Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. மாலு பாண் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மா - 3 பேணி ஈஸ்ட் - 3 தேக்ககரண்டி சீனி - ஒரு தேக்ககரண்டி பட்டர் - அரை தேக்ககரண்டி முட்டை (மஞ்சள் கரு) - ஒன்று உப்பு - தேவையான அளவு மீன் டின் பிரட்டல் கறி - தேவையானளவு உப்பு - தேவையான அளவு (ஒரு தேக்கரண்டி) எண்ணெய் - தேவையானளவு செய்முறை : ஈஸ்ட், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும் (2 நிமிடங்களுக்குள் இக்கலவை பொங்கி வரும்). இக்கலவை பொங்கி வந்த பின்பு இதில் மா, உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதை கொஞ்ச நேரம் மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் வைப்பது போல் மீன் டின் பிரட்டல் கறியினை போட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணெய் தடவிய தட்டில் எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள். வேகும் போது பாணின் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையினால் (Brush) தொட்டு பூசிவிடுங்கள். 200 டிகிரி Cயில் 15 நிமிடங்கள் 150 டிகிரி C யில் 20 நிமிடங்கள் அவனில் பேக் பண்ணி கொள்ளுங்கள். நன்றாக பேக் பண்ணியதும் அதை பரிமாறவும்.
  2. கீரை கார்ன் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் - ஒரு கப், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகத் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும். பலன்கள்: இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளன. காலை உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளும் வயதானவர்களும் சாப்பிடலாம்.
  3. மைக்ரோவேவ் அவனை உபயோகிக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் பக்கங்கள் நிச்சயம் உபயோகமாக இருக்கும். மைக்ரோவேவ் அவனில் ஸ்பெஷலிஸ்டான சசிமதன், இனி உங்களுக்குத் தொடர்ந்து மைக்ரோ அவன் ரெசிப்பியைத் தர இருக்கிறார். மைக்ரோவேவ் அவன் ஓர் அறிமுகம் சில வகைகள். 1. சோலோ இதில் உணவுகளை சமைப்பது, சூடு செய்வது, வேகவைப்பது போன்றவற்றைச் செய்யமுடியும். 2. கிரில் பதார்த்தங்கள் சிவக்க வேக வேண்டும் என்றால், கிரில் மோடில் வைக்கவேண்டும். 3. கன்வெக்‌ஷன் கேக், பிஸ்கட், பஃப், பன், பிரெட் போன்றவை செய்யமுடியும். கேக், பிஸ்கட் போன்றவற்றை பேக்கிங் அவனில் மட்டுமே செய்கின்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வெளிவரும் மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, பிறகு பேக்கிங் செய்யலாம். அவனில் உள்ள ஹீட் மோடின் அளவுகளைப் பார்க்கலாம். ஹை பவர் 100% ஹை மீடியம் 80% நடுத்தர ஹை மீடியம் 60% மீடியம் லோ 40% லோ 20% அவரவர் வைத்திருக்கும் மைக்ரோ வேவ் அவனுக்கு ஏற்றவாறு, நேரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும். தேங்காய் பிஸ்கட் தேவையானவை: மைதா மாவு முக்கால் கப் வெண்ணெய் 1/3 கப் கொப்பரைத்துருவல் 4 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை அரை கப் செய்முறை: ஒரு பவுலில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நுரைக்க அடித்துக் கொள்ளவும். இத்துடன் மைதா மாவு மற்றும் கொப்பரைத்துருவலையும் சேர்த்துப் பிசைந்து கையால் தட்டி பிஸ்கட் கட்டர் அல்லது ஏதாவது ஒரு வட்டமான மூடியால் விருப்பமான வடிவத்துக்கு கட் செய்யவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றுக்கும் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, டிரேயை உள்ளே வைத்து மூடி 80 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடம் பேக் செய்யவும். பிறகு வெளியே எடுத்து ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். கரகரப்பான கிரன்சி பிஸ்கட் ரெடி. குறிப்பு: பிஸ்கட் வகைகளுக்கு அவனை ப்ரீஹீட் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. புடலங்காய்க் கூட்டு தேவையானவை: புடலங்காய் அரை கிலோ பயத்தம்பருப்பு அரை ஆழாக்கு பெருங்காயம் சிறிதளவு மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு சீரகம் ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 3 தேங்காய்த்துருவல் அரை கப் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை: பயத்தம்பருப்பை பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். புடலங்காயை சுத்தம் செய்து பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊறிய பருப்பு, நறுக்கிய புடலங்காய், பெருங்காயம், மஞ்சள் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடவும். பிறகு அவனின் உள்ளே வைத்து மூடி அவனை ஹை பவரில் 12 நிமிடம் வைக்கவும். வெந்த கலவையில் உப்பு, தேங்காய்த்துருவல் (தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்) சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மற்றொரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு அவனில் மைக்ரோ ஹை பவரில் பாத்திரத்தை மூடாமல் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு லேசாக மூடவும். அதாவது பாதி மூடியும் பாதி மூடாமல், அவன் உள்ளே நடுத்தர ஹை மீடியத்தில் 2 நிமிடம் வைத்தெடுக்கவும். தாளிப்பு தயாரானதும், அதை அப்படியே கூட்டில் சேர்த்துக் கலந்து ஹைபவரில் ஒரு நிமிடம் மூடாமல் வைத்து, எடுத்து சூடாக சாதத்துடன் பரிமாறவும். இந்தக் கூட்டை சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். தேங்காய்ப்பால் நெய் சாதம் தேவையானவை: பாசுமதி அரிசி ஒன்றரை கப் நெய் 4 டீஸ்பூன் பட்டை ஒன்று லவங்கம் ஒன்று சோம்பு கால் டீஸ்பூன் பிரிஞ்சி இலை ஒன்று பெரிய வெங்காயம் ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது) பச்சை