைத் தொடரும்படி காபாலிகனுக்கு கண்களால் கட்டளையிட்டுவிட்டு மல்லை கடற்கரையை நோக்கி நடந்தார். அந்த இடத்தை அவர்கள் அடையவும் மூன்று வீரர்கள் தங்கள் புரவிகளை ஒரே சீராக நடத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. மக்கள் கூட்டத்துடன் கலந்தபடி பல்லவ மன்னர் நின்றார். அவரை ஒட்டி காபாலிகன் பயபக்தியுடன் நின்றான். மல்லைக் கடற்கரையின் மேடான பகுதிக்கு அந்த மூன்று வீரர்களும் வந்ததும் நின்றனர். உடனே நடுவில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய, பக்கங்களில் இருந்த இரு வீரர்கள் தங்கள் புரவிகளின் பக்கவாட்டுகளில் செருகப்பட்டிருந்த கொம்புகளை எடுத்து பலமாக மூன்று முறை விட்டுவிட்டு ஊதினார்கள். சட்டென அந்தப் பிரதேசத்தில் இரைச்சல் நின்று அமைதி பரவியது. அதுவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஆடவரும் பெண்டிரும் நீராட்டத்தை நிறுத்தி கரையைப் பார்த்தனர். வந்திருக்கும் வீரர்கள் யார் என்பதை உணர்ந்து கொண்ட சில ஆடவர்கள் கடலில் இருந்து கரையேறி தங்கள் ஆடைகளை உடுத்த விரைந்தனர். வீரர்களாக இருந்தவர்கள் தரைமீது கிடத்தப்பட்டிருந்த வாட்களையும், கேடயங்களையும் நாடி அவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு புரவி வீரர் மூவர் இருக்குமிடம் நோக்கி விரைந்தனர். திடீரென வீரர்களிடமும் மற்றவர்களிடமும் துரிதப்பட்டு விட்ட நடவடிக்கைகளைப் பார்த்த பெண்டிரும் நீராட்டத்தை முடித்துக் கொண்டு பாறையின் மறைவிடங்களுக்குச் சென்று ஆடைகளை அணிந்தவண்ணம் புரவி வீரர் மூவரையும் பார்த்து பிரமிப்படைந்தனர். மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த பரதவர் கூடத் தங்கள் தங்கள் வலைகளை இழுத்துச் சுருட்டிப் படகுகளில் போட்டு கரைக்கு வர முற்பட்டனர். மல்லைக் கடற்கரையில் இருந்த மாந்தர் அனைவருக்கும் புரவி வீரர் மூவரும் சாளுக்கிய வீரர்கள் என்பது புரிந்தது. கடந்த ஒரு திங்களாகவே சாளுக்கியர்கள் படையெடுப்பு பற்றிய வதந்திகள் எங்கும் உலாவி வந்தன. எனவே, விருப்பமற்ற செய்தியை வெளியிடவே அந்த வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களது உள்ளுணர்வு உணர்த்தியது. ஆனால், அந்தச் செய்தி ஊகத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் அணுவளவும் அறியாததால், நடுவில் இருந்த புரவி வீரன் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் திக்பிரமை பிடித்து நின்றார்கள். பக்கத்திலிருந்த வீரர்கள் கொம்புகளை எடுத்து ஊதியதை அடுத்து, கடலாடியவர்கள் அருகில் கூட்டமாக வந்ததும் நடுவில் இருந்த வீரன் தன் கையை உயர்த்திக் கூறினான். ‘‘பல்லவர் குடிமக்களே! இன்று முதல் நீங்கள் சாளுக்கிய வேந்தரின் குடிமக்கள்! சாளுக்கிய மன்னர், ரணரசிகன், ராசமல்லன், விக்கிரமாதித்த மகாப்பிரபு காஞ்சி மாநகருக்குள் பிரவேசித்து விட்டார்! காஞ்சி மண்டலம் இனி சாளுக்கியரின் ஆணைக்கு உட்பட்டது. ஆகவே, மாமல்லபுரத்துவாசிகளான நீங்கள் அனைவரும் உங்கள் இல்லங்களுக்கு அமைதியாகச் செல்லுங்கள். பின்னால் வரும் சாளுக்கியர் படை நகர ஆதிக்கத்தை ஏற்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்!’’ இப்படி அவன் சொல்லி முடித்ததும் மீண்டும் கொம்புகள் இருமுறை ஊதப்பட்டன. பிறகு அப்புரவி வீரர்கள் மூவரும் கடற்கரையில் இருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த தெருக்களை நோக்கி விரைந்தார்கள். அதேசமயத்தில் காஞ்சி - மல்லைப் பாதையில் பெரும் டங்கா ஒன்று விடாமல் சப்தித்தது. அத்துடன் குதிரைப் படை ஒன்றின் சீரான குளம்பொலிகள் கேட்கத் தொடங்கின. சில கணங்கள் அப்படியே சிலையாக நின்ற அந்த மக்கள், மெல்ல மெல்ல எட்ட இருந்த நகரப் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். காபாலிகனின் கைகளைத் தட்டிவிட்டு பல்லவ மன்னர் நடக்கத் தொடங்கினார். கேட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத காபாலிகன் எதுவும் பேசாமல் அவரைப் பின்தொடர்ந்தான். கூட்டத்துடன் நடந்த மன்னர், வணிகத் தெருவுக்குள் நுழைந்ததும் சற்றே தன் நடையின் வேகத்தைக் குறைத்தார். அவர் கண்கள் சுற்றிலும் சலித்தன. மெல்ல மெல்ல கூட்டத்திலிருந்து பிரிந்தவர், ஏழாவது கடையை நெருங்கியதும் சட்டென அதற்குள் நுழைந்தார். அவர் மீது கண் வைத்திருந்த காபாலிகனும் அதேபோல் நுழைந்தான். இவர்களுக்காகவே திறந்திருந்த அக்கடை அதன் பிறகு திரைச்சீலையால் மூடப்பட்டது. வேறு யாரும் தங்களைப் பின்தொடரவில்லை என்பதை காபாலிகன் கவனித்தான். மன்னரோ திரும்பியே பார்க்காமல் ஐந்தடி நடந்தார். பிறகு குனிந்து தரையிலிருந்த பலகையைத் தூக்கி அதனுள் இறங்கினார். கடைக்குள் ஒரு சுரங்கம் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்காத காபாலிகன் தன் உணர்வுகளை மறைத்தபடி அங்கிருந்த படிக்கட்டில் இறங்கினான். மெல்லிய அகல் விளக்கு அவர்களை வரவேற்றபோது சமதளத்தை அடைந்திருந்தார்கள். ‘‘வல்லபா...’’ பல்லவ மன்னர் குரல் கொடுத்தார். ‘‘மன்னா...’’ என்றபடி மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘வந்திறங்கிய அரபுப் புரவிகளை சிவகாமி பரிசோதித்தாளா..?’’ ‘‘ஆம் மன்னா. தங்கள் கட்டளைப்படி இச்செயலை மக்கள் முன்பே மல்லைக் கடற்கரையில் அரங்கேற்றினோம். எதிர்பார்த்தது போலவே சிவகாமி தேவியின் தேர்வு பிரமாதமாக இருந்தது...’’ ‘‘நல்லது. அப்புரவிகளை அந்தந்த இடங்களுக்கு அனுப்பிவிட்டாய் அல்லவா?’’ ‘‘கட்டளையை நிறைவேற்றிவிட்டோம் மன்னா. சாளுக்கியர்களை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கிறோம் என்பதை இப்புரவித் தேர்வு மக்களுக்கு உணர்த்தியிருக்கும்...’’ வல்லபனின் முகத்தில் நம்பிக்கை சுடர்விட்டது. மன்னர் இயல்பாகத் திரும்பி காபாலிகனை ஏறிட்டார். ‘‘என்ன சந்தேகம்? கேள்...’’ காபாலிகன் உமிழ்நீரை விழுங்கினான். ‘‘அதில்லை மன்னா... பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் இப்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள்...’’ ‘‘ஆமாம். அந்த அறிவிப்பைத்தான் நாமும் கேட்டோமே!’’ ‘‘அப்படியிருக்க மக்கள் நம்மை நம்புவார்களா..? எவ்வித போருமின்றி நாட்டை எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று நினைக்க மாட்டார்களா?’’ ‘‘மாட்டார்கள் காபாலிகரே!’’ வல்லபன் உணர்ச்சியுடன் பதிலளித்தான். ‘‘மூன்று சாளுக்கிய வீரர்களும் அறிவிப்பு செய்தபோது நானும் அங்கிருந்தேன். முதலில் அதிர்ந்த மக்கள் பிறகு அமைதியாகக் கலைந்தார்கள். அதுவும் கட்டுப்பாட்டுடன். எப்படியும் தங்கள் மன்னர் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்படும்போதுதான் இப்படியொரு அமைதியைக் கடைப்பிடிப்பார்கள்...’’ ‘‘ஆனால், காஞ்சி எதிரிகளின் வசமாகி விட்டதே..?’’ காபாலிகனின் முகத்தில் இனம் புரியாத உணர்வுகள் தாண்டவமாடின. ‘‘ஆம்...’’ இம்முறை பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் பதில் அளித்தார். ‘‘நாம் எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லையே...’’ காபாலிகனின் குரலில் ஒலித்தது இயலாமையா அல்லது வேறு உணர்வா என்பது அவனுக்கே தெரியவில்லை. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும் காபாலிகரே. சாளுக்கியர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவாக காஞ்சியை அவர்கள் நெருங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவகையில் இது பல்லவ நாட்டு ஒற்றர்களின் தோல்விதான். ஆனால், இதையே வெற்றியாக மாற்ற முடியும். அதைத்தான் நாம் செய்யப் போகிறோம்...’’ மாறாத புன்னகையுடன் மன்னர் பதிலளித்தார். ‘‘ஆனால்..?’’ காபாலிகன் மென்று விழுங்கினான். ‘‘இழுக்க வேண்டிய அவசியமேயில்லை காபாலிகரே...’’ சட்டென்று வல்லபன் பதில் சொன்னான். ‘‘ஓரளவு போர் முறைகளை அறிந்தவர் நீங்கள். எனவே இப்போதிருக்கும் நிலை உங்களுக்குப் புரியும். காஞ்சிக்கு அருகில் சாளுக்கியர்களுடன் இப்போது நாம் போர் புரிந்தால் என்னாகும்? கலைச்செல்வங்கள் எல்லாம் அழியும். நம் மன்னர் அதை விரும்பவில்லை. அரசுகள் இன்று இருக்கும், நாளை இருக்காது. ஆனால், கலைச்செல்வங்கள் அப்படியல்ல. அவை காலம் கடந்தும் நிற்கும். அவற்றுக்கு எந்த சேதாரமும் ஏற்படக் கூடாது என மன்னர் நினைக்கிறார். அதனால்தான் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு தற்காலிகமாக பல்லவ மண்டலத்தை எதிரிகளுக்கு ரத்தமின்றி விட்டுக் கொடுத்திருக்கிறோம்...’’ ‘‘அப்படியானால்..?’’ காபாலிகனின் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. ‘‘போர் முடியவில்லை..!’’ பல்லவ மன்னரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘போர் நடக்குமா?’’ ‘‘இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது! சிவகாமியின் சபதம் அதை தொடங்கி வைத்திருக்கிறது!’’ (தொடரும்) http://www.kungumam.co.in
