Everything posted by நவீனன்
-
கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
காலிஃப்ளவர்-65 பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் தக்காளி - கால் கிலோ (வெந்நீரில் ஒரு நிமிடம் ஊறவைத்து தோல் உரித்து அரைக்கவும்.) பெரிய வெங்காயம் - 5 (நீளவாக்கில் நறுக்கியது) பச்சைமிளகாய் - 5 (கீறியது) பட்டை - ஒரு அங்குல துண்டு (பொடித்தது) கிராம்பு - 2 (பொடித்தது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய்த்துருவல் - அரை கப் (அரைத்தது) நெய் - 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர் - 4 கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர்-65 க்கு தேவையானவை: காலிஃப்ளவர் - ஒரு பூ பெரியது (அரை கிலோ அளவு - நடுத்தர அளவு பூவாக எடுத்து வைக்கவும்) இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - அரை பழம் வினிகர் - கால் டீஸ்பூன் உப்பு - கால் டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் - ஒரு துளி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு செய்முறை: காலிஃப்ளவர் மற்றும் எண்ணெய் தவிர 65 க்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காலிஃப்ளவர் பூவை கலக்கிய கலவையில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் காலிஃப்ளவரை முறுகலாகப் பொரித்தெடுக்கவும். பிரியாணி செய்யும் முறை: அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நெய்யை அகலமான பாத்திரத்தில் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வெடிக்கவிட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 6 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, பச்சைமிளகாய் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு, காரம் சரிபார்த்து ஊற வைத்த அரிசியை வடித்து தண்ணீர் 4 கப் சேர்த்துக் கலக்கவும். அரிசி வெந்து தண்ணீர் பாதியளவு வற்றிய பிறகு, பொரித்த காலிஃப்ளவர் பூவையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்து அரிசி உடையாமல் புரட்டி சிம்மில் 10 நிமிடங்கள் தம் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தயாரான காலிஃப்ளவர்-65 பிரியாணியை தயிர் சட்னி, பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
வி.ஐ.பி. ரெசிப்பி! இரவு 7 மணிக்கு மேல் வயிற்றுக்குப் பூட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் இனிப்பு, ஞாயிறு குடும்பத்துக்கு மட்டுமேயான நாள்... என உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான இந்த ஷெட்யூலுக்கு சொந்தக்காரர், ‘கெவின் கேர்’ ரங்கநாதன். ஷாம்பூவில் ஆரம்பித்து, பல வகையான மில்க் ஷேக்குகளை அறிமுகப்படுத்தி, தற்போது பாக்கெட் இளநீர் விற்பனையில் அத்தியாயமிட்டிருக்கும் ரங்கநாதனின் ஒருநாள் சாப்பாட்டு மெனுவை அறிவோமா?! ‘‘காலையில எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிப்பேன். நாள் முழுக்க நடை, நடைதான். நான் கையில் கட்டியிருக்கும் இந்த டிஜிட்டல் வாட்ச், எவ்வளவு அடிகள் நடந்திருக்கேன் என்பதைக் காட்டும். ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள், அதாவது கிட்டத்தட்ட ஏழரை கிலோ மீட்டர்தான் என் இலக்கு. காலையில் தினமும் 2 டீஸ்பூன் முளைகட்டிய அல்ஃபா விதைகள் எடுத்துக்கிறது சிறுநீரகத்துக்கு நல்லது. தவிர, இன்னும் சில பயறு வகைகளை முளைகட்டி ஃபிரிட்ஜில் வைத்து, தினமும் தேவைக்கேற்ப தோசைக்கு சைடு டிஷ் கிரேவியா செஞ்சுக்குவோம். கைக்குத்தல் அரிசி சாதம்தான் சாப்பாட்டுக்கு. அதில் நிறைய நார்ச்சத்து இருக்கு. இரவு ஏழு மணிக்கு கொட்டை வகைகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கிறதோட டின்னர் ஓவர். எங்க வீட்டில் சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம்னு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. காரணம், உணவுக் கட்டுப்பாடு மட்டுமில்ல, வாரம் ஒருமுறை அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்க எல்லோரும் குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தைக் கழிப்பதும்தான் ’’ என்று ரங்கநாதன் பெருமையுடன் சொல்ல, அவர் மனைவி தேன்மொழி