Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சீஸ் ஃபால்ஸ் தேவையானவை: மொசிரெலா சீஸ் - 20 சிறியத்துண்டுகள் உருளைக்கிழங்கு - 4 வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 3 பிரட் தூள்/ ரஸ்க் தூள் - ஒரு கப் முட்டையின் வெள்ளைக் கரு - ஒரு முட்டை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும். இறக்கிய கலவையை கை சூடு பதத்தில் சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒவ்வொரு உருண்டைகளுக்கும் நடுவே ஒரு சீஸ் துண்டினை வைத்து அதனை மூடி மீண்டும் உருண்டைகளாக்கவும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை உடைத்து விட்டு, அதில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை முக்கி எடுத்து, பின் பிரட் தூளில் உருட்டி எடுத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதனை பூண்டு சாஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம். பாசிப்பருப்பு அல்வா தேவையானவை: பாசிப்பருப்பு மாவு - கால் கப் பால் - அரை கப் சர்க்கரை, நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பருப்பு சீவியது - அலங்கரிக்க‌ செய்முறை: நான்ஸ்டிக் சட்டியில் நெய் விட்டு பாசிப்பருப்பு மாவு சேர்த்து பச்சை வாசனை போய் நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். மிதமான தீயில் பயத்தம்மாவு இளம் பொன்னிறமாக வந்தவுடன் பால் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் வைத்து கலக்கிக் கொண்டே 10 நிமிடங்கள் வேக விடவும். பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை முழுமையாக கரைந்தவுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். கடாயில் ஒட்டாமல் அல்வா பதமாக திரண்டு வந்தவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி சீவிய பாதாம்பருப்புத் தூவி அலங்கரிக்கவும்.
  2. கீழக்கரை மீன் குழம்பு : தேவையானவை : (என்ன மீன் )மீன் - அரை கிலோ புளி - பெரிய எலுமிச்சை அளவு மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 4 தக்காளி - ஒன்று பூண்டு - 100 கிராம் தேங்காய் - ஒன்றில் பாதி (துருவிக்கொள்ளவும் ) கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : சின்ன வெங்காயம் பத்துமட்டும் எடுத்து , துருவிய தேங்காயுடன் சேர்த்து இரண்டையும் மிக்ஸ்யில் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் .மீனை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த்ததும் கடுகு ,சீரகம் , வெந்தயம் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம் , பூண்டு ,பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள் , மஞ்சள் தூள் , மல்லித்தூள்,மிளகாய்த்தூள், சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து இதனுடன் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் மீனை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து மீன் வெந்ததும் இறக்கி மிளகுத்தூள் ,கொத்தமல்லித்தழை தூவிப்பரிமாறவும். சோயா-65 தேவையானவை: சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - 50 கிராம் (25 பெரிய பீஸ்) கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் தயிர் - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - 2 இலைகள் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய், சோயா சங்க்ஸ், கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இதில் சோயா சங்க்ஸை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பொரித்த சோயா-65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  3. கோழி வறுவல் தேவையானவை: கோழி - முக்கால் கிலோ இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு சோம்பு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2 தோலுரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 2 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் செய்முறை : கோழியை சுத்தம் செய்து விருப்பப்பட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் இஞ்சி -பூண்டு விழுது, உப்பு , மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேக வைத்த சிக்கன் சேர்த்து வதக்கி மல்லித்தூள்(தனியாத்தூள்) , உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா வாசனை போனதும் மிளகுத்தூள் தூவி இறக்கப்பரிமாறவும்.