 5. சப்பாத்திக்கு அருமையான முட்டை உருளைக்கிழங்கு கறி அ-அ+ சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருள்கள் முட்டை - 4 உருளைக்கிழங்கு - 1 தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 100 கிராம் அரைக்க இஞ்சி - 1/2 இன்ச் அளவு பூண்டு - 3 பல் கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி தாளிக்க எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி பட்டை - 1 இன்ச் அளவு கிராம்பு - 2 வெங்காயம் - 1/4 பங்கு கறிவேப்பிலை - சிறிது செய்முறை : உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும். அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும். அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி. https://www.maalaimalar.com
 6. தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க : தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை : புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி. குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். https://www.maalaimalar.com
 7. ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சாதம் - 2 கப் புளிக்காய்ச்சல்... நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு பொடி செய்வதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் எள் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!! https://www.maalaimalar.com/
 8. ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-5 சூரிய உதயத்துக்கு சில நாழிகைகளே இருந்த அந்தத் தருணத்திலும் மல்லை நகரத்தில் காவல் பலமாக இருந்தது. காவல் வீரர்கள் பெரும் வீதிகளில் சதா நடமாடிக் கொண்டிருந்தனர். இதை சற்றுத் தொலைவிலிருந்தே காபாலிகன் கவனித்தான். பல்லவ மன்னருக்கும் பல்லவ இளவரசருக்கும் குருவாக இருப்பவர் புலவர் தண்டி. அப்படிப்பட்டவர் பல்லவர்களின் பரம எதிரியான சாளுக்கிய மன்னரிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையைக் கொடுக்கிறார். இது புரியாத புதிர் என்றால் சத்ரு நாட்டுக்குள், அதுவும் வீரர்கள் நடமாட்டம் மிகுந்த மல்லைத் துறைமுக நகரத்தில் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் எப்போது வந்தார்... எவர் கண்ணிலும் படாமல் அவரால் எப்படி ஆதிவராகக் குகைக்கோயிலில் இருக்க முடிகிறது என்பதெல்லாம் விளங்காத விஷயங்கள். இக்கேள்விகளுக்கு பதில் தேடுவது ராஜ குற்றம். ஏனெனில் பல்லவ நாட்டின் குரு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே, வினவுவதை விட கட்டளைக்கு அடிபணிவது சாலச் சிறந்தது. இந்த முடிவுக்கு வந்த காபாலிகன், நேர் வழியைத் தவிர்த்தான். மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றிச் சென்று ஆதிவராகக் குகையை அடைந்தான். குகை திறந்திருந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தவன் சிறு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த விளக்குக்கு எதிரே தனித்த ஒரு மனிதர் மட்டும் நின்றிருந்தார். ராஜ தோரணை தென்பட்டாலும் அந்த மனிதரிடம் அரச குலத்துக்கான அடையாளங்கள் இல்லை என்பதை அறிந்த காபாலிகன் எச்சரிக்கை அடைந்தான். ‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் இங்கு இருப்பார் என்றல்லவா புலவர் தண்டி கூறினார்... இங்கு வந்தால் வேறு யாரோ இருக்கிறார்களே... ஒருவேளை சாளுக்கிய மன்னர் இன்னும் வரவில்லையோ...’ யோசனையுடன் ஆதிவராகன் குகை என்று பிரசித்தி பெற்ற அந்தக் குடைவரைக் கோயிலுக்குள் நுழைவதை விடுத்து சிறிது பின்வாங்கி, குகை வாயிலின் ஒரு புறத்தில் காபாலிகன் பதுங்கினான். அந்நேரத்திலும் விடாது எரிந்து கொண்டிருந்த தூங்கா விளக்கு, மலையைக் குகை போல் குடைந்து முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்தக் கோயிலின் உட்புறம் நன்றாகத் துலங்கும்படி செய்திருந்தது. இதன் விளைவாக, வாயிற்படிக்கு நேர் எதிரில் மலையின் உட்சுவரில் சிற்பி நிர்மாணித்திருந்த ஆதிவராகப் பெருமான் திருவுருவம் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் செதுக்கப்பட்டு உயிருள்ளவை போல் காணப்பட்ட மற்ற பிம்பங்களும் தெள்ளெனத் தெரிந்தன. ஒரு கையால் அவனி தேவியை அணைத்து உயரத் தூக்கி வைத்துக் கொண்டும், இன்னொரு கையால் அவள் பாதத்தைப் பிடித்துக் கொண்டும்; இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திக்கொண்டும் காட்சியளித்த பரந்தாமனான ஆதிவராகனின் சீரிய பார்வையில் உக்கிரமும் சாந்தியும் கலந்து கிடந்தன. தரையில் ஊன்றிய நாரணனின் இடது திருவடியும், ஆதிசேஷன் தலையைப் பீடமாக்கிக் கொண்ட வலது கழலிணையும் அசுரனிடம் பொருது மீண்ட புராண நிகழ்ச்சிக்குச் சான்று கூறும் தோரணையில் காட்சியளித்தன. ஆதிவராகனின் சீறிய தோற்றத்துக்கு அணை போடும் ஆற்றலுடையவளாக, அசுரனுடன் பொருது மீண்ட சீற்றத்தைத் தணிக்கும் கருணை சொரூபமாக அருள் சுரக்கும் வெட்கக் கண்களுடன் பெருமானின் கரங்களில் வளைந்து கிடந்தாள் பூமிப் பிராட்டி. எம்பெருமான் திருவடிக்குத் தலை கொடுத்திருந்த ஆதிசேடனும் அவனருகில் இருந்த நாக கன்னிகையும் தங்களுக்குக் கிடைத்த திருவடியில் மெய் மறந்திருந்தார்கள். ஆதிவராகன் அருள் தோற்றத்தின் விளைவாக மெய்மறந்தது ஆதிசேடன் மட்டுமல்ல, அந்தக் கோயிலுக்குள் ஆதிவராகன் முன்பு அந்த மனிதரும்தான் என்பதை காபாலிகனால் உணர முடிந்தது. மார்பில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, கால்கள் இரண்டையும் லேசாக அகற்றிக் கொண்டு ஆஜானுபாகுவாக நின்றிருந்த அம்மனிதரின் தலை நிமிர்ந்திருந்ததால் அவர் எம்பெருமான் உருவத்தை அணு அணுவாக ஆராய்வதை உணர்ந்தான் வாயிற்படியின் மூலையிலிருந்த காபாலிகன். அளவோடு சிறுத்த இடுப்பும், அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின. கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவர் திடத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. நெற்றியில் சூரணம். தலையில் பட்டு தலைப்பாகை. மார்பில் போர்த்திய நிலையில் பட்டு வஸ்திரத்துடன் காணப்பட்ட அந்த மனிதரின் கன்னத்தில் லேசாகப் புலப்பட்ட முதிர்ச்சி, அவர் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை உணர்த்தியது. இந்நிலையில் அந்த மனிதர் லேசாகத் திரும்பி உட்பாறையின் வலது பக்கத்திலிருந்த மூன்று சிற்பங்களைக் கவனிக்கத் தொடங்கினார். இப்படி அவர் அரைவாசி திரும்பியதால், அவர் முகம் தூங்கா விளக்கில் நன்றாகத் தெரிந்தது. நன்றாகத் தீட்டப்பட்ட ஈட்டிகளின் முனைகளைவிடப் பிரகாசித்த கண்கள், அந்தச் சிற்பங்களை வியப்புடனும் ஓரளவு சீற்றத்துடனும் நோக்கின. எதிரே தெரிந்த மூன்று சிற்பங்களை நோக்கியபோது, அந்த இதழ்களில் வெறுப்பு கலந்த பயங்கரப் புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது. சிற்பங்களை அமைத்திருந்த லாவகத்தால் சிற்பங்கள் அந்த மனிதரை நோக்குகின்றனவா அல்லது அந்த மனிதர் சிற்பங்களை நோக்குகிறாரா என்று புரியவில்லை. மலைப்பாறையில் குடையப்பட்டிருந்த மூன்று சிற்பங்களில் ஆண் சிற்பம் மகேந்திர பல்லவர் என்பதை அந்த மனிதர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பதை அவர் விட்ட பெருமூச்சு உணர்த்தியது. தலையில் கவிழ்க்கப்பட்ட கிரீடத்துடனும், அக்கம் பக்கத் தோள்களைச் சடை போல் தொட்ட முடியுடனும், எதிரே குச்சு போல் இடுப்பிலிருந்து இறங்கிய ஆடையின் பட்டைக் கச்சத்துடனும் காணப்பட்ட மகேந்திர பல்லவரின் முகத்தில் தெரிந்த கம்பீரம், அந்த மனிதரை வியக்க வைத்ததா அல்லது கொதிக்க வைத்ததா என்பதை அவரது முகபாவத்திலிருந்து காபாலிகனால் உணர