ரங்கநாதன் தன் கணவர் விரும்பி சாப்பிடும் உணவுகள் பற்றிச் சொன்னார். ‘‘ஞாயிற்றுக்கிழமை இவருக்கு பிரியாணி நிச்சயம் வேண்டும். பெரும்பாலும் வெளியே எங்கேயும் சாப்பிடமாட்டார். அசைவ உணவில் பிரியாணி, சிக்கன்-65, மலபார் மீன்குழம்பு மற்றும் சைவ உணவில் வாழைத்தண்டுக் கூட்டு இதெல்லாம் இவருக்குப் பிடித்த உணவுகள்’’ என்றவர், மலபார் மீன் குழம்பு மற்றும் வாழைத்தண்டுக்கூட்டை நமக்காகச் செய்துகாட்டினார். மலபார் மீன் குழம்பு தேவையானவை: வஞ்சிரம் மீன்- அரை கிலோ சின்னவெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்) தக்காளி- 2 (பொடியாக நறுக்கவும்) சின்னவெங்காயம் மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்) பச்சைமிளகாய்- 2 (குறுக்காக நறுக்கவும்) மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன் வறுத்த வெந்தயத்தூள்- ஒரு டீஸ்பூன் முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப் இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும். இரண்டாவது தேங்காய்ப்பால் மற்றும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதிக்கவிடாமல் உடனே அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழையை நறுக்கித் தூவவும். மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி. வாழைத்தண்டுக் கூட்டு தேவையானவை: பாசிப்பயறு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்) வாழைத்தண்டு - ஒன்று (நறுக்கவும்) வடகம் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - 10 இலைகள் செய்முறை: பாசிப்பயறு, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும். குழைந்த பதத்துக்கு வந்தவுடன் வாழைத்தண்டு சேர்த்து வேகவிடவும் (வாழைத்தண்டை தனியாக வேகவைத்தால், நிறம் மாறிவிடும்). நன்கு வெந்தவுடன் உப்பு, வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கும்போது தேங்காய்த்துருவல் தூவவும். சத்தான, சுவையான வழைத்தண்டுக் கூட்டு தயார். ‘கெவின்கேர்’ ரங்கநாதனின் ஒரு நாள் மெனு! காலை 6 மணிக்கு - 1/2 லிட்டர் தண்ணீர். 8 மணிக்கு முட்டைதோசை - ஒன்று (முட்டையின் வெள்ளைக்கரு + ஒரு கரண்டி மாவு மட்டும்), முளைகட்டிய அல்ஃபா விதைகள் - 2 டீஸ்பூன், சைடு டிஷ்- மஷ்ரூம் கிரேவி/முளைகட்டிய பயறு கிரேவி. (அல்லது) முட்டை பிரெட் டோஸ்ட் (முட்டையின் வெள்ளைக்கரு ஆம்லெட் மற்றும் வெள்ளரிக்காய் வைத்தது), பச்சை சட்னியுடன் - 2 மதியம் 1 மணிக்கு கைக்குத்தல் அரிசி- சாதம் 250 கிராம், 3 வகையான காய்கறிப் பொரியல், ஏதேனும் ஒரு வகை கீரை, சிக்கன் அல்லது மீன்-குழம்பு (குறைந்த எண்ணெயில் பொரித்தது). இரவு 7 மணிக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்பு வகைகள் மற்றும் பழங்கள்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
கொண்டைக்கடலை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி (வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்) - ஒரு கப் வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப் தக்காளி - 3 பெரியவெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது) பூண்டு - 3 பல் (நறுக்கியது) பச்சைமிளகாய் - 4 தேங்காயப்்பால் - ஒன்றரை கப் கஸூரி மேத்தி - ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் சர்க்கரை - கால் டீஸ்பூன் பட்டை - ஒன்று கிராம்பு - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒன்று நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் அரைக்க: பெரியவெங்காயம் - ஒன்று காய்ந்தமிளகாய் - 8 சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 5 பல் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: வெள்ளைக் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அவித்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, ஆறவிட்டு மிக்ஸியில் மை போல அரைக்கவும். தக்காளியை சுடுநீரில் முழுதாகச் சேர்த்து நோல் நீக்கி சதைப்பகுதியை மட்டும் அரைத்து வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, ஒரு டீஸ்பூன் சூடான நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைச் சேர்த்து