Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. செலரி பிரியாணி என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி ஒன்றரை கப், செலரி 100 கிராம், வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 3, கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிக் கலவை 1 கப், இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் சிறிது, நெய் 2 டேபிள்ஸ்பூன், பாதாம் 4, வறுப்பதற்கு வெங்காயம் அரை கப், குங்குமப் பூ சிறிது, காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் 3 கப். எப்படிச் செய்வது? கடாயில் வெண்ணெய் சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். பிறகு நறுக்கிய செலரி, உப்பு, இஞ்சிபூண்டு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, காய்கறி வேக வைத்த தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது ஏற்கனவே அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்க்கவும். அரை டீஸ்பூன் பாலில் கரைத்த குங்குமப் பூவை அதில் கொட்டவும். உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைத்து வேக விடவும். இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு சீவிய பாதாம், வெங்காயம் சேர்த்து வறுத்துப் பரிமாறவும்.
  2. "மயான சூழலில் கீழடி அகழ்வாய்வு மையம்" - கொதிக்கும் திரைப்பட இயக்குனர்கள்...! மதுரையை அடுத்துள்ள கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாய்வில் சுடுமண் பாண்டங்கள், கரண்டி, கிண்ணம், யானை தந்தத்தில் செய்த தாயக்கட்டை, கழிவு நீர் செல்ல வாய்க்கால், பெரிய அளவிலான சதுர செங்கல்கள் என்று 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடிதான் பழமையான மதுரை என்றும், உலகில் தொன்மையான இனம் தமிழினம்தான் என்றும் இதுவரையில் பாடல்களில், கட்டுரைகளில், பேச்சு வழக்கில் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவற்றை மெய்ப்பிக்கும் வகையிலான வரலாற்று ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இதனை வரலாற்று ஆய்வாளர்கள், மொழி ஆய்வாளர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். கீழடியில் இன்னும் முழுமையாக ஆய்வினை மேற்கொள்ளாமல் தோண்டிய அகழ்வாய்வு குழிகளை திடீரென்று மூடும் பணி கன ஜரூராக நடைபெற்றது.இதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று சிலர் கீழடிக்கு வந்து சென்றார்கள். அக்டோபர் 24-ம் தேதியோடு அகழ்வாய்வு குழிகள் மூடப்பட்டதால், கடைசி நாளான நேற்று சினிமா இயக்குனர்கள் எஸ்.பி.ஜன நாதன், அமீர், கரு. பழனியப்பன் ஆகியோர் கீழடிக்கு திடீரென்று ஆஜர் ஆனார்கள். "தென் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அகழ்வாய்வுப் பணியை முழுமையாக நிறைவு செய்யாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. இது இன்னொரு ஆதிச்சநல்லூர் போன்று இருக்கிறது" என்று வெடிக்கிறார் ஜன நாதன். " இது ஒரு திட்டமிட்ட வரலாற்று ஒழிப்பு. உச்ச நீதிமன்றம் தோன்றுவதற்கு முன்பே ஜல்லிக்கட்டு நடந்தது. அதை எப்படி ஒழித்தார்களோ, அதைப்போல இதையும் மறைத்து ஒழிக்க பார்க்கிறார்கள். இங்கு இந்நேரம் தங்க புதையல் கிடைத்திருந்தால் அரசு இப்படி அலட்சியமாக இருக்குமா?" என்று சீறினார் அமீர். "மறுபடியும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? மைசூரில் கண்ணகி சிலையை கோணிப்பையில் மூடியதைப் போல, இங்கு கிடைத்த பொருட்களையும் மைசூருக்குக் கொண்டு சென்று ஒரு மூலையில் போடப்போகிறார்களா? டாஸ்மாக்-ஐ விட இதுதான் நிஜமான செல்வம் " என்று கொந்தளித்தார் கரு.பழனியப்பன். இப்படி மூன்று இயக்குனர்களும் அகழ்வாய்வு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, "இதுவரை கீழடிக்கு அமைச்சர்கள், எம்.பி.கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இவ்வளவு ஏன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட வந்து பார்க்கவில்லை. அவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம்" என்று கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர். அந்த இயக்குனர்கள் மூவரிடமும் பேசினோம். "என்ன திடீர் ஆய்வு? நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள் ?மற்ற இயக்குனர்கள் வரவில்லையா?" " திட்டமிட்டு வரவில்லை, நாங்க ஒரு வேலையாக மதுரைக்கு வந்தபோது, இந்த அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடுவதை கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இந்த அகழ்வாய்வுப் பணி நடந்த செய்தியும், இங்கு கிடைத்த பொக்கிஷமும் இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. கிடைத்த செய்தியும் மூடும் செய்தியும் தெரியல. எங்கள் நோக்கம் மக்களிடம் தமிழர்களின் நாகரீகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான்" "தொடர் அகழ்வாய்வுப் பணி தொய்வில்லாமல் நடக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?" " இந்தியாவில் இதுபோன்ற வாய்ப்பு எந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது? இதை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் " " இதை ஒரு இனப்படுகொலை போல பார்க்கிறீர்களா?" " அதில் என்ன சந்தேகம்? நாங்கள் ஐயப்படுகிறோம். இந்த இடத்தில் இரண்டு தங்கப்பானையோ, குடம் நிறைய தங்க காசுகளோ கிடைத்திருந்தால் இந்நேரம் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா? இந்நேரம் இந்த இடத்தை எப்படி கையகப்படுத்தி இருக்கும்? அப்போ, வெறும் தங்கமும்,வெள்ளியும் மட்டும்தான் தமிழர்கள் வரலாறா? 