மிளகாய் 5 (நீளவாக்கில் நறுக்கியது) இஞ்சிபூண்டு விழுது 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் ஒரு கப் தண்ணீர் 2 கப் உப்பு தேவையான அளவு செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் நெய் விட்டு அதனுடன் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து, ஹை பவரில் ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்துக் கலந்து மீண்டும் 3 நிமிடம் ஹை பவரில் வைத்தெடுக்கவும். இத்துடன் ஊற வைத்த அரிசி, 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி ஹை பவரில் 10 நிமிடம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும். சாதம் வேகவில்லை என்று நினைத்தால், மேலும் ஒரு நிமிடம் மைக்ரோ ஹை பவரில் வைத்தெடுத்துக் கொள்ளவும். பாலக் பனீர் தேவையானவை: பசலைக்கீரை ஒரு சிறிய கட்டு பனீர் 200 கிராம் தக்காளி 4 பச்சை மிளகாய் 2 இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் பெருங்காயம் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் ஃபிரெஷ் கிரீம் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: பசலைக்கீரையை சுத்தம் செய்து, ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடி, அவன் உள்ளே ஹை பவரில் வைத்து அவனை மூடி 4 நிமிடம் வேகவிடவும். மிக்ஸியில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பனீர் துண்டுகள் மேல் உப்பு தூவி குலுக்கி, 2 நிமிடம் தனியாக வைக்கவும். ஆறிய பசலைக்கீரையை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம், மஞ்சள் தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்து ஹை பவரில் 2 நிமிடம் வைத்து பாத்திரத்தை மூடாமல் வேகவிட்டு எடுக்கவும். பிறகு வெளியே எடுத்து அத்துடன் தக்காளி விழுது, பெருங்காயத்தூள் இஞ்சி விழுது, சர்க்கரை, பனீர், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஹை பவரில் 3 நிமிடம் வைத்தெடுக்கவும். பிறகு ஃபிரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும். இதை சப்பாத்தி, நான், பூரி, புல்கா, குல்சா போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். குறிப்பு: பனீரை வெளியில் திறந்து வைத்தால், சற்றுநேரத்தில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதைத் தடுக்கவே அதன் மீது உப்பைத் தூவி குலுக்கி வைக்கிறோம். உப்பு தூவினால், பனீருக்கு சற்று சுவை கிடைக்கும். பனீர் டிக்கா தேவையானவை: பனீர் 200 கிராம் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பொடி ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிர் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு தேவையான அளவு கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு பவுலில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி (பனீர் உடைந்துவிடாதபடி) ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் ஒரு குழிவான மைக்ரோவேவ் தட்டில் ஒவ்வொரு பனீராக அடுக்கவும். தட்டை அவனின் உள்ளே வைத்து மூடி, ஹை பவரில் 4 நிமிடம் வேக வைக்கவும். பிறகு தட்டில் உள்ள பனீரின் அடிப்புறத்தைத் திருப்பி மேல்புறமாக வைத்து, ஊற வைத்ததில் விழுதுகள் ஏதேனும் மீதம் இருந்தால், அவற்றை பனீரின் மீது தடவி, 4 நிமிடங்கள் ஹை பவரில் மறுபடியும் வேகவிட்டு எடுத்தால் பனீர் டிக்கா ரெடி. இந்த டிக்காவை அதற்கான மரக்குச்சியில் செருகி கிரில் மோடில் 1015 கிரில் செய்தும் பரிமாறலாம். குறிப்பு: டிக்கா குச்சியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பனீரைச் சொருகவும். எக்லெஸ் சாக்லேட் பிரவுனீஸ் தேவையானவை: மைதா மாவு முக்கால் கப் சர்க்கரை அரை கப் பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன் ஆப்ப சோடா கால் டீஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை கோகோ பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் கால் கப் வெனிலா எசன்ஸ் கால் டீஸ்பூன் வினிகர் அரை டேபிள்ஸ்பூன் தண்ணீர் அரை கப் அலங்கரிக்க ஜெம்ஸ் மிட்டாய் / சீரக மிட்டாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பிறகு அதனுடன் எண்ணெய், வெனிலா எசன்ஸ், வினிகர், தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி, அதன் மேல் மைதா மாவை சிறிது தூவிவிடவும். இனி, கலந்து வைத்துள்ள கலவையை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடில் 180 டிகிரி செல்சியஷில் 20 நிமிடங்கள் பிரீஹீட் செய்துகொள்ளவும். பிறகு, பாத்திரத்தை அவனின் உள்ளே வைத்து, 180 டிகிரி செல்சியசில் 2025 நிமிடங்கள் வரை பிரவுனீஸ் பேக் செய்து எடுத்து ஆற விட்டு மேலே முந்திரியோ, ஜெம்ஸ் மிட்டாய், அல்லது சீரக மிட்டாயால் அலங்கரித்துப் பரிமாறவும். ஸ்டஃப்டு கத்திரிக்காய் தேவையானவை: சின்ன கத்திரிக்காய் அரை கிலோ எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) ஒரு டீஸ்பூன் செய்முறை: கத்திரிக்காயை குறுக்காக நான்காக கீறிக்கொள்ளவும். அதன் அடிப்பாகத்தை நறுக்கிவிடக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கத்திரிக்காயின் உள்ளே அடைக்கவும். பிறகு மைக்ரோவேவ் அவனுக்காக தட்டிலோ அல்லது பாத்திரத்திலோ கத்திரிக்காய்களை அடுக்கி ஹைபவரில் 4 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு வேகாத கீழ்ப்பகுதியை, மேலாக திருப்பி வைத்து 3 நிமிடம் மீண்டும் ஹை பவரில் மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்ததும் 5 நிமிடம் கழித்து (Standing time) திறந்து பரிமாறவும். இதை சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அசத்தலான சுவையாக இருக்கும்.