வெடிக்க விடவும். நறுக்கிய பூண்டுப்பல் சேர்த்து சிவக்க வறுக்கவும். பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு அரைத்த மசாலா விழுது, அரைத்த தக்காளி விழுது உப்பு, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். இத்துடன் அவித்த கொண்டைக்கடலை, கஸுரி மேத்தி, கரம் மசாலாத்தூள், ஒன்றரை கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து வறுத்த அரிசியைச் சேர்த்துக் கிளறி வேக விடவும். இத்துடன் நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் பரிமாறவும். பின்குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து மேலே தூவிப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த 10 நாட்களாக மீண்டும் அதே பிரச்சனை..- சமையல் செய்முறைகள் சில
இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்...! தேவையான பொருள்கள்: அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம் புளி - எலுமிச்சை அளவு வெல்லம் - சிறிது தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கு கடுகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க செய்முறை: தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும். கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.- சமையல் செய்முறைகள் சில
பருத்தித்துறை வடை- சமையல் செய்முறைகள் சில
- சமையல் செய்முறைகள் சில
‘சமைக்கத் தெரியும்... ஆனாலும், சமையலா?’ என்று ஜகா வாங்கும் பேச்சுலர்களுக்காக அவர்களே தயாரிக்கும் வகையில், நாவில் எச்சில் ஊறவைக்கும் ரெசிப்பியைத் தந்திருக்கிறார் சமையல்கலைஞர் ரேவதிசண்முகம். ஃகார்ன் புலாவ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப் வேகவைத்து உரித்த ஃகார்ன் முத்துக்கள் - அரை கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி விழுது - அரை கப் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் செய்முறை: அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, ஃகார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். கவனிக்க வேண்டியவை: சமைக்கும்போது நேர அளவோ, தண்ணீர் அளவோ அதிகமானால், சாதம் குழைந்துவிடும். அதேபோல தண்ணீரின் அளவு குறைந்தால், சாதம் வேகாமல் நறுக்கென்று இருக்கும். அதனால், ஆரம்பத்திலேயே கவனமுடன் தண்ணீரின் அளவை வைப்பது நல்லது. பனீர் பட்டாணி குருமா தேவையானவை: பச்சைப் பட்டாணி - அரை கப் பனீர் - 200 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 கறிவேப்பிலை - சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் - அரை கப் முந்திரி - 8 செய்முறை: பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பனீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு, மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கலந்து இறக்கவும். கவனிக்க வேண்டியவை: தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்.- சமையல் செய்முறைகள் சில
இறால் பிரியாணி தேவையானவை: இறால் - ஒரு கிலோ (சுத்தம் செய்தது) வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சைமிளகாய் - 6 (கீறியது) இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 2 ஏலக்காய் - 2 எலுமிச்சைச் சாறு - அரை பழம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் நெய் - 100 கிராம் தயிர் - 100 கிராம் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள் - இரண்டே கால் டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் - இரண்டரை டீஸ்பூன் பிரிஞ்சி இலை - ஒன்று புதினா - கால் கைப்பிடி (நறுக்கியது) கொத்தமல்லித்தழை - கால் கைப்பிடி (நறுக்கியது) ரோஸ் வாட்டர் - கால் டீஸ்பூன் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது) பாசுமதி அரிசி - மூன்றரை கப் தண்ணீர் - நாலே கால் கப் முந்திரிப்பருப்பு - 10 தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: மிக்ஸியில் தேங்காய்த்துருவல், முந்திரிப்பருப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல் அரைக்கவும். சுத்தம் செய்த இறாலுடன் தயிர், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். பாசுமதி அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கரைய வதக்கி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு, நாலே கால் கப் தண்ணீரை இறால் கலவையில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் அளவுக்கு வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் விழுது, எலுமிச்சைச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி இறால் கலவையை மீண்டும் கொதிக்க விடவும். ஊறவைத்த அரிசியை வடித்து இறால் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும். மீண்டும் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் அளவுக்கு வேகவிட்டு 5 நிமிடங்கள் தீயை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை அணைக்கவும். விசில் சத்தம் அடங்கியதும், இறால் பிரியாணியை சட்னியுடன் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
என் ஹெல்த் ரகசியம், என் மனைவி! வி.ஐ.பி. ரெசிப்பி! 'வெற்றிபெற்ற ஆண்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்’ எனச் சொல்வதுண்டு. காலணி உலகில் தன் வெற்றியை நிலைநாட்டி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.கே.சி குழுமங்களின் இயக்குநர் யாசினின் வெற்றிக்கு, உடல்நலனுக்குப் பின்புலமாக இருந்து செயல்படுவது அவருடைய மனைவி சிந்து யாசின். சிந்துவே பேசினார் ‘‘வேலை டென்ஷனில் இருந்து அவரைத் திருப்ப எனக்கு உதவியாக இருப்பது எங்கள் வீட்டுச் சூழலும், என் கைபக்குவமும்தான். அதுவும் முக்கியமாக அவர் வீட்டில் இருக்கும் நாள் மற்றும் நேரங்களில் அவருக்குப் பிடித்த உணவுகளே எங்கள் மெனுவை நிரப்பியிருக்கும். அவருக்கு ‘ஸ்வீட்’ என்றால், அத்தனை விருப்பம். அதனால், ஏதாவது ஒரு ஸ்வீட் அவர் மெனுவில் இருக்கும். மிகவும் விரும்பி உண்ணும் ஸ்வீட் என்றால், அது கேரட் புடிங், பைனாப்பிள் புடிங் கேக் என்று லிஸ்ட் சற்றே நீளும். காலை உணவைப் பொறுத்தவரை இட்லி, தோசை, இடியாப்பம், பூரி என்று நமக்கு பழக்கமான உணவுகள் ஏதாவது ஒன்று அவருடைய தட்டை அலங்கரிக்கும். உணவை முடித்தவுடன் ஆரஞ்ச், சாத்துக்குடி என்று ஹெல்தியான பழச்சாறு கண்டிப்பாக இருக்கும். மதிய உணவுக்கு அவர் வீட்டுக்கு வர இயலாத சூழலே பெரும்பாலும் இருக்கும். மிக அரிதாக அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதாக இருந்தால், அசைவ உணவுகளுக்கு எப்போதும் ‘க்ரீன் சிக்னல்’ தான். அசைவத்தில் மீனுக்குத்தான் முக்கியத்துவம். மீன் குழம்பு, மீன் ஃப்ரை என ஏதாவது ஒன்று மெனுவில் இருக்கும். உணவில், அன்றும் இன்றும் அவருக்குப் பிடித்தது மலபார் சிக்கன் பிரியாணிதான். ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மலபார்’ சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இருக்கும். மதிய உணவைப் பொறுத்தவரை குழம்பு அசைவமாக இருந்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு சைவ பொரியல் இருக்கும். அதுவே அசைவமாக அதுவும் டிரையான ரெசிப்பியாக இருந்தால் குழம்பு சைவமாக இருக்கும். மாலைநேரத்தில் டீயுடன் கட்லெட், இரவு உணவாக சப்பாத்தி தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது சைவக் குழம்பு என்று தினம் ஒன்றாக இருக்கும். உணவு முடித்த பிறகு வெஜிடபிள் சாலட் எடுத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்ற சிந்து, தன் கணவருக்குப் பிடித்த அன்னாசி பிஸ்கட் புடிங் மற்றும் மலபார் சிக்கன் பிரியாணியைச் செய்து காட்டி அசத்தினார். அவற்றின் ரெசிப்பி இதோ... மலபார் சிக்கன் பிரியாணி தேவையானவை: * சிக்கன் - அரை கிலோ * சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ) * பெரியவெங்காயம் - 2 + ஒன்று * தக்காளி - 3 * பட்டை - ஒன்று * ஏலக்காய் - 2 * கிராம்பு - 2 * அன்னாசிப்பூ - 2 * பச்சை மிளகாய் - 4 (பேஸ்டாக்கிக் கொள்ளவும்) * இஞ்சி-பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன் * கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி * புதினா - ஒரு கைப்பிடி * தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் * மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் * மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன் * தயிர் - அரை கப் * கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் * தேங்காய் எண்ணெய் - கால் கப் * நெய் - கால் கப் * முந்திரி - 10 * குங்குமப்பூ - ஒரு சிட்டிகை * பால் - 2 டேபிள்ஸ்பூன் * உப்பு - தேவையான அளவு செய்முறை: சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும். ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இனி வதக்கிய கலவையோடு அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு, சிக்கன் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும். அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும். ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுக்கவும். பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும். இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார். அன்னாசி பிஸ்கட் புடிங் தேவையானவை: * அன்னாசிப்பழம் - ஒன்று பெரியது * வெண்ணெய் - 100 கிராம் * பவுடர் சுகர் - ஒரு கப் * மேரி பிஸ்கட் - ஒரு மீடியம் சைஸ் பாக்கெட் * பால் - அரை கப் * முந்திரி - தேவையான அளவு * சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: அன்னாசிப்பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து அரைத்துப் பிழிந்து சாறு எடுக்கவும். இத்துடன் வெண்ணெய் மற்றும் பவுடர் சர்க்கரையைச் சேர்த்து கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலில் நனைத்த ஒரு மேரி பிஸ்கட்டை வைக்கவும். அதன் மீது அன்னாசி வெண்ணெய்க் கலவையைப் பரப்பவும். அதன் மீது மீண்டும் மேரி பிஸ்கட்டை வைக்கவும். இப்படி பிஸ்கட் தீரும்வரை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கவும். வாணலியில் சர்க்கரை மற்றும் முந்திரியை அடுத்தடுத்து சேர்த்து வறுக்கவும். ஆறியதும், இடித்துக் கொள்ளவும். ரெடி செய்து வைத்த பிஸ்கட் கலவையின் மீது இடித்ததைத் தூவவும். அப்படியே பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, பிறகு பரிமாறினால், சூப்பர் சுவையில் புடிங் ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
வெஜிடபிள் போண்டா : செய்முறைகளுடன்...! தேவையான பொருள்கள் மேல் மாவிற்கு கடலை மாவு - 1கப் அரிசி மாவு -13 கப் உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப்பொடி - 3/4 டீஸ்பூன் சமையல் சோடா - 2 சிட்டிகை காய்கறி மசாலா செய்ய பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப் பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப் காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் உரித்த பட்டாணி - 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப் நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு லெமன் - 1 செய்முறை நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில்வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது,பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதிலேயே மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச்சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும். ஈரம்நன்கு வ்ற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்த்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சங்காயளவுஉருண்டைகள் செய்யவும்.சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த்தூள் தண்ணீர்சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல்மாவைத் தயாரிக்கவும். தோசைமாவு பக்குவத்தில் செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில்தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சூடாகப்பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
- சமையல் செய்முறைகள் சில
