Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. ம்ம் விளக்திற்கு நன்றி..
  2. மீன் வடை அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு எப்படி செய்வது? மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்.............
  3. ஜீவன் ஜேர்மன் மொழியில் கூடிய விபரங்களோடு இருக்கு. அதை மொழி பெயர்த்து தமிழில் எழுத நேரம் இல்லை. ஆங்கில இணைப்புகள் சில http://blog.fooducate.com/2013/12/04/whats-the-difference-between-tangerines-clementines-and-mandarins/ http://www.homefamily.net/what-is-the-difference-between-clementines-manadarins-and-tangerines-if-any00000/
  4. ஜீவன் நீங்கள் குழம்புகிறீர்கள்.. நாரத்தங்காய் நீங்கள் சொல்லும் clementine/Mandarine இது கூட இரண்டும் ஓன்று அல்ல. இரண்டுக்கும் இடையியல் சிறிய வித்தியாசம் இருக்கு
  5. நாரத்தை இலை துவையல் தேவையானவை: நாரத்தை இலைகள் - 20, கறிவேப்பிலை இலைகள் - 10, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - ஒன்று, புளி - கோலிகுண்டு அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு கரண்டி, சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, கட் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நாரத்தை இலைகளை நன்றாக வதக்கி எடுக்கவும். பின்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கி எடுத்து வைக்கவும். வாணலியில் மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்த பொருட்கள், வதக்கிய நாரத்தை இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். சுவையான துவையல் ரெடி. இது... பித்த வாந்தி, வாய் கசப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். சில நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜவ்வரிசி ஊத்தப்பம்! தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, கேரட் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதல் நாள் இரவே புழுங்கல் அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். மறுநாள் ஜவ்வரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல் கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்க்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பமாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காளான் - துளசி மசாலா தேவையானவை: காளான் - 10, மைதா மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், துளசி இலை - 10, நசுக்கிய பூண்டு, சில்லி பேஸ்ட், மிளகுத்தூள், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காளானை நான்கு துண்டுகளாக வெட்டவும். மைதா மாவு, சோள மாவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு ஆகியவற்றுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும். அதில் காளானைப் போட்டு எடுத்து, அதை எண்ணெயில் பொரித்து வைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு... வெங்காயம், பூண்டு, சில்லி பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ் போட்டு சேர்த்து கிளறி, கால் கப் அளவு நீர் விட்டு, துளசி இலையைப் போட்டு கொதிக்கவிடவும். சுண்டி வரும்போது ஒரு டீஸ்பூன் சோள மாவைக் கரைத்து சேர்த்து... கெட்டியானதும் பொரித்த காளானை சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  6. கோழி ரசம் தேவையானவை: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம் (சிறிய சைஸ்) சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 2 மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன் பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் மல்லி (தனியா) - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 பூண்டு - 7 பல் கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - 10 இலைகள் எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, மல்லி (தனியா) மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து, ஆறவைத்து அரைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டுபல்லைத் தட்டி வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். நான்கு பேருக்கு ரசம் தயார் செய்ய தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை வேகவைக்கவும். வெந்த சிக்கனை மட்டும் எடுத்து