முடியவில்லை. பாறையின் ஒரு பகுதியாக கம்பீரத்தின் அடையாளமாக மகிஷியொருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த மகேந்திர பல்லவரின் இடையில் சற்றுப் பின்புறமாக இருந்த கத்தியையும் அந்த மனிதர் கவனிக்கத் தவறவில்லை. கத்தியைக் கவனித்த அந்த மனிதரின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. அவர் கையொன்று அவரது இடைக் கச்சையில் நீண்டு தொங்கிக்கொண்டிருந்த கத்தியின் முகப்பைத் தடவியது. மகேந்திரபல்லவர் பாறையிலிருந்து சிறிது நகர்ந்தாலும் வாளை உருவ அந்த மனிதர் தயாராயிருந்ததாகத் தோன்றியது வாயிலின் மூலையில் நின்றிருந்த காபாலிகனுக்கு. மகேந்திரபல்லவர் மகிஷிகள் இருவரும் மகுடம் அணிந்து அழகின் அடையாளமாகத் திகழ்ந்தனர். இருவரின் ஒடிந்த இடைகளும், உருட்டி விடப்பட்ட மார்புகளும், காலில் துலங்கிய சிலம்புகளும் அவர்கள் இருவரையும் இரட்டைப் பிறப்புகளைப் போல் காட்டின. அந்தக் காலத்துச் சிற்பங்கள் பலவற்றைப் போல் அந்த மகிஷிகள் இருவரில் ஒருத்தியே ஆடை அணிந்திருந்தாள். அவ்விரு சிற்பங்களையும் அந்த மனிதர் நீண்ட நேரம் பார்க்கவில்லை. குகையில் நின்றிருந்தவர், இடப்புறப் பாறைச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிம்ம விஷ்ணுவின் சிலையையோ, கஜலட்சுமி யின் சிலையையோ கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆதிவராகப் பெருமானை வணங்கிய பிறகு மீண்டும் மீண்டும் பல்லவ சக்கரவர்த்தியையும் மகிஷிகள் இருவரையுமே கவனித்தார். அந்த சமயத்தில் காபாலிகனின் கையில் இருந்த மண்டையோடு வாயிலின் மூலையில் லேசாக உராயவே அந்த மனிதர் மெல்ல வாயிலை நோக்கித் திரும்பினார். அப்படித் திரும்பியபோது விளக்குக்கு முன்னிருந்து அவர் அகன்றுவிடவே விளக்கு வெளிச்சம் காபாலிகன் மீது நன்றாக விழுந்தது. ஏற இறங்க அவனை ஆராய்ந்தவரின் முகத்தில் புன்னகை பூத்தது. தொடர்ந்து அவர் உதட்டிலிருந்து, ‘‘ஏதேது... பல்லவ நாட்டில் சைவர்கள் எல்லோரும் தீவிர வைஷ்ணவர்களாக மாறுவது போல் தெரிகிறதே...’’ என்று வந்து விழுந்த சொற்கள் காபாலிகனை சங்கடப்படுத்தியது. ‘‘ஈசனைத் தவிர வேறு எவரையும் வணங்கேன்...’’ என்றான் கம்பீரமாக. ‘‘அப்படியானால் எதற்கு ஆதிவராகர் கோயிலுக்கு சூர்யோதய சமயத்தில் வருகை தந்தாய்? ஒருவேளை போரில் வெற்றியடைய விரும்பி பெருமானை தரிசிக்க வந்தாயா? என்ன விழிக்கிறாய்? பல்லவர்களின் வழக்கம் அப்படித்தானே? சற்று முன்பு நான் கூர்ந்து நோக்கிய சிற்பம் மகேந்திரபல்லவருடையது! அவரது திருக்குமாரர் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுக்கும் முன் ஆதிவராகனைத் தரிசித்து விட்டுச் சென்றான் என பல்லவர் வம்ச வரலாறு கூறுவதை அடியேன் படித்திருக்கிறேன்...’’ இதைச் சொன்ன மனிதரை வைத்த விழியை எடுக்காமல் காபாலிகன் பார்த்தான். முக்கியமாக ‘மகேந்திர பல்லவர்’ என்று ‘ர்’ போட்டு மரியாதையுடன் அழைத்தவர், நரசிம்ம பல்லவரை மட்டும் ‘நரசிம்ம பல்லவன்’ என ஒருமையில் அழைத்ததை! எனவே காபாலிகன் மெல்லக் கேட்டான். ‘‘தாங்கள் யார்?’’ ‘‘ஸ்ரீராமபுண்யவல்லபர்!’’ நிதானமாக அந்த மனிதர் பதிலளித்தார். எந்தப் பெயரை எதிர்பார்த்தாலும் இந்த நாமகரணத்தை காபாலிகன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்திலிருந்தே ஸ்ரீராமபுண்யவல்லபர் புரிந்து கொண்டார். ‘‘இந்தச் சிறியவனை அறிவாய் போலிருக்கிறதே?’’ என்றார் முன் எப்போதும் இல்லாத வாஞ்சையுடன். ‘‘கேள்விப்பட்டிருக்கிறேன்...’’ காபாலிகன் இழுத்தான். ‘‘என்னவென்று?’’ ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு போரையும் அமைதியையும் நிர்ணயிக்கும் அமைச்சர் என்று!’’ ‘‘அது அடியவனாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறாய்?’’ ‘‘ ஸ்ரீராமபுண்யவல்லபர் என்ற பெயரில் ஒருவர்தான் இருக்கிறார்!’’ காபாலிகன் உறுதியுடன் சொன்னான். ‘‘அப்படியானால் எங்கள் மன்னருக்குத் தர வேண்டிய ஓலையை அவரது அமைச்சரான என்னிடம் தர ஏன் யோசிக்கிறாய்?!’’ பெரும் அலையொன்று முகத்தில் மோதியது போல் காபாலிகன் நிலைகுலைந்தான். ‘‘ஓலையா? எந்த ஓலை..?’’ தட்டுத் தடுமாறி சொற்களைச் சிதறவிட்டான். ‘‘புலவர் தண்டி உன்னிடம் கொடுத்து அனுப்பிய ஓலை!’’ கம்பீரமாக பதில் சொன்னார் ஸ்ரீராமபுண்யவல்லபர். இதற்கு மேலும் தாமதிப்பதிலோ, வார்த்தை விளையாட்டில் இறங்குவதிலோ, தப்பிக்க முயற்சிப்பதிலோ பயனில்லை என்பது காபாலிகனுக்கு தெளிவாகப் புரிந்தது. தன் இடையில் மறைத்து வைத்திருந்த ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான். ‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனுக்கு...’ என்றிருந்த விலாசத்தை அலட்சியம் செய்துவிட்டு ஓலையைப் பிரித்த ஸ்ரீராம புண்யவல்லபரின் புருவங்கள் சுருங்கின. ஏனெனில் ஓலையின் தொடக்கமே ‘கரிகாலனையும் சிவகாமியையும் பின்தொடர ஆட்களை அனுப்பிவிட்டு இந்த ஓலையைப் படிக்கும் மரியாதைக்குரிய சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராம புண்யவல்லபருக்கு...’ என்றுதான் இருந்தது! வாய்விட்டு இதைப் படித்தவர் அதன்பிறகு வந்த வாக்கியங்களைத் தனக்குள் வாசிக்கத் தொடங்கினார். காபாலிகன் அவரையே கவனித்துக் கொண்டிருந்தான். அவரது நெற்றியில் முத்து முத்தாக வியர்வைகள் பூத்தன. அடிக்கடி அவரது கண்கள் சுருங்கின. முகம் கடுமையாவதும் பிரிவதுமாக நர்த்தனமாடியது. அப்படியானால் ஸ்ரீராம புண்யவல்லபர்தான் ஆதிவராகர் கோயிலில் இருக்க வேண்டும் என்பதை புலவர் தண்டி அறிந்திருக்க வேண்டும். சாளுக்கிய நாட்டின் அறிவிக்கப்பட்ட போர் அமைச்சரின் வியூகத்தை பல்லவ நாட்டின் அறிவிக்கப்படாத போர் அமைச்சரான புலவர் உடைக்கிறார். அதற்கான விதை அந்த ஓலையில் இருக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீராம புண்யவல்லபரின் வதனம் ஓலையைப் படிக்கப் படிக்க மாறுகிறது... ‘‘கொடுக்க மட்டுமே உத்தரவு. கிளம்புகிறேன்...’’ பதிலை எதிர்பார்க்காமல் வெளியில் வந்த காபாலிகன் பாறைக்கு மறுபுறம் சென்றான். தாமதிக்காமல் புலவர் தண்டியின் கட்டளைப்படி தன் இடுப்பிலிருந்து மூங்கில் குழலை எடுத்து ஊத முற்பட்டான். அதற்குள் அவனுக்கு அருகில் இருந்து யாரோ ஒருவர் அதே போன்றதொரு மூங்கில் குழலை எடுத்து ஊதினார். அடுத்த கணம் நூறு வராகங்கள் சேர்ந்து சத்தமிட்டால் என்ன ஒலி எழும்புமோ அப்படியொரு ஒலி எட்டுத் திசையிலும் ஒலித்தது! ஊதியவர் யாரென்று பார்த்த காபாலிகன் அதிர்ந்தான். காரணம், அங்கு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் நின்றிருந்தார்! (தொடரும்) http://www.kungumam.co.in/
 9. சம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு ஊறுகாய்ப் பொடி தேவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் , கடுகு - 2 டீஸ்பூன் (விரும்பினால்). செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கடுகு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறுகாய் செய்யும்போது இந்தப் பொடியில் தேவையான அளவு சேர்க்கலாம். சிறப்பு: இந்தப் பொடி மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். மாங்காய் இஞ்சி ஊறுகாய் தேவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்) , மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். மாங்காய் இஞ்சி - மாங்காய்த் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா ஒரு கப் (250 மில்லி கப்), நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் , கடுகு - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய் தேவை: விதைகள் நீக்கி நறுக்கிய தோசைக்காய்த்துண்டுகள் (மஞ்சள் வெள்ளரிக்காய்) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: உப்புடன் மிளகாய்த்தூள், கடுகு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அகலமான பீங்கான் பவுலில் தோசைக்காய்த் துண்டுகள், அரைத்த பொடி, நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 24 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும். இதைச் சாதம், சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். சிறப்பு: ஆந்திராவில் மாங்காய் கிடைக்காத சீஸனில் தோசைக்காய் வைத்து ஆவக்காய் ஊறுகாய் செய்வார்கள். இது ஆவக்காய் ஊறுகாய் போலவே