Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 200 கிராம் தக்காளி - 1 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு சோம்பு தூள் - அரை ஸ்பூன் கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் மிளகாய் தூள் - அரை ஸ்பூன் தனியா தூள் - கால் ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பஜ்ஜி மாவு - 1 கப் அரிசி மாவு - 3 ஸ்பூன். செய்முறை : தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி. சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன் பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் - 4 தக்காளி - 2 வெங்காயம் - 2 சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 குடை மிளகாய் - 1 வெங்காயத்தாள் - சிறிதளவு மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன் மைதா - ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு சோயா சாஸ் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறுங்கள். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.
  2. சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய் பூரி, புலாவ், பிரியாணி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையான இருக்கும் இந்த தயிர் வெண்டைக்காய். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். தயிரை நன்றாக கடைந்து வைக்கவும். வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  3. சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 1 கப் குடைமிளகாய் - 1 கப் பச்சை பட்டாணி - 1 கப் பீன்ஸ் - 1 கப் வெங்காயம் - 2 ஓட்ஸ் - 1 டீ கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 3 கடுகு - கொஞ்சம் உப்பு - தேவையான அளவு செய்முறை : வழக்கமாக உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு செய்வது போல் ஓட்ஸ் உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய டீ வடிகட்டி அல்லது சல்லடையில் ஓட்ஸைப் போட்டு அதைத் தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து, தண்ணீர் விட்டு லேசாக அலசி விட்டுப் போட்டாலே ஓட்ஸ் சாஃப்ட்டாகி விடும்! வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். காய்கறிகள் வெந்தவுடன் அதில் ஓட்ஸ், உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளற இறக்கவும். சூப்பரான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.
  4. சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடைந்த தயிர் - 250 மி.லி. உருண்டை செய்ய... கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்தமிளகாய் - 10, தனியா - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு, எண்ணெய் - 4 டீஸ்பூன். அரைக்க... தனியா - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 6, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், அரிசி - 1 டீஸ்பூன். தாளிக்க... எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து. செய்முறை : கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும். சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.
  5. "கீழடி அகழ்வாராய்ச்சி" வெறும் கண்துடைப்பு நாடகமா? 'கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2,200 வருடங்கள் பழமையானவை' என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டே இரண்டு பொருள்களை வைத்து மட்டுமே கீழடியின் தொன்மையைச் சொல்லிவிட முடியாது. அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே. கீழடியின் உண்மையான தொன்மையைக் கணக்கிடமுடியும் எனத் தற்போது பலரும் கூறி வருகின்றனர். "மதுரை அருகேயுள்ள கீழடி என்ற இடத்தில், கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தைக் கண்டறிய, அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா?" என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள 'பீட்டா அனலடிக்' என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா நேற்று வெளியிட்டார். அதில் "கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது" என்றும் அமைச்சர் தெரிவித்தார். காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே 'சங்ககால நகரம்' ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்" என்றார். ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண் பாண்டமும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பாரம்பர்யத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைத்துள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் பத்து பொருள்களையாவது கார்பன் பகுப்பாய்வு முறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இரண்டே இரண்டு பொருள்களை மட்டுமே மத்திய கலாசாரத்துறை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. அதற்கான முடிவுகள் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. கீழடியில் இருக்கும் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி நடத்தி, அங்கு கிடைக்கும் பொருள்களைக் அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்" என்றார். தமிழர் நாகரிகம் பற்றிச் சொல்லும் கீழடி குறித்து, தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசியபோது, 'கீழடி அகழ்வாராய்ச்சி - தமிழக வரலாற்றைக் குறிக்கும் மிகமுக்கிய ஆவணம். ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழியில், மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருள்களின் காலம், சுமார் 2,200 வருடங்களுக்கு முந்தையது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து நான்கு முதல் ஆறு மீட்டர் தோண்டினால்தான் மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைக்கப்பெறும். அதையும் கார்பன் பகுப்பாய்வு பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும். இதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை? அதோடு, கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை மீண்டும் கீழடியில் பணியமர்த்த மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார். தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியில் முழுமையாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். இங்கிருந்து மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை மீண்டும் இங்கேயே திரும்பக் கொண்டுவந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடியில் குறிப்பிடப்படும் 110 ஏக்கர் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி ஆராய்ச்சியைத் தொடங்கிய அமர்நாத்தை மீண்டும் கீழடிக்குப் பணியமர்த்த வேண்டும். இல்லையெனில், 2000 வருடங்கள் பழமையான நாகரிக இடத்தில், தற்போது நடந்துவரும் அகழ்வாராய்ச்சி வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். http://www.vikatan.com/news/tamilnadu/97204-secrets-behind-keezhadi-excavation.html
  6. கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைK STALIN கீழடியில் உள்ள பொருள்கள் சங்க காலத்தை சேர்ந்தவை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார். அதில், கீழடியில் இருந்து இருந்து கரியமில பொருள்கள் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். மேலும், அந்த கார்பன் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் முதலாவது மாதிரியின்படி, இவை சுமார் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின்படி இவை 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார். கீழடியில் முன்பு தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு தொல்லியல் கண்காணிப்பாளராக கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார். தற்போது அவர் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றார். கீழடி அகழ்வாய்வுப் பணியின்போது, ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள் அங்குள்ள மாதிரிகளில் இருந்தன என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார். சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. http://www.bbc.com/tamil/india-40761846
  7. சூப்பரான இறால் – காய்கறி சூப் இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் – காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான இறால் – காய்கறி சூப் தேவையான பொருட்கள் : விருப்பமான காய்கறிகள் – 200 கிராம் இறால் – 100 கிராம் வெள்ளை வெங்காயம் – 1 சோயா சாஸ் – 1 டீஸ்பூன் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் கார்ன் ஃபிளார் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு வெங்காயத்தாள் – சிறிதளவு செய்முறை : * இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள். * கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். * கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும். * வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். * வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள். * வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள். * இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள். * சத்து நிறைந்த இறால் – காய்கறி சூப் ரெடி.