  4. சுரைக்காய் தோசை தேவையானவை: இட்லி அரிசி அரை கிலோ உளுந்து 200 கிராம் சுரைக்காய் அரை கிலோ காய்ந்த மிளகாய் 6 உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லித்தழை சிறிதளவு துருவிய தேங்காய் ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் 50 கிராம் செய்முறை: இட்லி அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை தோல்நீக்கித் துருவிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் காய்ந்த மிளகாய், சேர்த்து அரைத்துக்கொள்ளவும். துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  5. இறால் கீமா கோலா தேவையானவை: இறால் 200 கிராம் (சுத்தம் செய்தது) கடலைப்பருப்பு 200 கிராம் சின்னவெங்காயம் 100 கிராம் (ஒன்றிரண்டாக அரைக்கவும்) பூண்டு 7 பல் (ஒன்றிரண்டாக தட்டியது) சோம்பு 2 டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லித்தழை 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு தேங்காய்துருவல் 10 டீஸ்பூன் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்) செய்முறை: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து முதலில் நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும். பிறகு மீதமுள்ள பருப்பை ஒன்றிரண்டாக கெட்டி பதத்தில் மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த இறாலை மஞ்சள்தூள், சிறிது உப்பு தண்ணீரில் 5 நிமிடம் வேகவிட்டு தண்ணீரை வடித்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்துக் கொள்ளவும். இரண்டு பாகமாக அரைத்த பருப்புக் கலவை, சின்னவெங்காயம், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, தட்டிய இஞ்சிபூண்டு, அரைத்த தேங்காய் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், இறால் கீமா கோலா ரெடி. இறால் கோல்டன் ஃப்ரை தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன் மைதா மாவு 2 டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப) உப்பு தேவையான அளவு பிரெட் தூள் தேவையான அளவு எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: ஒரு பவுலில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும். இறாலை சுத்தம் செய்து கார்ன்ஃப்ளார் கலவையில் புரட்டி, கால் மணி நேரம் ஊற விடவும். பிறகு ஊறிய இறாலை ஒவ்வொன்றாக எடுத்து பிரெட் தூளில் புரட்டி வைக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்தால், இறால் கோல்டன் ஃப்ரை ரெடி. குறிப்பு: இறாலைப் பொரிக்கும்போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும். இறால் பொன்னிறமாக வரும்வரை, கரண்டியால் புரட்டி விட்டு நிதானமாகப் பொரிக்கவும்.
  6. தக்காளி தோசை தேவையானவை: தோசை மாவு அரை கிலோ பழுத்த தக்காளி கால் கிலோ பச்சைமிளகாய் ஒன்று மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை: தக்காளியை வேகவைத்து தோலுரித்து ஆறவிடவும். தக்காளியுடன் பச்சைமிளகாய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பதமாக வார்த்தெடுக்கவும். கேழ்வரகு ரவா தோசை தேவையானவை: கேழ்வரகு மாவு 200 கிராம் ரவை 50 கிராம் கோதுமை மாவு 50 கிராம் பச்சை மிளகாய் ஒன்று இஞ்சி ஒரு துண்டு கறிவேப்பிலை சிறிதளவு மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் பெருங்காயம் சிறிதளவு உப்பு தேவையான அளவு செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  7. இறால் குழி ஆம்லெட் தேவையானவை: இறால் 100 கிராம் (சுத்தம் செய்தது) முட்டை 3 சின்னவெங்காயம் 15 பச்சை மிளகாய் 6 உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு செய்முறை: சுத்தம் செய்த இறாலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட், உப்பு சிறிது சேர்த்து புரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊற வைத்துள்ள இறால் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால், இறாலில் உள்ள நீர் பிரிந்து நன்றாக வெந்து வரும். இப்போது இறாலை முட்டைக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தாளிப்புக் கரண்டி அல்லது ஆழமான குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை, இறால் கலவையை குழியில் ஊற்றி அடுப்பைக் குறைத்து வேகவிடவும். பிறகு பணியார குச்சியால் ஆம்லேட்டை மறுபுறம் கவனமாக, திருப்பி விட்டு வேகவிடவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  8. ஜவ்வரிசி கார தோசை தேவையானவை: இட்லி அரிசி அரைக்கிலோ உளுந்து 100 கிராம் காய்ந்த மிளகாய் 5 உப்பு தேவையான அளவு சோம்பு அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மிளகு ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு எண்ணெய் தேவையான அளவு செய்முறை: ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.