  4. நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு : தேவையானவை: மீன் - அரை கிலோ (என்ன வகை மீன்?) புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு முருங்கைக்காய் - 2 வெந்தயம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு எண்ணெய் -தேவையான அளவு உப்பு - தேவையான அளவு அரைக்க : காய்ந்த மிளகாய் - 7 கறிவேப்பிலை சிறிதளவு சோம்பு - ஒரு டீஸ்பூன் தேங்காய் - ஒன்றில் பாதி(துருவிக் கொள்ளவும்) மல்லி(தனியா) - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 பச்சைமிளகாய் -3 செய்முறை : அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து அத்துடன் அரைத்த விழுதினை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் முருங்கக்காயை சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள புளிதண்ணீரை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.இறுதியாக சுத்தம் செய்த மீனை சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
  5. டேஸ்ட்டி டேட் பால்ஸ் தேவையானவை: விதை நீக்கி நறுக்கிய பேரீச்சைப் பழம் - ஒன்றரை கப் நெய் - 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு கப் உலர்ந்த தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் தீயை மிதமாக்கி பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி எடுத்துக்கொள்ளவும். பிறகு, பொடித்த பாதாமைத் தூவி நன்கு கிளறவும். பேரீச்சை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பரிமாறும் தட்டில் உலர்ந்த தேங்காய்த்துருவலைத் தூவி, இதில் இந்த உருண்டைகளைப் போட்டு புரட்டி எடுத்துப் பரிமாறவும்
  6. மஷ்ரூம் ஆம்லெட் தேவையானவை: சிப்பிக் காளான் - 200 கிராம் முட்டை - 4 பெரிய வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 3 தக்காளி - 50 கிராம் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பூண்டு - 3 பல் கொத்தமல்லித்தழை - சிறிதளவு கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு செய்முறை: காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். ஒவ்வொரு காளானையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கலவையை இறக்கி ஆறவிடவும். ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி, இதன் மேல் வதக்கிய கலவையைப் பரவ விட்டு சிறிது நேரம் வேக விடவும், பின்பு, ஆம்லெட்டை இரண்டாக மடித்து, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.
  7. திருநெல்வெலி மட்டன் குழம்பு: தேவையானவை : மட்டன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு. அரைக்க : தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்) கசகசா - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க: பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் -2 கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி - பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கிப்பரிமாறவும்.
  8. நெத்திலிக் கருவாடு வறுவல் தேவையானவை: நெத்திலி மீன் கருவாடு - கால் கிலோ பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலிக் கருவாட்டினை சேர்க்கவும். தீயை மிதமாக்கி கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும். சில்லி பனீர் தேவையானவை: பனீர் - 200 கிராம் மைதா மாவு - 75 கிராம் கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று குடமிளகாய் - ஒன்று பச்சைமிளகாய் - 4 இஞ்சி - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் செலரி தண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் சிவப்புமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு தண்ணீர் - 50 மில்லி செய்முறை: பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
  9. வெஜிடபள் நீல்கிரி குருமா : தேவையான பொருட்கள் : கேரட் - 50 கிராம் பீன்ஸ் - 50 கிராம் உருளைக்கிழங்கு - 50 கிராம் காலி பிளவர் - 50 கிராம் குடமிளகாய் - 50 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு புதினா - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மசாலா தயாரிக்க : மல்லி ( தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா - ஒரு டீஸ்பூன் தேங்காய் - ஒன்றில் பாதி பூண்டு - 10 பல் இஞ்சி - ஒரு துண்டு பச்சை மிளகாய் - 6 தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 100 மி.லி செய்முறை : கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலி பிளவர் ஆகியவற்றை விரும்பும் வடிவில் நறுக்கி 10 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸ்யில் மையாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் , தக்காளி, குடமிளகாய்,புதினா, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா கலவையினை இதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.இதில் வேக வைத்த காய்களை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும். முருங்கக்கீரை முட்டை பொடி மாஸ் : முருங்கக்கீரை - ஒரு கப் முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 5 பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை : அடுப்பி கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்.பூண்டு,பச்சை மிளகாய்,சேர்த்து பொன் நிறமாக வதக்கி முருங்கக்கீரை சேர்த்து வதக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி அதனுடன் மஞ்சள்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி பரிமாறவும். .
