Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி அ-அ+ தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 1 இறால் - கால் கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் கரம் மசால் பொடி - அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
 2. ஜே.ஆரின் முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 154) ஜே.ஆர் முன்மொழிந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்தின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய சர்வகட்சி மாநாட்டில், புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு, ஜே.ஆர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக, மாநிலங்களின் சபை ஒன்றை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த, ஜே.ஆர் அரசாங்கம் விளைந்திருந்தது. ப
 3. உடல் எனும் இயந்திரம் 33: சுரப்பிகளின் தலைவன் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றைத் தூண்டிச் செயல்படுத்துவதற்கும் ‘பிட்யூட்டரி சுரப்பி’ (Pituitary gland) இருக்கிறது. நாளமில்லாச் சுரப்பிகளுக்கு எல்லாம் தலைவன் (Master gland) இது. மூளையின் அடிப்புறத்தில் கபாலத்தின் மத்தியில் ஸ்பீனாய்டு (Sphenoid) எனும் எலும்பு இருக்கிறது. அதில் உள்ள சிறு பள்ளத்தில் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது. இதற்கு ‘ஹைப்போபிஸிஸ்’ (Hypophysis) என்ற பெயரும் உண்டு. மரத்தில் பழம் தொங்குவதைப்போலத்தான் இத
 4. 93. சிலுவை நாம் ஹரித்வாருக்குப் போகலாம் என்று குரு சொன்னார். அந்த வருடம் மகா கும்பமேளா நடக்க இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே குரு அநேகமாக தினம் ஒருமுறையாவது அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மனக்கட்டமைப்புக்கு கும்பமேளாவைப் போன்ற விழாக்கள் எவ்வாறு கவனம் ஈர்க்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் போக வேண்டும், போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆசிரமத்துக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சலூன் கடைக்காரரிடம் சொல்லி எங்கள் ஐந்து பேருக்கும் ரயில் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கிளம்புவதற்கு ஒரு வாரம்
 5. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 12 ‘‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே! நாகலோகம் அல்லது நாக நாடு என்பது புராணக் கற்பனை அல்லவா..? ரத்தமும் சதையுமான மனிதர்கள் உயிருடன் வாழும் பிரதேசமா..?’’ஆச்சர்யம் விலகாமல் சிவகாமி கேட்டாள். ‘‘ஆம் குழந்தாய்! அந்த உலகத்தைச் சேர்ந்தவன்தான் நான்! பல்லவ குடியின் கிளை மரபினர் மட்டுமல்ல... சோழ அரச பரம்பரையின் வம்சாவளியினரும் அந்த நிலப்பரப்பைத்தான் ஆட்சி செய்கின்றனர். திகைக்க வேண்டாம். கோச்செங்கட் சோழ மன்னனின் சரித்திரம் உணர்த்தும் உண்மை இது...’’ கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தன்னிடம் வினவிய சிவகாமியையும், கேள்வி கேட்காமல் தன்னையே பார்த்துக் கொ
 6. 92. மிருக நடமாட்டம் மடிகேரியில் குருநாதரின் ஆசிரமம் இருந்த இடம் ஒரு வினோதமான பிராந்தியம். அந்தக் குன்றின் சரிவுகளில் எல்லா மலை வாசஸ்தலங்களிலும் இருப்பது போன்ற குட்டை வீடுகள், சரிவு வீடுகள் உண்டு. ஆனால் ஆசிரமம் அனைத்துக்கும் மேல் வரிசையில் ஒரு மொட்டைப் பாறையின் பின்புறம் தனியே அமைந்திருக்கும். ஆசிரமம் இருக்கும் இடத்துக்கு முந்தைய கொண்டை வளைவு வரை வண்டிகள் வரும். ஆனால் ஆசிரமத்துக்கு ஒரு சைக்கிள்கூட வர முடியாது. குன்றின் அடிப்பகுதியில் இருந்து குடைந்து குடைந்து சாலைகளைப் போட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு அந்த இடம் வந்தபோது அலுத்திருக்கும் என்
 7. 91. தியானம் குருநாதரும் என் சகாக்களும் மழை பார்த்துவிட்டுத் திரும்பி வருவதற்கு மாலை ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டது. நான்கு பேரும் ஈரத்தில் விரைத்துப் போய் வந்து சேர்ந்தார்கள். குரு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தார். அவரது விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் அவர்கள் வருகையை எதிர்பார்த்து நான்கு கனமான காய்ந்த டர்க்கி டவல்களை எடுத்து வைத்திருந்தேன். உள்ளே நுழைந்ததும் அதைக் கொடுத்தேன். அவர்கள் துடைத்துக்கொண்டு ஆ, ஊ என்று குளிரைக் கொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஈரத் துணிகளைக் களைந்து உடம்பெங்கும் துடைத்துவிட்டு, புதிய ஆடைகளை அணிந்துகொண்
 8. உடல் எனும் இயந்திரம் 32: பாம்பைக் கண்டால் பயந்து ஓடுவது ஏன்? தைராய்டு சுரப்பிக்குப் பின்புறத்தில் அதனோடு ஒட்டினாற்போல் அமைந்துள்ள சுரப்பிகளுக்கு ‘பாராதைராய்டு சுரப்பிகள்’ (Parathyroid glands) என்று பெயர். இவை பக்கத்துக்கு இரண்டு என மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. நான்கும் சேர்த்து 120 மி.கி. வரைதான் எடை இருக்கும். இந்தச் சுரப்பிகள் உடலில் இருப்பதை 1877-ல் முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் சுவீடனைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சேன்ட்ஸ்ட்ரோம் (Sandstrom). இவை பார்ப்பதற்குச் சற்றே மஞ்சள் கலந்த மா
 9. முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள் அ-அ+ முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரத
 10. 90. மழை மாநிலம் முழுதும் மழை அடித்துப் புரட்டிக்கொண்டிருந்தது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். மடிகேரியிலேயே ஏழெட்டு இடங்களில் நிலச்சரிவு உண்டாகி, போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. வெளியூர் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாமல் எங்கெங்கோ பாதி வழியில் நின்றுகொண்டிருந்தன. காலை ஆறு மணிக்குப் பெய்யத் தொடங்கும் மழை, இடைவிடாமல் மதியம் வரை பெய்துகொண்டே இருந்தது. ஒரு நாள் இருநாளல்ல. ஒரு வாரமாகவே அப்படித்தான் இருந்தது. இரண்டு மணிக்குப் பிறகு சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் நான்கு மணிக்கு மழை பிடித்துக்கொண்டுவிடும்.