நான்கு பவுல்களில் சமமாகப் பிரித்து வைக்கவும். சிக்கன் வெந்த தண்ணீரை சிறிது நேரம் அதே வாணலியில் கொதிக்கவிடவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த ரசத்தை, ஒவ்வொரு சிக்கன் பவுலிலும் சமமாக ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசத்தை சூடாகப் பரிமாறவும். ப்ரான் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை : வேக வைத்த பாஸ்மதி அரிசி - 200 கிராம் இறால் - 6 ப்ரான் பேஸ்ட் - 30 கிராம் பூண்டு - 5 கிராம் பெரிய வெங்காயம் - 10 கிராம் காரட் - 10 கிராம் பச்சை பட்டானி - 5 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகு - காரத்திற்கேற்ப அஜினமோட்டோ - - சுவைக்கு ஏற்ப முட்டை - 1 ஸ்ப்ரிங் ஆனியன் - 10 கிராம் செய்முறை : அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக பூண்டு, ஜூலியன் (நீளமாக நறுக்கிய) பெரிய வெங்காயம் ,காரட்,பச்சை பட்டானி சேர்த்து வதக்கி இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து நன்கு வதக்கவும்.இறால் எண்ணெய் சூட்டிலே வெந்த பிறகு இத்துடன் மிளகு,உப்பு,அஜினமோட்டோ சேர்த்து வதக்கி ,வேகவைத்த அரிசி சேர்த்து மெதுவாகக் கிளறி பிரான் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும்.அதன் மீது பொரித்த முட்டையை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
  7. அவல் தோசை தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், அரிசிமாவு - சிறிதளவு உப்பு -சுவைக்கேற்ப எண்ணெய் _ தேவையான அளவு. செய்முறை: அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும் தோசைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.இனிப்பு தோசை வேண்டும் என்பவர்கள் சர்க்கரை கலந்து ஊற்றவும். மிக்ஸ்டு வெஜ்டபிள் சட்னி தேவையானவை : புடலங்காய் - ஒன்றில் பாதி சவ்சவ் - ஒன்றில் பாதி குட மிளகாய் - ஒன்று பச்சை மிளகாய் - 5 தக்காளி - 2 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு புதினா இலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு தாளிக்க : கடுகு , உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் கறீவேப்பிலை சிறிதளவு எண்ணெய் - 50 மி.லி பெருங்காயம் - ஒரு டீஸ்பூன் செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேவயானவற்றிள், புளி தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து,அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி பரிமாறவும்.
  8. அமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி! சமையல் `சுவையில் சிறந்தது..?’ என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள் ‘கல்யாண விருந்து’ என்று பதில் அளிப்பார்கள். அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் விசேஷ கல்யாண விருந்து உணவுகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, சமைத்துக்காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்... சமையல் கலையில் அளவற்ற ஆர்வமும், அசரவைக்கும் திறமையும் கொண்ட ர.கிருஷ்ணவேணி. கொஞ்சம் பொறுமையும், அக்கறையும், விருப்பமும் இருந்தால் போதும்... இவற்றை உங்கள் வீட்டிலேயே செய்து பரிமாறி, உறவு, நட்பு வட்டத்தில் கிச்சன் குயினாக வலம் வரலாம். அறுசுவை களத்தில் இறங்குங்கள்... பாராட்டுப் பதக்கத்தை சூடுங்கள்! பதிர்பேணி (தமிழ்நாடு) தேவையானவை: மைதா - 2 கப், அரிசி மாவு - கால் கப், வெண்ணெய் அல்லது வனஸ்பதி - கால் கப், பொடித்த சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் - அரை லிட்டர், பொடித்த பாதாம் - கால் கப், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, சமையல் சோடா, உப்பு - தலா ஒரு சிட்டிகை. செய்முறை: மைதாவுடன் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். சமையல் சோடாவுடன் வெண்ணெய் அல்லது வனஸ்பதியைச் சேர்த்து ஒரு தட்டில் போட்டு, கையால் அழுத்தி தேய்க்கவும் (குறைந்தது 5 நிமிடங்கள் தேய்க்க வேண்டும்). இதனுடன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும். இதுதான் பதிர். கடாயில் எண் ணெயை ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். பிசைந்த மைதாவை அப்பளம் போல திரட்டவும். ஒரு ஸ்பூன் பதிர் எடுத்து, அப்பளத்தின் மேல் பரவலாக பூசவும். இதன்மேல் மற்றொரு அப்பளம், சிறிதளவு பதிர், இன்னொரு அப்பளம் வைக்கவும். இதை