கோதுமை உப்புமா பிரியாணி தேவையானவை: மட்டன் (அ) சிக்கன் - கால் கிலோ கோதுமைக் குருணை - 2 கப் நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் பட்டை - ஒன்று கிராம்பு - 2 ஏலக்காய் - 3 பிரிஞ்சி இலை - ஒன்று சின்னவெங்காயம் - அரை கைப்பிடி (நறுக்கியது) பெரியவெங்காயம் - ஒன்று (நறுக்கியது) இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சைமிளகாய் - 4 (கீறியது) தக்காளி - 2 (நறுக்கியது) புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் பச்சைப்பட்டாணி - அரை கப் உப்பு - தேவையான அளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - 3 டேபிள்ஸ்பூன் தேங்காயப்பால் - 4 கப் முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வெடிக்க விடவும். இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். கூடவே பச்சைப்பட்டாணி, பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாக மசிய வதக்கி மட்டன்/சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும். மட்டனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மட்டனை வேக விடவும். மட்டன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். கோதுமையும் கறிகுழம்பும் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும். கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
வி.ஐ.பி. ரெசிப்பி! மதுரையில் இருக்கும் பிரபல ஹோட்டல்களில் ஒன்று... குமார் மெஸ். ஹோட்டலின் உரிமையாளர் ராமச்சந்திரகுமாரின் பெயரில் இயங்கும் மெஸ், இப்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது. ‘‘என்னோட ரெண்டு தாத்தாவுமே நல்ல சமையல்கலைஞர்கள். நான் பி.ஃபார்ம் முடிச்சாலும், குடும்பத் தொழிலான சமையல்லயே இறங்கிட்டேன். என் தம்பிக்காகத்தான் முதன்முதல்ல 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டோட மதுரையில ‘குமார் மெஸ்’ஸை சின்ன அளவில ஆரம்பிச்சேன். இப்போ அவர் உயிரோட இல்லை என்பது பெரிய வருத்தம். 26 வருஷமாச்சு... ஹோட்டல் ஆரம்பிச்சு. சென்னையில கால்வெச்சு 10 மாதங்களாச்சு. அடுத்தடுத்த கிளைகள் தொடங்கிற திட்டம் பற்றி யோசிக்கிற அளவுக்கு வெற்றி கிடைச்சிருக்கு” என்றவருக்கு மிகவும் விருப்பமான உணவு அசைவம்தானாம். “முன்பெல்லாம் நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப உடம்புல கொஞ்சம் பிரச்னை இருக்கிறதால ட்ரீட்மென்ட்ல இருக்கேன். அதனால சைவம். என் மனைவி சமைப்பதில் ஸ்டஃப்டு சப்பாத்தி, பருப்பு சட்னி, இறால் மசாலா, மட்டன் குருமா உணவுகளுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்” என்று லயித்து சொன்னவரின் குடும்பமே ‘குமார் மெஸ்’ உணவுகளைத்தான் சாப்பிடுகிறார்கள். ‘‘பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, காலை உணவு மட்டும் வீட்டில் செஞ்சுக்குவோம். மதியத்துக்கு தினமும் கடைச் சாப்பாடுதான். அமாவாசை அன்னைக்குமட்டும்தான் வீட்டில் சமைப்போம். எங்க ஹோட்டல்ல சமையலுக்கு ரெடிமேட் மசாலாத்தூள்களைப் பயன்படுத்துறதில்ல. எல்லாமே கையால அரைக்கிற மசாலாக்கள்தான். சென்னையில கிடைக்கிற மீன், கறி வகைகள் எதுவும் எங்களுக்குப் பிடிக்கல. அதனால, தினமும் மதுரையில் இருந்துதான் அதை வரவழைக்கிறோம். மதுரையில பொறந்து வளர்ந்ததுனால எங்கெங்க என்னென்ன உணவுப் பொருட்கள் தரமா கிடைக்கும்னு மனப்பாடமா தெரியும். ஆனா, சென்னையில ஹோட்டல் ஆரம்பிச்சப்போ, அப்படி எதுவும் தெரியாததால, ஆரம்பத்துல கிட்டத்தட்ட 15 இடங்கள்ல உணவுப் பொருட்கள் வாங்கி, வீட்டில் சமைச்சு ருசிபார்த்து, அப்புறம்தான் ஹோட்டலைத் திறந்தோம். அந்த மெனக்கெடலுக்குப் பரிசாதான் இப்போ நல்ல ரீச் கிடைச்சிருக்கு’’ என்று கணவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி ஜெயமாலா. ‘இவரு நல்லா சமைப்பாரு. இவர் செய்ற எல்லா பிரியாணி வகைகளும் எனக்குப் பிடிக்கும். இப்போ இவருக்குப் பிடிச்ச இறால் மசாலா மற்றும் மட்டன் குருமா ரெசிப்பியைப் பத்தி சொல்றேன்...’’ என்று தயாரானார். மட்டன் குருமா தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ கடலை எண்ணெய் - 100 மில்லி எலுமிச்சை - ஒன்று சீரகம் - 3 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு அரைக்க: சின்னவெங்காயம் - 200 கிராம் பச்சைமிளகாய் - 25 கிராம் தேங்காய் - ஒன்று கசகசா - 15 கிராம் மிளகு - 20 கிராம் சோம்பு - 3 கிராம் சீரகம் - 5 கிராம் பட்டை - சிறிதளவு கிராம்பு - ஒன்று அன்னாசிப்பூ - ஒன்று முந்திரிப்பருப்பு - 20 கிராம் செய்முறை: தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து லேசாக வதக்கி, பேஸ்டாக அரைக்கவும். அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மட்டனைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு மட்டனை வேகவிடவும். மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வருவதற்கு முன்னர் இறக்கிப் பரிமாறவும். ‘குமார் மெஸ் ஓனரு... கேட்கவா வேணும்... தினமும் கறிசாப்பாடுதான்...’