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள் என்பதே மிகப்பெரிய சொத்து .இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் மிகப்பெரிய சொத்து. பல கோடி கிடைத்தாலும் இதை வாங்க முடியாது. அரசு இதை இப்படித்தான் பார்க்க வேண்டும். இந்த மண், இந்த விவசாயிக்கு சாதாரண மண்ணாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு இது மிகப்பெரிய சொத்தாக பார்க்க வேண்டும்". "தமிழர் பிரச்னை, தமிழர் உரிமை சார்ந்த பிரச்னை என்று பேசும் திராவிடக் கட்சிகள் கீழடி விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதில் ஏன் அவர்களின் கவனம் மழுங்குகிறது?" " அத்தனையும் ஏமாற்று வேலை. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அவர்களின் கவனம் முழுவதும் இருக்கிறது. வேட்பாளர்களை வெளியிடுவதில்அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். ஓட்டு அரசியல்தான் அவர்களுக்கு முக்கியம். எனக்கு யார் ஆட்சியாளர் என்பது முக்கியம்மில்லை. என்னுடைய வரலாறு முக்கியம். நான் எங்கிருந்து பிறந்து வந்தேன் என்பது முக்கியம். தேர்தலை விட முக்கியமானதாக இதை கருதுகிறேன். " பல தலைவர்கள் இன்னும் கீழடிக்கு வரவில்லையே?" "நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்களை நம்பி இல்லை. நல்லாட்சி கொடுத்த காமராஜரே போய் சேர்ந்து விட்டார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார்கள். அப்படியென்றால் இடைப்பட்ட ஆட்சி சரியில்லை என்று டிக்ளேர் செய்கிறார்களா? அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை நம்பி இல்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகு நாம் இருப்போம் என்பது தெரியாது. அடுத்த தலைமுறைக்கு எதை வைத்து விட்டுப் போகிறோம் என்பதுதான் முக்கியம்". " தொன்மையான மதுரைக்கு சாட்சியாக கீழடி இருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த தொன்மையை இந்திய அரசு மறைக்கப் பார்க்கிறதா? இதில் உள்நோக்கம் இருக்கிறதா? " "அதுதான் உண்மை. உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யாக புனையப்பட்ட கதைகளைக் கொண்டு வர இந்த உண்மையை மறைக்கிறார்கள். உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முதல் மனிதன் தோன்றிய இடமாக கீழடி இருக்கிறது. 500 ஆண்டுகளில் உருவான நாடுகள் நாங்கள்தான் நாகரீகத்தை உருவக்கியவர்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மையை மறைக்க திட்டமிட்ட முயற்சியாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது நீதிமன்றங்கள் உருவாவதற்கு முன்பே இங்கு நடைபெற்றிருக்கிறது.தமிழர்களின் அடையாளங்களை தொலைக்கிறார்கள். இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நினைக்க வேண்டாம். என்னுடைய உரிமையை கேட்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லை. நான் சொல்வது பொய் இல்லை. உண்மையில் தமிழன் என்பவன் ஒருவன் இல்லை என்கிறார்கள். அதுதான் அவர்களின் நோக்கம்.ஆஸ்திரேலியாவில் தமிழை மூன்றாவது தேசிய மொழியாக அறிவித்துள்ளனர். கனடாவில் ஒரு மாதத்தை தமிழ் மாதமாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இங்கு நிலைமை வேறு! " " இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? யாரை குறிப்பிட்டு சொல்லுகிறீர்கள்?" " தமிழினத்தை வெறுக்கும் அதிகார வர்க்கம், அரசியல் கட்சி,முதலாளிகள் என்று அவர்கள் எந்த முகச் சாயத்திலும் இருக்கலாம்." " கீழடி சினிமாவாக உருவாகுமா?" " கண்டிப்பாக சினிமாவாக வரும். சர்வதேச சதி இதில் இருக்கிறது.மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆய்வுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தார்கள். ஒரு சதவிகித ஆய்வுதான் அங்கும் நடந்தது. அந்த ஆய்வை இன்னும் வெளியிடவில்லை. அங்கு எடுக்கப்பட்டது மாடு சின்னம். அது நம்முடைய அடையாளம். அதுபோல கீழடியும் ஆகிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. 140 ஏக்கரில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தோண்டி மூடும்போது பெரும் அச்சம் எழுகிறது. தமிழர் வரலாறு வெறும் பாட்டாக இருக்கிறது. ஆதாரம் இல்லை என்கிறார்கள். இப்பொழுது ஆதாரம் கிடைத்திருக்கிறது. தண்ணீர் செல்லும் வழி, செங்கல் வைத்து கட்டிய கட்டிடங்கள் சாட்சி .இதை மூடும் காட்சி சினிமா படக்காட்சி போல இருக்கிறது. இது உலக வரலாறு சொல்லும் இடமாக இருக்கிறது. 30 ஆண்டுகள் பழமையான குடும்ப கல்யாண புடவையைப் பாதுகாக்கிறோம். ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் வாழ்ந்த நகரத்தை பாதுகாக்கத் தவறுகிறோம்". " உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவனத்திற்கு இதை எப்படி கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்?" " இதை பத்திரிகையாளர்கள்தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசியல் தலைவர் பயன்படுத்திய கண்ணாடி , துணி, செருப்பு என்று மியூசியம் அமைக்கும் பொழுது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்திருக்கிறது. இதுக்கு மியூசியம் வைக்க வேண்டாமா? கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் இந்திய அரசு இதை பாதுகாக்க வேண்டுமா? இல்லையா? என முடிவு எடுக்கவில்லை. யார் முடிவு எடுப்பது? எப்பொழுது முடிவு எடுப்பது?" " இதற்கு ஒரு நல்ல இயக்குனர்களாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" " சுவாதி வழக்கை விவாதம் செய்தது போல கீழடியை நீங்கள் இதுவரை ஏன் விவாதங்கள் செய்யவில்லை. தாத்ரி சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. கீழடியை பெரிய அளவில் ஊடகங்கள் ஏன் எழுதவில்லை? சமூகப் பிரச்னையை நீங்கள் செய்ய வேண்டிய வேலையை, செய்யத் தவறியதை, ஏன் கூத்தாடிகள் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இது தவறான போக்கு. ஒரு சமூக பிரச்னையை சினிமாக்காரன் செய்ய வேண்டும் என்றால் எதுக்கு எங்களுக்கு 234 எம்.எல்.ஏ. 39 எம்.பி.க்கள் ? சைரன் வைத்த காரில் சுற்றுவதுதான் அவர்களது வேலையா? தமிழ் பண்பாட்டுத்துறையில் இருந்தாவது யாராவது வந்தார்களா? இதுவரை யாருமே வரவில்லை என்கிற பொழுது நீங்க யாருக்காக ஆட்சி நடத்துறீங்க? இலவசமாக ஓட்டுக்கு காசு கொடுப்பதும், ஆடு, மாடுகள் கொடுப்பதும்தான் மக்களாட்சியா? இப்பொழுது மக்களாட்சி நடக்கவில்லை .கார்பரேட் கம்பெனிகளின் ஆட்சிதான் நடக்கிறது." " இவ்வளவு பெரிய அலட்சியத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? " " அலட்சியத்தின் பின்னால் மக்களுக்கான அரசு இல்லை. மக்களால் தேர்ந்தடுக்கப்படும் அரசு மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அடுத்த தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இயங்கி வருகிறது. பொறுப்பில் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். மக்களை கேளிக்கையாக, சந்தோஷப்படுத்தும் நாங்கள் களத்திற்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களின் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள்" என்று இயக்குனர்கள் தெரிவித்தனர். "அரசுக்கு அருங்காட்சியகம் அமைக்க இடம் கிடைக்கவில்லை என்றால் இந்த அமீர் இடம் தருகிறேன்" என்றார் அமீர். " தோண்டிய இடங்களை மண்ணைப்போட்டு மூடும் காட்சிகளை பார்க்கும் பொழுது இந்த இடத்தை விட்டு நகரும் பொழுது ஒரு மயானத்தில் இருந்து எனது 2 ஆயிரம் பழமையான பண்பாட்டு நாகரீகத்தை புதைத்து விட்டுச் செல்வது போல இருக்கிறது" என்கிறார் எஸ்.பி. ஜனநாதன். கீழடியை மீட்கப்போகும் வரலாற்று நாயகன் யார் ? http://www.vikatan.com/news/tamilnadu/70521-keezhadi-archeological-site-being-closed-fumes-tamil-directors.art
  3. உளுந்து டோஸ்ட் தேவையானவை: * பிரெட் துண்டுகள் - 8 ஸ்லைஸ் * வெண்ணெய் - தேவையான அளவு * நெய் - தேவையான அளவு அரைக்க: * முழு வெள்ளை உளுந்து - அரை கப் * சோம்பு - அரை டீஸ்பூன் * இஞ்சி - சிறிய துண்டு * இட்லி மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 1 * உப்பு - தேவையான அளவு சட்னிக்கு: * பச்சை மிளகாய் - 2 * சீரகம் - அரை டீஸ்பூன் * எலுமிச்சைச் சாறு - அரை மூடி * கொத்தமல்லித்தழை - அரை கட்டு * உப்பு - தேவையான அளவு செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். சட்னிக்குக் கொடுத்துள்ளவற்றை தனியாக அரைக்கவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவவும். வெண்ணெய் தடவிய ஒருபகுதியின் மேல் அரைத்த சட்னி, அதன் மேல் அரைத்த உளுந்து விழுதை வைக்கவும். பிறகு வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட்டால் மூடி, பிரெட் முழுவதும் நெய் தடவி டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். டோஸ்டர் இல்லையெனில் தோசைக்கல்லில் நெய்விட்டு பிரெட்டை வைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
  4. முட்டை சிக்கன் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ மிளகு - ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி முட்டை - 3 உப்பு - ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி தயிர் - கால் கப் எண்ணெய் - 350 மில்லி செய்முறை : சிக்கனை நன்கு கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, தயிர், தனியா தூள், இஞ்சி விழுது, சோம்பு ஆகியவற்றை கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த சிக்கன் துண்டுகளை முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான முட்டை சிக்கன் ரெடி. விருப்பப்பட்டால் கடைசியாக முட்டையை பொரித்தும் சேர்க்கலாம்.