  8. இன்னோவேட்டிவ் ரெசிப்பி பிரியா சதீஷ் கேசரியை அப்படியே எத்தனை நாள்தான் சாப்பிடுவது? அதையே `ஸ்வீட் ரோல்’ ஆக மாற்றினால்..? கற்பனைக்கே எட்டாத வகையில் தர்பூசணியில் கபாப் செய்தால்..? வாழைக்காயை `பேஸ்’ ஆக்கி பீட்சா தயாரித்தால்..? இவை அத்தனையும் ‘அடடா... என்ன ருசி’ என ரசிக்கும் வகையில் இருந்தால்..? அவைதாம் இன்னோவேட்டிவ் ரெசிப்பிகள். இப்படி பாரம்பர்யமும் நவீனமும் கலந்த ஃப்யூஷன் உணவுகளைக் கண்டறிந்து நமக்காக அளித்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். சுவைக்கத் தூண்டும் படங்களைப் பிடித்தவரும் அவரே. ம்யூஸ்லி மஷ்ரூம் பணியாரம் தேவையானவை: மைதா மாவு – ஒரு கப் ம்யூஸ்லி – அரை கப் (சர்க்கரை சேர்க்காதது) முட்டை – 2 பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப் மஷ்ரூம் – 4 (பொடியாக நறுக்கவும்) பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது) எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், மஷ்ரூம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். மைதா மாவுடன் ம்யூஸ்லி, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, பால் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும். சின்டா சிகுரு பொட்டேட்டோ லாலிபாப் தேவையானவை: உருளைக்கிழங்கு – 2 பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் வறுத்த கடலை மாவு – கால் கப் சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு உப்பு – தேவையான அளவு அரைக்க: பிஞ்சு புளியந்தழை – முக்கால் கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். இதனுடன் பனீர் துருவல், கடலை மாவு, சாட் மசாலாத்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்துப் பிசையவும். இந்த மசாலா கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருண்டைகளைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, மொறுமொறுவென பொரித்து எடுக்கவும். இந்தப் பொரித்த உருண்டைகளின் நடுவே லாலிபாப் குச்சியைக் குத்தி, தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும். ஃபிஷ் ஸ்டஃப்டு பீட்ரூட் பான் கேக் சாண்ட்விச் தேவையானவை: பான் கேக் செய்ய: மைதா மாவு – ஒரு கப் பீட்ரூட் – ஒன்று பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் முட்டை – ஒன்று உப்பு – கால் டீஸ்பூன் பால் – கால் கப் (காய்ச்சி ஆற வைத்தது) எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஸ்டஃப்பிங் செய்ய: மயோனைஸ் – அரை கப் சூரை மீன் (டியூனா ஃபிஷ்) – அரை கப் (டின்களில் கிடைக்கும்) செய்முறை: பீட்ரூட்டை வேகவைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். இதுவே பீட்ரூட் ப்யூரி. மயோனைஸுடன் சூரை மீன் சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். மைதா மாவுடன் பேகிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால், பீட்ரூட் ப்யூரி சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் மைதா கலவையைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். சாண்ட்விச் டோஸ்டரில் முதலில் சிறிதளவு மைதா - பீட்ரூட் கலவையை ஊற்றவும். இதன் மேலே சிறிதளவு மயோனைஸ் கலவையை வைக்கவும். பிறகு, இதன்மீது மீண்டும் சிறிதளவு மைதா - பீட்ரூட் கலவையை ஊற்றி மூடி வேகவைத்து எடுக்கவும் (டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும். அதுதான் சரியான பதம்). இதை சாஸுடன் பரிமாறவும். வாழைக்காய் ஜாமூன் ட்ரஃபிள் தேவையானவை: சாக்லேட் - க்ரீம் பிஸ்கட் - ஒரு பாக்கெட் விப்பிங் க்ரீம் – தேவையான அளவு ஜாமூன் செய்ய: வாழைக்காய் – ஒன்று பால் பவுடர் – அரை கப் மைதா மாவு - 4 டேபிள்ஸ்ஸ்பூன் ரவை – ஒரு டேபிள்ஸ்ஸ்பூன் நெய் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு பாகு செய்ய: சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் ஏலக்காய் – 3 (நசுக்கவும்) செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே பாகு. வாழைக்காயை வேகவைத்து தோல் நீக்கி கட்டியில்லாமல் மசிக்கவும். இதனுடன் பால் பவுடர், மைதா, ரவை, நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து தனியே வைக்கவும். உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு, இந்த உருண்டைகளைப் பாகில் போட்டு ஊறவைக்கவும். பிஸ்கட்டுகளை கொரகொரப்பான தூளாக நொறுக்கவும். கண்ணாடிக் குவளையில் பிஸ்கட் தூளை முதல் லேயராக பரப்பவும். இதன் மீது ஊறிய ஜாமூன் உருண்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும். பிறகு இதன் மீது விப்பிங் க்ரீமைப் பரவலாக ஊற்றவும். இறுதியாக மேலே ஒரு ஜாமூன் உருண்டையை வைத்து அலங்கரிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பரிமாறவும். வெற்றிலை - இறால் ஸ்கீவர்ஸ் தேவையானவை: இறால் – 25 வெற்றிலை - 6 கொத்தமல்லித்தழை – சிறிதளவு பைன் நட்ஸ் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு மூங்கில் குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) – தேவையான அளவு செய்முறை: வெற்றிலையுடன் கொத்தமல்லித்தழை, பைன் நட்ஸ், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சுத்தம் செய்த இறால்களை, நடுவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை நீக்கிவிட்டு, அரைத்த விழுதுடன் சேர்த்துக் கலந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஒவ்வொரு ஸ்கீவரிலும் 3 அல்லது 4 இறால்களைக் குத்தி