  9. இறால் முருங்கைக்கீரைப் பொரியல் தேவையானவை: இறால் 100 கிராம் (சுத்தம் செய்தது) முருங்கைக்கீரை ஒரு கப் சின்னவெங்காயம் 15 (நீளவாக்கில் நறுக்கவும்) காய்ந்த மிளகாய் 2 எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் 5 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டுத் தாளித்து சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கும்போதே முருங்கைக்கீரையும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவுக்கு தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும். இடையில் மூடியைத் திறந்து, இறால் கலவையை ஒரு முறை புரட்டி விடவும். பிறகு நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கினால், இறால் கீரைப் பொரியல் தயார். குறிப்பு: இறாலுடன் சுரைக்காய், கொத்தவரங்காய் சேர்த்தும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.
  10. முட்டைப் பணியாரம் : செய்முறைகளுடன்... தேவையான பொருட்கள் : இட்லி மாவு - ஒரு கப் முட்டை - 2 சின்ன வெங்காயம் - 25 கிராம் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து கடுகு - கால் தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை : *வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். * பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். * முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும். * அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். * பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். * வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். * குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும். * பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். * முட்டைப் பணியாரம் தயார்.
  11. ஸ்வீட்ஸ் ரெசிப்பி கசகசா பாயசம் தேவையானவை: கசகசா 100 கிராம் தேங்காய்த்துருவல் ஒரு கப் வெல்லம் ஒரு கப் முந்திரி 10 ஏலக்காய்த்தூள் சிறிதளவு தண்ணீர் ஒரு கப் நெய் 2 டீஸ்பூன் உலர்திராட்சை (கிஸ்மிஸ்) 6 செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், வெறும் வாணலியில் கசகசாவைச் சேர்த்து நிறம் மாற வறுத்து ஆற வைக்கவும். சூடு ஆறியதும், கசகசாவுடன் தேங்காய்த்துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கனமான அடி பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகுடன் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர்திராட்சை சேர்த்து லேசாக வறுத்து பாயசத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கோல்பப்டி தேவையானவை: கோதுமை மாவு அரை கப் பொடித்த வெல்லம் கால் கப் கசகசா அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன் நெய் தேவையான அளவு செய்முறை: நெய் தடவிய தட்டில் கசகசாவைத் தூவி வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், கோதுமை மாவைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கவும். இத்துடன் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வெல்லம், கோதுமை மாவின் சூட்டில் உருகியதும், மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சூடு ஆறும் முன்பு துண்டுகள் போட்டு ஆறியதும் எடுத்துப் பரிமாறவும். மைசூர்பாகு தேவையானவை: கடலை மாவு ஒன்றரை கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் அரை கப் நெய் அரை கப் எண்ணெய் ஒன்றரை கப் செய்முறை: கடலை மாவை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டிப் பரப்பவும். அடுப்பில் வாணலியை வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதை கடலைமாவில் ஊற்றி கட்டி விழாமல் கிளறி மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சலித்த மாவை சேர்க்கவும். மிதமான தீயில் அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். தீயை மிதமாக்கி, பாகில் வறுத்த கடலைமாவை சிறிதுசிறிதாகச் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். இத்துடன் சிறிதுசிறிதாக சூடான நெய்யைச் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சேர்த்தவுடன் மாவு சிறுசிறு குமிழ்கள் மாவுக்கலவையிலிருந்து மேலே வரும். பதற வேண்டாம். நெய் கலவையை முழுமையாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் தடவிய ஒரு தட்டில் மாவைக் கொட்டி கத்தியால் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். ஆப்பிள் அல்வா தேவையானவை: ஆப்பிள் 3 (துருவியது) நெய் தேவையான அளவு கேசரி பவுடர் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய பால் 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர் 150 கிராம் சர்க்கரை 150 கிராம் முந்திரி 10 செய்முறை: கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், ஆப்பிள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும். ஆப்பிள் நெய்யில் வதங்கியதும் சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து கலவை ஒன்றாகும்வரை நன்கு கிளறவும். பாலில் கேசரி பவுடர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். பிறகு நெய் ஊற்றி, கலவை வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை தொடர்ந்து கிளறவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய்யில் முந்திரியைச் சேர்த்து வறுத்து அல்வாவில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். கேரட் பர்பி தேவையானவை: துருவிய கேரட் ஒன்றே கால் கப் துருவிய தேங்காய் ஒரு கப் சர்க்கரை இரண்டே கால் கப் நெய் 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் பாதாம் 5 முந்திரி 5 செய்முறை: கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் நெய் ஊற்றி துருவிய தேங்காய் மற்றும் கேரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கேரட் வெந்து கலவை ஒன்று சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறவும். இறுதியாக, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, கலவை சுருண்டு வந்ததும் இறக்கவும். பிறகு, மீதமிருக்கும் நெய்யை தட்டில் தடவி, பர்பி கலவையைச் சேர்த்து ஆறும் முன்பே துண்டுகள் போடவும். பர்பி மீது முந்திரி, பாதாம் வைத்து அலங்கரிக்கவும். விருப்பப்பட்டால் முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து பர்பி மீது வைத்து பரிமாறவும். பாம்பே அல்வா தேவையானவை: சோள மாவு அரை கப் சர்க்கரை ஒன்றரை கப் தண்ணீர் 2 கப் கேசரி பவுடர் சிறிதளவு முந்திரி 50 கிராம் ஏலக்காய்த்தூள் சிறிதளவு நெய் 4 டீஸ்பூன் செய்முறை: மைக்ரோவேவ் அவனுக்கான பவுலில் சோள மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தண்ணீர், கேசரி பவுடர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து. மைக்ரோவேவ் அவனில் அதிகப்படியான சூட்டில் 6 நிமிடம் வைக்கவும். பிறகு அல்வா கலவையை ஒரு முறை கிளறி, மீண்டும் 4 நிமிடம் வைக்கவும். மீண்டும் கலவையைக் கிளறி அவனில் மேலும் 6 நிமிடம் வைக்கவும். 2 நிமிடத்துக்கு ஒருமுறை கலவையைக் கிளறிவிட்டு பிறகு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரியை அல்வா கலவையுடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் அவனில் வைக்கவும். நெய் தடவிய தட்டில் அல்வா கலவையைக் கொட்டி, ஆற விடவும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
  12. அசத்தலான டீ ரெசிப்பி காஷ்மீர் காவா டீ தேவையானவை: கிரீன் டீத்தூள் ஒரு டீஸ்பூன் பாதாம்பருப்பு 7 (கொரகொரப்பாக திரிக்கவும்) ஏலக்காய் 3 பட்டை ஒரு அங்குல துண்டு சர்க்கரை 3 டீஸ்பூன் குங்குமப்பூ ஒரு சிட்டிகை தண்ணீர் 3 கப் செய்முறை: கிரீன் டீத்தூள், ஏலக்காய், பட்டை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்ததைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும். அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி சர்க்கரை மற்றும் அரைத்த பாதாம் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஷீர் சாய் தேவையானவை: தண்ணீர் நான்கரை கப் பால் ஒன்றரை கப் கிரீன் டீத்தூள் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை பட்டை ஒன்றில் பாதி முழு மிளகு 4 கசகசா 30 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் 30 மில்லி பொடியாக நறுக்கிய பிஸ்தாபருப்பு கால் டீஸ்பூன் பொடித்த பாதாம்பருப்பு ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர், கிரீன் டீத்தூள், பேக்கிங் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 8 நிமிடங்கள் மீண்டும் கொதிக்க விடவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் பட்டை, கசகசா, மிளகு, அரை கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சேர்த்து கொதிக்க விடவும். இனி டீத்தூள், பேக்கிங் சோடா கலவை மற்றும் பட்டை, கசகசா கலவை இரண்டையும் ஒன்றாக்கி 20 தடவை வரை சற்று உயர தூக்கி ஆற்றவும். இப்படி ஆற்றினால்தான் டீயின் நிறம் ரோஸ் ஆக மாறும். பிறகு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் ஏலக்காயை 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, டீயுடன் பாலைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாதாம், பிஸ்தா, ஃப்ரெஷ் க்ரீம், குங்குமப்பூ தூவிப் பரிமாறவும். குறிப்பு: பேக்கிங் சோடா சேர்ப்பதால் கலவை பொங்கி வழிய ஆரம்பிக்கும். உடனே அடுப்பில் இருந்து இறக்கி, பொங்குவது அடங்கியதும் மீண்டும் அடுப்பில் வைக்கவும். அரபி அதேன் டீ தேவையானவை: தண்ணீர் 3 கப் டீத்தூள் 2 டீஸ்பூன் பால் முக்கால் கப் சர்க்கரை கால் கப் ஏலக்காய் 10 (பொடித்தது) கிராம்பு 4 பட்டை கால் அங்குல துண்டு ஜாதிக்காய்த்தூள் ஒரு சிட்டிகை செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு டீத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும். அரபி மேக்ரபி புதினா டீ தேவையானவை: கிரீன் டீத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சுடுநீர் 5 கப் சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன் புதினா இலை ஒரு கட்டு செய்முறை: சுடுநீரில் கிரீன் டீத்தூளைச் சேர்த்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். இத்துடன் சர்க்கரை, புதினா இலை சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு டீயை வடிகட்டி புதினா இலை தூவிப் பரிமாறவும். மசாலா டீ தேவையானவை: பால் 3 