  5. சீ ஃபுட் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : எக் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் முட்டை - 3 கணவாய் - ஒன்று இறால் - 5 சுரீமி ஸ்டிக் - 5 குடை மிளகாய் - ஒன்று கேரட் - ஒன்று பீன்ஸ் - 10 முட்டைகோஸ் - கால் கப் வெங்காயம் - ஒன்று வெங்காயத் தாள் - ஒரு கட்டு இஞ்சி - கால் அங்குலத் துண்டு பூண்டு - 5 பற்கள் சோயா சாஸ் - அரை மேசைக்கரண்டி ஃபிஷ் சாஸ் - அரை மேசைக்கரண்டி சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி ஆயிஸ்டர் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் மெல்லியதாக நீளமாக வெட்டிக் கொள்ளவும். கணவாய், இறால், சீ ஃபுட் ஸ்டிக் ஆகியவற்றையும் தேவையான அளவில் வெட்டி வைக்கவும். எண்ணெய் தடவிய நாண் ஸ்டிக் பேனில் முட்டையை அடித்து ஸ்க்ரம்பில்டு செய்து தனியே வைக்கவும். நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். அத்துடன் அரை மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு ஃபோர்க்கினால் நன்றாக கலந்துவிடவும். (ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்). நாண் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தீயை அதிகரித்து, பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துப் பிரட்டவும். அதனுடன் கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். (தீயை அதிகரித்து 3 நிமிடங்கள் மட்டும் வதக்குவதால் காய்கறிகள் முழுவதும் வேகாமல் க்ரஞ்சியாக இருக்கும்). வதக்கிய காய்கறிகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். அதே நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள கணவாய், இறால், மற்றும் சுரீமி ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் வதக்கிய காய்கறிகள் மற்றும் ஸ்க்ரிம்பில்டு முட்டை ஆகியவற்றைச் சேர்த்து, மிளகு பொடி மற்றும் வெங்காயத் தாள் சேர்த்துக் கிளறவும். பிறகு சாஸ் வகைகளைச் சேர்க்கவும். இரண்டு கைகளிலும் ஒவ்வொரு ஃபோர்க்கை பிடித்துக் கொண்டு நூடுல்ஸ் நொறுங்கிவிடாதபடி அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும். எண்ணெய் குறைவான, டேஸ்டி & க்ரஞ்சி நூடுல்ஸ் தயார்.
  6. மொறுமொறுப்பான… பாண் பஜ்ஜி மொறுமொறுப்பான… பாண் பஜ்ஜி தேவையான பொருட்கள்:- கோதுமை மாவு – 1/2 கப் கடலை மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் சாட் மசாலா – 3/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பிரட் துண்டுகள் – 4-5 எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை:- முதலில் பிரட்டை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பஜ்ஜி ரெடி!!! http://onlineuthayan.com/
  7. சிக்கன் குருமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை உப்பு அரைக்க: தேங்காய் - 2 துண்டுகள் கசகசா - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு - தாளிக்க செய்முறை : தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கி சிக்கனை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துச் சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். ஈசி சிக்கன் குருமா தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
  8. உளுந்து மசாலா தேவையானவை: * முழு வெள்ளை உளுந்து - 1 கப் * பச்சை மிளகாய் - 2 * இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் * சின்னவெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கவும்) * கடுகு - கால் டீஸ்பூன் * உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன் * பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை * தேங்காய்த் துருவல் - கால் கப் * கறிவேப்பிலை - சிறிது. * நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: முழு உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மிக்ஸியில் சேர்க்கவும். பிறகு தேவையான நீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவி, அரைத்த உளுந்து மாவை குழிகளில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உடைத்த உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சித் துருவல், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, உதிர்த்த உளுந்தைச் சேர்த்து, பச்சை வாசனை போக கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் தூவி கிளறிப் பரிமாறவும்.இந்த உளுந்து மசாலாவை கொழுக்கட்டை நடுவே ஸ்டஃப் செய்து காரக் கொழுக்கட்டை செய்யலாம். இரு சப்பாத்திகள் நடுவே வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாக்கலாம். குறிப்பு: இட்லித் தட்டில் ஊற்றியதை வெந்ததும் எடுத்து கட் செய்து, அதன் மேலே கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டினால், உளுந்து டோக்ளா தயார்.