வைக்கவும். கிரில் பேனை (Grill pan) சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி ஸ்கீவர்ஸை அடுக்கி மேலே ஊறிய இறால் சாற்றைத் தடவி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாக மயோனைஸ் அல்லது சால்சாவுடன் பரிமாறவும். சூரை மீன் பவுல் கேக் தேவையானவை: மைதா மாவு - 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன் முட்டை - ஒன்று சூரை மீன் (ட்யூனா ஃபிஷ்) - 2 டீஸ்பூன் (டின்களில் கிடைப்பது) ட்யூனா டின்னில் உள்ள எண்ணெய் - 2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: சூப் பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, ட்யூனா டின்னில் உள்ள எண்ணெயைச் சேர்த்து நன்கு அடிக்கவும். இதையும் மீன் துண்டுகளையும் மைதா கலவையுடன் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு இந்த பவுலை `மைக்ரோவேவ் அவனில்’ ஒரு நிமிடம் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை வைத்து வேகவிட்டு எடுத்து, சூடாகப் பரிமாறவும். குறிப்பு: டின் மீனில் உப்பு கலந்திருப்பதால் தேவையான அளவு உப்பு மட்டுமே சேர்க்கவும். கற்பூரவல்லி சிக்கன் தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுக்கறி – 2 துண்டுகள் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) கற்பூரவல்லி இலை - 15 கொத்தமல்லித்தழை – சிறிதளவு பச்சை மிளகாய் - 2 சீரகத்தூள் – அரை டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் தயிர் - 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு மூங்கில் டிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு செய்முறை: கற்பூரவல்லி இலையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், தயிர், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். சிக்கனை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும் (chicken strips). இதை அரைத்த விழுதுடன் சேர்த்துக் கலந்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். டிக்கா குச்சிகளைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். டிக்கா குச்சிகளில் சிக்கனை மடித்து குத்தவும். கிரில் பேனை (Grill pan) சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி டிக்கா குச்சிகளை அடுக்கி, சிக்கன் ஊறிய மீதமுள்ள சாற்றை மேலே தடவி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். வாழைக்காய் பிளேட் பீட்சா தேவையானவை: பீட்சா பேஸ் செய்ய: வாழைக்காய் – ஒன்று (வேகவைத்து தோல் சீவி, மசிக்கவும்) மைதா மாவு – கால் கப் பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை எண்ணெய், உப்பு – தேவையான அளவு பீட்சா செய்ய: வெங்காயம் – ஒன்று (வட்ட வடிவமாக நறுக்கவும்) தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மொசரல்லா சீஸ் துருவல் – ஒரு கப் பாஸ்தா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சீஸனிங், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு செய்முறை: மசித்த வாழைக்காயுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது). இதனுடன் தேவையான அளவு எண்ணெய் விட்டு மாவாகப் பிசையவும். இந்த மாவை இரு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பிறகு, ஒவ்வொரு பாகத்தையும் உருட்டி கைகளால் கனமான தட்டை போல தட்டவும். இதுவே பேஸ். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பீட்சா பேஸைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதன் மீது பாஸ்தா சாஸைப் பரவலாகத் தடவவும். மேலே வெங்காய வில்லைகள், தக்காளி, பச்சை மிளகாயை வைத்து அடுக்கவும். இதன் மீது சீஸ் துருவலைப் பரவலாகத் தூவவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, தயாரித்து வைத்துள்ள பீட்சாவை வைத்து மூடி, தீயைக் குறைக்கவும். சீஸ் உருகிய பிறகு எடுக்கவும். மேலே பீட்சா சீஸனிங், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி, சூடாகப் பரிமாறவும். குறிப்பு: குடமிளகாய், மஷ்ரூம் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். தர்பூசணி ரிண்ட் கபாப் தேவையானவை: தர்பூசணியின் தோலுக்கும் சதைக்கும் நடுவில் இருக்கும் வெள்ளைப் பகுதி (துருவியது) – ஒரு கப் வாழைக்காய் – ஒன்று (வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும்) கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன் முந்திரி - 4 ஏலக்காய் - ஒன்று அன்னாசி மொட்டு - ஒன்று கிராம்பு - 2 காய்ந்த மிளகாய் - 2 கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கைப்பிடியளவு இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் ஐஸ்க்ரீம் குச்சிகள் அல்லது மூங்கில் குச்சிகள் - 10 எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: தர்பூசணித் துருவலில் உள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், மல்லி (தனியா), முந்திரி, ஏலக்காய், அன்னாசி