கப் தண்ணீர் கால் கப் இஞ்சி ஒரு அங்குல துண்டு (தட்டியது) ஏலக்காய் ஒன்று (தட்டியது) டீத்தூள் 2 டீஸ்பூன் சர்க்கரை 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும். டீத்தூளையும் சேர்த்து 3 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும். பிறகு சர்க்கரை சேர்த்து கரையும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். வடிகட்டி சூடாகப் பரிமாறவும். சுலைமானி டீ தேவையானவை: தண்ணீர் 3 கப் டீத்தூள் கால் டீஸ்பூன் பட்டை ஒரு அங்குலம் ஏலக்காய் 2 குங்குமப்பூ ஒரு சிட்டிகை எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன் சர்க்கரை 3 டீஸ்பூன் செய்முறை: பட்டை மற்றும் ஏலக்காயை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீருடன் ஏலக்காய், பட்டை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் டீத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை விட்டு இறக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும். டீயை வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். காஷ்மீர் நூன் சாய் தேவையானவை: கிரீன் டீத்தூள் 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் 5 (கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்) உப்பு ஒரு டீஸ்பூன் சோடா உப்பு ஒரு டீஸ்பூன் பட்டை ஒரு துண்டு ஸ்டார் அனைஸ் (நட்சத்திர சோம்பு) ஒன்று பால் 2 கப் சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் 2 கப் வெண்ணெய் கால் டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏலக்காய், பட்டை, ஸ்டார் அனைஸ் (நட்சத்திர சோம்பு) சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு கிரீன் டீத்தூள், உப்பு, சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து சிம்மில் 40 நிமிடங்கள் கொதிக்க விடவும். இத்துடன் பால் சேர்த்து கலக்கி கொதித்ததும் வடிகட்டி, வெண்ணெய் விட்டு சூடாகப் பரிமாறவும். (பின்குறிப்பு: சோடா உப்பு சேர்க்கும்போது தண்ணீர் பொங்கி வழியும், கவனமாக இருக்கவும். மல்லிகைப் பூ டீ தேவையானவை: மல்லிகைப் பூ கிரீன் டீத்தூள் ஒரு டீஸ்பூன் பால் ஒரு கப் பனங்கற்கண்டு தேவையான அளவு மல்லிகைப் பூ தண்ணீர் ஒரு கப் செய்முறை: 5 மல்லிகைப் பூக்களை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, 4 மணி நேரம் மூடி வைத்து வடிகட்டினால், மல்லிகைப் பூ சாறு இறங்கிய தண்ணீர் ரெடி. இந்த தண்ணீரோடு மல்லிகைப்பூ கிரீன் டீத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் பால், பனங்கற்கண்டு சேர்த்து பாலை நன்றாக சூடாக்கவும். பனங்கற்கண்டு நன்றாகக் கரையும் வரை கலக்கவும். சூடான பாலையும், மல்லிகைப் பூ கிரீன் டீ கலவையையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும். கருப்பட்டி காபி தேவையானவை: கருப்பட்டி கால் கிலோ (தூளாக்கவும்) டீத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் 4 டம்ளர் பால் அரை டம்ளர் இஞ்சி ஒன்றரை அங்குல துண்டு (தட்டிக் கொள்ளவும்) செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், இஞ்சி, கருப்பட்டி சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். இத்துடன் டீத்தூளையும் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, 10 நிமிடங்கள் நன்கு ஆற விடவும். பிறகு மேலே தெளிந்தநீராக இருப்பதை மட்டும் வடிகட்டி, சூடான பாலில் சேர்த்துப் பரிமாறவும். இந்த காபியில் முறுக்கு அல்லது மிக்ஸர் சேர்த்து குடிக்கலாம் அல்லது காபி குடித்துவிட்டு, ஒரு கடி மிக்ஸரை கடித்துக் கொள்ளலாம். ஆவாரம்பூ டீ தேவையானவை: ஆவாரம்பூ காய்ந்தது 2 டேபிள்ஸ்பூன் மல்லி (தனியா) அரை டீஸ்பூன் (கொரகொரப்பாக பொடித்தது) மிளகு அரை டீஸ்பூன் (கொரகொரப்பாகப் பொடித்தது) இஞ்சி கால் அங்குலம் பனங்கற்கண்டு ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஒரு கப் பால் ஒரு கப் டீத்தூள் ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஆவாரம் பூ, மல்லி (தனியா), மிளகு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இத்துடன் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு பிறகு டீத்தூள் சேர்த்து நிறம் மாறும்வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கவும். பிறகு டீயை வடித்து பனங்கற்கண்டு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
  13. இறால் மிளகு வறுவல் தேவையானவை: இறால் கால் கிலோ (சுத்தம் செய்தது) பூண்டு 6 பல் (பொடியாக நறுக்கியது) மிளகு 15 கறிவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் 3 உப்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் செய்முறை: இறாலை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு அலசி விட்டு சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்தும் பிசிறி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தீயைக் குறைத்து வதக்கி, மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இறாலில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதுமானது. இறால் நன்கு வெந்ததும், மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.