  9. வெஜிடபுள் சீஸ் தோசை : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : தோசை மாவு - ஒரு கப் காலிஃப்ளவர் - பாதி அளவான பூ காரட் - 2 தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி நறுக்கிய சீஸ் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை : தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே ஈட்டில் வேகவைத்து எடுக்கலாம்). அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும். தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்). காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். சீஸ் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சுவையான வெஜிடபுள் சீஸ் தோசை தயார். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
  10. பீட்ரூட் சூப் என்னென்ன தேவை? துருவிய பீட்ரூட் - 3/4 கப், கேரட் - 1/2 கப், லேசாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப், உருளைக்கிழங்கு - 1/2 கப், முட்டைகோஸ் - 3/4 கப், தக்காளி - 1/2 கப், மல்லித்தழை - 4 டீஸ்பூன், வெஜிடபிள் சூப் ஸ்டாக் கியூப் - 1, ஆரஞ்சு ஜூஸ் - 2 பழத்தில் எடுத்தது, ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, மிளகு - தேவைக்கு, தண்ணீர் - 3 கப், கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? எண்ணெயை சூடாக்கி வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தக்காளி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமிடங்கள் வேக விடவும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்டித் தயிர், மல்லித்தழை தூவி பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.
  11. முட்டை கபாப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை வேக வைத்து நீளமாக நாலாக நறுக்கியது - 3 உருளைகிழங்கு - 2 குருமிளகு தூளும் உப்பும் கலந்தது - 1/4 ஸ்பூன் மல்லி இலை நறுக்கியது - 3 ஸ்பூன் புதினா - 4 இலைகள் நறுக்கியது மைதா - 1/4 கப் ப்ரெட் கர்ம்ப்ஸ் - 3/4 கப் வதக்க சின்ன வெங்காயம் - 10 இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள் - 1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து ஒவ்வொரு முட்டையையும் நாலாக நீளமாக நறுக்கி வைக்கவும்..மொத்தம் 12 துண்டுகள் கிடைக்கும்.அதன் மேல் மிளகும் உப்பும் கலந்து தூவி வைக்கவும் மைதாவை சிறிது தண்ணீரில் மாவு போல் கலந்து வைக்கவும் உருளை கிழங்கை குக்கரில் 2 விசிலில் நங்கு வேக வைத்து உடைக்கவும். பின் வதக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக ஒவ்வொன்றாக 1 ஸ்பூன் எண்ணையில் வதக்கவும்..அதில் உருளை கிழங்கை சேர்த்து மசித்து விடவும் மசாலா சேர்த்த மசித்த கிழங்கில் இரு கைய்யளவு உருண்டையை இடதி கைய்யில் எண்ணை தடவிக் கொண்டு வைத்து வலது கைய்யால் தட்டவும்..தட்டிய கிழங்கு மாவின் நடுவில் ஒரு முட்டை துண்டை வைக்கவும்.முட்டையின் மஞ்சள் புறம் உட்புறமாக வருமாறு வைத்தால் முட்டை பிரிந்து வெளியில் கொட்டாது. பின்பு கிழங்கை முட்டையை சுற்றி மூடி உருட்டவும்..நீளமாக ரக்பி பாளின் வடிவத்தில் உருட்டவும் இதே முறையில் 12 துண்டெஉகளையும் உருட்டவும்..கிழங்கினையும் 12 பிரிவுகளாக வைத்தால் அளவு சரியாக வரும் பின்பு உருட்டிய கிழங்கு முட்டை கபாப்களை மைதா கலவையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எண்ணையில் வறுத்தெடுக்கவும்
  12. மீன் சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள் இஞ்சி - ஒரு செ.மீ பூண்டு - 3 அல்லது 4 பல் சின்ன வெங்காயம் - 5 அல்லது 6 பட்டை - ஒரு சிறிய துண்டு அன்னாசிப்பூ - ஒன்று ஏலக்காய் - ஒன்று மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி வெங்காயத்தாள் (Spring onions) - தேவையான அளவு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) சூப் இலை - விருப்பப்பட்டால் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வெள்ளை துணியில் முடிந்து வைக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும் வரை வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் சூப் இலையை சேர்க்கவும். சுவையான மீன் சூப் தயார். இதனை சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது டயட்டில் இருப்பவர்கள் அப்படியே அருந்தலாம். காரமில்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
  13. இறால் பக்கோடா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் எண்ணெய் - 200 மில்லி பச்சை மிளகாய் - 2 பூண்டு - சிறிதளவு சோம்புத் தூள் - சிறிதளவு கடலை மாவு - 100 கிராம் அரிசி மாவு - 50 கிராம் மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு வெங்காயம் - ஒன்று கேசரி பவுடர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) ரவை - ஒரு தேக்கரண்டி உப்பு - சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத் தூள், ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய், சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். (ரவை மொறுமொறுப்புக்காக‌வும், எண்ணெய் பொரிக்கும் போது எண்ணெய் குடிக்காமல் இருக்க‌வும் சேர்க்கிறோம்). பிசைந்தவற்றுடன் சுத்தம் செய்த இறாலைப் போட்டு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விழும் பக்குவத்தில் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிசைந்து வைத்துள்ள இறால் கலவையை உதிர்த்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான இறால் பக்கோடா தயார்.