  10. மஷ்ரூம் கட்லட் தேவையானவை: மொட்டுக் காளான் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 4 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - சிறிதளவு கடலை மாவு - 6 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் பிரெட் கிரம்ப்ஸ் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பின்பு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் சிறிதளவு உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சூடு ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். உள்ளங்கையில் மாவு உருண்டையை வைத்து கட்லெட் வடிவத்துக்கு தட்டி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, கடலை மாவை கட்லெட் மீது தூவவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும். வரகு கூட்டாஞ்சோறு தேவையானவை: வரகு அரிசி - ஒரு கப் துவரம்பருப்பு - அரை கப் முருங்கைக்காய் - 1 வாழைக்காய் - பாதி பீன்ஸ், கேரட் நறுக்கிக்கொள்ளவும் - பாதி கப் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்) கறிவேப்பிலை - 10 இலைகள் கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயம் - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் நெய் - 2 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல் - கால் கப் (பெரிய நெல்லிக்காய் அளவு) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து பொடி செய்ய: மிளகாய் வற்றல் - 5 மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - கால் டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: வரகு அரிசி, துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். காய்கறிகளைத் தனியே வேகவிடவும். பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும், உப்பு, புளிக்கரைசல், வறுத்துப் பொடித்ததைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்துத் தாளித்து சாதத்தில் சேர்க்கவும். இதில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், வரகு கூட்டாஞ்சோறு தயார்.
  11. சிக்கன் கிரீன் கிரேவி: தேவையானவை: சிக்கன் - 130 கிராம் கிரீன் கறி பேஸ்ட் - 30 கிராம் பச்சை மிளகாய் - 3 பூண்டு நறுக்கியது - 10 கிராம் மிளகு - காரத்திற்கு ஏற்ப அஜினமோட்டோ - சுவைக்கு ஏற்ப அடர்த்தியான தேங்காய் பால் - 60 மி.லி துளசி இலை - 3 இலைகள் எண்ணெய் - 10 மி.லி உப்பு - தேவையான அளவு க்ரீன் கறி பேஸ்ட் தயாரிக்க: கலங்கல் (galangal) - 15 கிராம் (இது இந்தொனேசியா இஞ்சி) பச்சைமிளகாய் - 30 கிராம் சின்ன வெங்காயம் - 15 கிராம் லெமென் கிராஸ் - 5 கிராம் ப்ரான் பேஸ்ட் - 15 கிராம் (ஷ்ரிம்ப் சாஸ் என்று எல்லா டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் ) பூண்டு - 15 கிராம் எலுமிச்சை சாறு - ஒன்றில் பாதி செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும் . அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் மிளகு ,,பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ,அரைத்த கீரின் கறி பேஸ்ட், பூண்டு, சிக்கன் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.இத்துடன் உப்பு,மிளகு,அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி 2 நிமிடம் கொதிக்கவிட்டு, துளசி இலைகளை தூவிப் பரிமாறவும் சைனீஸ் சாப்ஸீ தேவையானவை: பேபி கார்ன் - 50 கிராம் மஷ்ரூம் - 50 கிராம் முட்டை கோஸ் - 50 கிராம் காரட் - 50 கிராம் பீன்ஸ் - 50 கிராம் ஸ்பிரிங் ஆனியன் - 10 கிராம் உப்பு - சுவைக்கு ஏற்ப மிளகு - காரத்திற்கேற்ப ஏற்ப அஜினமோட்டோ - சுவைக்கு ஏற்ப சோளமாவு - தேவையான அளவு / 50 கிராம் நூடுல்ஸ் - 200 கிராம் தண்ணீர் - அரை லிட்டர் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை:காய்கறிகள்,பூண்டு,ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளவும்.மஷ்ரூமை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.நூடுல்ஸை எண்ணெய்யில் டீப் ஃப்ரை செய்து தனியாக வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு,காய்கறிகள்,மற்றும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு.மிளகுத்தூள்,அஜினமோட்டோ,சேர்த்து நன்கு கலக்கவும்.அத்துடன் சோள மாவை பஜ்ஜி மாவு பததிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி ஃப்ரை செய்த நூடுல்ஸின் மீது ஊற்றிப் பரிமாறவும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.