  14. மூங்கில் அரிசி உணவுகள் பாரம்பர்ய அரிசிகளில் இருக்கும் சத்துக்கள் பல. இனி, ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமான பாரம்பர்ய அரிசியை எடுத்துக்கொண்டு அதில் நம்முடைய பழக்கமான உணவுகளை, எப்படிச் செய்யலாம் என்பதைச் செய்து காட்டி விளக்கப் போகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி. முதல் இதழில் கொஞ்சம் வித்தியாசமாக மூங்கில் அரிசியைப் பயன்படுத்தி உணவுகளைத் தந்து அசத்துகிறார். மூங்கில் அரிசி 40 வருடங்கள் ஆன மூங்கில் மரத்தின் பூவிலிருந்து கிடைப்பது மூங்கில் அரிசி. இதில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கிறது. இழந்த ஆரோக்கியத்தை மீட்டு, உடலுக்கு பலன் தரக்கூடியது. மாதவிலக்குக் கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள் மற்றும் மூட்டு வலி, ருமாட்டிக் வலிகளைக் குறைக்கக்கூடியது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தத்தை, கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடியது. கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது. குழந்தையின்மைப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மூங்கில் அரிசி மட்டுமல்ல, இதன் பட்டை மற்றும் குருத்து ஆகியவையும் உணவாகப் பயன்படுகின்றன. மூங்கில் குழாயையே பாத்திரமாக பயன்படுத்தி சமைப்பது பழங்குடி மக்களின் சிறப்பு. இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் உளுந்து ஒரு கப் வெந்தயம் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: மூங்கில் அரிசி, இட்லி அரிசியை தனித்தனியாக தலா 4 மணி நேரமும் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 2 மணி நேரம் ஊற விடவும். கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயக் கலவையைச் சேர்த்து அரைத்தெடுத்து வைக்கவும். பிறகு மூங்கில் அரிசி மற்றும் இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இனி, அரைத்தவற்றை எல்லாம் நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, வழக்கமாக நாம் இட்லி அவிப்பது போல இட்லிப் பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும். சிவப்பு அவல் தோசை தேவையானவை: மூங்கில் அரிசி 2 கப் இட்லி அரிசி ஒரு கப் சிவப்பு அவல் ஒரு கப் உளுந்து ஒரு கப் வெந்தயம் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை: மூங்கில் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற விடவும். இதேபோல இட்லி அரிசியை தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும். அவலை தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் அரைக்கும் போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். ஆப்பம் தேவையானவை: மூங்கில் அரிசி ஒரு கப் இட்லி அரிசி ஒரு கப் பச்சரிசி ஒரு கப் சிவப்பு அவல் அரை கப் உளுந்து 4 டேபிள்ஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு தேங்காய்த்துருவல் அரை கப் ஆப்ப சோடா ஒரு சிட்டிகை இளநீர் ஒரு கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற விடவும். மற்றொரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்து, வெந்தயத்தைச் சேர்த்து 3 மணி நேரம் ஊற விடவும், அவலை ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு அவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். இத்துடன் அவலையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கி, 8 மணி நேரம் புளிக்க விடவும். காலையில் ஆப்பம் சுடுவதற்கு முன் ஆப்ப சோடா, இளநீர் சேர்த்துக் கலக்கி, ஆப்பமாக சுட்டெடுக்கவும். தேங்காய்ப்பால் அல்லது ஸ்டியூவுடன் ஆப்பத்தைப் பரிமாறவும். அரிசி கஞ்சி தேவையானவை: மூங்கில் அரிசி அரை கப் பாசிப்பருப்பு கால் கப் தக்காளி ஒன்று பெரிய வெங்காயம் ஒன்று பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு விழுது ஒரு டீஸ்பூன் பட்டை சிறிய துண்டு சோம்பு கால் டீஸ்பூன் கிராம்பு ஒன்று ஏலக்காய் ஒன்று புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் ஒரு கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, தண்ணீர் இறுத்து நிழல் உலர வைத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கரைய வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு புதினா மற்றும் கொத்தமல்லித்தழைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் உடைத்த மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு, அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து நெய், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். பணியாரம் தேவையானவை: மூங்கில் அரிசி ஒரு கப் இட்லி அரிசி ஒரு கப் ஜவ்வரிசி ஒரு கப் உளுந்து கால் கப் வெந்தயம் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன் வெங்காயம் ஒன்று பெருங்காயம் ஒரு சிட்டிகை பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு இஞ்சித்துருவல் ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி, இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். இதே போல், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகவும், ஜவ்வரிசியை தனியாகவும் தலா 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எல்லாவற்றையும் தண்ணீரை இறுத்து கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 6 மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், சிறிது உப்பு சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கிளறவும். பிறகு குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் ஊற்றவும். மாவை குழிகளில் ஊற்றி, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால், மூங்கில் அரிசி குழிப்பணியாரம் ரெடி. கார சட்னியுடன் பரிமாறவும். பால் பாயசம் தேவையானவை: ஊற வைத்து, நிழலில் உலர்த்தி உடைத்த மூங்கில் அரிசி 5 டேபிள்ஸ்பூன் பால் ஒரு லிட்டர் கண்டன்ஸ்டு மில்க் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை கால் கப் ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன் முந்திரி, பாதாம் தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் உடைத்த அரிசியைச் சேர்த்து