  14. மல்டிப்பிள் லேயர் பீட்சா தேவையானவை: புதினா சட்னி, தக்காளி சட்னி, மக்காச்சோள முத்துக்கள் - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தலா 2 ஸ்லைஸ். செய்முறை: ஒரு பிரெட்டில் புதினா சட்னியும், அடுத்த பிரெட்டில் தக்காளி சட்னியும் தடவி, அதில் பனீர், மக்காச்சோளத்தைப் பரப்ப வேண்டும். அதன் மேல் கேரட் துருவல், வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை அடுக்கி, பிரெட்டை மூடி டோஸ்ட் செய்தால் மல்ட்டிபிள் லேயர் சாண்ட்விச் தயார். பலன்கள்: கலோரிகள் குறைவு என்பதால் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். முழுமையான உணவாக இருப்பதால், காலை உணவாகச் சாப்பிடலாம். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். பனீர் மின்ட் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 , பனீர் - ஒரு கப், புதினா சட்னி - ஒரு கப், வெங்காயம், தக்காளி- தலா ஒன்று, மிளகுத்தூள், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் செய்முறை: எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வதக்கி, இதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பனீரை சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். பிறகு, மிளகுத் தூள் தூவி இறக்கிப் பரிமாறவும். பிரெட்டில் புதினா சட்னி தடவி, இதில் பனீர் கிரேவியை ஸ்டஃப் செய்து, இதன் மேல் எலுமிச்சைச் சாறு ஊற்றி டோஸ்ட் செய்து பரிமாறவும். பலன்கள்: புரதம், கொழுப்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவாக சாப்பிடலாம். ஆனால், இதனுடன் பழமோ, பழச்சாறோ அருந்தினால் சமச்சீரான சத்துக்களை பெறலாம். வெள்ளரி சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வெள்ளரி - 1, புதினா சட்னி - ஒரு கப், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியை தடவி, வெள்ளரித் துண்டுகளை வரிசையாகவைத்து, அதன் மேல் உப்பு, மிளகுத் தூள் தூவி பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்து பரிமாறலாம். பலன்கள்: கோடைக்கேற்ற சாண்ட்விச் இது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சிற்றுண்டியாகச் சாப்பிட மிகவும் ஏற்றது. தக்காளி - கார்ன் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, நறுக்கிய தக்காளி - 1, கார்ன் - அரை கப், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள், புதினா சட்னி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தக்காளி, கார்ன் இரண்டையும் உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிரெட்டின் ஒரு பக்கம் புதினா சட்னியைத் தடவி, இந்தக் கலவையை வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்ய வேண்டும். பலன்கள்: தக்காளியில் லைக்கோபீன் உள்ளதால், உடலுக்கு நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின், மாவுச்சத்து உள்ளன. மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். பேரீச்சை சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், பேரீச்சை - 6, பாதாம் - 4, வாழைப்பழம் - 4 ஸ்லைஸ். செய்முறை: பிரெட்டை டோஸ்ட் செய்து நடுவில் வாழைப்பழ ஸ்லைஸ், துண்டாக நறுக்கிய பேரீச்சை, பாதாம் ஆகியவற்றை நடுவில் வைத்து மூடி டோஸ்ட் செய்ய வேண்டும். பலன்கள்: இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. மாலை நேர உணவாகச் சாப்பிடலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி சாப்பிடலாம். பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் தொடர்ந்து சாப்பிடலாம். ஆலிவ் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, ஆலிவ் - அரை கப், ஆலிவ் எண்ணெய், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் மேல் ஆலிவ்களை வரிசையாக அடுக்கி, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, அதன் மேல் ஆலிவ் எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்ய வேண்டும். பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் நிறைவாக உள்ளன. வித்தியாசமான சுவை கொண்டது என்பதால், பெரும்பாலும் குழந்தைகள் இதை விரும்ப மாட்டார்கள். பெரியவர்கள் சாப்பிடலாம். இதயத்துக்கு மிகவும் நல்லது. ஓமேகா - 3 கொழுப்பு அமிலம் இருக்கிற ஒரே சாண்ட்விச் இதுதான். வொயிட் அண்ட் டார்க் சாக்லேட் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வொயிட் சாக்லேட் - 20 கிராம், டார்க் சாக்லேட் - 20 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பிரெட்டின் மேல் இரண்டு சாக்லேட்டையும் தூவி, பிரெட்டை மூடிய பிறகு, லேசாக டோஸ்ட் செய்யவேண்டும். பலன்கள்: குழந்தைகளுக்கு மாற்று உணவாகத் தரலாம். டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோவின் சத்துக்கள் இதயத்துக்கு நல்லது. சோர்வாக இருப்பவர்கள் சாப்பிட, ஹார்மோன்களைத் தூண்டி எனர்ஜி கிடைக்கும். சிறிதளவு கால்சியம் சத்துக்களும் கிடைக்கும். ஆனால், அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஆலு சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, மிளகாய் ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள், உப்பு, நெய் - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை ஸ்லைஸாக வெட்ட வேண்டும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில், உருளைக்கிழங்கு ஸ்லைஸ் வைத்து, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவி இருபுறமும் டோஸ்ட் செய்ய வேண்டும். பலன்கள்: உருளையில் மாவுச்சத்து அதிகம். உடலின் எடை அதிகரிக்கும். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது. கூடுதல் ஆற்றல் கிடைக்கும். மாலை நேர உணவாகச் சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச் தேவையானவை: பிரெட்- 2, ஸ்ட்ராபெர்ரி - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல தயார் செய்ய வேண்டும். இந்த ஸ்ட்ராபெர்ரி பசையை பிரெட்டின் மீது தடவி டோஸ்ட் செய்து சாப்பிடலாம். பலன்கள்: லைக்கோபீன் சத்து உள்ளது. வைட்டமின்கள் சி, ஏ உள்ளன. புளிப்புச் சுவையைத் தவிர்க்க, வெண்ணெயோடு கலப் பதால் புதுச்சுவை கிடைக்கும். மாலை உணவாக மட்டும் சாப்பிடலாம். ஃபிரெஷ் ஸ்ட்ராபெர்ரி பழங்களாகச் சேர்த்துக்கொண்டால், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். ஸ்டீம் எக் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ், வேகவைத்த முட்டை - தலா 2, மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத் தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: டோஸ்ட் செய்த பிரெட்டின் நடுவே, வேகவைத்து மெலிதாக நறுக்கிய முட்டையை வைத்து, அதன் மேல் மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு தூவி டோஸ்டட் பிரெட்டால் மூடிப் பரிமாறவும். பலன்கள்: எளிதில் செய்யக்கூடிய சாண்ட்விச் இது. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை இதில் நிறைந்திருக்கின்றன. காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். காலை வேளையில் சாப்பிடலாம். தேன் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், தேன் - ஒரு கப், பனை சர்க்கரை - ஒரு டீஸ்பூன். செய்முறை: பிரெட்டின் மேல் தேனை ஊற்றி, அதன் மேல் பனை சர்க்கரை தூவி, அப்படியே டோஸ்ட் செய்து பரிமாறவும். பலன்கள்: ஸ்வீட் சாண்ட்விச் இது. சிலருக்கு, முதல் உணவாக இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு ஏற்றது. சாப்பிட்ட பிறகு, கூடுதல் உணவாகச் சாப்பிடலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்ட் நிறைந்தது என்பதால் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தேன், தொண்டை நோய்த்தொற்றைத் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தேன் ஆர்கானிக்காக இருந்தால் நல்லது. டபுள் கிரீன் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, புதினா சட்னி - ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா, கீரை - தலா அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியைத் தடவி, புதினா இலைகளை வைத்து, சிறிதளவு கீரையை அதன் மேல் பரப்பி, பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்து சாப்பிடலாம். பலன்கள்: ஃபோலிக் ஆசிட், வைட்டமின்-கே கிடைக்கும். இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இதை காலை உணவாகச் சாப்பிடலாம். ஆனால், இதனுடன் காய்கறி, பயறு, பருப்பு வகைகள் சேர்த்துக்கொள்வது அவசியம். மாம்பழ சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, மாம்பழக் கூழ் - ஒரு கப், பனை சர்க்கரை - ஒரு டீ ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பிரெட்டில் மாம்பழக் கூழ் தடவி, நாட்டுச் சர்க்கரை தூவி, லேசான நெய்விட்டு டோஸ்ட் செய்து சாப்பிடலாம். பலன்கள்: வைட்டமின்-ஏ, சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. மாம்பழ விரும்பிகளுக்கு புதிய சுவையை அளிக்கும். பனை சர்க்கரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த சாண்ட்விச் சாப்பிட உடனடி எனர்ஜி கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். நட்ஸ் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, முந்திரி, பாதாம், பேரீச்சை, பிஸ்தா, வால்நட், காய்ந்த திராட்சை - தலா 4, தேன் - அரை கப். செய்முறை: அரை கப் தேனில், முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை பாதியாக உடைத்து சேர்த்து கலக்க வேண்டும். இதை பிரெட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து சாப்பிடலாம். பலன்கள்: ஒவ்வொரு நட்ஸிலும் ஒவ்வொரு வகையான சத்து நிறைவாக உள்ளன. ஓமேகா-3, புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. சென்னா சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், வேகவைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பயறு - அரை கப், வெங்காயம் - 3 ஸ்லைஸ், புதினா சட்னி - அரை கப் செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, இதில் வெங்காய ஸ்லைஸ்களை வைத்து, வேகவைத்த கொண்டைக்கடலை, வேக வைக்காத முளைகட்டிய பயறுகளைச் சேர்த்து மிளகுத்தூள், கறுப்பு உப்பு தூவி, பிரெட். ஸ்லைஸ் வைத்துப் பரிமாறவும். பலன்கள்: மாவுச்சத்து, வைட்டமின், புரதச்சத்து நிறைந்துள்ளன. காலைவேளையில் சாப்பிட ஏற்றது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்து நிறைந்த சாண்ட்விச். முளைகட்டிய பயறு சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், முளைகட்டிய வேகவைத்த பச்சைப்பயறு, தட்டைப்பயறு மற்றும் கொள்ளு - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: தவாவில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் முளைகட்டிய