Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. 104. சதுரங்கம் உன்னை எப்படி ஒரு சன்னியாசியாகக் கருதுவது என்று எனக்கு விளங்கவில்லை என்று வினய் சொன்னான். ரேணிகுண்டாவில் இருந்து கிளம்பிய ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மிஞ்சினால் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்னையைத் தொட்டுவிடும். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் திருவிடந்தை. கோயில். அம்மா. கேசவன் மாமா. தெரிந்தவர்கள். தெரியாதவர்கள். வெறும் முகங்கள். எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வினய்யின் சுய துயரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த என் கதையை அவனுக்குச் சொல்லத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எப்படிப் பார்த்தாலும்
 2. நாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி? தேவையான பொருள்கள்: முழு நெல்லிக்காய் - 6 உளுத்தம்பருப்பு - அரை கிண்ணம் காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது) கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு
 3. “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்” தோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து கொள்வதைப் பார்க்க முடியும். தோலில் ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற அல்லது அதிலிருந்து தப்பிக்க சொறிய தொடங்குகிறார்கள். குறித்த நிலையில் தோல் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணங்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தோல் பாதிக்கப்படுவதற்கு புறகாரணிகளும் உண்டு. அகக்காரணிகளும் உண்டு.
 4. ராஜீவின் புதிய அணுகுமுறை என்.கே. அஷோக்பரன் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 157) அமீரின் கோரிக்கை ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது. இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும். இராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இள
 5. 103. ஆல் பாஸ் டுடோரியல் என் கண்ணில் பட்ட மனிதர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாக இருந்தார்கள். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெள்ளையர்கள் மொத்தமாக இங்கே வந்துவிடுகிறார்களா என்ன? இத்தனைக்கும் ரஜனீஷ் புனேவுக்கு வந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தன. அவரைப் பார்க்கவும் அவரது சொற்பொழிவைக் கேட்கவும் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத அதிசயமாக இருந்தது. குறைந்தது முன்னூறு வெள்ளையர்களையாவது நான் அங்கே பார்த்தேன். ஆண்களும் பெண்களுமாக அவர்கள் மூலைக்கு மூலை நின்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். திடீர் திடீரென்று யாராவது
 6. உடல் எனும் இயந்திரம் 36: ருசி தெரிவது எப்படி? கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அந்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. உணவின் ருசியை உணர முடிகிறது. அதுபோல் காலில் முள் குத்தினால், காலை விருட்டென்று இழுத்துக்கொள்கிறோம். கையில் தீ சுட்டால் கையை வேகமாக விலக்கிக்கொள்கிறோம். இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன? தொடுதல், ருசி போன்ற சாதாரண தகவல்களும், குத்துதல், சுடுதல் போன்ற அவசரத் தகவல்களும் தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்வதாலும், அங்கிருந்து தகவல்கள் மீண்டும்
 7. 102. ஒரு பெரும் பாறை குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிச் சென்றேன். அவர் இறந்து ஆறு மாத காலத்துக்கு நான் மடிகேரி இருக்கும் திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கர்நாடக மாநிலம் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு சிறிது காலம் ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் இருந்தேன். அக்காலத்தில்தான் நான் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரையும் என்னை அறிந்தவராக மாற்றும் முயற்சியையும் அப்போதுதான் மேற்கொள்ளத் தொடங்கினேன். ஒரு சன்னியாசி பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் உண்டு. தடாலடியாக எதையாவது சொல்லி
 8. சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா அ-அ+ புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - அரை கப் ஏலக்காய் - 4 கிராம்பு - 6 காய்ந்த மிளகாய் - 15 சீரகம் - 1 டீஸ்பூன்
 9. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 14 ‘‘என்னவொரு அழுத்தமான தெளிவான வரலாற்றை எளிமையாகச் சொல்லியிருக்கிறாய் ஹிரண்ய வர்மா! கேட்கக் கேட்க திகட்டவே இல்லை! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பிரதேசத்தை சாளுக்கியர்கள் ஆள நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! சாளுக்கியர்கள் மீது நீ கொண்ட அன்புக்கும் எங்கள் அரசு... தவறு... நம் அரசு ஸ்திரப்படத் தேவையான நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களைக் கொடுத்ததற்கும் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் சார்பாக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன்! மன்னரிடம் சொல்லி உனக்கு தக்க கைமாறு செய்யவும் வழிவகுக்கிறேன்!’’ கணீரென்று அறிவித்தபடி தங்கள் அருகில் வந்த சா