வேகவிடவும். விருப்பப்படுகிறவர்கள் குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். இத்துடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும். பேரீச்சம் பழ பிர்னி தேவையானவை: ஊற வைத்து உடைத்த மூங்கில் அரிசி கால் கப் பால் ஒரு லிட்டர் பேரீச்சம்பழ சிரப் அரை கப் வெனிலா எசன்ஸ் 2 சொட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா தேவையான அளவு பேரீச்சம் பழத்துண்டுகள் சிறிதளவு செய்முறை: மூங்கில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணிர் இறுத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். குக்கரில் பாலை ஊற்றி சூடானதும், 2 மணி நேரம் ஊற வைத்து, உடைத்த மூங்கில் அரிசி சேர்த்து 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து பேரீச்சை சிரப் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவைக்கவும். எல்லாம் வெந்து ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பிஸ்தா, பாதாம் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை அணைத்து விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பேரீச்சைத் துண்டுகளைத் தூவிப் பரிமாறவும். குறிப்பு: பேரீச்சை சிரப் இல்லாதவர்கள், பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, ஊற வைத்து, அரைத்துச் சேர்க்கவும். கிச்சடி தேவையானவை: மூங்கில் அரிசி ஒரு கப் பாசிப்பருப்பு 4 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு 4 டேபிள்ஸ்பூன் பட்டை சிறிய துண்டு கிராம்பு ஒன்று ஏலக்காய் ஒன்று இஞ்சித்துருவல் ஒரு டீஸ்பூன் பிரிஞ்சி இலை ஒன்று நெய் 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் 2 உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் செய்முறை: மூங்கில் அரிசியை சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற விடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, கடலைப்பருப்பை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு 4 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மூங்கில் அரிசி, பாசிப்பருப்பை சேர்த்துக் குழைய வேக விடவும். பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, மீதமுள்ள நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும். மசாலா சீயம் தேவையானவை: மூங்கில் அரிசி ஒரு கப் பச்சரிசி ஒரு கப் உளுந்து முக்கால் கப் எண்ணெய், உப்பு தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பெருங்காயம் கால் சிட்டிகை கறிவேப்பிலை சிறிதளவு செய்முறை: மூங்கில் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊற விடவும். பிறகு அரிசி மற்றும் உளுந்தை அதிக நீர் விடாமல் கிரைண்டரில் நன்கு கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு போட்டு மாவில் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மசாலா சீயம் ரெடி. வேர்க்கடலை வடை தேவையானவை: வேக வைத்த மூங்கில் அரிசி ஒரு கப் பொடித்த வேர்க்கடலை அரை கப் வெங்காயம் ஒன்று பச்சைமிளகாய் விழுது ஒரு டீஸ்பூன் இஞ்சித்துருவல் ஒரு டீஸ்பூன் உப்பு, எண்ணெய் தேவையான அளவு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி சாதத்தைச் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, இஞ்சித்துருவல், சீரகத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் வடை ரெடி. இதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பஜ்ஜி மாவில் முக்கியெடுத்து பொரித்தால் போண்டா தயார்.
  15. பனானா பான் கேக் : செய்முறைகளுடன்... தேவையான பொருட்கள் : மைதா மாவு - 2 கப் முட்டை - 2 பால் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் வாழைப்பழம் - 3 செய்முறை : * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள். * வெண்ணெயை உருக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும் * பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, மசித்த வாழைப்பழம், வெண்ணெய் மற்றும் சிறிது பாலையும் சேர்த்து நன்கு கலக்குங்கள். * ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும். அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும். * தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும். பின்னர் அதில் கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும். * அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும். அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும். * இதோ சுவையான பான் கேக் தயார்!!! * வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம். குறிப்பு : * எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும். * பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம். * டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம். * பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
  16. கோழி கீமா தோசை தேவையானவை: தோசை மாவு அரை கிலோ எலும்பில்லாத சிக்கன் 300 கிராம் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் 50 கிராம் இஞ்சி ஒரு துண்டு பச்சைமிளகாய் ஒன்று பூண்டு 5 பல் எண்ணெய் தேவையான அளவு சோம்பு கால் டீஸ்பூன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும். மட்டன் தோசை தேவையானவை: தோசை மாவு அரை கிலோ எலும்பில்லாத மட்டன் கால் கிலோ முட்டை 5 இஞ்சிபூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு தேவையான அளவு மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு செய்முறை: மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
  17. இறால் மசாலா தேவையானவை: இறால் கால் கிலோ (சுத்தம் செய்தது) சின்னவெங்காயம் 100 கிராம் தேங்காய்த்துருவல் 7 டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் சோம்பு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு செய்முறை: தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் தீயைக் குறைத்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய்க் கலவையும் சேர்த்து கலவை வற்றும் வரை நன்கு புரட்டவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு வதக்கி, இறக்கிப் பரிமாறவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.