வேகவைத்த பயறுகளைச் சேர்த்து, மிளகாய்த்தூள், லேசாக தண்ணீர் கலந்து நன்றாக கிரேவியாக மாற்றவும். இதை பிரெட்டின் இடையில் வைத்து, டோஸ்ட் செய்து சாப்பிடலாம். பலன்கள்: வைட்டமின்-சி, நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்புக்கள் நிறைந்துள்ளன. வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். காலையில் எடுத்துக்கொள்ளலாம். புரோகோலி சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், புரோகோலி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - 2 ஸ்லைஸ், புதினா சட்னி - கால் கப், மிளகுத்தூள், கறுப்பு உப்பு- தேவையான அளவு செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, அதன்மேல் வெங்காயம், தக்காளி வைத்து, ஆங்காங்கே புரோகோலியை வைத்து, மிளகுத்தூள், கறுப்பு உப்பு தூவி, பிரெட்டால் மூடி பரிமாறவும். பலன்கள்: புரோகோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். காய்கறிகளில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். காலை வேளையில் சாப்பிட ஏற்றது. இதனுடன் புரதச்சத்துக்கள் நிறைந்த பயறு, பருப்பு வகைகளைச் சேர்த்தால் சமச்சீர் உணவு முழுமை பெறும். லெட்டியூஸ் லீஃப் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், பெரிய லெட்டியூஸ் இலை - ஒன்று, வேகவைத்த முட்டை - ஒன்று, புதினா சட்னி - ஒரு கப், தக்காளி, குடமிளகாய், நறுக்கிய வெங்காயம் - தலா 4 துண்டுகள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு - தேவையான அளவு செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியை தடவி இதில் லெட்டியூஸ் லீஃப் வைத்து, இதன் மேல் காய்கறிகளை அடுக்கி, முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் மேலே வைத்து பிரெட்டை மூடி டோஸ்ட் செய்ய வேண்டும். பலன்கள்: வேகவைக்கப்படாத காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. முட்டையில் இருக்கும் அமினோஅமிலங்கள் முழுமையாகக் கிடைக்கும். காலை வேளையில் சாப்பிட ஏற்றது. வாழைப்பழ டோஸ்ட் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், வாழைப்பழம் - 2, உருக்கிய சாக்லெட் - 2 டீஸ்பூன் செய்முறை: பிரெட்டில், வாழைப்பழ ஸ்லைஸ்களை முழுமையாகப் பரப்பி இதன் மேல் உருக்கிய சாக்லேட்டை ஊற்றி டாப்பிங் போல செய்து, டோஸ்ட் செய்யவும். பலன்கள்: குழந்தைகளுக்கு ஏற்ற சாண்ட்விச் இது. நார்ச்சத்து, மாவுச்சத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிரெட் வாங்கும் முன்... சமீபத்தில், சென்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் என்விரோன்மென்ட் நடத்திய உணவுகள் தொடர்பான பரிசோதனையில், பிரெட், பாவ் பன், ரெடி டு ஈட் பர்கர் பிரெட், பீட்சா பிரெட்களில் பொட்டாசியம் பிரோமேட் (Potassium Bromate) உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன என்பது வருத்தத்துக்குரிய செய்தி. இந்த ரசயானங்கள் புற்றுநோய் உருவாக்கும் காரணி என்பதால், பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டும் இன்னும் இவ்வகையான கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரெட் எப்படி வாங்க வேண்டும்? கோதுமை பிரெட், மல்டி கிரெயின் பிரெட், பொட்டாசியம் சேர்க்காத வெள்ளை பிரெட் வாங்கலாம். பொட்டாசியம் பிரோமேட் சேர்க்காத பிரெட் வகைகளை வாங்க வேண்டும். பிரபல முன்னணி நிறுவனங்களாக இருந்தாலும், லேபிளை சரிபார்த்து வாங்க வேண்டும். அருகில் உள்ள பேக்கரிகளில், கெமிக்கல்கள் சேர்க்கப்படாத பிரெட் வகைகளைக் கேட்டு வாங்கலாம். குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருளாக இருப்பதால், முடிந்த அளவுக்கு ஆர்கானிக் பிரெட் வகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
  15. உளுந்து சாதம் தேவையானவை: * பாசுமதி அரிசி - ஒரு கப் * உடைத்த கறுப்பு உளுந்து - அரை கப் * கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் * பூண்டு - 2 பல் * இஞ்சி - சிறு துண்டு * பச்சை மிளகாய் - 4 * எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப * உளுந்துப்பொடி - ஒரு டீஸ்பூன் * உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன் தாளிக்க: * சீரகம் - ஒரு டீஸ்பூன் * கடுகு - கால் டீஸ்பூன் * உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் * ஓமம் - கால் டீஸ்பூன் * நெய் - ஒரு டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுந்தைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை பொலபொலவென்று வடித்து ஆறவைக்கவும். ஊறிய உளுந்தின் நீரை வடித்துவிட்டு, கொத்தமல்லித்தழை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு, தீயை மிதமாக்கி அரைத்தவற்றைச் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் உளுந்தை வதக்கினால் உளுந்து மொறுமொறுப்பாகி விடும். சாதத்தில் தேவையான உப்பு, வதக்கிய மசாலாவைச் சேர்த்துக் கிளறி உளுந்துப் பொடியைத் தூவவும். பரிமாறும் முன் நெய்யில் கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். குறிப்பு: அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு நீரை வடித்து, வாணலியில் வறுத்து பின்னர் சாதம் வடிக்கவும். உளுந்துப் பொடிக்கு, வெறும் வாணலியில் முழு உளுந்தை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.