 11. வியர்வை கொண்டு மன அழுத்தத்தை அறியலாம் மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம் உடலின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை நொடிகளில் கண்டறியும் வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோளில் அணியக்கூடிய சிறிய பட்டை நம் தோலில் ஒட்டிக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹோர்மோனை நொடிகளில் கண்டறிந்து விடும். நாள் முழுக்க உடலில் கார்டிசல் அளவு இயற்கையாகவே ஏறி, இறங்கும், அந்த வகையில் வழக்கமான காஜ் மனிதர்களின் உ
 12. 89. பெண் வாசனை அவருக்குப் பெயர் கிடையாது. அதாவது அவர் தனது பெயரை யாரிடமும் சொன்னதில்லை. பெயரற்ற ஒருவராகத் தனது அடையாளத்தை நிறுவிக்கொள்வதில் அவருக்கு இளம் வயதில் ஓர் ஆர்வம் இருந்திருக்க வேண்டும். பழகிவிட்ட பின்பு அதையே பின்பற்ற வேண்டியது ஒரு கட்டாயமாகியிருக்கும். ஆரம்பத்தில் அவர் பெயர் தெரியாது என்று மற்ற சீடர்கள் சொன்னபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. உங்கள் பெயர் என்ன என்று நான் கேட்டபோது அவர் வெறுமனே சிரித்தார். ‘அது அத்தனை முக்கியமா?’ என்று கேட்டார். முக்கியமில்லைதான். ஆனாலும் குறிப்பிடுவதற்கு
 13. 88. உயர்ஜாதி மிருகம் முதல் முதலில் அவரை நான் பார்த்தபோது இந்த மனிதர் இன்னும் சற்று அழகாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஓர் அழகனாக உருப்பெறத் தொடங்கி, என்ன காரணத்தாலோ பாதியில் கைவிடப்பட்ட படைப்பாகத் தெரிந்தார். அவர் உயரமாகவும் இல்லை. குள்ளமும் இல்லை. ஒல்லியாகவோ, இரட்டை நாடி சரீரம் கொண்டவராகவோ இல்லை. விழிகள் கூர்மையாக இருந்தன. ஆனால் கண்ணின் கீழ்ப்புறம் படிந்திருந்த நிழலில் விழுந்து ஒளி மங்குவதுபோலத் தோன்றியது. தாடி வைத்திருந்தார். அது இல்லாதிருந்தால் இன்னும் சற்று அழகாகத் தெரிவாரோ என்று நினைக்கும்படியாகவே அதுவும் இருந்தது. அவர் அணிந்திருந்த காவி
 14. மணலாற்று வன்முறைகள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 153) யார் பொறுப்பு? அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது. 1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில் ‘கென்ட்’, ‘டொலர்’ பண்ணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது அரசாங்கம், அரச படைகளைத் தாண்டி, விடுதலைப் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது, நடாத்தப்பட்ட முதல் தாக்குதலாகக் கருதப்
 15. 87. சேரிடம் அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்று திடுக்கிட்டாற்போலத் தான் தெரிந்தது. அதனால் என்ன? எனக்குள் ஒரு பாறையை உடைத்துவிட்டாற்போலத் தோன்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. ஐந்து ரூபாய் எதற்கு? டீ வேண்டுமானால் குடித்துக்கொள் என்று அவன் சொன்னான். ‘இல்லை. நான் கழிப்பிடம் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உணவைப் பற்றியோ பானத்தைப் பற்றியோ நினைக்க முடியும்’ என்று சொன்னேன். ‘வெளியூரா?’ ‘ஆம். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’. ‘பையை - பணத்தைத் தவறவிட்டுவிட்ட
 16. ரத்தமகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் -11 ‘‘கரிகாலா! பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவர் தண்டியையும் என் அண்ணனும் பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மரையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்து விடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தை காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’சொன்ன ஹிரண்ய வர்மர், நிமிர்ந்து குரல் கொடுத்தார். ‘‘சிவகாமி!’’‘‘தந்தையே!’’‘‘உச்சியில் கைக்கு அடக்கமாக ஒரு கல் இருக்கிறதா?’’‘‘ம்...’’‘‘அதை எடுத்துக் கொண்டு ஐந்தடி நகரு... இன்னும் கொஞ்சம்... ஆம். அங்குதான்! வட்டமாகக் குழி ஒ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.