இருக்கும். இந்த ஊறுகாயைச் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை ஊறுகாய் தேவை: சதுரத்துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சைப்பழம் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - முக்கால் கப். செய்முறை: எலுமிச்சைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். பிறகு, இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மறுநாள் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: உடனடியாக எலுமிச்சை ஊறுகாய் தேவையானால் எலுமிச்சைப்பழத் துண்டுகளைத் தண்ணீரில் வேகவைத்தும் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். பச்சை மிளகு ஊறுகாய் தேவை: பச்சை மிளகு - 50 கிராம் (அரை இன்ச் துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை: எலுமிச்சைச் சாற்றுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பச்சை மிளகுத்துண்டுகளைச் சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தேவை: மாகாளிக்கிழங்கு - 300 கிராம், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 , கடைந்த தயிர் - 125 மில்லி (அரை கப்) , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். சிறப்பு: இது நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும். மாவடு தேவை: மாவடு - அரை கிலோ, விளக்கெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 20, உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாவடுவின் காம்பை நீக்கி, கழுவித் துடைக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். இதை மாவடுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீரைச் சூடாக்கி ஆறவைத்துச் சேர்க்கலாம்). இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: காம்புள்ள வடுவாக வாங்கவும். அப்போதுதான் ஊறுகாய் நன்றாக இருக்கும். ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப், உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (தேவையானால்), கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு. செய்முறை: மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும். குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும். மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம். ஃப்ரெஷ் மஞ்சள் ஊறுகாய் (குஜராத்தி ஹல்டி பிக்கிள்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் 4 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - முக்கால் டீஸ்பூன். செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் எடுத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த ஊறுகாயை நான்கு நாள்கள் வெளியே வைத்து உபயோகிக்கலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மாங்காய் இஞ்சி ஊறுகாய் போல இருக்கும். ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஃப்ரெஷ் மஞ்சள் - இஞ்சி ஊறுகாய் (குஜராத்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, வட்டமான வில்லைகளாக நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - 2 இன்ச் துண்டு (வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் எலுமிச்சைச்சாற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறவிடவும். மறுநாள் பயன்படுத்தலாம். பூண்டு ஊறுகாய் தேவை: தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 25, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம். கடா நார்த்தங்காய் ஊறுகாய் தேவை: கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த்துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12 வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் ,நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை கப். செய்முறை: கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும். நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - 10 (கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரை - அரை கப் , குங்குமப்பூ - 2 சிட்டிகை, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் நெல்லிக்காயுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நெல்லிக்காய் பாதியளவு வெந்ததும் குங்குமப்பூ, மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை வெளியிலேயே வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் சேர்க்கலாம். சிறப்பு: சப்பாத்தி, தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நெல்லிக்காய் கார ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி தயிர் சாதத்துடன் பரிமாறவும். ஆவக்காய் ஊறுகாய் தேவை: மாங்காய் - அரை கிலோ, கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்), காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20), வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும். 10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம். பிரண்டைத் தொக்கு தேவை: இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாரத்தை இலைப்பொடி (வேப்பிலைக் கட்டி) தேவை: இளசான நாரத்தை இலை - 25 (நடு நரம்பை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 15, ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டேபிள்ஸ்பூன். செய்முறை: நாரத்தை இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். இந்தப் பொடியைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்துச் சேகரிக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: நாரத்தை இலை கிடைக்காவிட்டால், எலுமிச்சை இலையிலும் செய்யலாம். உப்பு எலுமிச்சை ஊறுகாய் தேவை: எலுமிச்சைப்பழம் - 10 (ப்ளஸ் போல நான்கு துண்டுகளாக லேசாக நறுக்கவும்; முழுவதுமாக நறுக்க வேண்டாம்), உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: எலுமிச்சைப்பழத்துக்குள் உப்பை அடைக்கவும். இதை பாட்டில் (அ) ஜாடியில் சேகரித்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். (வீட்டின் உள்ளேயும் வைக்கலாம்). பழம் நன்றாக ஊறிவிடும். இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து எலுமிச்சைத் தொக்கு செய்துகொள்ளலாம். நன்றாக ஊறியதும் எலுமிச்சையில் இருந்து உப்பு நீர் கசிந்து மிருதுவாக இருக்கும். குறிப்பு: இதேபோல நாரத்தங்காயிலும் செய்யலாம். நன்றாக ஊறியவுடன் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு வருடங்கள் நன்றாக இருக்கும். இஞ்சி - புளி ஊறுகாய் தேவை: தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை , வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். சிம்பிள் மாங்காய் ஊறுகாய் தேவை: கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்) மிளகாய்த்தூள், கல் உப்பு - தலா 2 டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம். குறிப்பு: கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆரஞ்சுத்தோல் பச்சடி தேவை: ஆரஞ்சுத்தோல் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) , கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆரஞ்சுத்தோல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் ஊற்றி நன்கு வேகவிடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மாங்காய் இஞ்சித் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்) , எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் , மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், கடுகு - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நாரத்தங்காய் ஊறுகாய் தேவை: நாரத்தங்காய் - 3 (சதுரத்துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் , உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஜாடியில் நாரத்தைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும். தக்காளித் தொக்கு தேவை: தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும். செட்டிநாட்டு வெந்தய மாங்காய் தேவை: புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 15, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: மாங்காயைத்தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை நீக்கவும்). மிளகாய், உப்பைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய்த்துண்டுகளுடன் வெந்தயப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வெயிலில் 10 முதல் 15 நாள்கள் வரை வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். செட்டிநாட்டுப் பல ஊறுகாய் தேவை: பிஞ்சு வெள்ளை மிளகாய், தோலுரித்த பூண்டு, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), காய்ச்சி ஆறவைத்த நீர் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் (தேவையானால்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெள்ளை மிளகாய், சுண்டைக்காயின் காம்பை நீக்கி கீறிவிடவும். பீங்கான் ஜாடியில் எலுமிச்சைச்சாறு, காய்ச்சி ஆறவைத்த நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து உப்பு கரையும் வரை கலக்கவும். அதனுடன் சுண்டைக்காய், பூண்டு, வெள்ளை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ஜாடியின் வாய்ப்பகுதியை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் நான்கு நாள்கள் வைத்து எடுக்கவும். குறிப்பு: இதனுடன் பிஞ்சு முருங்கைக்காய், பிஞ்சு கொத்தவரங்காய் ஆகியவற்றை அரை இன்ச் அளவுக்கு நறுக்கி சேர்க்கலாம். செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - 4 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் , கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். மூன்றாவது நாள் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து ஊறுகாயுடன் சேர்க்கவும். ஆப்பிள் ஊறுகாய் தேவை: ஆப்பிள் - ஒன்று (விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் , மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் , கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: கிரீன் ஆப்பிள் பயன்படுத்தினால் எலுமிச்சைச்சாறு குறைவாகச் சேர்க்கவும். ஊறுகாய் இல்லாத உணவு மேஜையா? நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே `சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. ஊறுகாய், தொக்கு வகைகளை சப்பாத்தி, தோசைக்கும்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இப்படி உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஊறுகாய், தொக்கு வகைகள் பலவற்றை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்... ``மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக் காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடிய ஊறுகாய், தொக்கு வகைகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவை உங்கள் டைனிங் அறையை `யம்மி ஏரியா’வாக மாற்ற உதவும். சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள்’’ என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார். ஹேப்பி ஈட்டிங்! https://www.vikatan.com
 10. காரசாராமான பச்சை மிளகாய் ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர்பொடி - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார். இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். https://www.maalaimalar.com
 11. ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-4 ‘‘என்ன... அந்த பிராமணன் கூடாரத்தில் இருக்கிறானா..?’’ இரவிவர்மனையும் காயம்பட்ட இரு வீரர்களையும் படகில் அழைத்துக்கொண்டு வல்லபன் கரையில் இறங்கியதுமே இந்தச் சொற்கள் அவன் செவியைக் கிழித்தன. கோபத்துடன் வாளை உருவ முற்பட்டவன், சொன்னவன் ஒரு காபாலிகன் என்று தெரிந்ததும் அமைதியானான். ‘‘ஏன்... தலையைச் சீவ வேண்டியதுதானே..?’’ அலட்சியமாகக் கேட்ட காபாலிகன் சுற்றிலும் பார்த்தான். வல்லபனுக்கு அருகில் இருந்த இரவிவர்மனைப் பார்த்ததும் அவன் முகம் சுருங்கியது. ‘‘பிராமணன்...’’ உதட்டைச் சுழித்தபடி வல்லபனை கோபத்துடன் பார்த்தான். ‘‘பல்லவ மன்னனுக்கு வேறு வேலையே இல்லையா... எதற்காக இந்த விஷக் கிருமிகளை வீரர்கள் சூழ நடமாட அனுமதிக்கிறான்? முன் காலத்திலும் பிராமணர்கள் தமிழகத்துக்குள் வரத்தான் செய்தார்கள். ஆனால், சாதாரண மக்களாக அவர்களை வாழவே தமிழ் மன்னர்கள் அனுமதித்தார்கள். அதிகாரத்தின் பக்கம் அவர்களை நெருங்க விடவில்லை. போறாத வேளை... வேளிர்களாக பிரிந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தமிழ் நிலப்பரப்பையே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் பல்லவர்கள்தான். என்று அவர்கள் தலையெடுத்தார்களோ அன்று பிராமணனின் கொட்டம் ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே இந்திர விழாவாக இருந்த தமிழ்த் திருவிழாவை சித்ரா பெளர்ணமியாக்கி நாசம் செய்துவிட்டார்கள். காதலும் வீரமும் இரு கண்களாக இருந்த சமூகத்தை, காதலே தவறோ என்று எண்ணும்படி செய்துவிட்டார்கள். எதிர்பாலினத்தைக் காதலிப்பதுதான் இயற்கை. அதை அப்படியே இறைவனைக் காதலிப்பதுதான் பக்தி என மாற்றிவிட்டார்கள்! வட நாட்டுக்கும் தென்னாட்டுக்கும் வாசலாக இந்த தொண்டை மண்டலம் இருப்பதால் சாரி சாரியாக இங்கு வந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்க பல்லவ மன்னன் சித்தமாக இருக்கிறான். அவர்கள் தனித்து வாழவும், தனி ராஜ்ஜியங்கள் நடத்தவும் பிரம்மதேயம் என்ற பெயரில் மக்களின் நிலங்களை வாரி வழங்குகிறான். சாதாரண மக்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வரி. பிராமணனுக்கோ, எவ்வளவு நிலத்தை அவன் அபகரித்தாலும் வரியே இல்லை. ஏன்... அவன் தவறே செய்தாலும் தண்டிக்கும் உரிமை மன்னனுக்கும் இல்லை!’’ ஆவேசத்துடன் பொங்கிய காபாலிகன், தன் முகத்தை வல்லபனுக்கு நேராகக் கொண்டு வந்தான். ‘‘காஞ்சி கடிகையில் படித்தவன்தானே நீ? வரலாற்றை அறிவாய்தானே? வட நாட்டு மக்களை இந்த பிராமணர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள் என்று உனக்குத் தெரியாதா? அதே நிலை தமிழ் மண்ணிலும் ஏற்பட வேண்டுமா? பல்லவ மன்னனுக்கு அருகில்தானே இருக்கிறாய்? இதையெல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்ல மாட்டாயா? ம்... மாட்டாய். உன் பங்குக்கு மன்னன் சொல்வதற்கெல்லாம் தலையசைத்து சில கிராமங்களை உன் பெயருக்கு பெறத்தானே முயற்சிப்பாய்? எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் உன்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை பிராமணன் அதிகாரத்தை கையில் எடுக்கவே செய்வான். இனி இந்த தமிழ் மண்ணை ஒருவராலும் காப்பாற்ற முடியாது. சாஸ்திரமும் சம்பிரதாயமும்தான் ஆளவே போகிறது. போ... போ... கூடாரத்தில் காத்திருக்கும் புலவன் என்ற பெயரில் பல்லவ நாட்டையே கட்டுப்படுத்தும் அந்த பிராமணனுடன் சேர்ந்து இனி எந்த வழிகளில் எல்லாம் குடியைக் கெடுக்கலாம் என்று திட்டம் தீட்டு...’’ பதிலை எதிர்பார்க்காமல் அந்த காபாலிகன் நகர்ந்து இருளில் கரைந்தான். அதுவரை அமைதியாக இருந்த வல்லபன், அதன் பிறகு கணமும் தாமதிக்கவில்லை. ‘‘காயம்பட்ட இருவரையும் ஆதுரச் சாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு சிறையில் அடையுங்கள்...’’ என வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ‘‘வாருங்கள் கதம்ப இளவரசே...’’ என இரவிவர்மனை அழைத்துக்கொண்டு புலவர் தண்டி தங்கியிருக்கும் கூடாரத்தை நோக்கி நடந்தான். ‘‘காபாலிகன்...’’ என ஏதோ சொல்ல இரவிவர்மன் முற்பட்டான். அதை பாதியிலேயே தடுத்தான் வல்லபன். ‘‘தன் கருத்தை அவர் முன் வைத்தார். பல்லவ நாட்டில் அதற்கு சுதந்திரம் உண்டு. மன்னரின் முகத்துக்கு நேராகவே அவரை விமர்சிக்கலாம்...’’ இதற்குள் இருவரும் கூடாரத்தை நெருங்கிவிட்டார்கள். ‘‘ஆசார்ய தேவோ பவ...’’ என வாய்விட்டும், ‘என் சென்னியில் ஆசார்யன் திருவடிகள் பதியட்டும்’ என உள்ளுக்குள் தமிழிலும் சொன்னபடி இரவிவர்மனுடன் நுழைந்தான். சட்டென்று இருவரது பார்வையிலும் பட்டது அம்பிகை விக்ரகம்தான். அந்த சுவர்ண விக்ரகத்தின் முகத்தில் அன்று அபரிமிதமான காந்தி வீசிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த வெள்ளிக் குத்து விளக்கு அளித்த ஒளியின் பிரதிபலிப்பு மட்டுமல்ல அது. விளக்கின் ஒளிக்கும், ஒளியின் பிரதிபலிக்கும் சக்திக்கும் மேலாக ஏதோ ஒரு விளக்க முடியாத ஜாஜ்வல்யம் அம்பாளின் வதனத்திலும் அம்புஜப் பாதங்களிலும் தெரிந்தது. அருள்விழிகள் மூடித்தான் கிடந்தன. செய்த சிற்பி கண் மலரைத் திறக்காமலேயே வைத்திருந்தான். ஆனால், மூடிய அந்தக் கண்களுக்குள்ளே இருந்தும் அம்பிகை பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை. அது சம்பந்தமான ஓர் ஒளிவீச்சு வெளிவந்து கொண்டுதானிருந்தது. அம்பாளின் கிரீடத்தின் உச்சியிலிருந்து இறங்கி வதனத்தின் நடுவில் தொங்கிய ஒரு சிவப்புக்கல், நெருப்புத் துண்டம் போல் எரிந்தாலும் அது திரிபுரம் எரித்தவனின் மூன்றாவது கண்ணைப் போல் இல்லை. மாறாக, அருணோதயச் சிவப்பை வீசி அருள் புரிவதாக இருந்தது. மேலும் கீழுமாகத் திரும்பிய இரு உள்ளங்கைகளின் பத்ம ரேகைகளும், சங்கசூட முத்திரைகளும் உலகத்தைக் காக்கும் சக்ர விதானங்களாகத் திகழ்ந்தன. பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அம்பிகையின் மடிந்த கால்களின் பாதங்கள், தந்திர சாஸ்திரத்தில் வேத ரிஷிகளும் காண முடியாத எத்தனையோ சூட்சுமங்கள் இருப்பதை அறிவுறுத்தின. ஜகன்மாதாவான மகாசக்தியின் பொன்மேனிக்கு ஆசார்யர் என்றழைக்கப்படும் புலவர் தண்டி மிக அழகாகப் புஷ்பாலங்காரம் செய்திருந்தார். தாழை மலர் படல்கள் அவள் இடைக்குப் பாவாடையாகத் திகழ்ந்தன. காஞ்சியின் மல்லிகைச் செண்டு கிரீடத்தைச் சற்றே மறைத்தது. இரண்டு மாணிக்கத் தண்டைகள் அவற்றைத் தழுவி நின்ற காரணத்தால், அம்பாளின் கணுக்கால்களுக்கு மட்டும் பூச்சரங்கள் இல்லை. ஆனால், அருள் கைகளின் மணிக்கட்டுகளுக்கு பவழமல்லி வளையங்களை ஆசார்யர் அணிவித்திருந்தார். இத்தனைக்கும் சிகரம் வைக்கும் முறையில் அம்பிகையின் அபிஷேக பீடத்தில் அவள் பாதங்களுக்குக் கீழே இரண்டு பெரும் தாமரை மலர்களை நன்றாகப் பிரித்து மகரந்தம் புலனாகும் வகையில் வைத்திருந்தார் புலவர் தண்டி. இவ்வளவு அலங்காரங்களையும் அள்ளிப் பருகிய வல்லபன், ஆசார்யரைப் பார்த்தான். அம்பிகையின் பரம பக்தரும், அம்பிகையுடன் இராக் காலங்களில் நேரிடையாகப் பேசுகிறவர் என்று பிரசித்தி பெற்றவரும், பேரரசர்களின் மணிமுடிகள் பல பாதத்தில் படப்பெற்றவரும், மகா யோகி என்று பெயர் பெற்றவரும், காளிதாசனுக்கு ஈடாகச் சொல்லப்பட்டவருமான மகாகவி தண்டி, கண்களை மூடிக் கொண்டு அம்பிகையைப் போலவே பத்மாசனம் போட்டு அம்பிகைக்கு வலது புறத்தில் வியாக்ராசனத்தில் அமர்ந்திருந்தார். இடையின் பஞ்சகச்ச ஆசார வேஷ்டியும், அதை இணைத்துப் பிடித்திருந்த உத்தரீயமும், மார்பின் குறுக்காக ஓடிய பூணூலும், உடலெங்கும் பூசப்பட்ட திருநீறும், நெற்றியில் துலங்கிய குங்குமமும் அவருக்கு தெய்வீகத் தன்மையை அளித்திருந்தன. மூடிய அவர் கண்களும் அம்பிகையின் கண்களைப் போலவே மூடிய நிலையிலும் உள்ளிருந்து பார்ப்பவை போலத் தோன்றின. கண்களைத் திறந்து இருவரையும் பார்த்து புன்னகைத்தவர், ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என கைகளை உயர்த்தி வல்லபனை ஆசீர்வதித்தார். கதம்ப இளவரசரான இரவிவர்மன் சற்று முன்னால் வந்து தன் குல வழக்கப்படி அபிவாதையே சொல்லி அவரை நமஸ்கரித்தான். அவன் தலையில் கை வைத்து ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என ஆசீர்வதித்தவர் அவனை ஏறிட்டார். ‘‘காலம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது இரவிவர்மா...’’ ‘‘காலமா..?’’ ‘‘சந்தேகமா? பிறப்பும் இறப்பும் இன்பமும் துன்பமுமாகிய அனைத்துக்கும் காலமே காரணம். உலகத்தில் எல்லாப் பொருள்களையும் நல்லவையாகவும் கெட்டவையாகவும் மாற்றுவதும் காலம்; பிரஜைகளை எல்லாம் அழிப்பதும் காலம்; மறுபடி சிருஷ்டி செய்வதும் காலம். எல்லோரும் உறங்கும்போது காலம் விழித்திருக்கிறது. காலத்தைத் தாண்ட யாராலும் முடியாது. ஒருவராலும் நிறுத்தப்படாமல் எல்லாப் பொருள்களிலும் ஒரேவிதமாக காலம் சஞ்சரிக்கிறது. நடந்தனவும் நடப்பனவும், நடக்கப் போவதுமாகிய பதார்த்தங்கள் எவையோ அவை காலத்தால் செய்யப்பட்டவை!’’ தண்டி இப்படிச் சொல்லி முடித்ததுமே இரவிவர்மன் சிரித்தான். ‘‘ஏன் சிரிக்கிறாய் இரவி வர்மா?’’ ‘‘வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள் ஆசார்யரே? சிவகாமி யார் என்று உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரிடம் சொல்லி தன் மகளாக அவளைத் தத்தெடுக்கும்படி செய்திருக்கிறீர்கள். ஒரு காரியமாக பல்லவ இளவல் ராஜசிம்மர் ரகசியமாக வாழ்கிறார். அந்த இடம் உங்களுக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்க, இப்போது சிவகாமியை அங்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அதுவும் சங்கேத மொழியை அவளுக்குக் கற்றுத் தந்து, கரிகாலனை நம்ப வைத்து. இதையெல்லாம் செய்திருப்பவர் நீங்கள். அப்படியிருக்க, பழியை ஏன் காலத்தின் மீது போடுகிறீர்கள்?’’ ‘‘இதையெல்லாம் நான் செய்தது கூட காலத்தின் கட்டளையாக இருக்கலாமே!’’ சொன்ன புலவர், வல்லபனைப் பார்த்து, ‘‘கரிகாலன் என்ன சொல்லியிருப்பான் என்று தெரியும். அவன் கட்டளைப்படி கதம்ப இளவரசரை உரிய மரியாதையுடன் மாளிகையில் தங்க வை. உங்கள் இருவரையும் காஞ்சியில் சந்திக்கிறேன்...’’ என விடை கொடுத்தார். இருவரும் சென்றதும் தன் பின்னால் இருந்து சதுரங்கப் பலகையை எடுத்து காய்களை அடுக்கி எதிராளி இல்லாமலேயே தன்னந்தனியாக தாயம் ஆட ஆரம்பித்தார். அவர் மனதில் திட்டங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ‘ஒரு தேரும், ஒரு யானையும், ஐந்து காலாட்களும், மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி. மூன்று பத்தி கொண்டது ஒரு சேனாமுகம். மூன்று சேனாமுகங்கள் சேர்ந்தது ஒரு குல்மம். மூன்று குல்மங்கள், ஒரு கணம். மூன்று கணங்கள் ஒரு வாகினி. மூன்று வாகினிகள், ஒரு பிருதனை. மூன்று பிருதனைகள் சேர்ந்தது ஒரு சமு. மூன்று சமுக்கள், ஓர் அனீகினி. பத்து அனீகினிகள் ஓர் அசெளஷஹிணி...’ முணுமுணுத்தவர் தாயத்தை உருட்டி காய்களை இப்படியும் அப்படியுமாக நகர்த்தினார். ஒரு நாழிகைக்குப் பிறகு அவர் முகத்தில் திருப்திக்கான அறிகுறிகள் பூத்தன. அருகிலிருந்து ஓர் ஓலையை எடுத்து மடமடவென்று எழுதியவர் தொண்டையைக் கனைத்தார். அடுத்த கணம் கூடாரத்தின் பின்னால் இருந்து ஒருவன் வந்து அவரை வணங்கினான். அவன், காபாலிகன்! இரவிவர்மனை அழைத்துக் கொண்டு வல்லபன் வந்தபோது வழிமறித்துப் பேசியவன்! ‘‘ஆசார்யார் சொன்னபடியே நடந்துகொண்டேன்!’’ ‘‘நல்லது. ஆதிவராகன் குகைக்கு செல். அங்கு சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் இருப்பார். அவரிடம் இந்த ஓலையைக் கொடுத்து விட்டு வெளியே வந்து இதை வாயில் வைத்து ஊது!’’ என்றபடி சில நாழிகைகளுக்கு முன் எந்த மூங்கில் குழலை எடுத்து இரவிவர்மன் ஊதினானோ அதேபோன்ற குழல் ஒன்றை காபாலிகனிடம் கொடுத்தார்! (தொடரும்) http://www.kungumam.co.in/
 12. சாதத்திற்கு அருமையான காராமணி குழம்பு அ-அ+ காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காராமணி - 1 கப் புளி - 1 எலுமிச்சை அளவு தக்காளி - 1 வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 சோம்பு - 1/2 டீஸ்பூன் வர மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும். மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்போது அருமையான காராமணி கறி ரெடி! https://www.maalaimalar.com/