மொட்டு, கிராம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் தண்ணீர்விடாமல் பவுடராக அரைக்கவும். வெந்த தர்பூசணி, மசித்த வாழைக்காய், மஞ்சள்தூள், சாட் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் அரைத்த பவுடரைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஐஸ்க்ரீம் குச்சி அல்லது மூங்கில் குச்சியைச் சுற்றிலும் பிடித்து வைத்து கபாப் செய்யவும். தோசைக்கல்லைச் சூடாக்கி கபாப்களை அடுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். கேசரி ஸ்வீட் ரோல் தேவையானவை: ஸ்பிரிங் ரோல் ஷீட் - 7 வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு – சிறிதளவு கேசரி செய்ய: வறுத்த ரவை – அரை கப் சர்க்கரை – அரை கப் நெய் – கால் கப் தண்ணீர் – ஒன்றரை கப் முந்திரி - 5 (நறுக்கவும்) திராட்சை – 5 ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்) பாகு செய்ய: சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர், ஃபுட் கலர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வறுத்த ரவை சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, கட்டிதட்டாதபடி நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, நெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மேலும் கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து இறக்கி ஆறவிடவும். மைதா மாவைச் சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். ஸ்பிரிங் ரோல் ஷீட்டில் ஒரு ஓரத்தில் சிறிதளவு கேசரி வைத்து பாய்போல சுருட்டவும். முனைகளில் மைதா கலவையைத் தடவி கேசரி வெளியே வராமல் ரோலை ஒட்டவும். எல்லா ஸ்பிரிங் ரோல் ஷீட்களையும் இப்படியே செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து இந்த ரோல்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பாகு செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையுடன், தண்ணீர் சேர்த்து இரண்டு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். பொரித்த ரோல்களைப் பாகில் போட்டு இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். மேலே வறுத்த எள் தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.
  9. சூப்பரான சைடிஷ் நண்டு பொடிமாஸ் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நண்டு - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் தட்டிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் - சிறிது. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன். செய்முறை : நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும். அடுத்து அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். பிரட்டும் போதே உதிர்ந்து விடும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும். சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்.
  10. குழந்தைகளுக்கு விருப்பமான கான்ட்வி செய்வது எப்படி வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்து விட்டால் அவர்களுக்கு இந்த கான்ட்வியை செய்து கொடுத்து அசத்தலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு - 100 கிராம், புளித்த தயிர் - 3/4 கப் மற்றும் 2 1/4 கப் தண்ணீர் அல்லது புளித்த மோர் - ¾ கப், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பெருங்காயம் - சிறிது. தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன். அலங்கரிக்க... எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 8-10, கடுகு - 1 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 அல்லது மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன். செய்முறை : ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து இதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து இத்துடன் கடலைமாவு சேர்த்து நன்கு மிருதுவான மாவாக கலக்கவும். ஒரு ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். விடாமல் கட்டியில்லாமலும் அடிப்பிடிக்காமலும் கிளறவும். சிறிதளவு மாவை ட்ரேயில் வைத்து ஆறியவுடன் ரோல் செய்யவும். செய்ய முடியாவிட்டால் மாவு சரியான பதத்துக்கு வரவில்லை என்று அர்த்தம். மாவு பதம் வந்தவுடன் அதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி நன்கு கரண்டியால் பரப்பி விடவும். 1:3 என்ற விகிதத்தில் கடலைமாவு மற்றும் மோரை எடுத்து கலந்து மிதமான கலவையாக ஆக்கவும். வேண்டுமானால் இஞ்சி, பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கலாம். இதன்மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை போட்டு ரோல் செய்யவும். சரியான அளவு துண்டுகளாக வெட்டவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், எள் போட்டு வறுத்து கான்ட்வி ரோல் மேல் தூவி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம். சூப்பரான கான்ட்வி ரெடி.