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ‘நான் வேற மாதிரி’ என்று சிரிக்கும் ராமச்சந்திரகுமார் தந்த அவரின் தினசரி மெனு இதுதான். காலை 6 மணிக்கு: பூண்டு-10 பல், இஞ்சிச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன் 9 மணிக்கு: கேப்பைக்கூழ், காய்கறி, பழங்கள் (அல்லது) 3, 4 இட்லி அல்லது தோசை. 11 - 12 மணிக்கு: நறுக்கிய பழங்கள். மாலை 4 மணிக்கு: மதிய உணவாக அவரது உணவகத்திலேயே ஏதாவது ஒரு சைவ உணவு. இரவு 11 மணிக்கு: 2 சப்பாத்தி அல்லது கோதுமை தோசை. இறால் மசாலா தேவையானவை: இறால் - ஒரு கிலோ தயிர் - 100 மில்லி கடலை எண்ணெய் - 150 மில்லி சின்னவெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு தக்காளி - 2 பூண்டு - 30 கிராம் இஞ்சி - 20 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 10 கிராம் மஞ்சள்தூள் - 5 கிராம் மிளகு-சீரகத்தூள் - 15 கிராம் (மிளகு-10 கிராம், சீரகம்-5 கிராம்) உப்பு - தேவையான அளவு தாளிக்க: பட்டை - ஒன்று கிராம்பு - 2 ஏலக்காய் - ஒன்று அன்னாசிப்பூ - ஒன்று சோம்பு - 2 கிராம் வெந்தயம் - ஒரு கிராம் மசாலா செய்ய: சோம்பு - 2 கிராம் சீரகம் - 2 கிராம் மிளகு - 10 கிராம் கிராம்பு - ஒன்று ஏலக்காய் - ஒன்று பட்டை - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: இறாலை சுத்தம் செய்து தயிரில் ஊறவைக்கவும். மசாலா செய்ய கொடுத்த பொருட்களை வெறும் சட்டியில் நன்கு வறுத்து, மிக்ஸியில் பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். பூண்டு, இஞ்சியைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சில துளி தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை கிளறவும். இத்துடன் இறாலை 15 நிமிடங்கள் வேகவிட்டு (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை) மிளகு, சீரகத்தூள் தூவி இறக்கவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மீன் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம் தண்ணீர் - 300 மில்லி பெரிய வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது) தக்காளி - 100 கிராம் புதினா - கால் கட்டு இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தயிர் - ஒரு கப் பச்சைமிளகாய் - 4 கீறியது பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 உப்பு - தேவையான அளவு நெய் + ஆலிவ் ஆயில் - முக்கால் கப் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (வெதுவெதுப்பான கால் கப் பாலில் ஊற விடவும்) கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு எலுமிச்சை - அரை பழம் (சாறு எடுக்கவும்) எண்ணெய் - தேவையான அளவு ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன் மீன் ஊற வைக்க: மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்) ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன் நெய் மீன் - கால் கிலோ செய்முறை: நறுக்கி சுத்தம் செய்த மீனை ஊற வைக்கத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பொன்னிறமாக மீன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும். பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஆழமான பாத்திரம் அல்லது குக்கரில் நெய் + ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி நன்கு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இத்துடன் 300 மில்லி தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி கொதிக்க விட்டு, உப்பு, காரம் சரிபார்த்து அரிசி, குங்குமப்பூ சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் 3 பொரித்த மீன் துண்டுகள், அதன் மேல் 3 டீஸ்பூன் வதக்கிய பெரியவெங்காயம், அதன் மேல் வேகவைத்த சாதம் என