இறுக்கி பாய் போல சுருட்டவும். பிறகு, சம அளவு துண்டுகள் போடவும். அவற்றை மீண்டும் ஒருமுறை அப்பளமாக திரட்டி, சூடான எண்ணெயில் போட்டு, மொறுமொறுவென பொரித்து எடுக்கவும். இதை தட்டில் நிமிர்த்தி வைத்தால், அதிகப்படி எண்ணெய் வடிந்துவிடும். ஏலக்காய்த்தூளுடன், கொஞ்சம் சர்க்கரைத்தூள் கலந்து பொரித்த அப்பளத்தின் மேல் தூவிவிடவும். பாலை கொதிக்கவைத்து குறுக்கி, பொடித்த பாதாம், மீதமுள்ள சர்க்கரை, குங்குமப்பூ கலந்து அப்பளத்தின் மேல் ஊற்றிப் பரிமாறவும். தேங்காய் அல்வா (கேரளா) தேவையானவை: கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கப், அரிசி - 4 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை. செய்முறை: அரிசியை ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கெட்டியான தேங்காய்ப்பால், சர்க்கரை, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து (அரிசியை ஊறவைத்து அரைப்பதால் விரிவடைந்து பால் மற்றும் சர்க் கரையை இழுத்துக்கொள்ளும்) நன்கு கலந்து... அடிகனமான கடாயில் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். கலவை இறுகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, தட் டில் கொட்டி வில்லைகள் போடவும். ஃபிர்ணி (டெல்லி) தேவையானவை: பால் - 2 லிட்டர், பாதாம் - 10, பாசுமதி அரிசி - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், குங்குமப்பூ - சிறிதளவு. செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசுமதி அரிசியை சேர்த்து, சிவக்க வறுக்கவும். இதைக் கொஞ்சம் பாலில் ஊறவைத்து அரைக்கவும். பாதாமை சூடான நீரில் ஊறவைத்து தோல் நீக்கி, சிறிதளவு பால் சேர்த்து அரைக் கவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி, கைவிடாமல் கிளறவும். அரைத்த பாசுமதி அரிசி, பாதாம் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்து கொதிக்கும்போது, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். பைனாப்பிள் கொத்சு (கர்நாடகா) தேவையானவை: நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், துருவிய வெல்லம், கொப்பரைத் துருவல் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, பொடித்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை. செய்முறை: பைனாப்பிள் துண்டுகளை வேகவைத்து, மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை, துருவிய வெல்லம், உப்பு, பொடித்த வேர்க்கடலை, மசித்த பைனாப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பலவகை சுவைகள் நிறைந்த இந்த கொத்சு, கர்நாடக மாநில கல்யாணங் களில் தவறாது இடம் பெறும். காட்டியா (குஜராத்) தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 3 டீஸ்பூன் எண்ணெய், சமையல் சோடா, ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நுரைவர அடிக்கவும். இதை கடலை மாவில் சேர்த்து... மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இந்த மாவை கைகளால் நீள வடிவில் உருட்டி, தேவையான அளவு துண்டுகளாக்கி... சூடான எண்ணெயில் போட்டு கரகரவென பொரித்து எடுக்கவும். குஜராத் திருமணங்களில், அப்பளம், சிப்ஸ் எதுவும் பரிமாற மாட்டார்கள். வாயில் போட்டால் கரையும் `காட்டியா'தான் பரிமாறப் படும். சார்வாரி புலாவ் (காஷ்மீர்) தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பால் - 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து (இரண்டும் சேர்த்து) - கால் கப், நெய் - கால் கப், ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் - தலா 2, சீரகம் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கறுப்பு உளுந்து, கறுப்பு கொண்டைக்கடலையை 3 மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். பாசுமதி அரிசியுடன் பால் சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்து, தட்டில் ஆறவைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம் சேர்த்து பொரிக்கவும். ஏலக்காய், கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து புரட்டவும். வேகவைத்த கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, வேகவைத்த பாசுமதி அரிசி சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி குங்குமப்பூவால் அலங்கரித்துப் பரிமாறவும். கட்டா சப்ஜி (ராஜஸ்தான்) தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள், சுக்குப்பொடி - தலா கால் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கடலை மாவு, ஓமம், உப்பு, தேவையான நீர், சிறிதளவு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து கெட்டியாகப் பிசைந்து... நீள குழல்களாக செய்யவும். அரை கப் தண்ணீரை சூடாக்கவும். தளதளவென கொதிக்கும்போது, செய்து வைத்துள்ள குழல்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வெந்து கெட்டியானதும், அடுப்பை அணைத்து, நீரை வடித்து, ஆறியதும் சிறு துண்டுகளாக்கவும். இதுதான் கட்டா. கடாயில் கொஞ்சம் நெய் ஊற்றி கட்டா துண்டுகளைச் சேர்த்து வதக்கி, தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யில் சீரகம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மீதமுள்ள மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். இதனுடன் வெந்தயத்தூள், சுக்குப்பொடி, தேவையான உப்பு, கொத்தமல்லி, சேர்த்து வதக்கவும். வதக்கிய கட்டா துண்டுகள், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எல்லாமாக சேர்ந்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். ராஜஸ்தான் விருந்துகளில், கட்டா சப்ஜி கட்டாயம் இருக்கும்.
  9. ஸ்பினாச் கெனலோனி பான் கேக் செய்ய: மைதா மாவு - 2 கப் பால் - அரை கப் உப்பு - ஒரு சிட்டிகை ஸ்டஃபிங் செய்ய: பாலக்கீரை - ஒரு கட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய சீஸ் - 50 கிராம் ஸ்வீட்கார்ன் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு வொயிட் சாஸ் செய்ய: வெண்ணெய் - 100 கிராம் மைதாமாவு - அரை கப் பால் - ஒரு கப் வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அலங்கரிக்க: ஓரிகானோ - ஒரு டீஸ்பூன் புதினா இலைகள் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பான் கேக் செய்யக் கொடுத்த மைதா மாவுடன் உப்பு, பால் சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக் கொள்ளவும். இங்கே கொடுக்கப்பட்ட பால் அளவு, உங்களுக்குப் போதுமானதாகத் தோன்றவில்லை என்றால் மட்டும், தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை சின்னதாக ஊற்றி இருபுறமும் வேக வைத்தெடுக்கவும். இனி ஸ்டஃபிங் செய்யக் கொடுத்த ஸ்வீட்கார்னை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பாலக் கீரையைச் சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். வாணலியைச் சூடாக்கி, வெண்ணெயைச் சேர்த்து உருகியதும் இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் அரைத்த கீரை, வேகவைத்த ஸ்வீட்கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கும் முன் சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு மைதா மாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கருகாமல் வறுக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். அதன் மேல் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கினால் வொயிட் சாஸ் ரெடி. பரிமாறும் தட்டில் ஒரு தோசையை வைத்து, இதன் உள்ளே அரைத்த கீரைக் கலவையை வைத்து ரோல் செய்யவும். இதன் மேல் வொயிட் சாஸ் ஊற்றி அலங்கரிக்கக் கொடுத்தவற்றைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். கேரட் சாதம் : தேவையானவை: கேரட்- 6 பாஸ்மதி அரிசி - 300 கிராம் வறுத்த நிலக்கடலை - ஒரு டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு வறுத்துத் அரைக்க உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு- அரை டீஸ்பூன் மிளகு- கால் டீஸ்பூன் சீரகம்- கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு- கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு செய்முறை: வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சூடு அறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியை கழுவி உதிர் உதிராக வேக வைத்துக்கொள்ளவும்.கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும்,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து துருவிய கேரட்டை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.எண்ணெயின் சூட்டிலே கேரட் வெந்ததும் .வறுத்து வைத்துள்ள பொடி சேர்த்து வதக்கவும்.பின் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்துக்கிளறி இறக்கிப்பரிமாறவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.