  11. சக்கந்தி கிராமத்தில் சக்கைப்போடு போடும் உப்புக்கறி! - கிராமத்து மணம் இன்று சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், இத்தாலியன் என்று பலவகை சமையல்கள் நமக்கு அருகிலேயே கிடைத்தாலும், மண்பானையில் சமைத்து ஒவ்வொரு உருண்டையாக உருட்டி பாசத்தோடு கொடுக்கும் பாட்டியின் கைப்பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை. சிவகங்கையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் கூலி வேலை செய்பவர். வீட்டுக்கு முன் மண்ணாலான அடுப்பு, சாணம் பூசி அத்தனை அம்சமாக இருக்கிறது. ஆறு பேரக்குழந்தைகளும் பள்ளி சென்றுவிட, நமக்காக சக்கந்தி கிராமத்து உணவுகளை சமைத்துக் காட்டினார். ‘`ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. எனக்கு 48 வயசாகுது. அம்மா காலத்திலிருந்தே ஊர்த் திருவிழா நேரத்தில் வீட்டுக்கு வீடு இந்தக் கறிதான் மணக்கும். விருந்தாளிகள், வீட்டு மாப்பிள்ளை என யார் வந்தாலும் உப்புக்கறிதான். இந்தக் கறியை எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பில் கொழுப்பு வைக்காது. எங்க வீட்டு சின்னப்பிள்ளைகள்கூட அசால்ட்டா ஒரு கிலோ கறியைச் சாப்பிடுவாங்க. ஒவ்வொரு வாரமும் உப்புக்கறிதான் செய்வோம். பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியா இருக்கும். இதோடு, மாங்காய் பச்சடி ஜாம் தொட்டுக்கிட்டா செரிமானம் சுலபமா நடக்கும்’’ என்கிற முனியாம்மா வழங்கிய உப்புக்கறி செய்முறை இதோ... உப்புக்கறி தேவையானவை: வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ எண்ணெய் - 200 மில்லிகிராம் சோம்பு - ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 200 கிராம் காய்ந்த மிளகாய் - 150 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 150 மில்லி சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப உப்பு - தேவையான அளவு செய்முறை: மண் அடுப்பில் தீயைப் பற்றவைத்து, மண்சட்டியை வைக்கவும். மண்சட்டி சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சோம்பு போட்டு பொரியவிடவும். பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், தயாராக இருக்கும் ஆட்டுக்கறியை மண்சட்டியில் போடவும். சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும். தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும். அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.
  12. சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை போல் முட்டை பிரியாணியும் சூப்பராக இருக்கும். இன்று முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரை கிலோ, முட்டை - 10, தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 3, கடைந்த தயிர் - 1 கப், எண்ணெய் - அரை கப், நெய் - கால் கப், உப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன். அரைக்க: பட்டை - 2, லவங்கம் - 2, ஏலக்காய் - 6, பச்சை மிளகாய் - 5, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி. செய்முறை: * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். * அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். * முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். * அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள். * அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும். * எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள். * இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். * சூப்பரான முட்டை பிரியாணி ரெடி. சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு உடல் உபாதைகள், வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பூண்டு - 30 பல் சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 மல்லித்தூள் - 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி புளி - நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். * வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை. * தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். * தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். * அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். * சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி. * பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.