 13. கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது. இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்குப் பிறகு, கீழடியில் மாநில அகழாய்வுத் துறையாவது தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2017-2018ல் பட்டறைப் பெரும்புதூரிலும் கீழடியிலும் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவிடம் விண்ணப்பித்தது. இதற்கென மாநில அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கீழடியில் ஆய்வுநடத்த முதலில் அனுமதி கிடைத்தது. இதன் பிறகு கீழடியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார். இது தவிர, உறைகிணறு ஒன்றின் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த உறை கிணறு 93 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஆறு உறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்விலும் இதேபோல இரண்டு உறை கிணறுகள் கிடைத்தந. தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பும் முயற்சிகளும் தற்போது நடந்துவருவதாக ஜெகன்னாதன் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைM K STALIN இதற்கு முந்தைய காலங்களில் அகழாய்வு முடிந்த பிறகு, ஆய்வுக்கென தனியாக அரசிடம் நிதி கோரி, அதற்குப் பிறகுதான் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பொருட்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. "ஆனால், இப்போது துவக்கத்தில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே ஆய்வுகளுக்கென நிதி தனியாக எடுத்துவைக்கப்பட்டுவிடுகிறது. இதனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுகளை உடனடியாகச் செய்ய முடியும்" என்கிறார் ஜெகன்னாதன். இதேபோல, சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூரில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து அங்கும் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கென 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. 2016ல் இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சமூக - கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தொல் பொருட்கள் கிடைத்தன. கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாநில தொல்லியல் துறை நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தவிர, மத்தியத் தொல்லியல் துறை கொடுமணலில் ஒரு அகழாய்வை மேற்கொண்டுவருகிறது. https://www.bbc.com/tamil/india-44280092
 14. ஒ....ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரியோம்
 15. சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு... சலாம் பாபு சலாம் பாபு என்னைப்பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தண்னாலே உண்டாக கண்ணாலே பேசியே தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே காந்த சிலை காதல் வலை காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க கனவு இல்லீங்க நினைவுதானுங்க கனவு இல்லீங்க நினைவுதானுங்க கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே ஜொலிக்கும் உடை தளுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
 16. தித்திப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி அ-அ+ இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏல‌க்கா‌ய் - 2 நெய் - தேவையான அளவு முந்திரி - சிறிதளவு செ‌ய்முறை : மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம். பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும். சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர் https://www.maalaimalar.com
 17. ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 3 எப்பேர்ப்பட்ட சிக்கலான சூழ்நிலையியலும் புத்தியை மிகத் தெளிவாக நிறுத்திக்கொண்டு செயல் புரியக்கூடிய ஆற்றல் உடையவன் என்றும், அதிர்ச்சி என்றால் என்னவென்றே அறியாதவன் என்றும் பெயர் வாங்கியிருந்த கரிகாலனின் நுண்ணறிவுகூட அன்றைய இரவின் ஐந்தாம் நாழிகையில் தன் முன் நின்றவனின் முகத்தைக் கண்டதும் ஒரு கணம் துணுக்குறவே செய்தது. யாரை எதிர்பார்த்தாலும் இந்த மனிதனை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு அடையாளமாக கரிகாலனின் மனம் அப்பால் இருந்த நாவாய்கள் போலவே இப்படியும் அப்படியுமாக அசைந்தது. ஏதேதோ சிந்தனைகள் சிற்றலைகள் போலவே அவன் மனதைத் தாக்க ஆரம்பித்தன. நீருக்கடியில் உதைத்துக் கொண்டிருந்த அவன் கால்கள் கூட கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என கவலைப்பட்டன. அனைத்துக்கும் காரணமாக இருந்த அந்த மனிதனின் முகத்தில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அந்தத் தோற்றமே கரிகாலனை இயல்புக்குக் கொண்டு வந்தது. கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த தன் விரல்களை நிதானமாக விலக்கினான். ‘‘மன்னிக்க வேண்டும்...’’ என அடுத்து அவன் பேசியபோது கூட சாந்தமே நிரம்பி வழிந்தது.‘‘எதற்கு மன்னிப்பு கரிகாலா... என் கழுத்தை நெரித்ததற்கா?’’ ‘எப்படி என்னை நீ இனம் கண்டாயோ அப்படி உன்னையும் நான் அறிவேன்’ என்ற தொனி அக்குரலில் தென்பட்டது. ‘‘இல்லை...’’ பதில் சொன்ன கரிகாலன் கடல் நீரில் நனைந்திருந்த தன் தலை சிகையைச் சிலுப்பி பிறை நிலவில் உலர்த்தினான். ‘‘பிறகு?’’‘‘எந்த முன்னறிவிப்பும் இன்றி இரு வீரர்களுடன் மல்லைக் கடலில் கடலாட வந்த கதம்ப நாட்டு இளவரசரான உங்களைத் தடுத்து நிறுத்தியதற்காக!’’சொன்ன கரிகாலன் தன்னைப் போலவே நீரிலிருந்து வெளியே வந்திருந்த சிவகாமியைப் பார்த்தான். ‘‘காலம் திரண்டு வந்ததுபோல் இளவரசர் இரவிவர்மன் நம் முன் நிற்கிறார். வரவேற்பதுதான் பல்லவ நாட்டின் இயல்பு. வயதிலும் மூத்தவர் என்பதால் தலை வணங்கு சிவகாமி!’’ ‘‘தேவையில்லை...’’ கணீரென்று ஒலித்தது இரவிவர்மனின் குரல். ‘‘சம அந்தஸ்துள்ளவர்கள் பரஸ்பரம் வணங்குவதில்லை..!’’கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘புரியவில்லை...’’‘‘இதில் புரியாமல் போக என்ன இருக்கிறது கரிகாலா! எப்படி நீ எனக்கு தலை வணங்க வேண்டியதில்லையோ... அப்படி சிவகாமியும் வணங்கத் தேவையில்லை! பிறப்பாலும் குடும்பப் பாரம்பரியத்தாலும் நாம் மூவருமே சமமானவர்கள்தான்!’’‘‘என்ன சொல்கிறீர்கள் கதம்ப இளவரசரே?’’‘‘உண்மையை கரிகாலா! இவள் யாரென்று பல்லவ நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். உங்கள் மன்னர் பரமேஸ்வர வர்மனின் வளர்ப்பு மகள் என சற்றுமுன் வல்லபன் உன்னிடம் அறிமுகப்படுத்தி இருக்கலாம். இத்தனை நாட்களாக இவள் எங்கிருந்தாள் என்ற கேள்வி உனக்குள் தொத்தி இருக்கலாம். அப்படிப்பட்ட எந்த வினாக்களும் கதம்பர்களுக்கோ சாளுக்கியர்களுக்கோ இல்லை! சிவகாமியின் பிறப்பிலிருந்து இப்போது பல்லவ இளவரசரிடம் செய்தி சொல்ல உன்னுடன் இவள் புறப்பட்டிருப்பது வரை சகலமும் எங்களுக்குத் தெரியும்! இவள் செய்திருக்கும் சபதம் உட்பட!’’ இரவிவர்மன் இப்படிச் சொல்லி முடிக்கவும், தன் வாளை உயர்த்தி அவன் மீது சிவகாமி பாயவும் சரியாக இருந்தது. இருவர் மீதும் தன் பார்வையை கரிகாலன் பதித்திருந்ததால் உடனடியாக அவள் கரங்களைப் பிடித்து நிறுத்தினான். ‘‘தவறு சிவகாமி...’’‘‘எது? எதிரி நாட்டு சிற்றரசின் இளவரசர் பல்லவ நாட்டுக்குள் சுதந்திரமாக உலவுவதா?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.‘‘பிறகு?’’ ‘‘உனக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் தடுப்பது என் கடமை! பிராமணர்களைக் கொல்லக் கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. இரவிவர்மர் சத்திரியரல்ல. பிராமணர். புலவர் தண்டியிடமிருந்து வந்திருக்கும் உனக்கு வரலாறு தெரிந்திருக்கும். என்றாலும் திரும்பவும் நினைவுபடுத்துகிறேன். ஒருவகையில் அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யரின் கதையேதான். என்ன, அதில் சந்திரகுப்தரை கெளடில்யர் அரசராக்கினார். இதில், தானே மன்னரானார்...’’ நிறுத்திய கரிகாலனின் முகம் உணர்ச்சியில் கொந்தளித்தது. சற்று நிதானித்தவன் தொடர்ந்தான். ‘‘காஞ்சி கடிகையில் கல்வி கற்று வந்த மயூர சர்மன் என்ற பிராமணருக்கு ஓர் அவமானம் பல்லவர்களால் ஏற்பட்டது. அதற்குப் பழிவாங்க கதம்பர்களின் அரசரானார். குந்தள தேசத்தை ஆண்டார். ஆரம்பத்தில் பல்லவர்களுக்கு அடங்கியிருந்தவர்கள் பிறகு கங்க வர்மன் காலத்தில் தனியாட்சி பெற்றார்கள்...’’ ‘‘அதன்பிறகு இரு நூற்றாண்டுகள் வரை கதம்ப ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள் தங்களுக்கு கப்பம் கட்டிக் கண்டிருந்த சாளுக்கியர்களிடம் அரசைப் பறிகொடுத்து சிற்றரசாக சுருங்கினார்கள்...’’ கரிகாலன் ஆரம்பித்த சரித்திரத்தை இடைவெட்டி சிவகாமி முடித்தாள். ‘‘சிற்றரசாக இருப்பது ஒன்றும் அவமானமில்லை சிவகாமி. நேற்று சாதவாகனர்களிடம் அடங்கி இருந்த பல்லவர்கள்தான் இன்று பெரும் நிலப்பரப்பை ஆள்கிறார்கள். நேற்று தொண்டை மண்டலத்தையும் ஆண்ட சோழர்கள் இன்று பல்லவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். நாளை சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசாக பல்லவ நாடு மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ நீந்தியபடியே நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்தான் இரவிவர்மன். ‘‘அப்படி கதம்பர்களும் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் பல்லவர்களின் துறைமுகப் பட்டிணத்துக்கு ரகசியமாக வந்திருக்கிறீர்களா?’’‘‘இல்லை என்று சொன்னால் நம்பப் போகிறாயா அல்லது ஆம் என்று சொன்னால் ஏற்கப் போகிறாயா..? அவரவர் தேசம் அவரவருக்கு உயர்வானது சிவகாமி. இன்றைய நண்பர்கள் நாளைய பகைவர்கள். நிகழ்கால எதிரிகள் எதிர்காலத் தோழர்கள். மல்லைக் கடற்கரைக்கு இந்த நள்ளிரவில் இரு வீரர்களுடன் நான் வந்தது குற்றமென்றால், பல்லவ அரசரின் நன்மதிப்பைப் பெற்று அவர் குடும்பத்தில் ஒருத்தியாக ஊடுருவி, சபதம் என்ற பெயரில் எல்லோரையும் நம்ப வைத்து பல்லவ குலத்தையே வேரறுக்க காய்களை நகர்த்தி வரும் உனது செயலுக்கு என்ன பெயர்?!’’‘‘இரவிவர்மா..?’’‘‘அலைகளை மீறி இரையாதே சிவகாமி. பயந்து கட்டுப்பட நான் அரபுப் புரவி அல்ல. கதம்ப இளவரசன். பல்லவர்களைப் பழிவாங்க சாளுக்கியர்களுடன் இணைந்திருப்பவன். நேர்மையான எதிரி. உன்னைப் போல் நம்பிக்கைத் துரோகி அல்ல!’’அடுத்த கணம் சிவகாமியின் வாள் இரவிவர்மனின் தலையை நோக்கி இறங்கியது. நியாயமாகப் பார்த்தால் கதம்ப இளவரசரின் மரணம் மல்லைக் கடலிலேயே சம்பவித்திருக்க வேண்டும். காயம்பட்டு தங்கள் ஆயுதங்களைப் பறிகொடுத்திருந்த இரு வீரர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். வீலென்று அலறவும் செய்தார்கள். ஆனால், நடக்கும் என்று நாம் நினைப்பது நடக்காமல் போவதும், நடக்கவே வாய்ப்பில்லை என்று நம்புவது நடப்பதும்தானே மனித வாழ்க்கை? அதுவேதான் மல்லைக் கடலிலும் அப்போது நடந்தது. கரிகாலனின் வாள் உயர்ந்து சிவகாமியின் வீச்சைத் தடுத்தது. இவ்வளவும் இரவிவர்மனின் தலைக்கு மேல்தான் நடந்தது. என்றாலும் அசையாமல் நின்றான். தன்னைக் காத்ததற்காகக் கரிகாலனிடம் நன்றியும் சொல்லவில்லை. தன்னைத் தாக்க முற்பட்டதற்காக சிவகாமியிடம் பாயவும் இல்லை. ‘‘ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு...’’ என்று மட்டும் அலட்சியமாக முணுமுணுத்தான்.‘‘இரண்டாவது முறையாக என்னைத் தடுக்கிறீர்கள் கரிகாலரே! பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தாலும் பரவாயில்லை. அபாண்டமாக என்மீது குற்றம் சுமத்தும் இரவிவர்மனைத் தண்டிக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்!’’ ‘கரிகாலா... நான் பொய் சொல்கிறேனா இல்லையா என்பதை நீயே ஆராய்ந்து அறிந்துகொள். இப்போது என்னிடம் பறித்துக் கொண்ட வாளைத் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தள்ளி நில். சிவகாமி யின் வீச்சுக்கு பதில் சொல்லிவிட்டு உன்னிடம் சிறைப்படுகிறேன்!’’ ‘‘ஏற்கனவே சிறைப்பட்டுத்தான் இருக்கிறீர்கள் கதம்ப இளவரசே!’’என்ற கரிகாலன் தன் வாளால் சிவகாமியின் வாளைத் தட்டிவிட்டான். ‘‘பல்லவ மன்னர் மீது ஆணை. இனி வாளை நீ எடுக்கக் கூடாது...’’ கட்டளையிட்டவன், கரையிலிருந்து மூன்று படகுகள் தங்களை நோக்கி வருவதைக் கண்டான். ‘‘வீரர்களை அழைத்துக் கொண்டு வல்லபன் வருகிறான். நம்மை அவன் நெருங்குவதற்குள் சொல்லி விடுங்கள்...’’ ‘‘எதை கரிகாலா?’’‘‘எதற்காக இங்கு வந்தீர்கள்?’’‘‘உனக்குத் தெரியாதா? நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் வாதாபியை நீங்கள் எரித்ததற்கு பழிவாங்க திட்டமிடும் சாளுக்கிய மன்னர் எந்த பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்காமலா போர் முரசு கொட்டுவார்!’’‘‘அதற்காக கதம்ப இளவரசரையேவா அனுப்பி வைப்பார்?’’ ‘‘ஏன், இரவி வர்மன் வேவு பார்க்கக் கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பல்லவ இளவல் இராஜசிம்மன் எங்கிருக்கிறான் என்ற தகவல் அவனது உயிர் நண்பனான உனக்கு மட்டும்தான் தெரியும். இப்போது இந்த சாகசக்காரியுடன் அந்த இடத்துக்கு நீ செல்லப் போகிறாய். நீயோ வீராதி வீரன். சூராதி சூரன். அப்படிப்பட்ட உன்னைப் பின்தொடரும் பொறுப்பை சாதாரண வீரர்களிடம் எப்படி ஒப்படைக்க முடியும்? அதனால்தான் நானே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அனுமதியுடன் இங்கு வந்தேன். ஆனால்...’’ ‘‘என்னிடம் பிடிபட்டீர்கள்...’’ ‘‘அதற்காக ஜெயித்துவிட்டதாக நினைக்காதே! இந்த இரவி வர்மன் இல்லாவிட்டால்...’’ ‘‘வேறொருவர் என்னைப் பின்தொடர்ந்து பல்லவ இளவல் இருக்கும் இடத்தைக் கண்டறிய முற்படுவார்... இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்? வருபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியும்...’’ என கரிகாலன் பதில் சொல்லி முடித்தபோது மூன்று படகுகளும் அவர்களைச் சூழ்ந்தன. கணித்தது போலவே வல்லபன் தலைமையில்தான் பத்து வீரர்கள் வந்திருந்தனர். அவனை நோக்கி மடமடவென்று கரிகாலன் உத்தரவிட்டான். ‘‘காயம்பட்ட இருவரையும் ஆதுரச் சாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு மல்லைச் சிறையில் அடை. கதம்ப இளவரசரை காஞ்சிக்கு அழைத்துச் செல். ஆனால், சிறையில் அடைக்க வேண்டாம். தனி மாளிகையில் வீரர்களின் கண்காணிப்பில் வைத்திரு. அரசருக்குரிய மரியாதை இவருக்கு குறைவின்றி வழங்கப்பட வேண்டும்...’’சரி என்பதற்கு அறிகுறியாக வல்லபன் தலையசைத்தான். ‘‘கரிகாலரே...’’ ‘‘என்ன வல்லபா?’’‘‘கரையிலிருந்து பார்த்துவிட்டு நாங்களாக இங்கு வரவில்லை...’’‘‘பிறகு?’’‘‘கட்டளைக்கு அடிபணிந்தே படகுடன் வந்தோம்...’’‘‘அனுப்பியது யார்?’’‘‘புலவர் தண்டி! கரையில் கூடாரமடித்துத் தங்கியிருக்கிறார்...’’ ‘‘சரி. அவரைச் சந்திக்க நாங்கள் செல்கிறோம்...’’‘‘இல்லை...’’‘‘என்ன இல்லை?’’‘‘வந்து... கரிகாலரே... உங்களையும் சிவகாமியையும் உடனடியாக பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்குச் செல்லச் சொன்னார்...’’‘‘முடியாது வல்லபா. சிவகாமி குறித்து சில சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன...’’‘‘அதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், எக்காரணம் கொண்டும் சிவகாமியை சந்தேகப்பட வேண்டாம் என்றும்...’’‘‘புலவர் சொல்லச் சொன்னாரா?’’ ‘‘இல்லை. கட்டளையிட்டிருக்கிறார்!’’ கரிகாலன் திக்பிரமை பிடித்து நின்றான். சிவகாமியின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. இதைப் பார்த்து இரவிவர்மன் வாய்விட்டுச் சிரித்தான். அத்துடன் தன் இடுப்பிலிருந்த சிறிய மூங்கில் குழாயை எடுத்து பலமாக ஊதினான். வெளியேறிய காற்று இசையாகப் பிரவாகம் எடுத்தது. அந்த இசை பல்லவ நாட்டின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை. (தொடரும்)
 18. நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, உன்னைக், கண்டு கொண்ட, நாள் முதலாய், பெண்ணுறங்கவில்லை, பெண்ணுறங்கவில்லை, உன் முகத்தைப், பார்ப்பதற்கே, கண்கள் வந்தது, உன் மார்பில், சாய்வதற்கே, உடல் வளர்ந்தது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, இந்தக், காவல் தாண்டி, ஆவல் உன்னைத், தேடி ஓடுது, தேடி ஓடுது, பொன் விலங்கை, வேண்டுமென்றே, பூட்டிக் கொண்டேனே, உன்னைப், புரிந்த போது, சிறையில் வந்து, மாட்டிக் கொண்டேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, நான், என்றும் உன்தன், எல்லையிலே, வந்திடுவேனே, வந்திடுவேனே, நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத, இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை - Nee illatha ulagathile - movie:- DEIVATHIN DEIVAM (தெய்வத்தின் தெய்வம்)
 19. உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் அ-அ+ வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சைச் சாறு - கால் கப், கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று. எலுமிச்சை தோல் - சிறிதளவு, காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப், உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம். புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி. https://www.maalaimalar.com
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.