ஒன்றின் மேல் ஒன்றாக இப்போது சொல்லியிருக்கும் வரிசையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தை மூடி அப்படியே அடுப்பில் வைத்து தீயைக் குறைக்கவும். பாத்திரத்தின் மேல் கனமான பொருளை வைத்து, 5 நிமிடங்கள் ‘தம்’ போடவும். சுவையான மீன் பிரியாணி ரெடி. சட்னியுடன் பரிமாறவும். சட்னி தேவையானவை: கொத்தமல்லித்தழை காம்புடன் - ஒரு கைப்பிடி புதினா - ஒரு கைப்பிடி பூண்டுப்பல் - 6 பல் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பேரீச்சம்பழம் - 4 (கொட்டை நீக்கியது) வெல்லம் - சிறிய துண்டு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மை போல அரைத்து உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு சரிபார்த்து பிரியாணியுடன் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
சிறுதானிய கார அடை! குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி! பலன்கள்: கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.- சமையல் செய்முறைகள் சில
சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவி தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம் பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பாலக்கீரை விழுது - ஒரு கப் வால்நட் - அரை கப் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: சிக்கனை நறுக்கி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வால்நட் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பாலக்கீரை விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் அரைத்த வால்நட் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான சாதம், ரொட்டி, ஃபுல்காவுடன் சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவியைப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
நன்றி ஜீவன்.. உங்கள் இடத்தில்தானே இந்த மீன் நிறைய கிடைக்கும்.. நோர்வேயில். நான் மேல தந்த ரெசிப்பி கொஹ்லிக்கு பிடித்த உணவாம்.. வி.ஐ.பி. ரெசிப்பி! 1 1/2 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்! ‘You are what you eat’ இந்த ஆங்கில பழமொழிதான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விராட் கோஹ்லியின் ஃபேவரைட் வாசகம். டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே கோஹ்லிக்கு சாப்பிடுவதில், கிரிக்கெட்டைவிட ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் அதுவே அவரது பெர்ஃபார்மென்ஸுக்கு எதிரியாக, அதிரடியாக எடையைக் குறைத்தார் கோஹ்லி. அதன் பின்னர்தான், தான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை எல்லாம் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், இப்போதும் தனக்கு பிடித்த உணவு ஐட்டங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்கிறார். ஜப்பானிய உணவுகள் என்றால், கோஹ்லிக்கு சேஸிங்கில் சதம் அடிப்பது போல அவ்வளவு இஷ்டம். “என்னால் வாரத்தின் ஏழு நாட்களும், மூன்று வேளையும் ஜப்பானிய உணவுகளைமட்டும் சாப்பிட முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் கோஹ்லி. ஜப்பான் நாடும் விரைவில் கிரிக்கெட் ஆட வேண்டும். நாம் அடிக்கடி அங்கே சுற்றுப்பயணம் நடத்த வேண்டும் என்பது கோஹ்லியின் விஷ் லிஸ்ட்டில் ஒன்று. விராட் கோஹ்லியின் ஒரு நாள் உணவில் மீன், ஆட்டுக்கறி, காய்கறி சாலட் ஆகியவை நிச்சயம் இடம்பெறும். உணவு வகைகள் பெரும்பாலும், வீட்டில் சமைத்தவையாகத்தான் இருக்கவேண்டும். அன்றைய மேட்ச்சில் கோஹ்லியால் அவர் அணி வெற்றிப்பெற்றால், அன்று இரவு மட்டும் சாக்லேட் பிரவுனி போனஸ். அதற்கேற்ப ஜிம்மில் எக்ஸ்ட்ராவாக ஓடிவிடுவார் கோஹ்லி. தண்ணீருக்குக் கூட எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கொள்வார். அவர் குடிக்கும் ஏவியான் (evian) பிராண்ட் மினரல் வாட்டரின் விலையைக் கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றரை லிட்டர் பாட்டில் 500 ரூபாயாம். அவருக்குப் பிடித்த ஃபிஷ் ஃபிரை ரெசிப்பி கீழே.Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சமையல் செய்முறைகள் சில
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.