 10. வில்லேஜ் விருந்து ``இயற்கையோடு ஒன்றிவாழும் கிராமத்து மக்களின் ஆரோக்கிய ரகசியம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவிலும் ஒளிந்திருக்கிறது. அவசர யுகத்தில் கண்ணில் தென்படும் உணவுகளையெல்லாம் உள்ளே தள்ளிவரும் பலர், கிராமத்துச் சமையலின் ருசியை அறிந்ததே இல்லை. இங்கே, கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன் அளித்திருக்கும் கிராமத்து உணவுகளைச் செய்து அளித்தால், நகரத்துக் குழந்தைகளும்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். சிற்றுண்டி வகைகளில்கூடச் சுவையான பல உணவுகள் கிராமத்து விருந்தில் உண்டு. ஓட்டல்களில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, மைசூர் போண
 11. பல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்! #Alert #Video ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சற்று விலகிச் செல்கிறார் என்றால், உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! குடும்பத்தில் இருப்பவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டும்போதுதான் ஒருவருக்கு வாய் நாற்றம் ஏற்படுவது தெரியவரும். எனவே, தினமும் ஒரு முறையாவது, வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்ப்பது நமக்கும் நல்லது, நமக்கு அருகிலிருப்பவர்களுக்கும் நல்லது. முக்கியமாக உடலில் இருக்கும் நோய்க
 12. அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் அ-அ+ சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள் மிளகாய்த்தூள் - 10 கிராம் சீரகத்தூள் - 5 கிராம் மிளகுத்தூள் - 5 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமி
 13. குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா? அ-அ+ தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள். நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக
 14. 101. சிந்திக்கும் மிருகம் குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஆசிரமத்தை விட்டு விலகியதைப் பற்றி முன்பே ஒரு முறை சொன்னேன் என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவம் அப்போது என்னோடு ஆசிரமத்தில் இருந்த சஹிருதயர்கள் அனைவரையும் மிகவும் பாதித்திருந்தது. நான் அங்கிருந்த நாள்களில் ஒருவராலும் என்னைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதைக் குறித்துப் பலகாலம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று பிறகு அறிந்தேன். அதைவிட அவர்களுக்குப் பெரிய வியப்பு, குரு எப்படி என்னை எனது அனைத்துப் பிழைகளோடும் ஏற்று ஆதரித்தார் என்பது. சில சமயம் எனக்கேகூட அந்த வினா எழுந்
 15. கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -156) அரசும் மதமும் ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய நியாயப்படுத்தல், பல நூற்றாண்டுகளுக்கு, “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமை” என்ற ரீதியில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. அதாவது, அந்த உரிமை இறைவனால் நேரடியாக அரசனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்பட்டது. இதனால் அரசன்
 16. கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி? அ-அ+ அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - 500 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் - 50 கிராம், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
 17. உடல் எனும் இயந்திரம் 35: தகவல் தடங்கள் அலைபேசிக் கண்டுபிடிப்புக்கு முன்னால், உலக அளவில் தகவல் தொடர்புக்குப் பிரதான மார்க்கமாகத் தொலைபேசித் தடங்களே இருந்தன. கம்பி மூலம் மக்களைத் தொடர்புகொள்ள வைக்கும் இந்தத் தடங்கள் இப்போதும் இருக்கின்றன. இவற்றைத் ‘தொலைதொடர்புத் தகவல்துறை’ நிர்வகிக்கிறது. இதுபோலவே நம் உடலிலும் தகவல்களைக் கடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் ‘நரம்பு மண்டலம்’ இருக்கிறது. அதில் நரம்புகள் எனும் தடங்கள் நிறைய இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் தலைமைச் செயலகமாகத் திகழும் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. உடலில் எந்த ஒரு செயலும் மூளையின
 18. 100. அருந்தூய்மை என்னால் மறக்கவே முடியாத ஒரு தினம் உண்டென்றால் அது அன்றைய தினம்தான். வாழ்வில் முதல் முறையாகவும், ஒரே முறையாகவும் நான் சில தீர்மானங்கள் செய்துகொண்டேன். அவை அனைத்துமே என் குருநாதர் எனக்குப் பிட்சையாக அளித்த யோசனைகள். ‘விமல்! ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன்னார். நான் உடனே, ‘பெண்?’ என்று கேட்டேன். குரு சிரித்தார். ‘இல்லாதிருந்தால் நல்லது. இருந்தே தீருமானால் அதனால் வரக்கூடிய சிறு இ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.